Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. தோழர் ஜெயபாலனின் விடுதலைக்கு குரல் கொடுக்க எம்மை தூண்டியது எது? சிவாசின்னப்பொடி தோழர் ஜெயபாலனும் நானும் நல்ல நண்பர்கள் தோழர்கள்.எங்களுடைய நட்பும் தோழமையும் சுமார் 30 வருடங்கள் பழமையானது.அவர் நலமுடன் திரும்பிவரவேண்டும் என்பதில் நானும் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன்.அதற்கான முயற்சி எடுத்த சிலருடன் நானும் தொடர்பில் இருந்திருக்கிறேன்.அவர் நலமுடன் திரும்புவார் என்ற நான் திடமாக நம்புகிறேன். இந்த இடத்திலே எனது மனச்சாட்சியை ஒரு விடயம் உறுத்துகிறது. ; ஜெயபாலன் என்ற தோழனுக்காக கவிஞனுக்காக ஓங்கி ஒலித்த எங்கள் குரல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவினார்கள் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படையினரால் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் சித்திரவதைகளை அனுபவித்து விசாரணையின்றி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான முகம்மறியா உறவுகள் வியடத்தில் ஏன் ஓங்கி உரத்து ஒலிக்க வில்லை? என்பதே அந்த உறுத்தலாகும். தோழர் ஜெயபாலனை விடுவிப்பதற்கு அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பிரபலமும் செல்வாக்கும் இருக்கிறது. அந்த பிரபலமும் செல்வாக்கும் கவிஞர் நடிகர் என்ற அடையாளம் தான் எங்களை அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க தூண்டியது என்றால் நிச்சயமாக அது மனிதாபிமான செயற்பாடாகவோ மனித உரிமை சார்ந்த செயற்பாடாகவோ இருக்காது. தோழர் ஜெயபாலன் ஒரு சாதாரண மணிதராக இருந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் நூற்றோடு நூற்றி ஒன்று என்று கூறி அவரை மறந்திருப்போதும் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வதைமுகாங்களிலும் சிறைகளிலும் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைக்காக தோழர் ஜெயபாலன் விடுதலைக்கு காட்டிய ஓர்மத்துடன் குரல் கொடுக்க முயற்சி எடுக்க எங்களை எது தடுக்கிறது? எங்களுக்குள் இருக்கும் சந்தர்ப்ப வாதமா? இல்லை பிழைப்பவாதமா? http://sivasinnapodi.wordpress.com/2013/11/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/
  2. கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது. வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட... சிங்கமும் நரிகளும் பதுங்கும் நீர்சுனையின் வழி அஞ்சி உயிர் வற்றும் மானானேன். சென்னைச் சுவர்பாலை துடிக்கும் பல்லி வாலானேன். தோப்பாகும் கனவோடு நீ சுமந்த நறுங் கனிகள தின்றதே ஈழத் தமிழன் விதி என்ற பேர் அறியா தேசத்துப் பறவை. துருவக் கரை ஒன்றில் அதன் பீயாய் விழுந்தேனே என் கனிகளச் சுமந்தபடி இறால் பண்ணை நஞ்சில் நெய்தல் சிதைந்தழியும் சேதுக் கரையோரம் படகுகளும் இல்ல. கண்ணீரால் உன்மீது எழுதாத கவிதகளைக் காலத்தில் எழுகிறேன்... -வ.ஐ.ச.ஜெயபாலன்- நன்றி Watch Human முகநூல் 9ஆம் இணைப்பு - கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:- வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை வரை அவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  3. ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில். “...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்.... ...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...” எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட. ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட. முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர். அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர். யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/ போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக் கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம். பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார். அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.” ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார். கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை. அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன. இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது. 10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர். அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள். அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள். இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே. அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார். இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன. யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை. ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கடும் விதிகளை திணித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் மற்ற நாடு பிரஜைகள் என்பது தான். மகிந்தவின் தம்பிகளான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. அவரின் அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளவர். யுத்தத்தை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவும் அமெரிக்க கிரீன் கார்ட்டை கொண்டவர். நாட்டின் அமைதிக்கு மோசமான குந்தகம் விளைவித்த சர்வதேச குற்றசாட்டுக்குரியவர்கள் இவர்கள். இதை எல்லாவற்றையும் உலக அரங்கில் நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட பாலித கோஹன்ன ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு. அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது. ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.​ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99429/language/ta-IN/article.aspx
  4. கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டா கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் இருந்து இலங்கை நேரம் மாலை கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பிரஜைகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்றும் பொறலையில் உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா? அல்லது பொறலை பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா என்பதனை அவர் தெளிவாக கூறவில்லை. இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டால் பின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீதி மன்ற நடவடிக்கைகள் அலுவலக நடவடிக்கைகள் நடைபெறாது என்பதனால் திங்கட் கிழமையே நீதிமன்றில் ஆஜர்பபடுத்தி அவரை விடுதலை செய்ய முடியும். இது சதாரண நடைமுறை ஆகும். இந்த நடைமுறையை மீறி விசேடமாக கவனம் செலுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது ஜனாதிபதியின் விசேட பணிப்பில் நீதவான் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதித் துறையின் அனுமதியுடன் விடுவிக்க முடியும். எனினும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறை யாவுமே மகிந்த சகோதரர்களின் பிடியில் இருப்பதனால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் கரிசனை எடுத்தாலும் உடனடி விடுதலை சாத்தியமற்றது. அந்த வகையில் நாளை மறுதினம் திங்கட் கிழமையே இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுத்துறையினரின் தீர்மானத்திற்கு அமைவாக நீதித் துறை ஊடாக விடுவிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. அவ்வாறு இல்லாமல் உல்லாசப் பிரயானத்திற்கான விசாவில் சென்று விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் மூலம் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தமது நாட்டுப் பிரஜை தடுத்து வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணத்தை வினவி ராஜதந்திர மட்டத்தில் விடுதலைக்கான முயற்சிகளை எடுக்கலாம் எனவும் தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  5. இலங்கை சென்ற தமிழ் நடிகர் திடீர் கைது: ஒற்றுமையை சீர்குலைத்ததாக புகார்! கொழும்பு: தாயார் சமாதிக்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்ற தமிழ் நடிகரும், கவிஞருமான ஜெயபாலனை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன், இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். ஆடுகளம், பாண்டிய நாடு உள்பட சில படங்களில் அவர் நடித்துள்ளார். கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலனின் தாயார் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார். மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு உறவினர் ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர். கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே கவிஞர் ஜெயபாலன் கைது விஷயத்தில் சிங்கள உயர் அதிகாரிகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் அடாவடித்தனமாக நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது. நேற்றிரவு கவிஞர் ஜெயபாலனை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் காவல்துறை ஒப்படைத்தனர். அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர் – சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். வவுனியாவில் இருந்து ஜெயபாலனை கொழும்பு கொண்டு செல்ல சிங்களர்கள் முயன்று வருகிறார்கள். அவரை ரகசிய இடத்தில் காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை சிங்களர்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி சித்ரவதை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=21585
  6. 4ஆம் இணைப்பு:-ஜெயபாலன் இராணுவப் புலனாய்வாரள்களால் கண்காணிக்கப்பட்டு - மாங்குளத்தில் கடத்தப்பட்டு பின் கைதனவரானார் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:- 4ஆம் இணைப்பு:- நீண்ட இடைவெளியின் பின்னர் யாழ்.குடாநாட்டிற்கு சென்றிருந்த ஜெயபாலன் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் அவரது நடமாட்டங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டிருந்த நிலையில் அவர் யாழை விட்டு வெளியேறியிருந்தார். எனினும்; அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் அவரை மாங்குளத்தில் வைத்து கடத்தியதாக தெரியவருகிறது. இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அவரை தாம் கைது செய்திருப்பதாகவும் விசா விதிகளை மீறி ஜெயபாலன் செயற்பட்டார் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:- விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றிருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறிய காவற்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும்; அவர் தெரிவித்துள்ளனர். 2ஆம் இணைப்பு:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:- 11:10am கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை தமிழகத்தில் கழித்து வந்தார். கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. இவரது கைது குறித்து நோர்வே தூதுவராலையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக உறவினர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  7. இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார். சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹன தெரிவித்தார். அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131122_jeyapalan.shtml
  8. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89129

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.