Everything posted by பிழம்பு
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் Published By: VISHNU இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும். இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை (CPIM-Kerala) முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பினால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். மூன்று கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (09) முற்பகல்வேளையில் கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசாங்கத்தின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் ராஜீவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அமைச்சர் ராஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப்போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார். அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre) அவதானிப்புச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர். இந்த Technopark 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டிடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70,000 பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரள மாநில ஆட்சியின் கீழேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது. அடுத்ததாக இந்த பிரதிநிதிகள் குழு G Tech நிறுவனத்தின் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான சமர்ப்பணத்தில் பங்கேற்றதோடு கேரளா பல்கலைக்கழகத்தில் அவதானிப்புச் சுற்றுப்பயணத்திலும் இணைந்து கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைநகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள கரையோர Kovalam இன் Vellar கைப்பணிகள் கிராமத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு உருவாகியது. ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆந் திகதி இலங்கை திரும்ப உள்ளனர். கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் | Virakesari.lk
-
India Today Survey: தமிழ்நாட்டில் திமுக முந்துகிறதா? | தெலங்கானா, கர்நாடகாவில் என்ன நிலவரம்?
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலையில், இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றிப் பெற வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் பா.ஜ.க தலைமையில் ஆளும் NDA கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் INDIA கூட்டணியும் களமாடி வருகின்றன. பா.ஜ.க - காங்கிரஸ் இந்த நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம், இந்தியா முழுவதும் மூட் ஆஃப் தி நேஷன் ( Mood of the Nation) என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024 வரை, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், 35,801 பேரை பங்கேற்பாளராகக் கொண்டு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை மக்களவை இடங்கள், எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளையும் தற்போது இந்தியா டுடே அறிவித்திருக்கிறது. அதன் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்:- தமிழ்நாடு: தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும், தி.மு.க அங்கம் வகிக்கும் INDIA கூட்டணி வெற்றி பெறலாம். வாக்கு சதவிகிதம்! INDIA கூட்டணி - 47 சதவிகிதம் NDA கூட்டணி - 15 சதவிகிதம் மற்றவை - 38 சதவிகித வாக்குகளைப் பெறக்கூடும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 2/2 1/2 2/2 1/2 மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் மம்தா பானர்ஜி தலைமையிலனா திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பா.ஜ.க 19 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெறும் என முடிவு வெளியாகியிருக்கிறது. வாக்கு சதவிகிதம்! திரிணாமுல் காங்கிரஸ் - 53 சதவிகிதம் பா.ஜ.க - 40 சதவிகிதம் மற்றவை - 7 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது. கேரளா: கேரளாவில் இருக்கும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், INDIA கூட்டணி வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. வாக்கு சதவிகிதம்! INDIA கூட்டணி - 78 சதவிகிதம் NDA கூட்டணி - 17 சதவிகிதம் மற்றவை - 5 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 2/2 1/2 2/2 1/2 ஆந்திரப் பிரதேசம்: ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம். வாக்கு சதவிகிதம்! தெலுங்கு தேசம் கட்சி - 45 சதவிகிதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி - 41 சதவிகிதம் INDIA கூட்டணி - 3 சதவிகிதம் NDA கூட்டணி - 2 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா: கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 24 இடங்களிலும், INDIA கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறலாம். வாக்கு சதவிகிதம்! NDA கூட்டணி - 53 சதவிகிதம் INDIA கூட்டணி - 42 சதவிகிதம் மற்றவை - 5 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 1/1 1/1 1/1 தெலங்கானா: தெலங்கானாவில் இருக்கும் 17 மக்களைவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 10 இடங்களிலும், NDA கூட்டணி 3 இடங்களிலும், முன்னாள் முதல்வர் கே.சி.ஆர்-ன் பி.ஆர்.எஸ் 3 இடங்களையும், அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 1 இடத்தையும் கைப்பற்றலாம். வாக்கு சதவிகிதம்! காங்கிரஸ் - 41.2 சதவிகிதம் பி.ஆர்.எஸ் - 29.1 சதவிகிதம் பா.ஜ.க - 21.1 சதவிகிதம் மற்றவை - 9.6 சதவிகித வாக்குகளைப் பெறும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் 80 இடங்களில், NDA கூட்டணி 72 தொகுதிகளில் வெற்றி பெறலாம். INDIA கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. வாக்கு சதவிகிதம்! NDA கூட்டணி - 52 சதவிகிதம் INDIA கூட்டணி - 36 சதவிகிதம் மற்றவை - 12 சதவிகித வாக்குகளைப் பெற வாய்ப்பிருக்கிறது. 2/2 1/2 2/2 1/2 டெல்லி: டெல்லியில் இருக்கும் 7 மக்களவைத் தொகுதிகளையும் NDA கூட்டணி கைப்பற்றக்கூடும். வாக்கு சதவிகிதம்! NDA கூட்டணி - 57 சதவிகிதம் INDIA கூட்டணி - 40 சதவிகிதம் மற்றவை - 3 சதவிகித வாக்குகளைப் பெறும், எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. பீகார்: பீகார் மாநிலத்தில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளில், NDA கூட்டணி 32 இடங்களையும், INDIA கூட்டணி 8 இடங்களையும் கைப்பற்றலாம். (இந்தக் கருத்துக்கணிப்பு டிசம்பர் 15, 2023 - ஜனவரி 28, 2024-க்கு இடையில் நடத்தப்பட்டது. எனவே, கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை) வாக்கு சதவிகிதம்! NDA கூட்டணி - 52 சதவிகிதம் INDIA கூட்டணி - 38 சதவிகிதம் மற்றவை - 10 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 1/1 1/1 1/1 மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் இருக்கும் 48 தொகுதிகளில் INDIA கூட்டணி 26 தொகுதிகளிலும், (காங்கிரஸ் - 12, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா + சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14) NDA கூட்டணி 22 தொகுதிகளையும் கைப்பற்றும். வாக்கு சதவிகிதம்! INDIA கூட்டணி - 45 சதவிகிதம் NDA கூட்டணி - 40 சதவிகிதம் மற்றவை - 15 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. India Today Survey: தமிழ்நாட்டில் திமுக முந்துகிறதா? | தெலங்கானா, கர்நாடகாவில் என்ன நிலவரம்? | India Today Mood Of The Nation 2024 Lok Sabha Election Survey Results - Vikatan
-
கனடாவில் இருந்து வந்து காதை பறி கொடுத்தார்
கனடாகாரர்களுக்கு நேரம் சரியில்லை போல...
-
தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை ஏற்படுத்தினார் கெஹெலிய – பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
கெஹெலிய படுகொலையில் ஈடுபட்டுள்ளார் - அவருக்கு வழங்கப்படும் தண்டனை அரசியல்வாதியொருவருக்கு வழங்கப்பட்ட சிறந்த தண்டனையாக அமையவேண்டும் Published By: Rajeeban 05 Feb, 2024 | 04:17 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இம்யுனோகுளோபுளின் மோசடி ஒரு படுகொலை நடவடிக்கை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தரம்குறைந்த இம்யுனோகுளோபுளினை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் படுகொலையில் ஈடுபட்டுள்ளார் எனகருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மருந்துகளை இறக்குமதிசெய்துள்ளதுடன் நாட்டின் அப்பாவி மக்களிற்கு அவற்றை வழங்கியுள்ளார் என ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார். எத்தனை பேர் இதன்காரணமாக உயிரிழந்தனர் என்பது எங்களிற்கு தெரியாது ஆகவே இந்த விவகாரம் குறித்து நாங்கள் மேலும் ஆராயவேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் படுகொலைகள் போன்றது இது என கருதவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிட்லரும் விசஊசியை செலுத்தி மக்களை கொன்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கெஹெலியவிற்கு வழங்கப்படும் தண்டனை இலங்கையில் அரசியல்வாதியொருவருக்கு வழங்கப்பட்ம மிகச்சிறந்த தண்டனையாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது நோய் அறிகுறிகளை பரிசோதிப்பதற்காக தடுப்புமருந்துகளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக அரசியல்வாதிகள் மோசடி ஊழலில் ஈடுபடுவது குறித்து வெட்கப்படுவதில்லை சிறைக்கு சென்றபின்னரே அவர்கள் நோய்அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175631
-
யாழில் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம்
05 Feb, 2024 | 09:14 PM வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை (05) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலேயே இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது . அந்தவகையில், கடந்த ஐந்து வருடங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள், தரம் ஐந்து, சாதாரண மற்றும் உயர் தரங்களில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துளசேன விடயங்களை தெளிவுப்படுத்தினார். அதிபர்கள் நியமனத்தில் எழுந்த சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றங்களில் காணப்படும் சிக்கல்கள், தளபாட வசதிகள் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன் போது தெளிவுப்படுத்தினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது . https://www.virakesari.lk/article/175638
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் அனுரகுமார 05 Feb, 2024 | 09:10 PM இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பு இந்தியா இலங்கையுடன் தொடர்புபட்ட இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார் https://www.virakesari.lk/article/175657
-
துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்
Freelancer / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 05:35 - 0 - 37 கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையின் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.. டாக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, டாக்டர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் உடுவெல, டாக்டர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவினர்.. R Tamilmirror Online || துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கண்டி மருத்துவர்கள்
-
17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல்
Published By: NANTHINI 02 FEB, 2024 | 04:21 PM கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரகசிய விசாரணை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் பிரசவ கால உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக நாடெங்கும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பிரசவ கால மற்றும் பிரசவத்துக்குப் பின்னரான மரணங்கள் தொடர்பில் கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புகள் - ஆய்வில் தகவல் | Virakesari.lk
-
ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது!
01 FEB, 2024 | 09:05 PM கடந்தகால போராட்டத்தின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என தல்துவ தெரிவித்தார்.ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது! | Virakesari.lk
-
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பலகை சில மணி நேரத்தில் அகற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சில இளைஞர்கள் மாமிச உணவு சாப்பிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இந்து கோயிலில் தொழுகை நடத்திய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்து கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். இந்துக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதி அருகே தொழுகை நடைபெறும் நேரமாக இருந்தாலும், இல்விட்டாலும் பேண்ட், வாத்தியம் இசைப்பதில்லை. இந்த முறை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே பழநி கோயில் மற்றும் உப கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பழநி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாது என மீண்டும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் வாதிடுகையில், “பெரும்பாலான அறநிலையத் துறை கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. ஆனால், சிலர் ஊடக வெளிச்சம் பெறும் நோக்கத்திலும், கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பிரச்சினை செய்கின்றனர். பழநி கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். பழநி கோயில் சுற்றுலா தலம் அல்ல. இந்துக்களின் புனித இடமாகும். இங்கு இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முருகனை இந்துக்கள் மட்டும் வழிபடுவதில்லை. முருகன் மீது நம்பிக்கை வைத்து பிற மதத்தினரை பின்பற்றுபவர்களும் கோயிலுக்கு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28-ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பது மதச்சார்பற்ற அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் கடமை. கோயில் நுழைவு அனுமதி சட்டத்தில், கோயில் என்றால் கருவறை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்குதான் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளன. இங்கு அறிவிப்பு பலகை வைப்பதால் எந்த பலனும் ஏற்படாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்தக் கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் மரபுகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம். கொடிமரம் வரை கோயில் வளாகத்தில் யாரும் நுழைவதை தடுக்க முடியாது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலில் ரூ.50 கட்டணம் செலுத்தி வெளிநாட்டினர் செல்கின்றனர். அவர்கள் கொடி மரம் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை பிற கோயில்களிலும் உள்ளது. கோயிலில் முக்கியத்துவம் அறியும் வகையில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றார். இதேபோல், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சார்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: ‘கோயில் நுழைவு அனுமதி சட்டம், அறநிலையத் துறை சட்டத்தில் இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் பட்டியலில் துணை கோயில்கள், மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல இந்துக்கள் மட்டுமே உரிமைப்பட்டவர்கள். கோயில் நுழைவு அனுமதிச் சட்டம், இந்துக்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது. இதனால் கோயில் நுழைவு அனுமதிச் சட்டம் மற்றும் அறநிலையத் துறை சட்டத்தை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்து கடவுள்கள், இந்து மதம், விழாக்களில் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ஐ மீறுவதாகது. மாறாக இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு மதங்களுக்கு இடையிலான மதநல்லிணக்கத்தையும், சமூகத்தில் அமைதியையும் நிலை நாட்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13, 15 குறிப்பாக 15(1)-ல் கூறப்பட்டுள்ள மற்ற மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் சேர்க்கப்படவில்லை. கோயில் சேர்க்கப்படாத நிலையில் கோயில்களை சுற்றுலா தலமாக கருத முடியாது. இந்து கடவுள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வருபவர்களை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள பிற மதத்தினரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? இந்து அல்லாதவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படும் அதிகாரிகள், இந்துக்களின் நம்பிக்கை குறித்து கவலைப்படுவதில்லை. இந்து மதம், இந்து கோயில்களின் பழக்க, வழக்கம், பாரம்பரியத்தை பாதுகாக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28 வரை ஒவ்வொரும் தங்களின் மதத்தை பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிறர் மத நம்பிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பிற மதத்தினர் இடையிலான மதநல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. தஞ்சை கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாகும். இந்துக்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் உரிமை உண்டு. இந்து கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தவறிவிட்டனர். பழநி மலைப்பகுதி முழுவதும் இந்துக்களின் புனித இடமாகும். இந்துக்கள் அல்லாதவர்களை மலையேற அனுமதித்து மலையேறிய பிறகு அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என தெரியவந்து தடுக்கப்பட்டால் அவர்கள் விரக்தி அடைவர். ஏன் முன்கூட்டியே சொல்வதில்லையா என கேள்வி எழுப்புவர். இதுபோன்ற நிலைய தவிர்க்க ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்து இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு புலகை வைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும். எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் அனுமதிக்கமாட்டார்கள் என கோயில் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்கள் யாராவது கோயிலுக்கு வந்தால் அவர்களிடம் இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோயில் மரபுகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கடிதம் பெற வேண்டும். அதன் பிறகு அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உறுதியளித்து கோயிலுக்கு செல்லும் இந்து அல்லாதவர்கள் குறித்து கோயில்களில் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் ஆகம விதிகள், பழக்க, வழக்கங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு | Non-Hindus should not be allowed in TN temples: HC orders in Palani temple case - hindutamil.in
-
வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி!
வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி! (இனியபாரதி) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச வானுர்தித்தளம் (விமான நிலைய) அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு வானுர்தி(விமானப் போக்குவரத்து) அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைப் பணிமனிமனை அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர். இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது. வானுர்தி (விமானப் போக்குவரத்து) அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதன்போது அப்பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப் பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். வலி. வடக்கில் ஏற்கனவே படையினரிடம் மூவாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விடுவிக்குமாறு பலகோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது இந்த இரகசிய முயற்சியில் ஈடுபடுகின்றமை அம்பலமாகியுள்ளது. வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(30) தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பட்டது. இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், அல்லாவிடின் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் இவ்வாறு மீளவும் காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என்றார். வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி! (newuthayan.com)
-
மரக்கறிக்கு எதிராக எகிறும் பழங்களின் விலை
நாட்டில் கடந்த சில நாட்களாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது . மரக்கறி விலைக்கு எதிராக நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் பழங்கள் விலையில் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை எனவும் கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் , இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் படி நெல்லி 1 கிலோ கிராம் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை 1 கிலோ கிராம் விலை 2500 ரூபாவாகவும், 1 கிலோ கிராம் அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது அத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. செ.திவாகரன் Tamilmirror Online || மரக்கறிக்கு எதிராக எகிறும் பழங்களின் விலை
-
அமைச்சர் டக்ளஸை சந்தித்தார் சாந்தனின் தாயார்
Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 09:27 AM ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 27 ஆம் திகதி புலிச் சின்னம் அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் டக்ளஸை சந்தித்தார் சாந்தனின் தாயார் | Virakesari.lk
-
இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ
31 JAN, 2024 | 10:50 AM இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார் இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள்இ இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள். எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார்இ இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார். நான்இ நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜிஇ சிங்கப்பூர் மைதானத்திலிருந்துஇ “ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களேஇ இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜிஇ மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர். ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே என்றார் பிரகலாத் ஜோசி. வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும்இ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும். இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்இ இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்துஇ இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும். இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும். இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் - வைகோ | Virakesari.lk
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 12:04 PM நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்தியா குறித்த சாதகமான உணர்வுகளை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். உங்களிற்கான எனது ஆலோசனை என்னவென்றால் அடுத்தமுறை நீங்கள் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா செல்லவிரும்பினால் தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள் நான் உங்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சாதாரண பொதுமக்கள் இந்தியாவை மிகவும் உயர்வாக கருதுகின்றனர் பாராட்டுகின்றனர் என தெரிவித்துள்ள ஜெய்சங்கர் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை ஏனைய உலகநாடுகள் கைவிட்டவேளை இலங்கைக்கு கரம் கொடுத்த நாடு இந்தியா எனவும் குறிப்பிட்டுள்ளார். நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன் எரிபொருள்வரிசைகளை நேரடியாக பார்த்துள்ளேன் உணவு அத்தியாவசியப்பொருட்களிற்கான பற்றாக்குறைகளை அவதானித்துள்ளேன் அவ்வேளையில் இலங்கைக்கு உதவமுன்வந்த ஒரேயொரு நாடு இந்தியா எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியது அவர்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் நீண்டநாட்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் அவர்களிற்கு முதலில் உதவிகள் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்தே கிடைத்திருக்கவேண்டும் ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி 3 பில்லியன் டொலர்களிற்குகுறைவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் வழங்கியதை விட ஐம்பதுவீதம் அதிகமாக உடனடியாக இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை | Virakesari.lk
-
இலங்கையின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 03:21 PM இலங்கையின் சுதந்திரதினத்தன்று தமிழர்களின்சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனின்மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. ஈழத்தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்பு குழு சர்வதேசதமிழீழ இராஜதந்திரகட்டமைப்பு தமிழ்இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. இது குறித்த இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது "ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத பட்சத்தில்இ சமத்துவம் மற்றும் இறுதியில் பிரிவினைக்கான அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த உரிமை உள்ளது என்பதை சுயநிர்ணய உரிமை மக்களின் சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது " இவ்வரையறைக்குள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் நாள் அன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரிமைக்குரல் எழுப்பவுள்ள இப் பேரணியானது இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு உயர் முன்பாக ஆரம்பித்து நடைபவனியாக செல்லவுள்ளது. இலங்கை உயர் ஆணைய இல்லத்தின் முன்றலில் இருந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகி ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் நிர்வாகத் தலைமையகம் மற்றும் அரச வதிவிடமாக விளங்கும் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கிச்சென்று பின் அங்கிருந்து பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடையும். பேரணியின் நிறைவில் பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ள்ஸ் பிரித்தானியப் பிரதம மந்திரி மதிப்புக்குரிய ரிஷி சுனக் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீளப் பெற்றுத்தருவதில் அவர்களுக்கு உள்ள பொறுப்பின் ஆழத்தை வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அனைத்துலக ஈழத் தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சர்வதேச தமிழீழ இராஜதந்திர கட்டமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்துஇந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன இலங்கையின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி | Virakesari.lk
-
ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர்களில் யாருக்கு அதிக ஆதரவு ; ஐஎச்பியின் கருத்துக்கணிப்பு தெரிவிப்பது என்ன?
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 04:33 PM ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் ஜேவிபியின் அனுரகுமாரதிசநாயக்கவிற்கே தொடர்ந்தும் அதிகள ஆதரவு காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு வாக்களிப்பது என்ற மக்களின் மனோநிலையை அறிவதற்காக டிசம்பர் மாதம் இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஜேவிபியின் தலைவருக்கு 50 வீதமான ஆதரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு 33 வீத ஆதரவும் ஜனாதிபதி ரணி;ல்விக்கிரமசிங்கவிற்கு 9 வீத ஆதரவும் காணப்படுவது இந்த கருத்துக்கணிப்பி;ன் மூலம் தெரியவந்துள்ளதாக ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆளும் பொதுஜனபெரமுனவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு 8 வீத ஆதரவு காணப்படுகின்றது. 2023 நடுப்பகுதியிலிருந்து அனுரகுமாரதிசநாயக்கவி;ற்கான ஆதரவு அதிகரித்துள்ளது எனினும் டிசம்பரில் வீழ்ச்சி காணப்பட்டது ஐக்கியமக்கள் சக்தியின் தலைவருக்கான ஆதரவு 2023 செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் 3 வீதத்தினால் அதிகரித்துள்ளது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது ஐஎச்பியின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர்களில் யாருக்கு அதிக ஆதரவு ; ஐஎச்பியின் கருத்துக்கணிப்பு தெரிவிப்பது என்ன? | Virakesari.lk
-
அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை
30 JAN, 2024 | 01:25 PM அரச இரகசியங்களை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிபெர்வழக்கு என அழைக்கப்படும் விவகாரம் தொடர்பிலேயே பாக்கிஸ்தான் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. பாக்கிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூட் குரேசியும் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கும் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை | Virakesari.lk
-
80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர்
மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் தங்களுக்கென வேறொரு கோவிலை கட்டத் தொடங்கியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்ற பிரிவினர் எதிர்ப்பு கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் பிற சமூக மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே செல்ல தங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என தெரியவந்தது. 30 ஜனவரி 2024 ஹாஜி மேலாங் - மும்பையில் இந்து, முஸ்லிம் இரு தரப்பும் வழிபடும் இந்த தர்காவால் என்ன சர்ச்சை?6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பட்டியலினத்தவர்கள் கோவிலுக்குள் சென்றதற்கு பிற சமூகத்தினர் தனியாக ஒரு கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்றும் கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் கூறினர். பிற சமூக மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கிராமத்தை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். 29 ஜனவரி 2024 7,600 பேர் பயணிக்க கூடிய உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அறிமுகம் - வசதிகள் என்ன?29 ஜனவரி 2024 படக்குறிப்பு, பட்டியலினத்தவர்கள் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் சென்றதையடுத்து, அந்த கோவிலில் வழிபாடு செய்வதைக் கைவிட்டனர். "பட்டியலினத்தவர் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்" இந்நிலையில் பல மாதங்களாக பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதை கைவிட்டனர். மேலும் அவர்கள் ஒன்று கூடி பேசி அந்த கோவில் நமக்கு வேண்டாம் என்றும் புதிதாக ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத, பிற சமூகத்தைச் சேர்ந்த நபர் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசினார். “எங்கள் கிராமத்தில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்களும் பிரச்னை செய்ய போவதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு கோவில் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் பட்டியிலினத்தவர் என்று தனியாக இடம் ஒதுக்கி கோவில் கட்டித் தந்தோம். அதில் அவர்கள் தொடர்ந்து வழிபாடும் நடத்தி வந்தனர்." "அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் எங்கள் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு வழிபட வந்தது வருத்தத்தை அளித்தது. எனவே பிரச்னைக்குரிய அந்த கோவில் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த கோவிலை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்," என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், பிற சமூகத்தினர் இணைந்து தங்கள் சொந்த பணத்தை வைத்து இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி அதில் கோவில் கட்டவுள்ளனர். 29 ஜனவரி 2024 உடலில் நாள்பட்ட அரிப்பு ஏன் ஏற்படுகிறது? எப்படி குணப்படுத்துவது?29 ஜனவரி 2024 இதுகுறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர், பட்டியலினத்தவர்கள் அந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் பட்டியலினத்தவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "சாமி எல்லாவற்றுக்கும் பொதுவானது தானே? நாங்கள் அப்படித்தான் நினைத்து கும்பிட்டோம். இந்நிலையில் அவர்கள் தனியாக கோவில் கட்ட முடிவெடுத்தது அவர்கள் விருப்பம். இதில் நான் என்ன சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார். வழக்கறிஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன், ராமர் கோயிலுக்கு அனைத்து சமூகத்தினரும் செல்லும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். "தனியாக இடம் வாங்கி அதில் புதிதாக கோவில் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே வழிபாடு செய்து கொண்டிருந்த கோவிலை தவிர்த்து அது வேண்டாம் என்று கூறி ஒதுங்கி வேறு ஒரு கோவிலை கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது," என்று கூறிய அவர், இதை “இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "தற்பொழுது கூட அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் விசேஷத்திற்கு அனைத்து சமூக மக்களுமே சென்றார்கள். இது எல்லோருக்குமே தெரியும். இங்கு எல்லோரும் இணக்கத்துடன் வாழ வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்," என்றார். 28 ஜனவரி 2024 மருத்துவ காப்பீடு: இனி ஒரு ரூபாய் செலவின்றி நாடு முழுக்க சிகிச்சை பெறலாம் - புதிய விதிகள்27 ஜனவரி 2024 படக்குறிப்பு, சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தையன், ராமர் கோயிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் அனுமதிக்கப்படும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கோயில் வழிபாடு குறித்த விதிகளை விளக்கினார். யார் ஒருவரும் தனியாக கோயில் கட்டிக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், சாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது சட்டப்படி குற்றம் என்று அவர் கூறினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பட்டி இரண்டு வகை கோவில்கள் உள்ளன. ஒன்று பொது கோவில், மற்றொன்று தனிநபர் கோவில். இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தனி நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இணைந்து தனியாக கோவில் கட்டி வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது. தனியார் கோவில்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், ஸ்ரீபுரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பொதுஜன வழிபாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அவர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்," என்று விளக்கினார். படக்குறிப்பு, சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு என மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கூறினார். "பொதுக் கோவில்கள் எனப்படும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அனைவரும் வந்து வழிபாடு செய்யலாம். அதாவது உண்டியல் வைத்து நிதி சேர்த்து அதை கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தினால் அது அனைவரும் வந்து வழிபடும் கோவில் என்று எளிதாக புரியும்படி கூறலாம்." "ஆனால் உண்டியல் இல்லாமல் தனி நபர்கள் கட்டி அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே வந்து வழிபாடு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனினும், சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு. ஆனால் எங்களுக்கான கோவிலை நாங்கள் வழிபாடு செய்வதற்காக மட்டும் கட்டிப் பராமரித்து வைத்துக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் ஒரு கோவிலைக் கட்டினாலும், அதை யாராலும் தடுக்க முடியாது." என்றார். திருவண்ணாமலை: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர் - BBC News தமிழ்
-
மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தி ஈலோன் மஸ்க் நிறுவனம் சாதனை - எவ்வாறு செயல்படும்?
பேட்ரிக் ஜாக்சன் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது. பல போட்டி நிறுவனங்கள் ஏற்கனவே இதேபோன்ற சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மனித மூளையில் சிப் செயல்படுவது எப்படி? நியூராலிங்க் மற்றும் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகிய இரண்டையும் பிபிசி நியூஸ் அணுகி கருத்து கேட்டது. மனிதர்களின் உடலில் இதுபோன்ற சிப்பைப் பொருத்திப் பரிசோதிக்க மஸ்க்கின் நிறுவனத்திற்கு மே மாதம்அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதுபோன்ற அனுமதியைப் பெறுவதற்காக அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்பட்டது. ஆறு ஆண்டு கால ஆய்வின் தொடக்கத்திற்கு இது ஒரு அனுமதியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து மனித முடியை விட மெல்லியதாக 64 நெகிழ்வான நூல்களை அறுவை சிகிச்சை மூலம் "இயக்க எண்ணத்தை" கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் வைக்க ஒரு ரோபோவை நியூராலிங்க் பயன்படுத்தியது. இந்த நூல்கள் அதன் பரிசோதனை நடவடிக்கைக்கு உதவுகின்றன. இணைப்பு ஏதும் இல்லாமல் (வயர்லெஸ்) சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் மூளையில் உருவாகும் சமிக்ஞைகளை வயர்லெஸ் முறையில் பதிவுசெய்து, அவை டீகோட் செய்யும் கணினி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 'டெலிபதி' சாதனம் எவ்வாறு பயன்படும்? முன்பு ட்விட்டர் என்று அறியப்பட்ட தனக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ இல் பதிவிட்ட மஸ்க், நியூராலிங்கின் இந்த முதல் தயாரிப்பு ‘டெலிபதி’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் . "உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மூலம் எந்தச் சாதனத்தையும், சிந்தனையின் மூலம் கட்டுப்படுத்தவும் இந்த டெலிபதி உதவும்," என்று அவர் கூறினார். "தங்கள் கை, கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு அவர்களது பிரச்னையைக் குறைக்க இந்த டெலிபதி தொடக்கத்தில் பயன்படுத்தப்படும்," என்று அவர் விளக்கினார். மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட மறைந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு அதிவேக தட்டச்சு செய்பவரை விட வேகமாக தமது எண்ணங்களை பிறருட்ன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நியூராலிங்க்கின் குறிக்கோள்," என்றார். நியூராலிங்கின் போட்டியாளர்கள் மஸ்க்கின் ஈடுபாடு நியூராலிங்கின் புகழை உயர்த்தும் அதே வேளையில், அவர் போட்டியாளர்களையும் எதிர்கொண்டு வருகிறார். அவர்களில் சிலர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இது போன்ற சாதனைகளைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தை தளமாகக் கொண்ட பிளாக்ராக் நியூரோடெக் நிறுவனம் 2004 இல் மூளை மற்றும் கணினிக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்த பல சிப்புகளைப் பொருத்தி பரிசோதித்தது. நியூராலிங்க் இணை நிறுவனரால் உருவாக்கப்பட்ட ப்ரிசிசன் நியூராசைன்ஸ் நிறுவனம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் சிப் மூளையின் மேற்பரப்பில் இருக்கும் மிக மெல்லிய டேப்பை ஒத்திருக்கிறது என்பதுடன் "கிரானியல் மைக்ரோ-ஸ்லிட்" மூலம் அது பொருத்தப்படலாம். இது மிகவும் எளிமையான செயல்முறை என்று அந்நிறுவனம் கூறுகிறது. ஏற்கனவே உள்ள சாதனங்களும் கணிசமான முடிவுகளை உருவாக்கியுள்ளன. சமீபத்திய இரண்டு தனித்தனி அமெரிக்க அறிவியல் ஆய்வுகளில், ஒரு நபர் பேச முயற்சிக்கும் போது மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க இதுபோன்ற சிப்புகள் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூராலிங்க் நிறுவனம் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்டையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் ஒரு குரங்கு வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக ஈலோன் மஸ்க் அறிவித்தார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் நரம்பியல் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் உதவிகரமான விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெலிபதி: மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தியது ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் - எவ்வாறு செயல்படும்? - BBC News தமிழ்
-
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (மாதவன்) வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா (30)இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்பியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்கால் குதிரையாட்டம்,மயிலாட்டம் என்னும் கிராமிய நடனத்துடன் விருந்தினர்கள் சரஸ்வதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார். இவ் விழாவில், கலை பண்பாட்டில் மிகச்சிறந்த ஆற்றலை 07 வருடகாலமாக வெளிப்படுத்திய 15 பேருக்கு யாழ் முத்து விருதும், கடந்த இரண்டு வருடங்களாக கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த இளம் கலைஞர்கள் விருது 12 நபர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. இவ் விருதுகளை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச். எம்.சாள்ஸ் வழங்கி வைத்தார். வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் பணிமனை பிரதிப்பணிப்பாளர் லாகினி நிர்பராஜ், சிவபூமி அறக்கட்டளை ஸ்தாபகராம் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவருமான ஆறுதிருமுருகன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், இளங்கலைஞர்கள், யாழ் முத்து விருது பெறும் கலைஞர்கள், சமூக பெரியோர்கள், ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (newuthayan.com)
-
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம் Mithuna / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:36 - 0 - 59 உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது. Tamilmirror Online || ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்
-
போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகபணியாற்றிய வேளை போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு அவர் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச சட்டத்தின் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இராணுவதளபதியாக இல்லாவிட்டாலும் பாதுகாப்புபடையினர் தொடர்பில் கட்டளையிடுவது குறித்து வலுவான கட்டுப்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள புதிய அறிக்கை அவருக்கு பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை சர்வதேச குற்றவியல் சட்டங்களை மீறுவது குறித்து நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்ளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தயங்கினார் எனவும் ஐடிஜேபியின் அறிக்கை தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர்பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகதன்மைமிக்க விசாரணையை மேற்கொள்வதற்கும் நீதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் போதிய சந்தர்ப்பமிருந்தது எனினும் உண்மை வெளியில் வருவதற்கு அனுமதிப்பதற்கு பதில் கோட்டாபய ராஜபக்சவும் ஏனைய ஆட்சியாளர்களும் உரிமை மீறல்களில் பாதுகாப்பு படையினருக்கு தொடர்புள்ளதை மறுத்துவந்துள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அவர்களிற்கு பதவிஉயர்வுகளை வழங்கியுள்ளதுடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது. https://itjpsl.com/assets/Tamil_Gotabaya-Rajapaksas-war-time-role-Jan-2024_Final_26.01.2024_compressed.pdf போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை | Virakesari.lk
-
மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி
Published By: VISHNU 30 JAN, 2024 | 12:23 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது. எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார். மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி | Virakesari.lk
-
கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!
Published By: DIGITAL DESK 3 30 JAN, 2024 | 05:10 PM கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றையநாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. இதுவரை குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காததனால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை எனவும், பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே தம்மை அனுப்புவதாகவும், தமக்கு குழந்தைகளும் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக கொசுகடிக்குள் இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம். எம் பிள்ளைகள் வீதியிலே போகும்போது எதிராளிகள் துப்புகின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது எனவும், எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் . இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்! | Virakesari.lk