Everything posted by பிழம்பு
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
எம்.பி.கமல்ஹாசன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். ஸ்டாலின், கமல்ஹாசன் இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார். கமல்ஹாசன் தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே). தமிழ் என்றும் வாழும் நலமுடன்." என்றார். ``வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ" - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் | "Will 'living corpses' be created, at least on paper?" - Kamal Haasan in Parliament - Vikatan
-
நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
-
மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை
04 Feb, 2026 | 10:01 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk
-
ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி
04 Feb, 2026 | 10:34 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! 04 Feb, 2026 | 03:28 PM இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர். அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! | Virakesari.lk
-
புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!
04 Feb, 2026 | 03:44 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk
-
நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக மரத்தில் ஏறிய சிறுத்தைக் குட்டி!
04 Feb, 2026 | 04:47 PM பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (3) சிறுத்தையின் செயலை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில், சிறுத்தையொன்றும் அதன் குட்டியும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தன. அப்போது அந்த சிறுத்தை, நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது. அவ்வேளை அருகிலுள்ள பல நாய்கள் ஒன்றுகூடி சிறுத்தையையும் அதன் குட்டியையும் துரத்தியுள்ளன. துரத்தி வரும் நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள் சிறுத்தைக் குட்டி அருகில் இருந்த மரத்தில் ஏறியதாகவும் குட்டிக்கு காவலாக தாய் சிறுத்தையும் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், நாய்கள் அங்கிருந்து சென்றதும் சிறுத்தைக் குட்டி பாதுகாப்பாக மரத்தில் இருந்து கீழே இறங்கி, தேயிலைத் தோட்டத்தின் வழியாக தாயுடன் நடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக மரத்தில் ஏறிய சிறுத்தைக் குட்டி! | Virakesari.lk
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் சுதந்திர தின நிகழ்வு 04 Feb, 2026 | 05:42 PM இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (4) நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஏற்றி வைத்தார். இதன்போது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழியிலும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன், தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய வாத்திய இசை முழக்கம், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன. ஹாட்லி கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி மற்றும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மேலைத்தேய வாத்தியக் குழுவினர் இசையை வழங்கினர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படையணியினரின் சீருடை அணிவகுப்பு மரியாதை இதன்போது நடைபெற்றது. ஹாட்லி கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, தும்பளை சிவப்பிரகாசம் வித்தியாலயம் மற்றும் கல்லடி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் சாரணிய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. அத்துடன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களால் இன்னியம் இசை அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையிலான டெனியா மற்றும் சிறிமுருகன் முன்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கண்காட்சியும் நடைபெற்றது. மேலும், புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் செம்பு நடனம், கோலாட்டம், சிரட்டை கும்மி மற்றும் மயில் நடனம் ஆகியனவும் லயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம், வெலிஓயாவைச் சேர்ந்த ரன்சிலு கலைமன்றம் மற்றும் பரக்கும்பர மகா வித்தியாலய மாணவர்களின் கண்டிய நடன ஆற்றுகை, ஒஸ்மானிய கல்லூரி மாணவர்களின் கோலாட்டம் மற்றும் ரபான் ஆற்றுகை, சிவலீமன் சிலம்பம் கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்ட ஆற்றுகை, வெலிஓயா மதுரங்க கலாமன்றத்தின் நடன நிறுவன மாணவர்களின் சிங்கள நடனம் ஆகிய பல வண்ணக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவ்விழாவில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், விமானப் படையின் குறூப் கப்டன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், வடக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் நிறைவாக ஆளுநரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
-
“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு
04 Feb, 2026 | 05:55 PM “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு | Virakesari.lk
-
யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு!
30 Jan, 2026 | 11:52 AM யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு! | Virakesari.lk
-
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
30 Jan, 2026 | 04:46 PM யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்! | Virakesari.lk
-
இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
30 Jan, 2026 | 05:03 PM (செ.சுபதர்ஷனி) வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். குறித்த குறுஞ்செய்தியில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்களது கடனட்டை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பிற்குள் நுழைந்து தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறினால் அட்டை இ ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்படுகின்றது. இந்த இணைப்பினூடாக விபரங்களை வழங்குவோரைத் தந்திரமாகத் தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அவர்களிடமிருந்து ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் ‘OTP’ இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடி செய்கின்றனர். அத்தோடு வாட்ஸ்அப் செயலி மூலம் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் தோன்றி தன்னை ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் , குறித்த நபரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பல வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்று மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பலர் சட்ட மற்றும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளனர். ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Virakesari.lk
-
நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம்
26 Jan, 2026 | 06:11 PM நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகர சபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், “Pick Me” நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சுற்றுலாப்பயணிகளும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம். மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர். அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk
-
முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு
22 Jan, 2026 | 03:53 PM பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலய பகுதியில் அமைந்துள்ள புனிதமான இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் முறிகண்டி ஆலய பொது நிதியின் பங்களிப்புடன் புது குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 80 இலட்சம் ரூபா நிதி செலவழிக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் புது குடியிருப்பு பிரதேச சபையின் கவனயீனத்தால் அங்கு முறையான கழிவறை பராமரிக்கப்படாமல் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு ஆலயத்தில் வசிப்பவர்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் புது குடியிருப்பு பிரதேச செயலகமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் . பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை குறிப்பாக அதற்கான ஒரு சுத்திகரிப்பாளர் நியமித்து அதற்கான சுகாதாரங்களுக்குரிய வளங்களை கொடுத்து சுத்திகரிப்பு செய்வது பயணிகளுக்கும் சிறப்பு அதேசமயம் இது சம்பந்தமாக ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தொலைபேசி மூலம் இது பற்றி முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார். அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ரஜீவன் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். எனவே புது குடியிருப்பு பிரதேச செயலகம் இதற்கான நடவடிக்கையை மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது முறிகண்டி ஆலய நிர்வாகத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பது சிறப்பு எனவும் பாபு சர்மா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு | Virakesari.lk
-
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !
16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! | Virakesari.lk
-
டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியான தகவல்!
16 Jan, 2026 | 01:30 PM டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பாதாள உலக கும்பல் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை 05.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவ்வாறு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலில் “கொன்ட ரன்ஜித்” என்பவரின் சகாவான 30 வயதுடைய “சூட்டி மல்லி“ என்பவரும் , “புன்சா” என்பவரின் 52 வயதுடைய சகாவும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கல்கிஸ்ஸை இரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய “சூத்தித“ என்ற பெண்ணும் அடங்குகின்றனர். அதன்படி, கந்தான பிரதேசத்தில் 2025.07.03 இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த “சூட்டி மல்லி“ என்பவர் மேலதிக விசாரணைகளுக்காக களனி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொலை மற்றும் பல்வேறு குற்றச் செலய்களுடன் தொடர்புடைய உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் எல்பிட்டிய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில் பாரிய மோசடியில் ஈடுபட்ட கல்கிஸ்ஸை இரத்மலானையைச் சேர்ந்த “சூத்தித“ என்ற பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியான தகவல்! | Virakesari.lk
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! 16 Jan, 2026 | 03:30 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட பலர் இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை தந்து கஸ்ஸப தேரரை சந்தித்து சுகம் விசாரித்து சென்றனர். இன்று காலை 10.00 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 1 மணி நேரத்திற்கு மேலாக கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! | Virakesari.lk
-
வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி
16 Jan, 2026 | 04:20 PM இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 20 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தலா 300,000 ரூபாவுக்கான காசோலைகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வழங்கிவைத்தனர். வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக, பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “யுத்தத்தினால் பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. நீண்டகாலம் சென்ற போதும் அந்த வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் அநேகமானோர் யுத்த சமயத்திலும் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தத்தின் பின்னரும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நீண்டகாலமாக தமக்கென வீடோ, இடமோ இன்றி அவர்கள் வாழ்வது நியாயமல்ல. எமது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களினதும் வீட்டுப் பிரச்சினையை நாம் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள்.ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது. அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது. ஏனென்றால் அவை மக்களுக்கு எதிரான முரண்பாடுகளை உருவாக்கும் அரசாங்கங்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசாங்கங்களாகவே அவை இருந்தன. ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் பொதுமக்களின் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தேர்தல் சமயங்களில் மக்களின் மனங்களில் குறிப்பாக வடபகுதி மக்களிடையே எம்மைப்பற்றி குழப்பமும் தெளிவின்மையும் இருந்திருக்கும். எம்மை ஆட்சிபீடமேற்ற வாக்களித்தாலும் சந்தேகத்துடன் தான் வாக்களித்திருக்கலாம். எமது அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கு சற்று கூடுதல் காலம் சென்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்கவேண்டும். அரசாங்கமென்ற வகையில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வீடற்றவர்களுக்கு வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். வரலாற்றில் அதிக தொகையை அதற்காக ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு சிறந்த வருமான வழியை அமைக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்துறை, தெங்குப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்துறை மற்றும் சிறிய கைத்தொழிற்துறைகள் என்பன இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்த அனைத்துக் கைத்தொழிற்துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை, இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது அதற்காக பாடுபடும் அரசாங்கம். அது மட்டும் எமக்கு போதுமானதல்ல. நீண்டகாலமாக எமது வாழ்வில் பெரும்பகுதியை யுத்தத்துடனே கழித்தோம். மோதல்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். குரோதத்துடன் வாழ்ந்தோம். தமிழ் மக்கள் குறித்து சிங்கள இனவாதக் குழுக்கள் சந்தேகமாக பார்த்தன. சிங்கள மக்கள் குறித்து தமிழ் இனவாதக் குழுக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கின. நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்தன. அந்த மோதலினால் எவருக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த மோதலினால் எஞ்சியது எதுவும் இல்லை. வீடுகளை இழந்த குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் முழுமையான வீழ்ச்சி என்பவை தான் கிடைத்தன. உற்றார் உறவினர்களை இழக்க நேரிட்டது. வடக்கு, தெற்கு இரண்டிலும் உள்ளோர் இந்த அழிவினால் பாதிக்கப்பட்டனர். இந்த முழு அழிவின் பின்னாலும் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்காக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களை தூண்டிவிட்டார்கள். இவ்வாறான இனவாத அரசியல்தான் முன்னர் காணப்பட்டது. இன்றும் ஆங்காங்கே அந்த நிலைமை இருக்கிறது. தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை காரணம் காட்டி இந்த இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள். மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ தெற்கிலோ கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை. அதேபோன்று , சிறப்பான பொருளாதா நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.அதற்கான பணிகளை இந்த வருடத்திற்குள் துரிதமாக நிறைவு செய்ய உள்ளோம். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும். யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது. யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர். அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவுசெய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். அதேபோன்று சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கிறது.யாழ் மாவட்டம் மிகவும் ரம்யமான கடற்கரையைக் கொண்டுள்ளது. மக்களை கவரக்கூடிய பல பிரதேசங்கள் உள்ளன. இருந்தாலும் இன்னும் பலமான சுற்றுலாத்துறை கிடையாது. பலாலி விமான நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம். மிக விரைவில் காங்கேசன்துறை துறைமுக பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிக முன்னேற்றகரமான சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த தொழில்கள் அவசியம். சிறந்த பொருளாதாரம் அவசியமானது. மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இங்குள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், தமது வாழ்நாளில் முதன் முறையாக ஜனாதிபதி, அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருக்கும் என கருதுகிறேன். சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஒதுக்க வேண்டும். எமது சந்ததி யுத்தம் செய்துகொண்டது. எமது சந்ததி மோதிக் கொண்டது. எமது பிள்ளைகளின் சந்ததிக்கு மோதலற்ற நாட்டை, யுத்தமில்லாத நாட்டை ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். துணிச்சலான செயற்பாட்டை இந்த பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் மேற்கொண்டார்கள். நேரில் கண்டிறாத எம்மை, கேள்விப்படாத எம்மை நம்பி இணைந்திருக்கிறீர்கள். நாம் ஆட்சியமைக்க நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் மீறாமல் மென்மேலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும் அரசாங்கம் மற்றும் மேம்படுத்தும் தலைவர்களாக நாமிருப்போம்.நீங்கள் எம்மை விட்டும் ஒதுங்கிச் செல்லாதது போன்றே நாமும் உங்களை விட்டும் விலக மாட்டோம். நாம் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவரும் சகோததரத்துவத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க: “தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இன்று வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக உதவி வழங்கப்படுகிறது. நாட்டில் இரண்டு வீட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் அண்மைய சூறாவளி பேரழிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் மற்றும் இன்று தொடங்கப்படும் தேசிய வீட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும். இந்த தேசிய வீட்டுதிட்டம் ஐந்து அமைச்சுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் 31,218 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளடங்கும். அதற்காக, ஒரு வீட்டிற்கு 20 இலட்சம் ரூபா வீதம் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் “யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் பத்தொன்பதாயிரம் குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றன. இவற்றில், இந்த ஆண்டு 2,500 பேருக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், வீட்டுத் திட்டங்களுக்குப் பெறப்பட்ட தொகை, வீடு நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஜனாதிபதி உதவித் தொகையை பத்து இலட்சத்தில் இருந்து பதினைந்து இலட்சமாகவும், பின்னர் இருபது இலட்சமாகவும் அதிகரித்துள்ளார். இதனால் மக்கள் நீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கூடிய வீட்டை நிர்மாணிக்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளார். வீட்டுத் திட்டங்கள் மட்டுமல்ல, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க சேவைகளை மக்கள் எளிதாகப் பெறக்கூடிய சூழலையும், அரச ஊழியர்கள் எளிதாகச் சேவை செய்யக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி கருதுகிறார். ஆண்டுதோறும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான வடக்கு மக்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் அது இன்னும் வலுவான பிணைப்பாக மாறும் என்று நம்புகிறேன்” என்று இளங்குமரன் தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுதுலால் நிகழ்வில் அனைவரையும் வரவேற்று தனது கருத்துக்களை தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், ஜி.ஜி. பொன்னம்பலம், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோருடன் வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி | Virakesari.lk
-
மது அருந்துவதால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பு!
Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 04:46 PM நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மது அருந்துவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். அவர்களில், 34.8 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அதேநேரம் 0.5 சதவீதத்திற்கும் மிகக் குறைவான அளவில் பெண்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, நாட்டின் மொத்த மதுபான பயன்பாடு சுமார் 10 சதவீதமாகும். எமது நாட்டில் ஒட்டுமொத்த மது பயன்பாட்டைப் பார்த்தால், அது மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அன்மைய காலகட்டத்தில், குறிப்பிடத்தக்க போக்கு சட்டவிரோத மது பயன்பாட்டின் கூர்மையான அதிகரிப்பு ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, சுமார் 10சதவீத மது பயன்பாடு சட்டவிரோதமானது. சட்டவிரோத மதுவால் 5-6 பேர் உயிரிப்புகள் பவிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இன்று, வியாழக்கிகிழமை மது தினமும் சுமார் 50 பேரைக் கொல்வதாவவும். அவர் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துவதால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பு! | Virakesari.lk
-
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு
16 Jan, 2026 | 04:57 PM வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) வழிபாடுகளில் ஈடுபட்டார். நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, விகாராதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு | Virakesari.lk
-
மட்டக்களப்பில் 4 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தை!
16 Jan, 2026 | 05:08 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார். இந்த நிலையில் தந்தை அவரது 4 வயது 8 மாதம் கொண்ட மகளிடம் மீது பாலியல் சேட்டை விடுத்துள்ளதாக மகள், தாயாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து தாயார் பொலிஸ் நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (15) முறைப்பாடு செய்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 29ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பில் 4 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தை! | Virakesari.lk
-
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுத்துள்ள பாரிய திட்டம்!
Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 04:23 PM 2026 கொழும்பு நவம் மகா பெரஹெராவிற்கான சர்வதேச விளம்பரத் திட்டத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கொழும்பு கங்காராம விகாரை இணைந்து ஆரம்பிக்கவுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் மத மற்றும் கலாச்சார விழாவான கொழும்பு நவம் மகா பெரஹெரா சர்வதேச கலாச்சார விழாவாகவும், கொழும்பு நகரத்தை சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாகவும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A320neo விமானம், இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தையும் பெரஹெராவின் சிறப்பையும் வெளிப்படுத்தும் ஒரு தூதராக செயற்படும். அலங்கரிக்கப்பட்ட இந்த விமானத்தின் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் சர்வதேச இணைப்புகள் முழுவதும் நவம் மகா பெரஹெராவின் புகழ், மகிமை மற்றும் கலாச்சார அடையாளத்தை கொண்டு செல்லும் எனவும், இந்த முயற்சி நவம் மகா பெரஹெராவை ஒரு புனிதமான பௌத்த ஊர்வலமாக மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாகவும் நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்காராம விகாரையால் ஏற்பாடு செய்யப்படும் நவம் மகா பெரஹெரா, அதன் வரலாற்று முக்கியத்துவம், மத மற்றும் கலாச்சார மகத்துவத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் நிறுவன கட்டமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஆதரவை வழங்கியுள்ளது. ஏர்பஸ் A320neo விமானம், நகரத்திலிருந்து நகரத்திற்கு, கலாச்சாரத்திலிருந்து கலாச்சாரத்திற்குப் பறந்து, கங்காராம விகாரை மற்றும் நவம் மகா பெரஹெராவின் செய்திகளை உலகிற்கு எடுத்துச் செல்வதாகவும், இதன் மூலம் இலங்கையின் நீண்டகால கலாச்சார விழுமியங்களை உலகிற்குக் கொண்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது இலங்கையை சர்வதேச அளவில் மேம்படுத்துவதோடு, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமையின் இடமாக நாட்டின் பிம்பத்தை வலுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுத்துள்ள பாரிய திட்டம்! | Virakesari.lk
-
மது அருந்தியதற்காக பணம் அறவிட்ட மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய கும்பல் ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு
16 Jan, 2026 | 06:38 PM மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திய கும்பலிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரின் தலையில் மதுபான போத்தலினால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (16) பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி கொண்ட மதுபானசாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த கும்பல் சென்று மதுபானம் அருந்தியுள்ளது. பின்னர், அருந்திய பானத்துக்கான பணத்தை, அதன் முகாமையாளர் கேட்டதற்கு, அந்த நபர்கள் முகாமையாளரின் அறைக்குள் சென்று, முகாமையாளரின் தலையை மதுபான போத்தலைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த ஒருவரை இன்று கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். மது அருந்தியதற்காக பணம் அறவிட்ட மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய கும்பல் ; ஒருவர் கைது ; இருவர் தலைமறைவு | Virakesari.lk
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
Published By: Digital Desk 1 13 Jan, 2026 | 01:59 PM கிளிநொச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆடைகளை ஒன்றரை வருடமாக மோசடியாக திருடி வந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் 18.03.2024 முதல் 29.05.2025 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மாவனெல்ல மற்றும் கெடஹெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத்திணைக்களம் மேற்கொண்டு வருகி கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது! | Virakesari.lk
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
13 Jan, 2026 | 04:21 PM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜூலி சாங்கின் சிறப்பான பணிகளுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்! | Virakesari.lk