Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் (நா.தனுஜா) தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடாகவே தாம் கருதுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலை' பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் இன்று புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்: பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் நேபாளத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஏப்ரல் 27 இல் கைச்சாத்திடப்பட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய 'இமயமலை' பிரகடனத்தைக் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள், அதுகுறித்து இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து அப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் கோரியுள்ளனர். முதன்முதலாக உலகத்தமிழர் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கியதோர் குடை அமைப்பாகவே காணப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம்வகித்த (பின்னர் அதிலிருந்து விலகிய) பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தைக் கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக உலகத்தமிழர் பேரவையானது புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தம்மைக் காண்பித்துக்கொள்வது தவறு எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் எம்மைச் சந்தித்து இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்ததுடன், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அவருக்குரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டது. மாவீரர் நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடியவர்களுக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்றது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுவருகின்றது. இவ்வாறு அடக்குமுறைகள் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தி உலகத்தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி முன்னைய காலங்களில் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயற்பட்டுவந்த உலகத்தமிழர் பேரவை, இன்னமும் அதிலிருந்து மாறவில்லை என்பதையும் இந்நகர்வு வெளிப்படுத்துகின்றது. உலகத்தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர், குறிப்பாக இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் கூட்டமைப்பு உலகத்தமிழர் பேரவையுடன் மிகநெருங்கிய உறவைப் பேணிவந்திருப்பதுடன், கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அதன் தொடர்ச்சியாகவே பேரவை இயங்கிவருகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் விளைவாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி வெகுவாகச் சரிவடைந்தது. எனவே எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் கூட்டமைப்பு 'நல்ல பிள்ளையாக' செயற்பட முயற்சிக்கின்றது. அதன்படி தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. 'இமயமலை' பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 6 அம்சங்களும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அண்மையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்காது. மாறாக அவை தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிட்ட விதத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பை மூடிமறைத்து, அதனை நேர்மறையான விதத்தில் காண்பிப்பதற்கும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதன் ஊடாக தமிழ்மக்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கு முற்றுப்புள்ளிவைத்து போலியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதற்குமே பங்களிப்புச்செய்யும். எனவே இதனை முற்றாக நிராகரிக்கவேண்டுமெனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற பாடத்தை அவர்களுக்குப் புகட்டவேண்டும் எனவும் தமிழ்மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  2. புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் - சஜித் பங்காளிகள் சகிதம் கோரிக்கை. ஆர்.ராம் புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு 'புலம்பெயர் இலங்கையர்கள்' என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உலகத் தமிழர் பேரவையினரிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது, புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்தவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான முதல் படியே இமயமலை பிரகடனம் என்றும் உலகத் தமிழர் பேரவையினர் பதிலளித்துள்ளனர். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியின் பங்காளிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதில், பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, ஏரான் விக்கிரமரட்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், திகாம்பரம், உதயகுமார், வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தௌபிக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, உலகத் தமிழர் பேரவையினால் இமயமலை பிரகடனம் கையளிக்கப்பட்டதோடு, அதனை செயற்பாட்டு ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. மதிய போசன விருந்துபசாரத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவரது தலைமையிலான எதிரணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில், அவருடனான உரையாடலின்போது, இமயமலை பிரகடனத்தை நான்கு பீடாதிபதிகளுக்கும் கையளித்து அவர்களிடமிருந்து ஆதரவினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டமையானது முக்கியமானதொரு விடயம் என்று சுட்டிக்காட்டினார். அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார். அதேநேரம், ஒருசில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் கூறினார். இதேநேரம், அவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளதாக குறிப்பிட்டார். அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார். அச்சமயத்தில், புலம்பெயர் இலங்கையர் என்றோ அல்லது உள்நாட்டில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கோ நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு நீண்ட பயணம் அவசியமாக உள்ளது. அந்தப் பயணத்தின் முதல் கட்டமாகவே இமயமலை பிரகடனம் காணப்படுகிறது என்ற விடயத்தினை சுட்டிக் காண்பித்தோம் என்றார். இதனையடுத்து, குறித்த குழுவினர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சந்தித்ததோடு அமரபுர நிக்காயவைச் சேந்த வல்பொல விமலஞான தேரர், மாகல்லே நாகித மகா தேரர் பேராசிரியர் கந்தேகொட விமலதம்மே மகா தேரர், வாஸ்கடுவ மஹிந்த வம்ச மகா தேரர், பள்ளிகந்தே இரத்தினசார மகா தேரர், நிந்தனே சந்தவிமல மகா தேரர் ஆகியோரையும் சந்தித்தனர். இதில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின்போது, போர் உக்கிரமடைந்த காலத்தில் தான் போரை நிறுத்துவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதேபோன்ற மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், இருப்பினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனதாக கர்தினால் குறிப்பிட்டதாக அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அதேநேரம், கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தீர்மானங்கள், செயற்பாடுகளை ஏன் எடுத்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான அணுகுமுறையின் ஊடாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை எட்ட முடியும் என்று கருதியதாக பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார். தற்போது எம்மால் கையளிக்கப்பட்ட இமயமலை பிரகடனத்தினை அமுலாக்குவதற்கு பொருத்தமான சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக தான் ஆயர் பேரவையின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் மூன்றாவது கரமொன்று உள்ள நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைப்பதற்கு தான் முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அமரபுர நிக்காயவின் தேரர்களை கொட்டாஞ்சேனை திபதுதேமராமய தாய் விகாரையில் சந்தித்த உலகத் தமிழர் பேரவை தலைமையிலான குழுவினர், அங்கு பிரித் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இதன்போது, நாட்டில் பிரிவினைவாத சிந்தனையை தோற்றுவித்து குழப்பங்களையும் பதற்றங்களையும் தோற்றுவிப்பது இலகுவானது. ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ்வதற்காக தீர்மானித்து முன்வருவது கடினமானதொரு பணியாகும். அந்தக் கடினமான பணியை உலகத் தமிழர் பேரவை முன்னெடுத்துள்ளமையை வரவேற்பதோடு, அந்த சிந்தனை மாற்றத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை நன்மைகளை அளிக்கும் முகமாக பயன்படுத்த வேண்டும் என்று தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்ற சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்தார். புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் - சஜித் பங்காளிகள் சகிதம் கோரிக்கை | Virakesari.lk
  3. வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (5) தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் பொலிஸ் நிலையத்தில் கடையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் சாட்சியங்கள் தமது சாட்சியை பதிவு செய்தன. அத்துடன் உயிரிழந்த இளைஞனின் சகோதரி மற்றும் , உயிரிழந்த இளைஞன், அவருடன் கைதான இளைஞன் ஆகிய இருவருடன், பிறிதொரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, ஒரே சிறைக்கூடத்தில், தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞனும் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர். அதனை அடுத்து வழக்கினை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைக்கு நீதவான் ஒத்திவைத்தார். அதேவேளை வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3 பொலிஸ் சாட்சி உள்ளிட்ட 5 சாட்சியங்கள் பதிவு | Virakesari.lk
  4. காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். மேத்யூவின் வீட்டைப்போலவே குடும்பத்திலும் கனத்த மவுனம் நிரம்பிக் கிடக்கிறது. இடதுசாரிக் கட்சியின் ஆதரவாளரான மேத்யூ, கிராம பஞ்சாயத்தில் உள்ள 3-வது வார்டின் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். இத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்போது, மேத்யூவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார் ஓமணா. அவர் தாக்கல் செய்யும் மனுவில், மேத்யூ ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் விவாகரத்து கோருவதாக குறிப்பிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. தேர்தல் நேரத்தில் எழும் இந்தக் குடும்ப பிரச்சினை, சமூகத்தில் தனக்கு ஏற்படபோகும் விளைவுகளின் பாதிப்புகள் குறித்த எண்ணம் மேத்யூவை கடுமையாக பாதிக்கிறது. இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனரா, தன்பால் ஈர்ப்பாளரான மேத்யூஸ் தேர்தலில் வென்றாரா, இல்லையா எனபதே திரைக்கதை. ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியாவின் எழுத்தை படமாக்கியிருக்கிறார் ஜியோபேபி. சென்சிட்டிவான இந்தப் பிரச்சினையின் கனம் உணர்ந்து, வசனங்களை சுருக்கி, வெறும் உணர்வுகளின் வழியே அணுகியிருப்பது முழுமையான சினிமா அனுபவம். எந்த பிரச்சார வசனங்களோ, தன்பால் ஈர்ப்பாளர்களை புகழ்ந்தோ, இகழந்தோ, ஹைப் ஏற்றி பாடம் எடுக்காமல் படமாக எடுத்திருப்பது பலம். முதல் பாதியில் தன்பால் ஈர்ப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமலேயே பார்வையாளர்களை புரிந்துகொள்ள வைத்தது, அதற்கு பின் வரும் காட்சிகளில் கதை போக்கிலேயே அதனை வெளிப்படுத்தியிருப்பது தேர்ந்த திரைமொழி. தன்பாலின ஈர்ப்பாளர்களாக அடையாளப்படுத்தப்படும் இருவர், சேர்ந்து பேசிக்கொள்ளும் ஒரு வசனமோ, தருணமோ படத்தில் இருக்காது. ஆனால், அவர்களுக்குள்ளான அந்த உறவின் அடர்த்தி கச்சிதமாக கடத்தப்பட்டிருக்கும். அதுவும் இடைவேளையின்போது இருவரும் சந்தித்துக்கொண்டு பேசாமல் நகர்ந்துசெல்லும் காட்சியில் உணர்வுமொழியில் நம்முடன் உரையாடும். படத்தில் மற்றொரு சுவாரஸ்யமான இடம், அதன் கோர்ட் ரூம் டிராமா. சமூகத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் அந்தக் காட்சிகளில் அடர்த்தியான வசனங்கள் தேவையான அளவில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, ஓமணாவிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர், ‘அவர் உங்களிடம் ஆக்ரோஷமாகவோ, வன்முறையுடனோ நடந்துகொண்டாரா?’ என கேட்கும்போது, குறுக்கிடும் எதிர்தரப்பு வழக்கறிஞர், “தன்பால் ஈர்ப்பாளர்கள் அன்பும், கருணையும் காட்டாத இரக்கமற்றவர்கள் என கருதுகிறீர்களா?” என கேட்பார். இப்படியாக பொதுப்புத்தி கேள்விகளுக்கான பதில்கள் உரையாடல்களாக வெளிப்படும். எல்லாவற்றையும் தாண்டி, காதல் என்பது சகித்துக்கொண்டு கஷ்டப்பட்டு வாழ்வதல்ல என்பதை படம் நிறுவும் இடம் முக்கியமானது. மம்மூட்டி - ஜோதிகா இடையே எந்த பிரச்சினையுமில்லை. சொல்லப்போனால் மம்மூட்டிக்கு ஜோதிகாவை பிரிய மனமில்லை. ஆனால், இங்கே பாதிக்கப்பட்டவரான ஓமணா (ஜோதிகா) கதாபாத்திரம் 20 ஆண்டுகளில் வெறும் 4 முறை மட்டுமே உறவில் இருந்த மேத்யூஸை பிரிய முடிவெடுத்து, “நான் என்னை மட்டும் மீட்டுக்கொள்ளவில்லை, உன்னையும் சேர்த்து தான் மீட்டெடுக்கிறேன்” என்று கூறுவதன் வழியே மம்மூட்டியை அவரது அடையாளத்துடன் அவருக்கு பிடித்தமானவருடன் வாழ வழி செய்கிறது. உண்மையில் அந்த சுதந்திரமும் விடுபடுதலும்தான் காதல். கஷ்டப்பட்டு சகித்து வாழ்வதைக் காட்டிலும், மனமுவந்து விலகி பிடித்த வாழ்க்கையின் தேர்வு தான் ‘காதலின் மையம்’ என்கிறது படம். அதேபோல “கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்” என பழமைவாத சொல்லாடல் மீது ஓங்கி அறைகிறது. கவிதையைப்போல நகரும் இடைவேளையும், க்ளைமாக்ஸ் காட்சியும் சிறந்த காட்சியனுபவ ரசனை. சாலு கே.தாமஸின் ஸ்டாட்டிக் ஃப்ரேம்கள் பல கதைகளைச் சொல்கிறது. தொடக்கத்தில் வரும் சர்ச் காட்சியிலேயே தனித்தனியாக பிரிந்து செல்லும் மேத்யூஸ் - ஓமணா தம்பதி, அப்பாவை பற்றிக்கொண்டு மகன் அழும்போது வரும் வைடு ஆங்கிள், இறுதிக்காட்சியின் சர்ப்ரைஸ் என மனிதர்களுடன் மனிதர்களாகவே மாறி அருகில் நின்று கதை சொல்கிறது கேமரா. சூப்பர் ஸ்டார் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரும் கனவு. நடிப்பதுடன் அதை தயாரித்தும் கனவுக்கு உயிர்கொடுத்திருக்கும் மம்மூட்டியின் முயற்சி பாராட்டத்தக்கது. தன்பாலின அடையாளத்துடன் நிகழ்த்தும் போராட்டம், விருப்பமான வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும் தவிப்பு, கட்டாய திருமணத்தால் பெண்ணை வதைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் ‘கடவுளே’ என அழுவதாகட்டும், தந்தையை பற்றிக்கொண்டு கதறும்போதும் கலங்கடிக்கிறார் மம்மூட்டி. இருண்ட வாழ்க்கையிலிருந்து மீள வழி தேடும் பெண்ணாக இறுக்கமான முகபாவனையுடன் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் ஜோதிகா. ‘விவாகரத்தை வாபஸ் வாங்கிட்டா அது எனக்கு நானே செஞ்சுக்கிற அநீதி’ என தனக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் தெளிவான கதாபாத்திர வடிவமைப்பிலும், அதே சமயம் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இடங்களிலும் கவர்கிறார். அதிகம் பேசாமலேயே தனது அப்பாவியான நடிப்பிலும், தயங்கி உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் தங்கன் கதாபாத்திரத்தில் நடித்த ஜிசு சென்குப்தா. வழக்கறிஞர்களாக வரும் சின்னு சாந்தினி, முத்துமணியும் சிறிது நேரம் வந்தாலும் சிறப்பான பங்களிப்பை செலுத்துகின்றனர். இறுதியில் வரும் பாடலில் பார்வையாளர்களுக்கு ஃபீல்குட் உணர்வை கொடுத்தனுப்பும் மாத்யூஸ் புலிக்கன், லேசான மழைத்தூரல் போல படம் முழுவதும் பின்னணி இசையில் இதம் சேர்ப்பது பலம். 20 வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மணவிலக்கு கேட்பதற்கு சொல்லும் காரணத்தில் வலுவில்லை. மதங்களும், மக்களும் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்து வெற்றிப்பெறச்செய்வது யதார்த்ததில் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழாமலில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன லாஜிக்குகள் இடித்தாலும், சொல்ல வந்ததை தேர்ந்த திரைமொழியில் பதியவைக்கிறது ‘காதல் - தி கோர்’. காதல் - தி கோர் Review: மம்மூட்டி, ஜோதிகாவின் நேர்த்தியான பங்களிப்பில் ஓர் உணர்வுப் போராட்டம்! | Mammootty starrer Kaathal The Core movie review - hindutamil.in
  5. நாட்டுக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு உயரிய சபையில் வாழ்த்துத் தெரிவித்த உதயனி கிரிந்திகொட (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை அகிலத் திருநாயகி இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஆகவே இவருக்கு இந்த உயரிய சபை ஊடாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் உதயனி கிரிந்திகொட குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது மேற்கண்டவாறு வாழ்த்து தெரிவித்தார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியை சேர்ந்த அகிலத்திருநாயகி (72 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்பவரே இந்த சாதனையை படைத்து நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். இந்த வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அவருக்கு தேவையான வசதிகளை பொறுப்பான அமைச்சு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறேன் என்றார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு இந்த சாதனை பற்றி பேசவில்லை, வாழ்த்து தெரிவிக்கவுமில்லை. 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீற்றர் விரைவு நடை ஆகிய போட்டிகளில் கலந்துக் கொண்டு இந்த இரண்டு தங்கப் பதக்கங்களை அகிலத்திருநாயகி வென்றுள்ளார். 72 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இவர் மேலும் 800 மீற்றர் ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார். நாட்டுக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு உயரிய சபையில் வாழ்த்துத் தெரிவித்த உதயனி கிரிந்திகொட | Virakesari.lk
  6. ஆதித்யா எல்1: 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி இந்திய செயற்கைக்கோள்களை எப்படி காப்பாற்றும்? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா - எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் , “ஆதித்யா-எல்1 திட்டத்தை மேற்கொள்வதற்காக மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறையை செய்த பிஎஸ்எல்விக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி, மிஷன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்களைக் கொண்ட மிக நீண்ட பயணம்,” என்றார். ஆதித்யா-எல்1 விண்கல திட்டத்தின் இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் சாஜி பேசுகையில், “கனவு நிஜமாகி உள்ளதைப் போன்ற நிலை இது. பிஎஸ்எல்வி மூலம் ஆதித்யா-எல்1 விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. அது 125 நாட்களுக்கான தனது நீண்ட பயணத்தை ஆதித்யா-எல்1 தொடங்கியுள்ளது. ஆதித்யா-எல்1 பயன்பாட்டுக்கு வந்தவுடன், அது நாட்டிற்கும் உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும் ஒரு சொத்தாக இருக்கும். இந்தப் பணியை சாத்தியமாக்குவதற்கு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய முழு குழுவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார். ஆதித்யா என்பதற்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் சூரியன் என்று பொருள். எல்1 என்பது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே இரண்டின் ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருக்கும் நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று இந்தியா பெற்றது. இது நடந்த ஒரே வாரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காகவும் ஒரு விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c895eqdvn74o
  7. பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, சனிக்கிழமை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 | Virakesari.lk
  8. கீழடி அகழாய்வில் அரிதான சுடுமண் பாம்பு தலை உருவம் கண்டெடுப்பு திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன. இங்கு ஏற்கெனவே தங்க அணிகலன், சுடுமண் காளை, ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, படிக எடைக் கல் என 200-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஒரு குழியில் 190 செ.மீ. ஆழத்தில் அதிகளவில் பானை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் கைகள் மூலம் சுடுமண்ணால் நுட்பமாகச் செய்யப்பட்ட பாம்பின் தலை உருவம் ஒன்று இருந்தது. அது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ., தடிமன் கொண்டது. பாம்பின் கண்கள், வாய்ப் பகுதி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது. மேலும் சொரசொரப்பான மேற்பரப்பு டன் சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. இத்தகவலை தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். கீழடி அகழாய்வில் அரிதான சுடுமண் பாம்பு தலை உருவம் கண்டெடுப்பு | Rare Flint Snakehead Found on Keeladi Excavations - hindutamil.in
  9. வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு - கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா - தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர். இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம்குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன்,மேலும் 10 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இறந்த பெண்ணின் கணவனான ச.சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வாளர்கள், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவுபொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவந்ததுடன். இச் சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டிருந்தன. விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். இதேவேளை குற்றச்செயலுக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வவுனியாவை சேர்ந்த ஏனைய மூவர் வெளிநாடுகளிற்கு தப்பிச்செல்ல முடியாதவாறு அவர்களது கடவுச்சீட்டுக்கள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருதரப்பிற்கிடையிலான தனிப்பட்ட முன்பகையே குறித்த சம்பவத்திற்கு காரணம் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற அனுமதியுடன் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர். வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு - கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி | Virakesari.lk
  10. வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் மற்றும் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் 21 வயது குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று புதன்கிழமை (26) அதிகாலை உயிரிழந்த பெண்ணின் கணவரான 32 வயதுடைய நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, தீ வைக்கப்பட்ட வீட்டினை கொழும்பில் இருந்து சென்று பார்வையிட்ட பொலிஸ் தரப்பு இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று சோதனை செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு, வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டுக்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவத்தில் 21 வயது இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் வாள்வெட்டு, தீ வைப்புக்குள்ளான வீட்டில் இரசாயன பகுப்பாய்வு சோதனையில் ஈடுபட்ட கொழும்பு பொலிஸார் | Virakesari.lk
  11. விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் மாலை 03.30மணியளவில் அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டதுடன், குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (13.07.2023) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கம் மற்றும், அமைப்புக்களுடன் விசேடகலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக காலை 10.00மணியளவில் தொடங்கிய குறித்த அகழ்வுப்பணிகள், மாலை 03.30மணிவரையில் இடம்பெற்றன. இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 பகுதிகளில் 13 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு, அவ்வாறு இனங்காணப்பட்டஇடங்கள் தடயவியல் பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடையவியல் பொலிசார் உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் இடம்பெற்றன. கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . இது தொடர்பாக 30.06.2023 நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 13 மனித எச்சங்கள் : அகழ்வு இடை நிறுத்தம் | Virakesari.lk
  12. "சக்சுரின்" யானை விவகாரம் : தாய்லாந்துக்கு திடீர் பயணமானார் பிரதமர் தினேஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன புதன்கிழமை (31) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் மேலும் 11 பேர் அடங்கிய குழுவினரும் தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளனர். இதேவேளை, அண்மையில் தாய்லாந்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட "சக்சுரின்" என்ற யானையை விசேட சரக்கு விமானம் மூலம் மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்தவருடம் தாய்லாந்து தூதரகம் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்லநிலையில் இல்லை என்பதையும், அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொண்டது. சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம்,விலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான திடீர் விஜயம் அமைந்துள்ளதாக கருதப்படுகின்றது. "சக்சுரின்" யானை விவகாரம் : தாய்லாந்துக்கு திடீர் பயணமானார் பிரதமர் தினேஷ் | Virakesari.lk
  13. தாய்லாந்தினால் இலங்கைக்கு இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை சக்சுரின் நோய்வாய்ப்பட்டுள்ளதாலும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மீள தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு தாய்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையுடனான தொடர் சந்திப்புகளின் பின்னரும் மிருகவைத்தியர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்தும் சக்சுரினை எப்போது தாய்லாந்திற்கு மீள கொண்டுவருவது என தீர்மானித்துள்ளதாக தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சக்சுரின் தாய்லாந்திற்கு மீள வரக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக மிருகவைத்தியர்கள் குழுவொன்று இலங்கை சென்றது, என தெரிவித்துள்ள அமைச்சர் முழுமையான விபரங்களை திரட்டிய பின்னர் ஜூன் மாதம் யானையை தாய்லாந்திற்கு கொண்டுவரதீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் விலங்குகள் உரிமை பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் ரார் என்ற அரசசார்பற்ற அமைப்பொன்று சக்சுரின் மிகமோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாய்லாந்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்தே தாய்லாந்து அரசாங்கம் இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது. ஆண்யானைக்கு உடனடியாக சிகிச்சைதேவைப்படுகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் யானையை தாய்லாந்திற்கு கொண்டுவரஎண்ணியிருந்தோம், எனினும் விலங்கின் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது கடல் வழியாக கொண்டுவருவதை விட வான்மார்க்கமாக கொண்டுவருவதே சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்தனர் என தாய்லாந்தின் அமைச்சர் தெரிவித்துள்ளார்- கடல்வழியாக கொண்டுவருவது நீண்டகாலம் பிடிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம்,விலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.. இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று யானைகளில்ஒன்று சக்சுரின் தாய்லாந்தின்வெளிவிவகார அமைச்சு யானையின் நிலை குறித்து அறிந்ததும் தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகாரஅமைச்சுடன்இது குறித்து ஆராய்ந்தது. இதன் பின்னர் கொழும்பில் உள்ள தனது தூதரகத்தை இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. கடந்தவருடம் தாய்லாந்து தூதரகம் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்லநிலையில் இல்லை என்பதை அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டது. தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம் | Virakesari.lk
  14. கீழடி அகழாய்வு கூறும் தமிழர் வரலாறு: குதிரை எலும்புகள், நெற்பயிர் எச்சங்கள் ஆய்வில் கிடைத்திருப்பது ஏன் முக்கியம்? - பாகம் 2 #Exclusive முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2023 பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, முதல்கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் - கழுகுப் பார்வையில் கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன. கீழடி அகழாய்வு அறிக்கை குறித்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. தற்போது கீழடி தொல்லியல் தளம் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் வைகை நதி ஓடியிருக்க வேண்டும். பிறகு நதி தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில், அங்கிருந்த வண்டலின் காரணமாக செறிவுமிக்க விளைநிலமாக கீழடி மாறியது. (தற்போது வைகை கீழடியிலிருந்து வடக்கில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது). இங்கு கிடைத்த உயிரியல் எச்சங்களை ஆய்வுசெய்தபோது, அதில் குறிப்பிடத்தக்க அளவில் நெற்பயிரின் எச்சங்களும் உமியும் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, அங்கு பெரிய அளவில் நெற்பயிர் விளைவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இங்கு தொடர்ந்து விளைச்சல் அதிகரித்தது. குறிப்பாக நெற்பயிரின் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக இந்தப் பகுதியில் வர்த்தகம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட உபரியால், உள்நாட்டு - வெளிநாட்டு வணிகமும் வர்த்தகமும் நடக்க ஆரம்பித்து. மெல்ல மெல்ல கீழடி ஒரு நகர்ப்புறமாக மாற ஆரம்பித்தது. இதனால், வளர்ச்சி அதிகரிக்க இந்தப் பகுதி ஒரு நகர்ப்புற மையமாகவே மாற ஆரம்பித்தது. கீழடியில் கிடைத்த விலங்குகளின் எச்சங்கள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, பல்வேறு வகையிலான விலங்குகள் கீழடி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ளன அல்லது வாழ்ந்துள்ளன. பசு, காளை, எருமை, ஆடு, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகளும் நீலான் மான் (Nilgai), மறிமான் (Antelope), புள்ளிமான் போன்ற மான் இனங்களும் இங்கே இருந்துள்ளன. பட மூலாதாரம், Archeological Survey Of India படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள். விலங்குகளின் எலும்புகள் கீழடி பகுதியில் பெரிய அளவில் விலங்குகளின் எலும்புகள் கிடைத்ததை வைத்துப் பார்த்தால், கீழடியின் பொருளாதாரத்தில் அவை முக்கியப் பங்கை வகித்திருக்கக்கூடும். எருமை, ஆடு, செம்மறியாடு ஆகியவையே கீழடி மக்களின் உணவுகளில் முக்கியப் பங்கு வகித்தன. அவற்றோடு ஒப்பிட்டால், உணவில் பன்றியின் பங்கு குறைவாகவே இருந்தது. வீடுகளில் இந்த விலங்குகளை வளர்த்ததுபோக, கொம்புகள், தோல் போன்ற பொருட்களுக்காக மிருகங்களை வேட்டையாடுவதும் கீழடியில் நடந்திருக்கிறது. காட்டு மாடுகள், காட்டெருமைகள் போன்றவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. நாய்கள் செல்லப் பிராணிகளாகவோ, பாதுகாப்புக்காகவோ வளர்க்கப்பட்டிருக்கக்கூடும். பட மூலாதாரம், Archeological Survey of India ஆனால், கீழடியில் கிடைத்த விலங்கு ஆதாரங்களிலேயே மிகவும் கவனிக்கத்தக்கது குதிரை பற்றியதுதான். கீழடியில் இருந்த மக்கள் குதிரைகளை வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது தொல்லியல்ரீதியில் மிக முக்கியமானது. "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்" என்கிறது சங்க காலப் பாடலான பட்டினப்பாலை. அதாவது, "கடல் மூலம் கொணடுவரப்பட்ட வேகமாகச் செல்லக்கூடிய நிமிர்ந்த குதிரைகள், சரக்கு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மிளகு மூட்டைகளும் வடமலையில் இருந்து வந்த தங்கமும் மேற்கு மலைகளில் இருந்து வந்த சந்தனமும் அகிலும்" என்பது இந்த வரிகளின் அர்த்தம். பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, தரையில் செங்கல் பாவிய தளங்களுடன் கூடிய கட்டடத் தொகுதிகள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே தொல்லியல் தளங்களில் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. (ஆந்திர பிரதேசத்தில் உள்ள வரலாற்று ஆரம்ப கால தொல்லியல் தளமான கொட்டிப்ரோலுவில் நடந்த தொல்லியல் ஆய்வில் சமீபத்தில் குதிரை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.) இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குதிரைகள் சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சொல்லப்படுவதைப்போல, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கக்கூடும். முயல் மற்றும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், மீனின் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை. நன்னீர் சங்குகள் கிடைத்திருக்கின்றன. இப்போதைப் போலவே அப்போதும் நத்தைகள் உணவாக இருந்திருக்கக்கூடும். பட மூலாதாரம், Amarnath Ramakrishna படக்குறிப்பு, கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான அணி. கீழடி பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கீழடியின் பொருளாதாரத்தில் கால்நடைகளுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆய்வு அங்கு நடத்தப்பட வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. இந்த இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, கீழடியில் பல இடங்களில் இரட்டை அடுப்புகள் கிடைத்துள்ளன. "ஆனால், கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. அதேபோல, இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை. எடுத்துக்காட்டாக, இங்கு கிடைத்த 'இ', 'எ' பிராமி எழுத்துகளுக்கும் அசோக பிராமிக்கும் வித்தியாசம் உண்டு. அவை இலங்கையில் கிடைக்கும் பிராமி எழுத்துகளுடன் நெருக்கமாக உள்ளன. அதேபோல, 'm' என்ற ஒலிக்குறிப்பைக் கொண்ட அசோக பிராமி எழுத்து பானை ஓடுகளில் இதுவரை கிடைத்ததில்லை," என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கிடைத்த பெரும் எண்ணிக்கையிலானை ஓடுகளை தெர்மோலூமினசென்ஸ் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இங்கு கிடைத்த காசுகளைத் தவிர பிற உலோகப் பொருட்களும் அவற்றின் உலோகத் தன்மை குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமர்நாத் சுட்டிக்காட்டுகிறார். இந்த இரண்டு அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் ஆரம்பகால வரலாற்றையும் சங்க காலத்தையும் மேலும் அறிந்துகொள்ள கீழடி மிக மிக முக்கியமான தொல்லியல் தளமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியுமென அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியிருக்கிறார். பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, கீழடியில் அகழ்வாராய்ச்சியில் காலப்படிநிலையைக் காட்டும் படம். தொடர் ஆய்வுகளுக்கான தேவை வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். பெருங்கற்கால வாழிடங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தேவையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதும் தென்னிந்தியப் பகுதியில் பெரிய அளவில் செய்யப்பட்டதில்லை. மாறாக, இங்குள்ள பெருங்கற்காலப் பகுதிகள் அனைத்தும் இரும்புக் காலத்தோடு தொடர்புபடுத்தி முடிக்கப்பட்டுவிடுகின்றன. அதற்கு அருகில் உள்ள வாழிடப் பகுதிகள், அவற்றில் வாழ்ந்த மக்கள் ஆகியோர் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள். ஒரு பெருங்கற்காலத் தலமும் அதை ஒட்டிய வாழிடத்தலமும் கண்டறியப்படும்போது, எப்படித் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு தற்போது கீழடியில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை சான்றாகக் கொண்டு செயல்படலாம். அப்படிச் செய்யும்போது தமிழ்நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு எப்படி வளர்ந்தது, தென்னிந்தியாவில் அதை ஒட்டிய பண்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம்? பெருங்கற்காலப் பண்பாடு என்பது தமிழ்நாட்டில் சங்க காலம் எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்லலாம். சங்க கால நகர நாகரீகம் எப்படி இருந்தது என்பதை மேலும் அறிய, கீழடியில் விரிவான ஆய்வுகளைச் செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சங்க காலத்தில் தமிழ்நாட்டின் நகர வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை சங்கப் பாடல்கள் விரிவாக உரைக்கின்றன. கீழடியில் கிடைத்த சில சான்றுகள், இந்த இலக்கிய ஆதாரங்களுக்கான தொல்லியல் ஆதாரங்களின் மூலம் சிறிய அளவிலாவது உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/india-64601317
  15. படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டு இன்று (21) ஐந்து நாட்கள் பூர்த்தியடைந்தும், கொலையாளைகள் அல்லது சந்தேக நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந் நிலையில் குறித்த படுகொலை விவகார விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாகவும் மிக விரைவில் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் நம்பிக்கை வெளியிட்டார். இந் நிலையில், வர்த்தகர் ஷாப்டரின் பிளவர் வீதி வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், மலலசேகர மாவத்தையில் உள்ள ரொட்ரிகோ லொஜன்சி பிளேவர் எனும் உணவகத்தில் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் கொள்வனவு செய்யப்பட்ட சிற்றூண்டிகள் போட்டுக் கொடுக்கப்பட்ட பை மட்டும் ஷாப்டரின் காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, சிற்றூண்டிகள் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர், இருவரால் உட்கொள்ளப்பட்டிருக்கின்றமை தொடர்பில் ஊகிக்க முடியுமான சான்றுகள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளன. இந் நிலையில் இதுவரையிலான விசாரணைகளில் 50 வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது ஷாப்டரின் வீடு மட்டும் அலுவலகத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளிடம் விசாரணையாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களை சந்தேக நபர்களாக கருதாமல், ஷாப்டர் நெருங்கிப் பழகியோர் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்திக்கொள்ள இவ்வாறு அவர்களை விசாரணை செய்வதாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர். ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது, சாரதி எவரும் உடன் இருக்கவில்லை என்பதும், குறித்த பயணத்துக்காக ஷாப்டர் காரை அவரே செலுத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், மிக தனிப்பட்ட பயணமாக அவர் அப்பயணத்தை முன்னெடுத்திருப்பதும், அப்படி அவர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் அல்லது நபர்கள் யார் என்பது தொடர்பிலும் வெளிப்படுத்தவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணையாளர்கள் பிரதானமாக நான்கு கோணங்களில் விசரிக்கும் நிலையில், இதுவரை ஷாப்டரின் கொலையுடன் தொடர்புபட்டதாக எவரையும் கைது செய்ய போதிய சான்றுகள் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது. இந் நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள், பொரளை மயான கோபுரத் தகவல்களை மிக ஆழமாக ஆராயும் சிறப்புக் குழு, அதன் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய சிலரிடம் இரண்டாவது முறையாகவும் விசாரணை நடாத்தியுள்ளது. அத்துடன் ஷாப்டரின் கொலையின் பின்னர் அவருக்கு நெருக்கமான பலரின் செயற்பாடுகளை 24 மணி நேரமும் சி.ஐ.டி.யினர் கண்காணித்து வருவதாகவும் அறிய முடிகின்றது. இந் நிலையில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார். படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் | Virakesari.lk
  16. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு பிபிசிCopyright: பிபிசி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ம்கட்ட அகழாய்வுப் மணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது 8அடி ஆழத்தில் ஒரே குழியில் 2அடுக்கு மற்றும் 3அடுக்குகள்கொண்ட அருகே அருகே 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‌ இவ்வாறு கிடைப்பது இதுவே முதன் முறை ஆகும்.இது ஆராய்ச்சியாளர்களிடம் மிகுந்த ‌ஆர்வத்தை‌ ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அகழாய்வுப் நடத்தும் பட்சத்தில் இதன் அகலம் உயரம் மற்றும் முழு பயன்பாடும் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அகரத்தில் கிடைத்துள்ள உறை கிணுறுகளை பற்றி ‌தொல்லியல்‌ துறை‌ அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என‌ பதிவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து கீழடி,கொந்தகை மணலூர் அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகரம் அகழாய்வு தளத்தில ‌ ஒரே குழியில் முன்று‌ உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)
  17. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் காணொளிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து இன்று துவக்கிவைத்தார். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வில் தமிழர் நாகரிகத்தை விளக்கும் வகையில் மேலும் பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. வைகை நதி நாகரிகத்தை முழுமையான முறையில் ஆய்வு செய்யும் பொருட்டு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 7818 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வு முதல் தற்போது வரை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல்பொருட்களும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய ஆறாம் கட்ட அகழாய்வில் 913 தொல்பொருட்களும் வெளிக்கொணரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட செவ்வண்ண பூச்சு பெற்ற மட்பாண்ட ஓடு, மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, மாட்டினத்தைச் சார்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதி, எடைக்கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை முக்கிய கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன. கீழடி அருகே அமைந்துள்ள கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மேற்கொண்ட அகழாய்வில் நுண் கற்காலத்தை சார்ந்த கத்திகள், 300 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயம், கரிமமயமான நெல், புகைப்பான் ஆகியவையும், மணலூரில் கட்டுமான அடையாளங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தை அறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த அகழாய்வில் தாதுக்கள் மற்றும் மண் பகுப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, புவிசார்வியல் மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு, தொல்லியல் கோட்பாடு மற்றும் முறைகள், உலோகவியல் ஆய்வுகள், தொல் மரபணு பகுப்பாய்வு, பரிணாம வளர்ச்சி மற்றும் மருத்துவ மரபியல், மகரந்த பகுப்பாய்வு, எலும்புகளுக்கான AMS காலக்கணக்கீடு ஆகிய பணிகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கீழடி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் விரைவில் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு - BBC News தமிழ்
  18. கொடுமணல்: 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுப்பு – முக்கிய ஆவணம் என தகவல் மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TN Archeology Department கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் பகுதியில், மே 27 ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பட மூலாதாரம், TN Archeology Department இதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்பு பொருட்கள் மற்றும் கொள்ளுப்பட்டறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தை கணிக்க உதவும் மனித எலும்புகளை கொண்ட முதுமக்கள் தாழிகள் மிகமுக்கிய தொல்லியல் ஆவணமாக கருதப்படுகின்றன. கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து தமிழக தொல்லியல்துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் பிபிசி யிடம் பேசினார். "கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் மற்றும் பிற தகவல்கள் உரிய ஆராய்ச்சிக்கு பின்னர் தான் தெரிய வரும். ஆனால், தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆராயும்போது, இந்த பகுதியில் மக்கள் நாகரிகம் இருந்ததும், தொழிற்கூடங்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்றதும் உறுதியாகியுள்ளது." பட மூலாதாரம், TN Archeology Department "பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான இரும்பு, எஃகு ஆயுதங்கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார். மேலும், சமீபத்திய அகழாய்வில் கிடைத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த மூன்று முதுமக்கள் தாழிகளில், ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் டி.என்.ஏ ஆய்விற்காக மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரஞ்சித். பட மூலாதாரம், TN Archeology Department "முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு அவை பாதுகாப்பாக கையாளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கொடுமணலில் மக்கள் வாழ்ந்த காலம் கணக்கிடப்படும்," "பழுப்புசாயம் பூசப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓட்டின் மேல்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. 'சம்பன்' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சிறிய குவளை அகழாய்வுக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது," "இதேபோன்று சுமார் 100 தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 'ஏகன்' என்றப் பெயர் சொல் பொறித்த மட்கலங்களின் ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துகளில் மிகுதியானவை பெயர்ச்சொல்லாக கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது," என தொல்லியல் துறை அதிகாரி ரஞ்சித் தெரிவித்தார். முதுமக்கள் தாழி எனும் ஈமச்சின்னங்கள் பட மூலாதாரம், TN Archeology Department கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளின் காலம் கி.மு 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கணித்துள்ளார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன். "முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களுக்காக வைக்கப்படும் ஈமச்சின்னங்கள். தற்போதுவரை, வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கொடுமணலில் கி.மு. 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இப்போது, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முதுமக்கள் தாழிகளும் இந்த காலத்தை சேர்ந்தவையாகத்தான் இருக்கும். எனவே, அதே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் எலும்புகளாத்தான் இவை இருக்கக்கூடும்" என்கிறார் ராஜன். கொடுமணலில் செப்டம்பர் மாத இறுதிவரை அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதில், மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனhttps://www.bbc.com/tamil/arts-and-culture-54189244
  19. தமிழர் வரலாறு: கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படத்தின் காப்புரிமை https://tnarch.gov.in/keeladi Image caption கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய இடங்களில் இப்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. (கோப்புப்படம்) கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன. நேற்று, வியாழக்கிழமை கொந்தகையில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இன்று, வெள்ளிக்கிழமை காலையில் நடந்த அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது. கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம் என்பதால் முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இது குறித்து கொந்தகை அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். படத்தின் காப்புரிமை Tamil Nadu State Department of Archaeology Image caption இந்த எலும்புக்கூடு ஆண் குழந்தையுடையதா, பெண் குழந்தையுடையதா என்று தெரியவில்லை. "இன்று கொந்தகை அகழாய்வின்போது குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது. பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன. இன்று கொந்தகையில் கிடைத்துள்ள குழந்தையின் உடல் முதல் வழிமுறையில் புதைக்கப்பட்டது. ஏனனில், இன்று கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு இருந்த பகுதியில் மணல் மிகவும் தளர்வாக இருந்தது, " என அவர் தெரிவித்தார். கொந்தகையில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் உயரம் 75 சென்டி மீட்டராக உள்ளது. ஆனால், அது ஆணா, பெண்ணா என்பது குறித்த தெரியவில்லை. பொதுவாக இடுப்பு எழும்பு 'V' வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு 'U' வடிவத்தில் இருந்தால் பெண். ஆனால் இந்த எலும்புக் கூட்டில் இடுப்பு எலும்புப் பகுதி சேதமாகியுள்ளதால் வடிவம் சரியாகத் தெரியவில்லை. அகழாய்வில் கிடைத்துள்ள எலும்புக்கூடு உயரம் 75 செ.மீ என்பதால் அது குழந்தையின் எலும்புக்கூடாகத்தான் இருக்கும். ஆனால், குழந்தை இறந்தபோது என்ன வயது என்பது தெரியவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டை கருப்பு கவரால் குளிக்குள் மூடி வைக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறு நாள் குழியில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டு அதில் இருந்து தேவைப்படும் எலும்புகளை மரபணு சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையிடம் ஒப்படைக்கப்டும். உயிரியல் துறையின் மரபணு சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும். கொந்தகையில் அதிக அளவு மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்து வருகின்றன. எதிர் வரும் காலங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்ததுக்கான கூடுதல் அடையாளங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொல்லியல் துறைக்கு மிக பெரிய மைல்கல், என்றார் அந்தத் தொல்லியல் ஆய்வாளர்.https://www.bbc.com/tamil/india-53111714
  20. நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது. பகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல். அதே சமயத்தில் – இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்தது. இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும் ஆட்களும். இதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால் – யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதானது இராணுவ அரசியல்ரீதிகளில் மிகமிகப் பிரதானமான ஒன்றாக இந்திய – சிறீலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி இது. அந்தவகையில் – மணலாற்றுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமம் பகுதி விளங்கியது. இத்தகைய ஒரு புற நிலைமைக்குள் – உயிர்வாழ்வே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள் – புலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான். ராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட – அவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான். இப்போது…… அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்…… அந்த இருண்ட இரண்டரை வருடங்கள். அது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். வர்ணித்துச் சொல்ல முடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது. பாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஓரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்தச் சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரி முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சகட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப் போகும். நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மனங்கள் ‘பிள்ளைகளைக்’ காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக் கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்ற போது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்க மாட்டார்கள்……. ஆள் விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும் போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும், ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவது வேலி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிருப்பம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும். ‘முற்றுகையிடுகிறான் பகைவன்’ என நினைத்து அடித்து உடைத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் ‘தப்பி வெளியேறி விட்டோம்’ என மகிழும் வேளை இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும். ‘பிரச்சினை இல்லாதவை’ எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள், அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிஸ்டம் நிகழும். சந்தர்ப்பவசமாகச் சிக்கிக் கொண்டு விடுகிற அந்த விபரிக்க முடியாத சூழ்நிலைகளில் ‘வாழ்க்கை வெறுக்கும்’. “எல் ரீ ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும் போது, ‘கதை முடிந்தது’ என்று குப்பியைத் தொடும் வேளையிலும், இறுதி நேர முயற்சியாக உதறிப் பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும். இப்படியாக ஏராளமான மயிரிழைகள். சன்னம் துளைத்தவர்களையும், ‘சயனைட்’ அடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான். ஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்து போனதில்லை. நெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இறுகிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி. கற்பாறையைப் பிளந்து முளையிடும் துளிராகி – இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான். எதிரி வளைத்து நின்ற மண்ணில், கைவிடாத துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன். மரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து ‘என்ன நடந்ததோ……?’ என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து ஆச்சரியப்படுத்திய வீரன். கட்டைக் காற்சட்டையும் சேட்டுமாக அந்தச் ‘சின்னப் பொடியன்’ தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள். மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிலெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கப்பட்ட குழந்தை. எப்படி அவனால் நின்றுபிடிக்க முடிந்தது……? அது அதிசயம் தான்! ஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிர்ஸ்டம் மட்டுமல்ல. விவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும் துணிச்சலும். இவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன. அடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம். அப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது ‘ஒழுங்கமைப்பு’ களால் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘மக்கள் நேசம்’ அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்க வைத்தது. அந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது. அந்த நேசத்தின் தொடக்கம் – அவன் போராளியான ஆரம்பம். அது 1984 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன்இ அப்போது முதல் அந்த மக்களுடனேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான். அவன் மக்களை அணுகிய விதமே வித்தியசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிறுத்தி வைத்திருந்தார்கள். ‘மற்ற இயக்கங்களின் ஊர்கள்’ என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். ‘மற்ற இயக்கங்களின் ஆட்கள்’ எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப் பேரையும் எம்மவர்களாக்கினான். 31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள். தனது 16 ஆவது வயதிலேயே ‘புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்’ திரியத் துவங்கிவிட்டான். பாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்துவிட்டு இரவில் காணாமல் போனவன்…… ஸ்ரான்லி கொலிச்சில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாப் போனவன்…… போய்ப்போய் வந்தவன்…… ஒருநாள் ஒரேயடியாகப் போய்விட்டான். சூட் ஒரு அற்புதமான போராளி. தனது அழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன். கண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று, அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி. மனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிற போது, அவனொரு பேராசான். முழுமையாக என்று சொல்லாவிட்டாலும் – இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல் – தனது செயலால் வளர்ந்து – மெல்ல மெல்ல உயர்ந்தவன். சூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல. அப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது? அது சண்டைகளால் அல்ல; சண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால். தான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் பேர் சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி. சண்டைக்கு வெளியில் நின்ற எல்லாப் போராளிகளையும் போல அவனும் போர்க் களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது. ஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோல் மட்டும் அளவிடப்பட முடியாதது. சண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது. சண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று. சண்டைகளில் நிற்காத போதும் உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து – போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களோடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதித்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன். இந்தியப்படை வெளியேற்றப்பட்டுவிட்டது. இப்போது அவன் புலனாய்வுத்துறையில். பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும் – போராட்டத்தையும் – தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான். துவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத் துறைப் பொறுப்பாளனாகப் பணி. அவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான். நேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம் இன்று திடீரென – ஒரேநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று அன்றொரு நாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை. எவரிலுமே சந்தேகம் எழக்கூடிய சூழல். மிகக் கவனமாக இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்ப்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது. இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான். நாட்கள் உருண்டன. புலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக, அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக, இயக்கத்தின் ‘கரும்புலிகள்’ அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான். இயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான். முக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல். இலக்குப் ‘பெரியது’ எனவே ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது. திட்டம் தீட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார். தியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக – மதிநுட்பமும், விவேகமும், செயற்றிறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவன் சூட். ஆனால் தலைவரோ ஆளை மாற்றச் சொன்னார். இந்தப் பணியை விடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது; உண்மைதான் – ஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத – துல்லியமான – வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார். இருந்தபோதும் – தலைவரது கருத்திற்கிணங்க கடைசியில் முடிவு மாற்றப்பட்டது. அதன்பின்னர் – எங்களது இன்னுமொரு கரும்புலிவீரன் அந்த ‘இலக்கை’ மிக வெற்றிகரமாகத் தாக்கி அழித்து வரலாற்றைப் படைத்தான். பூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான். ஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல. நன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. குறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான். ஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே, பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அவன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல. அவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை. பூநகரிப் பெரும் போர்க்களம். பல்வேறு படையணிகள், பல்வேறு சண்டைமுனைகள், பல்வேறு வழிமுறைகள். பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது – அதன் அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி – புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படையெடுப்பு. ஒரு முனையில் சூட்டின் படையணி. எதிரியின் அரண்தொகுதி ஒன்று, சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப். கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு. இரண்டு அணிகளும் தமது இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம். ஆனால் விசயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நாட்களிலேயே குணா வீழ்ந்து போக – அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது. தமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறிய போது, குணாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை; எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான். துணை சேரவேண்டிய அணிக்குத் துணை கொடுக்க வேண்டிய நிலை. மூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது. இறுக்கமான சண்டை. ஆர்.பி.ஜி. குண்டின் சிதறல்பட்டு அவனது எம். 16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனிடம் ரி. 56 ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான். கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த எதிரியின் பலமான அரணொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்…… தனி ஆளாகப் பாய்ந்தான். எதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான்…… மிக அருகில்…… போய்விட்டான்…… போனவன் திரும்பி வரவில்லை. அன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்…… வெற்றியைத் தந்தவிட்டு வராமலே போய்விட்டார்கள்! தமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றுத் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு. இப்போது…… நம்பிக்கையோடு காத்திருக்கிறது…… அடுத்த வெற்றிக்காக! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ்
  21. கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு நேரில்நின்று சரிபார்த்து அவற்றைஒழுங்கமைப்பார் குட்டிசிறியின் மோட்டார்செல்லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதிலிருந்து நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை எதுவாயிருந்தாலும் தானே நின்று சரிபார்த்து ஆரம்பித்து வைத்தால்த்தான் அவருக்கு திருப்தி.கிட்டண்ணையின் இராணுவ நிர்வாகத்திறன் உலகறிந்த விடயமாகும் தானே சண்டைக்களங்களில் முன்நின்று வழிநடத்துவது அவரது தனிப்பண்பு.1987 க்கு முன்னைய காலங்களில் யாழ்க் குடாநாட்டிற்குள் இராணுவ நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு அவர் பயன்படுத்தியது தன்வசமிருந்த குறைந்த ஆயுதங்களையும் போராளிகளையும் மட்டுமல்ல எதிரியை முட்டாளாக்கும் தந்திரோபாயத்தையும் தனது மனவலிமையும் சேர்த்தே பயன்படுத்தினார்.நெருக்கடியான நேரங்களில் அவர்காட்டும் மனவலிமை நம்ப முடியாததாய் இருக்கும். அடையாளம் தெரியாத எதிரி அந்த வீரனுக்கு குறிவைத்த ஒரு மங்கலான மாலைப்பொழுது.வழமையாக எரிந்து கொண்டிருக்கும் மின்குமிழ் எரியவில்லை.அவரது கார் நிறுத்தப்பட்டு கதவைத் திறந்து இறங்க முற்படும் வேளையிலேயே அந்தநிழலான உருவத்தின் அசைவு உள் உணர்வுகளை எச்சரிக்கிறது.நிதானிப்பதற்கிடையில் வந்து விழுந்தது கிரனேட் தான் என்று அவசரமாக வெளியேற முற்பட்ட வேளையிலேயே அது வெடித்துவிட்டது.ஆசையாய் வைத்திருந்த சின்னக் காரின் ஸ்ரெயறிங் கிற்குள் சிக்குப்பட்ட காலை இழுத்து எடுப்பதற்கிடையில் வெடித்துவிட்டது.இதுவரை நிகழ்ந்தவை சாதாரணமானவைகள்.எந்த ஒருவருக்கும் ஏற்படகூடியவைதான் ஆனால் அதன்பின்னர் அவர்நடந்து கொண்டவிதம் கிட்டண்ணைக்கேஉரிய தனித்துவம்வாய்தது . முழங்களுடன் துண்டாகிப்போய் துடித்துக்கொண்டிருந்தது அவரது கால் கிரனேட் வந்த திசையைநேக்கி அவரது ரிவோல்வர் மூன்று சூடுகளைச்சுட்டு ஓய்ந்தது.அவரது நினைவு மங்குகிறது.முழுமையாய் இருந்த ஜீன்ஸ் பக்கத்தைக் கிழித்து துண்டாகிப்போன காலுக்குத்தானே கட்டுப்போட்டுக்கொண்டிருக்கையில் நினைவு மேலும் மங்குகிறது. உள் உணர்வு அவரை எச்சரித்தது. கிரனேட் எறிந்தவன் அருகில் வருவான் அவனைச் சுடவேண்டும் என்ற உணர்வு அவரை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருக்கிறது கிரனேட் எறிந்தவன் வருவான் வருவான் எனத்திரும்பத்திரும்ப நினைத்துத்தன்னை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருந்தார்.மூன்று சூடுகளைச் சுட்டு விட்டேன்.ரிவோல்வரில் இன்னும் மூன்று ரவைகள்தான் மிச்சமாய் உள்ளது.என்பது என்பது நினைவில் உறைக்கும்போது அவர் மயங்கிக்கொண்டிருந்தார். வைத்தியசாலை இவ்வளவுபக்கத்தில் இருந்தபடியால்தான் அவர் உயிர் தப்பினார் என்பதும் சந்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கணத்தில் அவரது இதயத்துடிப்பு முற்றாகவே நின்றுவிட்டிருந்தது.என்பதும் அவர் உயிர் தப்பியது மருத்துவ உலகின் புதினம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள். அவர் காயப்பட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்த இடத்தில் தனது ரிவோல்வரை இறுகப்பற்றியபடி கிடந்தார் என்பதும் தனது ரிவோல்வரில் சுட்டுவிட்ட ரவைக்களுக்குப்பதிலாக புதிய ரவைகளை மாற்றிப் போட்டிருந்தார் என்பதும் ஆனால் நினைவு தப்பிய நிலையில் அவர் வெற்றுக் கோதுகளுக்குப் பதிலாக மீதியாய்இருந்த நல்லரவைகளை வெளியே எடுத்துவிட்டு அந்த இடத்யிற்கே புதிய ரவைகளை போட்டிருந்தார் என்பதும் அனேகம் பேருக்கு தெரியாத விடயங்கள் அன்று மட்டுமல்ல தனது போராட்ட வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது மனஉறுதியை வெளிப்படுத்தினார். அதுவரை காலமும் யுத்த முனைகளிலும் தாயக பூமியின் எல்லாப் பரப்பிலும் கம்பீரமாய் உலாவிவந்த வேங்கை கால்உடைந்து கட்டிலில் விழ்ந்தபோதும் தன்னைச் சோர்வு சூழவிடவில்லை.எந்தச்சந்தர்ப்பத்திலும் போராட்டத்திற்கான,போராளிகளுக்கான எந்தவொரு வேலையையும் பொறுப்பேற்றுச் செய்ய கிட்டண்ணை தயங்கியதில்லை தனக்கு ஒப்படைக்கப்படும் வேலை தனது தனிப்பட்ட நிலையினை எப்படித் தீர்மானிக்கும் என்பது பற்றி ஆராயாமல் இலட்சியத்திற்காக உழைத்தவர் .தலைவர் அவர்களின் தனிப்பட்ட மெய்க்காவலராக இருந்த போதிலும்சரி தலைவர் அவர்களுக்கு அடுத்தடுத்தபடியான தலைவனாக வளர்ந்து இருந்தபோதிலும்சரி அவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை. 1983 இன் ஆரம் நாட்கள் எம்மில் பன்னிருவருக்கான பயிற்சி. எல்லாமாக இருபத்தைந்துபேர்வரையில் உள்ளடங்கிய காட்டு வாழ்கை பஸ் ஸில் போய் கிளிநொச்சி அங்காலை எங்கையே இறங்கி இருளும்வரை ரோட்டில் நின்று ரைக்ரரில் ஏறி உள்ள காடெல்லாம் சுத்திச் சுழன்று நடுக்காட்டில் ஒரு சிறியகொட்டிலுக்குப்போய்ச் சேர்ந்தோம் வடக்கு எது கிழக்கு எது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு நின்று அதிகாலை முடிந்து விடியும்போது பார்த்தால் சூரியன் மற்றப்பக்கத்தால் உதிக்கிறது.அனேகமாக உடையார்கட்டுப் பக்கமாக இருக்கவேண்டும். எமது பொறுப்பாளர்களில் அநேகரை தெரியும் சிலரை தெரியாது கிட்டண்ணையை நல்லாகவே தெரியும்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பவர்கள் என்றுசொல்லி அவர்தான் எம்மில் இருவருக்கு ஒரு வீட்டில் அறை எடுத்துத்தந்துருந்தார்.தினமும் பின்னேரம் வந்து கோஸ் ரணிங் செய்யச் சொல்லிவிட்டு வாட்டத் தொடங்கினால் மனுசன் என்னத்தைச் சொல்ல வாழ்கை வெறுக்கும்... வேகம், வேகம்,இன்னும் இன்னும் என்று சொல்லி 5 மணிக்கு தொடங்கியது ஏழெட்டு மணிக்கு முடியும்போது அந்தப்பெரிய விராந்தை நிலம் வியர்வையால் நிரம்பி ஓடும் அதுவரை எதுவும் கதை இல்லை இங்கிலீசும் தமிழுமாய் செய் ,செய் ' என்பதுதான் இயலாது என்றால் அப்ப உனக்கு ரெயினிங் இல்லை போ என்னத்தைத்கதைப்பது அதற்குப் பிறகுதான் என்முடன் அன்பாகக் கதைப்பார். ரஷ்ய மொழிபெயர்ப்பான தாய் நாவலை முழுமையாகப்படிக்கும்படி தந்திருந்தார். அது பற்றிக் கேள்விகள் கேட்ப்பார்.பாவலின் நண்பர்களின் பெயர் கேட்ப்பார்.காதலி பெயர் கேட்ப்பார்.ஆரம்பத்தில் வாசிக்கும்போது பழக்கமின்மையால் கரடு முரடானதாகத் தெரியும் மொஸ்கோ மொழி பெயர்ப்பு நூல்களை வாசிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர்தான்.இப்படி எமக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தவர் எமது காட்டுப் பயிற்சி முகாமில் இருக்கிறாரா என்று தேடினால் ஆள் வருகின்றார் கையில் அகப்பையுடன் எல்லோரும் நல்லாய்ச் செய்யச் செய்ய வேண்டும் என்றும் தான்தான் இங்கு சமையல் என்று குட்டியாய் லெக்சர் அடித்துக்கொண்டு நின்றுவிட்டுத் தலைவரை கண்டதும் ஓடி ஒழிந்தார்.பெரிய பொறுப்பாளனாய் ஒருவரை எமக்கானசமையல்காரராய்ச் சந்திப்பது நம்பமுடியாத அனுபவமாயும் புதிய பாடமாயும் அமைந்தது.எமது அந்த முகாமின் சமையல் வேலை என்பது அந்தக் காலத்தில் சுலபமானதல்ல குறுகிய காலம் பயிற்சி என்பதால் மிகவும் நெருக்கமான நேர அட்டவணை உடற்பயிற்சி ஆசிரியர் புலேந்தி அம்மான் போட்டு வாட்டிப்போட்டு விட்டால் அடுத்த சந்தோசம் மாஸ்டரின் வகுப்பிற்கு இடையில் உள்ள குறுகிய உணவு வேளையில் சமையல் கொட்டிலுக்குப் போவது நடந்து அல்ல போகும் வேகத்திற்கு அங்கே தடிகளால் கட்டிய சிறாம்பில் உணவு தட்டுகளில் போட்டு மூடி வைத்திருக்கும் கிட்டண்ணையும் ரஞ்சனும் இணைந்து சமையல் மூன்று வேளையும் நேரம் தவறாமல் உணவு கொடுக்க ஒருநாள்கூட நேரம் தவறியதாகவோ வேலையில் சினந்ததாகவோ நினைவில் இல்லை.ஆனால் தங்களது வேலைச்சுமையைக் குறைப்பதற்கான குறும்பு இருக்கும். உணவு தட்டுகளில் இலக்கம் இடப்பட்டுஇருக்கும்.தட்டுக்களை இலக்கம் மாறி எடுப்பவர்கள் அன்றைய சமையல்பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்க வேண்டும்.ஆரம்பத்தில் தட்டு இலக்க ஒழுங்கில் இருந்தன. பிரச்சனை இல்லை.இடையில் ஒருநாள் எல்லாம் மாறி இருந்தது. யார்பார்த்தது அன்று நாங்கள் பாத்திரம் கழுவினோம்.பார்த்து சிரித்தார்கள் ஆனால் பின்னர் நாங்கள் உசாராகிவிட்டோம்.றெஜிக்கு இலக்கம் ஆறு விக்ரருக்கு இலக்கம் ஒன்பது.அவர்கள் அடிக்கடி கழுவிக் கொடுத்தார்கள் அவர்கள் சரியாக எடுத்தாலும் இவர்கள் விட்டாதானே.இப்படி பம்பலும் குறும்புமாய்த் தான்.ஆனால் கடமை தவறியதில்லை.சமையலில் அலட்சியம் இருந்தது இல்லை. நீண்டகாலஓட்டத்தின்பின் ஒரு நாள் தலைவர் கூறுகிறார்-என்ன கடமையாக இருந்தாலும் அதைப்பொறுப்போற்றுச் செய்யப்பின் நிற்கக் கூடாது. கடமையில் உயர்ந்து தாழ்ந்தது என்றில்லை ஆரம்பகாலத்தில் ஒருமுறை எமது புதிய பயிற்சி முகாம் ஒன்றில் எல்லோரும் வேலைகள் பங்கிட்டு நிர்வாகத்தைச் சீர் செய்து கொண்டு இருந்தவேளை-கிட்டுதானே முன்வந்து அனைவருக்குமான சமையல் வேலையைப் பொறுப்பெடுத்து செய்தார். புதியபோராளிகளுக்கு தலைவர் எடுத்துச் சொல்லும் விடயத்தை அன்று நாங்கள் நேரே கண்டோம்.அது எமக்கு போராட்டம் பற்றியும் ஒரு பாடத்தை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்லியது .கிட்டண்ணை வேலைகள் பொறுப்பேற்பதிலும் அந்தஸ்தினை தரத்தினைப் பார்ப்பது இல்லை.ஆனால் அவர் வேலை ஒழுங்கு செய்யும் விதமும் செய்து முடிக்கும் பாங்கும் அந்த வேலைக்கு ஒரு அந்தஸ்தினை உயர்தரத்தினை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. கிட்டண்ணை இறுதியாக நாட்டைவிட்டுப் புறப்படும்போது காலத்தில் அவர் மிகவும் நொந்து போயிருந்தார்.இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட தன்னையும் சக போராளிகளையும் விடுவிக்கும்படி சிறையில் உண்ணாவிரதம் இருந்ததும் அதனைத் தொடர்ந்து அவர் யாழ்நகரில் விடுவிக்கப்பட்டதும் அதன் பின்னர் அவர் மணலாற்றுக் காடு சென்று தலைவருடன் இணைந்து கொண்டதும் தெரிந்தவைதான்.தன்னுடன்இறுதிவரை துணைநின்ற போராளிகள் சிறையில் வாடுவதையும் இந்தியர்கள் தன்னைமட்டும் விடுவித்துவிட்டு தன்தோழர்களை சிறையில் வாட்டுவதையும் சொல்லிச் சொல்லி வேதும்புவார் என்ரை கோஸ்டி எல்லாத்தையும் என்னட்டை இருந்து பிரிச்சுப் போட்டாங்கள் மச்சான் என்று சொல்லும்போது அந்த வீரனின் நெஞ்சின்ஈரம் கண்களில் வந்து நிற்கும்.கிட்டண்ணை சர்வதேச தொடர்பாளராக நாட்டை விட்டுப் புறப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவரது வழமையான நடைமுறைக்கு சோதனையாக வந்தது இம்முடிவு.எங்கோ ஒரு ஜரோப்பிய நாட்டில் எம் தாயக மண்ணை விட்டு வெகு தொலைவில் தான் உயிராய் நேசித்த போராளிகளை விட்டுப் பிரிந்து ..தன் மக்களை விட்டுப்பிரிந்து தாய் தந்தையாய் தன்னை வளர்த்த தலைவரை விட்டுப்பிரிந்து.... நினைத்து நினைத்துக் கலங்கினார். மணலாற்றுக்காடு.நான் அப்போது யாழ் மாவட்ட நிர்வாகத்தை பானுவிடம் ஒப்படைப்பதற்காக யாழ்ப்பாணம் புறப்பட இருந்தேன்.எம்மிடையே நீண்ட பிரிவு வரப்போகிறது என்பது தெரிகிறது.சிறிய வட்டக் கொட்டிலில் வைத்து கதைக்கத் தொடங்கினார்.இயக்கத்தில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தலைவரின் எண்ணங்களுக்கு நாம் எப்படி செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி எமது போராட்டத்திற்காக என்ன வேலை ஒப்படைக்கப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் .எமது கடமையை மேலும் மேலும் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய சகல முயற்சிகளிலும் இறங்க வேண்டும் எனக்கு என்ன வேலை எண்டாலும் செயவன் எங்களின்ரை பெடியளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை எண்டாலும் செய்வன்.அதை எப்படி வெள்ளையாய் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன்.எனக்கு இது பிரச்சனை இல்லை. எனது பொறுப்பு மாற்றத்திற்காக சொன்னாரா?அல்லது தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தனது மனப் போராட்டத்திற்கு தனக்குத் தானே சொன்னாரோ தெரியாது. அவர் சொல்லிகொண்டே இருக்கின்றார்.தூரத்தே கேட்கும் சில் வண்டுச் சத்தத்தைவிட காடு நிசப்தமாய் இருக்கிறது நீண்ட கனத்த மௌனத்தின் பின் எங்கடை சனத்தையும் இந்த மண்ணையும் விட்டுட்டுப் போகப் போறன் மச்சான் இனி எந்தக் காலமோ சொல்லி முடிக்காமல் குமுறிக் குமுறிக் அழத் தொடங்கினார்.எமது தாயகத்தின் மீது எமது மக்களின் மீது எமது விடுதலைப் போராட்டத்தின் மீது எமது தலைவர் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்று அளவிடமுடியாதது ச.பொட்டு மாசி- 1993 இதழ் 11 வெளிச்சம் இதழில் வெளியானது.
  22. கீழடி நாகரிகம்: ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? #GroundReport பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள். 'மத்திய,மாநில அரசுகளின் கவனமின்மை' தமிழக அரசால் ரூ.22லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி தகவல் மையம் பயன்பாடு இல்லாமல், மதுஅருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நேரில் பார்த்தபோது அறிந்துகொள்ள முடிந்தது. பிபிசிதமிழ் செய்திக்காக ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள அந்த மையத்திற்கு நாம் சென்றபோது அந்த மையத்தின் வெளிப்புற கதவுகள் திறந்தே இருந்தன. பாதுகாவலர் யாரும் இன்றி, பயன்பாட்டில் இல்லாத முதுமக்கள் தாழி மையத்தின் ஜன்னல் திறந்து இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது, சில உடைந்த பொருட்கள் அந்த அறையில் சிதறிக்கிடந்தன. முதுமக்கள் தாழி மையத்தின் தரை தளத்தில் மது பாட்டில்கள் கிடந்தன . மாலை நேரத்தில் சிலர் அந்த மையத்தில் வந்து மது அருந்துவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். Image caption ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம் கீழடி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாக சொல்லும் தமிழக அரசு, ஆதிச்சநல்லூரை மறந்துவிட்டது என்கிறார் சமூக ஆர்வலர் ஜபார். ''முதுமக்கள் தாழி மையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஒரு ஊரில் கிடைத்த பொருட்களை அந்த ஊரில் காட்சிப்படுத்தவேண்டும் என்பது விதி. பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் காட்சிப்படுத்தப்பட்டால், இங்குள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கும் மையமாக இந்த இடத்தை மாற்றமுடியும்,'' என்றார். மாநில தொல்லியல் துறை அமைச்சரின் பதில் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் கேட்டபோது உடனடியாக அந்த மையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ''முதுமக்கள் தாழி மையம் இருக்கும் நிலையை உணர்த்தும் படங்களை அனுப்புங்கள். உடனடியாக இந்த விவகாரத்தை கவனிப்பேன். தமிழகம் முழுவதும் அகழ்வாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வேலை நடந்துவருகிறது. நிச்சயம் இதை சரிசெய்யலாம்,'' என்று அமைச்சர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய அகழ்வாய்வு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு நடத்திவரும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 1902ல் அலெக்சாண்டர் ரியா என்பவரால் அகழ்வுப் பணிகள் தொடங்கியது என்றார். ''ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கிராமத்தில் கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கையைக்கூட வெளியிடவில்லை,'' என்றார் காமராசு. அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ''2004 மற்றும் 2005ல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று எந்தத்தகவலும் வெளியிடப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்துள்ளேன்,'' என்றார். தொடர்ந்துள்ளேன்,'' என்றார். அறிக்கை சமர்ப்பிக்க ஏன் தாமதம்? அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட அதிகாரி சத்யமூர்த்தியை அணுகினோம். அவர் தான் ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகின்றன என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் பற்றிய ஆவணத்தை தொல்லியல் துறையில் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார். அகழ்வாய்வு ஆவணங்களை தயாரிப்பதில் இருந்த தாமதம் பற்றிக்கேட்டபோது, ''ஆதிச்சநல்லூரில் அகழ்வு பணிகளின்போது நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அதன் காலத்தை நிர்ணயம் செய்தவற்கு இந்தியாவில் நிபுணர்கள் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு தகவல்களை வெளியிட தாமதம் நேர்ந்தது. நான் அனுப்பியுள்ள ஆவணத்தை சரிபார்க்க வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களிடம் அனுப்பியுள்ளார்கள்,'' என்று சத்யமூர்த்தி கூறினார். அகழ்வாய்வில் கிடைத்த துளையிட்ட மண்டைஓடு சத்யமூர்த்தி அகழ்வு செய்து கண்ட பொருட்கள் பற்றி கேட்டபோது,''ஆதிச்சநல்லூரில் இருந்தவர்கள் பலவகையான இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் என்றும் அவர்கள் அருகில் இருந்த துறைமுக நகரத்தில் வணிகர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதுபோன்ற தகவல்களை ஆராய நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்,'' என்றார் சத்யமூர்த்தி. அவர் மேலும் ஐதராபாத்தில் உள்ள நரம்பியல் மருத்துவர் ராஜா ரெட்டி ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடு ஒன்றில் துளை இடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு சான்று இருப்பதாக கூறியுள்ளார். இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதத்திற்கான காரணங்களைக் கேட்டபோது, அதற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், ஆய்வு அறிக்கை ஒய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தியிடம் உள்ளதாக மூத்த அதிகாரி ஏஎம்வி சுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் முதல்கட்ட தகவல்கள் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 2003-04, 2004-05 ஆவணங்களில் இருப்பதாக கூறினார். ஆய்வு குறித்த தகவல்களை சத்தியமூர்த்தியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் ஓய்வுபெற்ற அதிகாரி சத்யமூர்த்தி ஆய்வறிக்கை தன்னிடம் இல்லை என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கூறினார். கடந்தாண்டு பிரசுரமான கட்டுரையை மீண்டும் பகிர்ந்துள்ளோம் https://www.bbc.com/tamil/india-41934390
  23. கீழடி - சிந்து சமவெளி - சங்க இலக்கியம்: இணைக்கும் புள்ளி எது? விவரிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தைய்யா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசியினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கே. கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ப. இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004ல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்பாக நான் சிந்துவெளி தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன். Image caption ஆர். பாலகிருஷ்ணன் கொற்கை - வஞ்சி - தொண்டி போன்ற தமிழகத்தில் உள்ள இடப்பெயர்கள், சிந்துவெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத இடப்பெயர்களாக இப்போதும் இருப்பதைக் கண்டறிந்து, என்னுடைய ஆய்வை அப்போது முன்வைத்தேன். அஸ்கோ பர்போலா, சங்காலியா, ஐராவதம் மகாதேவன், சவுத்வர்த் ஆகிய அறிஞர்கள் ஏற்கனவே இடப்பெயர்களை வைத்து சிந்துவெளி ஆய்வுகளை நடத்த முடியும் எனக் கூறியவர்கள்தான். அதைத்தான் நானும் பின்பற்றினேன். அப்போதுதான் கொற்கை - வஞ்சி - தொண்டி இடப்பெயர்கள் இருந்தன. ஆனால், அப்போதும்கூட வெறும் இடப்பெயர் சார்ந்த ஒரு ஆய்வாகத்தான் இது இருந்ததே தவிர, அகழ்வாராய்ச்சி சார்ந்த ஆதாரம் ஏதும் இருந்திருக்கவில்லை. அம்மாதிரியான ஒரு ஆதாரத்தை கீழடி கொடுத்திருக்கிறது. கே. கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்? ப. சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. நாம் சங்ககாலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கிறோம். அதிலிருந்துதான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் துவங்குகிறது. இப்போது ஒரு கேள்வி நியாயமாகவே எழுகிறது. சிந்துச் சமவெளி நாகரிகம் நலிவடைந்தது கி.மு. 1,900ல். தமிழக வரலாற்றுக் காலம் கி.மு. 600ல் துவங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் கி.மு. 1,900க்கும் கி.மு. 600க்கும் இடையில் சுமார் 1,300 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது. அதேபோல, மொஹஞ்சதாரோ - ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கிறது. 1960களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம்தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சிந்துவெளி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரீகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருந்திருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், கட்டடங்களைஅவர்களால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. நினைவுகளையும் பெயர்களையும்தான், குறிப்பாக இடப்பெயர்களை எடுத்துப்போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும். இந்தியாவில் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருக்கிறது. முதல் கேள்வி, சிந்து வெளி மக்கள்பேசிய மொழி என்ன, அவர்கள் யார், அவர்கள் நாகரிகம் எப்படி அழிந்தது? இரண்டாவது கேள்வி, இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லையென்றாலும் தமிழர்களுக்கு முக்கியமான கேள்வி. தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. சிந்துவெளி எப்படி அழிந்தது, தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஆகிய இரண்டு கேள்விகளுமே வெவ்வேறான, தொடர்பில்லாத கேள்விகளைப் போல இருக்கின்றன. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதில் ஒரு புதிருக்கு தெளிவான விடை கிடைத்தால், இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்துவிடும். கே. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, சங்க காலம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்? ப. நாம் வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப் பிரிப்பது எழுத்து தோன்றியதைவைத்துதான். எழுத்தின் தோற்றம்தான் இரண்டையும் பிரிக்கிறது. தமிழகத்தில் வரலாற்றின் துவக்க காலம் என்பது தமிழ் பிராமி என்ற தமிழி எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருதுகோள் இருந்தது. சங்க இலக்கியத்தையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் கருதினார்கள். ஆனால், இம்மாதிரி ஒரு இலக்கியம் எழுதப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சிறப்பான மரபு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் பல நூல்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஒரு பெரிய இலக்கிய மரபு இருந்தால்தான் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலை எழுத முடியும். சங்க இலக்கியம்கூட திடீரெனத் தோன்ற முடியாது. சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது நிகழ்காலப் பதிவுகள் அல்ல. கடையேழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்ததாக அர்த்தமல்ல. சமகாலப் பதிவாகவும் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுகளாகவும் இருந்திருக்கலாம். ஆக, அந்த நிகழ்வுகளுக்கு, அது பற்றி இலக்கியத்திற்கு வயதை நிர்ணயிப்பது மிகக் கடினம். இப்போது கீழடியில் கிடைத்த பொருட்கள்,குறிப்பாக எழுத்துகள் கிடைத்த அதை படிவத்தில் கிடைத்த சில பொருட்கள் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் வயது கி.மு. 580 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே எழுத்தறிவு இருந்த காலம் அல்லது சங்க காலம் என்பது கங்கைச் சமவெளியில் வரலாறு துவங்கிய காலத்திற்கு சமமாக இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை இந்தியாவில் எந்த இலக்கியத்தில் அதிகமாக பார்த்தறிய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தால், அதாவது சிந்துவெளி தொடர்பான நினைவுகளைக் கொண்ட இலக்கியம் எங்கிருக்கிறது என்று பார்த்தால் சங்க இலக்கியத்தில்தான் இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் போல நகரங்களைக் கொண்டாடிய இலக்கியம் வேறு இல்லை. நகர வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு வகையான பல்லின மக்கள் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கை, கடல் வணிக மரபு, தாய்த் தெய்வ வழிபாடு, விளையாட்டுக்கான முக்கியத்துவம் ஆகியவை அந்த நாகரீகத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் குறீயீடாக நம் முன் நிற்கின்றன. அப்படி சிந்துவெளிக்கென்று சில விஷயங்களை நாம் அடையாளமாகக் குறிப்பிட்டால், அந்த நான்கைந்து விஷயங்கள் காத்திரமாகப் பேசப்பட்டது சங்க இலக்கியத்தில்தான். அதற்குப் பிறகு இதுபோன்ற குணாதிசயங்களுடன் பொருட்கள் கிடைப்பது கீழடியில்தான். அதனால்தான் சிந்துச் சமவெளி - சங்க இலக்கியம் - கீழடி ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பாக கொற்கை - வஞ்சி - தொண்டி குறித்துப் பேச ஆரம்பிக்கும்போது இப்படி கீழடி போல ஒரு இடம் கிடைக்குமென யாரும் நினைக்கவில்லை. தவிர, கீழடி கிடைத்திருக்கும் இடத்தைப் பார்ப்போம். இந்த இடம் மதுரைக்கு அருகில் இருக்கிறது. மதுரை ஒரு சாதாரணமான நகரமல்ல. சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி என ஒரு தனி இலக்கியம் இருக்கிறது. அதில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் மதுரையும் நான்மாடக் கூடலும் பேசப்படுகிறது. பரிபாடல் வைகையைப் பற்றிப் பேசுகிறது. தமிழுக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு சங்க இலக்கியத்தில் பேசப்படுகிறது. சங்கப் புலவர்களின் பெயர்கள் ஊர்களை வைத்தே அறியப்பட்டன. அப்படி அதிக புலவர்கள் இருந்தது மதுரையில்தான். "மாங்குடி மருதன் தலைவன் ஆக, - உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை" என புறநானூறில் ஒரு பாடல் வருகிறது. அப்படியானால், ஒரு புலவரை தலைவனாக வைத்து மற்ற புலவர்கள்கூடி, கவிதைகள் குறித்து பேசுவது, விவாதிப்பது என்பது சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது. மதுரையைச் சுற்றி நிறைய இடங்களில் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நகரம் இடைக்கால இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் வருகிறது. ஆகவே அந்த நகரத்திற்கு 2600 வருட தொடர்ச்சி இருக்கிறது. அப்படி ஒரு நகரத்திற்கு அருகில் அகழாய்வில் ஒரு நகர நாகரீகம் கிடைப்பது சாதாரணம் கிடையாது. ஆகவே, நம் தொன்மத்திலிருக்கும் சில மரபுகளை இந்த ஒற்றுமை இணைக்கிறது. அதுதான் இதில் முக்கியம். கே. கீழடியில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓடுகளில் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. 1001 பானை ஓடுகள் இப்படிக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன முக்கியத்துவம்? ப. எழுத்து வடிவத்தை எடுத்துக்கொண்டால், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பழைய எழுத்துவடிவம் சிந்துவெளி எழுத்துவடிவம்தான். சிந்துவெளி எழுத்துகளை இன்னும் நம்மால் படிக்க முடியவில்லை. பொதுவாக, படிக்க முடிந்த எழுத்துகளுக்கு அருகில், படித்தறிய முடியாத எழுத்துகள் கிடைத்தால், இதைவைத்து அதைப் படிக்க முடியும். சுமேரியாவில் அப்படித்தான் படிக்க முடிந்தது. ரொஸட்டா ஸ்டோன் என்ற இருமொழி கல்வெட்டின் உதவியுடன் அவை படிக்கப்பட்டன. ஆனால், சிந்துவெளியில் அப்படி ஒரு விஷயம் கிடைக்காததால், சிந்துவெளியைப் படிக்க முடியவில்லை. அதற்கடுத்து, அசோகன் பிராமியும் தமிழ் பிராமியும் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் படிக்க முடியும். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு இணைப்புச் சங்கிலி இருந்திருக்க வேண்டும். அவைதான் பானையில் செய்யப்பட்ட கீறல்கள் (Graffiti markers). இந்தக் கிறுக்கல்கள் இரண்டுவிதமாக இருக்கும். பானையைச் செய்தவர் எழுதியிருப்பார். அது பானை ஈரமாக இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கும். வாங்கியவர் எழுதியிருந்தால், பானை சுடப்பட்ட பிறகு எழுதப்பட்டிருக்கும். கீழடியில் கிடைத்திருப்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அப்படி எழுதக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் கற்றறிந்தவர்களாகவோ, புலவர்களாகவோ இருந்திருக்க வேண்டியதில்லை. சாதாரண மக்களாகவும் இருக்கலாம். இந்த பானைக் கீறல்களை சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் உள்ள கீறல்களைப் போன்ற கீறல்களும் சில பானை ஓடுகளில் கிடைத்திருக்கின்றன. ஆகவே அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க முடியும். மேலும், இம்மாதிரி கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் கிடைத்திருக்கிறது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில், தமிழ் பிராமி கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்திருக்கின்றன. ஆகவே, அவை தமிழ் பிராமிக்கு முந்தைய காலமாக இருக்கலாம். ஆகவே இந்தக் கீறல்கள் மிக முக்கியமானவை. கே. கீழடியில் சமய வழிபாடு சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லையென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனச் சொல்ல முடியுமா? ப. அப்படிச் சொல்ல முடியாது. கீழடியில் அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் 110 ஏக்கர். வைகை நதிக்கரையில் இதுபோல 293 இடங்கள் இப்படி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை கீழடியில் மூன்று - நான்கு ஏக்கர்கள்தான் தோண்டப்பட்டிருக்கின்றன. மீதியைத் தோண்டும்போது என்ன கிடைக்குமெனத் தெரியாது. இப்போதுவரை வழிபாட்டுக்கூடம் போன்றவற்றுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், இது சங்க காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் இதை எச்சரிக்கையுடன்தான் அணுக விரும்புவேன். சங்க கால மக்களை வழிபாடு அற்றவர்கள் எனச் சொல்ல முடியாது. சங்க இலக்கியமே, குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு ஒரு கடவுள் இருந்தார்கள். தவிர, நடந்து செல்லும் பாதையைப் பாதுகாக்கும் தெய்வங்கள், மரத்தில் இருக்கும் தெய்வங்கள், காட்டில் உள்ள தெய்வங்கள் இருந்தன. பெரும்பாலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது. இதற்கான ஆதாரம் பிறகு கிடைக்கலாம். ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வழிபாடு அந்த சமூகத்தின் மையப்பொருளாக இல்லை என்பதைத்தான். சங்க இலக்கியத்தை முழுதாகப் படித்துப் பார்த்தால், அந்தக் கால வாழ்க்கை என்பது, Celebration of lifeஆகத்தான் இருந்திருக்கிறது. அந்த இலக்கியம் வாழ்க்கையைக் கொண்டாடுகிறது. தினசரி வாழ்வைக் கொண்டாடுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த வாழ்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், எதிர்கால ஆகழாய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். கே. கீழடியில் விளையாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து அதிகம் பேசப்படுகிறது. அதில் என்ன முக்கியத்துவம்? ப. அதில் இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நிலையான வாழ்வை வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் உபரிப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். உள்நாட்டு வணிகம் - வெளிநாட்டு வணிகம் ஆகிய இரண்டுக்கும் கீழடியில் ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இங்கு வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த, வணிகம் சார்ந்த ஒரு பொருளாதாரம் இருந்திருக்க வேண்டும். அதில் உபரி இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அப்போதுதான் விளையாட்டிற்கு நேரம் கிடைக்கும். அது நாகரிகத்திற்கான முக்கியமான அடையாளம். சிந்துவெளியிலும் இதுபோல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, சங்க இலக்கியம் விளையாட்டுகள் குறித்து நிறையப் பேசுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல இந்தப் பொருட்கள் இருக்கின்றன. கே. கீழடி குறித்துப் பேசும்போது ஆதிச்சநல்லூர் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த இடம் தொல்லியல் ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம்? ப. அலெக்ஸாண்டர் ரீ முதன் முதலில் 1904ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் துவங்கியபோது, சிந்துச்சமவெளியே கண்டறியப்படவில்லை. 1920களில்தான் சிந்துவெளியில் ஆர்.டி. பேனர்ஜி, எம்.எஸ். வாட்ஸ் ஆகியோர் அகழாய்வில் ஈடுபட்ட பிறகு, சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி குறித்த ஒரு அறிக்கையை கொண்டுவருகிறார். அலெக்ஸாண்டர் ரீ அந்த காலகட்டத்தில் அதை ஒரு புதைமேடாகத்தான் பார்த்தார். அதாவது, இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒரு இடமாகப் பார்த்தார். ஆனால், அப்போதே அவர் 30 இடங்களில் இங்கு அகழாய்வு மேற்கொள்ள முடியுமென கண்டறிந்தார். ஆனால், அதற்குப் பிறகு 100 வருடம் அங்கு ஏதும் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியகரமானது. 2004ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு முடிவு தற்போதுவரை வெளியாகவில்லை. ஆனால், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள பல நதிக்கரைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரை ஆதிச்சநல்லூரிலும் ஆய்வுகள் நடக்குமெனச் சொல்லியிருக்கிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. https://www.bbc.com/tamil/india-49802510
  24. கீழடி நாகரிகம்: பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நான்காம் கட்ட கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அங்கே கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மாநில தொல்லியல் துறை கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த அகழாய்வில் பாரம்பரியமான முறைகளைத் தவிர, அகழாய்வுக்கான சரியான இடங்களைக் கண்டறிய பல புதிய தொழில்நுட்பங்களையும் மாநில தொல்லியல் துறை பயன்படுத்தியுள்ளது. கீழடி கிராமத்தைச் சுற்றி சுமார் 15 சதுர கி.மீ. பரப்புக்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிக்கின்றன. ஆகவே, எந்த இடத்தில் அகழாய்வை நடத்துவது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முதற்கட்டப் பணி. இதற்கு முன்பாக, தரைமேல் நடத்தப்படும் ஆய்வின் (survey) மூலமாகவே இந்த இடங்கள் தீர்மானிக்கப்படும். ஆனால், இந்த முறை அகழாய்வை துவங்குவதற்கு முன்பாக, செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு மேக்னடோமீட்டர் (magnetometer)மற்றும் தெர்மோ மேப்பிங் (thermomapping)முறைகளை வைத்து நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரடார் (ground penetrating radar - GPR) ) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. முதலில், கீழடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பாக மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பானை ஓடுகள், உலோகக் கருவிகள் ஆகியவை கிடைத்திருந்த நிலையில், நிலத்தடியில் உள்ள தனிமங்களை அடையாளம் கண்டுவிட்டு, பிறகு அங்கு அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி களிமண், பெரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் நிலத்தடியில் உள்ள சுவர்களை கண்டறியும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 450 ஏக்கர் பரப்பில் பத்து முக்கியமான இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதற்குப் பிறகு, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இடத்தை மேக்னெடோமீட்டர் மூலம் தரைவழியாக ஆய்வுசெய்தனர். Image caption ஜிபிஆர் ராடார் மூலம் நிலத்தடியை ஆய்வுசெய்யும் அதிகாரிகள் இந்த மேக்னடோ மீட்டர்களை வைத்து, கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 மீட்டர் நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தடியை ஆராயும் ground penetrating radar (GPR) மூலம், அகழாய்வுக்குச் சரியான இடம் கண்டறியப்பட்டது. இதிலிருந்து கிடைத்த முடிவுகளை வைத்துக்கொண்டு, தற்போது கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் கச்சிதமான இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுவருவதால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பான முடிவுகளைப் பெற முடியுமென தொல்லியல் துறை நம்புகிறது. கீழடியில் மட்டுமல்லாமல், தற்போது உலகம் முழுவதுமே அகழாய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக, உள்ளே புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்புகள், பானைகள், செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டும் இடங்கள், பாதைகள், நினைவுக் கற்கள் ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழடிக்கு அடுத்து என்ன? தமிழக அரசின் தொல்லியல் துறை வரும் 2019- 20 ஆண்டில் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வைத் தொடரவிருப்பதோடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழாய்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரைவிலேயே கடலடி ஆகழாய்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. மேலும், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இடங்கள் எவை என்பதை ஆராய்வதற்கான கள ஆய்வும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது. Image caption மேக்னடோமீட்டர் மூலம் ஆய்வுசெய்ததில் நிலத்தடியில் உள்ள சுவர் கண்டறியப்பட்டது இதுதவிர, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் தொல்லியல் தளங்களைக் கண்டறியும் ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. இங்கு இடைக் கற்காலப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் துவங்கப்படவிருக்கின்றன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அதற்கு அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் போன்ற பகுதிகளிலும் அகழ்வாய்வுப் பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது ஆதிச்சநல்லூரில் தொடரவிருக்கும் ஆய்வு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கான களமாக அடையாளம் காணப்பட்ட ஒரு இடம். இங்குள்ள புதைமேட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1876ஆம் ஆண்டிலும் 1904ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகு சமீபகாலத்தில், 2003 முதல் 2005ஆம் ஆண்டுவரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இருந்தபோதும் இது தொடர்பான ஆய்வறிக்கை இன்னும் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெங்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், மட்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. Image caption நிலத்தடியில் உள்ள களிமண், இரும்பு போன்ற கனமங்களைக் காட்டும் வரைபடம் கடந்த கால ஆய்வுகளில் தொல்லியல் கால மக்கள் புதைக்கப்பட்ட மேடுகளே ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில், தொல்லியல்துறை இனி மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில், மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை நோக்கி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கொடுமணலில் மீண்டும் தொல்லியல் ஆய்வு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். 1985லிருந்தே மத்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை அகழ்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. Image caption ஆய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக ட்ரோன்கள் மூலம் நிலத்தின் மேற்பரப்பு முழுமையாகப் படமெடுக்கப்பட்டது ஆழ்கடல் ஆய்வுகள் தொல்லியல் மேடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வது தவிர, ஆழ்கடல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவும் மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மாநில தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கிரேக்கம், ரோம், அரபு நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்த வணிகத் தொடர்புகளை ஆராயும் வகையில் சங்ககாலம் மற்றும் இடைக்காலங்களில் துறைமுகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலத் தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. கடலியல் தேசிய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. https://www.bbc.com/tamil/india-49790302
  25. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால தண்ணீர்த்தொட்டி! கீழடியில் கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தண்ணீர்த்தொட்டி ( ஈ.ஜெ.நந்தகுமார் ) கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தற்போது தண்ணீர் தொட்டி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். கீழடி நந்தகுமார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கீழடி அகழாய்வு நந்தகுமார் கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மண்பாண்டம் குடுவைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர் வழிப்பாதை போன்ற அமைப்பு என ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. சென்ற வாரம் மழை பெய்தாலும் அகழாய்வுப் பணியில் தொய்வு எதுவும் ஏற்படாமல் மிகத் துரிதமாக அகழாய்வுப் பணியானது நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கீழடி அகழாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தற்போது நடைபெறும் ஆய்வின் முடிவில் மட்டுமே எதையும் கூறமுடியும். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி என்று தெரிகிறது. எங்களின் துறைத்தலைவர்கள்தான் வெளிப்படையாகக் கூற அதிகாரம் உள்ளது" என்றனர். https://www.vikatan.com/news/tamilnadu/sangam-era-water-tank-found-in-keezhadi-excavation

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.