Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நல்லதண்ணி கிணத்தடியையும் கைத்தொலைபேசியையும் இணைச்சது மிக பிரமாதம்.
  2. அம்மா! சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா ! வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே?
  3. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு எண்டதெல்லாம் பொய்யா சார்? 😎
  4. இது ஒரு வில்லங்கமான சமாச்சாரம். கோயில்/விழாக்கள் போன்ற இடங்களிலையும் இப்படியான வார்த்தைகள் வந்து போகும்.
  5. அம்மா! ஒரு முற்றத்தில் விளையாடிய உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்குள் பல பிரிவுகள் வந்து விட்டதம்மா..பாசத்தை விட சொந்த உறவை விட சொத்துக்கள் பெரிதாகி விட்டது. எங்கடை தூரத்து சொந்த தம்பு வாத்தியார் என்ரை பனங்காணி எல்லாத்தையும் தன்ரை காணியோடை சேர்த்து வேலிபோட்டு அடைச்சு போட்டார். நீங்கள் இல்லாதது அவருக்கு பயம் விட்டு போச்சுது.கேட்டால் சண்டித்தனத்துக்கு வாறார். நீ வெளிநாட்டிலை செற்றிலாகிட்டாய் உனக்கு என்னத்துக்கு இஞ்சை காணி பூமி எண்டு கேக்கிறார்? என்ரை பிற்காலத்துக்கு வேணுமெண்டால் வரேக்கை தல்லாமாம். அம்மா நீங்கள் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமோ ? எங்கடை சின்னம்மா குடும்பம் இப்ப சரியான கஷ்டத்திலை இருக்கினம். அவையள் செய்த பாவங்கள் இப்ப சூனியமாய் வந்து சேர்ந்து கொண்டிருக்கு.வட்டிக்கு காசு குடுக்காதேங்கோ எண்டு நீங்கள் சொல்லச்சொல்ல எதையுமே கேக்காமல் நடந்த அவைக்கு நோய் நொடிகள் தான் மிச்சம். அவையளுக்கு இப்ப ஒரே வருத்தம் துன்பங்கள்.சேர்த்து சேர்த்து வைச்சிருக்கிற காசெல்லாம் ஒரு பிரயோசனத்துக்கும் இல்லை. அவையாலை இப்ப விரும்பின சாப்பாட்டை கூட சாப்பிடேலாது.நாலு இடத்தை பார்க்க கூட நடந்து திரியேலாது.அம்மா நீங்கள் அடிக்கடி சொல்லுற மாதிரி மனிசரை மதித்து பாவ புண்ணியங்கள் நினைச்சு வாழப்பழகோணும் எண்டது தெய்வவாக்கு மாதிரி அம்மா. அம்மா! நீங்கள் உங்களுக்கென என்னிடம் எதையுமே கேட்கவில்லை. அதே போல் நானும் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவும் இல்லை. அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை. ஏன் எமது இருவருக்கும் இடையில் அந்த அவசியமும் தேவைப்படவில்லை. இருந்தாலும் இங்கு என்னோடு வாழ்ந்தவர்கள் பலவற்றை தமது தாய் தந்தையர்களுக்கு செய்யும் போது நான் ஏன் அவர்கள் போல் செய்யவில்லை என்ற ஆதங்கம் இன்றும் முள்ளாய் மனதில் குத்துகின்றது.கேட்காமலே தேவையில்லா விட்டாலும் ஊர் பகட்டுக்கு செய்திருக்க வேண்டும் என்ற மனநிலையை எற்படுத்தி விட்டார்கள். அம்மா நாங்கள் இருவரும் செல்வச்சன்னதியில் கந்தசஷ்டி உபவாசம் இருந்தோம் ஞாபகம் இருக்கா...? எம்முடன் சேர்ந்து உபவாசம் இருந்த பாக்கியம் அக்கா ஞாபகம் இருக்கா? அவவை பற்றியும் சொல்லுறன் அம்மா.
  6. எங்கடை கொண்டாட்டங்களிலை ஒரு பலகார தட்டுக்கு நாலைஞ்சு மட்டன் ரோல் கேக்கிற நம்ம சிங்கங்களை யோசிக்க இந்த படம் ஞாபகத்துக்கு வந்தது...😁
  7. சிறித்தம்பி! உழைக்காமல் வந்த சொத்தும் பணமும் ஒருகாலமும் கையோடை நிக்காது கண்டியளோ... தொடருங்கோ மிச்சத்தை வாசிப்பம்.
  8. நல்லதொரு மண்வாசனை கவிதை. ஒரு சில நாட்களுக்கு முன் யூரியூப்பில் ஊர்காவத்துறை,கரம்பொன் போன்ற இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அற்புதமான இடங்கள். இவற்றையெல்லாம் இழந்து கொண்டு வருகின்றோமோ என்ற ஆதங்கம் நெஞ்சை வருடுகின்றது.
  9. இவன் யார்???? வேறை ஆர் எங்கடை சகோதரத்திலை ஒண்டு.
  10. அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம்.😁 உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...
  11. நம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.
  12. அம்மா! உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை? எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா! உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா? அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.
  13. ஓ....தம்பியர் ஊர் பாக்க போன இடத்திலையும் நூல் விட்டு பாத்திருக்கிறார்....😎 மற்றது ராசன் நைனாதீவு இல்லை நயினாதீவு. நீங்கள் டெய்லி காத்தான்குடியை ஊடறுத்து போய் வாறதாலை நைனாவிலையே நிக்கிறியள்.😜 ஆகா.......சிங்கன் வசமா மாட்டி. இதை வைச்சே ஆளை கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுக்கலாம்.
  14. ஊருக்கு ஊர் ஒரு குசும்பனாவது இருப்பாங்கள்.😁 தொடருங்கள் புங்கையர். கதை வித்தியாசமாக இருக்கின்றது.
  15. கிராமத்து சந்தோசங்கள் பட்டினங்களில் வரவே வரராது. தாய்க்குலங்களின் கபடி கபடி...
  16. புரிஞ்சவன் புத்திசாலி.! புரியாதவன் படிப்பது முரசொலி.!! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.