கடற்கரும்புலி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்புலி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும்.
16.08.1999 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்புலி மேஜர் அந்தமான் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.
தாய்மண்ணின் விடிவிற்காக 16.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மதன், லெப்டினன்ட் யாழ்வேங்கை, லெப்டினன்ட் சங்கமன், லெப்டினன்ட் பொற்தேவன், லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன், லெப்டினன்ட் தமயந்தி, லெப்டினன்ட் நிலவன், 2ம் லெப்டினன்ட் மலர்வேங்கை, வீரவேங்கை நரசிம்மன் / இசைவளவன், வீரவேங்கை நெய்தல்வேங்கை, வீரவேங்கை கீதவாணி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.