Everything posted by தமிழரசு
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பட்டுக்கோட்டையில் தற்பொழுது வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறகணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது அடுத்த ஐந்து நாட்கள் வரை தொடர் புறகணிப்பு இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசு தலையிடகோரி தமிழகம் முழுவதும் பிற்பகல் அரசு அலுவலக வளாகங்களில் தமிழ்நாடு அரசு உழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் - முகநூல்- 9ம் நாள் போராட்டம் - ரயில் மறியல் கோவை பாரதியார் பல்கலைகழக மாணவ மாணவிகள் 60 பேர் கைது - முகநூல்-
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- முகநூல்-
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
திருச்சி பெரியார் ஜூப்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் now Hunger strike started in trichy k k nagar periyar jublee compus update the same - முகநூல்- காஞ்சி அணைத்து கல்லூரி மாணவர்களின் பேரணி போராட்ட ஒருங்கிணைப்பாளர் கோ .சரவணன் . ஓயாத அலை - முகநூல்-
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
20.03- கிடைக்கப்பெற்ற 40 மாவீரர்களின் விபரங்கள். சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் டெனி யோசப் தங்கதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 20.03.2001 கப்டன் தமிழ்முரசு பன்னீர்ச்செல்வம் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.2000 மேஜர் கலையரசன் (பயில்வான் மாஸ்ரர்) நாகரத்தினம் மதியழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1998 கப்டன் தேவா (தேவன்) சுப்பிரமணியம் சிவதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1998 2ம் லெப்டினன்ட் கார்முகில் சித்திரவேல் ரவிச்சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 20.03.1996 மேஜர் வளவன் (வேணு) இம்மானுவேல் ரஞ்சித் யதுர்சன் மன்னார் வீரச்சாவு: 20.03.1996 லெப்டினன்ட் றெபேக்கா (பூங்கொடி) லிங்கரட்ணம் எனிற்றா ஏஞ்சலின் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.03.1996 லெப்டினன்ட் செவ்வேல் இராசையா சுரேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.03.1996 லெப்டினன்ட் காசிநாதன் தாமோதரம் தவம் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.03.1993 2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (மயூரன்) சிவராசா திலகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1993 வீரவேங்கை தென்னவன் மகாலிங்கம் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1993 லெப்டினன்ட் தங்கன் நடராசா விமலநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1992 வீரவேங்கை சுடர் சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை கிளிநொச்சி வீரச்சாவு: 20.03.1991 2ம் லெப்டினன்ட் பிரதீப் செல்லத்துரை இராஜேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 20.03.1991 மேஜர் ரஞ்சன் சித்தப்பா செல்வநாயகம் தயாளன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 கப்டன் மொறிஸ் சன்முகம் தவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 லெப்டினன்ட் ஜொனி சத்தியபவான் சக்திவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 லெப்டினன்ட் நாதன் தியாகராஜா சிவாநந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 லெப்டினன்ட் தர்சன் (புலவர்) யோகசாமி செந்தூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 லெப்டினன்ட் சோமன் விநாயகமூர்த்தி இராஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 லெப்டினன்ட் கலா வசந்தி இராசரத்தினம் திருகோணமலை வீரச்சாவு: 20.03.1991 2ம் லெப்டினன்ட் ரஞ்சித்தாத்தா கதிர்காமு குணபாலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 2ம் லெப்டினன்ட் சதா மேரிகியூரா தேவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 2ம் லெப்டினன்ட் அம்பி நாகலிங்கம் கனகரஞசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 2ம் லெப்டினன்ட் காந்தராசா நாகராசா ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை சிவசங்கர் அடைக்கலமுத்து இராஜேந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை திவாகரன் டானியல் ஜோசப்சாள்ஸ் மன்னார் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை ஆனோல்ட் கிருஸ்ணபிள்ளை குகன் வவுனியா வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை மரியநாயகம் கனகரத்தினம் சின்னத்துரை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை டெனின் வெற்றிவேல் ஞானரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை சசிக்குமார் சின்னத்தம்பி பத்மநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை சூரி (இயற்பெயர் கிடைக்கவில்லை) கிளிநொச்சி வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை அனித்தா உதயரஞ்சினி வைரமுத்து யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை கஜா பவானி தவநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை சிறி தங்கரட்ணம் நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை விஸ்ணு கனகரத்தினம் நித்தியானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.03.1991 வீரவேங்கை ஜோன்சன் பா.சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.03.1990 வீரவேங்கை யூலி யூலியன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.03.1988 வீரவேங்கை டொனா பாக்கியநாதன் போல்ராஜ் பாவற்குளம், வவுனியா. வீரச்சாவு: 20.03.1986 வீரவேங்கை ரசீந்தன் பசுபதி சதீஸ்குமார் கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.03.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 40 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ராஜபக்சேவுக்கு பாடைகட்டி மாணவகளின் எழுச்சி பேரணி! அடக்குமுறை செய்த காவல்துறை! சேலத்தில் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு மேல் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள்உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். இதையொட்டி சேலத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளும் போராட வந்தனர். தனி தனியாக போராடுவதை விட ஒற்றுமையாக போராடினால் வலிமை கூடும் என கருதி அனைவரும் ஒரு இடத்தில இருந்து ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 7 கி.மீ பேரணியாக சென்று கோரிக்கைகளை வெல்ல போராடலாம் என முடிவெடுத்தனர். எனவே இன்று (19.03.2013) காலை சேலத்தில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் சட்ட கல்லூரியில் திரண்டனர். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என முழக்க மிட்டு அனைவரும் எழுச்சி உரையும் ஆற்றினர். பின் சில மாணவர்கள் ராஜபக்சே போல உருவபொம்மை செய்து எடுத்து வந்து அதை பாடையில் கட்டி பிணம் போல நாலு பேர்கள் தூக்கி சுமந்து சென்றனர். இந்த பாடையோடு மாணவர்கள் பேரணி தொடங்கியது. சட்ட கல்லூரியில் இருந்து ஏற்காடு முக்கிய சாலை வரை பேரணி வந்துகொண்டு இருக்கும்போதே பெரும்படையில் திரண்டு இருந்த காவல்துறையினர் வழிமறித்து தடுத்தனர். எங்கள் உணர்வுகளை தானேகாட்டுகிறோம் இன்னும் சிறிது தூரமாவது செல்ல விடுங்கள் என்றனர் மாணவர்களும்மாணவிகளும் ஆனால் காவல்துறையோ சட்டை செய்யாமல் அனைவரையும் அள்ளிபோட்டது. திமிறிய மாணவர்களை தாக்கியது. தள்ளிவிட்டது. இதையும் தாண்டி மாணவர்கள் ராஜபக்சே உருவ பொம்மையை தீயிட்டு கொடும்பாவி எரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை ஏ.சி ரவிசங்கர் காவல்துறையை ஏவி விட மிக கடுமையாக மாணவர்களை தள்ளுமுள்ளு செய்து குண்டு கட்டாக வேனிர்க்குள் திணித்து கைது செய்தனர். காக்கிகளின் அடக்குமுறைகள் மாணவர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. செய்தி, படங்கள்: இளங்கோவன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94634- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ராஜபச்சே போர்க்குற்றவாளி என தீர்மானம் கொண்டுவரக்கோரி அரை நிர்வாண போராட்டம் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி என்று ஐ.நா மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் நடந்தது. இரா.பகத்சிங். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94633- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழத் தமிழர்களுக்காக போராடும் மாணவர்களுக்கு செவ்வணக்கம்: சத்யராஜ்- மணிவண்ணன் சென்னை: ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்று நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இன்று அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது: குருதிச் சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதையக் கொடுத்து விட்டு, முள்வேலிக் கம்பிகளுக்குள் பசித்த வயிரோடு பரிதவித்து நிற்கும் நமது, ஈழத்து உறவுகளின் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டுத்தர பசியையே ஆயுதமாக்கிப் போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச் செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு. அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த மாணவர்களின் பட்டினிப் போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர் குற்றமல்ல இனப்படு கொலை என்ற உண்மையான உன்னதமாக குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தக் குரல் உலகத்தின் செவிப் பறைகளைக் கிழிக்கும். கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும் எம் ஈழ உறவுகளுக்கு நீதி பெற்றுத் தரும் என்பது தின்னம். உள்நோக்கமற்ற அறம் நிறைந்த எமது மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எமது செவ்வணக்கம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. http://tamil.oneindia.in/movies/news/2013/03/sathyaraj-manivannan-s-red-salute-to-171826.html மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த உதடுகள்! பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர். ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது. இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் செய்தி படங்கள் இளங்கோவன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94641- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இன்று காலை முதல் திருச்சியில் மாணவர்கள் இந்திய மத்திய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது இந்திய மத்திய அரச அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. சற்று முன் மத்திய அரசுக்கு சொந்தமான BSNL அலுவலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுக்கொண்டிருப்பதாக ஈழதேசம் நிருபர் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19650:2013-03-19-09-45-07&catid=1:aktuelle-nachrichten&Itemid=50- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர் போராட்டத்தால் அதிர்ந்தது கோவை ! Updated 40 minutes ago இன்று தமிழீழம் அமைய வற்புறுத்தி கோவை கல்லூரி மாணவர்கள் வரலாறு காணாதவாறு பல்லாயிரக் கணக்கில் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர் . அரசியல் கட்சிகளே இது போன்ற பேரணியை நடத்த முடியாது ஆனால் மாணவர்கள் தங்களை தாங்களே ஒழுங்குபடுத்தி தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இப்படி ஒரு கவன ஈர்ப்பு பேரணியை நடத்தி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது . இது வரை நடந்த மாணவர் ஒன்றுகூடலில் இந்தப் பேரணி தான் மிகப் பெரியது என்றும் கூறலாம் . நிச்சயம் இது அரசியல் கட்சிகளை மட்டுமல்லாமல் அரசையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பது ஐயமில்லை . இம்மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசியல் கட்சிகளும் இனி ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது . தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் அல்லது அரசு அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை கோவை மாணவர்கள் நமக்கு செய்தியாக உணர்த்தி உள்ளனர் . கோவை மாணவர்களுக்கு நமது பாராட்டுகள் . வெல்க மாணவர் போராட்டம் . தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டம் புதிய தமிழகத்தை உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல . படங்கள்: தமிழ் டெனி - முகநூல் -- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மக்கள் போராட்டமாக உருவெடுத்தது மாணவர் போராட்டம் - ரஜினி ரசிகர்களும் களத்தில் குதித்தனர்! இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர். இலங்கைப் பிரச்சனையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர். வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். ரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே 2009-ம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது தனி ஈழம் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் ஈழப் பிரச்சனைக்கான போராட்டத்தில் தங்களின் உணர்வுகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என ரசிகர் மன்ற தலைவர் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=78460&category=TamilNews&language=tamil- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு: - தமிழ் இளையோர் அமைப்பு (ஐக்கிய இராச்சியம்) இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை ஒட்டிய எழுச்சியோ கோடி கணக்கிலுள்ள தாய் தமிழ் நாட்டு மக்கள் இடையில் இல்லாமை என்பது ஏமாற்றத்தையே இத்தனை காலமும் தந்தது. ஆனால் அக்குறையை தீர்த்து தமிழ் நாடு முழுவதும் ஈழ உணர்வு பற்றி எரியும் பொருட்டு உங்கள் போராட்டங்கள் அமைந்துள்ளது. இதைத் தான் இத்தனை காலமும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் தாயகத்தில் வாழும் உடன் பிறப்புகளும் எதிர் பார்த்தோம். தாய் மண்ணின் விடிவிற்கான போரட்டத்தை எங்கள் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இளையோர் கையில் 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையின் மூலம் ஒப்படைத்தார். அதை நன்கு புரிந்து புலம்பெயர்ந்து வாழும் இளையோரும், குறிப்பாக 'தமிழ் இளையோர் அமைப்புகளும்' செயல்பட்டு வருகிறது. இவர்களுடன் தாய்த் தமிழ் நாட்டு மாணவர்களும் கைகோர்க்கும் வண்ணம் வீறுகொண்டு எழுந்து புரட்சியுடன் போராடுவது புலம்பெயர் ஈழ தமிழர்களிற்கும் தாயக உறவுகளிற்கும் புத்துணர்வும் உற்சாகமும் அளித்துள்ளது. எங்களது போராட்டம் ஓயவில்லை மாறாக அது மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதுவும் மாணவர்கள் சக்தியாக, 1972 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக பேரினவாத இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பினால் கோபம் அடைந்த அன்றைய மாணவர்களாக இருந்த தேசியத்தலைவரும் அவரது நண்பர்களும் தங்களது பாரிய எதிர்ப்பினை காட்டினார்கள் அதேபோல உங்களிடம் இருக்கும இந்த உத்வேகம் எங்களது சுதந்திர தமிழீழ தனியரசை அடைய என்றும் எங்களோடு இருக்கும் என்று இளையோரகிய நாம் கருதுகின்றோம். இன்று எமது போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது, எல்லா நாடுகளும் எம்மை உற்றுநோக்கிய வண்ணம் உள்ளார்கள். சனல் 4 தனது ஊடகதின் மூலம் எமது மக்களின் பல அவல நிலைகளை வெளிக்கொண்டு வருகிறது. ஆனாலும் சர்வதேசம் இப்பவும் எமது மக்களின் குரல்களை செவிசாய்ப்பதாக இல்லை. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ள நிலையில்,இலங்கையில் நடைபெற்றவை போர்க்குற்றமோ அல்லது மனித உரிமை மீறல்களோ அல்ல; அது இன அழிப்பு என்ற உங்கள் தெளிவான நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் மாணவர்களாகிய நீங்கள் முன்வைத்திருக்கும் அனைத்துலக சுயாதின விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற உங்களதுகோரிக்கைகளை நாம் வரவேற்கிறோம். அன்று தொட்டு இன்று வரை தமிழர்களுக்கான எந்த உரிமைகளும் உரியமுறையில் வழங்கப்படவில்லை.அடக்குமுறைகளும் சமுதாய சீர்கேடுகளும் குறைந்தபாடில்லை அதேபோல எமது தாயக நிலப்பரப்புகளும் தமிழர்களின் அடையாளங்களும் வெகு வேகமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் மற்றும் மாணவர்களின் குரல்களும் இனவாத அரசினால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டுக் கொண்டிருகிறார்கள். அடக்குமுறைகளுக்குள் அடைபட்டு கிடக்கும் இனம் அல்ல நாம், போராடுவோம் இறுதி வரை போராடுவோம். உங்கள் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள், மாணவர் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ அரசு பிறக்கட்டும்! தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் [ [- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
19.03- கிடைக்கப்பெற்ற 55 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை தமிழ்க்கவி வைரமுத்து துவேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 19.03.2004 வீரவேங்கை மலர்மதியன் சீனிவாசகம் விஸ்வகரன் அம்பாறை வீரச்சாவு: 19.03.1998 வீரவேங்கை வேலழகன் யோகராசா ரஜனிகாந் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1998 2ம் லெப்டினன்ட் செம்மதன் (சகாயம்) கந்தசாமி இந்திரகுமார் அம்பாறை வீரச்சாவு: 19.03.1998 2ம் லெப்டினன்ட் அருணா சுந்தரமூர்த்தி சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1997 கப்டன் தனிநேசன் (அன்பழகன்) இராயப்பு இன்பராசா திருகோணமலை வீரச்சாவு: 19.03.1997 வீரவேங்கை விஸ்வம் நாகமணி சந்திரசேகரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1993 வீரவேங்கை குமாரவேல் (பிறேம்குமார்) இராமக்குட்டி பிறேமச்சந்திரன் அம்பாறை வீரச்சாவு: 19.03.1993 2ம் லெப்டினன்ட் சந்திரன் இராசு ஆறுமுகம் வவுனியா வீரச்சாவு: 19.03.1992 லெப்டினன்ட் ஒள்ளியன் (ஆனந்தகுமார்) சீனித்தம்பி கனகரட்ணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1992 லெப்டினன்ட் புலித்தேவன் (அமுதன்) செல்வம் செல்வேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1992 லெப்டினன்ட் புகழ்வேந்தன் (சாளன்) நாகராசா சிவநேசன் திருகோணமலை வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் அறத்திருவன் (ஆனந்தன்) சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அம்பாறை வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் யோகேந்திரன் பொன்னம்பலம் ஆனந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் அசோகன் சுப்பையா யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் வாமன் சிவலிங்கம் லிங்கன் திருகோணமலை வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் இளங்கோ சித்திரவேல் அசோக்குமார் திருகோணமலை வீரச்சாவு: 19.03.1992 வீரவேங்கை எல்லாளன் நாதன் சிறி அம்பாறை வீரச்சாவு: 19.03.1992 வீரவேங்கை இளங்குமணன் சுப்பிரமணியம் மகேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் ஜெயா மாணிக்கம் தியாகராசா கிளிநொச்சி வீரச்சாவு: 19.03.1992 கப்டன் பாவலன் (உருத்திரன்) சற்குணநாதன் ஜீவரத்திணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1992 மேஜர் ஜெயகரன் (சாள்ஸ்) கந்தையா ஜங்கரன் கிளிநொச்சி வீரச்சாவு: 19.03.1992 கப்டன் சிவராஜ் குமாரலிங்கம் மோகனதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் செல்லத்துரை (விக்கினா) மகாலிங்கம் பாஸ்கரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.03.1992 வீரவேங்கை தமிழ்மாறன் அந்தோனிப்பிள்ளை லோறன்ஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.03.1992 வீரவேங்கை இளவழுதி அந்தோனிமுத்து டொடிமனிக் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1992 லெப்டினன்ட் இராகவன் ஐயாத்துரை சிவகுமாரலிங்கம் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் ரஞ்சித்குமார் குருசாமி தவராசா மன்னார் வீரச்சாவு: 19.03.1992 வீரவேங்கை தில்லையழகன் (கிட்டிணன்) கறுப்பையா சிவகுரு வவுனியா வீரச்சாவு: 19.03.1992 2ம் லெப்டினன்ட் திருச்செல்வம் நாமணி பிறேமானந்தம் அம்பாறை வீரச்சாவு: 19.03.1992 லெப்டினன்ட் ஆதவன் (ஜேம்சன்) சுப்பிரமணியம் பிரபாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.03.1992 மேஜர் செட்டி (பிரதாப்) கந்தசாமி செல்வகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1991 கப்டன் கஜன் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராசா மன்னார் வீரச்சாவு: 19.03.1991 லெப்டினன்ட் குட்டி இராசநாயகம் ஜஸ்ரின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1991 லெப்டினன்ட் குட்டி கணபதி தங்கராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1991 லெப்டினன்ட் வாணி சிவராணி செல்லத்துரை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1991 2ம் லெப்டினன்ட் நிலாரவி சவரிஅன்ரன் ஜெயசீலன் மன்னார் வீரச்சாவு: 19.03.1991 2ம் லெப்டினன்ட் ராஜி நவநீதநாதன் சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை நளினி புவனேஸ்வரி சின்னத்தம்பி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை பஸ்ரியன் அழகையா தேவராஜ் மன்னார் வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை கனகன் கந்தசாமி ரஞ்சித்குமார் வவுனியா வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை ஜெயசக்தி யூடிற்ராதிகா குணரத்தினம் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை இளங்கோ சாமித்தம்பி கண்ணன் மன்னார் வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை ஜின்னா கணேஸ் கோபாலப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை சுந்தர் செபமாலை மரியதபேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை பூபால் நாகேஸ் வடிவேலு மன்னார் வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை காவேரி நிரஞ்சினி வைரமுத்து யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.03.1991 கப்டன் ஜெறோம் வைத்திலிங்கம் அந்தோனிதாஸ் மன்னார் வீரச்சாவு: 19.03.1991 கரும்புலி மேஜர் டாம்போ காசிப்பிள்ளை தயாபரன் கிளிநொச்சி வீரச்சாவு: 19.03.1991 வீரவேங்கை லோறன்ஸ் இரத்தினம் இராசலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.03.1990 லெப்டினன்ட் பவான் (ராஜன்) சரவணானந்தன் பவானந்தன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 19.03.1989 வீரவேங்கை றொசான் நடேசன் சிவதாசன் பாலாவத்தை, புலோலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 19.03.1989 வீரவேங்கை ஹரி கனகவேற்பிள்ளை ஹரிகரன் ஞானத்தோட்டம், புலோலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 19.03.1989 வீரவேங்கை நிதி செல்வநாயகம் கருணாநிதி தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 19.03.1988 வீரவேங்கை றமணி வேலுப்பிள்ளை ஜீவராசா தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 19.03.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 55 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- முகநூல் -- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் போராட்ட காட்சி - முகநூல் -- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூறு மாணவர்களுக்கு மேல் இன்று காலை முதல் காலவரையற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ,எந்த அடிப்படை வசதிகளும் ,மேற்கூரைகளும் இல்லாமல் வீதியில் உறங்கி வருகிறார்கள் பொது மக்கள் சமூக நல ஆர்வலர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க காவல்துறை தடுக்கிறது - முகநூல் -- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
amaraj college of Engg and Technology (KCET) Virudhunagar. protes Updated 12 minutes ago amaraj college of Engg and Technology (KCET) Virudhunagar. protest against sri lanka. - முகநூல் - தமிழீழ விடுதலைக்கான அனைத்து கல்லூரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்படி ஒரு எழுச்சி மிகுந்த போராட்டத்தை இப்போது இருக்கின்ற திருச்சி மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்றால் அது மிகையாகாது. திருச்சி புறநகரான பொன்மலை பகுதியில் புறப்பட்ட பேரணியானது ஒரு ராணுவ ஒழுங்குடன் மிகவும் கட்டுக்கோப்புடன் முன்னேறி சென்றது. முற்றுகையிடப்பட்ட இடங்கள்: 1) திருச்சி தலைமை தபால் நிலையம். 2) பாரத ஸ்டேட் வங்கி. 3) திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம். ௪) சிறீலங்கா விமான நிலைய அலுவலகம். 5) வருமான வரித்துறை அலுவலகம். 6) சுங்க இலாகா அலுவலகம். 7) அகில இந்திய வானொலி நிலையம். ௮) கடவுச் சீட்டு அலுவலகம். ஒரே நாளில் இத்தனை அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டது திருச்சி மாநகரையே வியப்படையவைத்தது. ஒரு கட்டத்தில் மாணவர்கள் மன்மோகன் சிங்,சோனியா காந்தி,ராஜபக்சே,சிதம்பரம்,ஆகியோரின் படங்களை பாடையில் வைத்து கட்டி அலுவலகங்கள் முன்பு போட்டு எரித்தனர்.மேலும் காங்கிரஸ் கொடி,இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை கிளித்தெடுத்துவிட்டு மீத படத்தை போட்டு எரித்தனர். ஒட்டுமொத்தத்தில் மாணவர்களின் எழுச்சியும் புரட்சியும் இன்னும் வேகமாக வீரியமடைகிறது. - முகநூல் -- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தயவு செய்து உங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடாதீர்கள் சகோதரர்களே ... உங்களின் தமிழ் ஈழ ஆதரவை முடிந்தவரைக்கும் சாத்வீக வழிகளில் போராடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களின் போராட்டத்தை கல்லூரிகளை மூடி(தண்ணீர் ஊற்றி) அனைத்து விடலாம் என்று நினைத்தது அரசு. (தண்ணிக்கு பதில் பெட்ரோல் ஊத்திட்டாங்க)ஆனால் போராட்டம் தீவிரம்தான் அடைந்துள்ளது. கோவை மாணவர்கள் நாளை காலை 9 மணியளவில் சிவானந்தா காலனியில் ஒன்று கூட தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு அழைப்பு. தொடர்புக்கு: தோழர் சிவ சுப்பிரமணியம்-9943799941. தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு(கோவை). - முகநூல் -- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம் ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை, தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின் அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன். உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள் கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’ என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது.... பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும் முழக்கத்துடன் ஏற்கப் பட்டது. இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில் அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன் என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது. இனி ’செத்தான் எதிரி’. (முகநூல்)- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!! - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.