Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம்; மத்திய இந்திய என்ற பெயர்களை அழிப்போம்: மாணவர் போராட்டக்குழு தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள், ‘’எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். வருகிற 31-ந்தேதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகை யிடுவோம். மத்திய அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி அழிப்போம். வருகிற பாராளுமுன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம்’’ என்று கூறினார்கள். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95311
  2. 26.03- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள். கரும்புலி மேஜர் சுதாயினி தெய்வேந்திரபிள்ளை ஜெயசுகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.03.2000 மேஜர் பரணிதரன் (பரன்) நாகராசா சிவராசா மன்னார் வீரச்சாவு: 26.03.2000 மேஜர் கலையரசன் செபமாலை ஜெறோம்சுகந்தன்லோகு மன்னார் வீரச்சாவு: 26.03.2000 லெப்டினன்ட் வாசுக்காந்தன் துரைராசா ஆனந்தராசா அம்பாறை வீரச்சாவு: 26.03.1999 வீரவேங்கை உலகையா இராயப்பன் போல்பெனடிக் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 26.03.1999 2ம் லெப்டினன்ட் முரசன் கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.03.1998 லெப்டினன்ட் சுகிர்தராஜ் பாலசுப்பிரமணியம் அசோக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.03.1998 கப்டன் முல்லை தம்பிராசா ரஜனி கிளிநொச்சி வீரச்சாவு: 26.03.1998 வீரவேங்கை பாண்டியூரான் அமலதாஸ் நொரில்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.03.1998 2ம் லெப்டினன்ட் சுகதீஸ் தெய்வநாயகம் குபேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.03.1997 2ம் லெப்டினன்ட் பாப்பா தர்மலிங்கம் பிரசாந் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.03.1993 2ம் லெப்டினன்ட் நவக்குமார் தியாகராஜா நேமிநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.03.1993 வீரவேங்கை தேவகுமார் வெற்றிவேல் சிறீதரன் அம்பாறை வீரச்சாவு: 26.03.1993 வீரவேங்கை கலாரூபன் (லோயிட்ஸ்) இளையதம்பி அற்புதராஜா அம்பாறை வீரச்சாவு: 26.03.1993 வீரவேங்கை மனோ நாகலிங்கம் மனோரஞ்சன் புங்குடுதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.03.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 15 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள், ஐயா சாமி நீங்க யாரும் எமக்காக எம்முடன் சேர்ந்து போராடவோ புரட்சிசெய்யவோ வேண்டாம், நீங்கள் உங்கள் நலனை மட்டும் பார்த்து ஒதுங்கியே இருங்கள், அது உங்கள் தனி மனித சுதந்திரம், உங்களை போராடச்சொல்லி கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை, உங்கள் படங்களில் என்ன கருமத்தயாவது நடித்துவிட்டு போங்கள், எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்கள் எமக்காக போராடாததால் உங்கள் படம் ஒன்றும் ஓடாமல் முடங்கிப்போகாது, படம் நன்றாயிருந்தால் பழகிப்போன பொழுதுபோக்காய் நாம்கூட பார்க்கத்தான் போகிறோம், தொடர்ந்தும் உங்களை கோடீஸ்வரராய் வாழவைப்போம், ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன் இனிமேல் உங்கள் படங்களில் ஏழைக்கிழவியையும் ஏதுமற்ற சிறுவர்களையும் அணைத்து காக்க வந்த கடவுள் ஆவது, உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையென்று கூச்சலிடுவது, நாலுபேரை சுத்தி நிற்கவைத்து சுண்டங்காய் பயல்கலான உங்களைப்போய் தமிழர்க்கு சுபீட்சம் தரவந்த வீர தீர சூரர்களாய் நாக்கூசாமல் பாராடுவது, 26 மணி நேரமும் [நேரம் போதாமல் அடுத்த நாளில் 2 மணித்தியாலம் கடன் வாங்கி] மக்கள் மக்கள் மக்கள் என்று மக்களுக்காக வியர்வையும் ரத்தமும் சிந்துவது, பச்சைத்தமிழன் சிவப்புத்தமிழன் என்று நீட்டி முழக்கி வசனம் பேசுவது, என்றெல்லாம் இனிமேல் எவனாவது இந்த மாதிரி மாதிரி தமிழருக்காக ம........ புடுங்குற மகாஉத்தமன் வேடம்போட்டால் திரை கிழியும் சொல்லிவிட்டேன். பாலாபிஷேகமும் பூமாலை தீப ஆராதனை மட்டும் கண்ட உங்கள் வானுயர்ந்த வண்ணப்படங்களுக்கு செருப்பே மாலையாகும், சேற்று எருமைச்சாணியும் சிலவேளை உதவக்கூடும், பார்த்து பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள், இந்த மாணவர் போராட்டம் தமிழனின் உரிமைக்குரலாய் மட்டுமல்ல இவ்வளவு காலமும் தமிழனை எழவிடாமல் கட்டிவைத்திருந்த பல மாயை விலங்குகளை தகர்த்தெறியத்தொடங்கியிருக்கிறது, இன்னும் உடைத்தெறியும் பல இழிவுகளை.............. Loyolahungerstrike
  4. சிங்களவருக்கு சந்தை விரிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் ! இனத் துரோகத்தின் உச்சகட்டம் ! இனத் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான் என்று சொல்ல வேண்டும். தமிழ் நாடே சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது . ஆனால் சரவணா அங்காடியோ சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது . இந்தக் கடையில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது சரவணா நிர்வாகம். இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள் . அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்கள் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது . தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம் . இதை பார்த்த ஒரு உணர்வாளர் , கடை நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டுள்ளார் . கடை நிர்வாகம், ஆமாம் ! சிங்களவர்கள் வசதிக்காக நாங்கள் இதை செய்துள்ளோம் . அவர்கள் நிறைய பேர் இங்கு வந்து போகிறார்கள் . வாடிக்கையாளர் சேவை தான் எங்களுக்கு முக்கியம் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளனர் . தமிழர் கடையாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் பணம் ஒன்று தான் அவர்கள் குறிக்கோள் என்பது இப்போது தெளிவாகி உள்ளது . வடநாட்டு ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டின் நிறுவனமான சரவணா கடையை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் . 1. சரவணா நிறுவனம் சிங்கள உற்பத்தி பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் . 2. சிங்களவர்களிடம் சந்தை விரிப்பதை நிறுத்த வேண்டும் . இதை சரவணா ஸ்டோர்ஸ் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான பரப்புரையில் நாம் ஈடு பட வேண்டும் . தேவைப்பட்டால் , அவர்கள் கடையை முற்றுகையிட வேண்டும் . அதற்கும் அவர்கள் செவி சாய்க்க வில்லை என்றால் அவர்கள் கடையை புறக்கணிப்போம் , தமிழன் திருந்தாமல் நாம் வேறு யாரையும் திருத்த முடியாது . உடனே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை கண்டிப்போம் . சிங்கள பொருட்களை அவர்கள் கடையில் இருந்து அப்புறப் படுத்துவோம். சிங்கள நுகர்வோரை இங்கு வந்து பொருட்களை வாங்குவதை தடுப்போம் . தமிழர் கடையை சிங்கள மயமாவதை நிறுத்துவோம் ! இந்த செய்தியை அத்தனை தமிழ் அமைப்புகள் , கட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம் சரவணா அங்காடி புரசைவாக்கம் 044 26603777 044 26613777 Loyolahungerstrike
  5. வணக்கம் தமிழக மாணவர்களின் எழுச்சியைப் பார்த்து தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கும் ஈழத்தமிழன் ஒருவனின் குரல் கவிதை வடிவில் Loyolahungerstrike
  6. Hindi is given undue advantage by the union govt India. Non- Hindi speakers are denied their basic language rights . Hindi imperialism is found in all walks of life and imposed on all non-Hindi speakers of India. Banks, central govt offices/services / exams , military, navy, airways, pan card, passport, Income tax, parliament, stamps, coins, gas, roadways, etc etc have Hindi only policy even in non-Hindi states of India. Let us put an end to Hindi imperialism. We will fight against this language injustice . இது தான் இந்திய நாட்டின் தற்போதைய மொழிக் கொள்கை . இந்திய அரசு துறைகளில் ஹிந்திக்கு மட்டுமே உரிமை கொடுக்கப் போடுகிறது . மற்ற மொழிகள் எல்லாம் புறக்கணிக்கப் படுகிறது . ஹிந்தி படித்தோருக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் , சலுகைகள் மற்ற இனத்தவர்களுக்கு மறுக்கப் படுகிறது . எல்லா இனத்தவர்களின் பணத்தை மட்டும் வரியாய் கொள்ளை அடிக்கும் இந்திய அரசு அந்த மக்களின் மொழியை மட்டும் புறக்கணிப்பது ஏனோ . வானூர்தி நிலையம் , தொடர்வண்டி நிலையம் முதல் சமையல் எரிவாயு பாதுகாப்பு அறிவுப்புகள் வரை நீள்கிறது இந்தியின் ஆதிக்கம் மற்றும் பிற மொழிகள் புறக்கணிப்பு . இதை எதிர்த்து நாம் மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது . இந்த அநீதிக்காக எதிராக குரல் கொடுக்க வேண்டிய மாநில முதல்வர்கள் இந்திய அரசின் அடக்குமுறைக்கு பயந்து எதுவும் செய்யாமல் இருக்கின்றனர் . இந்த தலைமுறை அவ்வாறு இருக்கக் கூடாது . அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படும் வரை நாம் போராட வேண்டும் . டெல்லி அரசின் ஒற்றை ஆட்சிக் கொள்ககையை நாம் வீழ்த்த வேண்டும் (முகநூல்)
  7. Suresh Sivanantham வணக்கம் நண்பர்களே.. நான் கனடாவில் வாழும் ஒரு தமிழன்.. நமது போராட்டம் வெற்றி காணும் நாள் கண்ணுக்குத் தெரிகிறது..! இன்னும் ஒரு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டி இருக்கிறது..! இந்த ஏர்டெல் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்..! இலங்கையில் இறுதிப்போரின்போது, இவர்கள் அமைத்த தகவல் கோபுரங்களின் ஊடாக போராளிகளின் தொலைதொடர்பு அலைவரிசைகள் ஒட்டுக்கேட்கப்பட்டு எதிரிக்கு வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. தெரிந்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..! நன்றி சொல்லிப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை..! இது நமக்கான போராட்டம்..!! வாழ்க தமிழ்..! வெல்க தமிழீழம்! வளர்க தமிழர் தாயகங்கள்..! Li Loyolahungerstrike
  8. உனக்கு எதற்கடா தமிழன் வரி கொடுக்க வேண்டும்? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிந்திக்கவும்: இந்திய அரசால் பாதிக்கப்படாத ஒருதமிழனும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழர்கள் மீது பல்வேறு அரசியல், பொருளாதார, இன அடக்கு முறைகளை ஏவி வருகிறது மத்திய ஹிந்தி அரசு. அதற்க்கெதிராக, வெள்ளையனை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்தியது போல் மீண்டும் வரிகொடா இயக்கமும், மத்திய அந்நிய அரசின் அடக்கு முறையில் இருந்து விடுதலை பெற மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தையும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். "மன்மோகனின் வடக் ஹிந்திய அரசே உனக்கு எதற்க்கடா தமிழன் வரிகொடுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இனவெறி பிடித்த சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் பொழுது நீயும், உன் ராணுவமும் எங்கடா போனீர்கள்"! "எம்தொப்புள் கொடி உறவுகள் கொத்துகொத்தாய் கொல்லப்படுவதற்கு குண்டுகளையும், ராடார்களையும் கொடுத்துதவி இனப்படுகொலை செய்ய நீயும், உனது ராணுவமும் துணை நின்றீர்களே எதற்காடா தமிழன் உனக்கு வரி கொடுக்க வேண்டும்". "தமிழர்களுக்கு தேவையான மின்சார வளங்கள் தமிழகத்தில் இருந்தும், அந்நிய மாநிலங்களுக்கும், கார்பரேட் கொள்ளையர்களுக்கும் மின்சாரம் கொடுக்க தமிழர் வளங்களை அழித்து, தமிழர் தலையில் கொல்லி வைக்கும் உனக்கு எதற்காடா தமிழன் வரிதர வேண்டும்". "வடக்கிந்திய மன்மோகன் சிங்கே! தமிழக வயல்களில் நாத்து நட்டிநாயா? தமிழ் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? இல்லை நீ எங்களுக்கு மாமனா மச்சானா? தமிழ் பெண்களின் கற்பை சூறையாட அமைதிப்படை நடத்தினாய், தமிழர் விடுதலை வீரர்களை கொன்று குவிக்க ராஜபக்சேவின் கூட்டாளி ஆனாய் உனக்கு எதற்க்கடா தமிழன் வரிகொடுக்க வேண்டும்" -முகநூல்-
  9. 25.03- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை கமலினி (சுகன்யா) மகாலிங்கம் கவியரசி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.2001 லெப்டினன்ட் தமிழ்ஐயன் சிவப்பிரகாசம் லக்சுமிகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.2001 கப்டன் பிரியங்கா நடராசா சுபாசினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.2000 வீரவேங்கை பழனிராஜ் காந்தியர் அருளானந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1999 கப்டன் ஞானி குணசிங்கம் சுந்தரவள்ளி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1999 கடற்சிறுத்தை மேஜர் குயிலன் ஜேசுதாசன் ஜோன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1998 கப்டன் தரன் (வேந்தன்) தர்மலிங்கம் மோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1997 கப்டன் சாந்தலிங்கம் (றிச்சாட்) நல்லதம்பி கோணேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1997 வீரவேங்கை ஜெயகரன் (வினோத்) சாமித்தம்பி இராசேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1997 2ம் லெப்டினன்ட் ஈகன் நடராசசுந்தரம் கேதாரக்குமார் குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.03.1996 லெப்டினன்ட் சேரன் குணரத்தினம் தேவேந்திரராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 25.03.1992 வீரவேங்கை சிரஞ்சீவி முத்தையா மனோகரன் புத்தளம், சிறிலங்கா வீரச்சாவு: 25.03.1991 2ம் லெப்டினன்ட் காந்தி இரட்ணசபாபதி புஸ்பகாந்தன் ஆனைக்கோட்டை, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 25.03.1989 லெப்டினன்ட் ராஜு கந்தையா முகுந்தன் மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 25.03.1989 லெப்டினன்ட் அரசன் இராம்குமார் தாமரைக்கேணி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 25.03.1988 வீரவேங்கை அரபாத் பாபு ஜோன் பாலேந்திரா அரியாலைகு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 25.03.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  10. இலங்கை அரசிற்கு எதிராகவும் அமெரிக்காவின் போலி நாடக எதிர்பிற்கும் Updated about a minute ago இலங்கை அரசிற்கு எதிராகவும் அமெரிக்காவின் போலி நாடக எதிர்பிற்கும் இந்திய பேரரசின் மனிதாபிமான எதிர்பிற்கும் கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஐஐடி கரக்பூர் மாணவர்கள் நடத்திய பேரணி...... (நாள் 24/03/2013 - நேரம் 4:30) -முகநூல்- Loyolahungerstrike

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.