Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. அடிக்கடி இந்தப் படங்களைப் பதிவு செய்து ஞாபகப்படுத்த வேண்டியதா போச்சு.... -முக நூல்-
  2. இலங்கை பிரச்சினையில் மக்களின் மனநிலை என்ன? : மாணவர்கள் கருத்து கேட்பு இலங்கை பிரச்சினையில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்த எழுச்சியுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓயவில்லை. தினம் ஒரு போராட்டம் நடக்கிறது. இன்று காலை என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த உலக தமிழ் அமைப்பு மாணவர்கள் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே நின்று பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தினார்கள். கேள்வித்தாள் வடிவில் அவர்கள் கேட்டிருந்த கேள்விகள் வருமாறு:- 1. இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன? இது தேவைதானா? அல்லது வேண்டாமா? 2. மாணவர்களின் போராட்டம் மக்களுக்கு இடையூராக தெரிகிறதா? இல்லையா? 3. அ.தி.மு.க. - தி.மு.க. எந்த ஆட்சியில் மாணவர்களின் போராட்டம் அதிகமாக ஒடுக்கப்பட்டது? என்று நினைக்கிறீர்கள். 4. இலங்கை பிரச்சினையில் இந்திய வெளியுறவு கொள்கை சரியான நடவடிக்கையாக இருக்கிறதா? 5. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா? 6. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர்களை வெளியேற்ற வேண்டுமா? கூடாதா? 7. இலங்கை வீரர்கள் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவில் விளையாடலாமா? கூடாதா? 8. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறாதது தெரியுமா? 9. இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் நடந்துகொண்ட விதம் சரியா? உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. மெரீனா கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் எழுதி கொடுத்தனர். உலக தமிழ் அமைப்பு மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், கனகராஜ், நந்தினி, நந்தகுமார், ஜெயச்சந்திரன், விக்னேஸ்வரன், சிவா உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கருத்து கேட்பு நடத்தினர். இதுபற்றி பிரபாகரன் கூறுகையில், பொதுமக்களின் கருத்துக்கு ஏற்ப எங்களது செயல்பாடுகளை சரியாக அமைத்து கொள்ள இந்த ஆய்வு உதவும் என்றார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95097
  3. 24.03- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் அன்பினியன் பொன்னம்பலம் பாக்கியசீலன் திருகோணமலை வீரச்சாவு: 24.03.2000 வீரவேங்கை வைஸ்ணவி (சுரபி) சிவசுப்பிரமணியம் சிவதர்சினி வவுனியா வீரச்சாவு: 24.03.1998 கப்டன் தனசீலன் சிவசோதி பாஸ்கரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.03.1998 லெப்டினன்ட் ஈழவாசன் கனகரத்தினம் இரவீந்திரநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1998 2ம் லெப்டினன்ட் பழனிமுத்து செல்வரட்ணம் சிவகுருராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 24.03.1998 வீரவேங்கை நல்லதம்பி கணேஸ் சசிகரன் திருகோணமலை வீரச்சாவு: 24.03.1997 கடற்கரும்புலி மேஜர் நாவலன் (மதீஸ்) (இயற்பெயர் கிடைக்கவில்லை) கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.1997 கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன் இராசையா மதியழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1997 கடற்கரும்புலி கப்டன் வானதி இராமையா கலைவாணி கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.1997 கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி ஆறுமுகம் கசீந்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1997 லெப்டினன்ட் மாவேந்தன் (சுகுணன்) தங்கேஸ்வரராஜா சண்முகராஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1997 லெப்டினன்ட் லிங்கேஸ்வரன் செல்லத்துரை இராஜகாந்தன் அம்பாறை வீரச்சாவு: 24.03.1996 லெப்டினன்ட் அறிவொளி (சோமேஸ்) பாக்கியராசா திவ்வியகுமார் திருகோணமலை வீரச்சாவு: 24.03.1994 2ம் லெப்டினன்ட் மதுரலிங்கம் சந்திரபோஸ் அன்ரன் பெர்னான்டோ மன்னார் வீரச்சாவு: 24.03.1992 வீரவேங்கை குன்றன் சுப்பிரமணியம் குமாரவேல் கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.1991 வீரவேங்கை றோம் சின்னத்துரை கோணேஸ்வரன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.03.1989 வீரவேங்கை நாகு (இயற்பெயர் கிடைக்கவில்லை) இளவாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.03.1987 வீரவேங்கை அல்போன்ஸ் தெய்வேந்திரன் செல்வச்சந்திரன் நல்லூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.03.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 18 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  4. ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் ஆர்பாட்டத்தில் தமிழக மாணவர்கள் (ஆவணப்படம்) ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச்.25,2013) முதல் இந்த கல்லூரிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் பின்னணியில், தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று போராடும் மாணவர்களுக்கான அமைப்பாக உருவாகியிருக்கும் அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் விளக்கினார். போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று கூறிய செம்பியன், இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்யப்போவதாக கூறினார். அதேபோல், ஐநா மன்றத்தீர்மானத்தில் இலங்கைக்கான சர்வதேச விசாரணை தேவை என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை உள்வாங்காத அமெரிக்க அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் கூறினார். http://www.bbc.co.uk/tamil/india/2013/03/130323_notaxtoindiangovt.shtml
  5. Raj Kumar கோவை மாணவர்களின் அற்புத முயற்சி.. அருமை மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்கள் சென்று பொதுமக்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்! பல கிராமங்களில் இலங்கையின் இன படுகொலை முழுதுமாய் உணரபடவில்லை என வருந்துகிறார்கள். ஏனெனில்.. சன் டீவி கலைஞர் டீவி தாண்டி அவர்கள் அறியாத போது.. அவர்களை குற்றம் சொல்ல இயலா!! அவர்கள் உணரும்படி மாணவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.. அவர்களின் முழு ஆதரவு தர உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்ட மாணவர்களும் முன்னெடுங்கள்!..மக்கள் ஆதரவு மட்டுமே.. நம்மை ஈழத்தை நோக்கி கொண்டு செல்லும். (முகநூல்) லயோல கல்லூரி மாணவர்கள் மூட்டிய பெரும் தீ இன்று உலகம் எங்கும் பறவுகின்றது . தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சுவிஸில் மக்கள் உண்ணாவிரதம் Loyolahungerstrike Lion Rajmohan ALL INDIA IIT STUDENTS PROTEST AGAINST GENOCIDE: ======================================= IIT BOMBAY, IIT KHARAGPUR, IIT KANPUR AND IIT MADRAS students propose to organize a human chain formation at Gandhi Mandapam Road (from CLRI Bus Stop to Kotturpuram Police Station) from 5:00 PM to 7:00 PM on Sunday, March 24, 2013. The event is organized to create awareness and sensitize the SOCEITY regarding the human rights violations and genocide in Sri Lanka as a part of a coordinated protest with other IITs (each at their respective institutions). It is also to express discontent against the US backed resolution at the United Nations Human Rights Council that happened recently. We demand that the following actions be taken up: - An independent inquiry into the alleged human rights violations that occurred during the final phase of the civil war in Sri Lanka. - An early political settlement for the Tamils in Sri Lanka through holding a referendum. Students, staff who are sympathetic to the cause and willing to participate are requested to be present at kotturpuram road by 5:00 PM tomorrow (Sunday, March 24, 2013). Loyolahungerstrike
  6. முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர் போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண் 9840480273 Loyolahungerstrike
  7. திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஐ நா மன்றம் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து 11 வது நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில்லும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு பல நூதன போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில் நேற்று மாலை கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்காக போடப்பட்டிருந்த பந்தல் அகற்றப்பட்டது . கடுமையான வெயிலுக்கு மத்தியில் போர்வைகளினால் போர்த்திக்கொண்டு தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தயாளன் என்னும் மாணவர் மயக்கம்முற்ற நிலையில் சக மாணவர்களின் நிர்ப்பந்தத்தால் அவர் அரச மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். (முகநூல்)
  8. 23.03- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் அபயன்சன் சிவப்பிரகாசம் மதன்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.2001 லெப்டினன்ட் வாசன் குணசேகரம் சிறிகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.03.2001 துணைப்படை மேஜர் சின்னவன் சுப்பிரமணியம் செல்வரட்ணம் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.03.2000 2ம் லெப்டினன்ட் இமையாளன் சிவலிங்கம் வரதராஜன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.1998 கப்டன் திலகன் சவுந்தராஜா வசந்தராஜா திருகோணமலை வீரச்சாவு: 23.03.1998 கப்டன் உதயன் சுப்பிரமணியம் ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1998 லெப்டினன்ட் ராஜன் ஆனந்தராசா புஸ்பாகரன் திருகோணமலை வீரச்சாவு: 23.03.1998 2ம் லெப்டினன்ட் சுதாநிதன் கேதாரலிங்கம் நாகேந்திரன் அம்பாறை வீரச்சாவு: 23.03.1998 வீரவேங்கை சீலன் மகாலிங்கம் துஸ்யந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1998 கப்டன் பிரதீபன் (நெடுங்கீரன்) அருமைராசா சசிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1997 லெப்டினன்ட் நந்தன் செல்லத்தம்பி மகாதேவன் திருகோணமலை வீரச்சாவு: 23.03.1997 வீரவேங்கை புயலவன் குணலட்சுமணன் அருட்செலவம் வவுனியா வீரச்சாவு: 23.03.1997 மேஜர் வசி (தமிழ்மாறன்) நவரட்ணம் சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1997 மேஜர் ரதன் ஆறுமுகம் பிலவங்கன் அம்பாறை வீரச்சாவு: 23.03.1996 லெப்டினன்ட் இலக்கியன் பீதாம்பரன் ஜீவகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.1996 2ம் லெப்டினன்ட் ரவிக்குலன் (முரளி) சங்குமாப்போடி விஜயகுமார் அம்பாறை வீரச்சாவு: 23.03.1996 லெப்டினன்ட் கங்கையப்பன் (கிட்லர்) கணபதிப்பிள்ளை தச்சனானந்தம் அம்பாறை வீரச்சாவு: 23.03.1996 2ம் லெப்டினன்ட் சங்கர் தங்கவேல் வரதன் திருகோணமலை வீரச்சாவு: 23.03.1996 மேஜர் கங்கையன் செல்லத்துரை சிவகுமார் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 23.03.1996 2ம் லெப்டினன்ட் குமரன் இராசேந்திரம் சிறீதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1994 லெப்டினன்ட் அன்பழகன் (கெனின்) யோன்அரியநாயகம் அன்ரன்கமல்ராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 23.03.1994 லெப்டினன்ட் நளன் (செல்லத்தம்பி) செல்வசேகரம் கணேசலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 23.03.1992 கப்டன் மணாளன் (டயஸ்) சண்முகநாதன் சிறிராம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1992 லெப்டினன்ட் இளமாறன் (பிரியன்) மதிவதனன் தயானந்தன் திருகோணமலை வீரச்சாவு: 23.03.1992 லெப்டினன்ட் நளினி செல்லையா சாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 23.03.1992 2ம் லெப்டினன்ட் அழகியநம்பி (கெங்கை) சுப்பிரமணியம் அசோக்குமார் நுவரெலியா, சிறிலங்கா வீரச்சாவு: 23.03.1992 வீரவேங்கை தர்சினி கந்தசாமி வனிதா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.1992 வீரவேங்கை நிலவன் (சிவலோகன்) கந்தவனம் தேவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.1992 வீரவேங்கை மான்விழி சிவகங்கை செல்வராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1992 கப்டன் சிறீமதி சிவகலா துரைராசசிங்கம் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.03.1992 வீரவேங்கை அசோக் கனகரட்னம் மோகனதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.1991 வீரவேங்கை சுகிர்தன் கந்தையா யோகராசா வவுனியா வீரச்சாவு: 23.03.1991 கப்டன் விக்கி சுப்பையா மகேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 23.03.1991 வீரவேங்கை தயா த.உதயராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.03.1989 வீரவேங்கை மைக்கல் சின்னப்பு ஜோன்சன் குயின்ரன் மணியந்தோட்டம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.03.1989 லெப்டினன்ட் றெஜினோல்ட் இராசையா சின்னராசா ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.03.1989 வீரவேங்கை ஜோர்ஜ் வில்லியம் றொபேட் ஈச்சிலம்பத்தை, திருகோணமலை. வீரச்சாவு: 23.03.1988 லெப்டினன்ட் நந்தன் தம்பிராசா சிவநந்தன் கல்வளை, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.03.1988 வீரவேங்கை பண்டிதர் இரத்தினசபாபதி வேணுகோபால் வேலணை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.03.1987 வீரவேங்கை அருணன் சிவசுப்பிரமணியம் ரகுராஜன் கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.03.1987 2ம் லெப்டினன்ட் துரை மரியாம்பிள்ளை கிறிஸ்ரலோ முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.03.1987 வீரவேங்கை ராஜ்மோகன் அழகக்கோன்யூட் ராஜ்குமார் இளவாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.03.1987 வீரவேங்கை கில்மன் பிலிப்பு மெதினோ கீர்ததிராஜா கள்ளிக்கட்டைக்காடு, உயிலங்குளம், மன்னார். வீரச்சாவு: 23.03.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  9. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் மார் 22, 2013 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும் அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்... வருகிற மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்... தமது இரத்த சொந்தங்களுக்காக , அவர்களின் இனபடுகொலைக்கு நியாயம் கேட்பதற்காக அறவழியில் போராடிய தமிழக மாணவர்களை - "தமிழ் பொறுக்கிகள் " என்று கொச்சை படுத்திய சி . சுப்ரமணிய சுவாமியை மிக கடுமையாக , வன்மையாக கண்டிக்கிறோம்... அவர் மன்னிப்பு கேட்காவிடில் , அவர் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக மிக பெரிய போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்த படும்.... ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கள விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவதால் அந்த போட்டி தமிழகத்தில் நடை பெறாது என்று தமிழக அரசு அறிவித்தது, அதேபோல - சிங்கள விளையாட்டு வீரர்கள் வருகிற IPL -2013, T20 விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்கு பங்கு கொண்டாலும் அவர்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டங்களும் , கருப்பு கொடி போராட்டங்களும் கட்டாயம் நடைபெறும். http://www.sankathi24.com/news/28281/64//d,fullart.aspx
  10. துரை அனைத்து மாணவர்கள் சார்பாக நாளை வெற்று அமெரிக்க தீர்மான எரிப்பு போராட்டம் இடம் - மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் நேரம் - காலை 10 மணி அனைத்து கல்லூரி மாணவர்களும் தமிழீழ ஆதரவாளர்களும் கலந்து கொண்டு ,தொடர்ந்து தமிழ் ஈழத்தில் சர்வேதேச நீதி விசாரணை நடத்தவும் , பொது வாக்கெடுப்பு நடத்தவும் ,தனி தமிழ் ஈழமே தீர்வு என்றும் ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் தொடர்புக்கு தோழர் - பகவான்தாஸ் 7200998864 Loyolahungerstrike வணக்கம் நண்பர்களே, திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு நகரில் அனைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இலங்கை மற்றும் இந்திய அரசைக் கண்டித்து வரும் 24ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மாலை 2.30மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாணவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இடம்: செய்யாறு, ஆரணி கூட்டு சாலை. இப்படிக்கு: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , செய்யாறு கிளை. தொடர்புக்கு: முகிலவன் (8144953232), ரோகேஷ் (9710463579), செல்வகுமார் (9566765727) உங்கள் நண்பர்கள் அனைவரையும் இப்பேரணிக்கு அழையுங்கள். http://www.facebook.com/events/354778847973676/?ref=25 Loyolahungerstrike
  11. இன்று நடை பெற்ற ஈழத் தமிழர் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு. Loyolahungerstrike கனடாவில் யோர்க் பல்கலைக்கழ மாணவர் உண்ணாவிரதம் ********************************************************** தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கனடாவிலுள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு (YUTSA) உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்படி பல்கலைக்கழகத்தில் நடத்திக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெற்றுவரும் இன அழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழ்நாட்டு மாணவர்களுடன் இணைந்து தாமும் சுதந்திர பன்னாட்டு விசாரணைக்கும், தமிழர் பகுதியில் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றினை அமைப்பதற்கும், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கும் கோரிக்கை வைப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். Loyolahungerstrike
  12. தமிழீழம்உருவாக்க பொது வாக்கெடுப்பு:மாணவர்கள் வலியுறுத்தல் தமிழ் ஈழம் உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை ஐ.நா. சபை மூலம் இந்தியா எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்றும் மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாணவ கூட்டமைப்பினர் இத்தகவல்களை தெரிவித்தனர். 31ம் தேதி கெடு: இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31-ம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர். பயனற்ற தீர்மானம் : மாணவர்கள் குற்றச்சாட்டு ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பயனற்றது, இலங்கை இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கான தனி நாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. அகதிகள் உண்ணாவிரதம்: இலங்கை அரசைக் கண்டித்து பல்வேறு அகதி முகாம்களை சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். புழல், காவாங்கரை பகுதியில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்து வந்த அகதிகள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் 500க்கும் மேற்பட்ட அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 11வது நாளாக உண்ணாவிரதம்: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் தொடர்ந்து 11-வது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக்கெடுப்பு நடைபெறவேண்டும், தனி ஈழம் அமைய வேண்டும், ராஜபக்ச போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என உண்ணாவிரதப் பந்தலில் இருந்த மாணவர்கள் தெரிவித்தனர். இளைஞர் தீக்குளிப்பு: தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை நெற்குன்றத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு நெற்குன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட விக்ரம் என்ற இளைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபிடி, திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதையடுத்து கருத்தரங்கில் பங்கேற்ற அவரது நண்பர்கள் விக்ரமை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. "தீக்குளிப்பு வேண்டாம்": வைகோ - தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த விக்ரம் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச் செயலாளார் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.உயிரோடு இருந்து போராட வேண்டியவர்கள் இப்படி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றும் வைகோ கூறியுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19735:2013-03-22-12-39-28&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.