Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. பாலச்சந்திரன் அண்ணனை கொன்னுட்டாங்க, நாங்க ஏதாச்சும் செய்யனும்.. ஆவேசத்துடன் உருமிய சேலம் சிறார்கள் சேலம்: சின்னப் பைன் என்றுகூட பாராமல், எங்க பாலச்சந்திரன் அண்ணனை கொன்று விட்டார்கள். எங்க அண்ணன் சாகும்போது வீரமாகத்தான் இறந்திருக்காரு. நாங்க ஏதாச்சும் செய்யனும் என்று ஆவேசத்துடன் கூறியபடி ராஜபக்சேவுக்கு எதிராக பாலச்சந்திரன் படம் பிடித்து போராட்டம் நடத்திய சிறார்களைப் பார்த்து சேலமே சிலிர்த்துப் போனது. சலூன் கடை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழகமே கொந்தளித்துப் போய் நிற்கிறது. ஐடி நிறுவனம் முதல் ஐடிஐ மாணவர்கள் வரை அத்தனை பேரும் தங்களது உணர்வுகளை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் சின்னஞ் சிறார்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட் சிறார்கள் திரண்டு நின்று தங்களது பிஞ்சுக் குரலில் வீராவேசமாக போட்ட கோஷத்தைப் பார்த்து சாலையில் சென்றோர் ஆச்சரியமடைந்து நின்று விட்டனர். அனைவரும் பாலச்சந்திரன் படத்திற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு 'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் என முழக்கமிட்டனர். இந்தக் குழந்தைகளை ஒருங்கிணைத்தவர் தமிழமுதன். இவரும் ஒரு சிறுவன்தான். அந்த உணர்ச்சிச் சிறுவன் கூறுகையில் எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது? நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம் என்றார். இடிந்தகரையிலும் சிறார்கள் போராட்டம் அதேபோல கூடங்குளம் அருகே இடிந்தகரையிலும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான சிறார்கள் ,மாணவ மாணவியர் பாலச்சந்திரன் படத்தைத் தாங்கியும், முகமூடி அணிந்தபடியும் ஆவேசமாக கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினர். http://tamil.oneindia.in/news/2013/03/22/tamilnadu-kids-protest-against-rajapakse-salem-171997.html
  2. தமிழக மாணவர்களின் அடுத்தகட்ட போராட்டம் காங்கிரஸ்அரசிற்கு நெருக்கடிகொடுக்கும்! தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டம் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழகத்தில் இருந்து எந்த விதவருமானமும் மத்திய அரசிற்கு கிடைக்காதவாறு போராட்டத்தை நடத்தவுள்ளதாக மாணவர் ஒருங்கிணைப்பாளர் சி.தினேஷ் தெரிவித்துள்ளார் (ஒலிவடிவம்) மாணவர் போராட்டம் மிக எழுச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் சென்றுகொண்டிருக்கின்றது அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும் தொடர்ந்தும் இந்தியா தமிழ்மக்களுக்கு எதிரான போக்கையே கொண்டுள்ளது. இனப்படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சிதான் முழுக்கா காரணம் தெட்டத்தெளிவாகின்றது மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர் போராட்டமாக மாற்றியுள்ளார்கள். இன்றில் இருந்து தமிழகத்தில் இருந்து மத்திய அரசிற்கு செல்கின்ற எந்தவித வருமானமும் செல்லக்கூடாத வகையில் மாணவர்களும் பொதுமக்களும் தொழிலாளர்களும் அமைப்புக்களும் மத்தியஅரசிற்கு எந்திவித வரியினையும் செலுத்தவேண்டாம் என்று அறைகூவல் விடுக்கின்றோம் என்று மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இது காங்கிரஸ் அரசிற்கு மிகவம் நெருக்கடியினை உருவாக்கும் என்று நம்புகின்றோம் கடந்த நாட்களாக வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஒருகோடி மாணவர்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றோம் இதனை மத்தியஅரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இது கண்டனத்துக்குரியதொன்று புலம்பெயர் மாணவர்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவினை தெரிவித்துக்கொள்கின்றார்கள் புலம்பெயர் மண்ணில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுங்கள் அரசியல்ரீயில் ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராடவேண்டும் தமிழகத்தில் மாவட்டம்ரீதியில் ஒருங்கிணைத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம் என்று தமிழக மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் சீ..தினேஷ் தெரிவித்துள்ளார். http://www.sankathi24.com/news/28265/64//d,fullart.aspx
  3. 22.03- கிடைக்கப்பெற்ற 65 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் ராதா சிலம்பு பரமேஸ்வரி வவுனியா வீரச்சாவு: 22.03.2001 மேஜர் அமுதன் ஆறுமுகம் ஜெயச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.2000 லெப்டினன்ட் விஜயகார்த்திக் பாக்கியராஜ் விஜயராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.2000 லெப்டினன்ட் முரளி வீரபத்திரன் பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1999 கப்டன் நிலவன் இரத்தினம் சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1999 மேஜர் தேவநேசன் ஆனந்தம் கேசவன் மன்னார் வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் திவாகரன் ஜோசப் பிரதீபராஜ் மன்னார் வீரச்சாவு: 22.03.1999 லெப்டினன்ட் நிரோ இராசன் திருவேணி முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் கீரன் மார்க்கண்டு புவனேந்திரன் அம்பாறை வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் கயல்விழியன் குருநாதபிள்ளை விஜயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1999 வீரவேங்கை ஜீவகாந் விஸ்வரத்தினம் இராசன் அம்பாறை வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் யோகரட்ணம் கணபதிப்பிளளை சிறிகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1998 கப்டன் துவாரகன் இரட்ணசிங்கம் சுரேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1998 லெப்டினன்ட் சிந்துஜன் செல்வராஜா ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1998 2ம் லெப்டினன்ட் அன்புக்கினியவன் இராசதுரை இராசரத்தினம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1997 லெப்டினன்ட் இசையமுதன் பூபதி வலன்ரைன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1997 வீரவேங்கை சங்கிலியன் கோடீஸ்வரன் கஜவசந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1996 துணைப்படை லெப்டினன்ட் சுப்பிரமணியம் இராமையா சுப்பிரமணியம் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1994 துணைப்படை 2ம் லெப்டினன்ட் செல்வராசா ஆறுமுகம் செல்வராசா ஹற்றன், சிறிலங்கா வீரச்சாவு: 22.03.1994 கப்டன் பரஞ்சோதி சிவபாதசுந்தரம் அனுசீலன் திருகோணமலை வீரச்சாவு: 22.03.1992 வீரவேங்கை பிரதாப் அருணாசலம் மோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 கப்டன் பாஸ்கர் செபமாலை ரவிந்திரன் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சுகந்தன் இம்மானுவேல் பீற்றர் அழகுராசா யோகெந்திரன் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் டெனிக் சுந்தர் குகதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சுரேந்தர் பொன்னுப்பிள்ளை பாலதாஸ் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் பரணி செல்லத்துரை தவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் றொபேட் குலநாதன் குலதேவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சங்கர் செல்லக்குட்டி ரவிசங்கர் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1991 2ம் லெப்டினன்ட் பஸ்ரி பிரான்சிஸ் ஜேசுதாசன் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை கோணேஸ் சின்னத்தம்பி அன்னலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை உசான் தேவநாயகம் ஜோன்சன் பெனடிக் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை சூரியகுமார் கனகராசா லிங்கேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை மது இமானுவேல் சுரேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ஜெய்லான் இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ராஜீ செல்லத்துரை சிவநாதன் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பப்பா இராசலிங்கம் பத்மலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பரமசிவம் கிருஸ்ணகோபால் வசந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பாலசுந்தரம் முத்துப்பிள்ளை சிவலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை சேகரன் தர்மலிங்கம் இமானுவேல் ராஜேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை சந்திரகாந் காளியப்பு ராஜி திருகோணமலை வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை இரத்தினம் அந்தோனிப்பிள்ளை மரியநாயகம் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ஜெரோமி நடராசா சகாயராஜா மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை மதனன் முருகேசு கமலகாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை கலாதரன் விநாயகமூர்த்தி சிவனேஸ் திருகோணமலை வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ராவ் தோமஸ் பத்திநாதன் புத்தளம், சிறிலங்கா வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை உத்தமன் பழனியாண்டி வேலு தலவாக்கொல்லை, சிறிலங்கா வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை மணிமுடி பாலசிங்கம் சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பீற்றர் தெய்வேந்திரன் தவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை கலைச்செல்வன் துரைசிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சாந்தன் சின்னத்துரை சிவலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1990 வீரவேங்கை விசைவீரன் (மந்திரி) அருளையா அருணேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1990 2ம் லெப்டினன்ட் கிர்மானி ஏகாம்பரம் உதயகுமார் யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.03.1989 கப்டன் சத்தியன் ஞானமுத்து சிவானந்தராசா தாண்டியடி, திருக்கோவில், அம்பாறை. வீரச்சாவு: 22.03.1989 கப்டன் கைலன் (கேதீஸ்) கதிர்வேலு முத்துராசா இத்திக்கண்டல், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 22.03.1989 2ம் லெப்டினன்ட் மேகன் சீனித்தம்பி தயானந்தன் கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 22.03.1989 லெப்டினன்ட் முஸ்தபா (சந்திரன்) சிங்கராயர் மரியதாஸ் சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.03.1988 லெப்டினன்ட் துர்க்கா கமலாதேவி சச்சிதானந்தன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. வீரச்சாவு: 22.03.1988 வீரவேங்கை றொபின் கந்தையா நாகரத்தினம் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.03.1987 லெப்டினன்ட் சஞ்சீவி (மீசை) செல்லப்பா கெங்காதரன் தெல்லிப்பளை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.03.1987 வீரவேங்கை வசந்தன் இராமையா யோகராசா கோணாவில், கிளிநொச்சி. வீரச்சாவு: 22.03.1987 வீரவேங்கை வினோத் ஆறுமுகம் வீரசிங்கம் வன்னேரிக்குளம், கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1987 வீரவேங்கை சிந்து தம்பிராசா லோகநாதன் ஏறாவூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 22.03.1985 வீரவேங்கை பரணி சீவரட்ணம் டேவிட் அற்புதராஜன் அமிர்தகழி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 22.03.1985 வீரவேங்கை சீலன் ஆறுமுகம் வேதாரணியம் செட்டிகுளம், வவுனியா. வீரச்சாவு: 22.03.1985 வீரவேங்கை சஞ்சீவி தங்கராசா நடராசா செட்டிகுளம், வவுனியா வீரச்சாவு: 22.03.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 65 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  4. கோவையில் மாணவர்கள் ,மாணவிகள் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரயில் மறியல் கோவையில் மாணவர்கள் ,மாணவிகள் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரயில் மறியலில் ஈடுபட்டனர் வழமைக்கு மாறாக பெண்கள் இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .200இற்கு மேற்பட்ட மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். http://www.sankathi24.com/news/28253/64//d,fullart.aspx
  5. மதிப்பிற்குரியீர், வணக்கம். தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாளை (22.03.2013) காலை 11.30 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (சென்னை பிரஸ்கிளப்பில்) பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் போராட்டத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படவுள்ளது. (சீ.தினேஷ்) 97911 62911 ஒருங்கிணைப்பாளர் Loyolahungerstrike போராட்டம் , மாணவர் போராட்டம்தான் அது அந்த வடிவம் பெற்றது இந்த வடிவம் பெற்றது என்று எதுவும் இல்லை . எதுவும் மாறவில்லை . ஒரு குழுவாக கூடும் மாணவர்கள் அவர்களிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வார்கள் . அதை செய்து கொண்டு உள்ளார்கள் . மானவர்களிற்கு தெரியும் அவர்கள் பகுதியில் உள்ள உள்ளூர் நிலைகளிற்கு ஏற்ப எப்படி போராடுவது என்று. மத்தியமாக கூடி ஒரு மிகபெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் வெகு விரைவில் வரும் இன்னும் சில நாட்களில் மாணவர்கள் அனைவர்களிடமும் இது பற்றி பேசுவோம் . எந்த மாணவர் குழுவும் தொய்வடைந்து விடவில்லை . இப்போதுதான் Warm-up ஆகி உள்ளார்கள் . அந்த முதல் நிலை போராட்டத்தை மட்டுமே தமிழகம் இப்போது பார்த்து உள்ளது . மாணவர்களின் முழு சக்தி இன்னமும் பிரயோகபடுத்தபடவில்லை . அதற்கான கால சூழல் மிக அருகில் வருகிறது. Loyolahungerstrike Total Likes 24,076
  6. மற்றவர்களுக்கு முன் மாதிரியான மாணவர்கள்! ********************************************* இலங்கை பிரச்னை தொடர்பாக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்று (மார்ச் 20) காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது. அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர். அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர். Loyolahungerstrike உண்ணாவிரத மேடையில் பேசியதெல்லாம் கேட்டு, எதிரில் இருந்த தன்னுடைய தேநீர்கடையை மூடிவிட்டு, மாலைவரை உண்ணாவிரதத்தில் இருந்து, பின் பேசும்போது "அங்க இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா மக்கள்? இந்த சின்னபுள்ளையையா கொன்னாங்க? என் மகன் மாதிரியே இருக்கான்" என்று அழுத மல்லிகா அக்கா... Loyolahungerstrike IIT BOMBAY STUDENTS STAGING PROTEST : HUNGER STRIKE YESTERDAY 20.03.2013 Loyolahungerstrike Loyolahungerstrike 23,582 Total Likes Total Likes
  7. Loyolahungerstrike திருப்பூரில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் 500 மேல் மாணவர்கள் கலந்து கொண்டு இருக்கும் பேரணி மாணவர் முழ க்கம் " இலங்கை என்றால் இனிக்குதா தமிழ்நாடு நா கசக்குதா " Loyolahungerstrike
  8. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்ககோரி புதுக்கோட்டை இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இலங்கை அரசு மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும். தனித் தமிழ் ஈழமே ஈழத் தமிழர்களின் நிரந்தர தீர்வை தரும். அதனால் தனித் தமிழ் ஈழம் அமைய ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று புதுக்கோட்டையில் இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். - இரா.பகத்சிங் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94864
  9. காக்கிகளின் நக்கல் : போராடும் மாணவர்கள் கொந்தளிப்பு சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரேயே உள்ளது சேலம் மத்திய தபால் நிலையம் .இங்கே குவிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்தனர். அரசு கலை கல்லூரி மாணவர் பகத்சிங் தலைமையில் திரண்ட மாணவர்கள் 'எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் ஈழ ரத்தம் எங்கள் சொந்தம்' 'ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவி' என முழங்கினர்...அருகேயே இருந்த சேலம் டவுன் காவல்நிலைய உடனடியாக அங்கே குவிந்தனர். 'வயசு பசங்க காலேஜ கட் அடிச்சமா,சினிமா,பார்டின்னு போனமான்னு இல்லாம இங்க வந்து போராடிகிட்டு என்ன பசங்க நீங்க' என சில காக்கிகள் அசால்ட்டாக பேச கொந்தளித்துவிட்டனர் மாணவர்கள். ஆய்வாளர் சூரியமூர்த்தி போராடிய மாணவர்களை பார்த்து 'அனுமதி வாங்காம செய்றீங்க இது அபன்ஸ்' என்க 'நாங்க முறைப்படி அனுமதி கேட்டோம் நீங்க தரல அதான் நாங்களா போராட உட்கார்ந்துட்டோம். எங்கள் ரத்த உறவுகள் அங்கே துடித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த முறையும் அவர்களை கைவிட்டால் எங்கள் மனசாட்சியே எங்களை அணுஅணுவாய் கொன்றுவிடும் எனவே நாங்கள் ஓயமாட்டோம்' என எழுச்சியாக பேச, அந்த சாலையை கடந்தவர்கள் நின்று மாணவர்களுக்கு ஆதரவாக 'ஏம்பா இந்த வேகாத வெயில்ல அவங்க போராடுறத பார்த்து நாமெல்லாம் சந்தோசபடனும் அதவிட்டுட்டு இப்படி இழுத்துட்டு போக கூடாது' என காவல்துரையிடமே துணிச்சலாக பேசினர். ஒரு பெரியவர் 'ஏப்பா உடனே பத்ரிக்கைகாரங்கள கூப்பிடுங்க இந்த பசங்கள ஏதாவது பண்ணிட போறாங்க நம்மளால முடில அந்த பசங்களாவது செய்யட்டும் ஆனா பத்ரமா இருந்தா தான் எதையும் செய்ய முடியும்' என்றார் அன்போடு.... மாணவர்கள் போராட்டம் அனைத்துதரப்பட்ட மக்களின் ஆதரவோடு வீரியமாக பரவி செல்கிறது . படங்கள்: இளங்கோவன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94848
  10. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தணிக்கையாளர்கள் போராட்டம் (படங்கள்) இலங்கையின் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இன்று தணிக்கையாளர்கள் மற்றும் உடனிகழ் தணிக்கையாளர் மாணவர்கள் இணைந்து கண்டன போராட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அமெரிக்கா முதன்முதலாக கொண்டு வந்த திருத்தம் செய்யப்படாத தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக கூறினார். இதில் தமிழர்கள் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94847
  11. Indian Students Supporting TN Students protest for Tamil EELAM Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian students started supporting Tamil Nadu students Protest seeking justice for Srilankan Genocide. Dedicating this video to all the freedom fighters and people of Tamil EELAM .. - முகநூல் -
  12. 21.03- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் குகன் சிறிஸ்கந்தராசா சதீஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 21.03.2001 மேஜர் தென்றல் விநாயகம் மகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.2001 மேஜர் கலா (நாவுக்கரசி) மார்கண்டு காஞ்சனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.2001 கப்டன் மறவன் சின்னத்தம்பி கதிர்காமநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.2001 எல்லைப்படை வீரவேங்கை ராசா குலசேகரம் தங்கவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.2001 எல்லைப்படை வீரவேங்கை ரவி தம்பிஐயா ரவிராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.2001 2ம் லெப்டினன்ட் ராதா காத்தமுத்து சின்னமுத்து மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.2000 கப்டன் யாழ்வேல் ஆழ்வார்பிள்ளை சரவணபவான் கிளிநொச்சி வீரச்சாவு: 21.03.1999 லெப்டினன்ட் மதீபன் இராசதுரை சபேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1999 லெப்டினன்ட் ஐயா பஞ்சாயுதம் நீலகண்டன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1998 2ம் லெப்டினன்ட் சியாமணி யோசப் றோட்டணி மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1998 லெப்டினன்ட் பூமகள் பெருமாள் சியாமளா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1997 லெப்டினன்ட் வாகரையான் (நேசன்) சண்முகம் குகனேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.03.1997 கப்டன் குமரப்பா புவிராஜசிங்கம் தயாளியன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1996 கப்டன் அன்பன் சிறிதரன் சாந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 21.03.1994 லெப்டினன்ட் கம்பன் இரத்தினம் யோகேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 21.03.1994 லெப்டினன்ட் ஜெயக்குமார் பொன்னுத்துரை உதயகுமாரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.03.1994 கப்டன் நம்பி (சுட்டா) பூபாலப்பிள்ளை லோகிதராஜா திருகோணமலை வீரச்சாவு: 21.03.1993 கப்டன் முடியரசன் (ரவி) சித்திரவேல் முத்துலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 21.03.1993 லெப்டினன்ட் மெய்யப்பன் (அன்ரன்) சுப்பையா நாகேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 21.03.1993 லெப்டினன்ட் மறைக்கோன் (விஸ்வநாதன்) கந்தவனம் நிமலநாதன் திருகோணமலை வீரச்சாவு: 21.03.1993 லெப்டினன்ட் உதயன் சிவகுமாரசாமி நிர்மலதாஸ் திருகோணமலை வீரச்சாவு: 21.03.1993 மேஜர் ஈஸ்வரன் கந்தசாமி லிங்கேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1992 வீரவேங்கை அலன் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1992 வீரவேங்கை ராமமூர்த்தி (மேகன்) செல்லத்தம்பி பரமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1992 வீரவேங்கை குகதாஸ் பொன்னுத்துரை சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1992 லெப்டினன்ட் சுதாகர் தில்லையம்பலம் சிதம்பரம் வவுனியா வீரச்சாவு: 21.03.1992 மேஜர் சதா நடராஜப்பெருமாள் திலீப்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 கப்டன் அப்பன் சண்முகம் சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 லெப்டினன்ட் நேதாஜி இரட்ணலிங்கம் மங்கஜேவரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 லெப்டினன்ட் கஸ்ரோ நடேசபிள்ளை செந்தூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 லெப்டினன்ட் சைமன் நாகராசா மோகனரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 2ம் லெப்டினன்ட் நாதன் ப.சுந்தாராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.03.1991 வீரவேங்கை சத்தியமலர் தேவமலர் டேவிட் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.03.1991 வீரவேங்கை பாணன் பாலசிங்கம் குணபாலன் மன்னார் வீரச்சாவு: 21.03.1991 வீரவேங்கை சயந்தன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 வீரவேங்கை காந்தன் செல்லையா செல்வகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 வீரவேங்கை பீற்றர் சத்தியநாதன் சிறீஸ்கந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.03.1991 வீரவேங்கை றியாஸ் இராமலிங்கம் கணேஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.03.1991 லெப்டினன்ட் சிறைவாசன் தவமணிநாயகம் முரளிகிருஸ்ணா மல்லாகம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.03.1989 வீரவேங்கை நாயுடு (இயற்பெயர் கிடைக்கவில்லை) மல்லாகம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.03.1989 வீரவேங்கை பெரியராஜன் (ராஜன்) வி.சந்திரராசா விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா. வீரச்சாவு: 21.03.1987 வீரவேங்கை ஜெகன் இராசையா துரைசிங்கம் தம்பலகாமம், திருகோணமலை. வீரச்சாவு: 21.03.1986 வீரவேங்கை நடா குழந்தையன் நடராசா கைதடி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 44 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  13. சிறீலங்கா மீது ஜ.நா நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ் நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நெதர்லாந்து இளையோர்கள் போராட்டம் இன்று 20-03-2013 புதன்கிழமை நெதர்லாந்தில் டென்காக் என்னுமிடத்தில் பாராளுமன்றத்தின் முன்பாக நெதர்லாந்து தமிழ் இளையோர் சகாப்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளையோர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள்மேல் சிங்களஅரசு கட்டவிழ்த்து விட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஜக்கிய நாடுகள் சபை தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கு வழிவகுக்கக் கோரியும் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19692:2013-03-20-19-50-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  14. சென்னை தமிழர் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மாபெரும் மாணவர் தொடர்முழக்க போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது . ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் , தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு கோரியும் , இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கோரியும் இன்று மாணவர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . இந்த போராட்டதிற்கு பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர்கள் குவித்தனர் . தொடக்கத்தில் குறைவாக இருந்த மாணவர்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல பெரும் கூட்டமாக ஒன்றிணைந்தனர் . இதை பார்த்த காவல் துறையே மிரண்டனர் . பின்பு மாநிலக் கல்லூரி மாவர்கள் சாலையில் பெரும் திரளாக ஓடி வந்து காந்தி சிலை அருகே அமர்ந்து சாலை மறியல் செய்தனர் . அவர்களை காவல்துறை சமாதனப் படுத்தி கடற்கரையில் உள்ள ஒன்று கூடலுக்கு அனுப்பி வைத்தனர் . அதன் பிறகு தமிழக முதல்வரும் அந்த வழியாக வாகனத்தில் செல்லும் போது மாணவர் போராட்டத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்தபடி சென்றார் . மாணவர்கள் கடும் வெயிலிலும் தொடர்ந்து முழக்கமிட்ட வாறு போராட்டம் நடத்தினர் . சோர்வுற்ற மாணவர்களுக்கு மற்ற சமூக ஆர்வலர்கள் நீர் , மோர் போன்றவற்றை கொடுத்து உதவினர் . உணவு நீர் இல்லாமல் பல மாணவர்கள் சுடும் மணலில் உட்கார்ந்து போராட்டடம் நடத்தியது அவர்களின் இன உணர்வையும் ஈழ விடுதலை வேட்கையையும் காட்டியது . இம்மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் அரசியல் கட்சி சாராத திரு பழ நெடுமாறன் அய்யா , இயக்குனர் புகழேந்தி , கௌதமன், கவிஞர் தாமரை போன்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் . மாணவர் எழுச்சி சிறுதளவும் குறையாமல் இறுதி வரை இருந்தது . தமிழீழம் அமையாமல் மாணவர் நாங்கள் ஓயமாட்டோம் என்று மாணவர்கள் சூளுரைத்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13474%3Achennai-merina-100&catid=36%3Atamilnadu&Itemid=102 இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் ! எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சென்னை பாண்டி சாலை சம்பித்தது -முகநூல்-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.