Everything posted by உடையார்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனின் திருக்குலமே வருக அரச குரு குலமே வருக(2) கரையில்லா கருணையில் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடியே மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து பணிவோம் அவர் பதமே 1. தாயின் கருவில் தோன்றும் முன்பே தயவாய் நம்மை தெரிந்தார் தனிப்பெரும் கருணையில் நம் பெயரெல்லாம் தம் கையில் பொறித்து வைத்தார் தாயாக நாளும் சேயாக நம்மை கண்போல காக்கின்றார் இந்நாளில் நாமும் ஒன்றாகக்கூடி பண்பாடி பணிந்திடுவோம் 2. அரணும் கோட்டையும் கேடயமானவர் அவர் புகழ் பாடிடுவோம் வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர் அவரடி பணிந்திடுவோம் வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம் அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கும் உரைத்திடுவோம்
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள்
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போதும் எம்மைக் “குறிதவறாத தாவீதாய்” ஆக்கினர் எம் வேவு வீரர்கள். வேவு வீரர்களாகப் பணியாற்ற எல்லோராலும் முடியாது. விடுதலைப் புலிகளிலும் எல்லோராலும் முடியாது. வேவு வீரனின் ஒவ்வொரு நாள் வாழ்வும், வாழ்வுக்கும் – சாவுக்கும் இடையேயான போராட்டம்; அந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நகர்வும் – ஒவ்வொரு அசைவும் அவனது உயிர் வாழ்விற்கான சாத்தியத்தையும் அசாத்தியத்தையும் மட்டுமல்ல, எம் போராட்டத்தின் புத்துயிர்ப்பையும், எம் மக்களின் புது வாழ்வையும் தீர்மானிப்பதாய் அமைந்தன. வேவுப் பணியில் ஈடுபடுபவர்களின் கடமை தனித்துவமான பல பண்புகளைக் கொண்டது. கடும் உழைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய உடல்வலு உள்ளவர்களாகவும், தொடர்ச்சியான – கடுமையான வாழ்க்கை முறைக்கு நின்றுபிடிக்கத்தக்க சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நிலவில்லாத முழு இரவில், நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் இடங்களை அடையாளம் கண்டு, மைல்க் கணக்கான தூரத்தைப் பாதைகளற்ற, பாதுகாப்பானது எனத் தீர்மானிக்கும் பகுதியால், நடந்து கடக்க வேண்டும். குறைந்தளவிலான நேரத்தில், முழு இருட்டில் பார்;ப்பவற்றை சரியானபடி விளங்கிக்கொள்ளத்தக்க அவதானிப்புத்திறன் வேண்டும். அரைகுறையாகத் தெரிபவற்றை வைத்து முழு முகாம் அமைப்பையும் மதிப்பிடக்கூடியளவிலான இராணுவ அறிவுடன், திட்டமிடலுக்கான ஆலோசனை வழங்கக்கூடியவாறும், திட்டத்தின் பாதகமான அம்சங்களை வெளிப்படுத்தும் அளவிற்குமான இராணுவ வல்லமை வேண்டும். இவ்வளவுடனும் இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமெனச் செயற்படுத்தும் மனப்பக்குவம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த நாள் வாழ்வுக்கான, அடுத்த மணிநேர வாழ்வுக்கான, அடுத்த கண வாழ்வுக்கான உத்தரவாதம் ஏதுமில்லாது தொடர்ச்சியான மன இறுக்கத்துடனான வாழ்வை, ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கொள்கைப் பிடிப்புடன், மன உறுதி கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். என்னதான் கடுமையான வாழ்க்கை எனினும், அதனை இயல்பானதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும், இலட்சியப்பற்றும்தான் அவர்களை இயக்கிக் கொண்டிருந்தன. உயிர்வாழ்வின் கடைசி அத்தியாயத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்த அவர்களின் பேச்சில் தொனிக்கும் நம்பிக்கை மட்டுமல்ல – நகைச்சுவையும் அலாதியானது! இப்படித்தான் ஒருமுறை எதிரி முகாமின் ஒரு பகுதியில் வேவு வேலையில் ஈடுபட்டிருந்தான் ஒரு போராளி. ஒருபகுதியில் எதிரிகண்டுவிட்டு அடிக்கத் தொடங்க, அதில் சுட்டுத்தப்பி வேறொரு பகுதிக்குப் போய்ச் சேர, அங்கும் எதிரிகள் கண்டு சுடத்தொடங்க…… அவற்றுக்குள்ளால் மீண்டுவந்து அடுத்தநாள் அதைப் பற்றிக் கதைக்கும் போது: “அப்பா அடிக்கிறார் என்று அம்மாட்டை ஓடினால், அம்மாவும் அடிச்சா எப்படி இருக்கும்? அப்படி இருந்தது” என்றவன், பலதடவை எதிரி முகாமுள்ளே அடிபட்டுத் தப்பி வந்து சேர்ந்தவன், ஒருமுறை வர முடியவில்லை; வரவில்லை. அவ் வேவு வீரர்களிடம் இருந்த பொறுப்புணர்வு அற்புதமானது. குறிப்பிட்ட இராணுவ நிலை மீதான தாக்குதலைச் செய்வதற்கான அணியினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு, தெரிந்தெடுத்த ஓரிரு வேவுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அவனது சிந்தனை எல்லாம் குறிப்பிட்ட அணியினரின் வெற்றி, மற்றும் வெற்றிக்கான பாதை திறப்பு என்ற வட்டத்தினுள் வந்துவிடும். ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கைக்காகத்தான் முதன் முதலில் எமது மகளிர் அணியினர் வேவு வேலையில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அனுபவம்மிக்க ஆண் போராளிகளின் வழிகாட்டலில் செயற்பட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் “ஏன் நாம் தனித்துச் செயற்படக்கூடாது” என்று குரலெழுப்பி, “மௌனமாய்ச் சிரித்த தலைவருடன் சண்டை போட்டு தனியான வேவு அணியினராக செயற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட ஆண் போராளி அணிகளுக்கான வழிகாட்டிச் செல்லும் பொறுப்பையும் திறம்படச் செய்தனர். “அந்தப் பிள்ளையள் இல்லை எண்டா அங்கால் பக்கத்தாலை சரியாகக் கஸ்டப்பட்டிருப்பம்” என்று, அவ்வணியின் தளபதி மனமாரச் சொல்லும் வண்ணம் திறம்படச் செயற்பட்டனர். பூநகரிச் சமரில் எமது மகளிர் அணியின் வேவுப் பிரிவினர் நால்வர் வீரச்சாவடைந்தனர். சம நேரத்தில் பலமுனைகளில் தாக்குதல் திட்டமிடப்பட்டதால், எல்லா முனைகளிலிருந்தும் ஒரேயடியாக வேவு நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு பகுதியில் அனுபவக் குறைவினாலோ, திறமைக் குறைவினாலோ வேலைகள் அரைகுறையாக இருக்கும்; அல்லது வேலைகளைப் பூரணப்படுத்தவென உள்ளே சென்ற வேவு வீரன் திரும்பி வராமலே மடிந்து விட்டிருப்பான். அந்த வேளையில் தனது வேலையைத் திறமையாக நிறைவு செய்து காத்திருப்பவனிடம் பொறுப்புக் கைமாறும். தான் பார்த்த எல்லா நிலைமையையும் புதிதாய் ஒருவனுக்கு ஒவ்வொன்றாய்க் காட்டிவிட்டு தனது புதியபகுதி நோக்கி நடப்பான் அந்தப் புலிவீரன். சில அணிகள் ஓரிரு வேவு வழிகாட்டலிலேயே நீண்டதூர நகர்வினை மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தான், அவன் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிப்பான். வேவு வீரன் ஒருவனுக்கு மைன்ஸ் வெடித்துக் கால் இல்லையென்றால்? என்ற கேள்விக்கு, “துண்டுபட்ட காலை இறுக்கிக் கட்டிவிட்டு என்னைத் தூக்கினால் நான் காட்டிச் செல்வேன்” என உறுதியாகப் பதிலளித்தனர் எமது வேவு வீரர்கள். மிகக் குறைந்த ஓய்வுடன் தொடர்ச்சியான பணியில் ஈடுபடும் வாழ்வில், தொடர்ந்து பல நாட்களுக்கு நல்ல உணவோ ஆறுதலான தூக்கமோ அவர்களுக்கு வாய்ப்பதில்லை. கையையும், காலையும் எறிந்துவிட்டு அவர்கள் படுத்திருப்பதைப் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கும்! இராத்திரி வேலை முடிந்து திரும்பி வந்து ‘மைப்’ வேலை எல்லாம் முடிந்து படுக்க நேரம் எப்படியும் பதினொரு மணியாகிப் போயிருக்கும். எழுப்பத்தான் வேண்டும், இப்ப எழுப்பினாத்தான் நேரம் சரியா வரும். எழும்பி எல்லா வேலையும் முடிந்து முதல் பார்த்ததில் உள்ள சந்தேகங்கள் எவை எனவும், புதிதாய் பார்க்க வேண்டியவை எவை எனவும் கேட்டு முடித்துவிட்டுப் புறப்படும் போது, அநேகமாய்ச் சூரியன் பூநகரிக்குப் பின்னால் மண்டைதீவுக்குள்ளே மறைந்து கொண்டிருப்பான். மெதுவாகச் சத்தமின்றி நகர வேண்டும். நிலையாய் நிற்பதற்கும் நகர்வதற்கும் இடையே வித்தியாசம் காணமுடியாதபடியான மெதுவான நகர்வு; சிறுதவறும் அவனையும் தோழர்களையும் ஆபத்துக்குள்ளாக்கும்இ அழித்துவிடும். முகாமின் வெளிக் காவலரண் வேலியை ஊடறுத்துச் செல்வதென்பது மிகவும் கடினமான பணி. ஒன்றன்பின் ஒன்றாக முட்கம்பிச் சுருள்களும் – நிலத்தின் மேல் அரையடி உயரமாய் முட்கம்பி வலைப்பின்னலும்; காலை வைத்தால் எடுக்க முடியாது. இதைவிட ஒவ்வொரு அடி வைக்கும் போதும் – அந்த இடமும் கண்ணிவெடியாய் இருக்கலாம் – படுத்திருந்து அங்குலம் அங்குலமாகக் கண்ணிவெடியைப் பரீட்சித்தபடி நகர வேண்டும். இராணுவ முகாமைச் சுற்றிய எல்லாப் பகுதியும் கண்ணிவெடிகளால் சூழப்பட்டிருக்குமென்பது சாதாரண விடயம்தான். ஆனால் நிலவில்லாத முழு இரவில், சத்தம் ஏதும் இன்றி இரகசியமாய், கண்ணிகளின் ஊடே ஊர்ந்து செல்வது என்பது, அதுவும் இயந்திரத் துப்பாக்கியுடனும், பளீரென மின்னும் ஒளி விளக்குடனும் காத்திருக்கும் எதிரிக்கு முன்னே நகர்ந்து செல்வது என்பது சாதாரண விடயமல்ல. படுத்திருந்து மெதுமெதுவாய் கையால் தொட்டுணர்ந்து, கண்ணிவெடி என நினைத்தெடுப்பது கல்லாய் இருக்கும்; கல்லென நினைத்து கவனமின்றி எடுக்க அது கண்ணியாய் இருந்து தொலைக்கும். வேவு வீரர்களுக்கு கண்ணிவெடி வெடிப்பது காலில் மட்டுமல்ல. இப்படித்தான் ஒருமுறை கம்பிச் சுருள்களுக்கிடையில் எதிரியின் மைன்ஸ் ஒன்று வெடிக்கிறது. வெளிச்சத்தில் தேடிய எதிரி முன்னேற முற்பட்ட போது, அழைத்துச் சென்ற பெண் போராளியை பத்திரமாய் அனுப்பிவிட்டுஇ குப்பி கடித்தான் ஒரு போராளி. இருளின் கவசத்தில் நகரும் புலியின் முன்னே, எதிரி. ரவையை மழைபோல் பொழியத் தயாரான இயந்திரத் துப்பாக்கியுடன்…… பளீரெனக் கண்களைப் பறிக்கும் ஒளியைப் பாய்ச்சித் தேடுவான். எதிரியின் ஒவ்வொரு காவலரணிலும் பிரகாசமான சிறு சிறுஇ ‘லைற்’ கள் இருந்தபோதும், முழு முகாமையும் சுற்றி இடையிடையே பெரியதும் பிரகாசமானதுமான லைற்களால் அடிக்கடி சுற்றி சல்லடை போட்டுத் தேடி அவதானிப்பான் எதிரி. அவற்றைவிடத் தனியாக ‘ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்கு’ நகர்ந்துகொண்டிருக்கும் ‘சுத்துச் சென்றிக்காரன்’ தனது பங்குக்கும் எல்லா லைற்களாலும் தேடியபடி போவான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாகதேவன்துறையில் ஒன்றும், ஆலடிச்சந்தியில் மற்றதுமாய், “பெரிய அரக்கனின் சூரியக் கண்கள் போல்” சுழலும் இரண்டு பெரும் தேடொளிகள். யாழ். குடாவின் மற்றக் கரையில் இரவுப் பயிற்சியில் கள்ளமடிக்கும் பெடியளை றெயினிங் மாஸ்ரரிடம் பிடித்துக் கொடுக்கவல்ல பிரகாசமான – அந்தச் சூரியக் கண்கள் திறக்கும்போது, அங்குள்ள முழு நிலவும் பகலாகும். இருளின் கவசம் அகன்று பறக்கும். ஒரு சாதகமான பாதையைக் கண்டுபிடிக்க வாரக்கணக்காகப் போராட வேண்டும். நகரும் பாதையில் மனித நடமாட்டத்திற்கான எந்தத் தடயத்தையும் விட்டுவிடக்கூடாது. வாரக் கணக்கில் போராடிக் கண்டுபிடித்த பாதையில் ஒரு சிறு தடயத்தை விட்டாலும் எதிரி உ~hராகிவிடுவான்; அந்தப் பாதை அடைபட்டுவிடும். அங்கே ஒரு எல்.எம். ஜீயோ ஜீ.பி.எம். ஜீயோ புதிதாக முளைத்துவிடும். கும்மென்ற இருட்டில், அவர்களுக்கு மட்டும் தெரிந்த குறிப்புக்களைப் பார்த்து, மணிக்கணக்காக நடக்க வேண்டும். வெளிப்படையாகத் தெரியத்தக்க எந்த அடையாளத்தையும் வைக்காது, மரத்தையும், மண்ணையும், புல்லையும் அடையாளப்படுத்தி நடக்க அதீதத் திறமை வேண்டும். எதிரி எங்கும் நிற்கலாம் – இரவின் முழு இருட்டை ஊடறுத்து நகர்பவனைக் காட்டும் ‘நைற்விசன்’ என்னும் இரவுப் பார்வைச் சாதனங்களுடன், ஆங்காங்கே சிறு குழுவாக எம்மவரை எதிர்கொண்டு காத்திருப்பான் – எதிரி. இருட்டுக் கவசத்தில் செல்லும் புலிவீரனை நோக்கி எதிரியின் துப்பாக்கி அதிரும். எதிர்பாராத வேளையில் எதிர் பாராத திசையிலிருந்து ரவை மழையாய்ப் பொழியும்; படுத்திருந்த அரக்கன் எழுந்துவிட்டது போல் தூங்கிக் கிடந்த எதிரி முகாம் உயிர் பெறும். எல்லாப் பொயின்ற்றுகளிலிருந்தும் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கும் போது, ஆள் இல்லையென நினைத்திருந்த பொயின்ற்றில் இருந்தும் எல்.எம்.ஜி. சடசடக்கும். “நல்லவேளை டம்மிப்பொயின்ற் என்று – குறூப்பை கொண்டு போயிருந்தா, நல்ல குடவை குடுத்திருப்பான்” என நினைத்தபடி ஓடிக்கொண்டிருக்கையில், பராலைற் வெளிச்சம் போதாதென்று போகஸ் லைற்றும் அடிக்கத் தொடங்கியிருப்பான். க்கியூ, க்கியூ என்று தலைக்கு மேலாலும், பக்கத்தாலும் காற்றைக் கிழித்துச் செல்லும் ரவைகளுக்கிடையே ஓடிவந்து பார்த்தால், சகதோழனைக் காணவில்லை. பயிற்சி முகாமில் கண்டது முதல் இன்றுவரை – இதோ இப்போது வரை – ஒன்றாய் வாழ்ந்த நண்பன், ஒரு கோப்பையில் உண்டு, பாயில்லாமல் ஒரு பற்றையில் உறங்கி ஒன்றாய் வாழ்ந்த நண்பனைக் காணவில்லை…… இது எம் நிலந்தான். ஆனால், எதிரி முகாமின் உள்ளேயே…… “உனக்கு காயம்பட்டு விட்டதா? எங்கேயடா நிக்குறாயென் தோழனே……” என்று குரல் வைத்துக் கூப்பிட முடியாது, காத்திருந்து பார்த்திருக்கும் வேளை கொடுமையானது. இன்னொரு வேளை “நீங்கள் இதில் நில்லுங்கள்; நான் உள்ளே போய் கிளியர் பண்ணிக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லிப் போவான் ஒரு தோழன். மரத்துடன் மரமாய், பற்றையுடன் பற்றையாய், புல்லுடன் புல்லாய், நிலத்துடன் நிலமாய், நீருடன் நீராகக் கலந்து மணிக்கணக்காக, நாட்கணக்காக – காத்திருந்து பார்த்திருந்து மீளும் வேவு வீரனை எண்ணித் தோழர்கள் காத்திருப்பர் – வெளியே. ‘என்ன இன்னும் காணவில்லை’ என நினைத்திருக்கும் வேளைஇ உள்ளே போனவன் வந்ததும் உண்டு; வராமலே விட்டதும் உண்டு. தனிமையில் தன்னையும், கையில் உள்ள ஆயுதத்தையும், கழுத்தில் உள்ள குப்பியையும் நம்பி ஆயிரம் பகைவன் உள்ள எதிரிப் பாசறைக்குள் தன்னந் தனியாய் நுழையும் வேவு வீரனின் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடும். நீரில் மூழ்கி, மழையில் தோய்ந்து, ஈரத்தில் ஊறி எல்லாம் ஈரமாய் நடக்கும் வேளை, அரப்புவைத்து முழுகவிட்டு, ஈரம் துடைத்து, தலைக்குப் பவுடரும் போட்டுத் தேய்த்துக் காயவிட்டு “சாப்பிடடா மோனை” என்று கொஞ்சும் அம்மா…… நினைவுக்கு வராமலா போவாள்! உடலெங்கும் நுளம்பு மொய்த்து கண், காது, மூக்கு என எங்கும் கடித்துத் தின்ன, கலைக்கவும் மாட்டாது குளிரில் நடுநடுங்கி வாடும்வேளை, சும்மா படுத்ததைக் கண்டு போர்வையால் மெல்லப் போர்த்து அன்பாய்த் தடவிப் போகும் அப்பா…… நினைவுக்கு வராமலா போவார்? அதற்கும் மேலாய், எல்லாவற்றிற்கும் மேலாய் இது எங்களின் நாடு, எம்மக்களின் பூமி என்ற நினைவு மேலோங்கும். கடுமையான பயிற்சியும், கடினமான முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை என அடிக்கடி உரைக்கும் தலைவனின் நினைவும் மேலோங்கும். “நீ இதில் நில், நான் உள்ளே போகிறேன் வெடிச்சத்தம் கேட்டால் நீ திரும்பிப் போ – நான் வருவேன்” என்று கூறிவிட்டுச் சென்று, வராமலே போய்விட்ட உயிர்த்தோழன் நினைவுக்கு வருவான். மெல்ல நகர்கையில் தடக்கி விழுத்திய வயலின் வரம்பு, ‘இப்ப முதல் உழவு உழுதிருக்க வேணும்……’ என்ற நினைப்பில் அவனை ஆழ்த்தும். சுதந்திரமாய் நீந்திக் குளித்த குளமும், ஏறிக் குதித்த மாமரமும் இன்று பகைவனின் பாசறையாய் ஆனதை எண்ணி நெஞ்சு கனக்கும். எங்களது தாய் மண்ணைப் போலவே அழகான யாழ்ப்பாணக் கடலேரி! அழகான அந்தக் கடலேரியின் உள்ளேதான் எத்தனை கொடுமையும், துயரமும்? நேரம் நீண்டு செல்லும். தண்ணீரில் நடந்தும்இ மிதந்தும், வலித்தும் செல்லும் வேவு வீரனின் எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றும். கத்தியுடன் வந்த பகைவனைப் பார்த்துக் கும்பிட்ட அந்த அம்மா “என் அம்மாவைப் போலொரு அம்மா” – வெட்டுண்ட தலையுடன் இந்தத் தண்ணீரில் தானே மிதந்தாள்? முத்தமிட்டு ‘டாட்டா’ காட்டிய சின்னவள் சொன்ன பொம்மையுடன் வந்த அப்பா – “என் அப்பாவைப் போலொரு அப்பா” – இந்தத் தண்ணீரில்தானே மிதந்தார்? “அப்பா எப்ப பொம்மையுடன் வருவார்?” என்ற பிள்ளையுடன் அம்மா கண்ணீரில் குளித்திருந்த போது, அப்பா இந்தத் தண்ணீரில்தானே கரைந்தார்? எங்களது சொந்தங்களும் உறவுகளும் கலந்து கரைந்த உப்புநீர், எம்மக்களின் குருதி கலந்த நீர்; குருதியுடன் உயிரும் கலந்த நீர். எம் மக்களின் குருதியும் உயிரும் கலந்ததாலோ அந்தத் தண்ணீரில் நனைகையில் புதிய உணர்வு பிறக்கிறது! “மேனியைத் தழுவும் தண்ணீரைத் தடவி, வாயில் எடுத்து மெதுவாய் உமிழும் போது…… உப்புக் கரிக்காது” யாழ். நீரேரிக்கும் எம் வேவு வீரர்களுக்கும் இடையேயான உறவு ஆழமானது. அன்பு கொள்வதும் கோபப்படுவதுமாய் அவர்களின் நட்பில் பல கதைகள்…… மாலை மென்னிருட்டில், தூரத்தே தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடி இடுப்பளவு தண்ணீரில் நடக்கத் தொடங்கும் போது, அந்தக் கடல் மகள்…… எங்கள் யாழ்ப்பாண நீர்நங்கை அற்புதமான அழகிதான்! கூட்டமாய்த் துள்ளும் திரளியும், வரிசையாய்ப் பறக்கும் கொக்குகளுமாய் அழகை ரசித்தபடி நடக்கையில், வழிமாறி வந்த பெரிய மீன் ஒன்று காலில் இடற, என்னவோ ஏதோவென்று பாய்ந்து விழுபவனை எல்லோரமாய்ச் சேர்ந்து தாட்டு மிதத்தி…… ‘றெக்கி’ வேலை முடிந்து பசியும் களைப்புமாய் உடல் சோர்ந்து, அதிகாலையில் பிறை நிலவைப் பார்த்தபடி திரும்புகையில், அவன் பேசாமல்தான் வருவான். என்னில் என்ன கோபமோ என்று, கடல் மகள் மெல்லக்குமுறி ஆர்ப்பரிக்க, இடுப்பளவாய் இருந்த நீர்மட்டம் மேலேறி, மேலே மேலே ஏறி, நுனிக்காலுக்கும் எட்டாத் தண்ணீராய் மேலெழுந்து நிற்கையில், கடல் மகளின் காதல் போய் எம்வீரர் தத்தளிக்கத் தொடங்குவர். முகாம் வேவுப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு திரும்பி வந்த எம் வேவு அணியினர், கடலில் தம் தோழனை இழந்த சோகத்துடன், கடல் மகள் மேல் கோபத்துடன் மீண்டதும் உண்டு. பௌர்ணமியும் அமாவாசையும், நிலவின் உதயமும் மறைவும் கடல் நீரேரியில் நிகழ்த்தும் மாற்றம் அற்புதமானது. நிலவின் உதயத்தில் அமைதியாய் இருக்கும் கடலேரி. நேரம் செல்லச் செல்ல, பெருங்கடலில் இருந்து மெதுவாக உள்ளே வரத் தொடங்கும் நீரோட்டம். ஆளை இழுக்கும் வேகம் பெற்று – உச்சவேகம் பெற்று, நீர்மட்டம் உயர்ந்து மெதுவாய்த் தணியும். பின்னர் நிலவு மறையத் தொடங்க கொஞ்சம் கொஞ்சமாய் கடலுக்குத் திரும்பும் தண்ணீர் வேகம் பெற்றுஇ உச்ச வேகம் பெற்றுத் தணிந்து, நிலவின் அடுத்த உதயத்தைப் பார்த்துத் தணித்திருக்கும் நீரோட்டம். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையானது, நீர்மட்டத்திலும், நீரோட்டத்திலும் ஏற்படுத்தும் ஜாலத்தைத் துல்லியமாய் ரசிக்கலாம் யாழ். கடலேரியில். இந் நீரேரி புலிவீரர்களுடன் மட்டுமல்ல, எம் தாயகத்தின் நிலத்துடன் மட்டுமல்ல, எம்மினத்தின் நீண்ட வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்தது. நீண்ட வரலாற்றின் பல்வேறு காலங்களில், அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டது எமது மண். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்ததும், பின்னர் அதிகார மாற்றம் ஏற்பட்டு ஈழத்தமிழர் சிங்களவர்களின் அடிமைகளாய் கைமாற்றமானதும், தொடர்ந்தும் தமிழர்கள் அடிமைகளாய் இருக்க மறுத்துப் போராடியதால் சிங்களவர்கள் தமது அதிகாரத்தை இந்தியர்களிடம் கைமாற்றிக் கொடுத்ததும்இ இந்தியர் சிங்களவர்களிடமே அதிகாரத்தைக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்ததும் என, தமிழீழ மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நீண்ட பெரும் தொடர் வரலாறு. போர்த்துக்கீசர் கையில் யாழ்ப்பாணமும், ஒல்லாந்தர் கையில் கொழும்புடன் பிறபகுதிகளுமாகப் பிடிபட்டிருந்ததாம். போர்த்துக்கீசர் கையிலிருந்த யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்து மன்னாரில் தரித்திருந்த ஒல்லாந்துப்படை, அடம்பன் வழியாக பூநகரி வந்து, பூநகரியில் இருந்து இந்த ‘யாழ் நீரேரி’யூடாகச் சாவகச்சேரி வந்து, பின்பக்கத்தால் போர்த்துக்கீசரை மோதி அழித்து, யாழ்ப்பாணத்தைப் பிடித்து தமிழர் மீதான அடிமைக் கைமாற்றம் நிகழ்ந்ததாம். எம்மை அடிமைகொள்ள வந்த அந்தியப்படை நடந்த அதே நீரேரியில், எம்மக்களை விடுவிக்க இன்று எம் வேவு வீரர்கள் நடக்கிறார்கள். எம்மை அடிமைகொள்ள வந்த பகைவன் நடந்த பாதையில், எம் நாடு எமக்கே சொந்தம் என்ற இறுமாப்புடன் எம் வீரர்கள் நடப்பது கண்டு, யாழ். நீர்நங்கை சிரிக்கிறாள். அன்று பகைவனைப் பார்த்து அஞ்சி ஒடுங்கி, அழுது நடுநடுங்கி வாழ்ந்த எம் பெண்டிரின் பேத்தியின் பேத்திகள், இன்று நிமிர்ந்த நெஞ்சுடன் வேவுப் புலி வீரராய்ப் பகைவனைத் தேடிப் புறப்படும் காட்சி கண்டு, யாழ். நீர்நங்கை சிரிக்கிறாளோ! அந்த யாழ். நீர்நங்கை எல்லாம் அறிந்தவள். பகைவனின் கரையில் ஏறிய புலிகளில் எதிரியின் துப்பாக்கி தீ உமிழ்ந்ததும், பக்கம் ஒருவராய் நீரில் வீழ்ந்து சரிந்த எம் வீரரில் ஒருவனுடல் பகைவன் கையில் வீழ்ந்ததும். “அது எது” வென நெருங்கிய எம் மீனவர், “ஐயோ எம்பிள்ளை” எனத் துடித்துத் தூக்கியதும் இந்தக் கடல்மகள் அறிவாள். தூரத்தே எதிரி சுடும் சத்தம் கேட்டு, அது எதற்கோ……? எம்மவரைக் கண்டு சுட்டானோ……? போன எம் தோழன் வீழ்ந்துவிட்டானோ……? எனக் கலங்கிக் காத்திருந்து, காலைவரைக் காத்திருந்து…… மிதந்து வந்த தோழனை அள்ளி எடுத்தழுததும், மீண்டு வந்த தோழனை அணைத்து ஆடி மகிழ்ந்ததும், இந்தக் கடல்மகள் அறிவாள். வெற்றிலைக்கேணி, வளலாய், மண்கிண்டிமலை, பூநகரி என எம் ஒவ்வொரு வெற்றிக்கும் வித்திட்டவர்கள் எம் வேவு வீரர்கள். எம் தாயகத்தைச் சிதைத்தழிப்போம் எனச் சபதமிட்டு, யாழ் நகரைப் பிடிக்கவெனத் திட்டமிட்டுச் செயற்படுத்த முனைந்த வடபகுதியின் படைத்துறைத் தலைமையை, அராலியில் வைத்து அழித்தொழித்தவர்கள் எம் வேவு வீரர்களே. குறிப்பாக தமிழீழ நாட்டின் பெருவெற்றியாய் அமைந்த ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் வேவு வீரர்களின் பங்கு மகத்தானது. வெற்றிலைக்கேணி வெற்றிக்கு வித்திட்ட சிவாஜி. மண்கிண்டிமலையின் வரலாற்றுக்கு வழிகாட்டிய றொகான், ரமணன், பனம்பாரன். பதவியா கொங்கேவேயவின் வெற்றிச்சிற்பிகள் மழலேஸ், நித்தி. பூநகரி கேணல் மீதான கண்ணிவெடிக்கு தர்மேந்திராவுடன் கண்ணிவெடி சுமந்த குருவேல் என்று, பூநகரி வெற்றியில் வித்தான வேங்கைகள் பற்பலர். அவர்களது முயற்சியால், அர்ப்பணிப்பால் இன்று எம் தாயகம் வெற்றிக்களிப்பில் மிதக்கிறது. வீழ்ந்த வேங்கைகளின் தோழர்கள் தம்புதிய இலக்குகளை நோக்கி, அதே இருளின் கவசத்தில், அதே தேடொளிக்கு மறைந்து நகர்கின்றார்கள். இலக்கு புதியது, கையில் உள்ள ஆயுதம் புதியது, அவர்களது அனுபவமும் புதியது. ஆனால் நினைவில் மட்டும் அவர்களது அதே தோழர்களும், அதே இலட்சியமும் தான்! கப்டன் ராமன் ஏரம்பமூர்த்தி டேவிட் கன்னங்குடா, மட்டக்களப்பு 25.03.1974 – 05.01,1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவு. லெப்டினன்ட் தமிழ்மறவன் / வீரபாண்டியன் மேகவண்ணன் பூசங்கர் ஒலுமடு, வவுனியா 27.05.1975 – 24.08.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடக் கடற்படை முகாமை வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. லெப்டினன்ட் மழலேஸ்வரன் / மழலேஸ் செல்லத்தம்பி விநாயகர் நெடுங்கேணி, முல்லைத்தீவு 12.06.1972 – 24.08.1993 வன்னியில் நடாத்தப்பட்ட கோன்கோவேய மினிமுகாம் தகர்ப்பிற்கு சிறப்பாக வேவு பார்த்தமைக்காகத் தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். மண்கிண்டிமலை முகாம் மீதான “இதயபூமி 01” தாக்குதலுக்காக சிறப்பாக வேவு பார்த்து, வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதிக்கு வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. லெப்டினன்ட் ரட்ணேஸ் / ரட்ணம் சிறிதர் உமாச்சந்திரன் பிரதான வீதி, மன்னார். 07.03.1973 – 17.08.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியிலுள்ள பந்தலடி முகாமில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் கெங்காதரன் / கங்கா கண்ணையா முத்துக்குமார் பாரதிபுடம், மட்டக்களப்பு 03.07.1970 – 22.02.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடாப் பகுதியை வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. லெப்டினன்ட் ரவிக்குமார் சிவகுரு யுவராஜா கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு 19.09.1970 – 30.05.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதி வேவுவேலையை திறம்படச் செய்தவர். பின்னர் வேவுக்காக சென்றபோது மைன்ஸ் வெடித்ததால் குப்பி கடித்து வீரச்சாவு. லெப்டினன்ட் பத்மசீலன் அழகையா காந்தரட்ணம் ஏறாவூர், மட்டக்களப்பு 09.03.1973 – 15.06.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் இளந்தேவன் / இளங்கோ தர்மலிங்கம் சிறிதரன் பூநகரி, மன்னார் 15.07.1970 – 07.091993 இவர் 1992ம் ஆண்டு இடம்பெற்ற சங்குப்பிட்டி – பூநகரி பாதையிலுள்ள “றவுண்டபோட்” பகுதியிலான தாக்குதலுக்காக சிறப்பாக வேவு பார்த்தவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி பல பகுதிகளையும் திறமையாக வேவு பார்த்தவர். பூநகரி முகாமினுள் ஊடுருவி வேவு பார்த்துவிட்டு திரும்பும்போது வீரச்சாவு. லெப்டினன்ட் செல்வன் / ஆனந்தன் முருகேசுப்பிள்ளை சரவணபவன் கலட்டி, யாழ்ப்பாணம் (காரைநகர்) 29.09.1975 – 09.091993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கித் தாக்குதலில் வீரச்சாவு. கப்டன் கதிரவன் / றொகான் வீரப்பு சந்திரன் சேமமடு, வவுனியா 31.07.1973 – 10.09.1993 லெப். கேணல் சுபன் தலைமையிலான பள்ளிக்குடாப் பகுதி 62 காவலரண்களின் தகர்ப்பில் சிறப்பாக வேவு பார்த்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். மண்கிண்டிமலை மீதான “இதயபூமி 01” நடவடிக்கைக்காக திறமையாக வேவு பார்த்து, வெற்றிக்காகப் பெரும் பங்காற்றியவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. 2ம் லெப்டினன்ட் பனம்பாரன் தங்கராசா சதீஸ்வரன் கந்தர்மடம், யாழ்ப்பாணம் 20.04.1976 – 09.09.1993 மண்கிண்டிமலை மீதான “இதயபூமி 01” தாக்குதலுக்காக வேவு பார்த்தவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கி தாக்குதலில் வீரச்சாவு. லெப்டினன்ட் சிவம் சின்னையா கமலேஸ்வரன் கோப்பாய், யாழ்ப்பாணம் (வளலாய்) 17.05.1969 – 09.09.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கி தாக்குதலில் வீரச்சாவு. கப்டன் ஆராமுதன் / நிரேஸ் குலவீரசிங்கம் தேவபாலன் மீசாலை, யாழ்ப்பாணம் 16.09.1972 – 23.09.1993 வளலாய் இராணுவ வேலியைத் தாக்கியழித்தமைக்கான வேவு, மாதகலில் இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலுக்கான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாமை வேவு பார்த்துவிட்டுத் திரும்புகையில் சங்குப்பிட்டி – கேரதீவு கடலில் வீரச்சாவு. கப்டன் அருளரசன் கணேசன் கருணாநிதி களுதாவளை, மட்டக்களப்பு 10.09.1974 – 13.10.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடா முகாமையும், கடற்கரை பகுதியையும் சிறப்பாக வேவு பார்த்து பூரணப்படுத்தியவர். பள்ளிக்குடா பகுதிக்குள் வேவுக்காக ஊடுருவிச் செல்லும்போது வீரச்சாவு. லெப்டினன்ட் செங்கண்ணன் / சத்தியராஜ் முருகேசு திராவிடமுத்து 15ம் கிராமம், அம்பாறை 09.11.1973 – 24.10.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் நிலவேந்தன் / நடேஸ்வரன் சுப்பிரமணியம் கண்ணன் புலோலி, யாழ்ப்பாணம் 26.05.1974 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடம் முன்னணிக் காவலரண்களை வேவு பாத்ததுடன், தாக்கல் அணிக்கான வழிகாட்டியாக்க வீரச்சாவு. கப்டன் நிரஞ்சன் பாபு இராஜசிங்கம் வற்றாப்பளை, முல்லைத்தீவு 25.07.1972 – 12.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக கறுக்காய் பகுதியிலும், நாகதேவன்துறையிலும் வேவு நடவடிக்கையிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாக செயற்பட்டவர். கப்டன் துளசிராம் சின்னமணி தாமரைச்செல்வி கிளிநொச்சி (பருத்தித்துறை) 17.08.1974 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முன்னணிக் காவலரண் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், ஆண்களின் தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்களில் இருவரும் ஒருவர். லெப்டினன்ட் திண்ணியன் / ரங்கா கணபதிப்பிள்ளை கருணாநிதி களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு 13.08.1971 – 24.10.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் நித்தி துரைராஜசிங்கம் சுந்தரேஸ்வரன் நெடுங்கேணி, முல்லைத்தீவு 25.02.1975 – 30.10.1993 மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீதான “இதயபூமி 01” நடவடிக்கைக்கான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதி இராணுவ முகாம் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. கப்டன் குருவேல் சற்குருதாசன் செல்வநேசன் பாரியாரிகண்டல், மன்னர் 16.12.1970 – 11.11.1993 பூநகரி பகுதியில் ஊடுருவி கேணல் சித்திரப் புஞ்சிகேவா மீது நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். லெப். கேணல் சுபன் தலைமையில் நடாத்தப்பட்ட பள்ளிக்குடா காவலரண்கள் 62 மீதான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் மீதான வேவுடன் வழிகாட்டியாகவும் சென்றவர். லெப்டினன்ட் மகிழினி அருள்வாசகம் சகாயபாமா செபஸ்ரியார் கோவிலடி, யாழ்ப்பாணம். 30.04.1974 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் மைனா / மணி செல்லையா வசந்தி புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு 09.10.1976 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண்கள் மீதான வேவிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் இளவரசி செல்லையா கலாநிதி ஜெயந்திநகர், கிளிநொச்சி 24.08.1968 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண்கள் மீதான வேவிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் அழகநம்பி / ரோமியோ கந்தசாமி செந்தில்நாதன் கொக்குவில், யாழ்ப்பாணம் 17.09.1976 – 13.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடம் பகுதியில் வேவு பார்த்ததுடன், தாக்குதல் உதவி அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் செய்யவன் / நேரு கணபதிப்பிள்ளை தங்கரூபன் பெரியப்பளை, யாழ்ப்பாணம் 13.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாம் வேவு நடவடிக்கையிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் ரமணன் சிவஞானம் சிவபாலன் பன்னாலை, யாழ்ப்பாணம் 01.04.1975 – 13.11.1993 மண்கிண்டிமலை முகாம் மீதான தகர்ப்பிற்கான “இதயபூமி 01” நடவடிக்கைக்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு, தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். மேஜர் செம்பியன் / சிவாஜி சின்னத்தம்பி குமரலிங்கம் செம்பியன்பற்று, யாழ்ப்பாணம் 25.02.1974 – 13.11.1993 கட்டைக்காடு மினிமுகாம் தகர்ப்பிற்கான வேவிற்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் சிறப்புப்பரிசு பெற்றவர். வளலாய்ப் பகுதியில் இராணுவ வேலியைத் தாக்கி அழிப்பதற்கான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடாப் பகுதி வேவு; பின்னர் வில்லடி பிரதான கட்டளை முகாம் மீதான வேவுடன் பிரதான வழிகாட்டியாகவும் சென்றவர். கப்டன் முகுந்தன் / கிருமானி பிரான்சிஸ் றொபேட் வின்சன் குருநகர், யாழ்ப்பாணம் 29.08.1973 – 30.11.1992 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியை வேவு பார்த்துவிட்டுத் திரும்பும்போது வீரச்சாவு. “கெரில்லாப் போர் முறையில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த நாம், இன்று பாரிய படைத்தளங்களைத் தாக்கி அழிக்கும் சக்தி பெற்றவர்களாக வளர்ச்சி கண்டுள்ளோம். இந்த அபாரமான முன்னேற்றத்திற்கு வேவுப்பிரிவினரின் பங்கு முக்கியமானது. மிகவும் கஸ்டமானதும், மிகவும் சாதுரியமானதும், மிகவும் ஆபத்து நிறைந்ததுமான வேவுப் பணியில் ஈடுபடும் போராளிகள் தரும் தகவல்களைக் கொண்டே தாக்குதல் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன; தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்த முடிகின்றது. வேவு வீரர்களின் துணிகர சாதனைகள் மூலமே, நாம் பூநகரியில் பெரும் சமர் புரிந்து வெற்றியீட்ட முடிந்தது. வேவுப்பணியில் ஈடுபடும் போராளிகளின் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து நிறைந்தது; உயிருக்கு உத்தரவாதமில்லாதது. இந்தப் பணியின் போது எத்தனையோ அற்புதமான போராளிகளை நாம் பறிகொடுத்துவிட்டோம். இந்த அர்ப்பணிப்புக்களின் பயனாகவே நாம் போர்முனைகளில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடிகின்றது.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். நினைவுப்பகிர்வு: ச.பொட்டு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 1994) https://thesakkatru.com/the-fighters-responsible-for-the-victory/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கைகளை ஏந்தி விட்டேன் ... கண்ணீரை சிந்தி விட்டேன்
-
2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி
2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி நவம்பர் 7, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள், வழித்தடங்கள்/0 கருத்து சுதந்திரத்தைத் தேடி 2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன். வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள். மயூரி மாநிறம் நல்ல சொக்கு. பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள். இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணியுடன் வந்திருந்தார்கள். மட்டக்களப்புத் தமிழ் சாதாரணமாகவே கேட்க அழகாக இருக்கும். இவர்கள் தங்கள் மழலை மொழியில் அந்தத் தமிழை உச்சரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். ‘அக்கா’ என்று சொல்லத் தெரியாது.’ அக்கே, அக்கே’ என்று கொஞ்சுவார்கள். இருவரும் சின்னவர்கள் என்பதால் எல்லோரும் இவர்களுக்குச் சரியான செல்லம். செல்லம் என்பதால் குழப்படி செய்வதில்லை. நிறையக் குறும்புகள் செய்வார்கள். மட்டக்களப்பிலிருந்து வந்த புதிதில், அங்கிருந்து வந்த எல்லோரிடமிருந்தும் பயிற்சியாளர்கள் அவ்விடத்துப் பயிற்சி பற்றிக் கேட்டு இவ்விடத்துப் பயிற்சி பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு காடு என்பது தண்ணீர் பட்டபாடு, காவல் உலாப் போகும் இராணுவ அணியை மறைந்திருந்து தாக்குவது வெல்லம் சாப்பிடுவது போல. இங்கே நடக்கின்ற தளமுற்றுகைகள், தகர்ப்புக்கள், வெளிகளில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அவர்களுக்குப் புதிது. ஆனையிறவு வெளிகளில் எப்படிச் சண்டை நடந்தது என்று வஞ்சிக்கும், மயூரிக்கும் வாய்கொள்ளாத ஆச்சரியம். “எப்படி அக்கே வெளிக்குள்ளே நிண்டு சண்டை பிடிச்சீங்க? நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க?” “ஏன் அந்தச் சண்டைக்கு ஆகாய, கடல், வெளித் தாக்குதல் எண்டு பேர் வைச்சீங்க?” என்றெல்லாம் துருவித்துருவிக் கேட்பார்கள். பூநகரிச் சண்டைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததால் இவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டு பேருக்கும் குண்டுகள் கொடுக்கப்பட்டன. பயிற்சியின் போது இருவரும் நல்ல சுறுசுறுப்பு; வகுப்புகளிலும் அப்படித்தான். ஒருமுறை சொர்ணமண்ணை, பெண் போராளிகளின் பயிற்சித் தளத்திற்கு வந்து, தான் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த ஆண் போராளிகளுக்குப் பத்துக் குண்டுகளைப் பரிசாக அனுப்பியதாகவும், அதேபோல பெண் போராளிகளும் சரியாகப் பதிலளித்தால் பத்துக் குண்டுகள் தருவதாகவும் கூறினார். வஞ்சி, மயூரி உட்பட எல்லோரும் வகுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். சொர்ணமண்ணையின் கேள்விகளுக்கு வஞ்சியும், மயூரியும் சுறுசுறுப்பாக எழுந்து நின்று சரியான பதில்களைச் சொல்லிவிட்டார்கள். சரியாகச் சந்தோசப்பட்ட சொர்ணமண்ணை அடுத்தநாளே இரண்டு பேருக்கும் கொடுக்குமாறு பத்துக் குண்டுகளை அனுப்பிவைத்தார். குண்டுகள் கிடைத்ததில் இரண்டு பேருக்கும் சரியான புளுகு. கண்ணில் பட்ட எல்லோரிடமும் குண்டுகள் கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு, தங்களின் பயிற்சி ஆசிரியருடன் போய் பத்துக் குண்டுகளையும் எறிந்து பயிற்சி செய்தார்கள். நாலு குண்டுகள் வெடிக்கவில்லை. எறிந்து வெடிக்காத குண்டுகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற பயிற்சி அப்போது இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே பயிற்சி ஆசிரியர், இருவரையும் அருகில் போகவிடாமல் தடுத்துவிட்டு, அந்த இடத்தை அபாயமானது என அடையாளப்படுத்தி பலகை நட்டுவிட்டு, இவர்களைப் போகுமாறு அனுப்பிவிட்டார். பயிற்சியாசிரியர் அந்த இடத்திலேயே ஏதோ வேலையில் மூழ்கிப் போனார். தாங்கள் எறிந்த குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்று மண்டையைக் குடைந்துபார்த்து அலுத்துப்போன மயூரியும், வஞ்சியும் குண்டுகளைச் சோதித்துப் பார்க்கும் யோசனையுடன் இன்னுமொரு போராளியையும் அழைத்துக்கொண்டு, பயிற்சியாளரின் கண்ணில்படாமல் பற்றைக்குள் மறைந்து மறைந்து குண்டுகள் விழுந்த இடத்தை அண்மித்தவர்கள், ஒரு தடியால் குண்டைத் தட்டிவிட்டு ஓடிவந்து நிலை எடுத்தார்கள். திடீரென்று குண்டு வெடித்ததில் திகைத்துப்போன பயிற்சியாசிரியர் திரும்பிப் பார்க்க, பற்றைக்குள் படுத்தவாறு மூன்று சோடிக்கண்கள் திருதிருவென முழிசிக் கொண்டிருந்தன. “ஏண்டாப்பா இந்த வேலை செய்தியள்?” என்று கேட்க, “என்ன நடக்கும் எண்டு பார்த்தனாங்களக்கே” என்று பதில் வந்தது. எதையுமே உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் எப்போதுமே மிகுந்து காணப்பட்டது. தங்களிடம் குண்டுகள் மட்டுமே இருப்பதை நினைத்து இடையிடையில் கவலைப்படுவார்கள். “சண்டைக்குப் போகேக்க குண்டுதானே தருவியள், எங்களுக்கு அருள் 89 தாங்கோ” என்பார்கள். சின்னன்கள் விருப்பத்தைக் கெடுக்கக்கூடாது என்று அருள் 89களைக் கொடுத்தால், பயிற்சித் தளத்துக்குப் போய் அவற்றை ஏவி, வெடிக்கச் செய்துவிட்டு துள்ளிக் குதிப்பார்கள். சண்டைக்கான பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு கடந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி அல்லது ஒன்றரை மணிவரையில் நடக்கும். அது முடிந்து தளத்துக்குத் திரும்பி வந்து படுக்க அதிகாலை நான்கு மணியாகிவிடும். படுத்துவிட்டு ஐந்து மணிக்கு விழுந்தடித்து எழும்பி, பல்லை விளக்காமலேயே மைதானத்துக்குப் போகும் வழியிலுள்ள அருவியில் முகத்தைக் கழுவிக்கொண்டு ஓடிப்போகும் வழியிலேயே தலையை கைகளால் கிளறிச் சீர்படுத்திக்கொண்டு, மைதானத்துக்குப் போய்ச் சேர்வார்கள். இவ்வளவு வேலைகளும் கண்கள் மூடிய நிலையிலேயே நடைபெறும். அவ்வளவு நித்திரை. திடீரென்று நெற்றி வலிக்கும். திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தால் மைதானத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி, காட்டுமரமொன்றுடன் மோதியிருப்பது தெரியும். நெற்றியைத் தடவியவாறே மீண்டும் ஒற்றையடிப் பாதையால் ஓட்டம். ஓரளவு வெட்டையான இடங்களில் எழும்பி ஓடுவதற்கு அனுமதியில்லை. ஊர்ந்துதான் போகவேண்டும். காடுகள் என்பதால் இரவு நேரங்களில் மாடுகள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகும். அந்த இடம் ஒரே சாணமாக இருக்கும். சும்மாவே முழங்காலளவு சேறும், அதற்கு மேல் அரையடி உயரம் வரை தண்ணீரும் நிற்கும். அதற்குள் மாட்டுச் சாணமும் சேர்ந்தால், நிலைமையைச் சொல்லத் தேவையில்லை. அந்த அழகான பாதையால்தான் எங்கள் படையணி ஊர்ந்தவாறு செல்லும். நடக்கின்ற போதே நித்திரை செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள், ஊர்ந்து போகத் தொடங்கினால்….. பின்னால் வந்த அணியைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தால் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். அந்தச் சேற்றுக்குள் வஞ்சியையும், மயூரியையும் கைகளை விட்டுத் தேடினால் கண்டுபிடிக்கலாம். எல்லோரையும் தட்டிவிட்டு, “என்ன பிள்ளையள், நித்திரையோ?” என்று கேட்டால், “சீ நாங்கள் நல்ல முழிப்பு. ஆர் சொன்னது நித்திரையெண்டு” என்றவாறு ஊர்ந்து போவார்கள். எழும்பி நடக்கின்ற வேளைகளில் பார்த்தால், விண்வெளியில் நடமாடுவது போல சமநிலை இல்லாமல் ஆடி ஆடிப் போவார்கள். பெரும்பாலான போராளிகள் வயதில் இளையவர்கள். வஞ்சி, மயூரி போல மிகச் சின்னவர்களும் இருக்கிறார்கள். அம்மா, அப்பாவுடன் செல்லப்பிள்ளைகளாக துள்ளிக் குதித்துத் திரிய வேண்டிய பருவத்தில், சூரியக் கதிர்கள் கூட ஊடுருவச் சிரமப்படும் அடர்ந்த காட்டுக்குள், நாட்கணக்காக குளிக்காமல், ஒழுங்காகச் சாப்பிட நேரமில்லாமல் தங்களை வருத்தி ஒவ்வொரு போராளியும் பயிற்சி எடுப்பதைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ செய்யும். ஆனால்…… தமிழன் வலை வீசி மீன்பிடித்த நாகதேவன்துறையில், தமிழன் வேளாண்மை செய்த பூநகரியில், ஒரு அந்நிய மொழி பேசுகின்ற இராணுவம் ஆளுவதை நினைத்தால்…. “விடக்கூடாது” என்று வெறி வரும். “அக்கே பசிக்குதக்கே” என்று வஞ்சியும், மயூரியும் முன்னால் வந்து இருப்பார்கள். சட்டியில் இருக்கும் குழைத்த சோற்றை உருட்டி கையிலெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இருவரும் நித்திரை தூங்கிப் போயிருப்பார்கள். மெல்லமாக வாயைத் திறந்து ஊட்டிவிட்டால், வாய்க்குள் சோற்றை வைத்தபடியே உறங்குவார்கள். “அம்மன், வாய்க்குள்ள இருக்கின்ற சோத்தை விழுங்கம்மா” என்று சொல்லிச் சொல்லி, அவர்களைத் தட்டித்தட்டி, ஒவ்வொரு சோற்று உருண்டையாக ஊட்டி அவர்களைச் சாப்பிட வைக்கும்போது…. எங்கள் மனங்களில் எழும் வேதனையையும் விஞ்சி…. ‘இந்தத் துன்பம் அடுத்த தலைமுறைக்கு வரவிடக்கூடாது. எங்களோடேயே எல்லாம் முடியட்டும்’ என்ற எண்ணம் வலுப்பெறும். ஒருநாள் அதிகாலை ‘மாதிரிச் சண்டை’ செய்து பார்க்கப்பட்டது. இரவு ஒரு மணிக்கு தொடங்கிய சண்டை அதிகாலையில் நிறுத்தப்பட்டு, இராணுவத் தளத்தின் மாதிரியைச் சூழ போராளிகள் நிலை எடுத்துப் படுத்திருந்தனர். அணிகளின் பிரதான பொறுப்பாளர்கள் எல்லா நிலைகளுக்கும் போய் நிலைகள் சரியா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அவசர அவசரமாக கைகளால் கிண்டி அமைக்கப்பட்ட நிலை ஒன்றில் ஒரு சின்ன உருவம் தன்னையும் தன் ஆயுதத்தையும் குழைகளால் உருமறைத்த நிலையில் நல்ல நித்திரை. உடையும் ஈரம், நிலமும் ஈரம். ஆனால் நல்ல நித்திரை. யாரென்று பார்த்தால் மயூரி! “மயூரி எழும்பு. முன்னுக்கு ஆமியின்ர இடம். நீ நித்திரை கொள்ளுகிறாய், என்ன?” என்று ஏச, எழும்பி பொறுப்பாளரின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள். பொறுப்பாளர் போய்விட்டார். அவர் திரும்பி அடுத்ததரம் நிலைகளைச் சோத்திதுக்கொண்டு வரும் போது பார்த்தால், மயூரி நல்ல நித்திரையில் இருந்தாள். “மயூரி, எழும்பு” அதட்டினார். கண்களைக் கசக்கியவாறே எழும்பிய மயூரி, பொறுப்பாளரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்து. “அக்கோய், பேசாதீங்கக்கா. எனக்கு இப்படி இரவில நித்திரை முழிச்செல்லாம் பழக்கமில்லையக்கா, எனக்கு நித்திரை நித்திரையா வருது” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள். பொறுப்பாளருக்கோ இந்த வயதில், மழைக்காலத்தில், வீட்டிலே தான் குளிராமல் போர்த்துக்கொண்டு படுத்திருந்தது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் கலங்கிப் போனார். “சரி. இனி அலேட்டா இரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பயிற்சி நடைபெறும் நேரங்களில் சுறுசுறுப்பாக ஓடித்திரியும் மயூரிக்கும் வஞ்சிக்கும், வகுப்பு நேரத்தை நினைத்தாலே நித்திரை வரும். பயிற்சி ஆசிரியர் முன்னுக்கு நின்று தாக்குதல்களைப் பற்றியோ, ஆயுதங்களைப் பற்றியோ விளக்கிக் கொண்டிருப்பார். அமர்ந்திருந்து கேட்பவர்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு விழித்துக்கொண்டிருப்பார்கள். வஞ்சி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கருமுகில் ஒன்றைக் கண்டதும் பக்கத்திலிருப்பவளைச் சுரண்டி முகிலைக் காட்டுவாள். அடுத்த முகிலைக் கண்டதும் மீண்டும் சுரண்டி, “ரெண்டு முகிலும் முட்டினவுடனே மழை பெய்யும் பார்” என்பாள். ஒரு துளி மழை விழுந்தாலும் போதும். தங்களுடைய அறைக்குப் போவதற்கு ஆயத்தமாகிவிடுவாள். மழை பெய்து, பயிற்சியாசிரியர் எல்லோரையும் போகுமாறு சொல்லி வாய்மூட முன்னரே வஞ்சியும், மயூரியும் அறைக்குள்ளே ஓடிப்போய் படுத்துவிடுவார்கள். காட்டுக்குள்ளே ஒருமுறை நாங்கள் புதிய கொட்டிலொன்றை அமைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வர, அதை அடித்து வாலில் கட்டி, கொட்டில் வாசலில் தொங்கவிட்டுவிட்டு, வேலையைச் செய்துகொண்டிருந்தோம். எங்களைத் தேடி வஞ்சியும் மயூரியும் வந்துவிட்டார்கள். வாசலில் தொங்கிய பாம்பைப் பார்த்துவிட்டு, “ஏன் பாம்பைத் தொங்கவிட்டிருக்கிறீங்கக்கா?” என்றார்கள். அதற்கு நாங்கள், “இந்தக் கொட்டில் கட்டி முடிய இதுக்குள்ள வச்சுச் சமைக்கப்போறம்” என்று புளுக ஆரம்பித்தோம். “என்னண்டக்கா சமைக்கிறது?” “தலைப் பக்கமாகவும் வால்ப் பக்கமாகவும் ஒரு அங்குலம் வெட்டியெறிஞ்சு போட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டிப் பொரிச்சு குழம்பு வைக்கப் போறம். ஏன் நீங்க ஒருநாளும் சாப்பிடேல்லையா?” “மட்டக்களப்புக் காட்டிலையும் பாம்பு இருக்குத்தானக்கா. ஆனா நாங்க பாம்புக்கறி சாப்பிடுறதில்லைக்கா. இஞ்ச நீங்க சாப்பிடுறனீங்க எண்டு சொல்லுறவங்கள். ஒரு பாம்பு என்னண்டு எல்லோருக்கும் கறி வைக்கக் காணும்?” “இண்டைக்கு புதுக் கொட்டிலில சமைக்க வேணுமெண்டுதான் பாம்பைப் பிடிச்சனாங்கள். எல்லோருக்கும் குடுக்க காணாதுதான். சும்மா எல்லோரும் ரேஸ்ட் பண்ணிப் பார்ப்பம்” இருவரும் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். பேசாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டோம். இருவரும் வியப்புடன் எம்மைப் பார்த்தார்கள். “நாங்கள் சும்மா சொன்னனாங்கள். பாம்புக் கறி சமைக்கேல்ல. பாம்பை வெட்டி உறுப்புக்களைப் பார்க்கிறதுக்குத்தான் வச்சிருக்கிறம்” என்றோம். பாம்பை நெடுக்கு வெட்டாகக் கீறிப் பிளந்து, இதயம் குடல் போன்றவற்றைக் காட்டிய போது ஆர்வத்துடன் பார்த்தார்கள். “அதென்னக்கா, இதென்னக்கா” என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். பாம்பைப் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொண்டதில் இருவருக்குமே மகிழ்ச்சி. ஒரு நாள் இருவரிடமும், “உங்களைச் சண்டைக்கு விடாட்டி என்ன செய்வீங்க?” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, “நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம்?. எங்களை விட்டிட்டுப் போனாலும் நாங்க ஒருத்தருக்கும் தெரியாம, வாகனம் ஒண்டில ஏறிச் சண்டை நடக்கிற இடத்துக்கு வந்திடுவம்” என்றார்கள். சண்டைக்குப் போவதற்கு என்ன தடை வந்தாலும் தாண்டத் தயாராக இருந்தார்கள். சண்டைவிடயம் தவிர்ந்த ஏனைய எல்லாவற்றிலும் குழந்தைகளாகவே நடந்துகொள்வார்கள். காட்டிலிருக்கும் போது சிற்றுண்டிகள் வந்தால் முதலில் எங்களுக்கு வந்து, பின்னர்தான் ஆண் போராளிகளுக்குப் போகும். வாகனத்தில் ஏறி எமக்குரியதை இறக்கி விட்டு , வாகனத்தின் ஓட்டுனருக்குத் தெரியாமல் ஆண் போராளிகளுக்குரிய பொதிகளில் ஓட்டை வைத்து எடுத்து, காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு இறங்கிவிடுவார்கள். இரண்டு பேருமே பிரபலமற்ற, ஆனால் மிகப்பெரிய சிற்றுண்டித் திருடர்கள். நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போயிருந்தோம். இரண்டு, இரண்டு ஐஸ்கிறீம் குடித்துவிட்டு, ஊதுகுழல் வாங்கித்தருமாறு அடம்பிடித்து, வாங்கி ஊதுகுழலை ஊதியவாறே நல்லூரைச் சுற்றிப் பார்த்தார்கள். இந்தமாதிரி எங்கேயாவது கூட்டிப்போனால் இருவருக்கும் உற்சாகம் வந்துவிடும். சின்னவர்கள்தானே? ஒருமுறை மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிநின்ற போது பக்கத்துக் கோயிலொன்றில் திருவிழா நடந்தது. எங்களுடைய இடத்தில் நின்று பார்த்தால், சிற்றுண்டிக் கடைகள் தெரியும். விடுவார்களா வஞ்சியும் மயூரியும்? “அக்கோய், கலர் கலரா நிறைய முட்டாசிக் கடையக்கா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களாக்கா?” என்று கேட்டதால் இருவரையும் கூட்டிப் போனோம். வாய் நிறைய, காற்சட்டைப் பை நிறைய இனிப்புக்களுடன் திரும்பினார்கள். சண்டைக்குப் போக முதல் எல்லோரும் முடிவெட்டி, முழுகி, அவரவரின் ஆயுதங்களுடன் படம் பிடிப்பது வழக்கம். வஞ்சியும், மயூரியும் முடிவெட்டிவிட்டு எங்களிடம் வந்து, “வடிவா இருக்கிறோமாக்கா?” என்று கேட்டு விட்டு, தங்களுடைய குண்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு, ஒரு மணல் குவியலுக்கு மேல் ஏறி நின்று கம்பீரமாய் போஸ் குடுத்துவிட்டு, “நீங்களும் எங்களோட நிண்டு எடுங்கக்கா” என்று தங்கள் பொறுப்பாளர்களிடம் கேட்டு படம் எடுத்தார்கள். பொறுப்பாளர் அவர்களுடன் நின்று படம் எடுத்ததில் ஒரே சந்தோசம்தான். சண்டைக்குரிய சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இனி அடிக்க வேண்டியதுதான். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மயூரி, வஞ்சிக்குரிய பாதையில் வழிகாட்டியுடன் இவர்கள் முன்னே போய் முட்கம்பி வேலியைத் தகர்த்தவுடன் இந்த இடைவெளியூடாக அணிகள் உட்சென்று தாக்குவதுதான் ஏற்பாடு. எதிரியின் அரணுக்கு முன்னால், முள்வேலியையும் மேவி வெள்ளம் நின்றது. தண்ணீர் சலசலக்காமல் அமைதியாக முன்னேறிய வஞ்சியும் மயூரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். ஏதேதோ கனவுகளெல்லாம் அவர்களுக்கு.சண்டை முடிந்து வந்து அது செய்ய வேண்டும், இது செய்யவேண்டும் என்றெல்லாம்…… எதிரியின் காவலரணுக்கு முன்புள்ள முள்வேலிகளை நெருங்கிய சமயத்தில், தற்செயலாக எதிரி ஏவிய டொங்கான் எறிகணை ஒன்று இவர்கள் அருகில் வந்து விழ…… இரண்டு குஞ்சுகளும் காணாமற் போனார்கள். இரண்டும் கடைசி நேரத்தில் புகைப்படக் கருவிக்குப் ‘போஸ்’ கொடுத்த அழகில் மயங்கியதும்…… எதையும் சுறுசுறுப்பாகவும் ஆளுமையுடனும் செய்வதைப் பார்த்து, இந்தச் சண்டை முடிய இருவருக்கும் நல்ல பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்ததும்…… இன்னும் எங்களுக்கு மறக்கவில்லை. அந்தப் பிஞ்சுகளைச் சுற்றி நாங்கள் கட்டியெளுப்பியிருந்த கனவுக்கோட்டையெல்லாம் பூநகரியில் ஓடிய இரத்த ஆறுடன் கரைந்துபோனது. சுவரில் இருந்து சிரித்துக்கொண்டேயிருக்கின்ற இரண்டு சின்னன்களையும் பார்க்கும் போதெல்லாம் “எந்தத் துன்பத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறை வரை தொடர விடக்கூடாது. எல்லாமே எங்களோடு முடியட்டும்” என்ற எங்களின் எண்ணம் இன்னும் வலுப்பெறுகின்றது. நீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். நினைவுப்பகிர்வு: போராளி மலைமகள். நன்றி – எரிமலை இதழ் (ஆடி 1995). https://thesakkatru.com/2nd-lieutenant-majoori-veeravengai-vagnchi/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே
- சாந்தியக்கா.jpg
-
மாவீரர் புகழ் பாடுவோம்
ஓலம் கேட்டதா - நந்த்திக்கடலே சொல்லம்மா எங்கே அதிசயம்?
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தளராத துணிவோடு களமாடினாய் இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் அழகான
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கார்த்திகைப் பூவே - தமிழீழத் தேசிய எழுச்சிப் பாடல் | மாவீரர் மாதம் | ஈழம் | தமிழீழம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கல்லறை மேனியர்.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செல்வ முத்து குமரன் பார் புகழும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
லிங்கோத்பவ நிலையே || சுதா ரகுநாதன் || லிங்கபைரவி
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உனது மடியில் - சிவமோடு சிவமாக | சிவ.திரு.திவாகர் ஐயா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானம் நிறை கன்னிகையே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 ) தாயென்று உன்னைத்தான் (2 ) பிள்ளைக்கு காட்டினேன் மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 ) மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 ) தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 ) அன்னை இல்லாத மகனை தாலாட்டுது கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைத்தான் (2 ) பிள்ளைக்கு காட்டினேன் மாதா மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் ம்ம்...ம்ம்..ம்ம்ம்........
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உங்கள் அருள் பாதம் .
-
வீரத்தின் சிகரங்கள்
வீரத்தின் சிகரங்கள் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள். உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும் தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம். இந்த மனோபலம் ஒரு வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும். ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலைப் போராட்டச் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளிவிடுவதுடன், வீரம்மிக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட, தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டிவிடுகின்றது. தேச பக்தியையும், வீர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால் உலகில் எவராலும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். “தாய்மை” கரும்புலி மேஜர் மலர்விழி: அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள். அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள். தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களை வளர்த்துவிட்ட அவள் காலத்தின் தேவையறிந்து போராளியாகிப் பின்னர் சாதனைகளின் உச்சத்தைத் தொடுவதற்காகக் கரும்புலியாக மாறிக்கொண்டாள். அந்த முகாமில் பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் யாரிற்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்காகவே தனது நேரத்தைச் செலவிடுவாள். யாராவது போராளிகள் கசங்கிய உடையோ அல்லது சற்றேனும் புழுதிபடிந்த உடையை அணிவதோ அவளுக்குப் பிடிக்காது. கசங்கிய உடைகளை அழுத்தி மடித்துக் கொடுத்து அதைப்போட வைத்து அதன் அழகை இரசிப்பதில் தான் அவளது மகிழ்ச்சியிருந்தது. போராளிகளின் ஆடைகளைத் தோய்த்துக் கொடுக்கக்கூட அவள் தயங்கியதில்லை. அவர்களின் இந்தப் பாசறை ஒருநாள் சிங்களப் படையின் விமானத் தாக்குதலுக்குள்ளாகிறது. உயிர்களுக்குச் சேதமேற்படா விட்டாலும் காயம் ஏற்பட்டு போராளியொருவர் மருத்துவமனையிலிருந்தான். அவர்களின் தங்ககம் விமானத்தாக்குதலால் சிதைந்தது. உடைமைகள் யாவும் சிதறுண்டன. காயம்பட்ட போராளிக்கு மாற்று உடையில்லை. அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் அதுவே நிலைமை. மலர்விழி மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்க்கிறாள். மாற்றுடையில்லாமல் அவன் அவதிப்படுவது தெரிந்தது. ஆனால், உடனடியாகப் புது உடை வாங்கக்கூடிய வசதி அவளிடம் இருக்கவில்லை. மலர்விழி முகாம் வருகிறாள். விமானத் தாக்குதலால் சிதறிய விடுதியில் வந்து பார்க்கிறாள். அங்கே கிழிந்தபடி காயப்பட்டவனின் சேட் ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு போனாள். ஊசி நூல் எடுத்து குண்டுச் சிதறலால் ஏற்பட்ட கிழிசல்களைப் பொறுமையாக இருந்து தைத்தாள். பின்னர் அந்த ஆடையைத் தோய்த்து காய்ந்த பின்னர் அழுத்தி மடித்து மருத்துவமனையில் மாற்றுடையை எதிர்பார்த்திருக்கும் அந்தப் போராளியிடம் ஒப்படைத்தாள். அந்தக் கரும்புலி வீராங்கனையின் தாய்மையின் நேசம் எல்லோரையும் வியக்கவைத்தது. மலர்விழி பல நடவடிக்கைகளுக்காக எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி வெற்றியுடன் திரும்பி வந்தாள். நடவடிக்கைக்காகச் செல்லும் ஒவ்வொரு தடவையும் வழியனுப்புவோரிடம் அவள் சொல்வது ~தம்பியும் தங்கையும் கவனம் என்பதை மட்டும் தான். இவள், வீழ்த்த முடியாத பெருந்தளமாக எதிரி இறுமாந்திருந்த ஆனையிறவுத் தளத்தினுள் மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா ஆகிய கரும்புலிகளோடு இணைந்து அதிரடியான ஊடுருவலொன்றின் மூலம் தாமரைக்குளத்திலிருந்த நான்கு ஆட்லறிகளை வெற்றிகரமாகத் தகர்த்தெறியப் பெருந்துணை புரிந்தாள். தம் பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் தாம் திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரியின் பலம்மிக்க கொமாண்டோ அணியொன்றின் சுற்றிவளைப்பிற்குள்ளாகினர். மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த இயக்கச்சிப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து 31-03-2000 அன்று ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள். “கோடை” கரும்புலி மேஜர் ஆதித்தன்: 1992 ஆம் ஆண்டின் நாட்கள். சுதாகரன் வீட்டுக் கஸ்ரத்தைப் போக்குவதற்காகக் கொழும்பில் கடையொன்றில் வேலைசெய்து கொண்டிருந்தான். தினமும் கடைக்கதவு சாத்தப்பட்ட இரவுப்பொழுதில் கூடவிருப் போருடன் சேர்ந்து பம்பலடித்து நேரத்தைக் கழித்துவிட்டு உறக்கத்துக்குச் செல்வதுதான் வழமை. ஆனால் அன்று மட்டும் எல்லோரும் வானொலியைச் சுற்றியிருந்து எதையோ ஆழமாகக் கேட்டபடியிருந்தார்கள். அன்றைய நாள் பி.பி.சி வானொலியில், பி.பி.சி செய்தியாளர் ஆனந்தி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்திருந்து தலைவரின் எண்ணங்களைச் செவிமடுத்தான். தலைவர் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அவனை மெய்சிலிர்க்க வைத்தன. அன்றுதான் தமிழர்களுக்கென்றொரு தலைமை இருப்பதும், ஒரு கட்டுக்கோப்பான விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருப்பதையும் அவன் அறிந்துகொண்டான். அவனது நெஞ்சில் புதிய உத்வேகம் உருவானது. தலைவர் மீதும் எமது விடுதலைப்போராட்டம் மீதும் இனம்புரியாத பற்று அவனுள் கருக்கொண்டது. அன்றிலிருந்து அவனுள் மூண்ட விடுதலைத்தீ அவனை 1994 இல் எங்கள் தாயகம் நோக்கி நகர்த்தியது. பதுளையில் இருந்த அம்மாவிடம் ‘கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் நான் யாழ்ப்பாணம் போறன்” என்று சொல்லி அம்மாவைச் சமாளித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டான். இந்தச் சுதாகரன் பின்னர் போராளியாகி களங்களிலே துணிச்சல் மிக்க ஒரு படைவீரனாக மாறினான். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம். முன்னேறி வரும் சிங்களப் படையை வழிமறித்து மாங்குளத்தில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதித்தன் அந்தச் சண்டைக் களத்தில் 82அஅ எறிகணைச் செலுத்தி ஒன்றுடன் சிங்களப் படைக்கெதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அந்த மோட்டார் அணியில் பொறுப்பாளனும் அவனே. எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்படினும், முடிவெடுத்துச் செயற்படுவது அவன் கையிலேயே தங்கியிருந்தது. சண்டை கடுமையானதாயிருந்தது. ஓயாத அலைகள் – 02 என்ற பெருந்தாக்குதலை கிளிநொச்சிப் படைத்தளம் மீது எமது படையணிகள் மேற்கொண்டிருந்ததால், குறிப்பிட்ட அளவு போராளிகள் தான் அன்றைய சண்டையை எதிர்கொண்டனர். சண்டையின் ஒரு கட்டத்தில் எமது முன்னணி நிலைகளை ஊடறுத்து படைகள் எமது பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. தொலைத்தொடர்புக் கருவிமூலம் இராணுவம் நிற்கும் நிலைகளைக் கேட்டறிந்து மோட்டார் மூலம் எறிகணைகளை அவன் வீசிக்கொண்டிருந்தான். நீண்ட நேரமாகச் சண்டை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எறிகணையை வீசுவதற்கான தூரவீச்சு குறைந்துகொண்டே போனது. இந்தத் தரவின் மூலம் இராணுவம் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றதென்பதை ஆதித்தன் அறிந்துகொண்டான். அந்தக் களமுனையில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால் ஆதித்தன் பதட்டப் படாமல் கூடவிருந்த போராளிகளுக்குத் தெம்பூட்டி இடை விடாமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். எறிகணை வீச்சுக்கான தூரம் தொடர்ந்தும் குறைந்தபடியிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவனது மோட்டார் நிலை எதிரியால் முற்றுகையிடப்படும் என்று அவனால் கணிப்பிட முடிந்தது. அப்படி முடிவெடுத்தால் எறிகணைகளை எதிரியிடம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்தநேரம் ஆதித்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்துக்கொண்டான். கடைசியாக மோட்டாரை அழிப்பதற்கு ஒன்றும், தங்களை அழிப்பதற்கு ஒன்றுமாக இரண்டு எறிகணைகளை வைத்துவிட்டு, ஏனையவற்றை எதிரி முன்னேறும் பகுதி நோக்கி விரைவாக அடித்து முடிப்பதென்பதே அந்த முடிவு. இப்போது எதிரியின் தாக்குதல் இவர்களை அண்மிக்கின்றது. எதிரியின் துப்பாக்கிச் சன்னங்கள் இவர்களின் நிலையை நோக்கியும் சரமாரியாக வரத்தொடங்கியது. 500அ 400அஇ 300அ என மிகக் கிட்டவாக எறிகணைகள் பறந்து வந்து கொண்டிருந்தன. கடைசியாக 200அ வீச்செல்லைக்கும் அடிக்கும் கட்டளை கிடைத்தது. இராணுவம் துப்பாக்கிச் சண்டைக்கான வீச்செல்லைக்குள் வந்தாலும் அவர்கள் மோட்டார் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் கணங்கள் அண்மித்துக் கொண்டிருந்தன. ஆனால், பதட்டமில்லாமல் ஆதித்தனின் சுடுகுழல் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம் இப்போது இவர்களின் மோட்டார் நிலையைக் குறிவைத்து தாக்கத்தொடங்கியது. இத்தனை நெருக்கடிக்குள்ளும் ஆதித்தன் தான் முடிவெடுத்த நிலை வரும் வரை தாக்குதலைத் தொடர்ந்தான். இராணுவத்தின் முற்றுகை வலைக்குள் மோட்டார் நிலை உள்ளாகிக் கொண்டிருந்தது. ஆதித்தன் நினைத்தபடி எறிகணைகள் அனைத்தும் சுடப்பட்டு விட்டது. இனி, மோட்டாரை தகர்ப்பதற்கான நேரம். அதைவிட மாற்றுவழிகள் இல்லை. நூற்றுக்கணக்கான எறிகணைகளைச் சுட்டதினால் தணல் போலப் பழுத்துப் போயிருக்கும் அந்த எறிகணைக் குழலைக் கொண்டு செல்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அத்தோடு எதிரியால் அவர்கள் சூழப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள். எனவே சுடுகுழலைத் தகர்த்து விட்டு பின்வாங்கு வதென்ற முடிவைத் தவிர மிச்சமாக எதுவுமில்லை. ஆயினும், ஆதித்தன் அப்படிச் செய்யவில்லை. கூட இருந்தோர் எதிர்பார்க்காத முடிவை அவன் எடுத்தான். இயக்கம் ஒரு எறிகணை செலுத்தியைப் பெறுவதற்கு எத்தகைய விலைகளைச் செலுத்துகின்றதென்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால், அந்த எறிகணைச் செலுத்தியை அவன் இழக்க விரும்பவில்லை. வெப்பத்தால் தகதகத்துக் கொண்டிருக்கும் அந்தச் சுடுகுழலை தனது தோளில் வைத்தபடி எதிரிக்கு எதையும் விட்டுவைக்காமல் முற்றுகையை உடைத்து வெளியேறினான் அவன். ஆதித்தன் மீண்டு வந்தபோது அவனது சுடுகுழல் பத்திரமாயிருந்தது. அவனது தோள்பட்டை மட்டும் வெந்து போய் பொக்களம் போட்டிருந்தது. இப்படி களங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய வீரன் பின்னர் கரும்புலியாகி விடுதலைப் போருக்குப் பெரும் பலம் சேர்த்து வீழ்த்த முடியாத பெருங்கோட்டையென எதிரி மார்தட்டிய ஆனையிறவை மீட்கும் சமரொன்றிற்கு வலுச்சேர்த்து 25.12.1999 அன்று பாவப்பட்ட மக்களை மீட்கவந்த இயேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் நத்தார் நாளில், அடிமைப்பட்ட தன் இனத்தின் மீட்சிக்காகத் தன்னையே கொடையாக்கினான். “உபசரிப்பு” கரும்புலி மேஜர் ஆந்திரா: இவள் இப்போது தான் இயக்கத்துக்கு வந்திருந்தாள். பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொறுப்பாளர் எல்லோரையும் ஒன்று கூட்டிக் கதைத்தார். தனது கதையின் ஒரு கட்டத்தில் ‘இதுக்குள்ள ஆர் கரும்புலி?” என்ற வினாவைத் தொடுத்தார். கேள்வி முடிந்த சில கணங்களுக்குள் ஒரு சிறிய உருவம் எழுந்துநின்று ‘நான்தான்” என்று கூறியது. சுதர்சினியின் தோற்றத்தைப் பார்த்து இவளா கரும்புலியாகப்போகிறாள் என்று நக்கலாகச் சிரித்தார்கள். அவள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாள். கரும்புலிகளின் பயிற்சித் தளத்தில் ஆந்திராவாக அவள் உலாவிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய உருவத்துள் நிறைய குறும்புத்தனம் இருந்தது. அந்தக் குறும்புத்தனங்களால் முகாமே கலகலப்பாகவிருக்கும். யாராவது எதற்காவது ஆசைப்பட்டால் போதும் அதை அவர்களுக்குச் செய்துகொடுத்துவிடவேண்டுமென்று துடிப்பவள். ஒருநாள் மாமரத்தின் கீழ் பயிற்சி நடந்தது. மரத்தில் மாங்காய்கள் இருந்தன. கூட இருந்த போராளி ஒருவர் சொன்னார் ‘மாங்காயில கறி வைச்சா நல்லாயிருக்கும்” இந்த வார்த்தைகள் ஆந்திராவுக்கு கேட்டிருந்தது. அன்று பயிற்சி நாள் என்பதால் அவள் பொறுத்துக்கொண்டாள். ஓய்வு நாளும் வந்தது. அன்று ஆந்திராவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘இண்டைக்கு மதியம் கட்டாயம் வரட்டாம்” ஆந்திராவின் அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியாது மாங்காய்க்கறி கேட்டவள் இன்னொரு போராளியை அழைத்துக்கொண்டு போனாள். போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாங்காயில் குழம்பு, மாங்காயில் சொதி, மாங்காயில் பொரியல், தட்டுமுழுவதும் மாங்காய்மயம். சென்றவர்களுக்கு விழி பிதுங்கியது. நன்றாக மாட்டி விட்;டார்கள். ஆளையாளைப் பார்த்தபடி மெதுவாக வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தார்கள். பச்சைப்புளி வாயில் வைக்கவே வயிற்றைக் குமட்டியது. ‘ஒண்டும் சொல்லாத பேசாம சாப்பிடுவம் இல்லாட்டி அவள் அழுது கொண்டிருப்பாள்” ஆந்திராவின் அன்பைப் புறக்கணிக்க முடியாமல் கஸ்ரப்பட்டு சாப்பிட்டார்கள். இவர்களின் துன்பத்தை அறியாதவள் இரண்டாவது தடவையும் மாங்காய்க்கறி பரிமாறினாள். ஆந்திராவின் அன்பிலும் குறும்பிலும் சிக்கியவர்கள் இரவு விடுதியில் வாந்தி எடுத்த கதையும் அதன்பின் இருந்தது. இந்தக் குறும்புக்காரி கொக்குத்தொடுவாயில் தன் தோழிகள் பலரை ஒன்றாக இழந்த சோகத்தில் இருந்தாள். அதற்காக எதிரிக்கு பழி தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் காய்ச்சலாக இருந்தாலென்ன? வேறு வருத்தமென்றாலென்ன? விடாமல் பயிற்சிசெய்தாள். ‘என்ர கையால சார்ஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்கவைக்க வேணும்” என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் விரும்பியபடியே 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தை மீட்கும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தினுள் நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துத்திரும்புகையில் நினைத்ததை சாதித்தவளாய் வீரச்சாவைத்தழுவிக் கொண்டாள். “உறுதி” கரும்புலி கப்டன் சத்தியா: சத்தியா. அவள் சின்னப்பிள்ளையல்ல. ஆனால் உருவத்தில் சிறியவள். மிகவும் கலகலப்பானவள். எல்லோரிலும் அன்பானவள். சின்னப் பிரச்சினையென்றாலும் சண்டைபோட்டு தன்கருத்தில் விடாப்பிடியாக நின்றாலும் அவளின் அந்தத் துடிதுடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். ஆனாலும் அவளின் சிறிய உருவம் அவளது கரும்புலிப்பணிக்குத் தடையாயிருந்தது. அவளுடன் கூட இருந்த பல கரும்புலிகள் ஆனையிறவிற்கான கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும்போது சத்தியாவின் சந்தர்ப்பம் தட்டுப்பட்டுக்கொண்டே போனது. ஆனையிறவுக்குச் செல்வதென்றால் ஆனையிறவு உப்பேரியின் தண்ணீரைத் தாண்டவேண்டும். உயரமான போராளிகளிற்கே நெஞ்சளவு தண்ணீர் இருந்தது. ஆயுத வெடிபொருட்களுடன் நகர்வது அவர்களிற்கே சிரமமானதால் சத்தியா செல்வதென்பது சாத்தியம் குறைந்ததென்பதால் அவளை அனுப்ப பொறுப்பாளர் சம்மதிக்கவில்லை. இப்படி இரண்டு மூன்று தடவை அவளது சந்தர்ப்பம் விலகிப்போக அவள் அழத்தொடங்கி விட்டாள். கூட இருந்த கரும்புலி வீரர்கள் அவளை வலிந்து சண்டைக் கிழுத்துச் சீண்டுவதாக அவளைப் பார்;த்து கேலி செய்வார்கள். அன்புச் சண்டை தொடரும். இந்தப் பகிடிகள் தொடர இன்னொரு நாளில் கூடவிருந்து கிண்டலடித்தவர்களும் உண்மையாகவே பிரியும் போது அவளது அழுகை கனத்ததாக மாறியது. ‘நாங்கள் சாகப் போகேல்லை. சாதிக்கப்போறம்” என்று சொல்லி அவளைத் தேற்றிவிட்டுப் போனார்கள். காலங்கள் கழிந்து கொண்டிருந்தாலும், சத்தியா ‘நானொரு கரும்புலித் தாக்குதலைக் கட்டாயம் செய்து முடிப்பன்.” என்ற நம்பிக்கையில் உறுதியாகவிருந்தாள். யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்காக எதிரி மேற்கொண்ட சூரியக்கதிர் நடவடிக்கையை எதிர்கொண்ட போது சண்டைச்சூழலால் மாற்றுடையின்றி போட்டிருந்த உடையுடனேயே நிற்கவேண்டிய சூழல். உடுப்பைத் தோய்த்தால் காயவிட முடியாதென்பதால் நெருப்பு மூட்டி அந்தப் புகையில் அரைகுறையாகக் காயவிட்டுப் போட்டிருந்தாள். ஆனால், அதுவும் பின்னர் பயனளிக்கவில்லை. இவர்கள் மூட்டிய நெருப்பின் புகைக்கு எதிரி செல் அடிக்க கடைசியாக எதுவும் செய்ய முடியாமல் கொஞ்ச நாட்கள் குளிக்காமலிருந்ததையும் அடிக்கடி நினைவுகூருவாள். நீண்ட காலம் பொறுமையாக, நிதானமாக, உறுதியாக காத்திருந்த அந்தச் சிறிய உருவத்தையுடைய சத்தியாவிற்கு அவள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கைக்குக் கிட்டியது. அந்தச் சின்ன உருவம் கரும்புலித் தாக்குதலுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. ஆனையிறவுத் தாக்குதலுக்கு இப்போது நீரேரி கடக்காமல் இன்னொரு பாதையால் போகும் அணியுடன் செல்ல அவளிற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சத்தியா மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டுநின்றாள். ‘ஆனையிறவுக்குப் போகாட்டி பலாலியில போயெண்டாலும் நான் அடிப்பன்.” என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஆனையிறவிலேயே இலக்குக் கிடைத்ததால் அந்த மகிழ்ச்சி. ஆனையிறவுத்தளம் எப்போதும் அசைக்கப்பட முடியாதென வெள்ளைக்காரர்களும் வந்து சவால் விட்டுச்சென்ற தளம். தேசியத்தலைவரின் மதிநுட்ப திட்டமிடலில் ஆனையிறவுத்தளம் பொசுங்கிக் கொண்டிருந்த காலம். முன்னணியில் சண்டையிடும் போராளிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆட்லறிகளை அவற்றின் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கும் தலைவரின் சிந்தனையைச் செயலாக்க அவள் புறப்பட்டாள். ஆட்லறிகள் உடைக்கப்படும்போது சிங்களத்தின் சூட்டுவலு மட்டுமல்ல, ஆனையிறவுப் படைகளின் மனோபலமும் உடைந்தழியும். தலைவர் நினைத்ததைச் செயலாக்கினாள். 31.03.2000 அன்று தன் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்க்கப்பட்ட மகிழ்வோடு எங்கள் தேசத்தின் கற்களில் அழியாதபடி தனது பெயரையும் பொறித்துக்கொண்டாள். “பாதுகாப்பு” கரும்புலி கப்டன் நாகராணி: அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன. எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள். அவளொரு R.P.G சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது. அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல். வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது. மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் R.P.G உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது. ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது. மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் R.P.G நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை. ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. R.P.G யைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் R.P.G க்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள். உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள். இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள். “நினைவுகள்”: கரும்புலி மேஐர் அருளன் தாக்குதலுக்காக விடைபெறும் கடைசி மணித்துளிகள் இந்தக்கணம் வரை அவனுக்கென்றிருந்த எல்லாவற்றையும் மற்றவருக்குப் பிரித்துக் கொடுக்கிறான். ‘இது நிவேதண்ணா தந்த லைற்றர் இது நீதண்ணா போட்ட சேட்டு இது ஆசாக்கா தந்த ஓட்டோகிராவ்” என ஒவ்வொன்றாய் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். கடைசியாக அவனது பையிலிருந்து வெளிவருகிறது இரண்டு கற்கள். அந்தக் கற்களிலொன்றில் இந்துவென்றும் மற்றையதில் nஐயராணி என்றும் எழுதப்பட்டிருந்தது. கூட இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அப்படி என்னதான் இந்தக் கற்களில் இருக்கின்றதென்ற ஏக்கம் அவர்களிடம். அவர்களின் பார்வை அவனுக்குப் புரிகிறது. அவன் அதற்கான காரணத்தைச் சொல்லுகிறான். இதுவெறும் கற்களல்ல ஆனையிறவுத் தாக்குதலுக்காகச் சென்ற கரும்புலிகள் பயிற்சியின் போது குண்டெறிதலுக்குப் பதிலாக கற்களையே எறிவார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் கற்களைச் சேகரித்து வைத்து விட்டு இலக்கு நோக்கி ஒவ்வொன்றாய் எறிவார்கள். ஒரு மழைநாளில் பயிற்சி வேளைக்கு முடிந்ததால் மிஞ்சிய கற்கள் தானிவை. அவர்கள் எறிந்து விட்டுப்போய் விட்டார்கள். அந்த முகாமை விட்டல்ல இந்தத் தேசத்திலிருந்தும் தான். அருளன் முகாம் வருகின்றான். கரும்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தைப் பார்க்கின்றான். எல்லோரது முகங்களும் அவனது மனதில் வந்து போயின. அப்போது தான் அவதானிக்கிறான் இந்துவும் nஐயராணியும் எறிந்த கற்கள் மிச்சமாயிருந்தன. இப்போது அது வெறும் கற்களல்ல கரும்புலிகள் கைபட்ட கற்கள். அவற்றிலிருந்து ஒவ்வொரு கல்லை பத்திரமாக எடுத்த அருளன் அதைப் பத்திரப்படுத்த அந்தக் கரும்புலிகளின்; நினைவுகளை அந்தக் கற்களிலே சுமந்தபடி பேணி வந்தான்;. கரும்புலிகளுக்குப் பயிற்சி ஆசிரியனாக இருந்த அவன் கரும்புலிகளின் உணர்வைத் தாங்கியபடி தான் கரும்புலி ஆகவேண்டுமென்று அடிக்கடி தலைவருக்குக் கடிதம் போட்டு விடாப்பிடியாக நின்று கரும்புலியாய் மாறினான். அருளனின் வயிற்றில் களத்திலே தாங்கிய விழுப்புண்ணின் வலியிருந்தது. அவனால் சாதாரண நேரங்களில் நிமிர்ந்து நிற்பதே சிரமமானது. ஆனாலும் அவன் பயிற்சி ஆசிரியன் என்பதால் பயிற்சித் திடலில் தனது உடலின் வலியைக் காட்டமாட்டான். பயிற்சித் திடலில் நிமிர்ந்த தோற்றத்தோடு எடுப்பான அருளனையே உங்களால் காணமுடியும். பயிற்சி முடிந்ததும் தனது விடுதியில் வந்து அப்படியே படுத்துவிடுவான். சிறிய ஓய்வின்பின்தான் அவனால் திரும்ப இயங்கமுடியும். அந்த வீரன் இன்று தான் சுமந்த நினைவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டுதான் பயிற்சி கொடுத்துப்போன வீரர்களைத் தொடர்ந்து கையசைத்துவிட்டு விடைபெற்ற அவன் ஓயாத அலைகள் மூன்றிற்காய் எங்கள் தேசம் கொடுத்த விலைகளில் ஓர் விலையாய் காற்றோடு கலந்து கொண்டான். “கனவு” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்: யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்று அது. சாதாரண மனிதர்கள் வாழாத சூனியப் பிரதேசமாய் அது இருந்தது. எங்களுக்குச் சொந்தமான அந்த மண்ணில் இப்போது அந்நியப் பாதங்களின் ஆட்சி. செங்கதிர்வாணன் எதிரியின் இருப்பை வேவு பார்ப்பதற்காக வந்திருந்தான். மக்கள் துரத்தப்பட்ட அந்த ஊரில் எதிரியின் கண்களுக்குத் தென்பட்டு விட்டால் தப்புவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது. உடைந்த கட்டடங்களும், கடற்கரையோரத்தில் காணப்படும் பள்ளங்களும் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தங்களை மறைத்தபடி இராணுவத்தின் கோட்டைக்குள் புகுந்து தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் வேவுக்காக நகர்ந்து கொண்டிருந்த அவர்கள் சடுதியாக இராணுவத்தை சந்தித்துக்கொண்டார்கள். சண்டையைத் தவிர்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்ப வேண்டுமாயின் சண்டை பிடித்தாக வேண்டிய சூழல். சுற்றிவர எதிரியால் சூழப்பட்ட அந்தச் சூழலுக்குள் சண்டை தொடங்கியது. உள்ளுக்குள்ளே சண்டை தொடங்கியதால் முன்னணி அரண்கள் யாவும் விழிப்பாயிருக்கும். உடனடியாக வெளியேறுவது என்பது சாத்தியமற்றுப்போக எதிரியின் பகுதிக்குள்ளேயே மறைப்புத் தேட வேண்டியதாயிற்று. இப்போது புதிதாய் இன்னொரு நெருக்கடி கூட வந்தவர்களில் ஒருவர் காலில் குண்டுபட்டு விழ அவரைச் சுமந்தபடி இராணுவப் பகுதிக்குள் இராணுவத்தைச் சுழித்துக்கொண்டு மறைப்பிடம் தேடினார்கள். இராணுவத்தின் தேடல் தொடர்ந்ததால் இடைவிடாது இடம்மாறிக் கொண்டிருந்தார்கள். இடம் மாறிமாறி நீண்டதூர நடை நாவறண்டு தண்ணீருக்காக காத்துக் கிடந்தது. பசிவேறு வயிற்றைக் குடைந்தது. எதுவும் உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியமேயில்லை. செங்கதிர்வாணன் காயப்பட்ட வீரனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். நீண்ட நடையும், நேரமும் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சமாய்ப்போய் களைத்துப்போன தருணத்தில் கிணறு ஒன்று அவர்களின் கண்களுக்குப் பட்டது. கிணற்றைக் கண்டதுமே தண்ணீர்த் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வு. வாளியில்லாத அந்தக் கிணற்றில் வேறு வழியில்லாமல் உள்ளிறங்கி ஆனந்தத்தோடு தண்ணீரை வாயில் வைத்த போது மிஞ்சியது ஏமாற்றம். அது உப்பு நீர். உடல் சோர்ந்த போது காயப்பட்டவன் தண்ணீருக்காக தவமிருப்பது நினைவிற்கு வந்தது. உடற்களைப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நடந்தான். அவனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கோ தொலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கிருந்தவர்கள் அரட்டை அடிப்பதில் மூழ்கியிருந்தனர். சத்தமில்லாமல் அவர்களின் வீட்டுக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொண்டான். இன்னோரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் எடுத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நடந்தான். செங்கதிர் வாணனின் இடைவிடாத முயற்சியால் விழுப்புண்பட்டவனிற்கும் கூடவிருந்தோருக்கும் தண்ணீர் கிடைத்தது. விழுப்புண் பட்டவனின் விழுப்புண்ணிற்கு பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் கலந்த கைமருந்து வைத்தியமும் அவனால் நடந்தது. பின்னர் உதவியணி வந்து அவர்களும் அடிவாங்கி விழுப்புண்பட்டோரின் எண்ணிக்கையும் கூடி, வெளியேறுவதற்கு பலமுறை முயன்று எதிரியிடம் அடிவாங்கிக் கடைசியாய் ஓர் நாள் சேற்றுக்குள்ளால் நடந்து ஒருவாறு வெளியேறினார்கள். இத்தனை துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிச்சல்லடையாக்கிய போதும் ஒன்று மட்டும் பத்திரமாய் எந்தச் சேதமுமில்லாமல் வந்து சேர்ந்தது. அது அவர்கள் திரட்டிய வேவுத் தகவல்கள் தான். இந்தச் செங்கதிர்வாணன் பின்னர் தேசத்தின் வெற்றிக்காகக் கரும்புலியாக மாறினான். வயதில் மூத்தவனான இவன் மற்றப் போராளிகளை மகிழ்வாய் வைத்திருப்பான். பயிற்சியின் போது கிடைக்கும் தேநீர் வேளை கூட போராளிகளை மகிழ்வாக்க நொடி கேட்பது இவன் வழக்கம். இதனால் நொடி மாஸ்ரர் என்ற பட்டப்பெயரும் இவனுக்கிருந்தது. இந்தச் செங்கதிரிடம் ஒரு ஆசையிருந்தது. ஆட்லறி ஒன்றிற்கு தனது கையால் குண்டு கட்டி அதை வெடிக்க வைக்க வேண்டுமென்று. அந்தக் கனவோடு மணலாற்றுப் பகுதிக்குள் வேவுக்காகச் சென்று திரும்பும் வழியில் 29.10.1999 அன்று அவன் வீரச்சாவடைய நேர்ந்தது. நிறைவேறாத அந்த வீரனின் ஆசையைப் பின்னாளில் பல ஆட்லறிகளை உடைத்து கூடவிருந்த கரும்புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள். நினைவுப்பகிர்வு: போராளி துளசிச்செல்வன். நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04 புரட்டாசி 2008). https://thesakkatru.com/veeraththin-sigarangal/
-
கரும்புலி மேஜர் அருளன்
கரும்புலி மேஜர் அருளன் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து மௌனக் குமுறல்: கரும்புலி மேஜர் அருளன் அமைதியான பொழுது… சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன. அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்… இந்த இடம்தான்… தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம். ஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன. அருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு? இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்… சுபேசனாக… சிற்றம்பலமாக… ஆசாவாக… உமையாளாக… இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன. “இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது. கண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது. “சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்…. டொள்… என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும். இதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான். அவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று. அந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எடுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்… கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்… உமையாள்… என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான். குண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன. தாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார். சந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க முன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான். அங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது. அவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான். பயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடு சேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான். “இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும். “அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்…” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான். கொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான். ஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன. ”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ…” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன. “இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான். “இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ…” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான். அந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர். காலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்த படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள். நினைவுப்பகிர்வு: போராளி துளசிச்செல்வன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மாசி, பங்குனி 2005). https://thesakkatru.com/black-tiger-mejor-arulan/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 யா நபி யா நபி | உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை உங்களைப் இனி பிறக்கப் போவதில்லை
- வல்வை சகாறா.jpg
-
மாவீரர் புகழ் பாடுவோம்
மானமென்றே வழ்வென கூறி