Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பூரணத்தை கையில் ஏந்தி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7 நிலை இல்லா உலகு நிஜமில்லா உறவு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவே உந்தன் வார்த்தையால்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்
- நிகே.jpg
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இருலோகம் போற்றும் இறைதூதராம் இசுலாத்தை தந்த நபிநாதராம் அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர், நபிநாதர் அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் கோடி கோடி இன்பம் எங்கள் கோமான் நபி சென்ற வழியில் பாடி பாடி மகிழ்வோம் எங்கள் பயஹம்பர் பகர்ந்த பொன் மொழியில் இன்னும் சொல்லவா அவர் பெருமை.... அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர் ஆதி இறை தந்த வடிவம் அன்னை ஆமினார் ஈன்றேடுத்த செல்வம் நீதி நிலை நாட்டி என்றும் நம்மை நெறியோடு வாழவைத்த நெஞ்சம் இன்னும் சொல்லவா அவர் மகிமை... அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர் வானமும் வையமும் போற்றும் நல்ல வழிகாட்டும் உயர் மார்க்கம் தந்தார் தீன் மழை பெய்திட எங்கும் நபி திருவேத மறை அளித்துச்சென்றார் இன்னும் சொல்லவா அவர் புகழை... அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர் இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்..நபிநாதர் அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா? தேவையான பொருட்கள் :பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோவெங்காயம் - 2தக்காளி - ஒன்றுபிரியாணி இலை - ஒன்றுஎண்ணெய் - தேவையான அளவுமராத்தி மொக்கு - ஒன்றுலவங்கம் - 3சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டிகொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடிகறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டிதயிர் - ஒரு மேசைக்கரண்டிபட்டை - சிறு துண்டுமிளகாய் தூள் - அரை தேக்கரண்டிபச்சை மிளகாய் - 3மஞ்சள் தூள் - சிறிதுபிரியாணி மசாலா - அரை தேக்கரண்டிஅன்னாசிப்பூ - பாதிஏலக்காய் - 3செய்முறை :இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார். https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/11/12150116/2061156/Prawn-Biryani.vpf
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கு இவர்கள் காட்டுக்குள் கட்டாக்காலியாக சுதந்திரமாக திரிவார்கள், பிடிப்பதில்லை. தப்பிடுவார் 😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அரிசி ஊற வைத்து அரைத்து கஷ்டப்பட வேணாம் 10 நிமிஷத்தில் பஞ்சுபோல soft அதிரசம் ரெடி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மீன் கத்தரிகாய் பொரித்த குழம்பு எங்கள் வீட்டில் குறைவு, அதிலும் இனிப்பு எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை, அதனால் அதிரசத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டேன்😁, எங்கள் தோழருக்காக சர்க்கரை அதிரசம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தீயினில் எரியாத தீபங்களே
-
மாவீரர் புகழ் பாடுவோம்
துப்பாக்கிச் சத்தங்கள்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
இந்த ஆடுகள் ஒருநாள் பட்டி திரும்பும்
- மாவீரர் புகழ் பாடுவோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே
- யாழ்கள ஆஸ்தான மருத்துவர் நில்மினி.gif
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செந்தமிழின் சந்தங்களை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தலையெழுத்தை மாற்றிவிடும்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாயயான மண்ணில் பிறந்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி வருகிறேன் பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... I கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... II உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு.........
-
கப்டன் ஈழமாறன்
பூநகரியில் புதுவீரம் படைத்த புயல் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து பூநகரியில் புதுவீரம் படைத்த புயல்: கப்டன் ஈழமாறன்/ தினேஸ் இந்தப் போராட்டத்தில் இணையும்போதே இந்த மண்ணில் வாழும் எம் இனத்தின் உண்மையான வாழ்வுக்காக தமது உயிர்களை தியாகம் செய்வதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்பவர்கள் தான் விடுதலைப்போராளிகள். போராளிகளாகிய எமக்கு ஒன்றுமட்டும் தெரியும், இந்த மண்ணில் மக்களுக்காக மரணிக்கப் போகின்றவர்கள் என்று. ஒரு சண்டைக்கு களம்நோக்கி நாம் செல்லும்போது இதில் வருபவர்கள் யாரோ வீரச்சாவைத் தழுவப் போகின்றோம், ஆனால் யார் என்பதுதான் தெரியாது. ஒவ்வொரு போராளியும் மனத்துள் நினைப்பான் அது நானாகத்தான் இருக்கவேண்டும் என்று. எமது விடுதலைப் போராட்டம் எமது போராளிகளின் உயிர்த்தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும் வளர்க்கப்பட்டு வருகின்றது. எம்மோடு ஒன்றாக இணைந்து வாழ்ந்த எம் சக தோழர்களை சண்டை முடிந்து வரும் போது, அவர்களது உயிர் அற்ற உடலை தோளிலும் அவர்களது இலட்சியக் கனவை மனதிலும் சுமந்து கொண்டு வருவோம். இது எம் விடுதலைப்போராட்ட வரலாற்றில் வழமையான நிகழ்வுதான். ஒரு சில போராளிகளின் வீரச்சாவு மிகவும் மனதைக் கசக்கிப் பிழிவதுண்டு. அந்த வகையில் என் மனதை வாட்டிய இலட்சியத்தில் மேலும் உறுதியேற்றிய வீரச்சாவுகளில் கப்டன் தினேசின் வீரச்சாவுச் செய்தியும் ஒன்றாகும். அந்தளவிற்கு இவனில் வீரமும் தியாக உணர்வும் விடுதலைப் பற்றும் ஆழமாக வேரூன்றிக் காணப்பட்டன. தனது பயிற்சியை முடித்து வலிகாமக் கோட்டத்திலே பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேறும் இராணுவத்தினருடனான சண்டைகளில் பங்குகொண்டவன். எம் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்த காவல் அரண்களில் கண்விழித்தக் காவல் காத்தவன். காவல் அரண்களில் நிற்கும்போதுகூட வேறு இடங்களிலும் இராணுவம் வெளியேறும்போது தனது குழுவுடன் சென்று அங்கு வெளியேறமுனையும் இராணுவத்தினரோடு சமராடியவன். இவனது சண்டைக்களங்கள் பல. ஆனையிறவு வரலாற்று யுத்தம் (ஆ.க.வெ), பலவேகய-02 என இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை, மணலாற்றில் நடந்த பல தாக்குதல் நிகழ்வுகளிலும் பங்கு கொண்டவன். இச்சண்டைகளில் எல்லாம் இவனிடம் இருந்த வீரமும், யுத்த தந்திரங்களும் இவனை ஒரு நம்பிக்கைக்குரிய போராளியாக மாற்றியது. இதனால் இவனிடம் பல போராளிகளை வழிநடத்தி சண்டைகளை வழிநடத்தும் ஆற்றலும் இருந்தது. இதனால் இவன் பெரிய ஒரு குழுவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். பூநகரி இராணுவ கடற்படை கூட்டுத்தளம் மீது தாக்குதல் நடத்த எம் தலைவர் தீர்மானித்தார். அதற்கான ஆயத்தவேலைகளுக்கான பணிப்புரைகள் எமக்கு வழங்கப்பட்டன. நாம் போராளிகளை ஒன்று திரட்டி சண்டைக்கான பயிற்சிகளில் ஈடுபட்டோம். இவன் ஒரு மினிமுகாமைக் கைப்பற்றும் குழுவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். ஒரு நாள் இவன் கடலில் நீந்தும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது திருக்கைமீன் முள்ளு ஒன்று இவனின் காலில் குத்திவிட்டது. இதனால் இவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். வைத்தியசாலையில் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் இவனைப் பார்வையிட நிற்கும் போராளிகளிடம், “என்னை பயிற்சி எடுக்கும் இடத்திற்கு கொண்டு போய்விடுங்கோ. என்ர பொடியள் என்ன பாடோ தெரியாது(தனது குழு) எனக்கு ஒர பிரச்சினையும் இல்லை” என்று அடம்பிடிப்பான். இவனது தொல்லை தாங்கமாட்டாமல் வைத்தியரிடம் கேட்டால், வைத்தியர் “இவர் இன்னும் ஒரு கிழமை வரையில் வைத்தியசாலையில் இருக்க வேண்டும். விசம் இன்னும் இருக்கு. சிலபேர் இறந்துகூட இருக்கினம். விடவேண்டாம்” என்று கூறுவார்கள். இப்படியே இரண்டொரு நாட்கள் கழிந்தன. ஒருநாள் காலையில் ஒரு பொதுமகனின் சைக்கிளில் வைத்தியசாலையில் எவருக்கும் சொல்லாமல் வந்துவிட்டான். பின் இவனை திருப்பி அனுப்பி வைத்தியசாலையில் பதிந்துவிட்டு வரும்படி அனுப்பி பதிந்துவிட்டு வந்து தனது இயலாத காலுடன் தனது குழுவுடன் சேர்ந்து சண்டைக்கான பயிற்சியை எடுத்தான். எப்போது பார்த்தாலும் பயிற்சி இல்லாத நேரங்களில் தனது போராளிகளை ஒன்றாக வைத்து தனது முகாம் பற்றியும் பல சண்டை அனுபவங்கள் பற்றியும் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் கதைத்துக் கொண்டிருப்பான். எம்மைக் கண்டால் கதை நின்றுவிடும். அதனால் இவனது குட்டிக் கதாப்பிரசங்கத்தை நாம் ஒளிந்து இருந்து கேட்போம். அந்த நேரங்களில் எல்லாம் இவனது கடமையில் – தனது இலக்கில் – கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றான் என்பதை உணர்ந்துகொண்டேன். இவ்வாறான காலகட்டத்தில் தான் ‘யாழ்தேவி’ என்ற பெயரில் ஒரு படையெடுப்பு நடக்கிறது. இந்தச் சண்டையிலும் தனது குழுவை வழி நடாத்தி இலங்கை இராணுவத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் பெரிய ஒரு தோல்வியை – இழப்பை எற்படுத்திய வரலாற்றுச் சமரில் தனது கடமையைத் திறம்படச் செய்தவன். இந்த வெற்றியில் இவனுக்குப் பெரியதொரு பங்குண்டு. தனது குழுவில் பலரை இழந்துவிட்ட நிலையிலும் ஓர் இரு போராளிகளோடு நின்று இறுதிவரை களத்தில் சமராடினான். தனது ஆயுதத்தின் ரவைகள் தீர்ந்ததும் வீரச்சாவடைந்த போராளியின் ஏ.கே இலகு இயந்திரத் துப்பாக்கியுடன் நின்று எதிரி மீது தாக்குதல் தொடுத்து பல எதிரிகளை எம் மண்ணில் சாய்த்தான். இந்தச் சண்டையில் இவனது திறமையையும் வீரத்தையும் கண்முன்னே காட்டியபோது இவன் நிச்சயமாக இவனுக்குக் கொடுக்கப்பட்ட மினி முகாமை (பூநகரியில் உள்ள முகாம்) கைப்பற்றுவான் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை என் மனதில் இருந்தது. நம்பிக்கையின் நட்சத்திரமாக இவன் விளங்கினான். பூநகரிச் சண்டைக்கான நகர்வுகளுக்கான ஆயத்த வேலைகளைச் செய்யும்போது ஒவ்வொரு போராளிகளினதும் சகல உடமைகளையும் தானே பார்வையிட்டு ஒழுங்குபடுத்திச் சரிசெய்து கொண்டு இருந்தான். சூரியன் தன்னை மறைத்துக் கொள்கிறது. இயற்கையும் எமக்கு பூமழை தூவி வழியனுப்புகின்றது. அந்த மழையில் நனைந்தபடி இரவோடு இரவாக இராணுவப் பிரதேசத்துக்குள்ளால் பல மணி நேர நடையின் பிற்பாடு எமக்குரிய முகாமில் இருந்து 1 கி.மீற்றர் தூரத்தில் நிற்கின்றோம். வேறு ஓர் இடத்தில் சண்டை தொடங்கிவிட்டது. உடனடியாக எமது இலக்குகளை நோக்கி வேகமாக நகரத்தொடங்குகின்றோம். குழுக்கள் பிரிந்து செல்லும் இடத்தில் வைத்து அந்த அந்த இலக்குகளுக்கு குழுக்கள் பிரிந்து நகருகின்றன. இவைகள் அனைத்தும் ஒரு குறுகிய நிமிட நேரத்துக்குள் நடைபெறுகின்றன. முன்னே சென்று கொண்டிருந்த தினேஸ் திரும்பி வந்து எனது கையைப் பிடித்து சத்தியம் செய்கிறான். அவனது சத்திய வாக்குக்குக் கட்டுப்பட்டு வோக்கியில் அவனைத் தொடர்பு கொண்டு நிலமையைக் கேட்டபோது அவனிடம் இருந்து கடைசியாக கிடைத்த பதில், “இன்னும் ஒரு நிமிடத்துக்குள் பிடித்துவிட்டு உங்களுடன் கதைக்கிறன்” என்ற வசனம் மட்டுமே. பெரிய வெடியோசைகள், எங்கு திரும்பினாலும் ஒரே பரா வெளிச்சக்குண்டுகள், இராணுவத்தினரின் லேசர் ரவைகள் தணல் தணலாகப் பறந்தன. ஒரு வாண வேடிக்கையே நடந்தது. பலமான துப்பாக்கிச் சண்டை ஒருவரை ஒருவர் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வைத்து நடக்கிறது. இவனை தொலைத் தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொள்கிறேன். தொடர்பு இல்லை. சிறிது நேரத்தில் போராளி அறிவிக்கின்றான். முகாம் எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதையும் தினேஸ் வீர்ச்சாவு என்ற செய்தியும் வருகின்றது. இவனோடு சேர்ந்து இன்னும் பல போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர். இவன் கடைசியாக வோக்கியில் சொன்ன வசனம் இன்னும் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பெரிய ஒரு வரலாற்றுச் சமரிலே இந்த மக்களுக்காக தன்னை அழித்ததன் மூலம் இன்று இதே மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். இவன் எம் இனம் வாழும்வரை வாழப்போகின்றான். இவனது… வீரச்சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டதே தவிர எம் மனங்களில் மக்களின் மனங்களில் இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. நினைவுப்பகிர்வு: வ.செல்வராசா, யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். நன்றி களத்தில் இதழ் (25.02.1994). https://thesakkatru.com/captain-eelamaran-is-a-new-storm-in-poonakary/
-
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம் பெயர்ந்தது. இந்த இடப்பெயர்வுதான் இவளுள் போராட்ட உணர்வை விதைத்தது. வீட்டிலே மூத்தவள் இவள். பின்னால் ஆறு பேர். குடும்பப்பொறுப்பு அவளை இழுத்துப் பிடித்தாலும், வீட்டார்மேல் அவளுக்கிருந்த பாசமே நாளடைவில் அவளைப் போராடத் தூண்டியது. 1992இல் கடற்புலிகள் மகளிர் படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமில் இன்னிசைக்கும் பாரதிக்கும் இடையில்தான் பயிற்சியில் போட்டி. இருவரும் நல்ல நண்பிகள். ஆனால் எதிலும் போட்டிதான். பயிற்சி முடிந்ததும் மருத்துவப் போராளியாகக் கடமையாற்றிய போதே நீச்சற் பயிற்சியையும் எடுத்தாள். எந்த நேரமும் சண்டைக்குப் போகக்கூடிய தயார் நிலையில் தன்னை வைத்திருந்தாள். மருத்துவ முகாமிலே மருந்துகளை விட இன்னிசையின் கதைதான் காயங்களை, நோயை விரைவில் ஆற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும். கரும்புலியாகப் போகும் தன்விருப்பத்தைத் தெரிவித்து, நளாயினி படையணிக்கு வந்ததும் பாரதியை மீண்டும் சந்தித்தாள். இடையிலே பிரிந்த தோழிகள் தமது இலக்கினால் மீண்டும் ஒன்றாகினார்கள். தனது படகைத் தானே கழுவுவாள். தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே செய்து கொள்வாள். தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு எது தெரியாதோ, அதைச் சொல்லிக் கொடுப்பாள். தன்னைப் போலவே எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்று விரும்புவாள். இரவு நேரங்களில் தென்னை மரங்களில் ஏறி, தேங்காய் திருடி இளநீர் குடிப்பதைப்போல் அவளுக்கு சுவாரசியமான விடயம் வேறொன்றுமில்லை. கரும்புலியாகப் போகும் போது, ஒரு பெண் போராளியுடன் போவதுதான் தனது விருப்பம் என்று பொறுப்பாளரிடம் அடிக்கடி சொல்வாள். வெடிமருந்தேற்றிய படகுடன் கடலில் அலைந்து விட்டு, இலக்குக் கிடைக்காமல் திரும்பும்போது தோழிகளின் அபாரமான அறுவைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ”இந்தமாதிரி இழுபடுகிறாய். இனி உனக்குத் தொண்ணூற்றி ஏழில்தான் சான்ஸ்” 1996-07-19 ஓயாத அலைகள் தாக்குதலின் இரண்டாம் நாள், மிதுபாலனையும் இன்னிசையையும் சுமந்த கரும்புலிப் படகு ‘ரணவிரு’வுடன் மோதியது.ஏதோ பிசகி விட்டது. படகு வெடிக்கவில்லை. ‘ரணவிரு’வின் எதிர்த்தாக்குதலால் இன்னிசை காயமுற்றாள். தவிர்க்கமுடியாமல் இருவரும் கரை திரும்ப நேரிட்டது. இன்னிசை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 1996-07-24 அன்று மிதுபாலன், சயந்தனுடன் போய் மற்றொரு தரையிறங்கு கப்பலைத் தாக்கி காவியம் படைக்க, தனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற கவலை அவளை வாட்டியது. இன்னிசைக்கும் பாரதிக்கும் இலக்குக் கொடுக்கப்பட்டபின்னர், அவள் தன் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனாள். நோயால் வாடியிருந்த தாய் மகளை வீட்டுக்கு வந்து குடும்பப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டாள். இன்னிசை மெல்லச் சிரித்தாள். ”கொஞ்ச நாளில வருவன் அம்மா” நீண்ட கால அலைச்சலின் பலன் 1996-11-11 அன்று அதிகாலை இன்னிசைக்குக் கிட்டியது. காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகுமீது இன்னிசையையும் பாரதியையும் சுமந்த படகு பாய்ந்தது. தன் மகள் கடைசியாகத் தனக்குச் சொன்ன வரிகளின் பொருள் அப்போதுதான் அந்தத் தாய்க்குப் புரிந்தது. இன்னிசை தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடைசிக் கடிதத்திலிருந்து ஒரு கவிதை: நீலக்கடல் வற்றினாலும் என் மழலைச் சகோதரர்களின் முகங்கள் என் மனதில் அலை மோதுகின்றது நிலவு வந்து ஒளிபரப்புகின்ற நேரத்தில் என் பெற்றோர் அரவணைத்த பாசப் பிணைப்பு நெஞ்சத்தில் ததும்புகின்றது. நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பிலிருந்து… நன்றி: களத்தில் இதழ் (12.02.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-innisai/