Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. ராகம்: நாட்டைக்குறிஞ்சி தாளம் : ஆதி பல்லவி பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்- பரவச மிக வாகுதே!………………..கண்ணா! – (பால்) அனுபல்லவி நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் – நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் – எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் – (பால்) சரணம் வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்- -மோனமுகம் வந்து தோணுதே – தெளிவான தெண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்-சிரித்த முகம் வந்து காணுதே – சற்று- கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் – அங்கு -உன் கானக் குழலோசை மயக்குதே – மத்தியம காலம் கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -, கான மயிலாடும் – மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-, குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே- கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-, காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி – கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்...
  2. தமிழ்ச்செல்வம் அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில், வழித்தடங்கள்/0 கருத்து ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி காலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில் தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங்கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட் பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை. ஆனால் ஒரு உயரிய போராளிக்குக் கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய மதிப்பு எதிரியால் கொல்லப்படுவதுதான். அத்தகைய போராளியான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வாழ்வும், வரலாறும் பிறருக்காக உழைத்து அவருக்காகவே மகிழ்வோடு மடிந்த வரலாற்று மனிதர்களின் வரலாற்றுத் தடங்களோடு இணைந்துவிட்டது. சர்வதேச ரீதியிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடாக இன்று ‘சே’ பார்க்கப்படுகின்றார். தமிழின எழுச்சியின் வெளிப்பாடாக இன்று தமிழ்ச்செல்வன் கணிக்கப்படுகின்றார். இப்படிப்பட்டவர்களின் வரலாறுகளாலே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அதற்குரிய தகமைகளைப் பெறுவதும் அதன்வழி இறுதி யில் வெல்வதும் நிகழ்கின்றது. அந்த வகையில், தான் வாழும் சூழலில் பாதிப்படைந்து போராளியாகி அத் தடைகளைத் தாண்டுவதின் மூலம் சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தி இறுதியில் அப்போராட்டத்திற்கே உரமான தமிழ்ச்செல்வன் தமிழ் கூறும் நல்லுலகின் மதிப்பைப் பெறுகின்றார். 1967இல் பரமு விசாலாட்சி இணைக்கு தமிழ்ச்செல்வனாகி, 1984இல் விடுதலைப்புலிகளுக்குத் தினேஸ் ஆகி, 2007இல் தமிழ்மக்களுக்கு தமிழ்ச்செல்வமாகிய கதைதான் இது. 1984 – 2007 வரை 23 ஆண்டுகள் தன் இளமைப்பருவம் முழுவதையும் விடுதலைக்கு ஒப்புக் கொடுத்த அவரது போராட்டம் முப்பரிமாணம் கொண்ட தளத்திலே இயங்கியதாக கணிக்கமுடியும். அவரது போராட்ட வாழ்வு விடுதலையமைப்பின் வளர்நிலையின் படி மலர்ச்சிப் பாதையோடு ஒத்தது. மூன்று காலகட்டங்கள், மூன்று வௌ;வேறு சூழல்கள் – இவற் றிற்கு முதலில் இசைவாக்கம் பெற்றும் பின்னர் ஈடு கொடுத்தும் அவர் செயற்பட்டதின் தடங்களே அவரது ஆளுமையின் உருவகமாகின்றன. எமது விடுதலைப்போராட்டத்தின் திருப்புமுனை ஆண்டாகக் கருதப்படும் 1970களை அண்மித்து அவர் பிறப்பெடுக்கின்றார். பிற்காலத்தில் அறியப்பட்ட அவரது சிறந்த ஆளுமைக்குரிய பண்புகள் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட குடும்பப் பின்னணியாலும் விடுதலைப்புலிகளின் தொடர்புள்ள சூழலால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. இவை அவரை ஒரு வழமையான மனிதனாக மாறவிடாது போராளியாக்கி விடுகின்றது. அவருக்குப் பெற்றோரால் இடப்பட்ட பெயர் தமிழ்ச்செல்வன் என்பதும் அவரது புன்சிரிப்பும், மலர்ந்த முகமும் இயல்பிலேயே உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. “இளவயதிலும் சரி இப்போதும் சரி எதையும் தனக்கெனச் சேர்த்துவைக்கும் பழக்கமற்றவன்” என அவரது மூத்த சோதரரில் ஒருவர் கனடாவில் துயர் பகிர்வின் பொழுது நா தழுதழுக்கக் கூறினார். உண்மையில் இப்போது எண்ணிடும் பொழுது அவரை பிற் காலங்களில் சந்தித்த எவரும் ஏதாவது பயன்களை அவரிடம் இருந்து பெறாமல் சென்றதில்லை என்பதும் எம் நெஞ்சின் நீங்காத பதிவுகளாய் உள்ளது. விடுதலைப்புலிகள் கரந்துறைப் போர்முறையினைக் கைக்கொண்ட வேளையில் அவர் இயக்கத்தில் இணைகின்றார். இயக்க மரபிற்கேற்ப தனியாகவும், குழுவாகவும் வீர உணர்வுள்ள போராட்டச் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்ட காலமது. அவரது சிறப்பு இயல்புகள் தேசியத் தலைவரை ஈர்த்தமையும், அதன் விளைவாகத் தேசியத் தலைவர் பிற்காலத்தில் தான் சந்திக்கப் போகும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கத்தக்கதொரு நம்பகமான துணைவனைப் பெற்றதும் நாம் கவனிக்கத்தக்கது. 1987 – 1990 வரை இந்தியப்படைகளுக்கு எதிரான துணிகரமான, இடைவிடாத தாக்குதலை நடத்திய உணர்ச்சிகரமான போராளியாக அவர் அறியப்படுகின்றார். கரந்துறைப் போர்முறைக் கால கட்டத்திலே போராளிகளின் இருப்பும், பாதுகாப்பும் மக்களின் கைகளிலேயே இருக்கும். ‘சே’ முன்பொருக்கால் எழுதினார். “ ஒரு புரட்சிக்காரனுக்குத் தேவையானவை எவை? வலிய கால்கள், பிச்சைக்காரன் வயிறு, எளிய சுமை”. தமிழ்ச்செல்வன் வெறும் கால்களுடன் தென்மராட்சி மண்ணிலே இந்தியப் படையோடு மோதிய காலத்தில் அலைந்து திரிந்து தென்மராட்சி மக்களின் அபிமானம் பெற்ற ‘செல்லப்பிள்ளையாக’, ‘எங்க வீட்டுப்பிள்ளையாக’ அவர் ஆகிவிடுகின்றார். எத்தனை அன்னையர் அவருக்கு உணவூட்டியும், கண்போலக் காத்தும் நினறனர் பிற்காலத்தில் எத்தனை உயர்ந்த நிலைக்கு சென்றாலும் தனக்குதவிய மக்கள் நெருக்கடிகளுக்கு உட்பட்டபொழுது முடிந்தளவு உதவிகளைச் செய்ய அவர் தயங்கவில்லை. அவரது நன்றிமறவா இப்பண்பு உயரியது. அவ்விளவயதில் கபடமற்ற மனதோடு தன்னோடொத்த தோழரோடு போராடிய காலம் அவர் வாழ்வின் பொற்காலமாக அவர் மனதில் பதிந்திருந்தது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக அவர் பதவியேற்ற பின் அடிக்கடி அவர் அசைபோடும் மலரும் நினைவுகளாகவும், மக்கள் உறவில் கவனமின்றி செயற்படும் போராளிகளுக்கு அறிவுரையாகவும் இந் நினைவுகளை மீட்டுக்கொள்வார். அப்போது அவர் மலர்ந்த முகம் மேலும் மலரும். இப்போது இரண்டாம் காலகட்டம். இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னான கட்டம். விடுதலைப்புலிகள் நகர்வுப் படையணியாகி மரவுவழிப் படையணியாகப் படி வளர்ச்சி கண்ட காலம். ஒருபுறம் பாரிய படைநடவடிக்கைகள் மறுபுறம் அரசியல் நிருவாக அலகுகள் கட்டமைப்பு என இருவேறுபட்ட பணிகளோடு மருத்துவத்துறையில் மறைவான ஆனால் நிறைவான வளர்ச்சிக்கான ஏற்பாடுகளென அவர் பணியாற்றினார். 1995இல் சந்திரிக்கா அரசோடான பேச்சுக்களிலும் தலைமை தாங்கித் தனக்கான பட்டறிவையும் பெற்றுக்கொள்கின்றார். 1995 ஏப்பிரலின் பின் மீண்டும் போர் வெடித்தமை, இடப்பெயர்வு, வன்னிவாழ்வு, முல்லைச்சமர், ஜெயசிக்குறு, ஓயாத அலைகள் என வரலாற்று நிகழ்வுகளால் எம் வரலாறு நிரம்பிவழியும் போதெல்லாம் தமிழ்ச்செல்வன் தலைவர் அருகில் சிறப்புடனும், சிரிப்புடனும் நின்றார். ஓர் மனிதனால் இத்தனை பணிகளையும் சுமந்திட முடியுமா என மற்றவர் ஏங்கிடுமளவு பளுச்சுமந்தார். தலைவன் முகமறிந்து – மனமறிந்து – விருப்பு – வெறுப்பறிநது – ஓயாத சிந்தனையின் பொழுது தலைவரிடமிருந்து வெளிப்படும் அறிவுறுத்தலறிந்து அவற்றினை நடைமுறைச் செயற்பாடாகமாற்ற அவர் பட்டபாடு, தலைவரின் சுருக்கமான ஆனால் மிக அடர்த்தியான கூற்றுக்களை விரிவான பேச்சுக்களாக மொழிபெயர்த்து அவர் பாரதி பாடிய கண்ணனின் (கண்ணன் என் தோழன் – என் சேவகன், என் சீடன்) பல்வேறு அவதாரம் எடுத்தார். இக் கட்டத்திலே…. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான் இங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன் கண்ணன் என்னகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம், எதுமவன் பொறுப்பாய். என பாரதி பாடியபாடல் நினைவிற்கு வருகின்றது. இப்போது மூன்றாம் கட்டம். புலிகளின் சருவ தேச வருகை நிகழ்ந்த காலம். சருவதேச தொடர்பு பெருகிய காலம். திடீரென இயக்கம் இராணுவ அரசியற் செயற்பாட்டிற்கு அப்பால் இராசதந்திரம் எனும் உச்ச அரசியல் நுண்ணுணர்வுத் திறன்மிக்க செயற்பாட்டில் கால்வைத்த நேரம். இங்கும் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு நிகழ்கின்றது. பாலா அண்ணையின் துணையுடன் இவ்வளவு சடுதியான மாற்றங்களுக்கெல்லாம் அவர் தன்னை உட்படுத்தினார். தன்முத்திரை பதித்து உலகத்தாரிடம் மிகப் பிரபலம் பெற்றார். புலிகள் என்றால் அது தமிழ்ச்செல்வனின் பூ மலர்ந்த முகமே என சருவதேசமே உணரும் பிம்பம் அவருடையதாகியது. இக்கட்டத்திலேயே ஒரு சிறப்பை இங்கே நாம் பதிவு செய்யவேண்டும். சர்வதேச உறவுகள், சர்வதேச கற்கைநெறிகள் என பெருமெடுப்பில் இராசதந்திர உலகம் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையிலேயே கற்றுப் பிள்ளையாக தமிழ்ச்செல்வன் களமிறங்கினார். அதற்கு முகம் கொடுக்கும் ஆற்றலையும் அவர் தன்னுள் வைத்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடும் போராளிகளுக்குள்ளே அளவற்ற ஆற்றல் வலிமை பெருகும் என்பது வரலாற்று விதி. எத்தகைய சிக்கல்களைக் கொண்டதாக இராசதந்திர உலகம் அமைந்தாலும் அங்கும் அடிப்படை மனித உறவுகளைச் சீராகப்பேணல் என்பதே. பாலா அண்ணையின் வழிகாட்டலோடு இதிலும் தமிழ்ச்செல்வன் தகுதிநிலை பெற்றார் என்பதற்கு போவர் அவர்களின் இரங்கலுரையே சான்று “அவருக்கூடாகவே புலிகள் அமைப்பு தொடர்பான பிம்பம் சருவதேசத்தில் கட்டியெழுப்பப்பட்டது. அவரின் வழியே புலிகள் சருவதேசத்தில் அறியப்பட்டார்கள்” என்கின்ற கருத்துப்பட போவர் பேசினார். இப்பொழுது தன் கடன் முடித்து அவர் நிறைவெய்திவிட்டார். ஆனால் எம்பணி நிறைவெய்தவில்லை. அவரிடமிருந்து நாம் பெற்றதென்ன? கற்றதென்ன? வரலாறு எழுப்பும் வினாவிது. தன் ஒவ்வொரு வருகையின் பொழுதும் மகிழ்வையும், கலகலப்பையும், பரபரப்பையும் கூடவே கொண்டு வரும் – பிறர் எவராயினும் எழுந்து நின்று மதிப்பளித்து நலம் விசாரிக்கும்போது குளிரவைக்கும் – அவரவர் மன அலைவரிசையில் அவரவர் குறைநிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் தன்மையை எம்மால் முற்றாகப் புரியமுடிந்ததா? நம்பமுடியாத பொறுமையுடனும் எவருக்கும் கிட்டாத இனிமையுடனும் ஆதிக்கம் காட்டாத – கோபிக்காமல் பாதிப்பேற்படுத்தும் நிருவாகம் அவரது. நவீன முகாமையியல் கூறும் தலைவனாகிவிடு, ஆனால் அதிகாரியாகவிராதே – நல்லெண்ணத்தை நம்பு – அதிகாரத்தை நம்பாதே – நான் என்று சொல்லாதே நாம் என்று சொல் – மதிப்பை வேண்டிப்பெறாதே உன் தகுதியால் பெறு என்று நீளும் கூற்றுக்களோடு பிறரை உற்சாகப்படுத்தி, தூண்டி வேலைவாங்கும் தன்மையை அவர் கைக் கொண்டார். “மதி உணர்ச்சியோடு மன உணர்ச்சியையும் கொண்டிருந்தார்”. அவரது மன ஆழத்தில் மக்களுறவே ஆழப்பதிந்திருந்தது. “எம் மக்கள் எம் மக்கள் என்றும் மக்களிடம் போங்கோ மக்களிடம் போங்கோ” என்றும் எப்போதும் போராளிகளிடம் கூறியவண்ணமேயிருப்பார். மக்களைப் பற்றிக் கதைப்பதோடு நில்லாமல் மக்களோடும் கதையுங்கள் என்றார். அவரது இலக்கினை நிறைவேற்றுவதே அதற்குரியவராக எம்மை உருவாக்கிக்கொள்வதே எமது பணி. அதுவே அவருக்கு நாம் செய்யும் உச்ச மதிப்பு. ஏனெனில் இறுதிக் காலத்தில் அவரது உள் மனதில் பெரும் கவலையாக இருந்தது மக்கள் படும் துயரே. அதை நாம் நீக்க முற்படும்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீண்டும் எம்மிடம் தோன்றுவார். “சே எந்த இடத்திற்கு உரியவரோ அந்த இடத்தில் அவரைக் காணமுடியும்” என்கின்ற கூற்றை அவருக்குரியதாக்கி எமது ஆழ்ந்த அன்பையும் நன்றியையும் அவரிடமே விட்டுச்செல்கின்றோம். நினைவுப்பகிர்வு:- க.வே.பாலகுமாரன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2007). https://thesakkatru.com/tamilselvam/
  3. உடல் ஆரோக்கியத்திற்கு பாகற்காய் காரக் குழம்பு தேவையான பொருட்கள் பாகற்காய் - 300 கிராம், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன், சின்னவெங்காயம் - 200 கிராம் நல்லெண்ணெய் - 50மி.லி., தக்காளி - 2, புளி - எலுமிச்சைப்பழ அளவு, உப்பு - தேவைக்கு, நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 100 கிராம். செய்முறை சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும். பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும். https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/11/02150209/2028745/pavakkai-kara-kulambu.vpf
  4. காண கண்ணாயிரம் வேண்டும் ராகம்: கர்நாடக தேவகாந்தரி இயற்றியவர் : அருளவன் விருத்தம்: சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும் உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும் முருகனை காண கண்ணாயிரம் வேண்டும் முருகனை காண ஆயிரம் காணவேண்டும் வேலணை காண கந்தனை காண குமரனை காண ஆயிரம் காணவேண்டும் உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண) சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும் செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை || முருகனை காண ஷண்முகனை காண வேலணை காண சிவபாலனை காண ஆறுமுகனை காண கந்தனை காண குகனை காண கடம்பனை காண குருபரனை காண கார்த்திகேயனை காண மயில்வாகனை காண பழனி வேலணை காண உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா
  5. அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே நிலையான சொந்தம் நீங்காத பந்தம் நிலையான சொந்தம் நீங்காத பந்தம் அவரன்றி வேறில்லையே அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேபோற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஇறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே நிலையான சொந்தம் நீங்காத பந்தம் நிலையான சொந்தம் நீங்காத பந்தம் அவரன்றி வேறில்லையேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
  6. மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு நவம்பர் 2, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03-11-2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது. தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன். தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன். நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ வே. பிரபாகரன் தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள். https://thesakkatru.com/the-ideal-fire-that-melted-itself-and-worked-for-the-people/
  7. ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
  8. லெப். கேணல் ராகவன் நவம்பர் 2, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து விடுதலையின் பாதையில் அழியாத தடம்: ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் ராகவன். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராகவனையும் தன்னுடன் அணைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று ஏடுகளிற் பெரும் சரித்திரப் பதிவுகளாகிய தலைவர் பிரபாகரனின் படை நடத்தல்களிலெல்லாம் முன் நின்று உழைத்த வீரப்புலி அவன். அவனும் “ஓயாத அலைகள் 03” இன் சரித்திரத்திற்காகத் தலைசாய்க்க அச்சமர் பெருமைமிகு வெற்றியோடு நிறைவுபெற்றது. ராகவன் இரவும் பகலும் ஓயாது உழைத்து வளர்த்துவிட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் போராளிகள் எதிரியரண்களை உடைத்து உட்புகுந்து புளியங்குளம் வரையும் கைப்பற்றிச் சற்று ஓய்வெடுத்த போது “எங்கட சண்டைகளையும் வெற்றிகளையும் பார்த்துச் சந்தோசப்பட ராகவன் அண்ணை இல்லாமற் போய்ட்டாரே” என்று அங்கலாய்த்தனர். “எதிரி அவரைத் தடையிலேயே வீழ்த்திப் போட்டான். பாவம் எதிரி; அவனுக்கு எப்படித் தெரியும்இ ராகவன் அண்ணை தான் இப்பவும் எங்கட மனங்களுக்குள்ள இருந்து எங்களை வழிநடத்திறார் எண்டு” அதுதான் உண்மையில் நடந்தது. ஆம்… தானில்லாத வேளைகளிலும் வீரர்களை வெற்றியின் பாதையில் வழிநடத்தக்கூடிய வழிகாட்டலின் உயரிய தலைமைப் பண்புஇ எங்கள் தலைவன் வளர்த்தெடுத்த அந்த தளபதியிடம் இருந்தது. ராகவன்! அற்புதமான போராளி; ஆற்றல் மிக்க போர்த்தளபதி; எல்லோரையும் நேசித்ததால் எல்லோராலும் நேசிக்கப்பட்ட ஓர் உயரிய மனிதன்; நீண்ட ஈடிணையற்ற விடுதலைப் போர் வரலாற்றில் அவன் ஓர் அத்தியாயத்தின் பதிவு. அவனின் வரலாற்றை எழுதுவதானால் ஈழப்போரில் தொண்ணூறுகளில் போரியலில் முக்கியமான வரலாற்றுக் கட்டமொன்றை எழுதியேயாக வேண்டும். அக்கால கட்டத்தின் முக்கியத்துவமான போர்க்களங்களில் எல்லாம் சரித்திரம் படைத்த வீரனவன். 1990 – 1991 காலப்பகுதியில் மாவட்டரீதியில் நடந்த சிறுசிறு தாக்குதல்கள் பலவற்றில் பங்கு கொண்டவன் ராகவன். அந்தப் புலிக்குள்ளிருந்த இராணுவ ஆற்றல்களையும், போராட்டப்பற்றையும், உறுதியையும் மணலாற்றின் சிங்களப் படைகளின் ‘ஒப்பரேசன் மின்னல்’ வெளிக்கொணர்ந்தது. வன்னி மாவட்டத்தின் 1.9 படையணியில் தளபதி தீபனின் வீரர்கள் நூற்றைம்பது பேர் கொண்ட அணியிற் சாதாரண போராளியாக ராகவனும் களம் இறங்கினான். போராட்ட வரலாற்றில் மிகவும் கடுமையான போர்க்களங்களில் ‘மின்னல்’ களமும் முக்கியமானது. ஆணையிறவிற் பாய்ந்த புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்திவிட்டதாக கற்பனை செய்த சிங்களம் தமிழீழத்தின் இதய பூமியை ஆக்கிரமித்து விடுதலைப் போருக்கு முடிவுகட்ட எண்ணியது. பல்லாயிரம் எனத்திரண்டுஇ நவீனரக ஆயுதங்களை ஒன்றிணைத்து, சிங்களப்படைகள் போரிற் குதித்திருந்தன. எறிகணைகளும் போர்விமானங்களும் இதயபூமியை அதிரவைக்க, குண்டு மழையுட் குளித்தபடி மண்காத்த மறவர்களுள் ராகவனும் ஒருவனாகப் போரிட்டான். எந்தவொரு போர்வீரனுக்கும் கடினமான போர்க்களம் அது. அந்தப் போர்க்களத்தின் ஒவ்வொரு நாளும் ராகவனை நன்கு இனங்காட்டியது. உணவும் நீருமின்றி நாட்கணக்காய்ப் போரிட்ட பொழுதெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கி முன்மாதிரியாகச் செயற்பட்ட அந்த வீரனின் செயல்கள் எமது அணித்தலைவருக்குக்கூட உற்சாகத்தை கொடுத்தனவென்றால் அது மிகையல்ல. ‘மின்னல்’ களத்திலேயே சமரின் குறுகிய நாட்களில் தளபதி தீபன் அவர்களால் ஏழுபோர் கொண்ட அணியொன்றின் தலைவனாக்கப்பட்டான். ஒவ்வொரு புலி வீரனும் வரலாற்றிற் பெருமைகொள்ளத்தக்க அந்தச் சமரிற் பங்குகொண்ட 1.9 படையணியில் இறுதியாகத் திரும்பிய ஐவருள் ராகவனும் ஒருவன். ‘மின்னல்’ முடிந்து சில நாட்களிலேயே சிங்களப் படைக்குப் பேரிடி கொடுத்த முல்லைத்தீவு இராணுவ முகாமின் 3ஆம் கட்டை மினி முகாமின் மீது பாய்ந்த புலியணியில் ராகவன் 15 பேர் கொண்ட அணியின் பொறுப்பாளனாக இருந்தான். சிங்களப்படையினர் பத்துப்பேரின் உடல்களும் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்ட அந்தத் தாக்குதலில் ராகவனின் அணி தனது பணியைச் செவ்வனே செய்தது. 1992ஆம் ஆண்டில் ராகவன் நன்கு இனங்காணப்பட்ட அணித்தலைவனாகி விட்டான். அவனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவனது ஆளுமை வெளிப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அந்த வீரன் செய்த பல வெற்றிகரமான அதிரடித் தாக்குதல்கள் சிங்களப்படைகளைக் கதிகலங்கச் செய்தன. வண்ணாங்குளம், கொம்பாவெவ, செட்டிகுளம்… என இக்காலப்பகுதியில் மட்டும் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட வெற்றிகரமான தாக்குதல்களில் அவன் பங்குகொண்டான். குறுகிய காலத்திலேயே வளர்ச்சி கண்ட அந்தப் போர் வீரன் அப்போது 45 பேர் கொண்ட அணியொன்றின் பொறுப்பாளனாக்கப்பட்டிருந்தான். வன்னியில் எதிரியிருந்த மூலைமுடுக்குகளிலெல்லாம் அந்தப் புலிவீரனின் துப்பாக்கி சடசடத்தது. வழிநடத்தும் அவனின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. 2ஆம் கட்ட ஈழப்போரிற் புலிகள் இயக்கத்தின் போரியல் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, சிங்களத்தின் போர், அரசியல் அரங்குகளை அதிரவைத்து, உலகின் புருவங்களை உயரவைத்த ‘இதயபூமி 01’, ‘யாழ்தேவி’ ஆகியவற்றுக்கெதிரான முறியடிப்புச் சமர்கள், ‘ஒப்பரேசன் தவளை’ ஆகிய களங்களில் தனது அணியுடன் முக்கிய சண்டைகளில் இறங்கி காத்திரமான வெற்றியை ஈட்டினான். ஓவ்வொரு சண்டையிலும் அந்தப் புலியின் ஆளுமை புடமிடப்பட்டது. அந்த வீரனுக்கு அதிஸ்டவசமாக எண்ணிலடங்காச் சண்டைக் களங்கள் கிடைத்தன என்பதை விட அந்த இடங்களிலெல்லாம் அவனின் தேவை அவசியப்பட்டதென்றே சொல்ல வேண்டும். அதனாலேயே ராகவனின் சண்டைப் பட்டியல் நீண்டு கொண்டே போனது. வன்னியில் நிலை கொண்டிருந்த சிங்களத்துப் படைகளுக்கு ஒவ்வொரு முனைகளிலும் ராகவன் பாடம் புகட்டினான். 1995 இல் 3ம் கட்ட ஈழயுத்தம் மூண்ட போது ராகவனின் பணி யாழ்ப்பாணம் வரை விரிந்தது. குடாநாட்டைப் பிடிக்கத் தன் பலத்தின் முழுமையையும் திரட்டி இறங்கிய சிங்களத்தின் ‘சூரியக்கதிர்’ நடவடிக்கையை அங்குலக் கணக்கில் நகர வைத்த போர்களத்திலும் ராகவன் போரிட்டான். ‘சூரியக்கதிர்’ முடித்து புலிகள் இயக்கம் முழுதாக வன்னிக்கு வந்து சேர்ந்த போது ராகவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையில் இணைக்கப்பட்டான். ராகவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வந்ததும் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவமானவை. தலைவர்; நம்பிக்கையுடன் அவற்றை அவனிடம் ஒப்படைத்த போது அக்கறையெடுத்து, தனது கடின உழைப்பால் அவற்றையெல்லாம் நேர்த்தியாகச் செய்து முடித்தான். யாழ்க் குடாநாட்டை ஆக்கிரமித்து திமிர் கொண்டிருந்த சிங்களத்தின் இராணுவக் கற்பனைகளை அர்த்தமற்றதாக்கிய, “புலிகள் ஓய்ந்துவிட்டார்கள்” எனப் பகற்கனவு கண்டவர்களுக்கு நெத்தியடி கொடுத்த ‘ஓயாத அலைகள் 01’ இல் மிகவும் முக்கியமான பணியொன்று ராகவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிக்காக இரவு பகலாய் உழைத்த தலைவர் அந்தப்பணியை அவனிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த போது அதைத் திறம்படச் செய்து முடித்தான். அத்தளத்தின் பிரதான முகாமின் உயர்பாதுகாப்பு அரண்களைப் பிரித்தெறிந்து, உள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றுவதில் தான் வெற்றியின் நிச்சயத்தன்மை தங்கியிருந்தது. தலைவரின் நம்பிக்கைக்கேற்ப அவன் அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தான். அதனால் தளம் எமது கைகளில் வீழ்ந்தது. மோதல்கள்இ சண்டைகள், சமர்கள் எனத் தமிழீழ போரரங்குகளிலெல்லாம் சுற்றிச்சுழன்றான் ராகவன். சண்டைகளால் ராகவன் புடமிட்டான் என்பதிலும், சண்டைகளை ராகவன் புடமிட்டான் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆம், அப்படித்தான் இருந்தது நிலைமை. அறிவாலும் அனுபவத்தாலும் போரியலில் அவன் உயர்ந்து நின்றான். தனது களச்செயற்பாடுகளில் அவற்றை வெளிக்காட்டித் தலைவரின் தனிப்பட்ட விருப்பைப் பெற்றிருந்தான். தளபதி ஒருவருக்கான கடமைகள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டன. போர்முனையில் இறுக்கமான கட்டங்களிலெல்லாம் ராகவன் தேவைப்படுவான். எமது படைநடவடிக்கைகள் இறுக்கமான கட்டங்களைச் சந்தித்த பல சந்தர்ப்பங்களில் அவற்றை உடைத்தெறிந்து எமக்குச் சாதகமான நிலைமைகளைப் பெற்றுத்தந்திருக்கிறான். நெருக்கடியான வேளைகளில் எங்கள் மூத்த தளபதியின் கண்களுக்குத் தெரிபவர்களுள் ராகவன் முக்கியமானவன். “இக்கட்டான வேளைகளில் நேரிலேயே களமிறங்கி நிற்கும் தலைமைப் பண்பு அவனிடம் இருந்தது” என்றார் தளபதி கேணல் தீபன். “முன்னரங்கப் போர் நிலைகளில் தனது போராளிகளுக்குச் சண்டையில் வைத்தே சண்டை பழக்கும் தளபதி அவன்” என்று ராகவனின் தலைமைத்துவத்தை நினைவு கூர்ந்தார் களத்தில் நின்ற தளபதியொருவர். 1997 ஜனவரியில் ஆணையிறவு – பரந்தன் படைத்தளங்களிற் புலிகள் இயக்கத்தின் படையணிகள் பாய்ந்த போது முக்கிய முனையொன்றில் ராகவனின் படைநடத்தல் இவனின் அதீதப் போராற்றலை வெளிக்காட்டியது. ஆணையிறவுப் படைத்தளத்திற் புளியடி பிரதான முகாம் ராகவனின் அணிக்குரிய இலக்காக இருந்தது. வேவு நடவடிக்கையின் படி திட்டமிடப்பட்டு, உரிய முறையிற் பயிற்சிகளெல்லாம் வழங்கப்பட்டிருந்தன. ஆனாற்கள நிலைமைகளோ தழைகீழாக இருந்தன. எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறான கள நிலைமையது. எதிரி உசாரடைந்திருந்தான். எமது நகர்வுகளை அவன் அவதானித்து விட்டதையே எதிரியின் செயற்பாடுகள் வெளிப்படுத்தின. ஓட்டுமொத்தமாகச் சண்டையே குழம்பிவிடுமோ என்று அச்சங் கொண்ட வேளை களத்தில் நேரில் நின்றுஇ தனது இராணுவ அறிவால் துணிச்சலுடன் முடிவெடுத்து, தனது இலக்கை வெற்றி கொண்டுஇ 120 மி.மீ பீரங்கிகள் சிலவற்றையும் மீட்டெடுத்துத்தந்து வெற்றிவாகை சூடினான் ராகவன். போரியலில் உயர்ந்து நின்ற எங்கள் போர்த்தளபதி லெப்.கேணல் ராகவன் சிங்களத்தின் நம்பிக்கை நட்சத்திரமான ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையைச் சுக்குநூறாக்குவதற்காக கடுமையாக உழைத்தான். ஜெயசிக்குறுவின் தென்முனையிற் பனிக்க நீராவியிலிருந்து மாங்குளம் வரையிலும் வடமுனையிற் கிளிநொச்சியில் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் அந்தத் தளபதி தன் உயிர்கொண்டு வீரம் விதைத்தான். அவனது உழைப்பின் அறுவடைதான் வரலாற்றிற் பொறிக்கப்பட்டு விட்ட புளியங்குளத்திற் புலிகள் இயக்கம் புரிந்த சாதனைகள். எதிரியின் பாரிய மரபுவழிப் படையெடுப்பை மறித்துப் புளியங்குளத்திலே முகாம் அமைத்து நிலைகொள்வதெனத் தலைவர் அவர்கள் முடிவு செய்த போது தளபதி தீபனுக்கு துணையாக நின்று தள அமைப்புக்காக ராகவன் கடுமையாகத் தன்னை வருத்தினான். புளியங்குளம் முகாமில் தாக்குதல் அணிகளின் பொறுப்பை ஏற்றிருந்த அவன்இ எதிரியை எதிர்கொள்வதற்கெனச் சகல ஏற்பாடுகளையும் நேரில் நின்ற செய்தான்; செய்வித்தான். புளியங்குளத்தை “புலிகளின் புரட்சிக் குளம்” ஆக மாற்றியதில் ராகவனின் உழைப்புக்கும் அவன் சிந்திய வியர்வைக்கும் முக்கிய பங்கு இருந்தது. புளியங்குளத்தில் உடலைப் பிழிந்து உழைத்த ராகவனுக்கு ஓய்வு கிடைக்கவில்லை. ஓமந்தையில் ‘ஜெயசிக்குறுய்’ படைகளுக்கெதிரான ஊடுருவித் தாக்குதலிற் பிரதான தாக்குதல் அணியின் தலைவனாக அவன் களமிறங்கினான். அந்தச் சண்டையிற் கடின உழைப்பைத் தந்த ராகவனையும் அவனது அணியையும் ஓய்வுக்காக பிண்ணணிக்கு அனுப்பி வைத்தார் தளபதி தீபன். ஆனால் விரைவிலேயே களத்தைத் திறந்து முக்கிய நகர்வொன்றை எதிரி ஆரம்பித்தான். அப்போது அங்கே ராகவன் தேவைப்பட்டான். புளியங்குளத்தில் முகாம் அமைத்து நிலைகொள்ள எடுத்த எமது இயக்கத்தின் முடிவிற்குச் சவாலாக அமைந்திருந்தது எதிரியின் அன்றைய நகர்வு. எமது பாதுகாப்பு அரண்கள் இல்லாத பகுதியை நோக்கிச் சன்னாசிப்பரந்தன் ஊடாக புளியங்குளத்தை நெருங்கிக் கொண்டிருந்தான் எதிரி. இக்கட்டான சூழல், எதிரியின் முன்னேற்றத்தை உடனடியாகவே முறியடித்தாக வேண்டும். அந்தப் பலப் பரீட்சையில் நிச்சயம் நாம் வென்றேயாக வேண்டும். தளபதி தீபனின் கண்களுக்குள் ராகவன் நின்றான். “நான் செய்து முடிப்பன்” ராகவனின் உருவம் சொல்லாமற் சொன்னது. ராகவன் உடனடியாகவே களமிறக்கப்பட்டான். போராளிகள் முப்பது பேரை மட்டுமே கொண்ட அணியுடன் ராகவன் களமிறங்கினான். எதிரியை வழிமறித்துஇ ஊடறுத்து எமது பாதுகாப்பு நிலைகளை அமைக்கக் கூடிய பகுதியொன்றினூடாக ராகவன் தனது அணியுடன் உட்புகுந்தான். எதிரியோ மிகக் கடுமையாகச் சண்டை செய்தான். எந்தக் கட்டத்திலும் விட்டுக் கொடுக்க எதிரி தயாரில்லை. களத்தில் ராகவன் நின்றதால் எல்லோர் மனத்திலும் நம்பிக்கை இருந்தது. தங்களுடன் ராகவனும் நின்றதால் களத்திலிருந்த போராளிகளிடம் உற்சாகம் பிறந்தது. இறுதியில் எதிரியைச் சின்னாபின்னமாக்கி அந்தக் கடினமான சண்டையை எல்லோரும் நம்பிக்கை வைத்தபடியே செய்து முடித்தான் அந்தப் புலிப்போர்த் தளபதி. புளியங்குளத்தைப் புலிக்குகையாக்க உழைத்த அந்த வீரன் இறுதியிற் சவாலாக வந்த எதிரியின் நகர்வை எதிர்கொண்டு அந்தப் புலிக்குகையைக் காத்தான். எதிரிக்கு புலிகள் பற்றிப் பாடம் புகட்டினான். தென்முனையில் தமது இயலாமையை உணர்ந்து கொண்டு, வடமுனையிற் கிளிநொச்சி ஊடாக புதிய களமுனையொன்றைத் திறப்பதற்கு எதிரி தயாராகி வந்த போது ‘ஜெயசிக்குறுய்’ எதிர்ச் சமரின் துணைக் கட்டளைத் தளபதி கேணல் தீபனுடன் கிளிநொச்சிக் களமுனைக்குப் புறப்பட்டான் ராகவன். அங்கே அந்தப் போர்த்தளபதி தமிழீழத்தின் புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியானான். அப்போது கிளிநொச்சித் தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அந்த வீரன் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. 1998 பெப்ரவரியிற் கிளிநொச்சித் தளத்தின் மீது புலிகள் பாய்ந்து தளத்தின் தென்பகுதியை வீழ்த்திய போது அப்பகுதியிற் சண்டைக்காக நியமிக்கப்பட்ட எமது ‘ராங்கி’ அணியின் நகர்வு வழிநடத்துனனாக ராகவன் இருந்தான். அதன்பின் எமது முன்னணி அரண்களை எதிரிக்குக் கிட்ட நகர்த்திஇ எதிரியை அச்சுறுத்திப் பாதுகாப்புப் பணியில் அவன் நின்றான். அவனது உழைப்புக்குச் சவாலாக எதிரி எழுந்த ஒவ்வொரு தடவையும் ராகவன் பாடம் புகட்டினான். அவன் புகட்டிய பாடங்கள் இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் அவர்களால் என்றைக்குமே மறக்கமுடியாத அளவு முக்கியத்துவம் பெற்றவை. 1998 ஜூன் நான்காம் நாளன்று கண்டி வீதிக்கு மேற்குப் புறமாகப் பல முனைகளில் எமது பாதுகாப்பு நிலைகளை உடைத்து எதிரியின் முன்னணிப் படையணிகள் உட்புகுந்து விட்டன. முன்னணி அரண்களிற் குறிப்பிடக்கூடிய பகுதியை எதிரி கைப்பற்றிவிட்டான். அப்பகுதியில் நிலைகொண்டிருந்த எமது அணிகளும் சேதமடைந்தன. மிகவும் நெருக்கடியானதொரு களநிலைமை. உடனடியாகவே எதிரியை முறியடிக்க வேண்டும். தளபதி கேணல் தீபன் அனுப்பிவைத்த உதவியணிகனை வைத்து அவரின் கட்டளையின் கீழ் களத்தில் நின்று படை நடத்தினான் ராகவன். நீண்ட நேர ‘மரணச்சண்டையின்’ பின் எதிரியை ஊடறுத்து, முற்றுகைக்குள்ளாக்கி உள்நுழைந்தவர்களை அழித்து முடித்துத்தான் மூச்சுவிட்டான். சிங்களத்தின் முன்னணித் தாக்குதற் படையில் 200 பேருக்கும் மேலான வீரர்கள் சிதறிச் சின்னாபின்னமாகி வீழத் தமிழர் சேனை வெற்றிவாகை சூடியது. எதிரியின் 50 உடல்களும் ஏராளம் ஆயுதங்களும் மீட்கப்பட அந்த வெற்றித் தாக்குதலை நேர்நின்று செய்வித்தவன் தளபதி ராகவன். மீண்டும் நான்கு நாட்களில், அடிபட்ட பாம்பு போற் சீறிச் சிங்களப் படைகள் முன்னேறி வந்தன. இம்முறையும் சிங்களத்தின் குறி ராகவனின் அதே பகுதி தான். எமது காவலரண் வரிசையைப் பலமுனைகளால் உடைத்து உட்புகுந்து விட்டான் எதிரி. இம்முறையும் அதே இறுகிய சூழல், சென்ற தடவை போலவே இப்போதும் சிங்களப்படைகளுக்குப் பாடம் புகட்டினான் ராகவன். சீறிய பாம்புகள் உயிரைவிட, எஞ்சியவை பெட்டிப்பாம்பாக அடங்கிப் போயின. அந்த நாட்களில் எங்கள் தளபதியின் படைநடத்தலாற் கிளிநொச்சி மண் தமிழர் வரலாற்றில் முக்கிய பதிவுகளைப் பெற்றுக் கொண்டது. போரியலில் முதிர்ச்சி பெற்றிருந்த அந்த வேங்கை இப்போது எதிரியாலும் நன்கு அறியப்பட்டிருந்தான். ராகவன் என்றால் யார் என்பதைத் தனது படைநடத்தல் மூலம் எதிரிக்குச் சொல்லி வைத்திருந்தான் அவன். ராகவன் நிற்கும் பகுதியென்றாலே எதிரி அதீத கவனம் எடுப்பான். ஏனெனில், ராகவனிடம் ‘பாடம் படிப்பதற்கு’ சிங்களத் தளபதியால் இனியும் உயிர் விலை செலுத்த முடியாது. 1998 ஒக்டோபர் மாதத்தில் ராகவனின் சுமை இரட்டிப்பானது. ‘ஓயாத அலைகள் 02’ இற்காக இயக்கம் தயாராகிக்கொண்டிருந்த காலப்பகுதி அது. ஓய்வுறக்கமின்றித் திரிந்தான் ராகவன். முன்னணி நிலைகளில் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, பயிற்சியில் ஈடுபட்ட போராளிகளை உற்சாகப்படுத்தி அதைத் திறம்படச் செய்விப்பது என எல்லாவற்றிலும் அவன் உழைத்தான். ‘ஓயாத அலைகள்02’ புலிகள் பாய்வதற்கான நாள் வந்தது. தலைவனைச் சந்தித்துத் திட்டங்களை அறிந்து புலிச்சேனை தயாராகியது. பிரதான பகுதியொன்றின் துணைத்தளபதியாக ராகவன் நியமிக்கப்பட்டான். எனினும், அந்தக் களப்பகுதியில் அவனையொத்த அனுபவம் வாய்ந்தவர்கள் களமிறக்கப்பட்டிருந்ததால் தளபதி கேணல் தீபனின் கட்டளை மையத்தில் ராகவன் நிற்கப் பணிக்கப்பட்டான். அந்த நடவடிக்கையில் முன்னணிக் காவலரண்களைக் கைப்பற்றுவதற்குப் பொறுப்பாக இருந்த தளபதி தீபனுக்கு உதவியாக அவன் செயற்பட்டுக்கொண்டிருந்தான். முதல்நாட் சண்டை உக்கிரமான கட்டத்தை எட்டியது. எமது கைகளிற் காவலரண்கள் வெற்றிகரமாக வீழ்ந்தன. ஆயினும், அன்றைய தொடர் சண்டையில் அவற்றில் அநேகம் எதிரியின் கைக்கு மீண்டும் மாறின. சண்டை நிலைமைகள் எதிரிக்குச் சாதகமாக மாறிவிட்ட சூழல். எப்படியாவது அந்த நிலைமையை மாற்றியமைத்தேயாக வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சிக்கல்களை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்போது ராகவன் களத்திற்குப் போக வேண்டியிருந்தது. நிலைமையை உணர்ந்து கொண்டு தளபதி தீபனிடம் அனுமதி பெற்று அணியொன்றுடன் எமக்கச் சாதகமற்ற பட்டப்பகலிற் களமிறங்கினான் ராகவன். எதிரி மிகுந்த உளவியற் பலத்துடன் உற்சாகமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்க, எமது அணிகள் பின்னடைவைச் சந்தித்து நின்ற முனையொன்றினூடாக ராகவன் களமிறங்கினான். எதிரியின் அத்தனை துப்பாக்கிகளும் உதவியணிகளைத் தடுக்கும் பொருட்டு ராகவனின் அணியைக் குறிவைத்துத் தாக்கின. எதிரியின் குண்டு மழைக்குள்ளால் தனது அணியுடன் உள்ளே போய்ச் சேர்ந்தான் எங்கள் தளபதி. ஏதிரியை அடித்துப் பின்நகர்த்திக் காயப்பட்ட, வீரச்சாவடைந்த போராளிகளை பின்னே அனுப்பி வைத்துவிட்டு, அணிகளை ஒழுங்கமைத்துச் சண்டையைத் தொடர்ந்தான் அவன். எதிரியின் முறியடிப்புப் பற்றிய கற்பனைகளையெல்லாம் தகர்த்துச் சண்டையணிகளை முன்னகர்த்திக் களநிலையை மாற்றியமைத்தான் ராகவன். “ராகவன் ஓயாத அலைகள் 02 வெற்றியின் திறவுகோல்” என்றார் தளபதி கேணல் தீபன். ‘ஓயாத அலைகள் 02’ இன் சில மாதங்களின் பின் ராகவனை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையின் சிறப்புத் தளபதியாக தலைவர் நியமித்தார். தலைவரால் பற்பல எதிர்பார்ப்புக்களுடன் உருவாக்கப்பட்ட புகழ்பூத்த படையணியொன்றிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ராகவன், தலைவரின் எதிர்பார்ப்பைத் திறம்படச் செய்து முடிக்க வேண்டும் என்ற பேரவாவுடன் மேலும் மேலும் கடுமையாக உழைத்தான். படையணிக்குப் புதிதாக வந்த போராளிகளை வைத்து அந்தச் சண்டைப் படையணியின் போர்த்திறனை மேலும் மேலும் வளர்க்க ராவகன் அயராது பாடுபட்டான். அவனது உழைப்பின் அறுவடைக்கான நாளும் வந்தது. ‘ஓயாத அலைகள் 03’ தாக்குதல் திட்டம் விளக்கப்பட்டது. பிரதானமான சண்டை முனையொன்றின் நேரடித் தளபதியாக ராகவனைத் தலைவர் நியமித்தார். நம்பிக்கையுடன் தலைவர் தன்னிடம் ஒப்படைத்த பணியைத் தனது படையணியை வைத்து வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்காக அவனது மூளை இடையறாது சிந்தித்தது. விடுதலைக் களத்தில் ஓயாது சுழன்ற அந்தப் புயல் ‘ஓயாத அலைகள் 03’ இன் அத்தியாயத்தைத் திறந்து வைத்தது. பிரதான முனையொன்றினூடாகக் களத்தைத் திறந்தது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. சண்டை இறுக்கமான சூழலிற் சிக்கியிருந்தது. போராளிகள் தடுக்கத் தடுக்க ராகவன் எப்போதும் போலவே தனக்கான எல்லையைக் கடந்து முன்னேறினான். குண்டு மழைக்குட் குளித்தபடி சண்டையணியின் முன்வரிசையில் எங்கள் தளபதி நின்றான். குண்டொன்று நேராய் அவன் நெற்றியைத் துளைக்க ராகவன் வீழ்ந்தான். பறிபோகவிருந்த எத்தனையோ வெற்றிகளை மீட்டுத்தந்த அந்தத் தளபதி அமைதியாக அடங்கிப் போனான். நினைவுப் பகிர்வு: அ.பார்த்தீபன். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 1999), நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல். https://thesakkatru.com/charles-anthony-brigade-special-commander-lieutenant-colonel-ragavan/
  9. பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு… இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை. ஆயினும், ஒரு கோணத்துப் பார்வையில், துருத்தித் தெரியும் அவரது ஆளுமை அம்சத்தை புள்ளிகளிடுவதன் மூலம்ஒரு சித்திரம் தோன்றலாம். அதில் அந்தச்சிரித்த முகத்தோன் உயிர் பெற்றும் வரலாம். கல்லறைக்குப் போகுமுன் வணக்கம் செலுத்த வருபவர்களுக்காக காத்திருக்கிறது திருவுடல். அருகே ஐம்பது வயதைத் தாண்டிய அவரது மூத்த சகோதரன் யாரும் அறியா நேரங்களில் அவ்வப்போது அழுகிறார். நினைவுகள் எழுந்து இதயத்தில் எங்கோ இருக்கும் ஈரத்தை இழுத்து வந்து கண்களால் கொட்டி விடுகிறது. அவர் சொன்னார், “சின்ன வயதில் எங்களது அப்பா இறந்து விட்டார். அதனால் குடும்பத்தில் வறுமை நிலவிற்று. நானே உழைக்கத் தொடங்கி குடும்பப் பாரத்தை சுமந்து இளையவர்களைப் படிப்பித்தேன். அதிக கண்டிப்புடன் சகோதரர்களை வளர்த்து வந்தேன். ஆனால், செல்வன் எந்த விடயத்திற்கும் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், தண்டிப்பதற்காக தடியைத் தூக்கும்போதெல்லாம் தன் தவறுக்கு தக்க காரணங்களை கற்பிக்கத் தொடங்கிவிடுவான். அதைக் கேட்டுவிட்டால் தண்டிப்பதற்கான நியாயம் பறிபோய் விடும்” என்று. இந்திய அமைதிப்படையுடன் நடந்த யுத்தத்தில் ஒரு நாள் தென்மராட்சிப் பொறுப்பாளரான இவரது மறைமுக இடத்தை இராணுவத்தினர் சுற்றிவளைக்க வந்தனர். வெடிக்க வைக்கத் தயாராக கையில் குண்டுடன், வீதியின் இரு புறமும் வந்துகொண்டிருக்கும் இராணுவத்தினரின் நடுவால் தமிழ்ச்செல்வன் சைக்கிளில் கடந்தார் ஒவ்வொரு இராணுவத்தினரையும் பார்த்துச் சிரித்து தலையாட்டியவாறு. புன்னகையை ஆயுதமாக்கி அன்று முற்றுகையை உடைத்துக்கொண்டார். இன்னொரு நாள் அமைதிப்படையின் அப்பிரதேசத் தளபதி சடுதியாக இவரது அணியை சந்திக்க நேர்ந்ததும் அந்த இடத்தில் மோதலைத் தவிர்க்குமாறும் உரையாட விரும்புவதாகவும் அழைத்தான். தினேசுடன் (இவரது பழைய பெயர்) கதைக்க விரும்பும் அழைப்பை ஏற்று முன்வந்த இவர் அமைதிப்படைத் தளபதிக்குச் சொன்னார், “தினேஸ் நூற்றுக் கணக்கான போராளிகளுடன் வேறு ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருக்கின்றார். உங்கள் செய்தியைச் சொல்லுங்கள் நான் அவரிடம் சொல்கிறேன்.” என்று. தினேஸ் பற்றி அவனுக்கிருந்த பிரமையை தானே மேலும் பன்மடங்காக்கித் திரும்பினார். அந்தக் ‘கோலியாத்’ தளபதி தங்களை வீழ்த்தி வரும் அணியின் தலைவன் இந்தத் ‘தாவீது’ தான் என்று நம்பத் தயாரானமனநிலையில் இருக்கவில்லை. அவ்வளவு இளவயதும், சிறுவுருவமுமுடையவராக இருந்தார் அப்போது தமிழ்ச்செல்வன். சமயோசித புத்தி, நெருக்கடிச் சூழலை கையாளும் திறன், தன் மீதான நம்பிக்கை இதுதான் இளவயதில் மிளிரும் இயல்புகளாய் இருந்தன. இவை குறிக்கும் ஆளுமை என்னவெனில் தமிழ்ச்n;செல்வ்வன் ஒரு தந்த்திரி. இதைத்தான் இயக்கத்தின் வளமாக தலைவர் வளர்த்தெடுத்திருக்க வேண்டும். இந்த ஆளுமைதான் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை தலைமைப் பாத்திரத்தை வகிக்க, அவருக்கு இயலுமையைத் தந்தது. புலிகள் இயக்கம் அரசியல் முதிர்ச்சி பெற்ற தொண்ணூறுகளின் (1993) ஆரம்பத்தில் இவர் அரசியற்துறையைப் பொறுப்பேற்றார். இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் ஒரு அரசியற் பொறுப்புக்கு முகம் கொடுப்பது இலகுவானதல்ல. அதிலும் அவர் எதிர் கொண்ட காலம், இந்த விடுதலைப்போர் அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்த காலம். சந்திரிகாவின் சமாதானப் பேச்சு, அடுத்து கடந்த நூற்றாண்டின் இறுதியில், இந்த உலகம் கண்ட மாபெரும் இடப்பெயர்வான யாழ்ப்பாண இடப்பெயர்வு – ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வை – அதுவும் கோரமாக நடந்த யுத்தத்தின் இடப்பெயர்வை – அவர் முகாமைத்துவம் செய்த ஆற்றல் அசாத்தியமானது. இப்படியான இடப்பெயர்வுகளில் பிணி, வறுமை என்பவற்றாலும், கட்டுப்படுத்த முடியாத தொற்றுநோய்ப் பரவலாலும், ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிந்துபோவதுதான் சுகாதார நிபுணர்கள் கண்ட உலக அனுபவமாக இருந்தது. ஆனால், அத்தகைய கணிப்புக்களை பொய்யாக்கிய முகாமைத்துவம் ஒருபுறமும், மக்களுக்கேற்பட்ட மகா அவலத்தால் மக்கள் போராட்டத்தில் சலிப்புறுவதற்குப் பதிலாக, மக்களை எழுச்சியடைய வைத்து போராட்டத்திற்கு இளைஞர்களை அணிதிரட்டிய ஆற்றல் மறுபுறமுமாக அவரது ஆளுமை புதுமை படைத்தது. இக்காலகட்டத்தில் போராட்டத்தில் உள்வாங்கப்படுவோரை மட்டுப்படுத்த வேண்டியளவிற்கு அது அமைந்தது. இதன் விளைவாகத்தான் ஓயாத அலைகள் – 01 வெற்றியின் மூலம் முல்லைத்தீவு விடுவிக்கப்பட்டது. புலிகள் ஒரு தீர்ந்துபோகாத சக்தி என்று நிரூபிக்கப்பட்டது. சர்வதேச கடற்போக்குவரத்துக்கான புலிகளின் வாசலாக முல்லைத்தீவு திறவுண்டது. பின்னாளில் வன்னி மீதான எதிரியின் முற்றுகை உள்ளடக்கத்தில் அர்த்தமிழந்ததும் இதனால்தான். வன்னிச்சமர் என்றுமில்லாத புதிய நெருக்கடியை இந்தப் போராட்டத்திற்குத் தந்தது. தொடர்ச்சியாக வருடக்கணக்கில் நீண்ட ஒரு சமராக அது இருந்தது. வன்னிக்காட்டில் தனித்து விடப்பட்ட புலிகள் மீதான இறுதி யுத்தமாக உலகளவில் இது பார்க்கப்பட்டது. வன்னியின் நிரந்தரவாசிகளைவிட அப்போது இடம்பெயர்ந்தவர்களே இங்கு பெரும்பான்மையினராக இருந்தனர். யுத்தம், முற்றுகை, பொருளாதாரத் தடை, யுத்தப் பின்னடைவுகள், ஊரின் மூலைமுடுக்கெங்கும் வரும் யுத்தத்தில் வீழ்ந்த உடல்கள் இவை எல்லாம் சேர்ந்து வறுமையும், பிணியும், பயமும், அவலமும் கொண்ட வாழ்வாக வன்னி மக்களின் சூழலை மாற்றியிருந்தது. நிச்சயமற்ற வாழ்வுக்குள் நாளாந்தம் மக்கள் திணறிக் கொண்டு இருக்கக்கூடிய காலம். இச்சூழல் தந்திருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் போராட்டத்திற்கு நிச்சயமானதும் முடிவானதுமான தோல்வியைத்தான். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டம் மக்களிலேயே ஆதாரப்பட்டு நிற்கிறது. முப்பது வருடப் போராட்டத்திற்கு எழுந்த இந்த நெருக்கடிச் சூழலை, தலைவருக்குத் தோள் கொடுத்து தமிழ்ச்செல்வன் என்ற ஆளுமை கையாண்ட விதம், எதிரியின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் எதிர்மறையாக புரட்டிப் போட்டது. வந்த நெருக்கடியை நோக்கி அரசியற்துறையின் வல்லமை அனைத்தையும் திருப்பினார் தமிழ்ச்செல்வன். எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமாக்கும் தந்திரம் அவருக்கு வசப்பட்டது. செயல் ஒன்று புயலாகும் மையத்தில் நின்றார் அவர். மக்கள் தம் வாழ்வை ஏற்றுக்கொண்டு அதற்கு முகங்கொடுக்கத் தொடங்கினர். விடுதலைப் போரிலும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை இழந்தனரல்லர். எதிரியின் மீது கோபமும், எதிரியை எதிர்கொள்வதற்கான திடமும் கொள்ளத் தொடங்கினர். வாழ்வின் அவலமோ நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆவேசத்தை மக்களுக்குள் கொண்டுவந்தது. களத்தில் விழுகின்ற உடல்கள் நாளாந்தம் கல்லறைக்குப் போய்க்கொண்டேயிருந்தாலும் பாசறைக்குப் போகும் புதியவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடாமல் இருந்தது. இது, தான் ஏவிய யுத்தத்தில் தானே சிக்குண்டு எதிரியை காடுகளுக்குள் திணறவைத்தது. வன்னியின் ஊர்களின் ஓரத்து வெளிகளெங்கும் மக்கள் போர்ப்பயிற்சி பெறத்தொடங்கினர். தமிழ்ச்செல்வன் செய்த தவத்தின் பயனாய் எல்லா வன்னியர் கைகளிலும் வஜ்ஜிர ஆயுதம் முளைத்தது. மக்கள்படை திரண்டு புலிகளுக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. இறுதி யுத்தமென்று வந்தவர்கள் அதில் முழுதாய் தோற்றார்கள். வன்னி இயற்றிய இந்த இராணுவ அற்புதத்தால் உலகமே மூர்ச்சையாகிப் போனது. யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்து, ஆயுதங் கொடுத்து, ஆலோசனை கொடுத்து சிங்கள அரசின் அருகாய் இருந்த உலகம் அதைக் கைவிட்டு சமாதானத்திற்குத் திரும்புமாறு சந்திரிகா அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. மக்களுக்கு தீரா அவலத்தைச் சுமத்தி விடுதலைப்போரில் வெறுப்பும், சலிப்புமுறப் பண்ணி அடிபணிய வைக்கும் அரசாங்கத்தின் தந்திரத்தை தலைகீழாக மாற்றி அதன் அறுவடையை விடுதலைப் போராட்டத்திற்கு சம்பாதித்துத் தர தமிழ்ச்செல்வன் இயற்றிய தவமே மாதவம். “சமாதானம்” இது முன்பிருந்த சூழலுக்கு முற்றிலும் எதிர்மாறானது. எம்மை தோற்கடிக்கச் செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சியின் வியூகம் வேறு. அபிவிருத்தி என்ற மாயை மூலம் மக்களை யுத்த மனப்பாங்கில் இருந்து விடுபடச் செய்வதற்கான வியூகம் இது. சர்வதேச சமாதானக் கற்கைகள் கண்டு பிடித்த கோட்பாடு என்னவெனில், யுத்தத்திற்கெதிரான மனப்பாங்கை அபிவிருத்தி என்ற கருத்தாக்கத்தின் மூலம் உருவாக்க முடியும் என்பதே. சமாதானம் என்ற வியூகத்தின் அங்கமாக, அரங்காக அபிவிருத்தி என்ற நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச சமாதானக் கற்கைகளின் இந்தக் கோட்பாடு புறந்தள்ளி விடக்கூடியதல்ல என்பது தெரியும். ஆயினும் அபிவிருத்தியை புறந்தள்ளி அல்லது தடுத்துவிடவும் முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது என்பதில் தமிழ்ச்செல்வன் உறுதியாக இருந்தார். உலகில் யாராலும், எங்கிருந்தாயினும் தமிழ்மக்களை நோக்கிக் கொண்டுவரப்படும் அபிவிருத்தியை வரவேற்று, உள்வாங்கி தொடர் யுத்தத்தால் மக்கள் பட்ட அவலத்திற்கு சிகிச்சையாக, புத்தூக்கமாக அதை மாற்றிப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. அதேநேரம் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விடக்கூடிய சூழ்ச்சியாக இது உருவெடுக்க விடாமல் அதனிடமிருந்து தற்காக்க வேண்டியுமிருந்தது. இந்த இரண்டிற்குமிடையில் ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்து அதனை நிர்வகிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அதை வெற்றிகரமாகக் கையாண்ட ஆளுமையே தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வன் இயல்பிலேயே ஒரு தந்திரி. அவரது ராஜதந்திரப் பணியில் சில புள்ளிகளை இடுவது இங்கு முக்கியமானது. சந்திரிகாவின் தீர்வுப்பொதி வெளியிடப்பட்ட காலத்தில் வன்னிக்கு வந்த தெற்கு ஊடகவியலாளர் ஒருவர் இவரைச் செவ்வி கண்ட போது எழுப்பிய கேள்வி, “நீங்கள் இந்தத் தீர்வுப்பொதியை ஏற்காதது, நீங்கள் சமாதான அணுகுமுறையில் விருப்பமற்ற போர் நாட்டமுள்ளவர்களென்பது காரணமே தவிர, தீர்வுப்பொதி காரணமல்லவே” என்ற தொனியில் இருந்தது. அதற்கு இவர் அளித்த பதில் கொழும்பின் முகத்தையே கிழித்தது. “தமிழ்மக்களால் துரோகிகளாக வர்ணிக்கப்படும் குழுக்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. அவையே இதை ஏற்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே இந்த அரசாங்கத்தால் முன்வைக்க முடியாதபோது இந்தக் கேள்வியை நீங்கள் எங்களிடம் கேட்பது சரியல்ல.” நடந்த கடைசிப் பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னான காலத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சர்வதேச செய்தி ஸ்தாபனத்தின் பிரபல நிருபர் ஒருவர், குதர்க்கமான கேள்வி ஒன்றைத் தொடுத்தார். அதன் தொனி புலிகள் சமாதானத்தை போலியாகத்தான் நடத்தினார்கள், என்று திரித்து அம்பலப்படுத்தும் முயற்சியாகவே இருந்தது. அதற்கு அவர் அளித்த பதில், நீ குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறாய் என்பதைச் சுட்டி, சபையில் நிருபரை அடக்கவைத்தது. கேள்வி இது தான் “காட்டில் வாழும் சிறுத்தை தம் புள்ளிகளை மாற்றிக்கொள்வதில்லை என்று பழமொழி இருக்கிறதே”. “நாங்கள் இங்கு மனிதர்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறோம். மிருகங்களைப் பற்றி கேள்வி எழுப்ப இது இடமல்ல” என்று வந்த பதிலில் அவர் தலைகுனிந்தார். ஜெனிவா – 2 இறுதியாக நடந்த பேச்சுவார்த்தை. அந்தப் பேச்சுவார்த்தையின் பின் எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே அடுத்த பேச்சுக்கான திகதி தருமாறு சர்வதேசத்தின் பிரதிநிதியான நோர்வேயால் நிர்ப்பந்தம் விதிக்கப்படுகிறது. அதற்கு இசையாத தமிழ்ச்செல்வனை நோக்கி எரிக்சொல்கெய்ம். “திகதி குறிக்கப்படாதுவிடில் பேச்சு முறிவடைந்ததாக அர்த்தமாகிவிடும். எனவே திரும்பிப் போகும் உங்களின் பயணத்தின் பாதுகாப்பை எங்களால் உத்தரவாதப்படுத்த முடியாது” என்றார். தமிழ்ச்செல்வன் “உயிர் அச்சுறுத்தல்களைக் கொடுத்து புலிகளைப் பணியவைத்து விடமுடியாது” என்று பதிலளித்தார். இறுதியில் எரிக் சொல்கெய்ம் சொன்னார் “நீங்கள் பேச்சுத் திகதி குறிக்காமல் போவது நல்லதல்ல என அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ்புஷ் கருதுகிறார்” என்றார். இதற்கு தமிழ்ச்செல்வன் சொன்ன பதில் எரிக் சொல்கெய்மையும், அங்கிருந்த ராஜதந்திரிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. “நாங்கள் அமெரிக்க ஜனாதிபதிகளான, வோஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், வுட்ரோ வில்சன் ஆகியோரது கருத்துக்களில் தான் கரிசனையாக உள்ளோம். ஜோர்ஜ்புஷ் இன் கருத்திலல்ல”. (மேற்சொன்ன ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திரத்திற்காகவும், சிவில் உரிமைக்காகவும், தேசிய இனத்தவர்களின் சுயநிர்ணயத்திற்காகவும் போராடியவர்கள்) ஜெனீவா – 2 பேச்சுவார்த்தைக்கு அரச தரப்புப் பேச்சுக்குழுவினர் மிகவும் புளகாங்கிதத்தோடு வருகை தந்திருந்தனர். காரணம், புலிகள் தரப்பில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இல்லை என்பதே. மேலும், பேச்சின் நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே தீர்மானிக்கப்படாமல் நடக்கப்போகும் ஒரு அசாதாரண சூழல் பேச்சுவார்த்தை இது. இதனால் தயார்படுத்திக் கொண்டுவர வாய்ப்பும் இல்லை. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் இதற்குத் தலைமை தாங்கினார். அந்தப் பேச்சு மேசையில் தமிழ்ச்செல்வன் கையாண்ட உத்திதான் நியாயத்தை எங்கள் பக்கம் திருப்பி அரச தரப்பு “மேதைகளை” தலைகுனிய வைத்தது. முதல்நாள் பேச்சில் கர்வத்தோடு வந்த அரசதரப்பைக் கதைக்கத் தூண்டி அவர்கள் கையிருப்பில் இருந்த விவாதப் பொருளைக்கக்கவைத்து அதற்கு எதிர் விவாதம் செய்யாது அக்கருத்தில் அவர்களை நிலைபெற வைத்து, மறுநாள் அந்த விவாதத்திற்கு எதிர் வியூகம் அமைத்து அரச தரப்பை அம்பலப்பட வைத்தார். அரச தரப்பின் கருப்பொருள் அடிப்படை அரசியல் பிரச்சினை குறித்தே பேசவேண்டும் என்றிருந்தது. அதற்குச் சம்மதிக்காத புலிகள் போலியாகவே சமாதானப் பேச்சைக் கையாளுகின்றனர் என்று விவாதித்தனர். அன்றாடப் பிரச்சினையை விடுத்து அடிப்படைப் பிரச்சினை குறித்த அரசியல்தீர்வு பற்றியே பேசவேண்டும் என்றனர். அவர்களது நோக்கம், தனியரசு இலட்சியத்தில் இருக்கும் புலிகள் அரசியல்தீர்வு குறித்துப் பேச சம்மதிக்கமாட்டார்கள். எனவே புலிகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்திவிட முடியும் என்பதாகவே இருந்தது. இதனைச் சரியாகக் கணிப்பிட்ட தமிழ்ச்செல்வன் மறுநாள் “நாங்கள் அதற்குச் சம்மதிக்கிறோம். நீங்கள் கொண்டுவந்த அரசியல்தீர்வு யோசனையை முன்வையுங்கள் பேசுவோம்” என்றார். அரச பேச்சுக்குழு சங்கடத்தில் மாட்டியது. தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்தது போலவே அப்படி எந்த ஒரு தீர்வு முன்மொழிவையும் அது கொண்டுவந்திருக்கவில்லை. மேலும் தமிழ்ச்செல்வன் அவர்கள் “எங்களது முன்மொழிவாக இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை முன் வைத்துள்ளோம் அரசியல்தீர்வு பற்றியே பேசவந்த உங்களது முன்மொழிவு எங்கே? தொடர்ந்து பேசுவோம” என்றார். விக்கித்துப்போன அரசகுழு “நாங்கள் இப்போதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். விரைவி;ல் தயாரித்து விடுவோம்” என்றனர். அதற்குத் தமிழ்ச்செல்வன் “தயாரித்ததும் வாருங்கள் பேச்சுக்குத் திகதி தருகிறோம்” என்றார். அரச குழுவை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்கள் விரித்த பொறியில் அவர்களையே சிக்கவைத்தார் தமிழ்ச்செல்வன். இன்றுவரை அவரெழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை. மாறாக, தமிழ்ச்செல்வனைக் கொல்வதுதான் அரசின் பதிலாக இருந்தது. இப்படியொரு வல்லமை மிக்க ஆளுமையை வீழ்த்திவிட எதிரியென்று வரும் எவருக்குத்தான் பிரியமிருக்காது. இதில் தர்மம் என்ன? தார்மீகமென்ன? நவம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் வீடுகளெங்கும் முகாரி இசையில் மூழ்கியிருக்க, கோத்தபாய ராஜபக்ச பேட்டியளித்தார். “இன்றுதான் நான் வாழ்வில் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்” என்று. நினைவுப்பகிர்வு:- கு.கவியழகன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2007). https://thesakkatru.com/a-memento-to-brigadier-sp-tamilselvan/
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 அல்லாஹ்வின் அருள் மலரும்
  11. மெல்லப்போ மெல்லப்போ..... மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ சொல்லிப்போ சொல்லிப்போ 😊
  12. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தடங்கள் – சீ.இனியவன் 6 Views தமிழீழ தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பன்முக ஆளுமையுடன் மக்களிடத்திலும் அனைத்தலக பரப்பிலும் அதிகம் அறியப்பட்ட ஓர் உன்னதமான போராளியே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள். இதனால் தான் இவரது இழப்பு குறித்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 03.11.2007 அன்று தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற அறிக்கை குறிப்பின் மூலம் “தமிழ்ச்செலவன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாக நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்திருந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். இலட்சிய போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகத்தோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்” என தனது உள்ளார்ந்த உணர்வில் இருந்து குறிப்பிட்டிருந்தார். 02.11.2020.அன்று சிறீலங்கா அரசின் நன்கு திட்ட மிட்ட நயவஞ்க விமானக் குண்டுத் தாக்குதலில் வீரச் சாவைத்தளுவிக்கொண்ட பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் நினைவுத் தடங்களை மீட்டுப்பார்கின்றோம். தமிழீழ தேசியத் தலைவர் குறிப்பிட்டது போல, தமிழ்செல்வன் அண்ணன் தாயக விடுதலைக்காக இணைத்துக்கொண்ட காலம் முதல் தமிழீழ மக்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்கும் விசுவாசமிக்க அற்புதமான போராளியாக, போர்க் கள தளபதியாக, நிர்வாக பணிமிக்கவராக, அரசியல் பணிக்குரிய பொறுப்பாளராக, அரசியல் இராஜதந்திர பணி என ஒன்றுக்கொன்று வேறுபட்ட தளங்களில் நாளந்தம் சுழன்று கொண்டிருந்தார். இதனை விட வெளியே அறியப்பட்டதற்கு அப்பால், தேசியத் தலைவரின் பிரத்தியேகமான வெளியே சொல்லமுடியாத பாரிய பணிகள் இவரது தோள்களில் இருக்கும். இவற்றுள் புன்னகை உதிர்த்த முகத்தோடு ஒவ்வொரு போராளிகளிடத்திலும் பொறுப்பாளர்களிடத்திலும் அவரவர் பணிகள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கான வழிகாட்டல் ஆலோசனை தேவைகளை நிறைவு செய்து முடியும் என்ற நம்பிக்கை ஊட்டலுடன் ‘அண்ணையின் எதிர்பார்ப்பு’ என வார்த்தைக்கு வார்த்தை சொல்லி உற்சாகமூட்டி மக்கள் மத்தியில் அரசியல் பணி செய்ய அனுப்பி வைக்கும் உன்னதமான அரசியல் பொறுப்பாளன். இவர் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து தேசியத் தலைவர் அரசியல் பணிக்குரிய போராளிகள் மக்கள் மத்தியில் எவ்வாறு பணி செய்ய தயார்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தாரோ அதனை நிறைவான தெளிவூட்டல் மிக்கவர்களாக பயிற்றுவிக்கப்பட்டு பல்வேறு தளங்களில் ஒவவொரு போராளிகளின் ஆற்றல் ஆளுமையை இனங்கண்டு அரசியல் பணிக்குரிய தளத்தில் வளர்த்தெடுத்து இரவு பகல் பாராமல் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென ஊக்கம் தருபவர் தமிழ்ச்செல்வன் அண்ணன். இவர் அரசியல் பணியை பொறுப்பேற்ற காலத்தை தொடர்ந்து தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறிலங்கா அரசு பல கிராமங்களை பிரதேசங்களை ஆக்கிரமித்து முன்னேறி மக்களை இடம்பெயர வைத்த நிர்க்கதியான சூழலில் மக்களை வாழ்வதற்கு வழிகாட்டி நம்பிக்கையூட்டி போராளிகள் இடம்பெயர்வு தளத்தில் நின்று பணி செய்யவேண்டுமென்று வழிகாட்டிவர். இந்த சூழ்நிலையில் நாம் மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாவிட்டாலும் மக்கள் சீரளிந்து போகாமல் பார்த்துக்கொள்ள தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழ சுகாதார சேவை, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், குழந்தைகள் சிறுவர் பெண்கள் முதயோர் நலன்பேண் அமைப்புகள், தமிழீழ கல்விக் கழகம், மாணவர் அமைப்பு, ஏனைய மனித நேய அமைப்புக்கள் என அரசியல் துறை ஆளுகைக்குட்பட்ட பிரிவுகள் ஊடாக உடனடி மனிதாபிமான பணிகளை கண்டறிந்து மக்கள் நலன்சார்ந்த தேவைகளை நிறைவு செய்த அரசியல் தொண்டனாக தமிழ்செல்வன் அண்ணனை மக்கள் கண்டனர். இவ்வாறான நிலையில் மக்கள் தம் வாழ்வை ஏற்றுக்கொண்டு விடுதலைப் போரிலும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை உடையவர்களாகவும் எதிரியின் மீது கோபமும் எதிரியை எதிர்கொள்வதற்கான திடமும் கொள்ளத் தொடங்கினர். வாழ்வின் அவலமோ நிலமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆவேசத்தை மக்களுக்கு கொண்டு வந்தது. களத்தில் அகப்புற சூழ்நிலையை புரிந்து கொண்டு பாசறைக்குள் வருகை தரும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை சிறீலங்கா அரசு, தான் ஏவிய யுத்தத்தில் தானே சிக்குண்டு காடுகளுக்குள் திணற வைக்க காரணமாக அமைந்தது.வன்னியின் ஊர்களின் ஒரத்து வெளிகளெங்கும் மக்கள் போர்ப்பயிற்சி செய்யத்தொடங்கினர்.இது தமிழ்செல்வன் அண்ணனின் வழிகாட்டலில் அரசியல் திரட்சியின் மக்கள் புரட்சியாக பரிணமித்தது.இதுவே ஓயாத அலைகள் 1,2,3 வெற்றியின் அறுவடையாக இழந்த நில மீட்பாக மாற்றித்தந்தது. முப்பது வருட போராட்டத்திற்கு எழுந்த நெருக்கடியை தேசியத் தலைவருக்கு தோள்கொடுத்து தமிழ்ச்செல்வன் என்ற ஆளுமை கையாண்ட விதம் எதிரியின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் எதிர்மறையாக புரட்டிப்போட்டது. வந்த நெருக்கடியை நோக்கி அரசியல் துறையின் வல்லமை அனைத்தையும் திருப்பினார். தமிழ்ச்செல்வன் அண்ணன் எல்லா அசாத்தியங்களையும் சாத்தியமாக்கும் தந்திரம் அவருக்கு வசப்பட்டது. செயல் ஒன்று புயலாகும் மையத்தில் நின்றார். போர் நிறுத்த உடன் பாட்டுடன் நோர்வே நடுவன் சிறிலங்க அரசு பேச்சுவார்த்தைக்கு முகம் கொடுக்கவேண்டிய பொறுப்பு தமிழச்செல்வன் அண்ணனை சார்ந்ததாகவே இருந்தது. தலைவரது உணர்வுகளை புரிந்துகொண்டு அரசியல் தலைவனாக இராஜதந்திரியாக பேச்சுவார்தையாளனாக பாலா அண்ணையின் அனுசரணையோடு பரிணமித்தார். இவரது இராஜதந்திர திறனும் சிறப்பாற்றலும் நேர்மையான விடுதலைப் பற்றினையும் தாயகம் தேசியம் தன்னாட்சி கொண்ட தமிழீழ தனியரசுக்கான மக்களின் அடிப்படை அபிலாசைகளை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்துச்சென்றவர். சமாதான பேச்சு வார்த்தை காலத்திலும் தனக்கு கிடைத்த நேரகாலத்தை மேற்குலக நாடுகளில் தனது இராஜதந்திர சந்திப்புக்களையும் இந்நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தில் தாயக விடுதலைப்போராட்டத்தில் கொணடிருக்கும் பற்று உறுதி செய்ய வேண்டிய கடமைகள் பணிகள் நம்பிக்கை ஊட்டி கருத்துருவாக்கம் ஆலோசனைகளோடு அமைப்புகளிடையே நல்லுறவை கட்டியமைத்தவர். எனவே தனது புன்னகையையும் அரசியலுக்கு ஆயுதமாக்கி, வெற்றிகளுக்கு அடித்தளமிட்டு மக்கள் மனங்களுக்குள் நிறைந்து நிற்கும் உன்னதமான மாவீரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் இவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் அலெக்ஸ்,மேஜர் மிகுதன்,மேஜர் செல்வம்,மேஜர் நேதாஜி,லெப் ஆட்சிவேல்,லெப் மாவைக்குமரன் ஆகியோருக்கும் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறோம். எமது இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த இவரது குரல் இன்னும் ஓயவில்லை இனியும் ஓயாது எமது தாயக தாயக விடுதலை வென்றெடுக்கும் வரை ஓயாது என உறுதியுடன் பயணிப்போம். https://www.ilakku.org/பிரிகேடியர்-தமிழ்ச்செல்/
  13. கரும்புலி மாமாகள் வருகிறாள்
  14. வெங்காய மசால பரோட்டா இட்லி தோசைக்கு மாற்றாக பத்தே நிமிடத்தில் முற்றிலும் புதுமையான டிபன்
  15. ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட மலையினிலே . . . சென்னிமலையினிலே . . . முருகா முருகா முருகையா உருகாதோ உந்தன் மனமய்யா கண்களில் நீரும் கசியுதய்யா என் கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்டதும் கவலைகள் பறந்தய்யா மலையினிலே . . . ஆதி பழநியிலே . . . காலடி ஓசையை கேட்டேனம்மா வருவது குகனென்று அறிந்தேனம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா நினைவும் அவன் பின்னே சென்றதம்மா அலங்கார தீபம் அழைக்கின்றதே அந்த சிங்கார சென்னிமலையினிலே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
  16. தேடி உன்னை சரணடைந்தேன் சக்தியே பாடி பாடி பதம் பணிந்தேன் தேவியே ராஜேஸ்வரியே அடைக்கலம் நீயே தருணம் இதுவே தயைபுரிவாயே லிங்கரூபிணி பரிபூரணி ஜகத்காரணி தாக்ஷயனி அருவாய் உருவாய் வருவாய் நின்தாழ் சரணம் அம்மா நின்தாழ் சரணம் அம்மா நின்தாழ் சரணம் . . . முப்பெரும் சக்தியே ராஜேஸ்வரியே பூமாலை கரமேந்தி உனைநாடியே சௌந்தர்யலஹரியை நிதம் பாடியே அருணையில் உனைக்கண்டேன் ராஜேஸ்வரியே சங்கரன் செயலேத்து உலகாள்பவளே மஹிஷாசுர ஸம்ஹாரிணி மாஹேஸ்வரியே ஸ்ரீசக்ர வாஷினியே வித்யாம்பிகே ஆதிசிவன் பாதம் நிதம் பணிபவள் நீயே தேவியே . . .தேவியே . . .தேவியே . . . தேவியே . . .தேவியே . . .தேவியே . . .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.