Everything posted by உடையார்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
பொங்கும் கடலும்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டுச்செல்கின்றோம்..
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எனையாளும் அரசே - சிவமோடு சிவமாக
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தெய்வமே தமிழ் தெய்வமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சந்தணம் மனக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இருதயமே இருதயமே இயேசுவின் திருஇருதயமே இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே இருதயமே இருதயமே இயேசுவின் திருஇருதயமே இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே (2) உனைத்தேடி அருள்நாடி வருகிறோம் துயர் போக்கும் துணை நாடி வருகிறோம் (2) இருதயமே இருதயமே இயேசுவின் திருஇருதயமே இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே எம்மைப் பாதுகாக்க அருகில் இருக்கிறாய் எமைக் காப்பாற்ற உள் உறைகிறாய் (2) நாளும் வழிகாட்ட முன் நடக்கிறாய் எங்கள் காவலாக பின் தொடர்கிறாய் எம்மை ஆசிர்வதிக்க என்றும் அருளால் நிரப்ப நாளும் (2) எந்நாளும் என்மேல் அரணாகிறாய் - 2 மனபாரம் சுமந்து அமைதி தருகிறாய் உடல் நோய் நீக்கி உள்ளம் நிறைகிறாய் (2) எங்கள் இயலாமை பொறுத்து அருள்கிறாய் எங்கள் இயக்கமாகி இயங்கச் செய்கிறாய் எங்கள் வாழ்வின் மையம் நீயே நீங்காத சொந்தம் நீயே (2) எம் வாழ்வின் நிறைவே நீர் தானையா - 2
-
மேஜர் கணேஸ்
மேஜர் கணேஸ் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு மலையின் சரிவு! அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும். மேஜர் கணேஸ் தமிழ் ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை – தடித்த உதடுகள் – பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஸ். மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும் 3 அதிரடி காவல் நிலையங்களாலும் வளைக்கப்பட்ட தமிழீழத்தி் முள் வேலிப்பகுதி.அங்கேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வித்திட்டு வளர்த்தவன் கணேஸ். 1981 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவனுக்கு வயது 20 தான் .ஆனால் அப்போதே அவன் கண்களில் நெருப்பின் அலை பொங்கிற்று. ஒன்றாய் படித்த காலத்தில் ஆசிர் சீலனோடு சேர்ந்து வளர்த்துக்கொண்ட விடுதலை உணர்வுகள் ஆழப் பதிந்திருந்தன. தளபதி சீலனுக்குப் பக்கத்தில் அவன் ஒரு வீரனாய் களத்தில் நின்ற காலம் உண்டு. அந்த நாட்கள் கணேசின் வாழ்க்கையில் அவன் பாடம் கற்ற நாட்களாகும். மீசாலை முற்றுகையில் தளபதி சீலன் மீளாத் துயில் கொண்ட நிகழ்ச்சி கணேஷ் நெஞ்சில் மின்னலின் கொடிய வீச்சாயிற்று .தன் பள்ளிக்கூட நண்பனின் அந்தப் பெரிய சாவை அவன் என்றும் மறந்ததில்லை. நெல்லியடியில்தான் அவனுடைய முதல் களப்போர் 02.07.1982 அன்று ரோந்துப் போலிஸ் படையினரைச் சாகடித்து வீறு கொண்ட தன் போராட்ட வரலாற்றின் முதல் அத்தியாயத்தை எழுதினான் ஒப்பிலாத அந்த மாவீரன் தொடந்து கண்ட களங்கள் ஒன்றா? இரண்டா? சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், உமையாள்புரம் இராணுவ வாகனங்கள் மீதான அதிரடி, 13 இராணுவ வெறியர்களை முதன்முறை பலிகொண்ட திருநெல்வேலி வரலாற்றுப்போர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதல், திருக்கோவிலில் வைத்து துரோகி ஒருவன்மீதான துப்பாக்கிப் பிரயோகம், ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு, கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல், பாலம்பட்டாறு இராணுவ மோதல், புலிகளின் வரலாற்றின் முதன்முதல் இராணுவத்தின் L .M .G வகைத் துப்பாக்கியை கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு, இறால்குழி சுற்றிவளைப்பு மீறல்போர், 3 ஆம் கொலனி இராணுவ நேரடி மோதல், வாகரை கண்ணிவெடி அதிரடித் தாக்குதல், தெகிவத்தை பொலிஸ் கொமாண்டோக்கள் கடத்திச்சென்று நடுக்காட்டில் வைத்து கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை மீட்டெடுத்த தீரப்போர், எமது விடுதலை வரலாற்றில் முதல் தடவை சிங்கள விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய கூனித்தீவு முற்றுகையுடைப்பு, சம்பூர் யுத்தம், வெருகல் விடுதலைப் புலிகளின் முகாம் வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு. ஆம்… கணேஸ் புகழின் எல்லை கடந்த மாவீரன். தமிழீழத்தின் வடக்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான காரைநகர் தொடக்கம், தெற்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான திருக்கோவில் வரை களங்கள் பார்த்த கணேஸ், தமிழீழம் முழுவதையும் தன் இரண்டு கால்களால் அளந்தான். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்று நீண்டு கிடந்த தமிழீழத்தை எத்தனை ஆறுகள், உப்பேரிகள், கடல் நீரோடைகள் இடை நின்று பிரித்தலும் ஒற்றைப் பாலமாய் அத்தனை இடைவெளிகளிலும் நிரப்பித் தமிழீழத்தை இணைத்து நின்ற அவன் செயல் வடக்குக்கும், கிழக்குக்கும் வேலி போட நினைப்போருக்கு வரலாறு கொடுத்த சரியான அடியாகும். கந்தளாய் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த கணேஸ் ஆடம்பரம் இல்லாதவனாய் எளிமையானவனாகவே கடைசிவரை வாழ்ந்தான். புலிகள் அவனை விரும்பினார்கள் என்று சொல்வதைவிட அவனைப் போலவே இருக்க விரும்பினார்கள் என்பதே பொருத்தமானது. கூனித் தவின் அழகான உப்பாற்றுக்கரையில் புலிகள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ மகிழ பேசுவார்களே. வெருகல் மண்ணுக்குப் பச்சை வண்ணம் பூசும் வயல்களில் புலிகளின் கைகளைப் பற்றியபடியே சிரிக்கச் சிரிக்கப்பேசி அவன் உலா வருவானே ஓ!… அந்த நாட்கள் இனிமையானவை. இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதார் இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழினத்தைப் பிரிக்க சிங்கள ஆட்சியாளர் முனைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கலவரத்தை நிறுத்த மூதூர் நகருக்குப் பிரஜைகள் குழுவை அனுப்பினான் கணேஸ். அக்குழுவை கூலிப்படையினர் கைது செய்தபோது, போராடி அவர்களை அவன் மீட்ட களப்போர், இன்னுமொரு மெய்சிலிர்க்கும் வரலாற்று நிகழ்வே. புலிகளுக்குப் பக்கத்தில் மட்டுமல்ல, மக்களுக்குப் பக்கத்திலும் அவன் நெருக்கமாகவே நின்றான். சாவு அந்த மாவீரனைச் சந்தித்தநாள் கொடுமையானது! திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரிய பாலம் என்ற இடத்தில் 05.11.1986 அன்று 4 மணியளவில் நிகழ்ந்த இராணுவத்தின் சுற்றிவளைப்பில், மேஜர் கணேஸ் நெருப்பின் நடுவில் ஐந்து ஆண்டுகள் நின்று விளையாடிய விடுதலைப் புலி நேர் நின்ற எதிரிகளை மோதி நிமிர்ந்த தலையோடு மரணத்தை ஏற்றுக்கொண்டான். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாபெரும் துப்பாக்கிகளில் ஒன்று மெளனத்தை தழுவிற்று. ஓ….. கணேஸ்!….. நீ போய்விட்டாயா? இல்லை…! அகதிகள் முகாமில் இருந்து உன் தாய் ஆசையோடு உனக்கென்று சமைத்துக் கொடுத்த சோற்றுப் பொட்டலத்தோடு, உன் தந்தை பயந்து பயந்து உன்னைக் காண வருவாரே… அந்த சோற்றுப் பொதியை அவிழ்த்து வைத்து ஒவ்வொரு பிடியாய் வைத்து நீ புலிகள் வாயில் ஆசையோடு ஊட்டுவாயே! நீ ஊட்டிய சோறு எங்கள் உடம்பில் இரத்தமாகி விட்டதையா. நடக்கிறோம்….. அதே உப்பாற்றங்க்கரை…. அதே வயல் வெளிகள்…. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1987). https://thesakkatru.com/mutoor-divisional-special-commander-mejor-kanesh/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாடல் வரிகளுடன் அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல் வடிவம் பாடல் : சகோ. ஜெசிந்தா மேரி குரல் : மனோ இசை : அருட்பணி. அகிலன் இசை இயக்கம் : நெல்லை ஜேசுராஜன் தயாரிப்பு : அலைகள் மீடியா அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் (2) அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட (2) சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2) வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2) வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க இறைவனிடம் கையேந்துங்கள்...அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
- நிலாமதியக்கா.jpg
-
நடனங்கள்.
- மாவீரர் புகழ் பாடுவோம்
கல்லறை விடை திறக்கும்- மாவீரர் புகழ் பாடுவோம்
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்.. சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம் தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர் கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர் தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று....🔥🔥🔥🔥 விழியூறி நதியாகி விழுந்தோடும் எம்மில்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
சித்தம் இறங்க- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
நமசிவாய வாழ்க சிவாயநம- இறைவனிடம் கையேந்துங்கள்
குயவனே வள்ளலே- லெப். கேணல் மணிவண்ணன்
லெப். கேணல் மணிவண்ணன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்: இம்ரான் – பாண்டியன் லெப். கேணல் மணிவண்ணன். அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன. ஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள். 19.08.1997இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன. கொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் விழித்துக்கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். சிறப்புக் கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான். எறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை. வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங்காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும். மணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது. இன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு படைக்காவி கவச ஊர்தியும் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய படையாட்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து படையினரின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் பந்தாடப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப் போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல. ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் அன்பு உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது. 1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் கடுமையாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் இறுக்கமாகச் சண்டையிட்டன. சிறப்பு கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. “நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்” இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் குகைக்குள் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. “20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான். 20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன் எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் படைக்காவிகளும் அவர்களுடன் சேர்ந்து பெருமளவான படையினரும் முன்னநகர்ந்தனர். டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரி தன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின் சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான். அவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவச டாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது. நவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் ஏற்புத் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது. 26.09.1998இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப்படுத்தினான். சண்டை கடுமையாக நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். துண்டாடப்பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் படைகளும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டை அதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப்படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் தமது சுடுகலன்களிற்கு இரையாக்கினர். தங்கள் துப்பாக்கிகளில் ரவைகள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர். இறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண்பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது. மணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி, சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் வேளைவரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை. ஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள் புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற ஊர்தி கண்ணிவெடியில் சிக்கியது. மணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான் “நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்.” அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான். நினைவுப்பகிர்வு: ச.புரட்சிமாறன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாசி, 2006). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-manivannan/- லெப். கேணல் தர்சன்
லெப். கேணல் தர்சன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து களத்திலெங்கும் ஒலித்த குரல்: கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்த வண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் – 03 என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம். ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள் பளை நகரை கைப்பற்ற துளியும் அனுமதிக்கக்கூடாது என்ற உத்வேகம் பிறக்க, மிக விரைவிலேயே அப்பகுதி எம்மால் பலப்படுத்தப்பட்டு வந்தது. காப்பரண்கள் அமைக்கும் பணிகளில் போராளிகளுடன் சேர்ந்து எல்லைப் படையினரும்இ கிராமியப்படையினரும் வேகமெடுக்கத் தொடங்கினர். ஒவ்வொரு காப்பரணுக்குமாக எங்கள் தர்சன் ஏறி இறங்கினான். தனது குறிப்பேட்டில் ஏதேதோ எழுதி எடுத்துக் கொள்வான். அரண்களில் நின்றும், காய்த்துக் குலுங்கும் மாமரங்கள், நாவல்மரங்கள், ஆலமரங்கள் என கண்ணில் படுகின்ற மரங்களிலெல்லாம் ஏறுவான். ஓடிச்சென்று மணல்திட்டில் ஏறி நின்றுகொண்டு சுற்றியுள்ள பிரதேசங்களை அளவிடுவான். அவனது ஒவ்வொரு அசைவும் பெறுமதிமிக்க இலக்கு ஒன்றினை கருப்பொருளாகக் கொண்டிருந்ததை பின்னைய நாட்களில், அவன் முடிந்த பணிகளிலிருந்து போராளிகளால் அறிய முடிந்தது. முன்னணி அரண்களுக்கும், மோட்டார் நிலைகளுக்குமான பொருத்தமான களச்சூழலை உருவாக்குவதில் மனமொன்றிப் பணியாற்றும் இவன்; ஆண், பெண் போராளிகளின் அரண்கள் யாவற்றிற்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்வான். படையணிகளின் பொறுப்பாளர்கள், தளபதிகள் என நாளாந்தம் நடைபெறும் சந்திப்புக்களும், அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிய நேர்த்தியான ஒழுங்கமைப்புக்களையும் சோராமல் செய்த வண்ணமே இருப்பான். கேணல் கிட்டுப் பீரங்கி படையணியின் பளை – நாகர்கோவில் பகுதித் தளபதியான லெப். கேணல் தர்சன் தனது கடமைகளின் கனதியை உணர்ந்தவனாக, காற்றாக விரைந்து காணுமிடமெல்லாம் தர்சன், வேண்டிய பொழுதெல்லாம் தர்சன், தேவைகள் உணரப்படுமிடத்தெல்லாம் தர்சன் என தன் போராளிகளின் மத்தியில் சுழன்றான். ரூ சிக்ஸ், ரூ சிக்ஸ் என்ற குறியீட்டு மொழியில் களமுனைப் போராளிகளாலும், தளபதிகள், மற்றும் கட்டளைத் தளபதிகளாலும் மாறிமாறி இடைவெளி இன்றி அழைக்கப்பட்ட மந்திரச் சொல்லாகவே அவனது நாமம் அமைந்தது. கரகரத்த தர்சனின் குரல் ஆபத்தான களச்சூழலை தவிடு பொடியாக்கி வழி திறந்து விடும் வல்லமை பெற்றதாகவே போராளிகளால் உணரப்பட்டது. பாதுகாப்புத் தாக்குதலாகட்டும், வலிந்த தாக்குதலாகட்டும் எதுவாயினும் களமுனைப் போராளிகள், படையணித் தளபதிகள் தமக்கு ஆதரவாக தமது மனங்களில் தேர்வுசெய்யும் மோட்டார் பற்றறிக் பகுதிக் கொமாண்டராக எங்கள் தர்சன் இருந்தமையானது அவனது மோட்டார் ஆதரவுச் சூட்டின் வலிமையை எடுத்துக் காட்டத் தகுந்த உதாரணமாகும். காற்றைக் கிழித்துக் கொண்டு படுவேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வருகிறது. ‘யார்ரா அவன்? நிச்சயமாக ரூ சிக்ஸ் ஆகத்தான் இருக்கும்.’ ‘எவண்டா அவன்! இந்தப் பத்தைக்குள்ளால ரக்டரை உறுமிக் கொண்டு வாறது? ஆட தர்சன். நம்மட ரூ சிக்ஸ்’ இவ்வாறு எறிகணை புகை மூட்டங்களுக்கும் விமானக் குண்டு வீச்சுக்கு மத்தியிலும் சிரித்துக்கொண்டே அடிக்கடி பிரமிக்கத்தக்க வகையில் இவன் நடந்து கொள்வான். பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது கனரக இயந்திரத் துப்பாக்கியுடன் சமாராடியவன் அங்கு எம்மால் கைப்பற்றப்பட்ட ராங்கினை அதன் பின்னான நாட்களில் பொறுப்பேற்ற அணியுடன் இணைந்து ராங்கினை இயக்குவதிலும் பயிற்சி பெற்றான். அதனை செலுத்தக்கூடிய ஓட்டுனராகவும் இருந்தான் என்பது இன்னொரு பக்கம். இவனது ஆரம்ப பயிற்சியின் போது இவன் காட்டிய திறமையின் நிமித்தம் இவனுக்கு கனமான பணிகளே ஒப்படைக்கப்பட்டது. அத்தனையையும் ஏற்றுக்கொண்டு குறும்புக்காரனாகவும், குழப்படிக்காரனாகவும் திறமை மிக்கவனாவவும் செயற்பட்டான். மோட்டார் சைக்கிளைக் கொண்டு மரத்தோடு மோதிவிட்டு பொறுப்பாளரின் முன்னால் தலையைச் சொறிந்து கொண்டு தன் தவறை ஒப்புக் கொண்டு நிற்பான். வாகனங்களை கேட்காமலே எடுத்துக்கொண்டு எங்கையாவது முட்டிவிட்டு கராச்சிக்குப் போய் திருத்தம் செய்து கொண்டு வந்து பொறுப்பாளரிடம் உண்மையைச் சொல்லி தனக்குரிய தண்டணையையும் வாங்கிக் கொள்வான். ஆரம்ப நாட்களில் இவன் செய்த அன்புத் தொல்லைகளாகவே இவை அமைந்தன. வாகனத்தை இனிமேல் தொடக்கூடாது என்று இவனுக்கு கட்டளை இடும் பொறுப்பாளரே “மச்சான் தர்சன், வாகனத்தைக் கொண்டு போய் சாமான்கள் கொஞ்சம் வந்துகிடக்கு கவனமாக ஏற்றிக்கொண்டுவா. எல்லாம் உடையும் சாமான்கள்” என்று கூறி பணியை ஒப்படைப்பார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பரஸ்பரம் நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் கள்ளம் கபடம் இல்லாப் போராளி எங்கள் தர்சன். பல்துறை சார் ஆற்றல் மிகுந்த இவன் கனரக ஆயுதங்களை இயக்குவதில் கைதேர்ந்தவனாகவும், ராங் ஓட்டுனராகவும், சிறந்த வேவு வீரனாகவும் அனுபவங்களைப் பெற்று கனரக மோட்டார் அணியுடன் இணைந்து செயற்படத் தொடங்கி பின்னர் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னணித் தளபதியாக வளர்ச்சி அடைந்தான். இவனுடைய அசாத்தியமான வேகம் எங்கேயாவது கொண்டு போய் விழுத்திவிடுமா? அதுவும் இல்லை. வேகத்திலும் அப்படியொரு நிதானத்தை வளர்த்துக் கொண்டவன். “ரூ சிக்ஸ்இ ரூ சிக்ஸ்” என்ற அழைப்பு வரும் போது, “வேகமாச் சொல்லுடா தம்பி, இந்தா இரண்டு அனுப்பியிருக்கிறன் கறைக்சன தா” (திருத்தத்தைத் தா) என்று தனது துரித செயல் திறனாலேயே பதில் அனுப்பிவிட்டு, ராங் ஒண்டில் எரியது அல்லது இழுத்துக் கொண்டு ஒடுது என்ற முடிவு தெரிந்தவனாக தன்னை அழைத்த போராளியின் பதிலுக்காகக் காத்திருப்பான். இங்கு முன்னணி காப்பரணில் நிற்கும் போராளி ஒருவன் தனது அரணுக்கு சற்று நெருக்கமாக எதிரியின் ‘ராங்’ ஒன்று வந்துநின்று அச்சுறுத்த முனையும் போது அதனை மோட்டார், ஆதரவுடன் விரட்டி அடிக்க நினைத்து அந்த நிலைமையினை தர்சனுக்குத் தெரிவிப்பதற்காகவே ‘ரூ சிக்ஸ்’ என அழைத்திருப்பான். ஆனால் தர்சனோ அந்தப் போராளியின் நிலைமையினையும் ராங் உறுமல் சத்தத்தினையும் அனுமானித்து தான் எடுக்க வேண்டிய உடனடிப் பதில் நடவடிக்கையாக கணப்பொழுதில் மோட்டாரை இணைத்துக் களமாடுவான். ஏனைய அரண்களில் நிற்கும் போராளிகள் நிலைமையினை உணர்ந்து தர்சனின் தொலைத் தொடர்பு அலை வரிசையின் எண்ணிற்கு சென்று தர்கனின் கட்டளை பிறப்பிக்கும் தன்மையை கேட்டுக் கொண்டு இருப்பர். உணர்ச்சி ததும்கும் நிலையில் தர்சன் வழங்கிக் கொண்டிருக்கும் கட்டளைகள் போராளிகளை பிரமிக்க வைக்கும். களமுனையில் அடிக்கடி வந்து சேட்டை புரியும் படையினருக்கு இவனது எறிகணைகள் தான் பாடம் புகட்டும். தனது மோட்டார் தொகுதிகளைக் கொண்டு மிகத்துல்லியமான எறிகணை சூட்டினை வழங்கி எதிரிக்குப் பேரிடியாய் இடித்தவன் எங்கள் தர்சன். தனக்கெனக் கொடுக்கப்பட் பிரதேசங்களில் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அளந்து பெயரிட்டு, குறியீடு இட்டு, எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதுடன், ஒவ்வொரு மூலையிலும் எதிரி இப்படித்தான் நகர்வான், இதுதான் நடக்கும் என்ற தெளிவான பார்வையுடனும், அதனை முறியடிக்கும் திட்டத்துடனும் களங்களில் மோட்டார் பீரங்கிகளின் தளபதி என்ற பெயரிற்கு வரைவிலக்கணமாய் எங்கள் தர்சன் நின்றான். எமது போராளிகளோ அல்லது அணிகளோ தற்செயலாக இக்கட்டில் மாட்டிக் கொண்டு விட்டால், அதில் இருந்து எவ்வாறு மீண்டுவர வேண்டும், அல்லது மீட்க வேண்டும் என்ற திட்டம் தர்சனின் உள்ளங்கையில் எப்போதும் இருக்கும். தன்னை நோக்கி அழைக்கும் குரலின் தன்மையைக் கொண்டு அந்தத் தேவை என்னவாக இருக்கும் தனக்குரிய பணி என்னவாக இருக்கும் தன்னிடம் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும் என்ற பல விதமான கேள்விகளுக்கு மத்தியிலும் தேவையுணர்ந்தவனாக தேவையை ஊகித்துச் செயலாற்றுகின்ற அவனுக்குள் குடியிருந்து, இயக்கிய அவனது ஆற்றல் தான் என்ன!? “மச்சான் தவசீலன் ஒன்றுக்கும் யோசிக்காத, கறைக்சன மட்டும் தா பிள்ளைகள கவனமா உன்னோட வச்சுக்கொள், நான் என்னை வெளியால எப்படியும் எடுப்பன்” என்று முற்றுகை ஒன்றினுள் சிக்கிக் கொண்ட எமது அணி ஒன்றை மீட்பபற்காகத் தனது மோட்டார்களை ஒன்றிணைத்து எதிரியின் முற்றுகை வேலியை உடைத்தெறிந்து அவ்வணியினை பத்திரமாக மீட்டவன் எங்கள் தர்சன். தனி ஒரு மோட்டாரைப் பயன்படுத்தியதிலிருந்து பல தொகுதி மோட்டார்களை இணைத்து சமர்க்களங்களை வழிநடத்தியது வரை பட்டறிவினால் பட்டை தீட்டப்பட்ட வைரமான தளபதி அவன். முல்லைத்தள தாக்குதலின் போது அம்முகாமினுள் சிக்கிக் கொண்ட படையினரை மீட்கவென கடல்வழித் தரையிறக்கம் ஒன்றினை வலிந்து மேற்கொண்டு, மீட்புப் படை ஒன்றை படைத்தலைமை அனுப்பி வைத்தபோது, தரையிறங்கு கடற்கலத்தின் மீது குறிதவறாது வீழ்த்தப்பட்ட எறிகணையினால், கடற்கலம் சேதமானதுடன் நாற்பதிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். அன்றைய நாளின் மோட்டார் அணிக் கதாநாயகர்கள் சிலருள் எங்கள் தர்சனும் ஒருவன். கனரக மோட்டார்களினது களப்பாவனையில் முன்னனுபவம் அற்ற நிலையில் களமிறங்கி எமது மோட்டார் அணி எடுத்துவைத்த முதல் அடியே பலமான அத்திவாரமாக எழுந்ததும், அதனை தொடர்ந்து நாம் சந்தித்த பெரும் சமர்களில் வெற்றிகரமாக நகர்த்தக்கூடிய தற்துணிவை எமக்கு ஏற்படுத்தியது. அத்தகைய துணிவும் விரைவும் ஒன்றுசேர நிகழ்த்திய சாதனை தான் ‘இடைக்காடான’ என்ற எங்கள் தர்சனை எமக்கு இனங்காட்டியது. அதனை உடனடுத்து சிங்களப் படைதொடுத்த; சத்ஜெய’வை எதிர்த்துக் களமிறங்கிய முன்னணிப் படையணிகளுக்கு ஆதரவுப் பலமாக மோட்டார் அணிகளும் இணைக்கப்பட்டன. அத்தகைய மோட்டார் அணிகளின் ஒரு தொகுதிக்கு பொறுப்பாளனாக தர்சன் நின்று செயற்பட்டான். தன்னிடம் இருந்த கணித அறிவினை இணைத்து துல்லியமாக மோட்டார்களை செயற்படுத்துவதில் வெற்றிகண்டான். புதியதோர் அறிவியல் போருக்குள் பிரவேசிக்கும் ஆரம்ப முயற்சிகளில் தர்சனிடம் இருந்த இனங்காண முடியாத ஆர்வம், கடின உழைப்பு, துரிதவேகம், தேடற்பண்பு அவனது அணியைச் சார்ந்த ஏனைய போராளிகளுக்கம் ஊக்க மாத்திரையாகவே அமைந்திருந்தது. சிறுரக மோட்டார்களைக் கொண்டு மரபுவழிச் சமரை எதிர்கொண்ட எமது படையணிகளுக்கு கனரக மோட்டார்கள், பீரங்கிகளை இணைத்துப் போரிடும் ஆற்றல் பல மடங்கு அதிகரித்தது. இன்று ஆற்றல் மிகு மோட்டார் பீரங்கிப் படையணிகளாக வளர்ந்து பாரிய வெற்றிகளைக் குவித்து நிற்கும் எமது இயக்கத்தின் போரிடும் ஆற்றலில் மோட்டார் பீரங்கிகளின் பயன்பாடு என்பது மூலவேராக இருக்கிறது. இத்தகைய போராற்றல் பெறுவதில் இருந்த ஆரம்ப இடர்பாடுகளைத் தமது கடின உழைப்பால் தகர்த்து வழிசமைத்துத் தந்த அணிகளில் தர்சனின் பங்கு போற்றற்கரியது. எதிரியின் ‘சத்ஜெய’ நடவடிக்கையின் பின்னான காலங்களில் மோட்டார்கள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டும், அதற்குரிய அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு புதிய படையணி ஒன்றும் உருவாக்கம் பெற்றது. கனரக மோட்டார் பயிற்சியின் ஆரம்ப கட்டங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, கனரக போராயுதம் ஒன்றைக் கையாளும் போது போராளிகளுக்கு இருக்கக்கூடிய உடல்வலு, மோட்டாரின் தொழில்நுட்பம் சார்ந்து எழக்கூடிய சவால்கள், போரில் சிறுரக ஆயுதங்களுடன் இணைந்து அதனைப் பயன்படுத்தும் முறைகள், கணித வரைபட அறிவை உட்புகுத்தி போரில் உச்சப் பயன்பாட்டைப் பெற வேண்டும் என்ற துடிப்புஇ மோட்டாருக்கான அதிநவீன துணைக்கருவிகளின் பயன்பாட்டு முறைகள் என அனைத்துமே புதுமையானதாகவும் புதினமானதாகவும் இருந்தது. இச்சந்தர்ப்பத்தில் அனுபவ ஆசானாக நின்ற தர்சன் அனைத்து அணிகளைச் சார்ந்த போராளிகளையும் பயிற்சிக் களத்தின் மையத்தில் சந்தித்தான். அவர்களுக்குப் புத்தூக்கியாகச் செயற்பட்டான். போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள் ஆகியோருடன் இரண்டறக் கலந்து அணிகளுக்குப் புது வேகம் ஊட்டினான். வியர்வையில் குளித்து, உடல் சோர்ந்து போகும் வேளை மோட்டார் அணியினது தனியொரு போராளியின் இயலாமையானது, அவ் அணியைப் பாதிக்கும். எனவே ஒருமித்த போராளிகளின் செயற்பாடு இங்கு மிக அவசியமானது. கை நழுவினால் கால் சிதையும், கால் இடறினால் கை சுளுக்கும் கூடவே மோட்டாரின் ‘லொக்’ உடையும். இவ்வாறு மோட்டாரின் கனமான பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும் வாழ்வாகவே பயிற்சிக் காலம் தொடர்ந்தது. இத்தகைய கதைகளை பொருத்தமான இடங்களில் சொல்லிச் சொல்லி அணிகளை ஆற்றுப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் இலகு வித்தைகளைக் கற்றுக் கொடுத்த தர்சனுக்கு அனைத்துப் போராளிகளிடமும் மரியாதைக்குரிய ஆசான் என்ற நிலையினையும் பெற்றுக்கொடுத்தது. அக்காலப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ‘ஜெயசிக்குறு’ என்ற வரலாற்றுப் படைநடவடிக்கை வன்னி மணி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது எமது தலைவர் அவர்களால் கேணல் கிட்டுப் பீரங்கிப்படையணி என்ற பெயர்சூட்டி புதிய வரலாறு படைக்க, புதிய மூச்சுடன் மோட்டார் படையணிகள் களமிறங்கின. ‘ஜெயசிக்குறு’ நகர்வை அதன் தொடக்க வாயிலில் இருந்து இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் வரை புலிகளின் எதிர்ச்சமர் போரியல் வரலாற்றில் புதிய பதிவொன்றை ஏற்படுத்தியதை காலம் எமக்கு நினைவூட்டும். அதை மோட்டாரினால் சாதித்தவர்களில் ஒருவன் தர்சன். வரலாற்றுச் சமரை எதிர்கொண்ட காலங்களில் எமது படையணிகள் சந்தித்த சவால்கள் ஒவ்வொன்றும் இலகுவாக விளக்க முடியாதவை. மோட்டார் அணிகளைப் பொறுத்த வரை மோட்டார் ஒன்றினை நகர்த்தி உரிய இடத்தில் நிலைப்படுத்தி விட்டு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். “வேகமாக நிலைப்படுத்திப் போட்டு ‘ஓக்கே’ பண்ணுங்கோ” என்ற கட்டளை கிடைக்கும். அடுத்த கணம் சூடுபறக்க வேலைகள் நடக்கும் போதே “உங்கட மோட்டாரை அல்பா பகுதிக்கு நகர்த்தி வேகமா நிலைப்படுத்திப் போட்டு ஓக்கே பண்ணுங்கோ” சண்டையின் போக்கிற்கு ஏற்ப பறந்து வரும் மாற்றுக்கட்டளை. ‘முந்துபவன் வெல்வான்’ என்பது போரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் ஒன்று. எங்கள் பிரியத்திற்குரிய தர்சனிடம் இருந்த சலியாத வேகம் எமது அணிகளை துரிதமாக நகர்த்திச் சென்றது. தனித்து ஒரு போராளியால் கையாள முடியாத பாரிய சுமை கொண்ட உடற்பாகங்களைத் தாங்கிய ஒரு மோட்டாரினை களற்றுவதும், மீண்டும் பொருத்துவதும் என்பது விரைந்து வரும் வெற்றிச் செய்தியைப் போலல்ல. ஏற்று, இறக்கு, பொருத்து, நிலைப்படுத்து, மீண்டும் கழட்டு, தூக்கு, கொழுவு, பொருத்து என்ற சொற்களால் அடிக்கடி கட்டுண்டவர்களாக எமது பணிகள் தொடரும் போது கூட நின்று வழிகாட்டி தோள் கொடுக்கும் சுமைதாங்கியாகவும் தர்சன் செயற்படுவான். ‘களைப்பாய்க் கிடக்கு, பிளேண்ரீத் தண்ணி ஒன்று குடிப்பம்’ என்ற ஆசை எழும் போது நின்ற இடத்திலேயே அது தயாராகும். “தர்சண்ண வழங்கல் சீனி துடிஞ்சி போச்சி”, “சரி மச்சான் தண்ணிய அடுப்பில வை, சீனி கொண்டு வாறன்” இப்படிச் சொல்லும் தர்சன், சுழன்று அடித்துக் கொண்டு சீனி, லக்ஸ்பிறே என்று கொண்டு வந்து சேர்ப்பான். ‘மோட்டார் நிலைக்கு சைக்கிள் ஒன்று வேணும் தர்சண்ணையைக் கேப்பம்’, ‘வரைபட வேலைக்கு பென்சில், மாக்கர், திபெக்ஸ் வேணும் தர்சண்ணணை கேப்பம்’, ‘ரக்டர் பெட்டி உடைஞ்சு போச்சு தர்சண்ணையிட்ட மாறிக்கேப்பம்’ ‘வோக்கி சொக்கற் பழுது, குறொசும் அறுந்திட்டுது தர்சண்ணைக்கு அறிவியுங்கோ.’ ‘இன்னும் ஒரு கிலோமீற்றருக்கு ‘லைன்’ தகடுகள் போட வேணும், தகடும், பெயின்ரும் கொண்டுவாறன் எண்டு தர்சண்ணன் சொன்னவர்.’ ‘இது தர்சண்ணன் வாங்கித் தந்த சேர்ட். இந்த ஜூன்ஸ் தர்சண்ணன் தச்சுத் தந்தவர்.’ இப்படி, இப்படி எல்லோர் மனங்களிலும் நிலைத்து நிற்கக்கூடிய முத்திரையைப் பதித்து விட்டவன் எப்படி எங்களைப் பிரிந்து போக முடியும்? “திறினைன்இ திறினைன்….” இது எங்கள் தளபதி சேகரை அழைக்கும் குறியீட்டுப் பெயர். “உங்கட பக்கத்தால ராங் ஒன்று அடிச்சுக்கொண்டு வருகுது நான் அத நிப்பாட்டுறன் நீங்க மற்றதுகள கவனியுங்கோ.” “ரூசிக்ஸ் நானும் அத சொல்ல நினைச்சன் நீங்களும் அதை கவனிச்சுப் போட்டியள்” என்ற தளபதி சேகரின் நம்பிக்கையும், நன்றியும் கலந்த உரையாடலுடன் களம் வெற்றியை நோக்கி நகரும். “ரூ சிக்ஸ்இ ரூ சிக்ஸ்… போர் சிக்ஸ்…”, “சொல்லுங்கோ அண்ண…” “உன்னட்ட இருக்கிற ‘முடியரசன்’ வரைபடத்தை ஒருக்கா பார்…”, “சொல்லுங்கோ அண்ண”, “அதில விடிவெள்ளி என்ற சந்தி இருக்கு பார்…” “விளங்கிட்டு சொல்லுங்க அண்ண” “அதில கவனமா பார் அந்த முக்கோணத் துண்டில கொஞ்சப் பேர் வந்து ஒதுங்குறாங்கள். பவள்ள கொண்டு வந்து இறக்குறான். அத துடைச்சு அழிக்கோணும் உடன செற்பண்ணு” என கட்டளைத் தளபதி கேணல் பானு சொல்லி முடிக்கவும் தர்சன் ஓ.கே பண்ணவும் மின்னல் வெட்டி மறையும் இடைவெளிக்குள் துடைப்பு அழிப்பு அரங்கேறும். இவ்வாறே தனது வரைபட அறிவாலும், கணித அறிவாலும் பரந்த பகுதியில் திக்கொன்றாக நடந்து கொண்டிருக்கும் உக்கிர மோதல்களில், களநிலையை துல்லியமாகக் கணக்கிட்டு தளபதிகளின் கட்டளைகளை நிறைவேற்றவும் அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் தர்சன் முண்டியடிப்பான். சிறிய ஆளணியையும், மிக அரிதான வளங்களையும் பயன்படுத்தி குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொடுக்கப்படும் பணிகளை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கவனத்துடனும் செய்து முடித்து விட்டு கட்டளைத் தளபதியின் எதிர்பார்ப்பக்களை நிறைவேற்றவே காத்திருப்பான். “தர்சனிட்ட கொடுக்கிற எந்த வேலைத்திட்டங்களையும் திருப்பி ஒருக்கா பார்க்க வேண்டிய தேவையில்லை அந்தளவு அவன்ர வேலையில நம்பிக்கை இருக்குது” இப்படி மூத்த தளபதி கேணல் பானு தர்சனைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “எமது தாக்குதல்களில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தர்சனிடம் இருந்தது. பல தாக்குதல்ல தர்சன் அதை செய்தும் காட்டியுள்ளான்” இவ்வாறு வடபோர் முனைக் கட்டளைத் தளபதியான கேணல் தீபன் தனது மனதிலுள்ளதைப் பகிர்ந்துள்ளார். “எங்களுக்கெண்டு சண்டையில் ஒரு பகுதி தரப்பட்டா அதற்கு மோட்டார் சப்போட்டா தர்சண்ண வரமாட்டாரா? என்று எங்களுக்குள்ள கதைப்பம்” என்று இளநிலைத் தளபதிகள் பலரும் தர்சனை நினைவு கூர்கிறார்கள். போர்க்களங்களில் தனது துணிவு, அறிவு, ஆற்றல்களை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிறைவாக பயன்படுத்திய இவன் 04.11.2000 அன்று காவலரண் பகுதி ஒன்றினூடாக களநிலைகளை அவதானித்துக் கொண்டு வரும் போது எதிரியினாற் குறிபார்த்துச் சுடப்பட்ட குண்டை மார்பிலேந்திச் சரிந்த தர்சனை அறிந்த அத்தனை போராளிகளின் மனங்களிலும் இப்போதும் குமுறிக்கொண்டு தான் இருக்கிறது. நினைவுப் பகிர்வு: அ.அமுதன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாசி, ஐப்பசி 2003). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-tharsan/- லெப். கேணல் ராகவன்
இடர்களுக்குள் நிமிர்ந்து நின்று வெற்றிகளை பெற்றுத்தந்தவன். நவம்பர் 4, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து லெப். கேணல் ராகவன்: இடர்களுக்குள் நிமிர்ந்து நின்று வெற்றிகளை பெற்றுத்தந்தவன். நியூட்டன் , நியூட்டன்… இராகவன் இராகவன் என்று நடைபேசியில் ஆவேசமாக அழைப்பது கேட்கிறது. என்னதான் நடக்கிறது…. என்று எவருக்குமே தெரியாத ஒரு அச்சம் நிகழ மறுமுனையில்… இராகவண்ணை நியூட்டன் என்ற ஒருஅவசர குரல் பதில் சொல்கிறது. இந்த அவசர அழைப்பு இக்கட்டான சூழலை உணர்த்துகிறது. டேய் நியூட்டன் அங்கால உடைச்சிட்டாங்கள், உன்னால முடியுமா, இல்லையா என்ற சொல் என கேட்கிறான் மாவீரன் லெப். கேணல் இராகவன். இராகவண்ணை இப்ப உடைச்சிருவன் என்று பதில் வர சில விநாடிகள் ஒரு சலனத்தையும் காணவில்லை. அதே சம நேரத்தில் எதிர் எதிராக பிராதன, உபகட்டளை மையத்திலிருந்து தளபதி ஜெயம் அவர்களும், தளபதி சொர்ணம் அவர்களும் இராகவனை தொடர்பு கொண்டு நிலைமையை விசாரிக்ககிறார்கள். கலோ… 5.2 என்ன மாதிரி மச்சான் நிலைமை. இங்கால உடைச்சிட்டாங்கள் கெதியா உடையுங்கோ என்றதும்…. இந்தா இப்ப உடைக்கிறன் என்று தெளிவான குரலில் இராகவன் சொல்லும் போதே எதிரியின் படைமுகாம் நோக்கி பக்கவாட்டாக நகர்ந்த அணி பாதை உடைத்துவிட்டதற்கு அறிகுறியாக பெரிதொரு வெடியோசையும் பல நூறு வேட்டோசையும் தொடர்ந்து கேட்கத்தொடங்கிவிட்டன. எமது பக்கம் மிக இடர் சூழ்ந்து விட்டது. நிச்சயமாக எதிரி உசாரடையப்போகிறான். என்பது புலனாகி விட்டது. அப்படி எதிரி உசாரகிவிட்டால் நிலைமை மிகமோசமாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்துவிட்டனர். உயிரை பணயம் வைத்து எதிரியை எதிர்கொள்ளும் விடயமல்ல இது. மாறாக உயிரின் மேலாக நின்று உயிரை அழுத்தி நாடிபார்கின்ற ரணகளம் இது என்பதை எல்லோரும் உணர்ந்து விட்டதனால் தடை உடைப்பிற்கான உத்வேகத்தை அதிகரித்துவிட்டனர். முற்றிலும் திசைமாறப்பார்த்தனால், விடுதலைப்புலிகளுக்கே உரிய சீரிய பண்புடன் தனது கடமையை செய்ய தீர்மானித்துவிட்டான். ஏற்கனவே நடைபேசியில் உத்வேகம் பெற்றபரல் மேலும் கடும் சீற்றத்துடன் எழுகிறது. கலோ… 5.3….5.2,….5.2 (எனகனல் பறக்கின்ற குரல்களில் கேட்கிறது) 5.2,5.3 சொல்லுங்கோ இந்தா இப்ப வாறன் நீ வேகப்படுத்து. இப்படித்தான் இராகவனின் குரல் சீற்றத்துடன் ஒலித்தது. எதிர்பக்கம் எதிரிமுகாமிற்கள் புகுவதற்கு எம்மவர்கள் திட்டமிட்டத்தாக்குதல் களை தொடர்ந்த நடத்திக்கொண்டிருந்தார்க்ள. அந்த நேரத்தில்தான் இராகவன், தடையணி எதிரியின் தடைகளை உடைக்க பிரயத்தனப் படும் அந்த இக்கட்டான பகுதிக்குள் வந்தான். தம்பி நீ, அதிலிருந்து அடி தம்பி நீ ஓடி அங்கே போ. டேய் அடிங்கடா எல்லோரும் சேட்டை விடுறாங்கள். இப்ப நாங்கள் யாரெண்டு காட்டுவம். தம்பி டேய் ஓடிப்போய் வேகமாக டோபிற்ரோவை வை என்று வேகமாக கட்டளைகளை இராகசன் தெளிவாக வழங்கியபடியே தடையுடைப்பணியோடு சண்டையிட்டாவாறே முன்னேற தொடங்கிவிட்டான். தடையணி தனது செயற்பாட்டை வேகப்படுத்தி விட்டது. என்பதைவிட, தடையணியானது மிகுந்த ஓர்மத்துடன் எதிரியின் தடைகளை உடைதெறிந்திட காப்புச் சூடுகளை வழங்கத்தொடங்கிவிட்டது. அந்த வேகத்தின் உச்சம் எரிக்குத் மட்டுமே தெரிந்திருக்கவேண்டும். வலம் இடமாக இரண்டு 50 கனரக உயர்வலு துப்பாக்கிகளும், இரண்டு பொதுபயண்பாட்டு இடைவலு துப்பாக்கிகளும் உந்துகணைச் செலுத்திகளும், இயந்திரத் துப்பாக்கிகளும், மின்னிடும் வேகத்துடன் அணலை கக்கத் தொடங்கின. தாக்குதலில் உச்சத்தால் எதிரி நிலைகுலைந்திருக்க வேண்டும். காரணம் அவனிடமிருந்து பல நிமிடங்கள் எதுவித சூடும் வரவில்லை என்பதை உணரமுடிந்தது. காரிருள் விண்ணை படர்ந்திருக்க அந்த இருளை வர்ண ஜாலமிட்டு ரவைகளம் எறிகணை வெடிப்பொறிகளும் அதிசயமாக்கி காட்டிய அதேவேளை, காரிருளை கிழித்த பெரியதொரு தீப்பிழம்பு முடிவில் ஒட்டுசுட்டான் பிரதேச அமைதியை குலைந்துவிட்டது. ஆம் வெடிமருந்து பொமி (ரோபிற்ரோ) வெடித்து தடையும் உடைக்கப்பட்டது. ஓன்று… இரண்டு… மூன்று… நான்கு என பல தொடர்ரான தடைகள் உடைக்கப்பட்டு அணிகள் உள்நுழைகின்றன. அதே நேரத்தில் வெடியோசையும் கடந்த இராகவனின் குரலோசை இடியாய் அதிர்கிறது. இராகவனின் பாதுகாவலன் ஒருவன் அண்ண போகவேண்டாம். அண்ண போகவேண்டாம். என கத்தியவாறே இழுத்துப்பிடிக்கிறான். என்னை விடுடா என்றவாறு அவனை தள்ளிவிட்டு முன்னே செல்கிறான். அவனது வருகையை கண்ட போராளிகள் இராகவண்ணை நீங்கள் வரவேண்டாம். நாங்கள் வேகமாக பிடித்து தாரம் என கத்தியதையும் கேளாது இராகவன் முன்னேறுகிறான். இராகவன் புலிப்படையின் தளபதியல்லவா. அப்படி இருக்கையில் உறங்கி விடுவானா என்ன? சிறுத்தை சீறத்தொடங்கியது. அந்தச் சீற்றத்தின் உச்சம் உடன் தெரியத்தொடங்கியது. ஒட்டுச்சுட்டான் எதிரியின் குகைக்குள் புலிகள் சேனை புகுந்துவிட்டது. சண்டை ஆரம்பித்த உடனேயே வெற்றி எமதென நினைத்து சந்தோசப்பட முடியாது போய்விட்டது. நெஞ்சில ரவவைக்கூட்டு அங்கியுடன், ஒரு கையில் இயந்திர துப்பாக்கியுடனும் தலையிலே உருமறைப்பு சாக்குத் தொப்பியுடனும் மறுகையில் நடைபேசியில் விரைவான கட்டளையை வழங்கிக்கொண்டிருந்த இராகவனின் தலையில் எதிரியின் ரவை ஒன்று நுழைந்துவிட்டது. சாக்குத்தொப்பியை துளைத்து மண்டை ஓட்டினூடாக ரவை வெளியேறிவிட்டது. இராகவனின் தலையிலிருந்த இரத்தம் பெருகத் தொடங்கியது. சிறு முனகலுடன் இராகவன், தமிழ் மண்ணிலே சரிந்துவிட்டான், ஆனால் எமது வேகம் சரியவில்லை; மாறாக பன்மடங்கு வேகமுடன் உருப்பெற்று “ஓயாத அலைகள் 03′ வேகம் பெறத்தொடங்கியது. மாவீரன் லெப் .கேணல் இராகவன் சண்டடைக்கு வெளிக்கிடும் போதே சொன்னான் “நானென்றால் இந்தச்சண்டையில் திருப்பி வருவேனோ தெரியாது” ஆனால் சண்டை பெரியளவில் வெற்றிபெரும். என்றைக்கும் அண்ணையின்ர திட்டம் பிழைத்ததில்லை என்று சொல்லிவிட்டே சென்றான். “ஓயாத அலைகள் 03” என்ற வரலாற்றுக் காவியம் வெற்றியை நோக்கி ஆரம்பிக்கும் போதே அந்த வெற்றிச் சமரிற்காய் தன் உயிர் விலையை முதலாய் கொடுத்தவன் இராகவன். எனவேதான் ஓயாத அலைகள் மூன்றில் முதல் களப்பலியானவன் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டான். மேன்மையான தேசபக்தியும், விடுதலையின் பால் மிகுந்த நேசிப்பும் கடமையுணர்வும், தவைவரின் கலக்கமில்லா சுவாசமும் கொண்டவன் இராகவன். வீரம், வேகம், விவேகம், படைநகர்த்தும் தந்திரம் என்பனவற்றில் இராகவன் தனிசிறப்பு பெற்றவன் என்பதை அவனது சண்டைகள் பல நிரூபித்திருக்கிறது. மாவீரன் லெப். கேணல் இராகவன் எல்லோராலும் நேசிக்கப்பட்ட போற்றப்பட்ட போர்த்தளபதி. அவனை எப்போது பார்த்தாலும் ஒரு இராணுவ மேல் அதிகாரிக்கே உயரிய தோற்றத்துடன் இருப்பான். போராளிகளிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவன். ஆனால், சண்டைக்களங்களில் முழுமையாக எதிரியை பகைமைகொண்டு தாக்குவான். சண்டைகளங்களில் அவனது கட்டளைகள் உறுதியும், இறுதியுமிக்க தெளிவான கட்டளையாகவே இருக்கும், தலைவரால் தரப்படுகின்ற எந்த இக்கட்டான கடமைகளையும் உடன் செய்து முடிப்பதில் மிகுந்த அக்கறையுள்ளவன். அவனது சண்டைகள் மிகவும் வித்தியாசமானவை. 1990 ஆம் ஆண்டு எதிரிகளின் கொடுமைகளை கண்டு வெகுண்டெழுந்த இராகவன் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டான். ஆரம்பப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறிய அந்தப் போராளிக்கு உடனடியாகவே களம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவனது தாயக தாகம் நிறைவேறும் நாளும் தொடர்ந்தது. 1990 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் நடந்த சிறு சிறு தாக்குதல்களுக்கெல்லாம் இராகவனும் தொடர்ந்து சென்ற தனது போர்திறமையை வளர்த்துககொண்டான். அவனது வேகமான கள அனுபவமே போராட்டத்தில் அவனை களத்தளபதியாக்கியது. சிங்களப் பேரினவாதிகள் வன்னிமண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைகொண்டு வந்த “மின்னல்” நடவடிக்கையில் திறம்பட சண்டடை செய்தவன். அந்தக் களத்திலேயே தளபதி தீபன் அவர்களால் சிறந்த சண்டை வீரன் என போற்றப்பட்டவன். “மின்னல்” நடவடிக்கை ஊடாக சண்டையில் சாதனை செய்யத்தொடங்கியவன் இறுதிவரை “ஓயாத அலைகள் 03” தொடங்கும் நாள்வரை தனது திறமைகளையும், வீரத்தையும் சண்டையில் காட்டி புலிகளின் தளபதிகளில் ஒருவனகாவும் மாறியிருந்தான். தமிழீழத்தின் சுதந்திர விடிவிற்காய் நடந்த பெரும்பாலான சண்டைகளில் இராகவன் பங்குபற்றி சாதனைகள் செய்திருக்கிறான். அவனது சண்டை வரிசையில் ஓயாத அலைகள் 01.02.03 மற்றும் ஆனையிறவு பரந்தன் சண்டைகள் புகழ்பூத்தச் சண்டையாகும். இவற்றை விட ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் பெரும்பாலான நாட்கள் எதிரிக்கு முகம்கொடுத்தப் பெருமையும் இராகவனையே சேரும். ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கையில் ஒரு நாள் நாம் முகாமிட்டிருந்த புளியங்குளம் முகாமிற்குள் சிங்கள எதிரிப் பட்டாளங்கள் உட்புகுந்துவிட்டன. இராணுவ கவசவாகனங்கள் பல உள்ளே நூழைந்து தாக்குதலைத் தொடர்ந்தன. முகாமின் மையப்பகுதியான கண்டி வீதியையும், அதனோடு அமைந்திருந்த எமது கட்டளை நிலைகளையும் கைப்பற்றுவதே எதிரியின் திட்டமாக இருந்தது என்பதை இராகவன் உணர்ந்துகொண்டவன். சண்டையின் கடும் உக்கிரகத்துக்குள்ளும் தனது துப்பாக்கியுடன் நடைபேசியுடனும் பாதுகாப்பு அரணுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டான். கட்டளைகளை வேகமாக வழங்கியவாறு தற்காப்பு நிலை எடுத்து தாக்கத்தொடங்கினான். அவனோடு நின்ற போராளிகளை ஒழுங்குபடுத்தி எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்த எதிரிகளை தாக்கும் படி சொன்னான். இராகவன் கட்டளைகளை எதிரியின் தலைமையகம் ஒட்டுக்கேட்டிருக்க வேண்டும். காரணம் எதிரியின் நிலை தடுமாறியது. வெளிப்படையாக தெரிந்தது. புளியங்குள முகாமிற்று பொறுப்பாக இருந்த இராகவன் தொடக்கம் அனைவரும் வெளியில் வந்து சண்டையிட தொடங்கிவிட்டனர். மூர்க்கத்தனமான தாக்குதல்களின் உச்சத்தால் எதிரியின் கவசங்கள் எரியத்தொடங்கிட எதிரியும் பின்வாங்கி ஓடத்தொடங்கினான். அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் மூலம் புளியங்குள முகாமை கடைசிவரை பாதுகாத்த பெருமை எங்கள் இராகவனை சாரும், தனது மன உறுதியின் வெளிப்பாட்டை சண்டைக் களங்களில் காட்டியவனாக புளியங்குளத்தை புரட்சிக்குளமாக மாற்றியவன் இராகவன். மாவீரன் இராகவனின் வீரத்தில் என்றுமே சிறிதேனும் கலங்கம் இருக்கவில்லை. சண்டையின் போது அவனது செயற்பாடே தனிரகம்தான், இராகவன் சண்டைக்கு வரப்போகிறான் என்றாலே எல்லோரது முகமும் பிரகாசிக்கும். அதேபோல் இராகவன் சண்டையில் புகுந்துவிட்டால் அந்தச் சண்டை எந்த இக்கட்டையும் கடந்தவிடும் என்பது உண்மை. ஜெயசிக்குறு காலப்பகுதியிலே நடந்த ஓமந்தை, தாண்டிக்குள் சண்டைகளில் இராகவனின் அதி உச்சமான சண்டையும், மிகவும் இக்கட்டான நிலையில் அவன் எடுக்கின்ற முடிவுகளோடு அவனத நிர்வாகத் திறமையும் வெளிப்பட்டது. தாண்டிக்குளச் சண்டைக்கென அணிகளை தாயார்படுத்தி, நீண்டதூரம் சென்று குறுகிய நேரத்தில் சண்டைக் களத்துக்குள் புகுந்தவன். தனது வேகமான படை நகர்த்தும் ஆற்றலால் பல வெற்றிகளை பெற்றுத்தந்தவன். ஓமந்தை தாக்குதல் தொடங்கிவிட்டது. எதிரியின் தாக்குதல்கள் உக்கிரமடைந்த நிலையில் அணிகள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்ய முடியாது போக இராகவன் களம் இறக்குகிறான். “டேய் என்னடா” என்று அடிக்கடி சொல்லும் அவனது மொழியிலேயே உரையாடுகிறான். “டேய் என்னடா செய்யிறியல்” என்ன செய்யனும் சொல், உவங்களுக்கு என்ன கொம்மா முளைச்சிருக்கு என்று சொல்லியவாறே இராகவன் களம் இறங்கிவிட்டான். எதிரியின் பலத்த தாக்குதல், இடைவிடாத எறிகணை வீச்சு, கவசங்களின் தொடர் தாக்குதல் இத்தனைக்கும் மத்தியில் சுட்டுக்கொண்டு தனது சில போராளிகளுடன் முன்னேறத்தொடங்கினான். ஓரிடத்தில் இருந்த தாக்கி கொண்டிருக்கும் போது எதிரி எமது மற்றுமொரு அணியை தாக்க விரைந்ததை கண்டு கொண்டான். டேய் எல்லோரும் மாறி இந்தப்பக்கம் அடியுங்கோ என்று சொல்லியவாறே எதிரியைப் பார்த்து சுடத்தொடங்கினான். எதிரி நிலை குலைந்துவிட்டான். முன்னேறி வந்தப் பக்கமாகவே ஓடத்தொடங்கினான். ஆனால், எதிரி நாமிருந்த இடத்தை நன்கு கண்டுவிட்டான். எனவே, நேரத்தையும், வரப்போகும் ஆபத்தையும் தனது அனுபவத்தினால் கணிப்பிட்டு எல்லோரையும் எழும்பிச் ஓடச்சொல்லிவிட்டு தானும் நிலையை மாற்றினான். அவன் சொன்னது சில விநாடிகளில் நடந்தது. நாமிருந்த இடத்தை எதிரி சல்லடையாக்கினான். எதிரியின் கவசவாகனம் ஒன்று எமது இடத்தை குறி தவாறது சுட்டது. அங்கிருந்த மரங்கள் சிதைவுண்டு தூளாக்கிப் பறந்தன. அதே நேரத்தில் எதிரி எம்மை நோக்கி வருவதை அவதானித்தவன் மீண்டும் தாக்கும்படி கட்டளை இட்டான். அதன்படி தாக்கத் தொடங்கினோம். அந்தச்சண்டையில் எதிரிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்திய மன நிறைவோடு திரும்பினோம். ஆனால் இராகவன் மட்டும் மனக்கவலையுடன் திரும்பிவந்தான். செய்றன் வேலை இவனுக்கு என்று கர்ச்சித்தபடி வந்தான். ஓமந்தை தாக்குதல் முடிந்து சில நாட்களில் பின் எதிரியை தாக்குவதற்கு திட்டமிட்டு, பழையவாடிக்கும் – நெடுங்கேணி வீதிக்கும் இடையில் 07.08.1997 அன்று காலை ஒரு அதிரடித்தாக்குதலை ஆரம்பித்தான். காலை நேரம் ஜெயசிக்குறு எதிரி மிக உற்சாகமாக இருந்தான். ஓமந்தையில் திளைத்தவனை திகைக்கவைக்க தாக்குதலைத் தொடர்ந்த காலையிலேயே எதிரிக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தினான். எதிரிக்கு எப்போதுமே இடியாய் இமயமாய் இருந்தவன் இராகவன். ஓமந்தையை விட்டு வெளியேறிய போது திரும்பவும் பிடிப்போம் என்று கூறியே வந்தான். அவனது மனம் எதை நினைத்ததோ அதே போல் அவன் உயிர்விலை கொடுத்து ஆரம்பித்து வைத்த “ஓயாத அலைகள் 03” இல் புலிகள் பெரும் வெற்றியைப் பெற்றனர். இராகவன் இருந்திருந்தால் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெற்றிருப்போம் என்பதை எதிரியே சொன்னான். “கலோ உங்கட 5.2 செத்ததா! நல்லம், நல்லம் அவனுக்குத்தான் பயம்” என்ற எதிரியின் உரையாடல் இராகவனின் தேசப்பற்று மிக்க வீரத்தை சுட்டிக்காட்டுகிறது. நினைவுப்பகிர்வு: க.மிரேசு. நன்றி – வெள்ளிநாதம் இதழ் (17 – 23.09.2004). https://thesakkatru.com/ragavan-was-the-one-who-stood-up-to-the-dangers-and-won/- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
இதயங்கள் மலரட்டுமே நம்மில் இன்னிசை முழங்கட்டுமே (2) இறையருள் வளரட்டுமே அது இகம் எல்லாம் பரவட்டுமே 1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம் மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் (2) வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம் கரையில்லாக் கருணையால் நமை மீட்டார் 2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் (2) நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை தீதில்லா வாழ்வுக்குச் சான்றுகளாம் 3. இருளெல்லாம் அழித்திட ஒளி கொணர்ந்தார் - நெஞ்சில் அருள் வளம் செழித்திட நமையழைத்தார் (2) திருமகன் அன்பினைச் சுவைத்திடும் நாம் - 2 அதை தரணியர் மகிழ்ந்திடப் பகிர்ந்திடுவோம் - மாவீரர் புகழ் பாடுவோம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.