Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னல் நபி பொன் முகத்தை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பகவான் சரணம் பகவதி சரணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ... என்ன சொல்லிப் பாடுவதோ உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ... என்ன சொல்லிப் பாடுவதோ பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் (x2) பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் (x2) திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் (x2) உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ... என்ன சொல்லிப் பாடுவதோ தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் (x2) திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் (x2) ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் (x2) உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ... என்ன சொல்லிப் பாடுவதோ உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ... என்ன சொல்லிப் பாடுவதோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீல கடலின் ஓரத்தில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள் ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே (2) பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே (2) இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள் தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்தானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2) இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே. ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2) சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்....
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேன் இனிமையிலும்.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பெண்களின்தலைவி அண்னணஃபாத்திமாபின் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
-
தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்...
லெப். கேணல் புலேந்திரன் அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம்) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே. நான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று . இயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள்! எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது? விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் ? அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை? இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா? என்ற ஏக்கம் பிறக்கும். ‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீயோ சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்? நாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ? ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது? எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன். புலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய். உனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின. “இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார். லெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்… விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார். இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் : * 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல். * 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல். * 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல். * 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல். * 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். * 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல். * 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். * 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல். * 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல். * திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல். * திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல். * முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல். * பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். நினைவுப்பகிர்வு: கரும்பறவை. நன்றி: தீருவில் தீ 05,10.1992, சூரியப் புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/trincomalee-district-commander-lieutenant-colonels-pulenthiran/
-
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள்.
லெப். கேணல் குமரப்பா யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து சிறிலங்கா படையிருக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். தமிழீழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரப்பா அவர்களின் திறமையை அறிந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும், யாழ். மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார். தலைவர் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது செயற்பாட்டின் மூலம் குமரப்பா அவர்கள் நிருப்பித்திருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தளபதியாகவும். யாழ். மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கிய காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ஈடுபட்டதுடன் அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினை உறுதியாகக் கட்டியமைக்க அயராது உழைத்தார். சிறிலங்கா – இந்திய உடன்படிக்கை காலப்பகுதியில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட போராளிகளுடன் தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை படை முகாமிலும் பின்னர் பலாலி படைமுகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர். இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப். கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்: கனம் தலைவர் அவர்களுக்கு, குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன். மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன். ”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” இங்ஙனம் குமரப்பா (ஒப்பம்) நன்றி: தீருவில் தீ 05,10.1992. https://thesakkatru.com/jaffna-district-commander-lieutenant-colonels-kumarappa/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸல்லூ அலல் முஸ்தபா... யாரஸூலல்லா || நெல்லை S.M.அபுல் பரக்காத்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நான்வெஜ் சுவையில் இப்படி சோயா
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாம்பு பிடித்தல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே வாழும்வரை காவல் நின்றிடும் பைரவா விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன் வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே பைரவன் உந்தனினப் பேரைச்சொன்னாலே தைரியம் நெஞ்சினில் தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில் திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில் கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே வரும்வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே வழங்கிடவேண்டும் திருவருளே வழங்கிடவேண்டும் திருவருளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓமெனும் பிரணவம் - ஸ்வாமிமலை | அறுபடை வீடு கந்த சஷ்டி கவசம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பதிலுரைப் பாடல் திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15 பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே. 1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி 10 தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி 12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி 14 `அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன், அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன், உன் உள்ளமையை நான் உணர்ந்து கொண்டேன் (2) உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன், என் உயிரினிலே உன்னைக் காண்கின்றேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .... பேதமில்லாமல் யாவினிலும் உன் பேரருளை நான் பார்க்கின்றேன் (2) பேதமையால் உன்னை நான் மறந்தேன், அந்த வேதனையால் தான் பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ... தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன், என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் தூயவனே உன்னை துதிக்கின்றேன், உன் துணையே கதி எனப் பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .... எழிலுக்குள் எழிலாய் இருக்கின்றாய், என் விழியுனுல் ஒளியாய் ஜொலிக்கின்றாய் இதயத்தை நீயே ஆளுகிறாய், என்னை இசைத்திட தூண்டி ரசிக்கின்றாய் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .... விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய், பெரும் மதியுடன் விளையாடி ஜெயிக்கின்றாய் மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய், அங்கு தெரிவதை கண்டு சிரிக்கின்றாய் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ..... அல்லாஹு என அழைக்கின்றேன் அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன் ( 2 ) ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன் உன் ஆதாரம் நாடி அழுகின்றேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ... இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் ( 3 )
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன தவம் செய்தனை யசோதா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கூவி அழைக்க கூடாதா கூவி அழைக்க கூடாதா குருபரா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மயில் மீது விரைந்தோடி வா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வினை தீர்க்கும் நாயகனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சக்தியும் புத்தியும் சித்தியும்