Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..! அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் நாளைய உலகின் விடியலாகவே ! பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய் வாடும் உள்ளம் என்னைத் தேற்ற வா வாழ்வின் பாதை நாளும் மாற்ற வா உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட உயிரின் உயிரே இறைவா உலகம் வாழ நீயும் உந்தன் உடலை சிதைத்து உறவு பலியாய் உயிரைத் தந்தாய் உனது வழியில் நானும் எனது வாழ்வை உடைத்து உலகை மாற்றும் துணிவைத் தாராய் உன் அன்பு பாதைகள் என் வாழ்வின் பாடங்கள் உன் அருள் வார்த்தைகள் என் வாழ்வின் தேடல்கள் உலகெளாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா உயிரின் உயிரே இறைவா கருணை மொழிகள் பேசி கனிவு செயல்கள் காட்டி கடவுள் ஆட்சி கனவைத் தந்தாய் காணும் உயிர்கள் யாவும் கடவுள் உருவைக் காணும் புதிய நெறிகள் வகுத்துத் தந்தாய் இறை ஆட்சி குடும்பமாய் இவ்வுலகம் அமைந்திட இங்கு பகைமை அழிந்திட நல் பகிர்வு வளர்ந்திட நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட உயிரின் உயிரே இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வான் மறை சோலையில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் ஊரை மாற்றி உலகை மாற்றி உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார் சீரை மாற்றி சிறப்பை மாற்றி சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் நீதியை காட்டி நேர்மையை ஊட்டி நிறை வழி அழைத்தார் நபி பெருமானார் நீதியை காட்டி நேர்மையை ஊட்டி நிறை வழி அழைத்தார் நபி பெருமானார் ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் அன்பை காட்டி அறிவை ஊட்டி அறவழியில் அழைத்தார், நபி பெருமானார் அன்பை காட்டி அறிவை ஊட்டி அறவழியில் அழைத்தார், நபி பெருமானார் பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ? என்ன காலமோ ? என் சோதரா ஆ என்ன காலமோ ? என் சோதரா ஏன் எடுத்தாய் இந்த கோலமோ? ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில் பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக பாலைவனத்தில் ஒரு புது மலராக பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக ஈச்சை மரத்து இன்ப சோலையில் நபி நாதரே இறைவன் தந்தான் அந்த நாளையில் இறைவன் தந்தான் அந்த நாளையில்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆதியாய் வந்த தேவி ஸ்ரீ ஆதி லக்ஷ்மி தாயே போற்றி மனபயங்கள் மாய்ப்பவளே ஸ்ரீ தைரிய லக்ஷ்மி தாயே போற்றி உயிர்களுக்கே உணவளிப்பாய் ஸ்ரீ தான்ய லக்ஷ்மி தாயே போற்றி பத்மராக மலர் அமர்ந்தாய் ஸ்ரீ கஜலக்ஷ்மி தாயே போற்றி புத்ர பாக்யம் தருபவளே ஸ்ரீ சந்தான லக்ஷ்மி தாயே போற்றி கல்வி செல்வம் தருபவளே ஸ்ரீ வித்யா லக்ஷ்மி தாயே போற்றி வெற்றிகள் தரும் மங்களையே ஸ்ரீ வீரலக்ஷ்மி தாயே போற்றி செல்வம் அளிக்கும் ஸ்ரீதேவி ஸ்ரீ தனலக்ஷ்மி தாயே போற்றி பூர்ணகும்பத்தில் அமர்ந்தவளே ஸ்ரீ வரலக்ஷ்மி தாயே போற்றி மாங்கல்யத்தை காப்பவளே ஸ்ரீ சௌபாக்ய லக்ஷ்மி தாயே போற்றி மனையோகம் தருபவளே ஸ்ரீ கிரஹலக்ஷ்மி தாயே போற்றி தேக சுகத்தைத் தரும் தேவி ஸ்ரீ அன்னலட்சுமி தாயே போற்றி பதினாறு பேறுதரும் தாயே ஸ்ரீ பாக்கியலக்ஷ்மி தாயே போற்றி விளக்கினிலே வீற்றிருப்பாய் ஸ்ரீ தீபலக்ஷ்மி தாயே போற்றி நவநிதிகள் வழங்கும் தேவி ஸ்ரீ குபேரலக்ஷ்மி தாயே போற்றி எட்டு சித்திகள் தருபவளே ஸ்ரீ யோகலக்ஷ்மி தாயே போற்றி இஷ்ட வரங்கள் கொடுப்பவளே ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி அஷ்டைஸ்வர்யம் தருபவளே ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி போற்றி பரந்தாமன் நாயகிக்கு பத்மபீடம் ஆடும் தேவிக்கு துளசி தளம் அணிந்தவளுக்கு திவ்ய சுப மங்களம் அலையாழித் தோன்றி வந்த ஹரிமாயன் நாயகிக்கு கலையாவும் வழங்கும் செல்வதேவிக்கு நித்ய மங்களம் மங்களம் ஜெய மங்களம் மங்களம் மங்களம் சுப மங்களம்- இறைவனிடம் கையேந்துங்கள்
சனி பகவான் போற்றி- இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முழுமதி- இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே ரோ. 8:15 1 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி - அப்பா 2 தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி 3 உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே சங். 40:2 கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே - நன்றி வெளி. 1:6- இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின் 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின் 3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்- இறைவனிடம் கையேந்துங்கள்
எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் முத்திரை நபியே முஹம்மது ரசூலே சித்திரை நிலவே செழுமலர் வடிவே சித்திரை நிலவே செழுமலர் வடிவே இத்தரை மாந்தர் யாவரும் அன்று பித்தர் என்றுரைத்தார் பேதை என்றழைத்தார் இத்தரை மாந்தர் யாவரும் அன்று பித்தர் என்றுரைத்தார் பேதை என்றழைத்தார் முத்தொளி மார்க்கம் புகழ் வழி அமைக்க சத்திய தூதே சர்தார் ரசூலே எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் தந்தையை இழந்து தாயையும் இழந்து மந்தைகள் மேய்த்து வியாபாரம் செய்து தந்தையை இழந்து தாயையும் இழந்து மந்தைகள் மேய்த்து வியாபாரம் செய்து சிந்தையுள் இறைவன் செய்தியை தாங்கி வந்திடும் போது வம்பர்களாலே எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் கல்லடி ஏற்று கடுமொழி கேட்டு உள்ளம் துடித்து உதிரத்தை வடித்து கல்லடி ஏற்று கடுமொழி கேட்டு உள்ளம் துடித்து உதிரத்தை வடித்து கொள்ளென சிரிக்கும் கும்பலை பார்த்து முள் வழி நடந்து பொறுமையை சுமந்து எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் தாயஹம் துறந்து இருள் வழி நடந்து தவுருக் குகைக்குள் மறைந்தே இருந்து தாயஹம் துறந்து இருள் வழி நடந்து தவுருக் குகைக்குள் மறைந்தே இருந்து போய் மதினாவில் அடைக்கலம் புகுந்து போர்ப்பகை சூழ வாழ்த்திடும் நாளில் எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் வான் மறை சார்ந்த தீன் நெறி வாழ துயர் பல சகித்த தாஹா ரசூலே வான் மறை சார்ந்த தீன் நெறி வாழ துயர் பல சகித்த தாஹா ரசூலே மன்னுயிர் காத்து மாநிலம் வாழ எண்ணியே வாழ்ந்த எம்மான் ரசூலே எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்று தங்கம் பயஹம்பர் வாழ்வில் முத்திரை நபியே முஹம்மது ரசூலே சித்திரை நிலவே செழுமலர் வடிவே சித்திரை நிலவே செழுமலர் வடிவே சித்திரை நிலவே செழுமலர் வடிவே- இறைவனிடம் கையேந்துங்கள்
ஏழையாக வாழ்ந்ததேனோ யாரசூலுல்லாஹ்- இறைவனிடம் கையேந்துங்கள்
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. 2: சாபங்கொடுத்திட லாமோ - விதி தன்னைநம் மாலே தடுத் திடலாமோ கோபந் தொடுத்திட லாமோ - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ. 3: சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத் திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம். 4: நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். 5: நந்த வனத்திலோ ராண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. 6: தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ் சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத் திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே. 7: நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. 8: நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம் நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 9: வேத விதிப்படி நில்லு - நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 10: பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே இச்சைய துன்னை யாளாதே - சிவன் இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. 11: மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 12: மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே பொய்க்கலை யால்நட வாதே - நல்ல புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே. 13: கூட வருவதொன் றில்லை - புழுக் கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை தேடரு மோட்சம தெல்லை - அதைத் தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 14: ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு - அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 15: உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 16: காசிக்கோ டில்வினை போமோ - அந்தக் கங்கையா டில்கதி தானுமுண் டாமோ பேசமுன் கன்மங்கள் சாமோ - பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 17: பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம் போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம் மெய்யாக வேசுத்த சாலம் - பாரில் மேவப் புரிந்திடில் என்னனு கூலம். 18: சந்தேக மில்லாத தங்கம் - அதைச் சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம் அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும் ஆனந்த மாக நிரம்பிய புங்கம். 19: பாரி லுயர்ந்தது பத்தி - அதைப் பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ் சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 20: அன்பெனும் நன்மலர் தூவிப் - பர மானந்தத் தேவின் அடியினை மேவி இன்பொடும் உன்னுட லாவி - நாளும் ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 21: ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற் கான வழியை யறிந்து நீ கொண்டு சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு. 22: ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத் தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம் வான்கதி மீதிலே நாட்டம் - நாளும் வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். 23: எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 24: இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும் இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன் சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 25: பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப் போதகர் சொற்புத்தி போதவோ ராதே மைவிழி யாரைச்சா ராதே - துன் மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 26: வைதோரைக் கூடவை யாதே - இந்த வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை வீணில் பறவைகள் மீதிலெய் யாதே. 27: சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. 28: பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன் பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன் வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. 29: போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப் புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர் தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே. 30: கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. 31: பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி சத்திய மென்றதை யீட்டி - நாளுந் தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 32: செப்பரும் பலவித மோகம் - எல்லாம் சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம் ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய் ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 33: எவ்வகை யாகநன் னீதி - அவை எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி ஒவ்வாவென்ற பல சாதி - யாவும் ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 34: கள்ளவே டம்புனை யாதே - பல கங்கையி லேயுன் கடம்நனை யாதே கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக் கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே. 35: எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன் துங்க அடியவர் தாசன் - தன்னைத் துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் பிரணவ பொருளே- இறைவனிடம் கையேந்துங்கள்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2) சிந்தையிலே வந்து ஆடும் (2) சீரலைவாய் முருகா முருகா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (2) எப்போதும் வருவாய் அப்பா ஏற்றி உன்னை பாடுகின்றேன் ஏரகத்து முருகா முருகா முருகா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா அப்பனுக்கு உபதேசித்த (2) அருமை குருநாதனுமாய் சுவாமி மலையில் அமர்ந்தவனே சுவாமிநாத குருவே அப்பா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா பாலும் தேன் அபிஷேகமும் (2) பக்தர்களின் காவடியும் பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம் பரங்கிரி தேவனாகி சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா அகங்காரமும் ஆத்திரமும் (2) அகந்தைகளை விட்டு விட்டு அடைக்கலமாய் ஓடி வந்தேன் ஆறுமுக வேலவனே சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா முக்திக்கு வழிதேடிய (2) முதியோரும் இளைஞர்களும் மலைகள் எல்லாம் ஏறி வந்தோம் மாதவன் பால் மருகனே வாவா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா- இறைவனிடம் கையேந்துங்கள்
எனில் வாரும் என் இயேசுவே- இறைவனிடம் கையேந்துங்கள்
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய் கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய் பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும். உன்னை துதித்தாலே அருள் மழை பொழிந்துவிடும். அருளுக்கோர் அளவில்லை... அன்பிற்கோர் நிகரில்லை- இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்...- இறைவனிடம் கையேந்துங்கள்
ஹனுமான் ஸ்தூதி பாடல்- இறைவனிடம் கையேந்துங்கள்
அழங்கார ஸ்ரீனிவாசா- இறைவனிடம் கையேந்துங்கள்
எட்டுக்குடி வேலோனுக்கு ஆடும் காவடி சேவல் காவடி- இறைவனிடம் கையேந்துங்கள்
விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்களே வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் அனைவரும் வாருங்களே 1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார் உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து அன்பினில் நாம் இணைவோம் 2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும் வறுமைப் பிடியிலே அலறும் குரல்களே இறைவன் மொழியாகும் பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் இறைவனின் அரசின் இனிமையைக் காண இன்றே முயன்றிடுவோம்- இறைவனிடம் கையேந்துங்கள்
இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம் மனங்கள் அன்பில் இணையும் அருள் மழையில் மலர்ந்து நனையும் குறைகள் யாவும் இன்று கரைந்திடுமே - மன நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே (2) அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில் அடிமைக் கோலம் ஒழியும் அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும் பயணம் இனிது இங்கு தொடர்ந்திடுமே - அன்பின் பாதை பாரெங்கும் படர்ந்திடுமே- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/ - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.