Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆனந்த கொலு இருப்பாள் அஷ்ட லக்ஷ்மியே அன்னலக்ஷ்மி ஸ்வர்ணலட்சுமி ஆதிலக்ஷ்மியே கன்றோடு கறவை தரும் கருடவாஹினி ஸ்ரீதரன் தேவியே ஸ்ரீதேவியே அம்மா ஸ்ரீதரன் தேவியே ஸ்ரீ தேவியே ஒன்பது நாளும் ஒவ்வொரு கோலத் திருக்காட்சியே மங்கையர் நாங்கள் கண்டுமகிழ்ந்தோம் பங்கஜமாலினியே ஆனந்தம் . . . ஆனந்தம் . . . இந்திரன் வழிபடவே இளமையைத் தந்தாய் ஆதி பாற்கடல் தேவி சந்திரன் சோதரியே என்மனை வாராய் முந்தி பொன்மழைத் தூவ கொஞ்சம் பார்த்திடம்மா குசேலன் கூட செல்வா குபேரன் ஆக கோமள வள்ளியே ஆசிகள் போட கோவிந்த மாதவன் கூட ஆந்த ஊஞ்சலில் ஆட வேதங்கள் வழிகாட்ட இல்லம் வரணும் ராஜ கஜலக்ஷ்மிதேவி தாழை விளக்கேற்ற தயவினைத் தரணும் தான்ய தனலக்ஷ்மிதேவி பேதைக்குதவிடம்மா வீரலக்ஷ்மியே என்னை ஊரார் மெச்சவே மேதையாக்கிடம்மா வித்யாலக்ஷ்மியே சீதாலக்ஷ்மியே ஸ்ரீவரலக்ஷ்மியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும் காலம் காலமாக என்னைக்காக்கும் திருக்குமரா. தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா நாளும் பொழுதும் உம் நினைவோடுதான் வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே.. கபதகரி ரிகநிகச பதபதசபதசகா.. ரிகநிகச தததப கரிபம நிசகரி ரிதபரி சகமா.. நாளும் பொழுதும் உம் நினைவோடுதான் வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே தேனின் சுவையோடு..ஆ..ஆ..ஆ..ஆ -இயெசையா தேனின் சுவையோடு கீதம் பாடிடுமே ராக தாள பாவ தாள நயமுடனே நயமுடனே தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா வானும் வின்மீனும் உலகோடுதான் யாவும் உம் சாயல் தெளிவாகுதே ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ….ஆ..ஆ வானும் வின்மீனும் உலகோடுதான் யாவும் உம் சாயல் தெளிவாகுதே பாரில் எமக்காக தேவசுதனாக பாரில் எமக்காக தேவசுதனாக நாதர் கனிவோடு ஆ..ஆ..ஆ..ஆ….ஆ -இயெசையா நாதர் கனிவோடு தாமே நாடினீரே பாவ நாச தேவ பாலன் தயவுடனே தயவுடனே தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும் ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும் காலம் காலமாக என்னைக்காக்கும் திருக்குமரா. தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க 😋 | 100 % ஆரோக்கியத்திற்கு நான் கேரண்டி 💪 | Healthy Drink
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி அகழாய்வு ஆறாம் கட்டப்பணி நிறைவடைந்து ஆவணப்படுத்தல் தொடங்குகின்றது கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடையவுள்ளதுடன், அங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 40 இலட்சம் ரூபா செலவில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா பரவலையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் இடைநிறுத்தப்பட்ட பணிகள், மீண்டும் மே மாத இறுதியில் ஆரம்பமாகின. இதேவேளை இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதுடன், கீழடியில் 18 குழிகளும், கொந்தகையில் 7 குழிகளும், மணலூரில் 5 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயங்கள், உறைகிணறு, உலைகலன், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், கறுப்பு, சிவப்பு பானைகள், இணைப்புக் குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்கள், பொருட்கள் குறித்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த இடங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. http://www.ilakku.org/கீழடி-அகழாய்வு-ஆறாம்-கட்/
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை ஸ்பெஷல் ஸ்வீட் முற்றிலும் புதிய சுவையில் 10 நிமிடத்தில் மொறு மொறு கிரிஸ்பியான ஸ்நாக்ஸ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோயில் திரு அகவல் - 3 பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்! அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக் கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம் உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்! செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்; ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்; மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்; விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்; ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும் நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்; படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும், தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும் கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும், பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும், முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும், இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை; உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக் கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச் செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை, மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத் தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச் சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக் கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக் கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை, ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை. புலராக் கவலை விளைமரப் பொதும்பை, ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக் காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை, மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக், கடுவெளி உருட்டிய சகடக் காலைப் பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக் காமக் காற்றெடுத்து அலைப்பக் கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக் நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப் பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின் அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்; வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங் கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்; இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்; அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்; மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக் கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம், தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப் பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும் எம்பெரு மானின் இணையடிக்கு அபயம் அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா நாத கலாபாரதி . . நாத கலாபாரதி நவராத்ரி கொலு நாயகி அம்ப நாத கலாபாரதி நவராத்ரி கொலு நாயகி . . அம்ப நாத கலாபாரதி விரிஞ்சன் திருநாவில் உறையும் கலைவாணி விதிமாற்றாதோ சரஸ்வதி எழுத்தாணி நாத கலா பாரதி நவராத்ரி கொலு நாயகி அம்ப நாத கலா பாரதி மிச்சமோ சொக்கனும் சொக்கிய மீன்விழி தக்ஷிண மதுரையின் வீணா மாதங்கி வெற்றிலை எச்சிலை பெற்றவன் கவியாய் வெகுமதி அளித்தாயே சாமளை நீயே ஸ்ருதியுடன் தருவேன் சாருகேசியே வாசவி என்மனை வா கலைவாணியே சகலகலாவல்லியே சாராதஹாசியே தருவாய் நிறையும் ஆயுத பூஜையே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன் கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா! பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன் பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா! கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன் கீதம் இசைக்குதடா, நந்த லாலா! தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாணிக்க வீணையுடன் ஞானாட்சியாய் மனையில் குடியிருப்பாள் சரஸ்வதி நீயே காலைக் கண்டால் வித்யா காயத்ரி நீ மாலை வந்தால் சந்தியா சாவித்ரி நீ ஆயுத மெய்யா உயிர்மெய்யா அறியா வயதில் நெல்மீது அப்பா சொல்ல அன்போடு எழுதிப் பாத்தோம் உன் பேரு வாய்மொழியாகும் தாய்மொழி சங்கீதம் வளர்மதி உன்னாலே வளரும் சந்தோஷம் பண்டித பிரகஸ்பதி பண்வளர் சரஸ்வதி அம்மா வருவாய் நவராத்திரி இதுதான் எமக்கு சுபராத்திரி பாவலர் கவிகேட்டு பாடிடுவோம் தமிழ் பாட்டு பாமகள் விழிக்கூட்டு பாரினில் வழி காட்டு புத்தகம் பூஜை இட்டு அச்சத்தை பூப்போட்டு பக்தியாய் துவங்கும் சுபயோகமே வெற்றியாய் பெருகும் மென்மெலுமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ... சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . . பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ... பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ... வாடாத பூமாலை அலங்காரம் பாடாத நாவும் திருப்புகழ் பாடும் கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும் சென்னிமலை மேலே மயிலாடும் தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ... தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ... வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ... வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ... நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக முருகாவெனும் நாமம் எதிரொலிக்க
-
இறைவனிடம் கையேந்துங்கள்
துணையின்றி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன
-
நடனங்கள்.
- லெப். கேணல் ராஜன்
பழகுவதற்கு மென்மையான அண்ணா, இவருக்கு கைவிரல் இரண்டு இல்லையென நினைக்கின்றேன், ஞாபகமிருக்கா?- லெப். கேணல் ராஜன்
லெப். கேணல் ராஜன் உறுதியின் உறைவிடம்: லெப். கேணல் ராஜன் அன்றைய நாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மை விட்டுப்பிரிந்தான். முதல் நாள் மாலை பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் சிறிய படையணி ஒன்றன்மீதான சிறிய தாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினார் கோபியும் தோழர்களும். எதிரியின் புதிய நில ஆக்கிரமிப்பைக் கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன. திட்டம் மிகவும் சிறியதாகவும் சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம் பற்றி அதில் நின்றவர்களைத்தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது. திட்டத்தின் வெற்றி பற்றிய ‘வோக்கி’ச் செய்தியை எதிர்பார்த்தபடி காத்திருந்தான் ராஜன். கிளைமோர்ச் சத்தம் கேட்டவுடன் கோபி…… கோபி…… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது. தலையிற் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான். என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் ‘வோக்கி’யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ? கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி நின்று அடிபட்டு…… அவன் வரவில்லை. கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை. ராஜன் இல்லையென்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம். அவன்மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது. ராஜன் – றோமியோ நவம்பர். எங்கள் போராளிகளின் மனத்தில் நிறைந்து விட்ட இனிய புயல், இறுகிய பாறை. அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம். அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது. 1987 இன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்ட பொழுது. யாழ் பொலிஸ் விடுதியும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணையாய் நிமிர்ந்து நின்றன. அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள். அதில் ஒருவனாய் ராஜன். தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியாத காரிருள். பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும். வியர்வையாற் குளிக்கும் தேகம். தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய். தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி. இது எம் தாயகம். இங்கு அந்நியனுக்கு என்ன வேலை? இன்று வெல்வோம். அந்நியன் பாடம் படிப்பான். அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென ராஜன் கிட்டண்ணையால் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன். உள்நுழைவோருக்கு குறுகியதாகவும் வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்த போது…. தனது படைவீரர்களை ‘யாழ்ப்பாணக் காடுகளில்’ தேடிக் கொண்டிருந்தது சிறீலங்கா அரசு. யாழ்ப்பாணக் காடுகளை தேடிக்கொண்டிருந்தது உலகு தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்தபின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது அனுபவத்தை மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன். இந்திய இராணுவக் காலம்இ அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள். இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்த நாட்கள். அவன் நின்று பிடித்தது வெறும் அதிஸ்டத்தினால் மட்டுமல்ல. வீரம், விவேகம், அவதானம், அன்புக்கினிய எம்மக்களின் பாசம் இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியாக முற்றுகைகள் தொடர்ந்து தூக்கமற்ற இரவுகள். முற்றுகை ஒன்றிலிருந்த பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒரு வாரக்கசகசப்புத்தீரக் குளித்துவிட்டு நொண்டிக் கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறியகாலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப் போனான் பாவம். எத்தகு நெருக்கடிகள் மத்தியிலும் உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சக போராளிகள் இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன். இந்தியச் சண்டையின் ஆரம்ப நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளிகள் ஊடாக அந்நியப் பாதங்கள். அனுபவம் குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக் கண்ட ராஜன் ‘டேய் தம்பி ஆமி இன்னமும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜி.பி.எம்.ஜி யை.’ ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத்தழும்பினை பதித்து வைக்கிறது. பொன்னாலையிற் கால் கிழிந்து, இந்தியாவில் காயம் ஒழுங்காக மாறமுதல், நாட்டுக்கு என்று துடிதுடித்துப் புறப்பட்டு, மீன்பிடிப் படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள், தடங்கள். ‘எங்கட ஆட்கள் எங்கே’ என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான். யாழ்ப்பாணத்தில் எங்கும் இராணுவ முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியர்கள் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி இந்தியர்களை திணற வைத்தது. அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப் பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும். ‘டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா!’ ‘ரங்கன்’ ‘அண்ணை நான் முழிப்புத்தான்’ ‘வேளிக்கிடுங்கோ……’ சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜூன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்தில் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சுருட்டி இடுப்பிற் கட்டினால் சரி. “சரி வெளிக்கிட்டாச்சு” நாய்கள் குரைக்கும் சத்தம் நகர – நகர, அது இராணுவத்தின் நகர்வை நிழலாய்க் காட்டும். முன் படலை பிசகென்று பின் வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்த நாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப் போனது நினைவுக்கு வரும். விரைவாய்ச் சத்தமின்றி, சத்தமின்றி விரைவாய அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே. ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை – எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம். ‘கட்டாயம் உடைக்கலாம். ஒருவரும் பயப்படாதேங்கோ’ ‘டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத’ ‘ரங்கனும் வெற்றியும் அங்காலபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை’ ‘தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்’ ‘அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால் தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு உள்ளுக்குப் போங்கோஇ இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.’ கொஞ்ச நேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும் போது, தேத்தண்ணீர் கொடுத்த அம்மா ‘ஆர் பெத்த பிள்ளையோ முருகா காப்பாத்து’ என வேண்டிக்கொண்டிருக்கும் போது, இரண்டு றோட்டுக் கடந்து நின்று, வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும். கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் ‘ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன் இனிப் பயப்படமாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில ஆமி செத்திருப்பானே?’ என்று கேட்டுக் கொண்டிருப்பான். அவர்களின் அநேகமான நாட்கள் இப்படித்தான் விடியும். இன்னொரு காலைவேளை, படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இராணுவ அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். ‘இண்டைக்கு பொழுது சூடாத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத ;தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும் மற்றப் பக்கத்தாலை வாருங்கோ.’ இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன்இ அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகைய சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ளக் கொஞ்சமுந் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான். எமது மண்ணில் அந்நியன் சுதந்திரமாய்த் திரிவதா? நிம்மதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள் ‘மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமியெண்டாலும் கொல்லவேணும்’ ஒருநாள் பண்டத்தரிப்பு முகாம். ‘என்ன வெடிச்சத்தம்?’ என இந்தியர்கள் சனத்தை விசாரித்துக்கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்தபின்னர்இ இறந்த இராணுவத்தின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்…… சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய இராணுவம் ஜீப்புடன் செத்தபடி கிடக்க…… எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி துளைத்த ராஜனைத் தூக்கிக் கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும் நித்தியும். இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் இராணுவக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் றோட்டுக் கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்தநாள் முயற்சி செய்தபோது, இரவு ரோந்து இராணுவத்தை எதிர்கொள்ள, எல்லாமே பாழ். ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்துவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல் மட்டுமே. ‘மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.’ எனக்குப் பெரிய காயம்…… இந்த முறை சரிவராது…… எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ சொன்னவன் பின்னர் கரைச்சல் தராமல் மயங்கிப் போனான். ‘ஐயோ ராஜண்ணை….’ என்று, சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி, தேங்காய் எண்ணை பருக்கி, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி காரில் வைத்து ஸராட் இல்லை என்று கத்தி தேடி, வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய், உள் ஒழுங்கை வீட்டில் வைத்துஇ நீர்வேலிச்சனத்தை காவலுக்குவிட்டு, அந்தநாள் விட்டு அடுத்தநாள் வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும் முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் பொய்விட்டான். எம்மைவிட்டுப் போயேவிட்டான்…… அவனது தோழர்களது இழப்புக்கள் ஒவ்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான். ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பாடசாலைக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய் வந்து……, படித்துப் படித்து விளையாடி……, இயக்கத்திற்கு வந்து……, ஒரே படகில் இந்தியா போய்……, கூமாப்பிட்டிப் பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து……, மலைக்கு மூட்டை சுமந்து……, கழுதை கலைத்து……, பணிஸ்மன்ற் வாங்கி……, பயிற்சி முடித்து……, கரைக்கு வந்து……, எல்லாம் வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது. ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும் போது ‘தும்பனுக்கு கையேலாது எம் 16 தான் வேணுமம்மான்’ – ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்த வளைந்த கையைத் தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய்ப்போய் பெரிதாய்ச் சிரித்தார்கள். ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடி பட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்து தானிருந்தது. இராணுவத்தின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக் கேட்டு ஒய்ந்திருந்த வேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டுப் பாய்ந்த வேலிகள்இ துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாகத் தெரிய ரங்கன் அழுவான் ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது. ரங்கன் சைக்கிள் உழக்க ‘பாரில்’ ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவை பாயும். எங்கும் போகும் சைக்கிள் சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும். ‘தப்பியது ரங்கனால்’ என்பது ராஜன். ‘ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை’ என்பான் ரங்கன். மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் இறந்து, ரங்கன் காயப்படத் திசைமாறியது. திருச்சியில், ‘ராஜண்ணை…… ராஜண்ணை’ என்று ரங்கன் உரத்துக்கூறி மெல்ல முனகி அழுது அழுது மௌனித்த போதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது. மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்துப் பெரும் கூட்டமாய் வந்த இந்தியக் கைக்கூலிகளை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதம் அள்ளிவந்த போது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை. ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும் வெற்றியின் உடலையும் குப்பிளானில் நின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களுக்குக் காவலாய் நின்ற போதும் ராஜன் அழவில்லை. அந்தப் பாறைதான் இறுகியது. இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர் – மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன். அவனது மனம் விடுதலைப் போரையும் அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒருநாள் பாடசாலையில் அவனுடன் படித்தவள் இயக்கத் தொடர்பிலும் மீண்டும் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பி விட்டுக் காத்திருந்தாள் பாவம். கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக்கொடுத்துவிட்டு ‘போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்’ என்றான். தன் ஆசைமகன் போகும் வாகனத்தையென்றாலும் பார்ப்போமென்று தாய்க் கிழவி றோட்டில் கால்கடுக்க காத்துநிற்கஇ இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்துத் திரும்பி வருவான். சிறீலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஓய்வின்றி சுழன்றான். அடிக்கடி அண்ணையைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான். மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்றி நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் – ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச் சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை – அங்கு நடந்துகொண்டிருந்த யுத்தத்தில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை. கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக் கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக்கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணைநின்றான். எம்மால் உள்ளிறங்க முடியாதுபோய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்த போது, ‘றோமியோ நவம்பர், றோமியோ நவம்பர்’ என்று பாணுவின் ‘வோக்கி’ கூப்பிட்டபோதும் பதிலில்லை. மானிப்பாய் மருத்தவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கிடையில் கந்தல் துணிபோற் சுருண்டுபோய்க் கிடந்தான். காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பிவந்தவன், இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில். இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று, படைப்பிரிவை உருவாக்குவதிற் பெரும்பங்காற்றினான் சகல போராளிகளுடனும் அன்புடன் – கண்டிப்புடன். அது கடுமையான பயிற்சிக்காலம். தமிழீழத்தின் எல்லா இடங்களில் இருந்தும் வந்திருந்த போராளிகள். குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்க்குத் தாயாக, தந்தையாக, நண்பனாக, ஆசானாக. தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன் வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் அதை – இதைத் தூக்கி, தமையன் வியாபாரத்திற்கு வைத்திருக்கும் சாமான்களை அள்ளி வாகனத்தில் ஏற்றி…… எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் – உயிராய்ப் பார்த்தான், பராமரித்தான். வன்னி யுத்தகளம். எங்கள் வன்னிக் காடுகளை – எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட ‘வன்னிவிக்கிரம’, பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டு வீழ்த்திய ஹெலிகொப்டர்த் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை. எல்லாப் பக்கங்களாலும் பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும்சண்டை. ஆகாயத்தை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க சகல ஆயுதங்களையும் ஏந்திய கரங்கள் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி. கொஞ்சநாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவால் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார்ப் பக்கமாய்…… இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்…… எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் கடும் சண்டை. எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை இன்னொரு ரவை அதே கையில் நடுவில். மிக அருகில் எதிரியின் துப்பாக்கி சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள். உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு மயங்கியபடி கிடந்தவனை, இழுத்துவந்து சேர்த்தான் ரூபராஜ். அன்று ராஜன் திரும்பி வந்தது நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்த போது, எதிரி அருகில், மிக அருகிலேயே நின்றிருந்தான். ஆனையிறவுப் பெரும் போர்க்களம். ஓய்வின்றிப் பம்பரமாய் ராஜன். சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையிற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில் எங்கும் நின்றான் எல்லா நேரமும் நின்றான். கட்டைக்காட்டில் ஆமியின் கவச வாகனம் நகர்ந்தாலும் ஆர்.பி.ஜி.க்கு றோமியோ நவம்பர். புல்லாவெளியில் ஆட்லறி செல் விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்துபேர் காயம் என்றால், மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர். மெடிக்ஸ் வானை போகவிடாமல் மேலே கெலி நின்றால் கலிபர் அனுப்பும் றோமியோ நவம்பர். குணாவின் குறூப்புக்கு அனுப்பிய சாக்குகளுக்குச் சாக்கு ஊசி வேண்டும் என்றால், றோமியோ நவம்பர். வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும் வேளையில், தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்த்து எதிரியைத் தடுக்கும் வேலைக்கும் றோமியோ நவம்பர். எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான். எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம். அனுபவம் மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் யுத்த களத்தில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவனின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்தின் முன் முனையிலிருந்து எட்ட நிற்கவைப்பதற்கன்றி, வேறில்லை. அனுபவம் மிக்க வீரன். அவனது அனுபவங்கள் மெய்சிலிர்க்கும் கதைகள். ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி. அவன் மறையும் போது தலைவரின் பெரும் கனவில் உருவான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளன். சிறந்த போர் அனுபவங்களை முன்னரே பெற்றிருந்த அவன், இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களைப் பிழித்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான் கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும் பயிற்சியை – வியூகங்கள், விநியோகங்கள், வரைபடம்…… என்று எல்லாவற்றையும் கற்றான் கற்பித்தான். ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன்; ஆம், செயல்களால் மட்டும். எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது இராணுவத் திட்டம் தீட்டப்படும் சந்தர்ப்பத்தில், பேசாது பார்த்தபடி – கேட்டபடி இருக்கும் ராஜன், திட்டம் தீட்டப்படுவது பூர்த்தியாவதற்கு முன்னுள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது, அவனது யுக்தியின் பெறுமதி தெரியும். தனது கடமையைப் பூரணமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றைய ஒருவரைக் குறைசொல்வது காண்பதரிது. ‘கடமையைச் செய், பயனை எதிர்பாராதே’ என்பதற்கு உதாரணமாகக் கர்மவீரனாய் விளங்கினான். அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். இராணுவ வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும். எண்ணற்ற தாக்குதல்கள் எண்ணற்ற தோழர்கள் அவன் செய்தவைகள் அவன் பெற்ற அனுபவங்கள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை. அவற்றின் கதை சொல்ல, சில தோழர்களும் – பல ஆயுதங்களும் இன்னும் விடுதலைப் போரில்…… அது மட்டுமல்ல, எங்கள் மக்களும், தமிழீழ மண்ணும் மரம்செடி கொடிகளும் அவனைச் சொல்லும். அந்த உறுதியின் உறைவிடம் உலாவிய பூமி எங்களது என்பதைத் தமிழீழம் தலைநிமிர்ந்து சொல்லும். நினைவுப்பகிர்வு: ச.பொட்டு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நன்றி: நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டுகள் நூல். https://thesakkatru.com/commander-lieutenant-colonel-rajan/- லெப். கேணல் மாருதியன்
லெப். கேணல் மாருதியன் அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் மாருதியன் / றஞ்சன் நாம றஞ்சனை பார்க்கவேணும் அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம். மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டதுதான் அம்பாறை மாவட்டம். அந்தக் கானகம் எமக்கு பரிச்சயமானதாக இருந்தாலும் புதிதாகச் செல்பவர்களுக்குப் பயம் நிறைந்திருக்கும். அக்காட்டினுள் இருக்கும் புலிகளின் பாசறையில் பகல் வேளைகளில்கூட சூரியனைக் காண முடியாது. எத்திசையில் இருக்கின்றோம் என்பது தெரியாது. அத்தோடு பல மிருகங்களின் வெவ்வேறுபட்ட மிகப் பயங்கரமான சத்தங்கள். மொத்தத்தில் தனியாகச் செல்வதென்பதே சிலருக்கு முடியாத காரியம். ஏனெனில் திசைமாறி வேறெங்கோ சென்றுவிடுவோம். மிருகங்கள் தாக்கும் என்ற அச்சம். இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 90ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நாங்கள் மட்டக்களப்பில் இருந்து அக்கானகத்தில் உள்ள எமது முகாம் ஒன்றிற்கு பணி நிமித்தம் சென்றிருந்தோம் ஒருநாள். நன்றாக சேட் கை உயர்த்தி மடிக்கப்பட்டு முகம் முழுதாக மழிக்கப்பட்டு (முகச்சவரம்) M.16 துப்பாக்கியின் குழல் (பரல்) ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் சாதாரண உயரம் கொண்ட அழகான புலிவீரன் தனியாக எங்கோ இருந்து கானகத்தின் நடுவில் அமைந்திருந்த எமது முகாமிற்கு வந்தான். அங்கு அவன் எம்மை நோக்கி வருகின்றான். எம்மில் சிலருக்கு அவனைத் தெரியாது. அப்போது எமக்குப் பக்கத்தில் வந்தபின் அருகில் இருந்த போராளி ‘வணக்கம் றஞ்சண்ணன்’ என்று சொல்ல நாங்கள் பெயரை அறிந்துகொண்டோம். பின் எங்களது பெயர்களைக்கேட்டு அறிமுகமாகி பின்னர் சந்திப்போம் எனச் சிரித்தவாறு சொல்லிவிட்டு விடைபெற்றான். அதன் பின்னர்தான் நாங்கள் இவர் யார் என்று எமக்குப் பக்கத்தில் இருந்த போராளியிடம் விசாரித்தோம். அப்போராளி அவரைப் பற்றிச் சொன்னார். இவர்தான் முன்னுக்கு நிற்கும் அணியின் பொறுப்பாளர் என்று. (அங்கு முன்னுக்கு என்பது அக்காட்டின் எல்லை. எதிரியின் முகாம்களை அண்மித்த பிரதேசம்) அப்படித்தான் நாங்கள் அவனை ஆரம்பத்தில் தெரிந்து கொண்டோம். ஆனால், முன்னுக்கு நிற்கும் அணியின் பணி அங்கு கடினமானது. வேவுக்குச் செல்வது, எதிரி காட்டுக்குள் வராமல் தடுப்பது, உணவுப் பொருட்கள் எடுக்கச் செல்லும் போராளிகளுக்கு பாதை காட்டுவது என இன்னோரன்ன பணிகள். அதில், அங்கு உணவுப்பொருட்கள் எடுக்கச் செல்வதென்பதைச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. எதிரியோடு சண்டை பிடிப்பதைவிடக் கடினமானது. ஏனெனில் எதிரியின் பிரதேசத்திற்குள் வாழும் எமது மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரிக்கும் பொருட்களை பல இடங்களில் இருந்து எடுத்து அதை ஓர் இரவுக்குள் எமது பிரதேசத்திற்குள் கொண்டுவர வேண்டும். அதன்பின்தான் கானகத்தில் உள்ள எமது முகாமிற்குக் கொண்டு சென்று சமைத்து உண்ணுதல், களஞ்சியப்படுத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பணிகள்தான் றஞ்சனுக்கு அப்போது வழங்கப்பட்டிருந்தன. அதன் நிமித்தம் நாங்கள் அவரின் இடத்திற்குச் செல்வோம். அப்போதுதான் அவருடைய நட்பு எமக்குத் தெரிந்தது. பழகுவதற்கு இனிமையான இவனிடம் ஒரு வைராக்கியத்தைக் கண்டோம். எந்நேரமும் எதிரியைக் கொல்லவேண்டும் என்றுதான் சொல்வான். இவன் சும்மா இருந்த நாட்களை நான் அறியவேயில்லை. அப்படிப்பட்டவன்தான் றஞ்சன். றஞ்சனின் குடும்பம் ஓர் அளவான குடும்பம். அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்றான தம்பிலுவில்லில் உள்ள செல்லத்துரை தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவனது இயற்பெயர் பிரபாகரன். இவனுக்கு ஒரு சகோதரன். இவன் 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்து விட்டான். (2ம் லெப். யோசப்) அடுத்து இன்னுனொரு சகோதரி இருக்கிறாள். அளவான அந்தக் குடும்பத்தில் இரண்டாவதாகப் பிறந்த இவன், குடும்பநிலை காரணமாக சில வருடங்களில் கல்வியை நிறுத்திவிட்டுத் தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டான். சிறுவயதிலேயே மிகவும் துடிப்புள்ளவனாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்குள்ளவனாகவும் விளங்கினான். அக்காலகட்டத்தில்தான் விடுதலைப்போராட்டம் முனைப்புப்பெற்று தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. சிங்களப்பேரினவாதிப் படைகளின் தமிழ்மக்கள் அழிப்புப் படையான விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரீ.எவ்) எண்பதுகளின் நடுப்பகுதியில் பல தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்தனர். அதன் தாக்கம் தான் இவனைப் போராட்டத்தின் பால் ஈர்த்தது. 1986இன் பிற்பகுதியில் தன்னையும் தனது பதினாறு வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டான். அம்பாறை இரண்டாவது பயிற்சிப் பாசறையில் இவன் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கு நடந்த இராணுவத்திற்கெதிரான பல நடவடிக்கைகளில் பங்கு கொண்ட இவனது திறமையைக் கண்ட இவனது பயிற்சியாசிரியரும், அப்போதைய அம்பாறை மாவட்டத்தின் தளபதியுமான அன்ரனி அவர்கள் தனது உதவியாளனாகத் தேர்ந்தெடுத்து நடவடிக்கைகள் பலவற்றில் பங்குகொள்ள வைத்தார். அதில் இவனது திறமை பன்மடங்கானது. இவர்களது பயிற்சி முடிந்த சிறிது காலத்தின் பின் இந்திய அமைதிப்படை எமது மண்ணுக்கு வந்தது. பின் அமைதிப்படையினர் ஆக்கிரமிப்புப் படையாக மாறினர். அதில் இவன் தளபதி அன்ரனியோடு, இந்தியப் படையுடனான அம்பாறை மாவட்டத்தின் அனைத்துத் தாக்குதலிலும் பங்குகொண்டு பெரும் அனுபவம்மிக்க புலிவீரனாக மிளரத் தொடங்கினான். இவன் 1990இன் முற்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் அழைப்பின் பேரில் தளபதி அன்ரனி அவர்கள் வடதமிழீழம் வந்தபோது, அவருடன் கூடவே வந்து ‘இதயபூமியில்’ தலைவரைச் சந்தித்து மீண்டும் தென்தமிழீழம் வந்து சேர்ந்தான். இக்காலகட்டத்தில் தென்தமிழீழப் போராளிகள் கணிசமானவர்கள் தலைவரைக் கண்டது அரிது. அப்படி தலைவரை ஒருமுறையாவது பார்த்துவிட்டு வீரச்சாவடைந்தால் நின்மதியாக இருக்கும் என்று கதைத்த பல போராளிகள் அவ்வாசை நிறைவேறாமலேயே வீரச்சாவடைந்திருக்கிறார்கள். அதிலும் றஞ்சன் போன்ற ஒருசில போராளிகள் பார்த்துவிட்டு வந்து தலைவரைப் பற்றிச் சொல்லும் கதைகள் அலாதியாக இருக்கும். மீண்டும் தென்தமிழீழம் வந்த றஞ்சன் அப்போது மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் துணைத் தளபதியாக இருந்த லெப். கேணல் றீகன் அவர்களுடன் ஒரு அணிப் பொறுப்பாளராக நிற்கும்போதுதான் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. அக்காலகட்டத்தில் மட்டக்களப்பில் நடந்த அனைத்துத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வெற்றிகள் பலவற்றிற்கு உறுதுணையாக நின்றான். 1990இன் பிற்பகுதியில் அன்ரனி அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டான். அப்போதுதான் நான் முன்பு சொன்னதைப்போன்று முன்னணிக் குழுவின் பொறுப்பாளராக அப்போதைய அம்பாறை மாவட்டத் தளபதி ராம் அவர்களால் நியமிக்கப்பட்டான். சுமார் ஒன்றரை வருடத்திற்கு மேலாக ஒரு துணிச்சல்காரனாக அங்கு அதே பணியைத் திறம்படச் செய்தான். ஒரு விடயம், அங்கு உணவெடுத்து வருவதுதான் கடினமான பணியென்று முன்பு சொன்னேன். அப்படியான பணிக்காக நாங்கள் செல்லும் போது இவன்தான் முன்னே கிளியருக்குச் செல்வான். எப்போதுமே அவரவர்களுக்கு கொடுக்கும் பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று எப்போதும் கதைக்கும் இவன்இ சாப்பிடுவதென்றால்கூட எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்டுத்தான் சாப்பிடச்செல்வான். போராளிகளுக்கு உணவு கொடுப்பதில் ஒரு தந்தையைப்போலஇ ஏதாவது மிருகங்கள் சுட்டு இறைச்சியோ அல்லது குளங்களில் தனியாகச் சென்று மீன் பிடித்தோ நல்ல கறியோடுதான் உணவு கொடுப்பான். அப்படியாக இவனது பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென்று சொல்பவன் இயங்கிக் கொண்டிருந்தவன், அம்பாறையில் அந்த இறுக்கமான காலகட்டத்தில் இவனது பணி அளப்பெரியது என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் 1992இன் நடுப்பகுதியில் மட்டக்களப்பிற்கு அழைக்கப்பட்டு ஒரு அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். அக்காலகட்டம் மட்டக்களப்பில் எதிரி, எங்கு கால் எடுத்து வைத்தாலும் இழப்பில்லாமல் முகாமிற்குத் திரும்பியதுமில்லை, புலிகள் இலங்கை இராணுவத்தைக் கொன்று ஆயுதங்கள் கைப்பற்றாமல் தங்கள் பாசறைக்குத் திரும்பியதுமில்லை. அப்படிக் கைப்பற்றிய ஆயுதங்களால் மட்டக்களப்பில் புலிகள் பெருஞ் சேனையாக உருவாகினார்கள். ஆயுதத்தால் தன்னிறைவு பெற்ற புலி அணிகளால் எதிரி கதி தலங்கினான். முகாமைவிட்டு வெளியில் வருவதற்கு அஞ்சினான். அப்படியான புலிகளின் தாக்குதல்களால் உணவுகூட எடுக்கச் செல்லாமல் இருந்த எதிரிமுகாம்கள் பல அக்காலகட்டத்தில் மூடிவிட்டுச் செல்லும் அளவிற்கு இருந்தது. உதாரணமாக 1992இன் கடைசிப்பகுதியில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதில் றஞ்சன் பல தாக்குதல்களில் ஒரு அணிப் பொறுப்பாளராகச் செயற்பட்டான். அக்கால கட்டத்தில்தான் 1993இன் முற்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்பில் மட்டு – அம்பாறை மாவட்டப் படையணியொன்று பெரும் திட்டமொன்றுடன் வடதமிழீழத்திற்கு அழைக்கப்பட்டது. அப்படையணிக்கு தலைவர் அவர்களினால் ஜெயந்தன் படையணி என்ற பெயர் சூட்டப்பட்டு பயிற்சிகள் நடந்தது. அப்போது இவன் ஒரு கொம்பனிப் பொறுப்பாளராக இருந்தான். எவ் வேலையைக் கொடுத்தாலும் வேகமாகச் செய்து முடிக்கும் இவனது அணியைப் பயிற்சியிலும் திறமையாகத்தான் செயற்பட வைத்தான். அதனால் ‘தவளை’ நடவடிக்கைக்கான தாக்குதல் திட்டத்தில் இவனுக்கொரு பகுதி கொடுக்கப்பட்டு பயிற்சிகள் நடந்தது. பயிற்சியின் போது தனது போராளிகள் சோர்வடையக்கூடாது என்பதில் கவனமெடுத்தான். எமது படையணியில் உள்ள போராளிகள் அனைவரும் சண்டையில் அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் வட தமிழீழத்தில் தலைவரால் புகுத்தப்பட்டிருந்த பெரும் போரியல் நுணுக்கங்களின் அடிப்படையில் போரிட்ட அனுபவம் இல்லாதே இருந்தது. அத்துடன் பல படையணிகளுடன் சேர்ந்து பிடிக்கும் முதல் சண்டையும், பெயர் சூட்டப்பட்ட பின் படையணியின் முதல் சண்டையும் என்பதால் எந்த நேரமும் எமது படையணி யார்? என்பதை எதிரிக்குக் காட்ட வேண்டும். நமது படையணிக்குத் தரப்பட்டிருக்கும் பகுதிகளை ஏனைய படையணிகளுக்கு முதல் பிடிக்கவேணும். தலைவர் நம்மை நம்பி எடுத்திருக்கின்றார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எந்த நேரமும் கதைப்பான். அதேபோல் தாக்குதல் நடந்தவேளை, தலைவரின் எதிர்பார்ப்பிற்கேற்ப தமது ஆற்றலை ஆரம்பத் தாக்குதலிலேயே நிரூபித்துக் காட்டினார்கள். அதில் றஞ்சனும் ஒருவன். அவனுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியை மிக வேகமாகவும் இழப்புக்கள் அதிகம் இல்லாமலும் பிடித்து விட்டான். பின்னர் ஏனைய பகுதிகளுக்கு உதவிக்கு வரவா? எனக்கேட்டுச் சென்று அத்தாக்குதலின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டிய றஞ்சன், ஒரு ஆடம்பரமில்லாத, அமைதியான, தீர்க்க சிந்தனையுள்ள, எதையும் மிக வேகமாகக் கிரகித்து அதற்கேற்ப செயற்படும் ஒரு தலைசிறந்த தளபதியாக றஞ்சன் உருவானான். அது 1994 இன் நடுப்பகுதி பூநகரி தவளை நடவடிக்கையில் பங்குகொண்ட போராளிகளில் ஒரு தொகுதியினை தலைவர் அவர்களின் பணிப்பில் தளபதி ராம் அவர்களோடு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் றஞ்சன் அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். அப்போது மட்டு – அம்பாறை மாவட்டத்தின் நிலைமை வேறுவிதமாக இருந்தது. எதிரியின் நடவடிக்கைகள் அதிகரித்திருந்தது. எங்கு பார்த்தாலும் எதிரியின் முகாம்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்று இறுக்கமான காலம். போராளிகள் எப்போதாவது கிடைக்கும் கஞ்சியைக் குடித்தே போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்த வேளையது. அப்போதுதான் மட்டக்களப்பிற்கு அணி சென்றது. புலி அணிகள் அங்கு சென்றது ஒரு தாக்குதல் செய்யும் வரைக்கும் எதிரிக்குத் தெரியக்கூடாது என்பதால் மறைவாக இருந்தே தாக்குதல் திட்டத்திற்கான வேவு தொடக்கம் பயிற்சி வரைக்கும் இரகசியமாக இருந்தே செயற்பட வேண்டியிருந்தது. அப்போது உணவுப் பொருட்கள் எடுத்து வருவதே கஸ்ரம். காரணம் நீண்டதூரம், எதிரியின் பதுங்கித்தாக்குதல் அணியின் நடவடிக்கை என்பற்றைக் கடந்து சென்றே கொண்டுவர வேண்டும். அதைக்கொண்டு ஒருநேரம் அல்லது இரண்டுநேரம் கஞ்சி குடித்துத்தான் அத்தாக்குதலுக்கான பயிற்சிகளை எடுத்தனர். அத்தாக்குதல் திட்டமானது மட்டு வாகரைப் பிரதேசத்தின் மையப்பகுதியும், புலிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமுமான கட்டுமுறிவு என்னுமிடத்தில்தான் அம்முகாம் அமைந்திருந்தது. அம்முகாம் இலங்கை இராணுவத்தின் முன்னணிப் படையான (S.F) விசேட படையினரின் ஒரு பலம் வாய்ந்த முகாம். அம்முகாம் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கப்பட்டது. அதில் றஞ்சனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்துமுடித்து அத்தாக்குதலுக்கு வலுச்சேர்த்தான். அம்முகாம் தாக்குதலின் பின் தளபதி ராம் அவர்களால் றஞ்சனுடன் ஒரு அணி அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்ப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறைக்குச் செல்வதைச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அப்படி அப்போது அங்கு செல்லும் பாதை எங்கும் எதிரியின் முகாம்களும், ரோந்து அணிகளின் நடவடிக்கைகளும் இருந்தது. அம்பாறை மாவட்டத்தில்தான் இலங்கையின் முன்னைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால், அவரது மகனின் தலைமையில் தமிழர்களை வேறுபாடின்றி அழித்து, தமிழர்களின் பாரம்பரிய வளமிக்க நிலங்களை அபகரித்து, சிங்களவர்களைக் குடியேற்றும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் விசேட அதிரடிப்படை (எஸ்.ரீ.எவ்) எனும் படையினர் இருந்தனர். இருக்கின்றனர். அங்குதான் 1994இன் நடுப்பகுதியில் புலிகளின் நடவடிக்கைகள் கணிசமாக குறைந்திருந்த காலகட்டத்தில்தான் அவ்வாண்டின் பிற்பகுதியில் றஞ்சன் ஒரு சிறிய அணியோடு அம்பாறைக்குச் சென்றான். மட்டக்களப்பிலிருந்து வெளிக்கிடும் போது ஒரு வார்த்தை எங்களிடம் சொன்னான். “ஒரு மாதத்திற்குள் ‘எஸ்.ரீஎவ்’ற்கு அடித்து ஆயுதம் எடுக்காமல் விட்டால் நான் வீரச்சாவடைந்து விட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்” நாசுக்காக அதுவும் உறுதியாக எங்களில் சிலரிடம் இரகசியமாக அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள் அவை. சொன்னதைச் செய்பவன் றஞ்சன் என்பதால் அடிப்பான் என்பது எமக்குத் தெரியும். ஆனால் விரைவாகச் செய்யும் சூழல் அங்கு இல்லை என்பதால் நாங்கள் எல்லாம் அது கடினம் என நினைத்திருந்தோம். சொன்னதைப் போலவே ஒரு மாதத்திற்குள் பொத்துவில் ரொட்டைக்குளம் பகுதியில் ரோந்து சென்ற ‘எஸ்.ரீ.எவ்’ இனருக்கு அடித்து ஏழுபேரைக் கொன்று அவனிடம் இருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினான். அப்படி ஆரம்பித்த அவனது தாக்குதல்கள் அடுத்த மாதமே சிம்பிலாண்டுவ எனும் இடத்தில் அடுத்த தாக்குதலை மேற்கொண்டான். அதிலும் ஆயுதங்களைக் கைப்பற்றினான். அப்படியாக தீவிரமடைந்த அவனது தாக்குதல்களால் எதிரி கதிகலங்கி வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவிற்கு றஞ்சனின் நாமம் எதிரியிடம் பிரபல்யமானது. அப்போது எங்கெல்லாம் எதிரிக்கு தொல்லை கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் அவனது பாதம் பட்டது. இவனிடம் ஒரு வித்தியாசமான பண்பை நாங்கள் கண்டோம். யார் அபிப்பிராயங்கள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு, அதில் சாத்தியமானவற்றைச் செய்வதும், சாதாரண போராளிகளிடமும் கருத்துக்கள் கேட்டு அதற்கேற்ப அதை பகுத்தறிந்து நல்லவற்றிற்கு போராளிகளைத் தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டி, போராளிகளை வளர்க்கும் தன்மையைக் கண்டோம். 1995இன் ஆரம்பத்தில் போர் நிறுத்தம் வந்தது. றஞ்சனுக்கு ஓய்வில்லை, காரணம் அப்போதைய பேச்சுவார்த்தையை அவனால் நம்ப முடியாமல் இருந்தது. ஆதலால் போராளிகளோடு கதைக்கும்போது, சிங்கள அரசு எமது உரிமையைத் தரப்போவதில்லை என்பதால் நாம் சும்மா இருக்கமுடியாது. எனவே பயிற்சி எடுக்கவேண்டும், எம்மை நாம் தயார் படுத்த வேண்டும், என ஓய்வில்லாமல் உழைத்தான். ஒரு சுவாரசியமான விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். போர் ஓய்வுநேரம் நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் போது ஒரு ‘எஸ்.ரீ.எவ்’ படையினன் றஞ்சனிடமே ‘நாம றஞ்சனைப் பார்க்கவேணும் காட்டுவீர்களா?’ என்று கேட்டான். அதற்கு ‘அவரைப் பார்க்கமுடியாது’ என்றான். ‘ஏன் வரமாட்டாரா?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்தில் நின்ற போராளி, ‘விடயத்தைச் சொல்லுங்கள் அவரிடம் கேட்டுவிட்டு வந்து சொல்கிறோம்’ என்றான். அதற்கு அப்படையினன் ‘எங்களுக்கு றஞ்சன் அடிப்பதுதானே? ஏடும் ஆள்தானே. சண்டை வந்தால் எங்களுக்கு அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ’ என்றான். அப்படி றஞ்சனின் தாக்கம் ஒவ்வொரு படையாளையும் தாக்கியதைக் கண்டோம். மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. அப்போது றஞ்சன் சொல்வான் எமது முதல் அடியால் சில முகாம்களை எதிரி அகற்ற வேண்டும் அப்படி நமது அடி இருக்கவேண்டும் என்று. அதற்கேற்றாற்போல் ஒரு திட்டம் தீட்டினான். ஒரு ரோந்தில் வரும் படையினரில் ஒருவன்கூட மிஞ்சாமல் கொல்லப்படவேண்டும் என்று தாக்குதல் திட்டம் தயாரானது. அத்திட்டமானது மூன்று நாட்களுக்கு அவ்விடத்திலேயே பதுங்கியிருப்பதுஇ எந்த நேரத்தில் வந்தாலும் அடிப்பது என்ற நோக்கோடு. ஏனெனில் அவன் சிலவேளைகளில் ரோந்து வராமல் விடலாம் என்பதால். ஆனால் நாங்கள் சென்று நிலையெடுத்திருந்த அன்றே அதாவது 08.05.1995 அன்று காலை 5.45 மணி அளவில் வந்தான் எதிரி. தாக்குதல் தொடங்கியது. ரோந்துப்படை புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டது. றஞ்சன் உள்ளே வழிநடத்தினான். வந்த படையில் ஒருவன்கூட மிஞ்சாமல் ரோந்துவந்த இருபது ‘எஸ்.ரீ.எவ்’ இனரும் கொல்லப்பட்டு ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இது அப்போது வெற்றிகரமான தாக்குதல். அதில் புலிகள் தரப்பில் எதுவித இழப்பும் ஏற்படவில்லை என்பது றஞ்சனது போர் வியூகத்தின் சிறப்பாகும். இத்தாக்குதல் கஞ்சிகுடியாற்றுக்கும் காஞ்சிராங்குடாவிற்கும் இடையில் நடைபெற்றது. பின்னாளில் கஞ்சிகுடியாறு படைமுகாம் அகற்றப்பட்டதும் அவ்விடம் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதற்கும் றஞ்சனின் தாக்குதலே முக்கியமானது. ‘ஹலோ றஞ்சண்ணை எங்க நிக்கிறியள்’ ‘நான் மச்சான் தாண்டியடிக்கும் கோமாரிக்கும் இடையில நிக்கிறன். ‘எஸ்.ரீ.எவ்’ இற்கு தகவல் அனுப்பிவிட்டு ரோட்டில் நிற்கின்றேன். வந்தால் அடித்துவிட்டு வருவேன், அல்லது பின்னேரம் வருவேன். அங்கேயே நில்லுங்கோ சந்திப்போம்’ ‘டேய் தம்பிமார் எழும்புங்கடா. இரண்டு மான் கொண்டுவந்திருக்கிறேன் உரியுங்கடா சமைப்பம்’ என்பான். இப்படியாக எந்த நேரமும் சுறுசுறுப்பாக எதிரிக்கு எதிரான நடவடிக்கையிலும் போராளிகளிற்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்ற பணியிலும் தீவிரமாகச் செயற்படுவான். றஞ்சனின் இறுதி நடவடிக்கையாக அது இருக்கும் என்பதை நாம் கனவிலும் நினைக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உணவுப்பொருள் கொண்டு வருவது கடினம் பற்றி முன்பே சொல்லிவிட்டேன். அதேபோன்று உணவுப்பொருள் எடுத்துவந்து முகாமிற்கு வராமல் வேறு ஒரு இடத்திற்குச் சென்று அங்கேயே தங்கி ஒரு தாக்குதல் செய்துவிட்டு வருவதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அக்கரைப்பற்றிற்குப் போய் உணவுப் பொருள் எடுத்து வருவதற்கு 27.08.1995 அன்று இரவு இவர்களது அணி புறப்பட்டது. அங்கிருந்து அன்று இரவே தாங்கள் நிற்கவேண்டிய இடத்திற்குத் திரும்பவேண்டும். இல்லாவிடின் விடிந்துவிடும். விடிந்தால் எதிரி எம் மறைவிடத்தைக் கண்டுவிடுவான். கண்டால் தாக்குதல் திட்டம் பிழைத்துவிடும். அதனால் அன்றிரவு பொதிசுமந்து களைத்துப்போய் வந்த போராளிகளிற்கு ஓய்வில்லை. மிகவும் சோர்வோடு அங்கு வந்தவர்களுள் றஞ்சனோடு சிலர்தான் உணவுப்பொதி சுமக்கவில்லை. காரணம் அவர்கள்தான் முன்னுக்கு கிளியர்பண்ணி வந்தனர். ஆகையினால் பொதிசுமந்து வந்த போராளிகளை உறங்கவிட்டுவிட்டு களைப்போடு வந்த போராளிகளிற்குச் சமைத்துக் கொடுப்பதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் இருந்த குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அங்குதான் 27.08.1995 அன்று அவனின் தீவிரமான விடுதலைப் போராட்டப்பணி முடியவேண்டும் என்றிருந்தது போலும் எப்படியாக மண்ணை நேசித்தானோ அப்படிப் போராளிகளையும் நேசித்தான். தான் நேசிக்கும் அப்போராளிகளிற்கு உணவு கொடுப்பதற்குச் சென்றவேளை எதிரியின் எதிர்பாராத மோதலினால் இந்த மண்ணை முத்தமிட்டு வீரகாவியமானான். ஓயாமல் வீசிய புயல் அவன். இந்த மண்ணில் ஓய்ந்தான். “இந்த விடுதலைப்போரில் கூடுதலாக சாதிப்பான் என்று நான் யாரை எதிர்பார்க்கின்றேனோ அவன் விரைவாகவே சாதித்துவிட்டு வீரச்சாவடைகின்றான்” என்று றஞ்சனது இழப்பின் பின் இயக்கத்தின் மூத்த தளபதி கலங்கிய கண்களோடு கூறியிருக்கின்றார் என்றால், றஞ்சன் எனும் போராளியை வேறுயாரும் வேறு எந்த வார்த்தையாலும் சொல்லத்தேவையில்லை. நினைவுப்பகிர்வு: தயாமோகன் நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (வைகாசி, 2004). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-maruthiyan/- உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்று முட்டை உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான கட்லெட் செய்யலாமா? வேகவைத்த முட்டை - 4உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்மிளகுத்தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1தேங்காய் பால் - அரை கப்மைதா மாவு - 2 ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுரொட்டித்தூள் - தேவையான அளவு பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு செய்முறைஉருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவைாயன முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி. https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/08/27161637/1823102/Egg-Potato-Cutlet.vpf- இறைவனிடம் கையேந்துங்கள்
கணபதியே ஓம் கணபதியே- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்களில் மலர்ந்த முகமன்றோ அந்த கந்தனே அருளின் சுடரன்றோ தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ என் சிந்தனை முழுவதும் நீயன்றோ சரவணபவகுக சண்முகனே சராச்சர மந்த்ர குருபரனே முருகா... முருகா... முருகா... முருகா... அன்னையிட்ட நாமம் முருகனல்லவா சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை மலைமேல் நின்றது மறுபிள்ளை அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே சஞ்சலம் போக்கிட வந்தவனே- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம் ஆதி பழனியே சென்னிமலை ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை பன்னிரு கையிருக்க ஏன் கவலை கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை முருகா முருகா முருகா முருகா அருள்பொழியும் தண்டபாணிமுகம் கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும் துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம் அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம் ஓம் சரவணபவாய . . . பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம் தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம் ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம் அருமருந்தாகும் பஞ்சாமிர்தம் திருநீறும் சந்தனமும் கமகமக்கும் காவடிகள் ஆடிவரும் மலையினிலே திருவடியில் பக்தர்கள் அலைபோலே ஆடிவரும் அழகு முகம் தேரினிலே பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே- இறைவனிடம் கையேந்துங்கள்
ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே நிழலைப் போல் எந்தன் கூட நீர் வருவதடியேனின் புண்ணியமே ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே இருதயத்திற்குள் ஆனந்தம்) - 2 (திருவிலாவிலே குருதி சொரிந்து நீர் துயரமென்னும் இருள் நீக்கிடும்) - 2 எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும். ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனே சுகம் கொடுப்பவனே சிநேகிதா) - 2 (கடலலைகளில் அலையும் என் தோணி கரையிலேற்றணுமே தெய்வமே) - 2 நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே நிழலைப் போல் எந்தன் கூட நீர் வருவதடியேனின் புண்ணியமே ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே- இறைவனிடம் கையேந்துங்கள்
பாலைவனம் தாண்டி... போகலாமே நாம்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் உறவு வேண்டும்- இறைவனிடம் கையேந்துங்கள்
கீத விநோத மெச்சு குரலாலே கீறு மையார் முடித்த குழலாலே நீதி யிலாத ழித்தும் உழலாதே நீமயி லேறி யுற்று வரவேணும் சூதமர் சூர ருட்க பொருசூரா சோண கிரீயி லுற்ற குமரேசா ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே ஆனை முகார்க னிஷ்ட்ட பெருமாளே - லெப். கேணல் ராஜன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.