Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2. இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன் 4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உலகத்தில் நான்...... காணாப் பேரோளியே கல்புக்குள் நிறைந்தவனே ஏனென்னை மறந்துவிட்டாய், ஏங்கியேத் துடிக்கவைத்தாய் தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே வானோர்த் தொழுபவனே வள்ளளலே ரஹ்மானே உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உலகத்தில் நான்..... ஆயிரம் கோடிகளாய் அடியார் உனக்கு உண்டு ஆயினும் எனக்கு இங்கே அதிபதி நீதானே அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே புர்ஷிலும் குளிர்ந்தவனே கோமான் ரஹ்மானே உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உலகத்தில் நான் ........ அருள் மழைப் பொழிபவனே, ஆகிரத் அதிபதியே இறுதி நபி இதழில் எழில் மறைப் பொழிந்தவனே தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே காவல் நீ யாஅல்லாஹ் கண்ணே ரஹ்மானே உலகத்தில் நான் உன்னருளை உவந்திடத்தான் பாடுகிறேன் உலகத்தில் நான்....
- நடனங்கள்.
-
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை. கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. லெப். கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். ‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. ‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள். எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன். என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள். 1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லோருக்குமே பரபரப்பு, தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். ‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது. அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள். தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது. இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள். நன்றி: உயிராயுதம் பாகம் 01 நூல். https://thesakkatru.com/black-sea-tiger-captain-angaiyarkanni/
-
லெப். கேணல் முகிலன்
லெப். கேணல் முகிலன் வெளித் தெரியா வீரியம் லெப். கேணல் முகிலன். 15.08.2006 நள்ளிரவு நேரம் எமது பகுதியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அழைப்பு ஒன்று எடுத்து கதைத்தபோது ஒரு நொடியில் அதிர்ந்து விட்டோம். சில நிமிடங்களின் முன்பே முகமாலைக் களநிலவரம் தொடர்பாக முகிலனிடம் கேட்டறிந்து கொண்டோம். முகிலன் வீரச்சாவா? நம்ப மறுக்கிறது மனம். அவனின் தோழன் லெப்.கேணல் அன்பழகன் தியாகசீலம் சென்று உறுதிப்படுத்த விரைந்தான். தாயக விடுதலைக்காகத் தனது பணிகளை நிறைவு செய்த மன நிறைவுடன் எங்களின் நண்பன் மாவீரன் லெப்.கேணல் முகிலனாகத் துயில்கின்றான். 22.04.1972 அன்று மகாதேவன்-இராசமலர் தம்பதிகளின் முதல் முத்தாக சிவக்குமார் வேலணையில் பிறந்தான். நல்ல ஒழுக்கமுள்ளவனாக கல்வியில் திறமையாளனாக தந்தையின் சுமையைத் தாங்கும் சுமை தாங்கியாக இருந்தான். கல்வியில்; கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றான். இவனின் ஒழுக்கம், பண்புகள் தான் கற்ற வேலணை மத்திய கல்லூரிக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தான். உயர் தரம் கற்றுக்கொண்டிருந்த பொழுது இந்தியப் படையினரின் கெடுபிடிகளினால் இவனின் தந்தையார் கொழும்பிலுள்ள உறவினர் ஒருவரின் வியாபார நிலையத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார். தனது கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போய்விட்டதை எண்ணி நாளும் வேதனைப்பட்டான். மீண்டும் 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 2 ஆம் கட்ட ஈழப்போரால் ஊருக்கு வர பல தடவை முயற்சித்தும் தந்தையின் தலையீட்டால் வர முடியாமல் போனது. கொழும்பில் தமிழர்களுக்குக் கெடுபிடி அதிகரித்த பொழுது யாருக்கும் சொல்லாமல் ஊருக்கு வந்து சேர்ந்தார். ஊர் வந்தவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார். நீண்ட இடைவெளியின் பின் பெற்றோர் சகோதார்களுடனும் உறவினர்களுடனும் இணைந்ததில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். இவரது வாழ்வில்; 1991 ஆம் ஆண்டு புயல் வீசியது. அவனது ஊரின்மீது சிங்களப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கை காரணமாக இடம்பெயரும் அவலம் நிகழ்ந்தது. சொல்ல முடியாத வேதனையுடன் ஊரைவிட்டு அகன்றான். கிளிநொச்சி-முரசுமோட்டை என்னும் கிராமம் இவனை வரவேற்றது இடப்பெயர்வு இவனுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. புதிய இடமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்குச் சிறந்த இடம் என்பதால் ஓரளவு மன நிறைவுடன் தந்தை யாருடன் இணைந்து விவசாயம் செய்தான். தனது ஓய்வு நேரங்களில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வாசிப்பது இவனின் இயல்பு. அதனால் தனது அறிவை வளர்த்துக் கொண்டான். நூலகத்தில் இவன் வாசிக்காத புத்தகங்களே இல்லையெனலாம். விவசாயம் தன் பணி என்றிருந்த பொழுதும் மனதிற்குள் தாயகத்தில் சிங்களப் படையினரால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பங்களை அறிந்தும் பார்த்தும் மனதில் விடுதலைத் தீயை வளர்த்துக் கொண்டான் சிவா. 1995 ஆம் ஆண்டில் 3 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது பல இளைஞர், யுவதி போரில் பங்குகொள்ள போராளிகளாகத் தம்மை இணைத்துக்கொண்ட பொழுது தனது மச்சான்களுடன் சிவா விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். ‘சரத்பாபு – 10’ பயிற்சி முகாம் இவனை முகிலன் என்ற நாமத்துடன் போராளியாக மாற்றிக் கொண்டது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அவனின் தந்தையார் இறந்த செய்தி அறிந்தும் பயிற்சியை நிறைவு செய்த பின்னரே சென்றான். பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய முகிலனை இம்ரான்-பாண்டியன் படையணியின் வெளிப் பாதுகாப்புப் புலனாய்வு அணிக்கு பிரிகேடியர்.இரட்ணம் மாஸ்ரரால் தெரிவு செய்யப்பட்டான். அக்காலப் பகுதியில் அணிப் பொறுப்பாளராக இருந்த கப்டன்.கௌதமன் அவர்களால் அணியின் கல்விப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டான். எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் இயல்பும் எளிதில் எல்லா போராளிகளிடமும் இவனை நெருக்கம் கொள்ள வைத்தது. முகாமில் நிற்கும் வேளைகளில் புத்தகமும் படிப்புமாகவே இருப்பான். ஒரு தடவை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் எங்கள் கல்விப் பிரிவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். சந்திப்பின் பொழுது அம்மான் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு போராளிகள் தங்களது சந்தேகங்களைப் பூர்த்தி செய்தனர். முகிலனும் அம்மானிடம் கேள்வி கேட்டான். அப்பொழுது இவனை நன்றாகப் பார்த்து விட்டு ‘தம்பி நீ நல்லதொரு புலனாய்வளனாக வருவாய்’ எனக் கூறினார். அதன்பின்னரே அவனின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அம்மான் கூறியதுபோலவே பின்னாளில் சிறந்ததொரு புலனாய்வாளனாக விளங்கினான் எங்கள் முகிலன். 1996 ஆம் ஆண்டில் சூரியக்கதிர் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து வன்னி வந்து சில காலம் முகாம் அமைக்கும் பணிகளைச் செய்தான். கழுத்தில் ஒரு துவாய், கையில் ஒரு புத்தகம் இதுதான் இவனது அடையாளம். இவனிடம் நிறையவே எழுத்தாற்றல் இருந்தது. படையணி, புலனாய்வு அணி வெளியீடுகளில் இவனின் எழுத்துக்குத் தனியிடம். சண்டைக்குப் போவதற்காக சண்டை பிடிக்கும் இயக்கத்தில் இவனும் இரட்ணம் மாஸ்ரரிடம் சண்டை பிடித்துச் சண்டைக்குச் சென்றான். 1997.01.09 அன்று நடந்த வரலாற்றுச் சமரான ஆணையிறவு-பரந்தன் ஊடறுப்புச் சமரில் உப்பளம் பகுதியில் சமரிட்டான். வெற்றிக்காய் வீழ்ந்தவர்களில் இவனின் தோழர்கள் கப்டன்.அற்புதன், கப்டன்.இராஜேஸ் வீரச்சாவடைந்த பொழுது இவன் வேகங்கொண்டு சமரிட்டான். இச்சமரில் பங்குகொண்டு வெற்றிக்கு பங்கு செய்து வீரத்தழும்புடன் தளம் திரும்பினான். தளத்தில் மீண்டும் தனது பணியைச்செய்து கொண்டு இருந்தவனுக்கு புதிய பணி இவனை உள்வாங்கியது. அதாவது, இவனுக்கு சிங்களமும் தெரியும் என்பதாலும் இவன் ஆழமான சிந்தை கொண்டவன் என்பதாலும் இரட்ணம் மாஸ்ரர் இவனை இராணுவத்தினரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பணிக்கு நியமிக்கப்பட்டார். அறிவும் ஆற்றலுமுள்ள இவன் விரைவாகப் பணியின் நுணுக்கங்களை அறிந்து தனக்கு வழங்கப்பட்ட பணியைத் திறம்பட செய்தான். இவன் தரவுகளின் அடிப்படையில் ஒருசில கரும்புலித் தாக்குதலுக்கு பேருதவியாக இருந்தது. இதனால், பிரிகேடியர்.ஆதவன் அவர்களால் பாராட்டப்பட்டவன் எங்கள் முகிலன். 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இம்ரான்-பாண்டியன் படையணித் தளபதியாக இருந்த இரட்ணம் மாஸ்ரர் தலைவரினால் படையப் புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இரட்ணம் மாஸ்ரர் இவனையும் தன்னுடன் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்றார். இவன் இரட்ணம் மாஸ்ரரின் நம்பிக்கையாளனாகவும் தோழனாகவும் செயற்பட்டான். இரட்ணம் மாஸ்ரர் யாருடனும் இலகுவில் மனம் விட்டு பழகுவதில்லை. பணியும் தானு மாக இருப்பவர். அப்படிப் பட்டவரையே தன்னுடன் நெருங்கிப் பழக வைத்தவன் எங்களின் முகிலன். படையப் புலனாய்வுப் பிரிவு மீள்ளொழுங்கு செய்வதில் இரட்ணம் மாஸ்ரரு டன் கடுமையாக உழைத்தவன். இவன் ஒரு தொய்வு நோயாளனாக இருந்தும் பணிக்கும் முன் அவனுக்கு நோய் ஒன்றும் பெரிதாக தெரிந்ததே இல்லை. 2002 இல் அவனது 30 ஆவது அகவையில் தனது மச்சாளைத் திருமணம் செய்து மகிழ்வாக இருந்தான். அதன் பேறாக மகன் பிறந்தான். மிகவும் மகிழ்வுற்றான். குடும்பத் தலைவனாக இருந்த பொழுதும் தன் பணியை ஒருபொழுதும் மறந்ததில்லை. குடும்பத்தைக் காரணம் காட்டிப் பணிக்கு பின் நிற்கவில்லை. அவனின் எண்ணம், சிந்தனை, கனவு எல்லாமே தன் பணியைப் பற்றியதே. இருந்தும் அவன் தனது மனைவிமீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தான். அதன் வெளிப்பாட்டை அவனது மனைவியை காண்பதில் புரிந்து கொள்ளலாம். வன்னியிலிருந்து பணியாற்றியவனை 2002 ஆம் ஆண்டு சமாதானக் காலம். இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான யாழ் மண்ணில் தனது புலனாய்வுத் திறனால் இயல்பாக பணியைச் சிறப்பாகச் செய்தான். சமாதானக் காலத்தில் வன்னிப் பகுதியில் படையினரின் ஆழஊடுருவல் அணியின் (LRP) நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் இவன் பங்கு மிகப் பெரியது. வவுனியாவிலும் இவனின் பணி தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இரணைமடுவில் அமைந்துள்ள எமது வான் தளத்தை அழிக்கும் நோக்குடன் சிங்களப் படை யின் ஆழஊடுருவல் அணி பெரியளவிலான படை நகர்வை நடவடிக்கைக்காக நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது வவுனியா–ஓமந்தை சாவடியில் ஓர் இராணவ வீரனை இவன் மாற்றி வைத்திருந்தான். அந்த இராணுவ வீரன் தந்த தகவலின் அடிப்படையில் ஆழஊடுருவல் அணியினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதுடன், வான்தளமும் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு இவனின் பல தகவல்களினால் அன்று எமது இயக்கம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. யாழில் பலாலி படைமுகாமை அண்மித்த பகுதிகளில் மக்களுடன் மக்களாக நின்று தனது பணிகளைச் செய்து வந்தான். சமாதானம் குழம்பும் நிலையை அண்மிக்க முன் அவ்வேளை படையப் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த கேணல்.சாள்ஸ் அவர்களால் அவசரமாக வான் எதிர்ப்பு ஏவுகணைகள் யாழ்ப்பாணத்திற்குக்கொண்டு செல்லவேண்டும் எனக் கூறிய பொழுது மிகவும் இறுக்கமான இராணுவத் தடைகளைத் தாண்டி மிகவும் விரைவாகக் கொண்டு சேர்த்தான் எங்கள் முகிலன். இதற்காக தலைவர் அவர்களினால் பாராட்டையும் பரிசினையும் பெற்றுக்கொண்டான். 11.08.2006 அன்று முகமாலையில் 4 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது அச்சமரை வழி நடத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர்.தீபன் அவர்களின் அழைப்பை ஏற்று கேணல்.சாள்ஸ் அவர்களின் அனுமதியுடன் பளைப் பகுதியில் ஓட்டுக்கேட்கும் பணியைச் செய்தான். அத்துடன், யாழ் குடாவில் கிளைமோர் தாக்குதலுக்குரிய வழி நடத்தலையும் மேற்கொண்டிருந்தான். 15.08.2006 அன்று மாலை பளைப் பகுதியில் தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். எங்கும் எறிகணை வீச்சுத் தொடர்ந்த வண்ணமிருந்தது. அதில் தொலைவில் வீழ்ந்து வெடித்த எறிகணை ஒன்றின் சிதறல் இவனின் இதயத்தைத் துளைத்து எங்களிடமிருந்த எங்களின் அன்புத் தோழன் முகிலனைப் பறித்துக் கொண்டது. இவனின் இழப்பினைத் தங்களில் ஒருவனை இழந்ததுபோல் முரசுமோட்டைக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறுதி விடை பெற்ற எங்களின் தோழன் லெப். கேணல் முகிலனாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் தூயிலுமில்லத்தில் தாயகத்திற்காக தனது பணியை நிறைவு செய்த மனநிறைவுடன் உறங்கிக் கொண்டான் எங்களின் முகிலன். நன்றி: தமிழினி (யாழ். கருத்துக்களம் – 2014) https://thesakkatru.com/commander-lieutenant-colonel-mugilan/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகன் முருகன் முத்தழிம் குமரன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பக்தர்களே மலை மேலே என் ஐயப்பன் சந்நிதானம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கபாலம் சூலம் - பீஷண பைரவர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்களை ஏறெடுப்பேன் பல்லவி கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என் கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் --- கண்களை சரணங்கள் 1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார், வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர் காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் --- கண்களை 2.பக்க நிழல் அவரே -- எனை ஆதரித்திடும் பக்க நிழல் அவரே எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே --- கண்களை 3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும் பொல்லா உலகினில் போக்குவரத்தையும் நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் --- கண்களை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அந்த நாளிலே மக்கா நகரம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆத்தாளாம் அபிராமியை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நல்லை வேலவா நல்லை வேலவா நெஞ்சம் நெகிழ உனைப் பாடவா வர்ண சண்முகா வர்ண சண்முகா உந்தன் மேலே மலர் தூவவா (2) அகிலாளும் சரவணா உந்தன் சந்நிதி மருவும் அடியவர் கோடியே அலங்காரக் கந்தனே உந்தன் பாதமே தீண்ட எம்துயர் தீருமே... தோகைமயிலுடன் சேவற்கொடியுடன் வர்ண எழில் உரு காணவே காந்தள் பூச்சரம் கையில் ஏந்தியே காலம் கரைகிறோம் கந்தனே... யமுனாரி அழகில் உன் வர்ணம் முருகா தேர் வீதி கமிழும் உன் வாசம் திரு முருகா முருகா அகம் நீங்கா நல்லூர் பதி ஏறி முருகா அழைப்போர்க்கு அருளும் வரமானாய் திரு முருகா முருகா
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசு அழைக்கிறார் பல்லவி இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் சரணங்கள் 1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு 4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் தொல்லைமிகு இவ்வுலகில் துணை யேசுவே ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும் தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர் சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும் கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும் கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும் போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும் அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும் பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே நினைவாக உணவாகி உயிராகியே நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ - 2 சபமப கமரிக சரிசநி - 2 சாநி பமபநி சச சச நிசச நிரிரிரிச நிசநி சாநி பமபத பப பம பபபம தத பமக 1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே நீதானே என்னை நினைத்தாய் - 2 என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக நீதானே பொறித்து வைத்தாய் எனை விட்டு விலகுவதில்லை நீ என்னை கைவிடுவதுமில்லை கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற உனை பாடும் பொழுதெல்லாம் ...................... பபபத பமகரி சரிசரிநிச சரிகமப தப மகரி கமப - 2 மபதநிச கரிசநி ரிசநித பதநிச கரிசநித ரிசநிதப சநிதபம தபநித சரிநிச நிசகரி தநிரிநி தபமகரி ரிரிககமமதத ககமமததநிநி மமதத நிநிரிரி சநிதப 2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம் ஆறுதல் உன் வார்த்தைகள் - 2 இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும் உன் வாழ்க்கை நினைவுகள் பயணத்தின் பாதைகளில் நான் பயம் கொண்ட வேளைகளில் வழி துணையாக துயர் போக்கும் மருந்தாக வருகின்ற
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து கதிர் பெருக மின்னும் தாழை மடல் விரியும் வேளாங்கண்ணி எனும் ஊராம் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் பூவின் மணமும் புதுவெயிலின் பொலிவும் சுமந்த இளம்தென்றல் ஆவும் கன்றும் அழைக்கின்ற அன்பு குரலில் விளையாடும் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் பொன்னேர் பிடித்த நல் உழவர் பூமித் தாயின் அருள் கொண்டார் தண்ணீர் இன்றி மீனவரும் தாவும் கடலின் நிதி கண்டார் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம் தேனும் கலந்த தினைமாவும் தீரா இன்ப சுவை சேர மானின் விழியாம் மனைவேணி மாறா காதல் நெறி நின்றாள் நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம் காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாளாம் நாளாம் புனித நாளாம் மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2) அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2) அருளான கன்னித் தாயாரின் நாளாம் ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2) தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம் ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம் தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2) தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம் மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இந்த பூவிலே ஒரு காலத்தில் தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில் நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார் கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய் சொல்லொணாததாய் புயலும் வீச காணுணாததாய் இருளும் சூழ மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா 1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார் பிழைப்போமேல் உமக்காய் ஒரு கோவிலைச் செய்வோமென்றார் மாதாவாம் மேரியின் உன்னத அருளால் கரை சேர்ந்திட நொடியில் கண்டார் 2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை கண்டு வணங்கினர் தாம் மேலும் நன்றி நவின்றனர் தாம் மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை அவராலயமாகப் பணிந்தார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒருநாள் வாழ்விலே... வர வேண்டும் நேரிலே..
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நபிகளின் பொன்மொழி கேளாயோ நபிகளின் பொன்மொழி கேளாயோ கேளாயோ அன்பும் அறமும் கொண்ட இன்ப வாழ்வு தரும் -பொன்மொழி கேளாயோ (நபிகளின்) மானிடர் யாவருக்கும் தெய்வம் ஒன்றே எனும் மார்க்கமதே இஸ்லாம் . தேனினும் இனிமை தரும் மது வாயினும் தீண்டாதே என்றுரைத்தார் (நபிகளின்) வாழ்க்கையிலே ஒருபோதும் நீ வட்டி வாங்காதே என்றுரைத்தார். வீழ்ந்து சமாதிகள் பூஜைகள் செய்வதை விட்டொழி என்றுரைத்தார்.(நபிகளின்) விதவைக்கு மறுமணம் செய்திடல் -இங்கு வேண்டுமென்றே உரைத்தார் பொதுவாக ஆணுக்கும் கற்புண்டு என்பதை புதிதாகவே உரைத்தார்........(நபிகளின்) கல்விக்கு உயிர் த்தந்தோர் சாவதில்லை என்று காலமெல்லாம் உரைத்தார் நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை நம்புக வேன்றுரைத்தார்......(நபிகளின்) பாவத்தைப் போக்கிடும் தொழுகையை தவறாது பேணிடவே பகர்ந்தார் சோபிதமோங்கிடும் செம்மல் முஹம்மது சிந்தனை செய்துரைத்தார் (நபிகளின்)... அந்த அருமையான பாடல் தங்கள் செவிகளுக்கு....
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பனம்பழ வடை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தமிழ் பாடும் இடமெல்லாம் உன் திருப்புகழ்
-
தடங்கள் தொடர்கின்றன…
தடங்கள் தொடர்கின்றன… தனது 50 கலிபர் சுடுகலன் அணியில் தான் உட்பட எல்லோருமே காயமடைந்து, சிலர் வீரச்சாவடைந்துவிட, அந்தக் கணத்தில் – 50 கலிபர் சுடுகலனைப் பாதுகாக்க வழியற்றுத் தவித்துப்போனார் கப்டன் இசைநிலா. நகரவே முடியாத காயம். எனினும் குற்ற உணர்வு உறுத்திக்கொண்டிருந்தது. அந்தச் சுடுகலனை நகர்த்துமாறு இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். 2006.08.11 அன்று யாழ் மாவட்டத்தின் முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை முறியடித்து விடுதலைப்புலிகளின் அணிகள் முன்னேறிவிட்டிருந்தன. கிளாலிக் கரையோரப் பகுதியால் உள்நுழைந்த லெப்.கேணல் கலைவிழியோடு கப்டன் இசைநிலாவின் 50 கலிபர் சுடுகலன் அணியும் புகுந்துவிட்டிருந்தது. பல அணிகள் பல வழிகளால் நுழைந்திருந்தாலும், சமகாலத்தில் எல்லோராலும் சம தூரத்துக்கு நகரமுடியாததால், உட்புகுந்த புலி அணிகள் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் தனித்தனியாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அணியிலுமிருந்த ஒவ்வொரு போராளியும் சிறிலங்காப் படையினரின் பலபக்கத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரையோரமாகப் போன லெப். கேணல் கலைவிழியின் அணி மிகவேகமாக, சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்களை அண்மித்துவிட்டிருந்தது. எனினும் கடுமையான அந்தச்சண்டையில் பலர் காயமடைய நேரிட்டது. காயமடைந்தவர்கள் தாமாக நகர்ந்து வெளியேறுவதற்கிடையில் மறுபடி மறுபடி எதிர்த் தாக்குதல்களைச் சந்தித்தனர். இயலாத காயத்துடன் தனது சுடுகலனையே நினைத்தபடி “எடுத்துக்கொண்டு வா, எடுத்துக்கொண்டு வா” என்று போர்க்களத்தைவிட்டு வெளியேறிய பின்பும் இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். எடுத்துவரக்கூடிய நிலையில் களத்தில் எவருமில்லை. இதே முன்னரங்கில் இதற்கு முன்னரும் சிறிலங்காப் படையினரின் கடுமையான முன்னகர்வை இசைநிலா திறமையுடன் எதிர்கொண்டிருந்தார். அப்போது அவர் பிகே.எல்.எம்.ஜி சுடுகலனின் சுடுநராக இருந்தார். தீச்சுவாலை – 01 என்று பெயரிட்டு சிங்களப் படையினர் செய்த மூன்று நாள் முற்றுகைச் சமரில் முன்னரங்கக் காப்ரண்கள் இரு தரப்பிடமும் மாறி மாறி கைமாறிக்கொண்டிருந்தன. எஞ்சி நின்று போராடிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பின்னரங்கிலிருந்து உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை. முகமாலைப் பகுதியில் துண்டாடப்பட்ட நிலையில் களமாடிக்கொண்டிந்த இரு அணிகளில் ஒன்றில் இசைநிலா நின்றார். பிகே.எல்.எம்.ஜியின் பொறுப்பாளரும் உதவியாளருமில்லாமல் தனித்து நின்ற இசைநிலாவிடம் மூன்று நாட்களும் ரவைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வீழ்ந்து கிடந்த சிங்களப் படையினரிடமிருந்து தேவையான ரவைகளை எடுத்துக்கொண்டிருந்தார். மேலதிகமான சுடுகுழல் ஒன்றைக்கூட சிங்களப் படையினரின் சுடுகலனிலிருந்து கழற்றிவைத்திருந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்த தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் மேலதிக ரவைக்கூட்டு அணியையும் கழற்றாமல் களைப்பை வென்று களமாடிய இசைநிலாவுக்கு இப்போது அதனிலும் பெரிய சுடுகலன் ஒன்றைவிட்டு வந்தது. நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது. காயத்தோடும் மனதோடும் போராடிய இசைநிலா 2006.08.16 அன்று மருத்துவமனையில் விழிமூடிப்போனார். லெப். கேணல் கலைவிழி போன கரையோரப் பாதைவழியே லெப். தமிழ்ச்சுடர் தனது உந்துகணை செலுத்தியுடன் போயிருந்தார். தேவையான இடங்களில் எதிரிக் காப்பரண்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இடையில் அதைக் கண்டார். அது கப்டன் இசைநிலா அணியினரின் 50 கலிபர் சுடுகலன். அந்த அணியினர் இழப்பைச் சந்தித்துவிட்டனர் என்பதை தமிழ்சுடர் புரிந்துகொண்டார். தன்னால் தனித்து அதைத் தூக்கிச் செல்லவும் முடியாது என்பதால் தகர்த்துவிட்டார். எமக்கு இல்லாதது எதிரிக்கும் இல்லாது போகட்டும். கடற்கரைப் பாதைவழியே முன்னிலை நோக்குனராக கப்டன் இசைநிலா போனார். அவர் திரும்பிய திசையெல்லாம் சிறிலங்காப் படையினரே தென்பட்டனர். காப்பரண்கள், குறுக்கு அகழிகள், அங்கே, இங்கே என்று சிறிலங்காப் படையினரைத் தான் கண்ட இடங்களின் ஆள்கூறுகளைக் கணிப்பிட்டு, எறிகணைசெலுத்தும் அணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். சிங்களப் படையினரின் தலைகளில் இடியாக எறிகணைகள் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. எனினும் மழைக்குச் சற்றுமுன்னர் புற்றிலிருந்து புறுப்பட்டுவரும் ஈசல்கள் போல படையினர் வந்துகொண்டிருந்தனர். அங்கே, இங்கே என்று எறிகணைகளை விழுத்திக்கொண்டிருந்தவரைச் சூழ இப்போது படையினர்தான் நின்றனர். தான் நிற்குமிடத்தைக் குறிப்பிட்ட இசைநிலா நிலைமையை விளக்கி, தன்னைப் பார்க்காமல் தான் நிற்குமிடத்துக்கு எறிகணைகளை வீசுமாறு கேட்டார். ‘ஓயாத அலைகள் – 02’ நடவடிக்கையின் போது கிளிநொச்சிக் களமுனையிலே லெப். கேணல் செல்வி எடுத்த அதே முடிவு. இப்போது எவரும் சொல்லாமலே இசைநிலா எடுத்தார். பரம்பரை தொடர்கின்றது. சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. கரையோரமாகச் சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்கள் அருகே கலைவிழி நின்றார். காயமடைந்த போராளிகளை உடனுக்குடனேயே பின்னரங்கிற்குப் போகுமாறு அனுப்பிக்கொண்டிருந்தார். நெருக்கடியான அந்தக் களத்தில் காவும் குழுவினர் வந்து காயக்காரரை அகற்ற வாய்பில்லை. இயலுமான காயக்காரர்கள், வீழ்ந்திருந்த தோழியரின் வித்துடல்களைச் சுமந்துபோனார்கள். கலைவிழியோடு கூடவே நகர்ந்த கப்டன் எழில்நிதிக்கு காயம் ஏற்பட்டது. மறுபடி மறுபடி காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை. நடந்துவரக்கூடிய எல்லோரையுமே கலைவிழி அனுப்பிவிட்டிருந்தார். களத்தைவிட்டுக் கலைவிழியையும் வெளியே வருமாறு கட்டளைமையம் பணித்தது. காயத்துடன் கிடந்த எழில்நிதியைத் தூக்கிக்கொண்டு தான் வருவதாகக் கூறிய கலைவிழி தன்னோடு நின்றவர்களையும் அனுப்பிவிட்டிருந்தார். சிங்களப் படையினரின் கடும் தாக்குதல் மத்தியில் எழில்நிதியை மீட்டுவர முயன்ற கலைவிழி வரவேயில்லை. ‘ஓயாத அலைகள் – 03’ நடவடிக்கையில் பரந்தன் களமுனையில் சூனியப் பகுதிக்குள் வீழ்ந்துகிடந்த மேஜர் மாதுரியின் வித்துடலை எடுக்காமல் வரமாட்டேன் என்று போய், வித்துடலாக வந்த லெப். கேணல் மைதிலியைப் போலவே லெப். கேணல் கலைவிழியும். தடங்கள்: மலைமகள். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (வைகாசி – ஆனி, 2007). https://thesakkatru.com/thadangkal-thodarkinrana/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா.... என் வாழ்வு வளம்காண கடைக்கண் பாரய்யா உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா..என் வாழ்வு வளம்காண கடைகண் பாரய்யா.. பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள்படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னை சேர்ந்துகொள்ள தேடுமே.. உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா.. என் வாழ்வு வளம் காண கடைகண் பாரய்யா தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண்குளிர கண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே... தென்பழனி மலைமேலே தண்டபாணி கோலத்திலே கண்குளிர கண்டுவிட்டால் போதுமே என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே. .. உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா... என் வாழ்வு வளம் காண கடைகண் பாரய்யா... ஆடிவரும் மயில்மேலே அமர்ந்து வரும் பேரழகே நாடி உன்னை சரணடைந்தேன் கந்தைய்யா....வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா..... உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலைய்யா ... என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா!!!!!!!!!