Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓதுவோம் வாருங்கள் ... லாயிலாஹ இல்லல்லாஹ் || இசை முரசு
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
முட்டை பிரியாணி
-
Imagine Dragons - Thunder
இது எப்படியிருக்கு தலைவி Sun up, hair down Glitter in gold Got my ladies by my side What you been told? Independent, gotta take pride, yeah ‘Coz I’m loving living my life, yeah World’s at my feet, Sari around my waist Working hard, not a hair out of place We don’t fit the rules we break ‘em, Fingers dripping in thangam We just having fun Cuz we number one Keep on fighting, ladies we already won — Thalaivi, show em how it’s done Tane Tana Tana Tane Tane Tana — You think I’m just a lady But don’t underestimate me Something more than just a body When the music elevates me I’m not bossy, I’m the boss Make my own way, I ain’t lost Brains and beauty, we can have it all Try to push me down but I won’t want fall _ Thalaivi, show em how it’s done Tane Tana Tana Tane Tane Tana Ladies side by side Be a ride or die If you feel it let me see your hands up high
-
Imagine Dragons - Thunder
Summer nights, Sea side, hey Red sun over low tide, hey Look inside of my eyes, hey Tell me what you see Days come and days go, by Drive fast, we live slow, I’min love, but dont know why, Tell me what could be… — Take your hand in mine [Aaja re] We’ll just take our time [Aaja re] Let’s be lost in the summer together Life is easier [Aaja re] O mere piya [Aaja re] If we’re lost in the summer For ever and ever — You know, you know I love it how we take things real slow I love it how we don’t need to show, The world ain’t gotta to know Standing on the edge I dive in, Are we underwater, breathing? Don’t you know you got me reeling I Can’t let you go — In the sunset There’s a moment After goodbye We’re still glowing
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வாயில் போட்டவுடன் கரைந்துவிடும் வாழைப்பூ சில்லி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வாயில் வைத்தவுடன் கரையும் சுலபமான பால் கொழுக்கட்டை செய்முறை
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இலகுவான முறையாக இருக்கு 👍
-
மலரும் நினைவுகள் ..
அது அந்தக்காலம் - இப்பத்த ரிக்கடுகள் எல்லாம் படு சுட்டிகள் 😂 ஆமா ... ஊதியை காணவில்லை 😀; பாக்கு வெட்டிஇலை ஊரில் இருக்கு அந்த இலைகளை வாயில் பிடுங்கி போட்டு வடலி குருத்தோலையையும் சேர்த்து சாப்பிட்ட அனுபவம் உண்டா, அது கிராமப்புற பீடா👍, அதன் பழங்களும் நல்ல சுவை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருமுறை : முதல் திருமுறை 116 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : மயிலை சற்குருநாத ஓதுவார் இப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூரில் பாடப்பெற்றிருந்தாலும் பாடல்களில் தலப்பெயர் சொல்லப் பெறாததால், இது தலப்பெயர் இல்லாத பொதுத் திருப்பதிகங்களுள் ஒன்று. கொடிமாடச் செங்குன்றூர் - இத்தலம் இக்காலத்தில் "திருச்செங்கோடு" என்று வழங்கப்பெறுகின்றது. அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (01) காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால் “ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம் தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (02) முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (03) விண்ணுலகு ஆள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் “புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (04) மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர் கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (05) மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (06) "இப்பதிகத்தில் எழாவது செய்யுள் சிதைந்து போயிற்று." கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம் செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (08) நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர் தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திருநீலகண்டம். ..... (09) சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும் பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம். ..... (10) பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான் இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண் திறம்பயின் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே. ..... (11)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மருளாடி அழைத்தோம் மாரியாத்தா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாரணத்தானை (விருத்தம்) - திருப்புகழ் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | அருளியவர் : அருணகிரிநாதர் | இசை : ராஜ்குமார் பாரதி | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக் வாரணத்தானை அயனை விண்ணோரை வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை துவச வாரணத்தானை துணைநயந்தானை வயலருணை வாரணத்தானை வாரணத்தானை துணைநயந்தானை வயலருணை வாரணத்தானை திறை கொண்ட யானையை வாழ்த்துவனே வாரணத்தானை திறை கொண்ட யானையை வாழ்த்துவனே வாழ்த்துவனே வாழ்த்துவனே . . . பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர கமுநீப பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய பெருமாளே அருள் வித்தகம ருப்புடைய பெருமாளே அருள் வித்தகம ருப்புடைய பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் Anupallavi பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு Saranangal 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் 3.பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு -- சீர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலகையாளும் ஈஸ்வரா ஓம்சக்தி ஈஸ்வரா அருள்மழையே ஈஸ்வரா அருணாச்சல ஈஸ்வரா ஒளிவடிவாய் காட்சிதரும் உயர்ந்தவன் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் கலிநடனம் புரிந்தவனே கயிலாய ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் நலம்வழங்கும் நாயகனே நான்வணங்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் தலம்வருவோர் வேண்டுவதை தருவபவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் குலம்தழைக்க செய்பவனே குறைத்தீர்க்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் நிலம் செழிக்க நீர்சொரியும் நீலகண்ட ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் உமையவளின் துணைவனே உனைப்பணிந்தோம் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் தவமிருந்தால் பெரும்பயனைத் தருபவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் சுமையெனவே வரும்துன்பம் தீர்ப்பவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் எமையாளும் ஒருதெய்வம் நீதானே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் எளியவரின் அன்புதனை ஏற்பவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் கலைபலவும் மண்ணுலகில் நிலை நிறுத்தும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் அணுவுக்குள் அணுவாக இருப்பவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் உனது அருள் இல்லாமல் எது நடக்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் கனவெல்லாம் நனவாக கைகொடுக்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் மனமுருக வேண்டிக்கொண்டால் மனமிறங்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் அனைத்துயிரும் வாழ்ந்திடவே அருள்கொடுக்கம் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் தனமுடனே நல்லறிவு தருபவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் பஞ்சபூதமானவனே பணிந்திடுவோம் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் அஞ்சிடுவோர் துயர்துடைக்கும் ஆண்டவனே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் நெஞ்சிலே குடியிருந்து நிழல் கொடுக்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் நஞ்சுதனை உண்டவனே நான் வணங்கும் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் வஞ்சகரின் மனம்தெளிய வைப்பவன் ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம் பஞ்சமுடன் பசிதீர்க்கும் பரம்பொருளே ஈஸ்வரா பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும் என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் .. முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும் முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும் தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும் மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான் செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான் சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான் சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான். கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர வேறோர் வலைச்சி வலை வீசிட நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சீதா கல்யாண வைபோகமே! ராமா கல்யாண வைபோகமே! பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா! கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா! (சீதா கல்யாண) பக்த ஜன பரிபால, பரித சர ஜால புக்தி முக்தி தலீல, பூதேவ பால தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்! இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்! (சீதா கல்யாண) பாமரா அசுர பீம, பரிபூர்ண காம சியாம ஜகத் அபிராம, சாகேத தாம அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்! அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்! (சீதா கல்யாண) சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர கர்வ மானவ தூர, கனக அக தீர பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்! சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்! (சீதா கல்யாண) நிகம ஆகம விஹார, நிருபம சரீர நக தர அக விதார, நதலோக ஆதார ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்! ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்! (சீதா கல்யாண) பரமேச நுத கீத, பவ ஜலதி போத தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே! தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே! (சீதா கல்யாண)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கரமு முளரியின் மலர்முக மதிகுழல் கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை கலக மிடுவிழி கடலென விடமென, மனதூடே கருதி யனநடை கொடியிடை யியல்மயில் கமழு மகிலுட னிளகிய ம்ருகமத களப புளகித கிரியினு மயல்கொடு, திரிவேனும் இரவு பகலற இகலற மலமற இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொருகுள பதமுற, மடலூடே யெழுத அரியவள் குறமக ளிருதன கிரியில் முழுகின இளையவ னெனுமுரை யினிமை பெறுவது மிருபத மடைவது, மொருநாளே சுரபி மகவினை யெழுபொருள் வினவிட மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு துயரில் செவியினி லடிபட வினவுமி, னதிதீது துணிவி லிதுபிழை பெரிதென வருமநு உருகி யரகர சிவசிவ பெறுமதொர் சுரபி யலமர விழிபுனல் பெருகிட, நடுவாகப் பரவி யதனது துயர்கொடு நடவிய பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு படிய ரதமதை நடவிட மொழிபவ, னருளாரூர்ப் படியு லறுமுக சிவசுத கணபதி யிளைய குமரநி ருபபதி சரவண பரவை முறையிட அயில்கொடு நடவிய, பெருமாளே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வெக்காளி அம்மனுக்கு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை ஹஜ்ஜுக் காட்சிக் கிணையாக உலகில் எதுவுமே இல்லை! தீனோர்கள் கூடு மிடம் திரு நபிகள் பிறந்த இடம் வானோர்கள் வாழ்த்தி நிற்கும் வல்லோனின் புனித இடம் இதயம் கவருமிடம் இன்பமெல்லாம் பொங்குமிடம் வதைக்கும் பாவமெல்லாம் ஓடி மறையும் ஒரே இடம் லட்சக் கணக்கில் மக்களையெல்லாம் அங்கே காணலாம் லட்சியத் தூதர் இப்றாஹீம் நபி தலத்தைக் காணலாம் தூய்மை நிறைந்த ஹஜ்ருல் அஸ்வத் கல்லைக் காணலாம் துன்பம் நீக்கும் ஜம்ஜம் கிணற்றை அங்கே காணலாம் அன்னை கதீஜா நாயகியாரின் கோட்டையைக் காணலாம்ளூ لَبَّيْكْ لَبَّيْكْ اَللّٰهُمَّ لَبَّيْكْ اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ لَبَّيْكْ لَاشَرِيْكَ لَكْ لَبَّيْكْ لَبَّيْكَ . தல்பியாவை முழங்கிக் கொண்டே வலம் வரும் கூட்டம் தன்மை ஓங்கும் இறைவன் அருளே அவர்களின் நாட்டம் கல் மனம் உருகும் துஆவைக் கேட்டு கண்ணீர்ப் பெருகுமே கல்பினில் பக்தி ஆகிய நூரே எழும்பும் எப்போதுமே காவலன் அல்லாஹ் நினைவு எழுந்து கவலையும் தீருமே –எல்லாக்(2) (لَبَّيْكْ) துல் ஹஜ் மாதம் எட்டாம் பிறையில் மக்காவில் இருந்தே துல்லியமான இஹ்ரா மென்னும் வெண்ணாடை அணிந்தே மினாவலிருக்கும் மஸ்ஜிதில் கைபில் கூடாரம் அடித்து மேன்மை வாய்ந்த ஐந்து வேளைத் தொழுகையை முடித்து மேதினில் போற்றும் தௌஹீத் நெறியை மேலாய் மதிப்பார்கள் ! (لَبَّيْكْ) அடுத்த நாளில் அரபாத் அடைந்து ஜபலர் ரஹ்மத்திலே அரும்பகல் கழித்து கண்ணீர் வடித்து துஆவும் ஓதியே அன்று இரவு மஜ்தலிபாவில் அனைவரும் தங்குவார் அருளாம் மக்ரிபு இஷாவும் தொழுது திக்ரும் முழங்குவார் அமைதியாகத் தொழுது முடிந்ததும் ஆயத்த மாகிடுவார்! (2) (لَبَّيْكْ) அடுத்து கல்லைப் பொறுக்குவார்கள் ஷைத்தானை விரட்ட அழகுறும் மினா சென்று அங்கே கூடுவார் யாவரும் எடுத்தக் கல்லை வீசி எறிவார் ஷைத்தான் மீதிலே இங்கித ஹாஜிகள் குர்பானிக் கொடுத்து தலை முடி நீக்கிடுவார் இஹ்ராம் என்னும் வெண்ணிறை ஆடையைக் களைந்திடுவார்களே! ( لَبَّيْكْ) அன்று மாலை மக்கா வந்து தவாபு செய்த பின்னே அழகிய ஸபர் மர்வா யென்னும் மலைக்கு இடையினிலே ஆர்வமுடனே ஏழு முறைகள் தொங்கோட்டம் ஓடியே மீண்டும் புனித மினாவுக்கு வந்து இரு தினம் தங்கியே மறுபடியும் கல்லை எடுத்து எறிவார் ஷைத்தானை நோக்கியே! لَبَّيْكْ அற்புதமான ஹஜ்ஜை முடித்த ஹாஜிகள் எல்லோரும் அன்று பிறந்தக் குழந்தையைப் போல பாவம் நீங்கிடுவார் நற் பயன் தந்திடும் கஃபா வந்து தவாபு செய்திடுவார் நாயன் அல்லாஹ்வின் கடமை முடித்த நன்மை எய்திடுவார் நிறைவு செய்த ரஹ்மானுக்கே நன்றிகள் கூறிடுவார் – மகிழ்ந்து (2) لَبَّيْكْ இறுதி கடமையை பூர்த்தி செய்த ஹாஜிகள் யாவரும் இதயந் தன்னில் தூய்மையான ஆர்வங் கொண்டவராய் மறை நபி முஹம்மது ரசூலுல்லாஹ்வின் மதீனா நகர்ச் சென்று மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபியை ஜியாரத் செய்திடுவார் மனங் கனிந்து கண்ணீர் வடித்து ஸலாமும் கூறிடுவார்! இதய ஸலவாத் ஓதிடுவார்! (2) யா நபி ஸலாம் அலைக்கும் யாரசூல் ஸலாம் அலைக்கும் யா ஹபீப் ஸலாம் அலைக்கும் ஸலவாத் துல்லாஹி அலைக்கும்! (நிறைவு)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் வல்ல
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சித்தி பொங்கும் சித்தம் தங்கும் சக்தி லிங்கமாய் தோன்றுகின்ற அண்ணாமலை உன்னை துதிக்க நாளும் நலம் நலமே அண்ணாமலையானே சிவமே அண்ணாமலையானே அண்ணாமலையானே சிவனே அண்ணாமலையானே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் வாழ்த்தவே அருளைபொழியும் ஜோதீசா ஆயிரம் ஆயிரம் அற்புதம் செய்யும் ஆதிலிங்கனே அருணேசா அக்னி லிங்க கோலம் காட்டும் அண்ணாமலையே அம்மையப்பனாக வாழும் அருணாசலனே அஷ்ட லிங்கம் ஆதி லிங்கம் ஜோதிலிங்கமாய் தோன்றுகின்ற அண்ணாமலை உன்னை துதிக்க நாளும் சுகம் வருமே அண்ணாமலையானே சிவனே அண்ணாமலையானே அன்பை ஏற்கும் உள்ளம் எல்லாம் அண்ணாமலை உண்ணாமுலை கோயிலன்றோ ஆவுடை மேலே ஆதரவாகும் அழகிய லிங்கம் நீ தான் அன்றோ அமைதி சேர்த்து துயர்கள் போக்கும் கருணை இறைவா உன்முகமே நினைத்த கணமே நிலை கொடுக்கும் நேசம் கொண்டது உன்பதமே தயைபுரிவாயே பெருமானே தமிழைக் கேட்கும் மலையானே ஆலயம் அசலம் அமரும் சிவமே அண்ணாமலை உண்ணாமுலை கோலமன்றோ அடியடியாக கிரிவலம் செல்ல ஐயனுன் அருளே துணையன்றோ அடிக்கு ஒன்றாய் அமைந்து காவல் அளிப்பதுந்தன் திருவுருவே அலைந்த உள்ளம் அமைந்து வாழ அன்பைப் பொழிவது பெருவரமே அனலைத் தாங்கும் பெருமானே நினைவில் என்றும் நிலை நீயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னையர் திலகமே... அண்ணல் நபி இதயமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா... மரணத்தின் தன்மை சொல்வேன்... மானிடர் ஆன்மா மரணமெய்தாது... மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ... என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்... துணிந்து நில் தர்மம் வாழ... ஆ... புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்... அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ... பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குழு : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் குழு : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் குழு : ஓம் பைரவ ருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய பிரசண்ட ருத்ராய தண்டருத்ராய சூர ருத்ராய வீரருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதலருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹா தலருத்ராய ராசதலருத்ராய தலதலருத்ராய பாதாளருத்ராய நமோ நமஹ: ஆண் : ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜே ஹம் குழு : ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜே ஹம் ஆண் : வீரபத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா குழு : சம்போ சம்போ ஷங்கரா ஆண் : ஆஆ ஹா ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் குழு : பஜே ஹம் குழு : ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் குழு : நமஹ சோமயா சா ருத்ராய சா நமஸ்தமராய சருணய சா நம ஷங்கயா சா பஷுபட்டாயே சா நம உக்ராய சா பீமாய சா நமோ அக்ரேவதாய சதுரே வதாய சா நமோ ஹந்த்ரே சா ஹனியசே சா நமோ வ்ருக்ஷேபியோ ஹரிகேசிபியோ நமஸ்தராய நமஸ்ஷம்பவே சா மயோபவேச்ச நமஷங்கராய சா மயஸ்கராய சா நமஷிவாய சா ஷிவதாரய சா ஆண் : அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா குழு : பூரண ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா ஆண் : வேத வேதார்த்த சாரா யக்ன யக்னோமயா குழு : நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சம்ரக்ஷனா ஆண் : சோம சூர்ய அக்னி லோச்சனா குழு : ஷ்வேதரிஷப வாஹணா ஆண் : சூலபாணி புஜங்க பூஷணா குழு : திரிபுர நாச நர்த்தனா ஆண் & குழு :யோமகேஷ மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த பரசு ஹஸ்த நமஹ பஞ்சவர்த்த பரசு ஹஸ்த நமஹ: ஆண் : ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர ரூபம் பஜே ஹம் குழு : பஜே ஹம் குழு : ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜே ஹம் பஜே ஹம் ஆண் : கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல திரிசூல தாத்ரம் ஆண் : சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம் ஆண் : நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜ பூர்ன போதஹம்ஹம் கத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்ன கஸோகம்ஹம்ஹம் ஆண் : சட்சித்ப்ரமானம் குழு : ஓம் ஓம் ஆண் : மூலப்ரமேயம் குழு : ஓம் ஓம் ஆண் : அயம் ப்ரம்ஹஸ்மி குழு : ஓம் ஓம் ஆண் : அஹம் ப்ரம்ஹஸ்மி குழு : ஓம் ஓம் குழு : கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரகி குழு : டம டம டம டம டும டும டும டும சிவடமருக நாத விஹரகி ஆண் : ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர ரூபம் பஜே ஹம் பஜே ஹம் ஆண் : ரூ கருணா மாயோ சகா ஆண் : அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா குழு : பூரண ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா ஆண் : வேத வேதார்த்த சாரா யக்ன யக்னோமயா குழு : நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சம்ரக்ஷனா ஆண் : சோம சூர்ய அக்னி லோச்சனா குழு : ஷ்வேதரிஷப வாஹணா ஆண் : சூலபாணி புஜங்க பூஷணா குழு : திரிபுர நாச நர்த்தனா ஆண் & குழு :யோமகேஷ மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த பரசு ஹஸ்த நமஹ ஆண் : { ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் குழு : ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம் } (2)