Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலே குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ... நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன் என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா - 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய் உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிது கயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமே கையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா - 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்ல நான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் காணும் வரையில் தாகமில்லை எனக்கந்த தண்ணீர் ஐயா தாரும் ஐயா பெருந்தாகம் தீர்ந்துவிடும் என்றால் ஐயா இடுப்பொடிய வேலை இல்லை - 2 தருகின்றேன் பெண்ணே நீயும் உன் கணவன் இங்கு வரவே அழைத்து வந்து காண வேண்டும் அக்கணமே நான் தருவேன் மனம் திறந்து சொல்கின்றேன் எனக்கோ கணவனும் இல்லை உம்மிடம் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா - 2 எல்லாம் சரிதான் பெண்ணே ஐந்து கணவர் வாழ்ந்தார் இருப்பவனும் கணவன் அல்ல ஏதுமில்லா பெண்தான் நீ தலைவா நீர் ஞானி ஐயா நற்றொழுகை புரிந்திடவே நீங்கள் சொல்லும் எருசலேமே நிலையான இடமா ஐயா - 2 தலைவனையே தொழுவதற்கு இடமா வேண்டும் பெண்ணே ஓங்கிவரும் ஆவியிலும் உத்தமனை தொழுதிடலாம் பாவத்தை தீர்ப்பதற்கு இயேசுபிரான் வருகின்றார் நேசமகன் வருகின்றபோது அனைத்தையுமே சொல்லிடுவார் - 2 நேசமகன் அந்த இயேசு நாயகன் நானே பெண்ணே பாவங்கள் தீர்க்கவல்ல பாசமகன் நான் பெண்ணே வியக்கின்றேன் வியக்கின்றேன் ஐயா விந்தைமிகு இயேசுதேவ ஊருக்குள்ளே விரைகின்றேன் நான் உன்மையை சொல்லிடவே - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வீதியிலே முளைக்கின்ற புல்லுக்கு விதை தந்தோன் யாரறிவீர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
520 காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்புகழ் அமிர்தம் - திரு அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய கந்தர் அநுபூதி பாடியவர் : பழனி K வெங்கடேசன் மிருதங்கம் : திருவண்ணாமலை T M சிவகுமார் வயலின் : Dr. D பத்ரி நாராயணன் முகர்சிங் : மதுரை V திருமுருகன் வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் கடவுள் : முருகன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன், வடிவேலன், சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் விஜய் மியூஸிக்கல் குருவாக வந்து அருளினான் கந்தன் ------------------------------------------------------------------------------ உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. ======================================= பாடல்கள் : பாக்கரைவி சித்திரமணி மனக்கவலை யேதுமின்றி அரையாடை இன்றி அதலசேடனாராட விறல்மாரனைந்து தரணி தனில் அண்டர்பதி குடியேற அரோகரா அரோகரா சேல்பட்டு அழிந்தது நாடா பிறப்பு முடியாதோ நாளென் செய்யும் சிவனார் மனங்குளிர தெய்வத் திருமலை அதிருங்கழல் பணிந்து மாணிக்க நிறை கங்கையாடி வசனமிக வேற்றி உன்னைத்தவிர மற்றொன்று பழனிமலை முருகன் கந்தர் அனுபூதி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாற்கடலில் அவதரித்த || திரிசக்தி || நித்யஸ்ரீ மஹாதேவன் || அம்மன் பாடல்கள் || விஜய் மியூஸிக்கல்ஸ் || இயற்றியவர் : K V ஸ்ரீதரன் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல் பாடல்வரிகள் || LYRICS : பாற்கடலில் அவதரித்த லக்ஷ்மியே பாதம் நீட்டி உலகலந்தான் தேவியே திருவேங்கடமால் பெருமாள் மதியே அகலாதிருக்கும் அலர்மேல் மங்கையே பத்மாசனி ஜெயஜானகி ஹரிமாதவன் துணையே திருவாய் மலர்வாய் அருள்வாய் நின்தாழ் சரணம் அம்மா . . . நின்தாழ் சரணம் . . . அம்மா . . . நின்தாழ் சரணம் . . . மங்கள மாங்கல்யம் சௌபாக்யமே தந்திட மணிதீப விளக்கேற்றினேன் மஞ்சள் குங்குமத்தால் அருளாசியே தந்திட வந்தருள்வாய் நவராத்திரியே பொன்மலை பொழிந்தாயே புகழ்காஞ்சி உமையே கோலாசுரசம்ஹாரிணி பெரும்தேவியே கண்பார்வை பொதுமம்மா கஜலக்ஷ்மியே காலமெல்லாம் வாழ்ந்திருப்போம் உன்னை நம்பியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2) நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காண்பேன் - (2) 1. பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் உன்னை தினமே - (2) அற்புதங்கள் நான் செய்திடுவேன் - (2) உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் - (2) 2. திகையாதே கலங்காதே மனமே – நான் உன்னுடனிருக்க பயமேன் - (2) கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - (2) கவலைகள் யாவையும் போக்கிடுவேன் - (2) 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் - (2) அத்திமரம் போல் செழித்திடுவாய் - (2) நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் - (2)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலம் பல சென்றாலும்...கண்கள் மழை பெய்தாலும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மதினா எங்கள் தலைமையகம் மக்கள் விரும்பு இடம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்ல பதிவு. ஊரைவிட்டு வரும் வரை உடல் உழைப்பால் சுவைத்த உணவு, இப்ப எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சுவைக்கவில்லை அந்தே நேர சுவை மாதிரி. பசித்திருந்து சாப்பிட்டேன் வேலை செய்துவிட்டு அமிர்தமாக இருந்திச்சு
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கருவாட்டு குழம்பு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அமலனாதிபிரான் | இசைத்தொகுப்பு : நித்யானுசந்தானம் | திருப்பாணாழ்வார் | பாராயணம் : மாலோல கண்ணன் & ரங்கநாதன் | அமுதம் மியூசிக் பாடல் வரிகள் : ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம் மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம் காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி தேட்டரு உதருபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய் வாட்டமில் கண்கள் மேனி முனியேறித்தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பானர்தாள் பரவினோமே அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதில் அரங்கத்து அம்மான் திருக்கமல பாதம் வந்து என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்சிவந்த ஆடையின் மேல் சென்றதுஆம் என சிந்தனையே மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் உந்தி மேலதுஅன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன் மதுரமா வண்டு பாட மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான் திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே பாரமாய பழவினை பற்றுஅறுத்து என்னைத்தன் வாரம்ஆக்கி வைத்தான் வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான் கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேய அப்பன் அண்டர் அண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே கையினார் சுரி சங்கனல் ஆழியர் நீள்வரை போல் மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடியெம் ஐயனார் அணிஅரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்து கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரிஓடி நீண்டவப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றுஒன்றினைக் காணாவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமாந் காம காமா ய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம: வருக வருக திருமகளே வருக தனம் தருக தருக மங்களங்கள் பெருக குபேர லக்ஷ்மியே வருக எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக எங்கள் குலம் விளங்க குங்குமமே தருக யக்ஷ ராஜன் மெச்சும் மோஹினி பக்ஷி ராணி எனை ரக்ஷிப்பாய் நீ கட்சி வரதனின் கனகவல்லியே கச்சவ கர்வநிதி தாரும் அன்னையே மட்சயவதாரனின் பாற்கடல் தன்னையே துளியும் பிரியாத மட்சியகன்னியே குறையா செல்வமே கோடி உண்டு உன்வசம் வருகை தருவதற்கு அன்பு உண்டு என்னிடம் அளிக்க சுமங்கலியே வா மஹா பத்மநிதி பதுமநிதி தா கோலக் கண்ணனின் கோதை ராதையே குந்தமுகுந்தநிதி சிந்து பாவையே எழவர் குழலே அலர்மேல் மங்கையே ஏழு பிறவிக்கும் நீங்காது என்னையே கோசை சங்கநிதி மஹாலக்ஷ்மி சீதனம் ஆச குழந்தை மீது பார்வை வீசு சீக்கிரம் நீல நிதியும் நீயே நித்தய ஸ்ரீநிதியே சிந்தாமணியே
-
மேஜர் ஜொனி
மேஜர் ஜொனி அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை… எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள். இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம். வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான். ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது. எதிர்பாராத தாக்குதல் – கண்ணிமைப்பொழுதிற்குள் அவன் செயற்பட்டான். தன்னைப் பிடிக்க வந்த படையினர் மீது வண்டியைத் தூக்கி வீசினான்; அருகில் பதுங்கியிருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசினான். தப்பி விடுகிறான் ஜொனி. இந்தச் சம்பவத்தில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இப்படியாக அந்த ஊரில் ஜொனி அரசியல் வேலை செய்த நாட்களில் அடிக்கடி இந்தியப் படையினரைச் சந்தித்திருக்கிறான். அவை ஒவ்வொன்றும் மயிர்க்கால்களைக் குத்தி நிமிர வைக்கும் சம்பவங்கள். அப்போதெல்லாம் அவன் ஒரு புலிவீரனுக்கே இருக்கக்கூடிய சாதுரியத்துடன் தப்பிவிடுவான். அந்த ஊரில் மிகவும் நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில், கடினமான ஒரு சூழ்நிலைக்குள் நின்று அவன் போராட்டப் பணிகளை ஆற்ற வேண்டியிருந்தது. இந்தியப் படையினரும், இந்திய அடிவருடிகளும் எங்கும் நிறைந்திருந்த அந்த நாட்களில் கிராமங்களிலோ, நகரங்களிலோ அரசியல் வேலை செய்வதென்பது ஒரு சுலபமான காரியமாக இருக்கவில்லை. காடுகள், ஆறுகள், குளங்கள், வயல்வெளிகளினூடாக மைல் கணக்கான தூரங்களிற்கு அவனது கால்கள் நடக்கும். தனது பொறுப்பாளர்களால் ஒப்படைக்கப்படும் வேலைத் திட்டங்களை, இவ்வாறாகச் சிரமப்பட்டுத்தான் அவன் செவ்வனே செய்து முடிப்பான். கருதப்பட்ட முறிப்பு என்ற அந்த ஊர், எங்களது போராளிகளின் அணிகள், பொருட்கள், ஆயுதங்கள், ஆவணங்கள் என்பவற்றோடு முக்கிய தகவல்களையும் பரிமாறுகின்ற பிரதான இடங்களுள் ஒன்றாக இருந்தது. போராட்டத்தின் பெறுமதிமிக்க இவ்வகையான வேலைகளுக்காக, இந்த ஊருக்கு வருகின்ற போராளிகளை ஜொனி மிகுந்த இடர்களுக்கு நடுவில் பாதுகாத்துப் பராமரித்திருக்கிறான். இந்தியர்கள் வளைத்து நிற்கும் போதே கிராமத்துக்குள் நுழைந்து, போராட்டக் கருத்துக்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டோ, பிரசுரங்களை விநியோகித்துவிட்டோ மிகச் சாதுரியமாகத் தப்பி, அவர்களின் முற்றுகைக்குள்ளிருந்து ஜொனி வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு. மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் எனச் சமூகத்தின் எல்லா மட்டத்தினருக்குள்ளும் நுழைந்து, ஜொனி போராட்டக் கருத்துக்களை விதைத்தான். இதன்மூலம் இளைஞர்களையும், பெண்களையும் பெருமளவில் போராட்டத்தோடு இணைத்தான். 1989 ஆம் ஆண்டு எமதுதேசம் மாவீரர் நாளை முதற்தடவையாக அனுஸ்டித்த போது, கருப்பட்ட முறிப்புப் பகுதியில் அதனைச் சிறப்பாக நடத்தினான். தம்மை நோக்கி இந்தியர்களின் துப்பாக்கி முனைகள் நீண்டிருந்தபோதும், அந்த மக்கள் உணர்வுபூர்வமாக அந்நாளை அனுஸ்டித்தனர். அந்த அளவுக்கு ஜொனி அவர்களோடு இரண்டறக் கலந்து, அவர்களைப் போராட்டத்தின்பால் ஈர்த்திருந்தான். அவனையும், தோழர்களையும் ஆபத்து நெருங்கி வந்த பல சந்தர்ப்பங்களில், அவன் நேசித்த இந்த மக்கள் தான் அவர்களுக்குக் கவசமாக நின்றிருக்கின்றார்கள். 1990 இன் ஆரம்பம். இந்தியர்கள் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இவனது திறமையான செயற்பாடு காரணமாக இவன் மல்லாவிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். போர் நின்றிருந்த அந்த நாட்களில் மக்களிடையில் அரசியல் வேலைத்திட்டங்கள் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது, ஜொனி அவ்வேலைகளைச் சிறப்பாகச் செய்துடித்தான். கிராம அபிவிருத்தி வேலைகள், சிறுவர்களுக்குக் கல்வி வசதிகள் செய்தல், பெண்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் என இவனது செயற்பாடுகள் வளர்ந்தன. அந்த நாட்களில் சின்னக் குழந்தைகள் முதல் ஆச்சி அப்புவரை, மக்கள் ஒவ்வொருவரோடும் இவன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தான். அவர்களால் என்றுமே ஜொனியை மறந்துவிட முடியாத அளவுக்கு அது இருந்தது. 1990இன் நடுப்பகுதி. சிறீலங்காப் படையினருடன் இரண்டாவது ஈழப் போர் ஆரம்பித்தது. சண்டைக்குப்போக வேண்டும் என்ற ஜொனியின் ஆவலைப் பூர்த்திசெய்யும் களமாக, அது அமைந்தது. மாங்குளம் இராணுவ முகாம்மீதான முதலாவது தாக்குதல் தொடுக்கப்பட்டது. எனினும்இ வெற்றியீட்டமுடியாமல் போய்விட்ட அந்தத் தாக்குதலின் போது, ஜொனி காலில் காயமடைந்தான். காயம் மாறி, வட்டக்கச்சிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருந்த போதும், ‘என்றைக்காவது ஒரு நாள் இந்த முகாமை நிர்மூலமாக்கியே ஆகவேண்டும்.’ என்ற வேட்கையே, அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அந்த நாளும் வந்தது. இரண்டாவது தடவையாகவும், இறுதியானதாகவும் மாங்குளம் இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஜொனி பெரும் பங்காற்றினான். அந்தத் தாக்குதலின் வெற்றி ஜொனியைப் பூரிப்படைய வைத்தது. இந்தத் தாக்குதல் முடிந்து சிறிது காலத்தின்பின், அவனது நீண்டநாள் கனவு நனவானது. அரசியல் வேலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு அவன் சமர்முனைக்கு அனுப்பப்பட்டான். அந்த நாட்களில் அவனைக் காண்கின்றபோது ஓர் ஆத்மதிருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஒரு சின்னக்குழந்தை மிகமிக ஆசையோடு எதிர்பார்த்த ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும் போது, அக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்வோடு, அவன் சண்டைக் களங்களில் உலாவினான். எவ்வளவு ஆர்வத்தொடும் திறமையோடும் அவன் அரசியல்துறை வேலைகளைச் செய்தானோ, அதைவிட அதிக ஆர்வத்தோடும் அவன் படைத்துறை வேலைகளில் ஈடுபட்டான். அரசியல் வேலைகளைச் செய்யும்போது, ஒரு சிற்றூர்ப் பொறுப்பாளனாக இருந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக வளரும் அளவுக்கு அவனுள் இருந்த ஆற்றல், சண்டைகளின் போதும் வெளிப்படத் தவறவில்லை. நீண்டகாலமாக அரசியல் வேலை செய்துகொண்டிருந்த அவனுக்கு, அந்தச் சண்டைக்களங்கள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. போர் அரங்கிலே ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நின்று…… ஓய்வின்றி உறக்கமின்றி அவன் போரிட்டான். ஜொனி 1969ஆம் ஆண்டு, ஓகஸ்ட் திங்கள் 19ஆம் நாள் பிறந்தான். அப்பாவும் அம்மாவும் இவனுக்குச் செல்லமாக இட்ட பெயர் ஜெகதீஸ்வரன். குடும்பத்தில் 3 ஆண்களும் 4 பெண்களுமாக 7 உடன்பிறப்புகளுக்குப் பின்பு, இவன் பிறந்தான். இவனுக்குப் பின்பு ஒரு தங்கை. எவருடனும் அதிகம் பேசாத சுபாவமுடைய ஜொனி, ஆடம்பர வாழ்வு முறைக்கும் புறம்பானவனாக இருந்தான். மீசாலை இவனது ஊர். வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற இவனுக்கு, சமூகத்திற்குச் சேவை செய்ய வெண்டும் என்ற சிந்தனையும், ஆர்வமும் இயல்பாகவே இருந்தன. சின்ன வயதிலிருந்தே பொது வேலைகளில் ஈடுபடுவான். மீசாலையின் புழுதி படிந்த தெருக்களில், வயல் நிலங்களில், தோட்ட வெளிகளில்…… எங்கும் அவனது சேவை பரந்திருந்தது. பாடசாலையில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் திறமைமிக்கவனாக ஜொனி இருந்தான். அங்கு மாணவர் தலைவனாக இருந்த அவன், திறமையான செயற்பாடுகளுக்காகப் பரிசுகளும் பெற்றிருக்கிறான். இந்திய இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருந்த அந்தக் காலம், இவனுக்குள் ஒரு புயலையே வீசச் செய்தது. இயல்பாகவே மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சுபாவமுடையவனாக இருந்த ஜொனி, அன்றைய நெருக்கடியான நாட்களில், ஊரில் எமது போராளிகளுக்கு உற்ற துணையாக நின்றான். வீட்டாரிற்கும் வெளியாட்களுக்கும் தெரியாமல், மறைமுகமாக இயக்கத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த ஜொனி, 1989 இன் முற்பகுதியில் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டான். இரணைமடுவில் வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய இவனுக்கு, எல்லாப் புலிவீரர்களுக்கும் இருப்பதைப் போல, சண்டைக்குப் போகவேணும் என்ற ஆசை இருந்தது. ஆனாலும், இயக்கம் அரசியல் வேலைகளை வழங்கியபோது, திறமையுடன் அதனைச் செய்யத் தொடங்கினான். எங்கள் தேசத்தில்இ 1991 ஆம் ஆண்டின் சிறப்பான நிகழ்வு அதுதான். ஆனையிறவுப் பெருஞ்சமர்…… அந்த நீண்ட சண்டைகளின்போது, ஜொனி உயிர்த்துடிப்புடன் களங்களில் போரிட்டான். அந்தச் சமரின் இறுதி நாட்களில் ஒன்று. ஒரு மாலை நேரம்; ஐந்து மணிப் பொதுழு. எங்கள் காவலரணிற்கு வந்த ஜொனி எம்மோடு மகிழ்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் அன்பான உரையாடல். நேரம் போனதே தெரியவில்லை. இருண்டுவிட்டதால் தனது காவலரணிற்குப் போவதற்காக எழுந்தான். தட்டுவன்கொட்டிப் பகுதியில் இவனது அரண்கள் இருந்தன. அப்பகுதியின் பொறுப்பாளனாகவும் இவன்தான் இருந்தான். எழுந்தவன், திரும்பிச் சொன்னான்…… “என்ர பொயின்ரைக் கடந்து ஆமி வாறதெண்டால் என்ர உடம்புக்கு மேலாலதான் வருவான்” அவன் சொல்லிவிட்டுப் போனபோது நாங்கள் எவருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று இரவு கடந்து மறுநாள் விடிந்து விட்டது. நேரம் ஓடியது. காலை 11 மணியை நெருங்கியபோது விமானங்கள் இரைய, குண்டுகளை அதிரச் சண்டை தொடங்கிவிட்டது. ஜொனியின் காவலரண் பகுதியை நோக்கி படை நகரத்துவங்கியது. வானிலிருந்து குண்டுகள் பொழிய, எறிகணைகள் கூவிவர, கனரக வாகனங்கள், கனரன ஆயுதங்கள் சகிதம் எதிரி மெல்லமெல்ல முன்னேறினான். அது ஒரு கடுமையான மூர்க்கத்தனமான சண்டையாக இருந்தது. தங்களில் சிலர் பிணங்களாய்ச் சரிய, எதிரி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தான். அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை. இன்றுவரை அவன் வரவேயில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல ஆனால், அவனோடு பழகிய அந்த இனிய நாட்களின் நினைவுகள் என்றும் எம்மோடு பசுமையாய் வாழும். இந்த இலட்சியப் பயணத்தில் அவனது நினைவுகள், எம்மோடு துணையாய் வரும். நினைவுப்பகிர்வு: நிமால். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை 1993), காலத்தில் இதழ் (22.10.1993). https://thesakkatru.com/mejor-jhoni/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல் பாடல் : சிவபுராணம் D V ரமணி இசை : சிவபுராணம் D V ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் காந்தார பஞ்சமம் திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் # ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு விட்டு கொடுக்காத பேரழகு உயர் மலையோ # உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு நிகர் இல்லாத தகப்பனுக்கு உயர் மலையோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன் பெயர் தாங்கி ஒவ்வொரு செயலையும் நாங்கள் தொடங்க வேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
(“தானா தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்) பாடல் எண் : 1 பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 2 கீளார் கோவணமுந் திரு நீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலை வாஎனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாடல்: புல்லாய் பிறவி தர வேணும் பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடியவர்: சுதா ரகுநாதன் ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி . பல்லவி : புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்…. அனுபல்லவி : புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால் கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா, கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம், புலகித முற்றிடும் பவ மத்திடுமென சரணம் : ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே மரு கணம் நான் உயர்வேன் மென் மேலே திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே, திருமகளென மலரடி பெய்துன்னை தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே, திசை திசை எங்கினும் பரவிடும் குழலிசை மயங்கி வரும் பல கோபியருடனே சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும், ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும், திளைப்பிலே வரும் களிப்பிலே, எனக்கு இணை யாரென மகிழ்வேனே ! தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா, தனித்த பெரும் பேரு அடிவேனே, எவ்வுயிர்க்கும் உள் கலக்கும், இறைவனே யமுனைத் துறைவனே எனக்கு ஒரு புல்லாய்…
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருச்செந்தூர் இது திருச்செந்தூர் நீலக் கடல் அலைகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆ ஆரோ ஆரோ ஆரோ ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் தாங்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா – இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்க வா வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உயிருக்கு நீ உயிர் அல்லவா
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கை முறையில் சுவையான மில்க் ரொஃபி | Milk Toffee Recipe in Tamil | SARNI Home Kitchen மில்க் ரொஃபி செய்வதற்கு தேவையான பொருட்கள்: ரின் பால் - 400g (397g) சீனி - 150g மாஐரின் - 1 தே.கரண்டி வனிலா - 1 மே.கரண்டி ஏலக்காய் தூள் - 1/4 தே.கரண்டி தண்ணீர் - 1/4 தம்ளர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆத்தாடி பிறந்தாச்சு ஆடி மாசம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சக்தி ஓம் சக்தி, தாயே ஓம் சக்தி