Everything posted by உடையார்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
நெருப்பாகி நெருப்பாகி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சஞ்சலம் தீர்க்கும் சந்நிதியே: சந்நிதி முருகன் பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எது வேண்டும் உனக்கு இறைவா/சுவர்ணலதா/காணிக்கைப்பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அல்லாஹ்வை நாம் தொழுதால்
-
கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும்
கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும் 31 Views எமது விடுதலை அமைப்பின் அத்திவாரம் போடப்பட்ட போது ரவீந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவரின் ஆழுமையும் அறிவும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் எல்லா மூத்த உறுப்பினர்களும் அவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர். முதல் மாவீரரான சங்கரின் அயல் வீட்டினரும் நெருங்கிய நண்பருமான பண்டிதர் வசதி படைத்த குடும்பத்தில் பிறக்காவிடினும் தமிழ் மக்களின் விடுதலைக்காக நேர்மையுடனும் கடமை கண்ணியத்துடனும் செயற்பட்ட ஒரு சிந்தனையாளர். நான் பண்டிதர் என்ற உயர் சிந்தனை கொண்டவரை 1981 ஆரம்ப காலங்களில் சந்தித்த போது மிகவும் பயத்துடனேயே சந்தித்தேன். அந்த முதல் சந்திப்பிலேயே அந்தப் பயம் முற்றாக நீங்கி விட்டிருந்தது. தெத்திப்பல், அமைதியான பேச்சு. புன்சிரிப்பு, புலிகளின் உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்ற எமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட எளிமையான மிகச் சாதாரண மனிதராகவே அறிமுகமாகி அவ்வாறே வாழ்ந்தார். பின்பு அவரை கல்வியங்காட்டிலிருந்த நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தில் அநேகமாக ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சந்திப்போம். பல இளையவர்களை எமது போராட்டத்தில் இணைப்பதற்காக பண்டிதரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். பண்டிதரால் துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கின்ற பணியும் என்னிடம் தரப்பட்டது. அப்போது எமது இயக்கத்தில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்கள் பெருமையாக மகிழ்வதைப் பார்க்கின்ற போது துண்டுப் பிரசுரங்களை வழங்குகின்ற எமக்கும் பெரிய மகிழ்வாக இருக்கும். பண்டிதர் வல்வெட்டித்துறை வந்து மீண்டும் யாழ் செல்லும் போது மண்டான் என்ற சிறிய கிராமம் வழியாக சிறிய ஆற்றைக் கடந்து கப்பூது என்ற சிறிய கிராமம் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்போது ஆற்றின் நீரைக் குடித்து தமிழீழம் கிடைத்த பின்பு இந்த ஆற்றைப் பாதுகாப்பதும் கப்பூது கிராமத்தை மையமாகக் கொண்டு அனைத்து வசதிகளுடனும் பெரு நகரமாக மாற்ற வேண்டும் என்பதையும் ஆற்றையும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டுமென்ற தனது கனவையும் சொல்லிக் கொண்டே வருவார். காலம் இப்படியே ஓட 1983 யூலை மாதம் திருநெல்வேலியில் எமது இயக்கத்தின் மிகப் பெரிய இராணுவத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள இனவெறியின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடியது. திருப்பித்தாக்க வேண்டுமென்ற உணர்வே வயது வேறுபாடின்றி எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது. மிகவும் இரகசியமாகவே செயற்பட்ட எமது இயக்கத்தில் சேர வேண்டுமென்று ஓடித் திரிந்தார்கள். எமது விடுதலை இயக்கம் என்று நம்பி மாற்று இயக்கங்களில் சேர்ந்தவர்களும் ஏராளம். ஒருநாள் அவசரமாக என்னை சந்தித்து இந்தியாவுக்கு புறப்படுவதற்குத் தயாராகுமாறு கூறினார். நான் அறிமுகப்படுத்திய பலர் பண்டிதருடன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீட்டில் காத்திருந்தார்கள். அன்றிரவே நாம் அனைவரும் இந்தியாவுக்குப் புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன்னர் பண்டிதர் பயிற்சி முடிந்ததும் நீ உடன் தாயகம் திரும்ப வேண்டுமென அன்புக் கட்டளையிட்டு வழி அனுப்பி வைத்தார். கார்த்திகை மாதம் இமயமலைச் சாரலிலுள்ள இந்திய இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து பங்குனி மாதம் றஞ்சன் லாலா, புலேந்திரன், சந்தோசம் மாஸ்ரர், பார்த்தீபன் என மேலும் பலர் தாயகம் திரும்பினோம். இருநாளிலே பண்டிதரைச் சந்தித் தேன். அந்நாட்களில் தமிழீழத்துக்கு பிரதித் தலைவராக பண்டிதர் தான் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவத்தின் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பண்டிதரும் கிட்டரும் என்னை வடமராட்சி வல்வெட்டித்துறைக்கே போகுமாறுகூறிய போது முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டேன். நான் வடமராட்சி சென்று எனது போராட்ட வாழ்க்கையை பொலிகண்டியில் பதினொரு உறுப்பினர்களோடே ஆரம்பித்தேன். எமக்கு மூத்த உறுப்பினர் றஞ்சன் லாலா பொறுப்பாளராகவும் மேஜர் கணேஸ் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார்கள். அந்நாட்களில் பண்டிதர் எம்மிடம் அடிக்கடி வந்து தங்கி விட்டுச் செல்வார். ஆஸ்துமா நோயாளியான பண்டிதருடைய மருந்துப் பொருட்களும் இன்ன பிறவும் என்னிடம் தரப்பட்டிருந்தது. அத்தோடு பண்டிதர் வரும்போதெல்லாம் அவருக்கான அனைத்தையும் செய்து கொடுக்கின்ற பணியும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. தமிழீழத்தில் செய்யப்படுகின்ற அனைத்து வேலைகளுக்கும் பண்டிதர் பொறுப்பானதால் அனைத்தையும் எழுத்து வடிவிலேயே வைத்திருந்தார். எல்லாவற்றிக்கும் கணக்கு வைத்திருந்தார். யார் எந்த மாவட்டத்தில் செயற்பட வேண்டும் எந்தப் பொறுப்புக்களை யாரிடத்தில் கொடுக்க வேண்டுமென்பதில் மிகவும் நிதானமாகவே முடிவெடுப்பார். எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேலைத்திட்டம் எம்மிடம் வந்து போகின்ற அனைத்து இராணுவப் பொருட்களையும் எமது இரகசிய உதவியாளர்கள் மூலம் களஞ்சியப்படுத்திப் பாதுகாப்பதே. பண்டிதரே நிதிக் கையாள்கைகளையும் மேற்கொண்டதால் ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அவரிடம் வந்து கணக்குக் காட்டியே மேலதிக நிதிகளைப் பெற்றுச் செல்வார்கள். அந்த விடயத்தில் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். மூத்த தளபதிகள் உட்பட பலர் வெளியே காத்து நின்று கணக்குக் காட்டிச் சென்றதும் இப்போதும் போல் நினைவில் உள்ளது. பாரபட்சமில்லாத அவரது நிர்வாகத் திறமை கண்டு நான் பல வேளைகளில் வியந்ததுண்டு. குறுகிய காலத்திலேயே இயக்கம் விரிவாக்கம் கண்டிருந்தது. அரசியல் வேலைத் திட்டமும் எல்லா ஊர்களிலும் விரிவாக்கம் பெற்றிருந்தது. இராணுவத் தாக்குதல்கள் சிறிது சிறிதாக முன்னேற்றமடைய ஆரம்பித்தன. எமது மக்களுடைய பூரண ஆதரவும் அரவணைப்பும் எமது வளர்ச்சிக்கு மெருகூட்டின. எமது மக்களே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பை எடுத்து விட்டிருந்தார்கள் என்றே கூற வேண்டும். எமது உறுப்பினர்களில் அக்காவும் தம்பியுமாக இருவர் நீர்கொழும்பிலிருந்து வந்து இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பண்டிதர் கொழும்பு சென்று வந்த காலமும் உண்டு. அவர்களில் தம்பிக்கு என்னைப் போன்ற வேலைத்திட்டமும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தனை நம்பிக்கையானவர். 1984 மார்கழி மாதம் கடைசியில் வேலைத்திட்டமாக கொழும்புக்கும் பின்னர் நீர் கொழும்பில் அவர்களது வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். தற்செயலாக அவர்கள் இருவரும் அயலவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு இராணுவத்தினரால் குடும்பமாகவே கைது செய்யப்பட்டார்கள். இராணுவத்தின் சித்திரவதைகளால் பண்டிதருடைய அச்சுவேலி முகாமும் புத்தூரில் எமது ஆயுத களஞ்சியக் கிடங்கும் காட்டிக் கொடுக்கப்பட்டது. பண்டிதருடைய அச்சுவேலி முகாம் 1985 தை மாதம் 9ஆம் திகதி அதிகாலை முற்றுகையிடப்பட்டது. தன்னுடனிருந்த போராளிகளைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் சமரிட்டே பண்டிதர் உட்பட ஆறுபேர் வீரச்சாடைந்தார்கள். அதில் எமது மூத்த உறுப்பினர் புலேந்திரன் உட்பட பத்துப் பேரளவில் தப்பித்திருந்தார்கள். இலங்கை அரசுக்கு பெரிய வெற்றியாக பண்டிதருடைய உடலை தொலைக் காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். கைப்பற்றிய ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திடமே அப்போது இருக்கவில்லை. பண்டிதருடைய முகாம் முற்றுகையின் முதல் நாள் கூட அச்சுவேலி சென்றிருந்தேன். அந்தக் காலங்களில் எமக்கு தொலைத் தொடர்பு வசதிகள் இருக்கவில்லை. நாம் பயணம் செய்து தான் எதனையும் செயற்படுத்தியிருந்த காலம். பண்டிதர் வீரச்சாவடைவதற்கு ஒருவாரம் முன்புதான் எமக்கு குறுந்தூர, நெடுந்தூர தொலைத் தொடர்பு சாதனங்கள் கிடைத்திருந்தன. எமது பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இராணுவத்தால் அவை கைப்பற்றப்பட்டிருந்தன. அச்சுவேலி முகாம் முற்றுகையை உடைப்பதற்கு நாம் தயாரான போதும் எல்லாமே பிந்திப் போயிருந்தன. எமது தேசியத் தலைவர் தனது வலது கையை இழந்து விட்டேனெனக் கூறியி ருந்தார். இந்தச் சம்பவம் எமது போராட்டதுக்கு பாரிய பின்னடைவை அப்போது தந்திருந்தாலும் சயனைட்டின் தேவை உட்பட்டபல விடயங்களின் தேவையை உணர்த்திய கனதியான நிகழ்வாகவும் எமது விடுதலை அமைப்பால் அந்தக் காலத்தில் நோக்கப்பட்டது. பண்டிதரின் இழப்பின் தாக்கம் முள்ளிவாய்க்கால் வரை உணரப்பட்டதாகவே நான் கருதுகிறேன். பண்டிதருடைய இழப்பு இன்று வரை என்னுள்ளே பெரிய தாக்கமாகவே உள்ளது. பண்டிதர் போல அரசியல் அறிவு, உயர்ந்த நிதானமான சிந்தனை, நீண்டகாலத்திட்டம், எல்லோருடனும் அன்பாக சமமாகப் பழகுகின்ற தன்மை, எளிமை, ஆவணப்படுத்தும் பொறுப்பு இவையனைத்தும் கொண்டவர்கள் மிகமிக அரிதாகவே தேசியத் தலைவரோடு பயணப் பட்டிருக்கின்றார்கள். இன்றும் பலர் தாம் பண்டி தரை ஒருமுறை கண்டோம் கதைத்தோமென்று கூறுகின்ற போது அவரோடு விடுதலைப் பயணத்தில் கனதியாக இணைந்திருந்தது பெருமையாக இருந்தாலும் என் மனம் இப்போதும் அவரை எண்ணி அழுகின்றது. எனது விடுதலைப் பயணம் நிர்ப்பந்த காரணங்களால் தொடர்ந்து செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது. பண்டிதர் எம்முடன் இருந்திருந்தால் அவரைப் பற்றிய நினைவை பகிர்ந்து கொள்கின்ற வாய்ப்பு கடைசிவரையும் கிடைத்தே இருக்காது. நான் எமது பண்டிதரை தமிழ் மக்களின் சேகுவேராவாகவே பார்க்கின்றேன். நாம் பெற்றெடுக்கும் தமிழீழத்தில் பண்டிதர் உட்பட்ட அனைத்து மூத்த உறுப்பினர்களும் மாவீரர்களும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவர்கள், பூசிக்கப்படுவார்கள் https://www.ilakku.org/?p=39221
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி
மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி 23 Views மேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த முன்னாள் போராளி ஒருவர் அவரின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். 11.01.2021 அன்று மேஜர் சோதியா அவர்களின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் நாளில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மகளிர் பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து, சோதியா என்ற பெயருடன் வெளியேறுகிறார் மைக்கேல் வசந்தி. அந்தக் காலகட்டங்களில் போராட்டத்தில் இணைந்த பெண்கள், ‘சுதந்திரப் பறவைகள்’ என்னும் பெயரில் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழீழத்தில் அதற்குப் பொறுப்பாக தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் இருந்தா். அதே காலகட்டத்தில் தான் இரண்டாவது பயிற்சிப் பாசறைக்குப் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள். 1987ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள எமது முகாமில் தான் நான் சோதியா அக்காவை முதன்முதலில் பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரை எனக்குப் பிடித்து விட்டது. சைக்கிளில் வருவார், போவார். அவர் எமது முகாமில் ஒரு அறையில் தொலைத் தொடர்பு வேலைகளை செய்து வந்தார். யாழ். கோட்டை முற்றுகை சண்டையின் பின்னர் நான் அவரைப் பார்க்கவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து புனிதபூமி முகாமில் தான் நாம் ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த காலம். அங்கே மகளிர் மருத்துவப் போராளியாக நான் சோதியா அக்காவைப் பார்த்தேன். அவரை ஓர் அன்பான தாயாகப் பார்த்தேன். அவரின் அன்பு, கவனிப்பு, அரவணைப்பு மிகவும் புனிதமாக இருந்தது. கம்பீரமான அந்தத் தோற்றம், எல்லோரையும் கவரும் அந்த துல்லியமான பார்வை, அன்பான அரவணைப்பு எல்லாம் போராளிகளையும் கவர்ந்து விட்டது. பிரிக்க முடியாத ஒரு உறவை உருவாக்கி விட்டது. இன்பங்கள், துன்பங்கள், பாசங்கள் எல்லாம் கடந்து எமது வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. அதேவேளையில் மகளிர் அணியில் அங்கத்தவர் சேர்க்கை அதிகமாகியது. இந்தவேளையில் எமது தலைவர் அவர்கள், சோதியாவை மகளிர் படையணியின் தளபதியாக நியமித்தார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம். காட்டு வாழ்க்கை. மகளிர் வளர்ச்சி அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதேவேளை நான் அங்கே மருத்துவப் போராளியாக சோதியா அக்காவுடன் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அதாவது கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் நேரம். போராட்டங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் இருந்த தருணம் மறக்க முடியாது. இறுதியாக அவரின் சந்தோசம் 1990 ஆங்கிலப் புதுவருடம் ஆகும். பச்சைப்பசேல் என இருந்த அந்த இயற்கை அடங்கிய மணலாறுக் காடு. சோதியா அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்தச் செய்தி தலைவருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது மரு த்துவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் ஓர் ஆண் வைத்தியர் ஆவார். அவரை அழைத்த தலைவர் அவர்கள், என்னையும் அழைத்தார். நேரடியாக சோதியாவைப் பார்வையிட்டு மருத்துவம் பார்க்கும்படி கட்டளை இட்டார். அதனை நாம் செயற்படுத்தினோம். எமது இடத்தில் இருந்து சோதியா அக்காவின் விடியல் முகாம் 15 நிமிட நடை தூரம். அங்கு போய் மருத்துவம் பார்த்து வந்தோம். ஆனால் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தது. அதன் காரணத்தினால் நான் தலைவர் அவர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தேன். உடனடியாக சோதியாவை இங்கே அழைத்து வாருங்கள் என சொன்னார். நாமும் போய் அவர் சொன்னதைச் சொன்னோம். ஆனால் சோதியா அக்கா வருவதற்கு மறுத்து விட்டார். புதிய போராளிகள் மனம் கலங்கி நிற்கிறார்கள். அது ஒரு பயிற்சி முகாம். என்னுடைய பிள்ளைகளை விட்டு நான் வரமாட்டேன். என பெரும் போராட்டம் நடந்தது. எல்லோரும் முயற்சி செய்தோம். ஒருவாறு அழுகையுடன் விடியல் முகாமில் இருந்து விடைபெற்று புனிதபூமி முகாமிற்கு வந்தார். உடல் நிலை முடியாத சோதியா அக்காவைப் பார்க்க தலைவர் வந்தார். அப்போது தலைவரை சுகம் விசாரிக்க விடாமல், அண்ணை நான் என்னுடைய பிள்ளைகளிடம் போக வேண்டும் என்று கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். தலைவர் ஆறுதல் கூறினார். இவ்வாறு இருக்கும் போது மேலும் உடல் நிலை மோசமாகி விட்டது. வைத்தி யரின் ஆலோசனைப்படி, வெளியில் அனுப்பி வைத்தியம் பார்ப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது. அப்போது தலைவர் என்னை அழைத்து, வெளியில் நீங்கள் சோதியாவை பொறுப்பெடுத்துக் கொண்டு போய் இந்தியா செல்லுங்கள் என்று கூறினார். நானும் விடியல் முகாம் சென்று பொறுப்பாளரிடம் தகவலைத் தெரிவித்தேன். தலைவர் என்னுடன் இருவரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பொறுப்பாளரின் அனுமதியுடன் நான் பைரவி மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதியான மாவீரர் சுகன்யாவையும் தெரிவு செய்தேன். அது மட்டும் அல்ல, ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளையும் எம்முடன் அனுப்பி வைத்தார் தலைவர். எம்மை ஜெயந்தி அக்கா தலைமை தாங்கி வல்வெட்டித்துறைக்கு கூட்டிச் சென்றார். எமது வைத்தியரும் எம்முடன் வந்திருந்தார். சோதியா அக்காவின் பாதுகாப்பிற்கு தலைவரால் அனுப்பப்பட்டவர்களில் மேஜர் தாரணி, மேஜர் அஞ்சனா, கப்டன் உஷா ஆகியோர் சோதியா அக்காவுடன் முதலாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சோதியா அக்காவின் வீட் டின் அருகில் தான் நாம் தங்கியிருந்தோம். அப்போது பொறுப்பாளரும் அவருடன் சென்ற எல்லோரும் சோதியா அக்காவின் அம்மா, அப்பாவைக் கூப்பிட்டு சோதியா அக்காவைப் பார்ப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டு, சோதியா அக்காவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். நமது கொள்கை, கட்டுப்பாடு, கட்டளைகளை மீறாத ஒரு பெரும் தளபதியாக அங்கு நான் அவரைப் பார்த்தேன். எமக்கு மேலும் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினார். எமது வைத்தியரினால் இந்தியாவில் உள்ள வைத்தியருக்கு சோதியா அக்காவின் நிலை குறித்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தினை என்னிடம் கொடுத்து எவ்வாறு பேச வேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டது. நாமும் ஆயத்தமாகி உடை மாற்றி விட்டோம். அப்போது வடமராட்சிப் பொறுப்பாளர் ஜேமஸ் அண்ணா ஒரு பெண் வைத்தியரை அழைத்து வந்து சோதனை செய்தார். அந்த வைத்தியர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியா செல்ல இருந்த பயணம் நிறுத்தப்பட்டது. எங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க இருந்த சமயம் தலைவர் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க முடியாதுள்ளது. “நீங்கள் குப்பியைக் கொண்டு செல்லுங்கள். சோதியாவின் குப்பியையும் வைத் துக் கொள்ளுங்கள். கடலிலோ அல்லது இராணுவத்திலோ நீங்கள் பிடிபட்டால், உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.” என தலைவர் அவர்கள் கூறும் போது, அவரின் கண்களில் கோபக்கனல் தெரிந்தது. நம்பிக்கை மேலும் பிறந்தது. என் இருதயம் வெடிப்பது போல் இருந்தது. எதற்காக என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை. சோதியா அக்கா மதிய உணவு சாப்பிட்டு சந்தோசமாக இருந்தார். மாலை 6 மணியளவில் எமது போராளிகள் வெளியில் சென்று கொத்துரொட்டி வாங்கி வந்தார்கள். சோதியா அக்காவிற்கு முட்டைக் கொத்து கொடுக்கப்பட்டது. அவர் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மீதியை என்னிடம் கொடுத்து விட்டார். இரவு உணவு வேளை முடிந்தது. இரவு எட்டு மணி இருக்கும் சோதியா அக்காவைக் காணவில்லை என பைரவி என்ற போராளி என்னிடம் சொன்னார். நானும் தேடினேன். அப் போது அவர் கிணற்றுக் கட்டில் இருந்தார். அக்கா வாங்கோ என்று அழைத்த போது வாசுகியின் சட்டையைக் கொடு என்று கேட்டார். நாம் புரியாது நின்றோம். வாசுகி என்ற பெயரில்தான் வைத்தியருக்கு கடிதம் எழுதப்பட்டு, சோதியா அக்காவிற்கு வாசித்துக் காட்டப்பட்டது. அது அவரின் மனதில் பதிந்து விட்டது என நாம் நினைத்தோம். பின்பு எல்லோரும் படுக்கைக்குப் போய் விட்டார்கள். நான் அவருடன் தொடர்ந்து தூக்கம் இல்லாது அவரை எனது மடியில் இரண்டு மூன்று தலையணை போட்டு படுக்க வைப்பேன். ஆனால் அன்று அவர் என்னைப் படுக்கும்படி கூறினார். சோதியா அக்காவை கட்டிலில் படுக்க வைத்து நான் கீழே படுத்தேன். 15 நிமிடங்கள் நான் அசந்து தூங்கி விட்டேன். பின்பு எழுந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. தேடிப் பார்த்தேன். வாசலில் இருந்தார். நான் வாங்கோ என்று கூப்பிடும் போது, அவரின் செயற்பாடுகள் மாறுதலாக இருந்தன. நான் கூறுவதை செய்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். வயிறு வீக்கமாகி நகங்கள் நிறம் மாறின. உடன் காவல் கடமையில் இருந்த தனுஜா என்ற போராளியை அழைத்து, தகவலை ஜெயந்தி அக்காவிடம் கூறும்படி சொன்னேன். உடனடியாக எமது வைத்தியர் இருக்கும் இடம் போய் தகவலைத் தெரிவித்து, அவரைக் கூட்டி வந்தார்கள். எமது வைத்தியரின் உதவியுடன் வல்வை ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். போகும் வழியில் அதிகாலை 2.58 மணியளவில் சோதியா அக்கா எனது மடியில் ஒரு பெருமூச்சு விட்டார். வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். எமது வைத்தியர் பதட்டமாகவே காணப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உயிர் எமது மண்ணை விட்டுப் பிரிந்து விட்டது. எமது போராளிகளின் கதறல் சத்தம் இன்னும் எனது காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. பின்பு சீருடை மாற்றப்பட்டு, மணலாற்றுக் காட்டிலுள்ள புனிதபூமி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலிற்கு அங்கு எமது தலைவர் உட்பட எல்லாப் போராளிகளும் அஞ்சலி செலுத்தினர். சோதியா அக்காவின் தந்தையும் அங்கு வந்திருந்தார். பின்னர் அவரின் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மீண்டும் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் குடும்ப இடுகாட்டில் பெண் போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வீர உடல் விதைக்கப்பட்டது. அவரின் நினைவுக்கல் வடமரா ட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 14.07.1996இல் சோதியா அக்காவின் நினைவாக சோதியா படையணி உருவாக்கம் பெற்றது https://www.ilakku.org/?p=39210
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தங்க மாலை கழுத்துக்களே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆயிரம் நிலவாகி... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்க
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மன்னாதி மன்னவா மனுவான தூயவா/கிறித்து பிறப்பு பாடல்/அனுராதா சிறிராம் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சி பேச மூவொரு இறைவா சரணம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானத்தை தேடி... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் காவடி மட்டக்களப்பு பாரம்பரிய காவடி மெட்டில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
மட்டக்களப்பு நாவற்குடா மாரியம்மன் காவடி பாடல்- இறைவனிடம் கையேந்துங்கள்
மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே 1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் 2. தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மார்க்கமும் மதமும் புனித ரமலான்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
அத்திரி முனிவர் மாதவம் செய்த- இறைவனிடம் கையேந்துங்கள்
ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை எமக்காய் பிறந்த நல் இயேசுவே தங்கத் தேரினிலே திகழும் உன்னத பேரழகே|மாதா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
செந்தூரம் பூத்த கோலம் | SPB | Nagapushani Amman - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.