Everything posted by உடையார்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
காவல் அரன் மீது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சஞ்சலம் தீர்க்கும் சந்நிதியே: சந்நிதி முருகன் பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சின்னச் சின்ன கண்மணியே சக்கரை முத்தே சந்தன பொட்டே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஈழத்தமிழர் அரசியல்
பகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள்!- தவறு எங்கே நடக்கிறது? இலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் மிகவும் பலமாக இருந்தன. வலுவான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. இப்போது மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என மூன்று வகையான உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன. இம்மூன்று சபைகளுக்கும் எழுத்து மூலமான வலுவான அதிகாரங்கள் உள்ளன. குறித்த எல்லைகளுக்குள் தங்கள் அதிகாரங்களை பிரயோகிக்கக் கூடியதான சட்ட ரீதியான ஏற்பாடுகள் உள்ளன. இதில் மத்திய அரசுக்கும், உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான உறவுகள் கூட சட்ட ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று மத்திய அரசாங்கமானது இனவாத அரசாங்கமாக இருக்கின்றபடியால் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் அதிகாரங்களை கணக்கெடுக்காமல் அதனை புறக்கணித்து தங்களுடைய அதிகாரங்களை செலுத்த்துகின்ற செயற்பாடு தான் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் வலி கிழக்குப் பிரதேச சபையில் நடந்த இழுபறியும் மத்திய அரசுக்கும் - உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயமே ஆகும். இவ்விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களான யோதிலிங்கம், நிலாந்தன் ஆகியோர் தெரிவித்த முழுமையான கருத்துகளையும் காணொளியில் காணலாம்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- கடற்புலி லெப். கேணல் நிலவன்
லெப். கேணல் நிலவனின் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்த பொழுதான செயற்பாடுகள் டிசம்பர் 26, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து லெப். கேணல் நிலவன் / மாறனின் இம்ரான் – பாண்டியன் படையணியில் இருந்த பொழுதான செயற்பாடுகள். அல்பிரட் தங்கராசா டென்சில் டினஸ்கோ (டென்சில்) யாழ். புனித பத்திரியார் கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவன். அதற்கு முன்னர் வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலை, மற்றும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்தான். இதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட ரிவிரெச இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து இரணைப்பாலையில் வசித்து வந்தான். அத்தருணத்தில் தேசம் விடுத்த அழைப்பினை ஏற்று தனது தாய் நாட்டிற்குரிய கடமையைச் செய்வதற்காக 14.02.2007 அன்று எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டிருக்கின்றான். அமைப்பின் சில தேவைகளின் பொருட்டு குறித்த ஒரு கடமைக்கு போராளிகள் உள்வாங்கப்பட்ட பொழுது இவனும் அக்கடமைக்கு தேரந்;தெடுக்கப்பட்டான். இம்ரான் பாண்டியன் படையணிக்கு தெரிவு செய்யப்பட்டான். கௌதமன் -02, இவனது ஆரம்ப பயிற்சி முகாம். ஏறக்குறைய 06 மாதங்கள் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இவன் மாறன் என்ற பெயருடன் வெளியேறினான். அடிப்படைப் பயிற்சி முகாமைப் பொறுத்த வரை எந்தப் போராளிக்கும் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். மாறனும் இதற்கு விதிவிலக்கானவன் அல்ல. இருந்த போதிலும் இவன் நிற்கும் இடத்தில் ஒரு கூட்டமே இருக்கும். கடுமையான பயிற்சிகளைப் பெற்றும் சோர்வடைந்து ஓய்வாக இருக்கின்ற பொழுது இவன் கூறும் பகிடிகள், மற்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சுக்கள் என்பவை போராளிகளுக்கு சோர்வைக் களைந்து புதுத் தென்பை ஊட்டும் சிரிப்பொலிகளால் அந்த இடத்தின் மௌனமே கலையும். எந்தப் போராளிக்கும் சுகயீனம் என்றால் தாயாக, தந்தையாக நின்று அப்போராளியை பராமரிப்பான். இவன் இயக்கத்தில் இணைவதற்கு முன், கிபிர் தாக்குதல் ஒன்றில் காலில் காயமடைந்து கொழும்புவரை சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுதிலும், பயிற்சியில் அதன் விளைவைக் காணமுடியாது. சாதாரண போராளிகள் போலவே பயிற்சியினை சிரித்துச் சிரித்தே செய்து முடிப்பான். அடிப்படைப் பயிற்சியினைப் பெற்றுக் கொண்ட இவர் சில இரகசிய கடமைகளை பொறுப்பேற்றுச்செய்தான். அதன் பின்னர் கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெறுகின்றான். கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவன் 26.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையில் இத்தாவில் பகுதியிலும், 30.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையிலும் கண்டல் பகுதியிலும் 05.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியிலும், 09.10.2000 அன்று கிளாலிப் பகுதியிலும், 19.10.2000 அன்று மீண்டும் நாகர்கோயில் பகுதியிலும் எதிரியின் அரண்களை சிதைத்து தனது ஆயுதத்தால் எதிரியை சிதறடித்து ஓயாத அலைகள் -04 நடவடிக்கைக்கு பலம் சேர்ந்தான். இவன் தொடர்பாக தாக்குதலை வழிநடத்திய தளபதிகள் கூறும்பொழுது ‘சண்டை என்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது. சிம்பிளா நிப்பான்’ எனக் கூறினார்கள். சண்டை முடிவுற்றதும் பின்தள பணி சிலவற்றிற்காக எடுக்கப்பட்ட பொழுது தனது சில விண்ணப்பங்களை போராளிகளுடனும் பொறுப்பாளர்களுடனும் பகிர்ந்து கொண்டான். அதாவது கடற்புலிகள் அணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினை தெரியப்படுத்தினார். இதற்கு முன்னர் 27.01.2000 அன்று அண்ணைக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ‘ அண்ணை நான் கடற்புலிகள் அணிக்குப் போக விரும்புறன். நான் கடற்கரை சார்ந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தனான். எங்கட சொந்தங்கள், உறவுகளை எல்லாம் நேவிக்காரன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். ஆகவே கடற்புலி படையணியில் எனது பணியைத் தொடர அனுமதியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டான். அதற்கான பதில் வருவதற்கு சிறு தாமதங்கள் ஏற்பட்ட பொழுது அடுத்தடுத்த மூன்று கடிதங்கள் அனுப்பினான். ‘அண்ணை கடற்புலியில் இருந்த எனது சித்தப்பாவான பாக்கி அண்ணையும் (லெப். கேணல் பாக்கி) வீரச்சாவடைந்துவிட்டார். அவரது பணியைத் தொடர என்னை அனுமதியுங்கோ’ இது அவரது மூன்றாவது கடிதம். இவனது மூன்றாவது கடிதத்திற்குரிய பதிலானது இவனை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது என்றே கூறவேண்டும். மச்சான் நான் கடற்புலிக்கு போறன்டா, அண்ணை ஒம் எண்டுட்டார். இருந்து பாரன், மாறன் ஆமியை ஒரு கை பார்த்துத்தான் திரும்பி வருவன்.’ இது அவனது இறுதி இம்ரான் பாண்டியன் படையணிப் போராளியாகக் கூறியது. அதன்பின்னர் தலைவரின் பணிப்பிற்கு அமைய, 2001.09ம் மாதம் இவர் கடற்புலி படையணிக்கு அனுப்பப்பட்டார். தகவல்: பா.சுடர்வண்ணன் பெ. மைந்தன் லெப்.கேணல் ராதா வான் காப்புப் படையணி. நிதித்துறை. தமிழீழ விடுதலைப் புலிகள். நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு. https://thesakkatru.com/commander-nilavans-activities-while-in-the-imran-pandian-brigade/- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- கடற்புலி லெப். கேணல் நிலவன்
கடற்புலி லெப். கேணல் நிலவன் டிசம்பர் 26, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து என்றும் எம் இனத்திற்கு நிலவாய் இருப்பாய் நிலவா…. ‘மனிதர்களின் இருப்பை விட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு சிகரம் வதை;தாற்போல் எமது விடுதலைப் போராட்டத்திலும் கடற்புலிகள் அணியில் அலையாக ஆர்ப்பரித்து ஒரு தசாப்தகாலச் சக்கரத்தை தரைச்சமர், கடற்சமர், கனரக ஆயுதச் சூட்டாளன், அரசியல், நிர்வாகம், வழங்கல், கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி எனச்சுழன்று பல பக்கங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்படுத்திய ஒரு மாவீரனாம் நிலவன். ஒரு வீரனின் செயற்பாடுகள், அர்ப்பணிப்புக்கள், சாதனைகள், தியாகங்கள் என்பன எல்லாம் விடுதலையின் வெற்றிக்கான அத்திவாரங்கள். எனவே அந்த வீரர்களின் வரலாற்றை எங்கெல்லாம் பதித்து வைக்கலாமோ அங்கெல்லாம் பதியப்பட வேண்டும் அவ்வாறான ஒரு பதிவாக லெப்.கேணல் நிலவன் அவர்களின் வரலாற்றையும் பார்க்கலாம். ஏனெனில் எமது விடுதலையின் பின் எமது மாவீரர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததி பார்ப்பதன் ஊடாக எமது விடுதலைப் போராட்டத்தின் பெறுமதியை உணர்ந்து எமது நாட்டையும், மக்களையும் எமது மாவீரர்களின் கனவுலகத்திற்கு செயல்வடிவம் கொடுப்பார்கள். மிகவும் இறுக்கமான காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அணியின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கலாத்தன் (மாவீரன்) அவர்களைச் சந்திக்க சென்ற போது இவர் சாயம் குடிப்பதில்லை. பால்தான் குடிக்கிறவர் என்று பால்க்கோப்பியுடன் வந்த நிலவனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து நிலவனது சந்திப்புக்கள் அதிகரிக்க அவருக்கும் எனக்குமான நட்பு இறுக்கமடைந்தது. அதேவேளை எமது அணியில் நிலவனது செயற்பாடுகளும் வேகம் பெறுகின்றது. நான் எதையும் செய்வேன் என்ற தன்னம்பிக்கையும் நிலவனிடம் மேலோங்கி இருந்தது. இதற்கு சான்றாக பின்வரும் சந்தர்ப்பத்தை நான் நேரில் காணக்கூடியதாக இருந்தது. அதாவது எமக்கு வழங்கப்படும் உணவில் சுவையின்மை, நேரம் தவறுதல் போன்ற பல பிரச்சினைகள் காணப்பட்டபோது எமது பொறுப்பாளரிடம் இதனைக் கூறினோம். அதற்கு உணவு சமைப்பது சண்டை பிடிப்பது, நடவடிக்கை செய்வது போன்று இல்லை. இங்கு பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், சமாளித்துப் போகவேண்டும் என்றார். அப்போது ஏனைய போராளிகள் தரப்படும் பொருட்களை ஒழுங்காக சமைத்துத் தருவதற்கென்ன எனக்கேட்ட போது பொறுப்பாளர் தான் விசேட தளபதியிடம் கேட்டுச் சொல்லுகின்றேன். நீங்கள் யாராவது பொறுப்பெடுங்கள் என்ற போது ஒவ்வொருவரும் மற்றவர்களது முகத்தைப் பார்க்க நிலவன் எழுந்து நான் செய்கிறன் என்று கூறினான். அவன் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்டி எமக்கான உணவை சுவையாகவும் ஒழுங்காகவும் செய்து தந்தான். இவ்வாறாக நிலவனின் செயற்பாட்டை அவதானித்த சிறப்புத்தளபதி எமது படையணியின் வழங்கல் பொறுப்பாளராக நியமித்தார். அதிலும் தனது உச்ச திறமையை வெளிக்காட்டி வந்தான். இக்காலப்பகுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சமாதானம் ஏற்பட சிறப்பு அரசியல் வேலைக்காக மன்னார் மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக கடமை ஏற்று அங்கு சென்றான். அங்கு ஒரு புதிய சூழலை நிலவன் எதிர்கொள்கின்றான். அதாவது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களின் செயற்பாடுகளும் நிறைந்து காணப்பட்ட ஓர் இடமாகும். எனவே இங்கு அரசியல் என்பது மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளவேண்டி இருந்தது. அதற்கும் தன்னைப் பழக்கப்படுத்தி செயற்பட்டுவந்தான். இயல்பாகவே மக்களை நேசிப்பதிலும் அவர்களைத் தன்பக்கம் கவர்வதிலும் அவனுக்கு நிகர் அவனாகவே காணப்பட்டான். எனவேதான் அந்தச் சூழ்நிலையிலும் அவன் அரசியலை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமைந்தது. நிலவனிடம் இன்னுமொரு சிறப்பம்சம் காணப்பட்டது. கருத்துக்கள், அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் என்றால் யார் என்று பார்க்காமல் அவற்றைப் பெற்று பின்பு அந்த சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் முடிவுகளைத் தானே எடுத்து செயல்படுத்தியும் அன்றைய அரசியல் மற்றும் நடவடிக்கைகளுக்கு சிறப்பாக அமைந்திருக்கும். இவ்வாறான சூழலில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது. இதன்போது இவனது செயற்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் திறமையால் சிறப்புத்தளபதியினால் மன்னாரிலிருந்து வரவழைக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார். இயல்பாக நிலவனிடம் இருந்த மக்களை நேசிக்கும் பண்பு, பிறரைக் கவர்கின்ற முகபாவம், எதையும் ஒழிவு மறைவின்றி நேரடியாகக் கதைக்கின்ற தன்மை. இவை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட நிலவனின் ஆளுமையின் வெளிப்பாடே வடமராட்சி கிழக்கிற்கான சுனாமி மீள் கட்டுமானத்தில் துரித மாற்றங்களை ஏற்படுத்தியது. அதற்குச் சான்றாகவே வடமராட்சி கிழக்கில் உள்ள வீதிகள், வீடுகள், கட்டடங்கள், தொழில்சார் நிறுவனங்கள் போன்றன கண்முன்னே கூறி நிற்கின்றன. அத்துடன் மாவீரர் பெற்றோர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை ஆராய்ந்து அதனைச் சிறப்புத்தளபதியுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டான். இவ்வாறான நிலவனிடம் மனது நெகிழ்ச்சிப்போக்கு கொண்டது என்பதையும் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டேன் அதாவது ஓரு மாவீர்நாளை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நடைபெற்றது. அதன்போது மாவீரர் சிலரது திருவுருவப்படம் வைக்காமையை கண்ட பெற்றோர் வேதனையில் பேசிவிட்டார்க்ள. அப்போது நானும் அங்கு நின்று இவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று எண்ணிய வேளை எனக்கு அருகாமையில் விசும்பல் சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன் நிலவன் அழுதவண்ணம் இருந்தான். அங்கு ஒரு புதிய சூழல் உருவானது. அதாவது பெற்றோர் நிலவனை சமாதானப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இது நிலவனின் மனநெகிழ்ச்சிக்கு ஓர் உதாரணமாகும். பின் களச்சூழல் மாற்றம் அடைகிறது. தமிழரின் தலைநகரம் நிலவனைக் கடமைக்கு அழைக்கிறது. சிறப்புத்தளபதியின பணிப்பில் நிலவன் திருகோணமலைக்குச் சென்று தன்னுடைய கடமையில் ஈடுபடுகின்றான். பின்பு சூழ்நிலை மாற்றத்தால் சண்டைக்கு தன்னைத் தயார்ப்படுத்தி கடற்சண்டை அணியின் ஒரு தொகுதி வழிநடத்தல் அதிகாரியாக செயற்படுகின்றான். அங்கும் அவன் தனது முத்திரையைப் பதிக்கின்றான். மூதூரில் சண்டை நடைபெற்ற வேளை முதல் நாள் கடல் சண்டையில் எமது அணியின் சில கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் தென்றல்மாறன், லெப்.கேணல் சூரியா, லெப்.கேணல் அலைஅழகி வீரச்சாவடைய பல போராளிகள் காயமடைந்து சில படகுகளும் திருத்தவேலை செய்யவேண்டி இருந்தமையாலும் அடுத்தநாள்ச் சண்டையில் கடலில் எமது பங்களிப்பு குறைந்து தரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு சண்டையில் ஈடுபட்டோம். இந்த நேரத்தில் கடல் உதவி தேவைப்பட்டதால் நாம் உடனடியாக சில படகை தயார்ப்படுத்தினோம். அதில் முதலில் இறங்கிய இரண்டு படகுகளுக்கும் தானே கட்டளை அதிகாரியாக இறங்கி திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து மூதூர் இறங்குதுறைக்கு வரும் இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கு இரண்டு துறைகளுக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் நின்று சமராடி எதிரிகளின் நகர்வை பல மணிநேரம் நிறுத்தி அதிலும் ஓர் முத்திரையைப் பதித்தவன். இதில் நிலவன் சிறு விழுப்புண்ணை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. பின்னர் இவனது களமுனை வன்னி நோக்கி நகர்கிறது. பிற்பட்ட காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கடற்சமர்களில் நிலவனின் பங்களிப்பு ஏதோ ஒருவகையில் அமைந்திருக்கும். ‘எங்கடை கடல்லை நேவி திரியிறதை ஒரு காலமும் அனுமதிக்கக்கூடாது. அவனுக்கு அடிக்கவேணும், உடைக்கவேணும், தாக்கவேணும் என்று வெறிபிடித்தவன் போல கதைப்பான். அதைச் செயலிலும் காட்ட முற்படுவான் ஏனெனில் தலைவர் சொல்லைவிட செயலையே விரும்புவார் என்பது நிலவனுக்குத் தெரியும். தலைவரை மிகவும் ஆழமாக நேசித்தான். மாவீரர்களில் அளவு கடந்த பற்றுள்ளவனாக இருந்தான். இதற்கும் அவனே சான்று. ஏனெனில் கார்த்திகை 27 என்றால் தனது பணிக்கு நடுவிலும் அயலில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லம் சென்று தரிசித்துவிட்டு வருவான். இவ்வாறான பண்புகள் கொண்ட நிலவன் 26.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்புச் சமரில் வேறுபணி இருந்தபோதும் இச்சமரில் தானும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தளபதிகளுடன் சண்டையிட்டு அச்சமருக்கு சென்று தன்னுடைய தோழர்களுடன் நெடுந்தீவுக் கடலில் வீரகாவியம் ஆனார்கள். நிலவனுடைய அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் எல்லாவற்றையும் இதில் குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது விடுதலைக்கான பயணம் என்பது மிகவும் நீண்டது. சில பக்கங்களையே இதில் குறிப்பிட்டுள்ளேன். செயல்வீரனுடைய கனவுகளை நனவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன் அவனுடைய பயணப்பாதையில் தடம் தொடர்ந்;து செல்கின்றோம். ‘நிலவா பெயரில் மட்டும் நிலவாக இல்லாமல் செயலிலும் நிலவாய் வாழ்ந்தவனே. சிரிப்பின் சிகரமே என்றுடன் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பாய். நினைவுப்பகிர்வு: கு.இனியவன் (நண்பன்) தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள். நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு. https://thesakkatru.com/commander-of-sea-tiger-lieutenant-colonel-nilavan/- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
- வீரத்தின் சிகரங்கள்
வீரத்தின் சிகரங்கள் டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள். உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும் தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம். இந்த மனோபலம் ஒரு வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும். ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலைப் போராட்டச் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளிவிடுவதுடன், வீரம்மிக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட, தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டிவிடுகின்றது. தேச பக்தியையும், வீர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால் உலகில் எவராலும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். “தாய்மை” கரும்புலி மேஜர் மலர்விழி: அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள். அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள். தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களை வளர்த்துவிட்ட அவள் காலத்தின் தேவையறிந்து போராளியாகிப் பின்னர் சாதனைகளின் உச்சத்தைத் தொடுவதற்காகக் கரும்புலியாக மாறிக்கொண்டாள். அந்த முகாமில் பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் யாரிற்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்காகவே தனது நேரத்தைச் செலவிடுவாள். யாராவது போராளிகள் கசங்கிய உடையோ அல்லது சற்றேனும் புழுதிபடிந்த உடையை அணிவதோ அவளுக்குப் பிடிக்காது. கசங்கிய உடைகளை அழுத்தி மடித்துக் கொடுத்து அதைப்போட வைத்து அதன் அழகை இரசிப்பதில் தான் அவளது மகிழ்ச்சியிருந்தது. போராளிகளின் ஆடைகளைத் தோய்த்துக் கொடுக்கக்கூட அவள் தயங்கியதில்லை. அவர்களின் இந்தப் பாசறை ஒருநாள் சிங்களப் படையின் விமானத் தாக்குதலுக்குள்ளாகிறது. உயிர்களுக்குச் சேதமேற்படா விட்டாலும் காயம் ஏற்பட்டு போராளியொருவர் மருத்துவமனையிலிருந்தான். அவர்களின் தங்ககம் விமானத்தாக்குதலால் சிதைந்தது. உடைமைகள் யாவும் சிதறுண்டன. காயம்பட்ட போராளிக்கு மாற்று உடையில்லை. அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் அதுவே நிலைமை. மலர்விழி மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்க்கிறாள். மாற்றுடையில்லாமல் அவன் அவதிப்படுவது தெரிந்தது. ஆனால், உடனடியாகப் புது உடை வாங்கக்கூடிய வசதி அவளிடம் இருக்கவில்லை. மலர்விழி முகாம் வருகிறாள். விமானத் தாக்குதலால் சிதறிய விடுதியில் வந்து பார்க்கிறாள். அங்கே கிழிந்தபடி காயப்பட்டவனின் சேட் ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு போனாள். ஊசி நூல் எடுத்து குண்டுச் சிதறலால் ஏற்பட்ட கிழிசல்களைப் பொறுமையாக இருந்து தைத்தாள். பின்னர் அந்த ஆடையைத் தோய்த்து காய்ந்த பின்னர் அழுத்தி மடித்து மருத்துவமனையில் மாற்றுடையை எதிர்பார்த்திருக்கும் அந்தப் போராளியிடம் ஒப்படைத்தாள். அந்தக் கரும்புலி வீராங்கனையின் தாய்மையின் நேசம் எல்லோரையும் வியக்கவைத்தது. மலர்விழி பல நடவடிக்கைகளுக்காக எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி வெற்றியுடன் திரும்பி வந்தாள். நடவடிக்கைக்காகச் செல்லும் ஒவ்வொரு தடவையும் வழியனுப்புவோரிடம் அவள் சொல்வது ~தம்பியும் தங்கையும் கவனம் என்பதை மட்டும் தான். இவள், வீழ்த்த முடியாத பெருந்தளமாக எதிரி இறுமாந்திருந்த ஆனையிறவுத் தளத்தினுள் மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா ஆகிய கரும்புலிகளோடு இணைந்து அதிரடியான ஊடுருவலொன்றின் மூலம் தாமரைக்குளத்திலிருந்த நான்கு ஆட்லறிகளை வெற்றிகரமாகத் தகர்த்தெறியப் பெருந்துணை புரிந்தாள். தம் பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் தாம் திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரியின் பலம்மிக்க கொமாண்டோ அணியொன்றின் சுற்றிவளைப்பிற்குள்ளாகினர். மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த இயக்கச்சிப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து 31-03-2000 அன்று ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள். “கோடை” கரும்புலி மேஜர் ஆதித்தன்: 1992 ஆம் ஆண்டின் நாட்கள். சுதாகரன் வீட்டுக் கஸ்ரத்தைப் போக்குவதற்காகக் கொழும்பில் கடையொன்றில் வேலைசெய்து கொண்டிருந்தான். தினமும் கடைக்கதவு சாத்தப்பட்ட இரவுப்பொழுதில் கூடவிருப் போருடன் சேர்ந்து பம்பலடித்து நேரத்தைக் கழித்துவிட்டு உறக்கத்துக்குச் செல்வதுதான் வழமை. ஆனால் அன்று மட்டும் எல்லோரும் வானொலியைச் சுற்றியிருந்து எதையோ ஆழமாகக் கேட்டபடியிருந்தார்கள். அன்றைய நாள் பி.பி.சி வானொலியில், பி.பி.சி செய்தியாளர் ஆனந்தி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்திருந்து தலைவரின் எண்ணங்களைச் செவிமடுத்தான். தலைவர் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அவனை மெய்சிலிர்க்க வைத்தன. அன்றுதான் தமிழர்களுக்கென்றொரு தலைமை இருப்பதும், ஒரு கட்டுக்கோப்பான விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருப்பதையும் அவன் அறிந்துகொண்டான். அவனது நெஞ்சில் புதிய உத்வேகம் உருவானது. தலைவர் மீதும் எமது விடுதலைப்போராட்டம் மீதும் இனம்புரியாத பற்று அவனுள் கருக்கொண்டது. அன்றிலிருந்து அவனுள் மூண்ட விடுதலைத்தீ அவனை 1994 இல் எங்கள் தாயகம் நோக்கி நகர்த்தியது. பதுளையில் இருந்த அம்மாவிடம் ‘கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் நான் யாழ்ப்பாணம் போறன்” என்று சொல்லி அம்மாவைச் சமாளித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டான். இந்தச் சுதாகரன் பின்னர் போராளியாகி களங்களிலே துணிச்சல் மிக்க ஒரு படைவீரனாக மாறினான். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம். முன்னேறி வரும் சிங்களப் படையை வழிமறித்து மாங்குளத்தில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதித்தன் அந்தச் சண்டைக் களத்தில் 82அஅ எறிகணைச் செலுத்தி ஒன்றுடன் சிங்களப் படைக்கெதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அந்த மோட்டார் அணியில் பொறுப்பாளனும் அவனே. எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்படினும், முடிவெடுத்துச் செயற்படுவது அவன் கையிலேயே தங்கியிருந்தது. சண்டை கடுமையானதாயிருந்தது. ஓயாத அலைகள் – 02 என்ற பெருந்தாக்குதலை கிளிநொச்சிப் படைத்தளம் மீது எமது படையணிகள் மேற்கொண்டிருந்ததால், குறிப்பிட்ட அளவு போராளிகள் தான் அன்றைய சண்டையை எதிர்கொண்டனர். சண்டையின் ஒரு கட்டத்தில் எமது முன்னணி நிலைகளை ஊடறுத்து படைகள் எமது பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. தொலைத்தொடர்புக் கருவிமூலம் இராணுவம் நிற்கும் நிலைகளைக் கேட்டறிந்து மோட்டார் மூலம் எறிகணைகளை அவன் வீசிக்கொண்டிருந்தான். நீண்ட நேரமாகச் சண்டை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எறிகணையை வீசுவதற்கான தூரவீச்சு குறைந்துகொண்டே போனது. இந்தத் தரவின் மூலம் இராணுவம் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றதென்பதை ஆதித்தன் அறிந்துகொண்டான். அந்தக் களமுனையில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால் ஆதித்தன் பதட்டப் படாமல் கூடவிருந்த போராளிகளுக்குத் தெம்பூட்டி இடை விடாமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். எறிகணை வீச்சுக்கான தூரம் தொடர்ந்தும் குறைந்தபடியிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவனது மோட்டார் நிலை எதிரியால் முற்றுகையிடப்படும் என்று அவனால் கணிப்பிட முடிந்தது. அப்படி முடிவெடுத்தால் எறிகணைகளை எதிரியிடம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்தநேரம் ஆதித்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்துக்கொண்டான். கடைசியாக மோட்டாரை அழிப்பதற்கு ஒன்றும், தங்களை அழிப்பதற்கு ஒன்றுமாக இரண்டு எறிகணைகளை வைத்துவிட்டு, ஏனையவற்றை எதிரி முன்னேறும் பகுதி நோக்கி விரைவாக அடித்து முடிப்பதென்பதே அந்த முடிவு. இப்போது எதிரியின் தாக்குதல் இவர்களை அண்மிக்கின்றது. எதிரியின் துப்பாக்கிச் சன்னங்கள் இவர்களின் நிலையை நோக்கியும் சரமாரியாக வரத்தொடங்கியது. 500அ 400அஇ 300அ என மிகக் கிட்டவாக எறிகணைகள் பறந்து வந்து கொண்டிருந்தன. கடைசியாக 200அ வீச்செல்லைக்கும் அடிக்கும் கட்டளை கிடைத்தது. இராணுவம் துப்பாக்கிச் சண்டைக்கான வீச்செல்லைக்குள் வந்தாலும் அவர்கள் மோட்டார் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் கணங்கள் அண்மித்துக் கொண்டிருந்தன. ஆனால், பதட்டமில்லாமல் ஆதித்தனின் சுடுகுழல் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம் இப்போது இவர்களின் மோட்டார் நிலையைக் குறிவைத்து தாக்கத்தொடங்கியது. இத்தனை நெருக்கடிக்குள்ளும் ஆதித்தன் தான் முடிவெடுத்த நிலை வரும் வரை தாக்குதலைத் தொடர்ந்தான். இராணுவத்தின் முற்றுகை வலைக்குள் மோட்டார் நிலை உள்ளாகிக் கொண்டிருந்தது. ஆதித்தன் நினைத்தபடி எறிகணைகள் அனைத்தும் சுடப்பட்டு விட்டது. இனி, மோட்டாரை தகர்ப்பதற்கான நேரம். அதைவிட மாற்றுவழிகள் இல்லை. நூற்றுக்கணக்கான எறிகணைகளைச் சுட்டதினால் தணல் போலப் பழுத்துப் போயிருக்கும் அந்த எறிகணைக் குழலைக் கொண்டு செல்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அத்தோடு எதிரியால் அவர்கள் சூழப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள். எனவே சுடுகுழலைத் தகர்த்து விட்டு பின்வாங்கு வதென்ற முடிவைத் தவிர மிச்சமாக எதுவுமில்லை. ஆயினும், ஆதித்தன் அப்படிச் செய்யவில்லை. கூட இருந்தோர் எதிர்பார்க்காத முடிவை அவன் எடுத்தான். இயக்கம் ஒரு எறிகணை செலுத்தியைப் பெறுவதற்கு எத்தகைய விலைகளைச் செலுத்துகின்றதென்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால், அந்த எறிகணைச் செலுத்தியை அவன் இழக்க விரும்பவில்லை. வெப்பத்தால் தகதகத்துக் கொண்டிருக்கும் அந்தச் சுடுகுழலை தனது தோளில் வைத்தபடி எதிரிக்கு எதையும் விட்டுவைக்காமல் முற்றுகையை உடைத்து வெளியேறினான் அவன். ஆதித்தன் மீண்டு வந்தபோது அவனது சுடுகுழல் பத்திரமாயிருந்தது. அவனது தோள்பட்டை மட்டும் வெந்து போய் பொக்களம் போட்டிருந்தது. இப்படி களங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய வீரன் பின்னர் கரும்புலியாகி விடுதலைப் போருக்குப் பெரும் பலம் சேர்த்து வீழ்த்த முடியாத பெருங்கோட்டையென எதிரி மார்தட்டிய ஆனையிறவை மீட்கும் சமரொன்றிற்கு வலுச்சேர்த்து 25.12.1999 அன்று பாவப்பட்ட மக்களை மீட்கவந்த இயேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் நத்தார் நாளில், அடிமைப்பட்ட தன் இனத்தின் மீட்சிக்காகத் தன்னையே கொடையாக்கினான். “உபசரிப்பு” கரும்புலி மேஜர் ஆந்திரா: இவள் இப்போது தான் இயக்கத்துக்கு வந்திருந்தாள். பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொறுப்பாளர் எல்லோரையும் ஒன்று கூட்டிக் கதைத்தார். தனது கதையின் ஒரு கட்டத்தில் ‘இதுக்குள்ள ஆர் கரும்புலி?” என்ற வினாவைத் தொடுத்தார். கேள்வி முடிந்த சில கணங்களுக்குள் ஒரு சிறிய உருவம் எழுந்துநின்று ‘நான்தான்” என்று கூறியது. சுதர்சினியின் தோற்றத்தைப் பார்த்து இவளா கரும்புலியாகப்போகிறாள் என்று நக்கலாகச் சிரித்தார்கள். அவள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாள். கரும்புலிகளின் பயிற்சித் தளத்தில் ஆந்திராவாக அவள் உலாவிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய உருவத்துள் நிறைய குறும்புத்தனம் இருந்தது. அந்தக் குறும்புத்தனங்களால் முகாமே கலகலப்பாகவிருக்கும். யாராவது எதற்காவது ஆசைப்பட்டால் போதும் அதை அவர்களுக்குச் செய்துகொடுத்துவிடவேண்டுமென்று துடிப்பவள். ஒருநாள் மாமரத்தின் கீழ் பயிற்சி நடந்தது. மரத்தில் மாங்காய்கள் இருந்தன. கூட இருந்த போராளி ஒருவர் சொன்னார் ‘மாங்காயில கறி வைச்சா நல்லாயிருக்கும்” இந்த வார்த்தைகள் ஆந்திராவுக்கு கேட்டிருந்தது. அன்று பயிற்சி நாள் என்பதால் அவள் பொறுத்துக்கொண்டாள். ஓய்வு நாளும் வந்தது. அன்று ஆந்திராவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘இண்டைக்கு மதியம் கட்டாயம் வரட்டாம்” ஆந்திராவின் அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியாது மாங்காய்க்கறி கேட்டவள் இன்னொரு போராளியை அழைத்துக்கொண்டு போனாள். போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாங்காயில் குழம்பு, மாங்காயில் சொதி, மாங்காயில் பொரியல், தட்டுமுழுவதும் மாங்காய்மயம். சென்றவர்களுக்கு விழி பிதுங்கியது. நன்றாக மாட்டி விட்;டார்கள். ஆளையாளைப் பார்த்தபடி மெதுவாக வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தார்கள். பச்சைப்புளி வாயில் வைக்கவே வயிற்றைக் குமட்டியது. ‘ஒண்டும் சொல்லாத பேசாம சாப்பிடுவம் இல்லாட்டி அவள் அழுது கொண்டிருப்பாள்” ஆந்திராவின் அன்பைப் புறக்கணிக்க முடியாமல் கஸ்ரப்பட்டு சாப்பிட்டார்கள். இவர்களின் துன்பத்தை அறியாதவள் இரண்டாவது தடவையும் மாங்காய்க்கறி பரிமாறினாள். ஆந்திராவின் அன்பிலும் குறும்பிலும் சிக்கியவர்கள் இரவு விடுதியில் வாந்தி எடுத்த கதையும் அதன்பின் இருந்தது. இந்தக் குறும்புக்காரி கொக்குத்தொடுவாயில் தன் தோழிகள் பலரை ஒன்றாக இழந்த சோகத்தில் இருந்தாள். அதற்காக எதிரிக்கு பழி தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் காய்ச்சலாக இருந்தாலென்ன? வேறு வருத்தமென்றாலென்ன? விடாமல் பயிற்சிசெய்தாள். ‘என்ர கையால சார்ஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்கவைக்க வேணும்” என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் விரும்பியபடியே 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தை மீட்கும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தினுள் நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துத்திரும்புகையில் நினைத்ததை சாதித்தவளாய் வீரச்சாவைத்தழுவிக் கொண்டாள். “உறுதி” கரும்புலி கப்டன் சத்தியா: சத்தியா. அவள் சின்னப்பிள்ளையல்ல. ஆனால் உருவத்தில் சிறியவள். மிகவும் கலகலப்பானவள். எல்லோரிலும் அன்பானவள். சின்னப் பிரச்சினையென்றாலும் சண்டைபோட்டு தன்கருத்தில் விடாப்பிடியாக நின்றாலும் அவளின் அந்தத் துடிதுடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். ஆனாலும் அவளின் சிறிய உருவம் அவளது கரும்புலிப்பணிக்குத் தடையாயிருந்தது. அவளுடன் கூட இருந்த பல கரும்புலிகள் ஆனையிறவிற்கான கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும்போது சத்தியாவின் சந்தர்ப்பம் தட்டுப்பட்டுக்கொண்டே போனது. ஆனையிறவுக்குச் செல்வதென்றால் ஆனையிறவு உப்பேரியின் தண்ணீரைத் தாண்டவேண்டும். உயரமான போராளிகளிற்கே நெஞ்சளவு தண்ணீர் இருந்தது. ஆயுத வெடிபொருட்களுடன் நகர்வது அவர்களிற்கே சிரமமானதால் சத்தியா செல்வதென்பது சாத்தியம் குறைந்ததென்பதால் அவளை அனுப்ப பொறுப்பாளர் சம்மதிக்கவில்லை. இப்படி இரண்டு மூன்று தடவை அவளது சந்தர்ப்பம் விலகிப்போக அவள் அழத்தொடங்கி விட்டாள். கூட இருந்த கரும்புலி வீரர்கள் அவளை வலிந்து சண்டைக் கிழுத்துச் சீண்டுவதாக அவளைப் பார்;த்து கேலி செய்வார்கள். அன்புச் சண்டை தொடரும். இந்தப் பகிடிகள் தொடர இன்னொரு நாளில் கூடவிருந்து கிண்டலடித்தவர்களும் உண்மையாகவே பிரியும் போது அவளது அழுகை கனத்ததாக மாறியது. ‘நாங்கள் சாகப் போகேல்லை. சாதிக்கப்போறம்” என்று சொல்லி அவளைத் தேற்றிவிட்டுப் போனார்கள். காலங்கள் கழிந்து கொண்டிருந்தாலும், சத்தியா ‘நானொரு கரும்புலித் தாக்குதலைக் கட்டாயம் செய்து முடிப்பன்.” என்ற நம்பிக்கையில் உறுதியாகவிருந்தாள். யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்காக எதிரி மேற்கொண்ட சூரியக்கதிர் நடவடிக்கையை எதிர்கொண்ட போது சண்டைச்சூழலால் மாற்றுடையின்றி போட்டிருந்த உடையுடனேயே நிற்கவேண்டிய சூழல். உடுப்பைத் தோய்த்தால் காயவிட முடியாதென்பதால் நெருப்பு மூட்டி அந்தப் புகையில் அரைகுறையாகக் காயவிட்டுப் போட்டிருந்தாள். ஆனால், அதுவும் பின்னர் பயனளிக்கவில்லை. இவர்கள் மூட்டிய நெருப்பின் புகைக்கு எதிரி செல் அடிக்க கடைசியாக எதுவும் செய்ய முடியாமல் கொஞ்ச நாட்கள் குளிக்காமலிருந்ததையும் அடிக்கடி நினைவுகூருவாள். நீண்ட காலம் பொறுமையாக, நிதானமாக, உறுதியாக காத்திருந்த அந்தச் சிறிய உருவத்தையுடைய சத்தியாவிற்கு அவள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கைக்குக் கிட்டியது. அந்தச் சின்ன உருவம் கரும்புலித் தாக்குதலுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. ஆனையிறவுத் தாக்குதலுக்கு இப்போது நீரேரி கடக்காமல் இன்னொரு பாதையால் போகும் அணியுடன் செல்ல அவளிற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சத்தியா மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டுநின்றாள். ‘ஆனையிறவுக்குப் போகாட்டி பலாலியில போயெண்டாலும் நான் அடிப்பன்.” என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஆனையிறவிலேயே இலக்குக் கிடைத்ததால் அந்த மகிழ்ச்சி. ஆனையிறவுத்தளம் எப்போதும் அசைக்கப்பட முடியாதென வெள்ளைக்காரர்களும் வந்து சவால் விட்டுச்சென்ற தளம். தேசியத்தலைவரின் மதிநுட்ப திட்டமிடலில் ஆனையிறவுத்தளம் பொசுங்கிக் கொண்டிருந்த காலம். முன்னணியில் சண்டையிடும் போராளிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆட்லறிகளை அவற்றின் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கும் தலைவரின் சிந்தனையைச் செயலாக்க அவள் புறப்பட்டாள். ஆட்லறிகள் உடைக்கப்படும்போது சிங்களத்தின் சூட்டுவலு மட்டுமல்ல, ஆனையிறவுப் படைகளின் மனோபலமும் உடைந்தழியும். தலைவர் நினைத்ததைச் செயலாக்கினாள். 31.03.2000 அன்று தன் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்க்கப்பட்ட மகிழ்வோடு எங்கள் தேசத்தின் கற்களில் அழியாதபடி தனது பெயரையும் பொறித்துக்கொண்டாள். “பாதுகாப்பு” கரும்புலி கப்டன் நாகராணி: அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன. எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள். அவளொரு R.P.G சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது. அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல். வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது. மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் R.P.G உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது. ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது. மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் R.P.G நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை. ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. R.P.G யைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் R.P.G க்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள். உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள். இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள். “நினைவுகள்”: கரும்புலி மேஐர் அருளன் தாக்குதலுக்காக விடைபெறும் கடைசி மணித்துளிகள் இந்தக்கணம் வரை அவனுக்கென்றிருந்த எல்லாவற்றையும் மற்றவருக்குப் பிரித்துக் கொடுக்கிறான். ‘இது நிவேதண்ணா தந்த லைற்றர் இது நீதண்ணா போட்ட சேட்டு இது ஆசாக்கா தந்த ஓட்டோகிராவ்” என ஒவ்வொன்றாய் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். கடைசியாக அவனது பையிலிருந்து வெளிவருகிறது இரண்டு கற்கள். அந்தக் கற்களிலொன்றில் இந்துவென்றும் மற்றையதில் nஐயராணி என்றும் எழுதப்பட்டிருந்தது. கூட இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அப்படி என்னதான் இந்தக் கற்களில் இருக்கின்றதென்ற ஏக்கம் அவர்களிடம். அவர்களின் பார்வை அவனுக்குப் புரிகிறது. அவன் அதற்கான காரணத்தைச் சொல்லுகிறான். இதுவெறும் கற்களல்ல ஆனையிறவுத் தாக்குதலுக்காகச் சென்ற கரும்புலிகள் பயிற்சியின் போது குண்டெறிதலுக்குப் பதிலாக கற்களையே எறிவார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் கற்களைச் சேகரித்து வைத்து விட்டு இலக்கு நோக்கி ஒவ்வொன்றாய் எறிவார்கள். ஒரு மழைநாளில் பயிற்சி வேளைக்கு முடிந்ததால் மிஞ்சிய கற்கள் தானிவை. அவர்கள் எறிந்து விட்டுப்போய் விட்டார்கள். அந்த முகாமை விட்டல்ல இந்தத் தேசத்திலிருந்தும் தான். அருளன் முகாம் வருகின்றான். கரும்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தைப் பார்க்கின்றான். எல்லோரது முகங்களும் அவனது மனதில் வந்து போயின. அப்போது தான் அவதானிக்கிறான் இந்துவும் nஐயராணியும் எறிந்த கற்கள் மிச்சமாயிருந்தன. இப்போது அது வெறும் கற்களல்ல கரும்புலிகள் கைபட்ட கற்கள். அவற்றிலிருந்து ஒவ்வொரு கல்லை பத்திரமாக எடுத்த அருளன் அதைப் பத்திரப்படுத்த அந்தக் கரும்புலிகளின்; நினைவுகளை அந்தக் கற்களிலே சுமந்தபடி பேணி வந்தான்;. கரும்புலிகளுக்குப் பயிற்சி ஆசிரியனாக இருந்த அவன் கரும்புலிகளின் உணர்வைத் தாங்கியபடி தான் கரும்புலி ஆகவேண்டுமென்று அடிக்கடி தலைவருக்குக் கடிதம் போட்டு விடாப்பிடியாக நின்று கரும்புலியாய் மாறினான். அருளனின் வயிற்றில் களத்திலே தாங்கிய விழுப்புண்ணின் வலியிருந்தது. அவனால் சாதாரண நேரங்களில் நிமிர்ந்து நிற்பதே சிரமமானது. ஆனாலும் அவன் பயிற்சி ஆசிரியன் என்பதால் பயிற்சித் திடலில் தனது உடலின் வலியைக் காட்டமாட்டான். பயிற்சித் திடலில் நிமிர்ந்த தோற்றத்தோடு எடுப்பான அருளனையே உங்களால் காணமுடியும். பயிற்சி முடிந்ததும் தனது விடுதியில் வந்து அப்படியே படுத்துவிடுவான். சிறிய ஓய்வின்பின்தான் அவனால் திரும்ப இயங்கமுடியும். அந்த வீரன் இன்று தான் சுமந்த நினைவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டுதான் பயிற்சி கொடுத்துப்போன வீரர்களைத் தொடர்ந்து கையசைத்துவிட்டு விடைபெற்ற அவன் ஓயாத அலைகள் மூன்றிற்காய் எங்கள் தேசம் கொடுத்த விலைகளில் ஓர் விலையாய் காற்றோடு கலந்து கொண்டான். “கனவு” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்: யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்று அது. சாதாரண மனிதர்கள் வாழாத சூனியப் பிரதேசமாய் அது இருந்தது. எங்களுக்குச் சொந்தமான அந்த மண்ணில் இப்போது அந்நியப் பாதங்களின் ஆட்சி. செங்கதிர்வாணன் எதிரியின் இருப்பை வேவு பார்ப்பதற்காக வந்திருந்தான். மக்கள் துரத்தப்பட்ட அந்த ஊரில் எதிரியின் கண்களுக்குத் தென்பட்டு விட்டால் தப்புவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது. உடைந்த கட்டடங்களும், கடற்கரையோரத்தில் காணப்படும் பள்ளங்களும் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தங்களை மறைத்தபடி இராணுவத்தின் கோட்டைக்குள் புகுந்து தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் வேவுக்காக நகர்ந்து கொண்டிருந்த அவர்கள் சடுதியாக இராணுவத்தை சந்தித்துக்கொண்டார்கள். சண்டையைத் தவிர்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்ப வேண்டுமாயின் சண்டை பிடித்தாக வேண்டிய சூழல். சுற்றிவர எதிரியால் சூழப்பட்ட அந்தச் சூழலுக்குள் சண்டை தொடங்கியது. உள்ளுக்குள்ளே சண்டை தொடங்கியதால் முன்னணி அரண்கள் யாவும் விழிப்பாயிருக்கும். உடனடியாக வெளியேறுவது என்பது சாத்தியமற்றுப்போக எதிரியின் பகுதிக்குள்ளேயே மறைப்புத் தேட வேண்டியதாயிற்று. இப்போது புதிதாய் இன்னொரு நெருக்கடி கூட வந்தவர்களில் ஒருவர் காலில் குண்டுபட்டு விழ அவரைச் சுமந்தபடி இராணுவப் பகுதிக்குள் இராணுவத்தைச் சுழித்துக்கொண்டு மறைப்பிடம் தேடினார்கள். இராணுவத்தின் தேடல் தொடர்ந்ததால் இடைவிடாது இடம்மாறிக் கொண்டிருந்தார்கள். இடம் மாறிமாறி நீண்டதூர நடை நாவறண்டு தண்ணீருக்காக காத்துக் கிடந்தது. பசிவேறு வயிற்றைக் குடைந்தது. எதுவும் உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியமேயில்லை. செங்கதிர்வாணன் காயப்பட்ட வீரனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். நீண்ட நடையும், நேரமும் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சமாய்ப்போய் களைத்துப்போன தருணத்தில் கிணறு ஒன்று அவர்களின் கண்களுக்குப் பட்டது. கிணற்றைக் கண்டதுமே தண்ணீர்த் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வு. வாளியில்லாத அந்தக் கிணற்றில் வேறு வழியில்லாமல் உள்ளிறங்கி ஆனந்தத்தோடு தண்ணீரை வாயில் வைத்த போது மிஞ்சியது ஏமாற்றம். அது உப்பு நீர். உடல் சோர்ந்த போது காயப்பட்டவன் தண்ணீருக்காக தவமிருப்பது நினைவிற்கு வந்தது. உடற்களைப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நடந்தான். அவனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கோ தொலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கிருந்தவர்கள் அரட்டை அடிப்பதில் மூழ்கியிருந்தனர். சத்தமில்லாமல் அவர்களின் வீட்டுக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொண்டான். இன்னோரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் எடுத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நடந்தான். செங்கதிர் வாணனின் இடைவிடாத முயற்சியால் விழுப்புண்பட்டவனிற்கும் கூடவிருந்தோருக்கும் தண்ணீர் கிடைத்தது. விழுப்புண் பட்டவனின் விழுப்புண்ணிற்கு பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் கலந்த கைமருந்து வைத்தியமும் அவனால் நடந்தது. பின்னர் உதவியணி வந்து அவர்களும் அடிவாங்கி விழுப்புண்பட்டோரின் எண்ணிக்கையும் கூடி, வெளியேறுவதற்கு பலமுறை முயன்று எதிரியிடம் அடிவாங்கிக் கடைசியாய் ஓர் நாள் சேற்றுக்குள்ளால் நடந்து ஒருவாறு வெளியேறினார்கள். இத்தனை துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிச்சல்லடையாக்கிய போதும் ஒன்று மட்டும் பத்திரமாய் எந்தச் சேதமுமில்லாமல் வந்து சேர்ந்தது. அது அவர்கள் திரட்டிய வேவுத் தகவல்கள் தான். இந்தச் செங்கதிர்வாணன் பின்னர் தேசத்தின் வெற்றிக்காகக் கரும்புலியாக மாறினான். வயதில் மூத்தவனான இவன் மற்றப் போராளிகளை மகிழ்வாய் வைத்திருப்பான். பயிற்சியின் போது கிடைக்கும் தேநீர் வேளை கூட போராளிகளை மகிழ்வாக்க நொடி கேட்பது இவன் வழக்கம். இதனால் நொடி மாஸ்ரர் என்ற பட்டப்பெயரும் இவனுக்கிருந்தது. இந்தச் செங்கதிரிடம் ஒரு ஆசையிருந்தது. ஆட்லறி ஒன்றிற்கு தனது கையால் குண்டு கட்டி அதை வெடிக்க வைக்க வேண்டுமென்று. அந்தக் கனவோடு மணலாற்றுப் பகுதிக்குள் வேவுக்காகச் சென்று திரும்பும் வழியில் 29.10.1999 அன்று அவன் வீரச்சாவடைய நேர்ந்தது. நிறைவேறாத அந்த வீரனின் ஆசையைப் பின்னாளில் பல ஆட்லறிகளை உடைத்து கூடவிருந்த கரும்புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள். நினைவுப்பகிர்வு: போராளி துளசிச்செல்வன். நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04 புரட்டாசி 2008). https://thesakkatru.com/veeraththin-sigarangal/- கரும்புலி கப்டன் நாகராணி
கரும்புலி கப்டன் நாகராணி டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கரும்புலி கப்டன் நாகராணி: “பாதுகாப்பு” அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன. எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள். அவளொரு R.P.G சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது. அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல். வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது. மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் சு.P.பு உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது. ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது. மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் R.P.G நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை. ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. R.P.Gயைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் R.P.Gக்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள். உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள். இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள். நினைவுப்பகிர்வு: போராளி துளசிச்செல்வன். நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04 புரட்டாசி 2008). https://thesakkatru.com/black-tigers-captain-nagarani/- கரும்புலி மேஜர் ஆதித்தன்
கரும்புலி மேஜர் ஆதித்தன் டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து நிதானித்துக் கொள்வதற்கிடையில் அந்த நிகழ்வு அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. கைகளால் தொடுகின்ற தூரத்திற்குள் கடுமையான துப்பாக்கிச் சூடுகளை எதிர்பார்த்தது தான்; என்றாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இராணுவ முகாம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது முகாமிற்கு அருகே பதுங்கியிருந்த இராணுவம் தான் தாக்குதலை ஆரம்பித்தது அந்தத் தாக்குதல். இமைப்பொழுதில் அவனோடு கூடவந்தவர்களைப் பிரித்துவிட அவன் தனித்தவனானான். எங்கும் கடும் இருட்டு, இருளிற்குள் இருந்து பெரிய உருவம் ஒன்று பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்தது. அவனைவிட பெரிய உருவம் அது இரண்டு கைகளாலும் அவனை நசுக்கி விடுவது போல் அழுத்திப் பிடித்தது. மின்னல் வேகத் தாக்குதல், என்றாலும் நிதானித்துக் கொண்டான் பறிக்க முயற்சித்தான். முடியவில்லை. மூச்சுத்திணறியது. அவனைப் பிடித்திருப்பது இராணுவ வீரன். அவன் பெருங்குரல் கொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்தான். “சிறீல்ல்ல்….. சிறீல்ல்ல்…..” நிலமை மோசமாவது தெரிந்தது. புயல் வேகத்தில் தனது காலால் அந்த ஆக்கிரமிப்பானின் காலைப் பலமாய் உதைத்தான். சிறிய தளர்வு. அதை சாதகமாக்கி கைகளின் பிடிக்குள் இருந்து விலகிக்கொண்டான். அவன் வைத்திருந்த ஆயுதம் 203 (டொங்கான்) குறுகிய தூரத்திற்குள் சுடமுடியாது. எட்ட நின்று சுடுவதற்கு நேர அவகாசமில்லை. எதிரி நிதானிக்க முன் தனது ஆயுதத்தால் ஓங்கி ஓர் அடி போட்டான். எதிரி சற்று நிதானமிழந்து நின்றான். மீண்டும் முகத்தில் பலமான அடி. கடைசியாய் தனது பலம் முழுவதையும் கைகளில் திரட்டி கன்னத்தில் போட்டான் ஒரு போடு அதற்கு பின் ஆமிக்காரன் நிமிர்ந்து நிற்கவேயில்லை. “அம்மே” என்று அடிவயிற்றில் அலறியபடி நிலத்தில் தொப்பென்று சாய்ந்தான். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்து உடல் தொப்பமாய் நனைந்துவிட்டது. நின்று பார்க்க நேரமில்லை. கத்திய சத்தம் கேட்ட திசைக்கு இராணுவம் தேடிவரும் சப்பாத்துச் சத்தங்கள் கேட்டது. கீழே விழுந்துவிட்ட ‘ஷெல்’லினை எடுத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு ஓடினான். நேரங்கழித்து அந்த இடமெல்லாம் இராணுவ நடமாட்டங்கள் அடங்கிப்போனது. அவன் தனித்த ஒருவனாக நின்றாலும் தோழர்களின் நினைவு நெஞ்சைக் கனமாக்கியது. ‘காயப்பட்டு வீழ்ந்து கிடப்பார்களோ இல்லை வீரச்சாவடைந்திருப்பார்களோ’ தனக்குள் எண்ணியபடி அவன் அந்த இடமெங்கும் தேடத் தொடங்கினான். சுற்றுப் புறமெங்கும் தேடினான். ஒவ்வொரு பற்றை மறைவுகளையும் தேடினான். எங்குமே காணவில்லை. காலை விடியப்போகின்றது என்பதால் முகாமில் இருந்து சற்றுத் தள்ளிவந்து நிலையெடுத்தான். விடிந்த பின்பு தான் தோழர்களோடு சேர்ந்துகொண்டான். எவருக்குமே ஒருவித இழப்புகளும் இல்லை. காலையில் அவனைக் கண்டதும் போராளிகள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். அவனின் ஆயுதத்தில் சின்ன தசைத்துண்டு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. எவருக்கும் அது புரியவில்லை; புருவங்களை உயர்த்தினார்கள். ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் சிரித்தான். “இதுதான் இராத்திரி என்னை உயிரோட பிடிக்க வந்தவன்ர கன்னம்” இதற்குப் பின் தான் எல்லோரும் சிரித்தார்கள். அவர்களின் விழி அவனின் வீரத்தைப் பாராட்டியது. ஆதித்தன் அவனுடைய வீட்டு வாழ்க்கை, சோகங்களை தனக்கு சொந்தங்களாக்கிக் கொண்ட பயணம். அவன் தன்ர வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் வார்த்தைகளே ஈரமாகும். அவனது உறவின் வட்டம் மிகச்சிறியது. எலும்பும் தோலுமாய்ப் போனாலும் உடலில் இருந்து பிரியத்துடிக்கின்ற உயிரைப் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக இழுத்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவனின் அம்மா. தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி வீட்டில் இருந்து பிரிந்துபோன மூத்த அண்ணன் ஒருவன் அதைவிட அவனுக்கு சின்ன அண்ணன் என்றொரு உறவு. அவ்வளவு தான். சின்ன வயதிலேயே அப்பாவை மரணத்திடம் பறிகொடுத்துவிட்டான். எஸ்ரேட் வாழ்க்கை, அம்மாவின் இயந்திரத்தனமான உழைப்பு இவையெல்லாம் சின்ன வயதிலிருந்து அவனுக்கு மனக்காயங்களை ஏற்படுத்திய விடயங்கள். காலையில் பனிப்புகார் கலைய முதல் எழுந்து, பள்ளிக்கூடம் போகின்ற பிள்ளைகளுக்காக ரொட்டி சுட்டு வைத்துவிட்டு அழைப்பு விசில் ஊத அவசரம் அவசரமாகக் கூடையைத் தூக்கிக்கொண்டு தோட்டம் போகின்ற அம்மா சாயந்தாரம்தான் வீடு வருவாள். வீட்டை வருகின்ற நேரம் அட்டை கடித்துக் காலெல்லாம் இரத்தம் கசிந்துகொண்டிருக்கும். ஆனாலும் அம்மா சொல்லுவாள் “நீங்கள் வளர்ந்து பெரிய மனுசன்களாய் எங்கயாச்சும் நல்லா இருக்கனும்” அதுக்காகத் தானே அவள் இவ்வளவு கஸ்ரங்களையும் அனுபவித்து அந்த வாழ்க்கையை சுமந்து கொண்டிருக்கின்றாள். அன்றொருநாள் காலையில் அழைப்பு விசில் முதல்முறை ஊதி இரண்டாம் முறை ஊதிய பின்பும் அம்மா பாயைவிட்டு எழுந்திருக்கவில்லை. அன்று அவளை நோய் பாயிலியே சிறை வைத்தது. அன்றிலிருந்து அவள் எழுந்து நடமாடக்கூட முடியாதவளாகி விட்டாள். “சின்னண்ணா டேய் அம்மாவுக்கு வருத்தமடா மருந்தெடுக்கிறதெண்டா ஆயிரம் ரூபா காசு தேவை” சின்ன வயதிலேயே அம்மாவை மரணத்திடம் பறிகொடுத்துவிடாது காப்பாற்றி விடவேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் ஊறிக்கொண்டது. அம்மாவைக் காப்பாற்றுவது என்றால் பணம் தேவை. பணத்திற்கு என்ன செய்வது! இரண்டு பேருக்குமே வழி தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். படிப்பை நிறுத்தி எங்கையாவது வேலையில் சேர்ந்து கொள்ளுவது. அண்ணன் எங்கோபோய் ஒரு வேளையில் சேர்ந்துகொண்டான். இவனையும் இவனது உறவுக்காரர் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் சேர்த்து விட்டார். பள்ளி வயதிலேயே அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கடையிலேயே வேலை செய்யத் தொடங்கினான். முதலில் கடையில் வேலை செய்பவர்களுக்கு தேனீர், சாப்பாடு வேண்டிக் கொடுக்கின்ற வேலை, பின், சரை கட்டுவது, பொருட்கள் நிறுப்பது, கொள்வனவுப் பொதிகள் எடுத்து வருவது, அதற்குப்பின் கணக்கெழுதுவது, வங்கியில் காசோலை வைப்புச் செய்வது என்று திறமையின் அடிப்படையில் முன்னேறி வந்தான். கொழும்பில் கடையில் நின்றபோது, பதுளையின் வாழ்க்கையைச் சற்று நினையாது இருந்தாலும் விடுமுறையில் அம்மாவைப் பார்க்க வருகின்றபோது நினைவுகள் சூடாகும். 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடந்தவேளை இரண்டு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அம்மா ஓடிவந்து ஒளிஞ்சிருந்த சின்ன மரவள்ளித் தோட்டம் இதுதான். இதற்குள் அம்மா அழுத அழுகை இப்போதும் காதுகளில் பிசுபிசுத்தது. “என்ற உயிர் போனாலும் பரவாயில்லை நீங்கள் எங்காச்சும் ஓடித்தப்பியிருங்கோ” இந்த இடத்தில் வைத்துத்தான் அவனின் கண் முன்னால் அப்பாவை அடித்து ரக்கில இழுத்து ஏத்திக்கொண்டு போனவங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் அவனுக்குள் இனம்புரியாத கொதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனுக்கு வழிகள் எதுவும் புரியவில்லை. அதெல்லாம் அவனுக்குள்ளேயே அடங்கிப்போனது கடைசியில் மொத்தமாக பொருட் கொள்வனவு நடக்கின்ற நாட்களில் இரவு பகல் பாராது வேலை நடக்கும். அல்லது நேரத்தோடேயே கடைக்கதவு சாத்தப்பட்டுவிடும். அன்றும் நேரத்துடன் வேலைகளெல்லாம் முடிந்து விட்டது. எல்லோரும் கூடி இருந்து வானொலி கேட்டுக் கொண்டிருந்தார்கள் அது ஓர் எதிர்பாராத நிகழ்வு. வானொலியில் பி.பி.சி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. வானொலியை யாரும் கேட்பதாக இல்லை. வேலை அசதி தீருவதற்காக எல்லோரும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். திடீர் என அவனின் குரல் அவர்களிடமிருந்து பிரிந்து மௌனமாகிக் கொண்டது. வானொலி நிகழ்ச்சி அவனது செவிகளை ஈர்த்துக் கொண்டது. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை செய்தியாளர் ஆனந்தி அவர்கள் செவ்வி கண்டது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தத் தலைவன் உச்சரித்த ஒவ்வொரு வரிகளையும் கேட்டுக் கேட்டுப் பிரமித்துப் போனான். அன்று தான் அவனுக்கு தமிழர்களுக்கென்றோர் தலைவன் இருப்பதும், இப்படிப் பெரியளவில் போராட்டம் நடப்பதும் தெரிய வந்தது. அவனின் நெஞ்சுக்குள் நம்பிக்கைப் புயலொன்று மையங்கொள்ளத் தொடங்கியது. தலைவரின் பேட்டியைக் கேட்டதிலிருந்து தனது பயணத்தின் ஒரு விடிவெள்ளியைக் கண்டுவிட்ட திருப்தி அவனுக்கு. முகம் தெரியாத அந்த தலைவன் மீது அளவு கடந்த நம்பிக்கையும், பாசமும் வைத்தான். மௌனமாய் அவனது மனதிற்குள் எத்தனையோ கோடியாண்டின் மழைவெள்ளம் ஒன்றுசேர்ந்து கரைபுரண்டது. போராட்ட ஆதரவாளர்களை அவன் கண்டுகொள்கின்ற போதிலெல்லாம் போராட்டம் பற்றியும், போராட்டத்தில் எவ்வாறு இணைந்துகொள்வது பற்றியும் கேட்டு அறிந்துவைக்கத் தொடங்கினான். 1992ம் ஆண்டு அறிந்த அறிந்த தலைவனை 1994ம் ஆண்டுவரை யாருக்கும் தெரியாது நெஞ்சுக்குள் பூட்டிவைத்து நேசித்தான். 1994ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொள்வது என்ற முடிவோடு கொழும்பிலிருந்து புறப்படத் தயாரானான். பதுளைக்குச் சென்று அம்மாவைப் பார்த்தான். “கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் தெரிஞ்சவை யாழ்ப்பாணம் போகினம் அவையோட போய் இருக்கப்போறன்” என்றான். மகன் தன்னைவிட்டு நீண்டதூரம் போகிறானே என்ற ஏக்கம் அவள் கண்களைப் பெருக்கெடுக்க வைத்தது. “எங்கேயெண்டாலும் நல்லாயிருந்தாச்சரி” அந்த விடைகொடுப்பிற்குப் பின் என்றுமே அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. அவன் நினைத்து வந்தது போலவே யாழ்ப்பாணம் வந்ததும் இயக்கத்தில் இணைந்து கொண்டான். தலைநகர் படையணிதான் அவனை உள்வாங்கிக் கொண்டது. தலைநகர் சென்று அங்கே பல சண்டைகளிலும் பங்கெடுத்தான். பின் வன்னிக்கு வந்து ‘ஜயசிக்குறு’ நடவடிக்கை எதிர்ச்சமரிலும் களம் இறங்கினான். ஆனாலும், அவனது மனம் திருப்திப்படவில்லை. இந்த தேச விடுதலைக்காக அதிஉயர்வான பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்ற உணர்வில் தலைவருக்கு கடிதம் வரைந்தான். “நான் கரும்புலியாகப் போவதற்கு அனுமதி தாருங்கள்” கடிதம் வரைந்து விட்டுக் காத்திருந்தான். பதில்க் கடிதம் வருவதற்கு முன் வீட்டில் இருந்தும் கடிதம் வந்திருந்தது. அம்மா அழுதழுது காகிதத்தை நனைத்திருந்தாள். “பக்கத்து ஊட்டுக்காரங்க மக எங்க, மக எங்க எண்டு கேட்டு ஒரே தொல்லையாய் இருக்கு. ஒன பார்த்து கனநாளாய்ப் போச்சு ஒருக்கா வந்திட்டுப்போ மக” அம்மாவின் கடிதம் வந்த அதேதினம் தான் தலைவரிடமிருந்தும் பதில்க் கடிதம் வந்திருந்தது. அன்றைய நாள் அவனுடைய வாழ்க்கையின் சந்திரகிரகணம் அம்மா …. போராட்டம் … அவன் எடுத்துக்கொண்ட முடிவு?! அம்மாவின் கடிதத்தை மனசோடு வைத்துவிட்டு அவன் தனது பணிகளைத் தொடர்ந்தான். கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டு இலக்குக் கிடைக்கும்வரை காத்திருந்தான். அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முதலே எந்த நிமிசத்திலும் போராட்டத்திற்காகத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக்கொள்ள துணிந்தவனாகவேயிருந்தான். அப்படியான நாளொன்றில் மாங்குளப் பகுதியில் ‘ஜயசிக்குறுய்’ இராணுவ நடவடிக்கையை மறித்துப்போடப்பட்ட பாதுகாப்பு அரணில் நின்றிருந்தான். அன்று காலை விடியுமுன்னே காடு கண்விழித்துக் கொண்டது. விடிகின்ற ஓசையே வெடிச் சத்தமாய்த்தானிருந்தது. முன்பக்கம் ‘டாங்கி’களின் இரைச்சல், பின்பக்கம் துப்பாக்கிகளின் சடசடப்பு; சுற்றிலுமே குண்டுவெடிப்பின் அதிர்வுகள்; எல்லா வழிகளிலும் அடைக்கப்பட்ட ஒரு முற்றுகைக்குள் அவர்கள் முடக்கப்பட்டிருப்பது விடிந்த பின்புதான் தெரியவந்தது. ஆனால் அது இரவே நடந்தேறிவிட்டது. இப்போது எல்லா முனைகளிலும் வெடியதிர்வுகள் அவனின் நிலையை நெருக்கிவருவது தெரிந்தது. அவனின் பொறுப்பின் கீழ் இருந்த ஒரு 82மி.மீ மோட்டரும் ஏழு போராளிகளும், இறுக்கமான அந்த முற்றுகையை உடைத்து வெளியேவர முடியாது என்று தெட்டத்தெளிவாக தெரிந்த பின்னும், அவன் பதட்டம் அடையவில்லை. “இருக்கிற ஷெல் முழுவதையும் அடிப்பம்” என்று கூறி நின்ற போராளிகளைத் திடப்படுத்தி வைத்திருந்தான். இறுதிவரையும் எதிரிக்கு இழப்பு ஏற்படுவதிலேயே அவன் குறியாக இருந்தான். 300 மீ… 275 மீ…. 250 மீ…. 225 மீ எதிரிக்கேற்ப தூரவீச்சு மிகவேகமாக குறைந்துகொண்டு போகப்போக அவர்களது முற்றுகை இறுகுவது தெரிந்தது. முன்புறம் நான்கு ‘ராங்கி’கள் நெருக்கமாக வந்து விட்டது என்பதை அவற்றின் ஓசைகளில் இருந்து பிரித்து அறியக் கூடியதாக இருந்தது. வைத்திருந்த ஷெல்களெல்லாம் அடித்து முடிக்கின்ற நிலை வந்தபோது “இரண்டு ஷெல்லை எடுத்துவை ஆமிக்காரன் கிட்டவந்தா வெடிக்கவைச்சு மோட்டரையும் எங்களையும் அழிப்பம்” எதுவித கலக்கமும் இல்லாது கூறிவிட்டு பின்வாங்குவதற்காக மரத்திலே கட்டியிருந்த ‘குறோசை’ ஏறி அவிழ்த்தான். “ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பின்வாங்கக் கூடியமாதிரி இருங்கோ” என்று கூறிவிட்டு வெளியில் நிலமையைக் கவனித்தான். இராணுவம் மிகவும் நெருக்கமாக வந்துவிட்டது. ஒவ்வொரு இராணுவ வீரனையும் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இராணுவத்தின் செறிவு எங்கு குறைவாக உள்ளதோ அந்தப் பகுதியை கவனித்து அந்தப் பகுதியூடாக, இருந்த துப்பாக்கிகளை வைத்து தாக்குதலை நடத்தி பின்வாங்கினான். அவனுடன் நின்றவர்களுக்கோ அல்லது ஆயுதத்திற்கோ சேதம் இல்லை என்றாலும் பெரும் சிரமத்தின் பின்தான் எமது தற்காலிக நிலையை வந்தடைந்தனர். அதற்குப்பின்தான் அவன் கரும்புலியாய் இணைந்து அவனுக்கு அவனுக்கு முதலில் கிடைத்த இலக்கு மணலாற்றுப் பகுதியில் இருந்தது. அந்த இலக்கை அழிக்க பயிற்சி எடுத்து ஓய்வாக தேனீரோ உலருணவோ உண்ணுகின்ற வேளை இப்படித்தான் சொல்லுவான். “நான் காயப்பட்டாலும் நினைவு இழக்கிறவரை தவண்டு தவண்டெண்டாலும் என்ர பணியை நிறைவேற்றுவன்” அந்த தாக்குதலுக்கு அவன் PK இயந்திரத் துப்பாக்கிதான் கொண்டு போகவிருந்தான். “இதுதான் அண்ணை எதிர்பார்க்கிறதைச் செய்து முடிக்கப்போறது” என்று அன்பாக தூசி துடைத்து மூடிவைப்பான் தனது ஆயுதத்தை. ஆனால் அந்த இலக்குத் திட்டத்தின்படி தாக்க வேண்டிய தேவை இல்லாமையினால் அவன் வேறு வேலைத்திட்டமாக அதே பிரதேசத்திற்குள் அனுப்பப்பட்டான். அதை நிறைவேற்ற வந்தவனிற்கு யாழ். மாவட்டத்திற்குள் ஓர் இலக்கு வந்தது. அதை அழிக்கச் சென்ற வேளைதான் இராணுவத்திடம் பிடிபட நேர்ந்தது. கையால் அடித்துவிட்டுத் தப்பி வந்திருந்தான். என்றாலும் அங்கே அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தையுமே செய்து முடித்திருந்தான். “அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார் அண்ணையின்ர எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என்றுதான் எப்போதும் அவன் உதடுகள் உச்சரிக்கும். ஆனையிறவுக்குள் தாக்குதல் நடாத்துவதற்காக அணிகள் பிரிக்கப்பட்டபோது இவனை அந்த அணிகளுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. அந்த அணிகளோடு தானும் போகவேணும் என்று எவ்வளவு பாடுபட்டுக் கேட்டான். என்றாலும், அவன் அந்தத் தாக்குதலுக்கு அனுமதிக்கப்படவில்லை. சரியான மனக்கவலையோடு காத்திருந்தான். அதுக்கான சந்தர்ப்பம் மிக விரைவிலேயே கிடைத்தது. வேறுமுனையொன்றில் தாக்குதல் தொடுக்க வேண்டியிருந்ததினால் அவசரமாக கரும்புலிகள் அணி தயார்படுத்தப்பட்டபோது அந்த அணிகளோடு ஆதித்தனும் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அணிகள் புறப்படுவதற்கு தயாராக நின்ற இறுதிக்கணம், சிரித்துச் சிரித்து கையசைத்து எல்லோருக்கும் விடைகொடுத்துக் கொண்டிருந்தான். போகின்ற நேரம் இதைத்தான் சொல்லிவிட்டுப் போனான். “அண்ணை எங்களுக்கு போகச்சொல்லி விடைகொடுத்த நேரம், அண்ணயின்ர முகம் வாடிப்போய் இருந்திச்சுது நினைக்க இப்பவும் மனசுக்க வேதனையாக் கிடக்குது. மிக விரைவிலேயே அண்ணையின்ர காலத்திலேயே தமிழீழம் மலரும் அதைப் பார்த்து அண்ணை சிரிக்கேக்கை தான் என்ற மனம் ஆறுதலடையும்” சொல்லிவிட்டுப் புறப்பட்டான். போனவர்கள் என்ன செய்தி சொல்லுவார்கள் என காத்திருந்தவர்களுக்கு வந்த செய்தியோ இதயங்களிற்குள் இடியைச் சொருகியது. வானம் தலையைத் தொட்டுவிட்டது போன்ற உணர்வு. ஓயாத அலைகள் மூன்றிற்கு இந்தத் தேசம் கொடுத்த பெருவிலைகளுள் ஒன்றாய் ஆதித்தனும் போய்விட்டான். என்றாலும் என்றைக்கும் அவன் நினைவினைச் சுமந்தபடியே இந்த தேசம் சுவாசித்துக் கொள்ளும். வீரப் போரிற்கு ஆதித்தன் தோள்கொடுத்த களங்கள்:- 27.03.1997ல் புல்மோட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல். 05.11.1997ல் மொறவேவா பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல். 09.08.1997 குச்சவெளி பகுதியில் இராணுவ ரோந்து அணிமீதான தாக்குதல். 11.10.1997 பரந்தனிற்கும் கரடிப்போக்குச் சந்திக்கும் இடையில் இராணுவ அணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதல். 09.01.1997 ஆனையிறவு, பரந்தன் இராணுவ தளங்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதல். 1997 – 1998ல் கரும்புலிகள் அணியிற்கு வரும்வரை ஜயசிக்குறுய் எதிர்ச்சமரில் 82.M.M மோட்டாராளனாக தாக்குதலில் ஈடுபட்டது. கரும்புலிகள்அணியில் இணைந்தபின் ஓயாதஅலைகள் – 03ல்…, மணலாற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை. யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை. நினைவுப்பகிர்வு: துளசிச் செல்வன். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை – மாசி 2000). https://thesakkatru.com/black-tigers-mejor-aathithan/- இறைவனிடம் கையேந்துங்கள்
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இசையின் ஏழு சுவரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ – (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இடயர்க்கு காட்சிதந்தாய் ஞானிகள் வணங்க நின்றாய் – (2) குடியினில் தவழ்ந்து வந்தாய் குவலயம் விளங்கச் செய்தாய் – (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே ஏழ்மையில் பிறந்து வந்தாய் எளிமையை உடுத்தி நின்றாய் – (2) மனதிலே அமைதி தந்தாய் மனிதனாய் வாழச் செய்தாய் – (2) வடிவாய் வரமாய் பிறந்த மகனே வசந்தம் வழங்கும் செல்ல மகனே இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இசையின் ஏழு சுவரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ – (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இடையர்கள் தந்த காணிக்கை போல - Idaiyarkal thantha இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2) இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே (2) 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு... 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு... எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 ஆது மகன் ஸத்தாது... குலவலிமை பெருவாழ்வு உலகம் இறைவனின் சந்தை மடம்- இறைவனிடம் கையேந்துங்கள்
என் அப்பனே என்னையனே கந்தனும் வருவான் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்- இறைவனிடம் கையேந்துங்கள்
குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக சின்ன சின்ன பூவே சிங்கார பூவே- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன்- மேஜர் செங்கோல்
மேஜர் செங்கோல் டிசம்பர் 24, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற தனது பெயரைக் காப்பாற்றிய ஒரு காவியம் இன்று எங்களுடன் இல்லை. மணலாற்றில் களவரலாற்றில் இவனது நிதிப்பணியை நினைத்துப் பார்க்கிறேன்…. நிதிப்பொறுப்பாளனாய், தோளில் பணப்பையைத் தொங்கவிட்டபடி ஓடி ஓடிக் கடமையைச் சரிவரச் செய்த நாட்கள் தான் எத்தனை.? நிதி இருக்குமிடத்தில் நீதியிருப்பதில்லை. நீதியிருக்குமிடத்தில் நிதியிருப்பதில்லை. ஆனால் செங்கோலிடம் நிதியும், நீதியும் இணைந்திருந்தன. செங்கோலுக்கு என்றும் கண்கள் இரத்தம் போல் சிவந்திருக்கும். அவன் கண்கள் ஏன் சிவந்து கிடந்தன என்பதை இப்போதுதான் சிந்தித்துப் பார்க்கிறேன். தூங்குவதற்கு இவனுக்கு நேரம் கிடைத்ததில்லை. நாம் படுக்கும் போது விளக்கும் கணக்குமாய் இருப்பதைப் பார்க்கிறோம். விழிக்கும் போதும் அதே மேசையில்…. அதே இருக்கையில்…. அவன் எப்போது தூங்குகின்றானென்பதை இறுதிவரை என்னால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ‘கப்டன் சங்கிலி’ ஓயாமல் வாகனமோட்டித் தியாகியாகிப் போனவனின் பெயர் தாங்கிய லொறிவண்டி. செங்கோலைத் தவிர மற்றவர்கள் அதனை ஓட்டுவது கடினமானது. சிங்கள அரசின் பொருளாதாரத் தடையை உணர்ந்து எங்கள் போராட்டத்தை வளர்க்கவேண்டுமென ஓடிய லொறிவண்டி அது. மணலாற்றுச் சண்டைக் களங்களுக்கெல்லாம் அந்த லொறி வண்டியில் தான் பொருள்களை ஏற்றி இறக்குவான் செங்கோல். பணத்தை அளவோடு செலவிட வேண்டுமென்பதற்காக, தானே சென்று கொள்வனவு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். இயக்கத்தின் வளர்ச்சியை நெருக்கடியான காலத்தில் எவ்வாறு எடுத்துச் செல்ல N வண்டுமென்பதைச் சரியாகப் புரிந்து நிதிப்பணி புரிந்தான். சில நாட்களாக ஓடுவாரற்று நிற்கும் ‘கப்படன் சங்கிலி’ லொறிவண்டியைப் பார்க்கும் போது நெஞ்சில் வேதனை முட்டிக் கொள்கிறது. மணலாற்றில் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் களைப்புடன், பசியுடன் இருக்கும் எம் வீரர்கள், ‘செங்கோலண்ணனுடைய இடத்திற்குப் போய் வருவம் மச்சான்’ என்று கூறிக்கொண்டு ஓடிவருவார்கள். செங்கோல் ஏதாவது நல்ல சாப்பாட்டுப் பொருள்களைக் குறைவின்றி வாங்கி வைத்திருப்பான். வயிராற, ஆசைதீரத் தன் தோழர்கள் சாப்பிடும்போது தனக்குள் மகிழ்வையும், நிறைவினையும் கண்டு கொண்டான். இன்றோ, நாளையோ மண்ணுக்காய் உதிரப்போகும் அவர்களை மகிழ வைப்பதையே தன் மகிழ்வாகக் கருதியவன், கண்மூடிக் கிடந்த போது அவன் முன்னே பேசுவதற்கு வார்த்தைகளின்றித் தலை குனிந்து நின்ற வீரர்களை நினைத்துப் பார்க்கும்போது…. செங்கோல் மக்களுடன் கொண்டிருந்த உறவு வித்தியாசமானது. அவன் யாருடைய வீட்டிற்கும் சென்றது கிடையாது. அப்படிச் செல்வதை அவன் விரும்பியதில்லை. விரும்பினாலு; நேரம் கிடைப்பதில்லை. ஆனால் செங்கோலைத் தெரியாதவர்களில்லை. அவன் மீது பற்றும் பாசமும் வைக்காதவர்களில்லை. மக்கள் மனம் நோகாமல் பேசிக் காரியத்தைக் சாதுரியமாக முடித்துக்கொள்வான். செங்கோலின் வீர உடல் கல்லறைக்குச் செல்லும் போது மக்கள் வாய்விட்டு அழுதபோது நான் வியப்படைந்தேன். மரணத்தில்தான், மக்கள் அவன் மீது கொண்ட ஆழமான நேசத்தை அறியமுடிந்தது. செங்கோல் புரிந்துணர்வுள்ள போராளி, அன்று ஊரியான் பாதையில் சேற்றில் கால் புதைய, சாரத்தை உயர்த்திச் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு முக்கியமான பொருள்களைச் சுமந்து, சுமந்தே கரை சேர்த்ததை நினைத்துப் பார்க்கிறேன்… சாவிற்கு முன் இவன் கிளாலிப் பாதையில் அனுபவித்த துன்பங்கள்…. கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் சொல்லிலோ, செயலிலோ தளர்வு காட்டாதவன். அன்பான ஆனால் அனவான பேச்சு. அளவிற்கு மிஞ்சினால் கோபத்தில் கண்கள் சிவந்து விடும். உயர்ந்த தோற்றமும், சிவந்த கண்களும், அளவான அமைதியான பேச்சும் இவன் மீது மற்றவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும். பழகி உள்ளம் புரிந்தோர்க்கு மரியாதையும், அன்பும் கொண்ட இவனின் தந்தை கூட ஒரு விசித்திரமான பிறவி. 1988 இல் தமிழீழ விடுதலைப்போருக்குக் கொள்ளி செருக முற்பட்ட தேசவிரோதக் கும்பல்கள், செங்கோலின் அண்ணனை பளையில் வைத்துக் கண்டதுண்டாக வெட்டிக் கொன்றனர். மகனை வெட்டிக் கொன்ற செயல் பொன்னுத்துரையின் இருதயத்தை வெடிக்கச்செய்தது. அந்த நாள்தான் செங்கோலின் விடுதலை வாழ்வுக்கு வழியமைக்கிறது. பொன்னுத்துறை தன் மகனைத் தானே களத்துக்கு அனுப்பிவைக்கின்றார். மணலாற்றுக் காட்டில் பயிற்சி முடித்த செங்கோலின் திறமை அளவிடப்பட்டது. அதனால் பயிற்சி ஆசிரியனாக நியமிக்கப்பட்டான். தொடர்ச்சியாக மூன்று பயிற்சிப்பாசறைகளை நிறைவாக முடித்தான். கடமை வீரனாய் நின்ற செங்கோல், பொறுப்பாளர்களின் கருத்தில் நிறைந்தான். அதன் விளைவு அவனின் வளர்ச்சிப் படியானது. நிதிப்பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. சிக்கலும், பொறுப்பும்மிக்க இந்தப் பணியில் செங்கோலின் கோல் தளம்பலின்றி நின்றது. செங்கோலின் நிதானமான வளர்ச்சி முல்லைத்தீவுக் கோட்டத்தின் சிறப்புப் பொறுப்பாளனாக அவனை உயர்த்தியது. பொறுப்பேற்று இரண்டு வாரம் இருக்கும், எங்காவது பெருமளவு இராணுவத்தை கொல்ல வேண்டும், ஆயுதங்களை அள்ள வேண்டும் என்ற உணர்வு தலையெடுத்து நின்றது. சாதனை மிக்க வரலாறு எழுதப்படுவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நாளின் அவன் தந்தையின் உணர்வுகளை அசைபோட்டுப் பார்க்கின்றேன். செங்கோலின் பிறந்த மண் இயக்கச்சிக் கிராமம். இன்று சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்குள்குள் விழுங்கப்பட்டுக் கிடக்கின்றது. பளையினை அண்டிய பகுதியில் அவனது தாய் தந்தையர் வாழ்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றுவந்த போது அவனது தந்தையைக் கண்டு கதைத்தேன். ‘செங்கோல் முன்பு போல இனி இங்கே வரமாட்டான், அவனுக்குப் பொறுப்பு அதிகரிச்சிருக்கு’ என்று கூறியபோது, ‘அவன் இஞ்சை வரவேண்டாம் தம்பி, அவன் விடுகிற பிழையளை வந்து நீங்கள் சொல்லுங்கோ. நான் வாறபோது அவனிடம் சொல்லி அவனைத் திருத்த உதவியாய் இருக்கும்’ என்று சொன்னார். மீண்டும் அவரிடம் செல்லும் முன்…. பிழைவிட்டால்தானே அவரிடம் சொல்ல வேண்டும். பிழையற்ற அவன் வீரத்தைச் சொல்ல விரைந்தபோது…. செங்கோலின் தாய் சாதாரணமானவளல்ல, தியாகத்தின் இருப்பிடம். செங்கோலின் வீரச்சாவை எப்படித் தெரிவிப்பது என்ற தயக்கத்தோடு வீட்டு வாசலுக்குள் நுழையும் போதே…. ‘தம்பி! என்ரை பிள்ளையின்ரை வீரத்தை நான் அறிந்துவிட்டேன். என்ர பிள்ளை இயக்கத்திற்குச் செய்ததைவிட என்ர பிள்ளைக்கு இயக்கம் அதிகமாய் செய்திட்டுது’ என்று கூறி நின்ற அவனது வீரத்தாயை நினைக்கிறேன். செங்கோல் தன் வீர அத்தியாயத்தின் முடிவுவரிகளை எழுதிக் கொண்ட நாளை நினைத்துப்பார்க்கின்றேன். தாக்குதலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருந்தன. நாடியில் கைஊன்றியபடி இருந்தான் செங்கோல். ‘என்ன மச்சான் யோசிக்கிறாய், உன்ர பெடியளுக்கு தாக்கும் முறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிரு’ என்று சொல்லியபோது சிரித்தவாறே எழுந்து சென்றான். அன்றிரவு முழுவதும் செங்கோல் தூங்கவில்லை. நிலைகளைச் சரிபார்ப்பதும், புத்திமதிகள் கூறுவதுமாய் இருந்தான். 1992ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 24ம் நாள் சூரியனின் பகல் கொடுமை தணிந்து கொண்டிருந்தது. 4.30 மணியிருக்கும் இராணுவத்தினர் முகாமிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் செங்கோலின் அணி தாக்குதலை தொடங்கும் அபாய அமைதி. செங்கோலின் குரல் வோக்கிடோக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த செங்கோலின் குரல்?….. நின்று விட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொன்று ஆயுதங்களை அள்ளிய வீர இறுமாப்புடன் கண்மூடிக்கிடந்தான் செங்கோல். செங்கோல் சரிந்துவிட்டது…. செங்கோலுக்காய் எழுத என் பேனாவுக்கு வல்லமையில்லை. அது நின்று கொள்கிறது. மை முடிந்ததாலல்ல, மீண்டும் மீண்டும் என் சிந்தனை கனப்பதால்…. எழுத்துக்கள் நனைகின்றன. மழையல்ல, பொங்கிய கண்ணீரால்…. நினைவுப்பகிர்வு: பாண்டியன். நன்றி – களத்தில் இதழ் (19.03.1993). https://thesakkatru.com/mejor-sengol/- லெப். கேணல் அப்பையா அண்ணா
லெப்டினன்ட் கேணல் அப்பையா டிசம்பர் 24, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து மூத்த உறுப்பினர் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணா. எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர். அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார். 1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார். 1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். ”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார். அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார். 1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். நன்றி: சூரியப் புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/lieutenant-colonel-appaiya/- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 யாழ் கள உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் - கடற்புலி லெப். கேணல் நிலவன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.