Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
புது வருட சிரிப்புகள்.
தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு 37 Views “இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும். இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும். எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது. https://www.ilakku.org/?p=38245
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வேண்டும் வரமருளும்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
புத்தாண்டு பிறந்ததே பூமியெல்லாம் நிறைந்தது. பூவிதழ் போல் புது ஆண்டு
-
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் டிசம்பர் 30, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்: “தக்க நேரத்தில்” “ஓயாத அலைகள் 03” சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப் 7 – 8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது. இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். “அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்” அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவன் உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண்பட்டு சரியாக நிமிர்ந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண்பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன். சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று….. “நான் இடிக்கட்டா ”…? எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள்; நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை. நினைவுப்பகிர்வு: பிரமிளா. நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04 புரட்டாசி 2008). https://thesakkatru.com/black-tigers-captain-arivarasan/
-
லெப். கேணல் ஈழப்பிரியன்
லெப். கேணல் ஈழப்பிரியன் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற்றோர் வீடு என நினைக்கின்றேன் அப்பா ஓர் சாதாரண அரச ஊழியர்.. அவனது தம்பி திருமணம் முடித்துவிட்டான்.. அதனால் ஈழப்பிரியனுக்கு கொஞ்சம் கோபம்.. கோபம் வந்தால் அவனது முகம்.. பழுத்த மிளகாய் போல் இருக்கும்..கோபம் வந்தால் கதை வராது மாறாக கொன்னைக்கதைதான் வரும்… கண்ணை மூடிவிடுவான்.. போ..போ.. என சொல்லிவிட்டு தலையினை ஒருபக்கம் திருப்பி விட்டு.. சென்றுவிடுவான்.. கதைக்கவே மாட்டான்.. இப்படி ஒரு சில மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தான்.. நான் வேணும் என்று அவனுக்கு ஆத்திரமூட்டுவதற்காக கிட்ட கிட்ட செல்வேன்.. அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் வரும்.. ஆனால் ஒரு நாள் என்னிடம் வந்து சொறி சொன்னான்.. ஏனென்றால் அவன் என்னிடம் ஆத்திரப்பட்டதற்கு எந்தக்காரணங்களும் இருக்கவில்லை. உயரம் குறைவு, உருண்டு திரண்ட உடல்.. கிட்டத்தட்ட புறூஸ்லி மாதிரி உடல்கட்டமைப்பு.. அதற்கேற்ப எப்போதும் பயிற்சியும் ஓட்டமும் தான்.. உடல்வாகுவையும் உயரத்தினையும் பார்த்து நாங்கள் எல்லோரும் பண்டிக்குட்டி என்று அழைப்போம்.. ஆனால் அவனுக்கு அப்படி கூப்பிட்டால் கோபம் வராது. எந்தப்பணி ஆனாலும் தெரியாது, அல்லது செய்ய மாட்டேன், என சொல்லமாட்டான். அதேபோல பணி செய்வதற்கு தனக்கு என்னென்ன தேவை என்றும் கேட்கமாட்டான்.. எல்லாம் தானே உருவாக்கி கொள்வான் அல்லது தேடிக்கொள்வான். ஒரு பொறுப்பாளனாக தன்னை ஈழப்பிரியன் நினைப்பதே இல்லை.. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளைபோலவே இருப்பான் என்ன வேலை சொன்னாலும் என்ன உதவி கேட்டாலும் செய்வான். அதனைவிட அரசியல்துறை மற்றும் இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் எங்கு இருக்கினம், எப்படி தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் அவனின் சுண்டு விரலில் இருக்கும்.. அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார். குறிபிட்ட ஒருவரை தமிழ்செல்வண்ணர் கூட்டிவரச்சொன்னால்.. அடுத்த கணத்தில் எப்படியாவது ஆட்களை கொண்டுவந்து சேர்த்திடுவான். கூடவே கூட்டிவாறவர்களுக்கு உடுப்பு பாக் உடன் வரட்டாம் என்று பேதியும் குடுப்பான். தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட முக்காலி ஒன்று வாகனத்தில் இருக்கும்.. அதுபோல டயபற்றிக்ஸ் மருந்தும் கட்டாயம் தேவை. ஈழப்பிரியன் தனக்கு உடுப்பு, பிறஸ் எடுக்காமல் மறந்து போனாலும் மேற்கூறிய கொமட் மற்றும் டயபற்றிஸ் மருந்துகளை எப்போதும் மறக்கவே மாட்டான்.. இவ்வாறு பொறுப்பாளர்களின் முக்கியத்துவத்தை மட்டும் அன்றி தன் சக போராளிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்த பின்னர்தான் தன்னைப்பற்றி சிந்திப்பான் இந்த போராளி. எல்லோரையும் சாப்பிட்டுவிட்டீர்களா? குளித்துவிட்டீர்களா.. என கேட்டுக்கொண்டே இருப்பான் அதன் பின்னர்தான் தான் சாப்பிடுவான். உண்மையில் ஈழப்பிரியன் என்ற போராளி.. இயக்கத்திற்கு ஒரு கொடை.. ஏனென்றால் அவனிற்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை.. தன் பாட்டில் யோசித்து செய்து கொண்டே இருப்பான்.. நிர்வாகத்தில் மட்டுமல்ல சண்டை, பயிற்சி, சூட்டுப்பயிற்சி, ஒழுக்கம், சுகாதாரம், எல்லாவற்றிலும் திறமையானவன்.. இத்தனைக்கும் மத்தியில் அவன் பெரிதாக படிக்கவில்லை.. ஆனால் உண்மையில் சக போராளிகளுக்கு அவன் ஓர் சமூக பல்கலைக்கழகம் என்றே கூறலாம். சிலவேளை அவனின் கதைகள் மிகப்பெரிய பொறுப்பாளர்கள், அல்லது பெற்றோர்கள் போலவும் இருக்கும். இயக்கத்தை விட்டு விலத்தப்போறேன் என்று கூறும் போராளிகள், பொறுப்பாளரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்து போன போராளிகள் ஆகியோர்களிடம் இவன் பேசும்போது பார்த்தால்.. உண்மையில் ஓர் முதிர்ச்சியடைந்தவர்கள் பேசுமால் போல் விளக்கங்கள் கொடுப்பான். இந்த சின்ன வயதில் இவற்றையெல்லாம் .. இந்த உளவியல் பயிற்சிகளை எங்கு கற்றான் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்.. ஏனென்றால் அவன் புத்தகங்கள் வாசிப்பதனை நான் பார்த்ததே இல்லையே. அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவடையும் போது அவன் பூனகரி பகுதியில் முன்னணி காப்பரண் கண்காணிப்பு பொறுப்பாளராக இருந்தான்… அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவு அவனை பெரிதும் பாதித்திருந்தது.. என்றாலும் அவனின் பொறுப்புணர்ச்சி, கடமை, உறுதி, போராளிகளை வழி நடத்தும் பக்குவம், தற்துணிவு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு.. எங்கள் ஈழப்பிரியனை முழுமையாக ஓர் தளபதியாக்கினார் தேசியத்தலைவர்.. அப்போது நான் அங்கு இல்லை.. என்றாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. அவன் தளபதியான செய்தி.. ஏனென்றால் அவன் சாதிக்கப்பிறந்தவன். முன்பு என்றால் அவன் எங்களை பகிடி பண்ணுவான்.. என்ன அண்ணர் நீங்கள் எல்லாம் படிச்சனிங்கள்.. உங்களுக்கு நிறையப்பணிகள் கதைக்கவே மாட்டீங்கள் போல .. (பகிடிக்குத்தான்)… ஆனால் அவன் தளபதி ஆனதும்… நாங்கள் கடிக்க வெளிக்கிட்டுவிட்டம்.. என்ன தளபதி இனி நீங்கள் இனிமேல் கதைக்கமாட்டீங்கள் என்று.. இனி எப்படி கூப்பிடலாம் தளபதி என்றா என கடிப்போம்.. ஆனால் அவன் மண்ணாங்கட்டி… என்று அங்கால தூசணத்தால்.. ஒன்று விடுவான். பெண்போராளிகளுக்கு ஏதாவது செய்தி கொண்டு போய் சொல்வதே அவனுக்கு மிகப்பெரிய கஸ்டமான பணியாக இருந்திருக்கும்.. அவ்வளவு வெட்கம்.. பெண் போராளிகள் முகாம் வந்தால் அல்லது ஏதாவது கேட்க வந்தால் ஈழப்பிரியன் எஸ்கேப். இறுதிக்கட்ட போரில் ஈழப்பிரியன் தனது கொம்பனியுடன் நாச்சிக்குடா பக்கமும் , பூனகரி கடற்கரையோரமும் லைன் போட்டு நிலை கொண்டிருந்தான்.. அப்போது எம்முடன் பேசினான். யாழ்ப்பாணத்தால இறங்க விடமாட்டேன்.. கடலால இறங்க விடமாட்டேன் என்றான்… உண்மைதான்.. அவன் இறங்கவிடவில்லை.. ஆனால் மன்னாரில் இருந்து வந்த படையணிகளில் ஒன்று ஆனைவிழுந்தான் பகுதிக்கால் முன்னேறி வந்துவிட்டதால் பூனகரி, நாச்சிக்குடா பகுதிகள் துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர் கிளி நொச்சி, கரடிப்போக்கு பகுதிக்கு வந்து அங்கே லைன் போட்டு கிளி நகரை பாதுகாக்கும் வியூகத்தில் வடபகுதி காவலரண்களுக்கு பொறுப்பாக நின்றான். அப்போதும் பேசினான். அவன் சொன்ன வார்த்தைகள் இதுதான்.. இந்த முன்னணிக் காவலரண்களை இராணுவம் உடைக்க விடமாட்டேன் அப்படி சில வேளை நடந்து இராணுவம் உள் நுழைந்தால் அது என் வெற்றுடல் மீதுதான் நடக்கும் என்றான். ஈழப்பிரியனின் உயிர் இருக்கும் வரை இந்த லைனை உடைக்க விடமாட்டேன் என்றான். ஆனால் எனக்கு அவன் சொல்வதனை கேட்டு உண்மையில் பயம்தான் வந்தது.. ஏனென்றால் அவன் எப்போதும் சொல்வதனை நிறைவேற்றுவான்.. சண்டையின் போக்கை பார்த்தால் கிளி நொச்சி வீழ்ப்போவதற்கு சில நாட்களே இருக்கலாம்.. ஆனால் கிளி நொச்சி முக்கியமல்ல எங்களுக்கு ஈழப்பிரியனே வேண்டும்.. ஏனென்றால் அவன் இயக்கத்திற்கு.. எம் தலைவரிற்கு.. எம் போராளிகளுக்கு தேவை.. அதனால் தான் எங்களுக்கு பயம்.. கடவுளே அவன் சொன்னது போல .. நடந்துவிட்டதே.. எங்கள் அன்பின் பண்டிக்குட்டியை நாங்கள் பார்க்க மாட்டோம்….. டேய் பண்டிக்குட்டி நீயும் உன்னைப்போன்ற எம் வீரர்களும் வலிமையுடையவர்கள்.. எங்களை விட வலிமை உடையவர்கள்.. உங்கள் மூச்சு உங்கள் இலட்சியம் அடையும் வரை .. எங்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.. மீண்டும் பிறந்து வாருங்கள்.. எங்களையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.. நாம் சென்ற பாதை, செல்கின்ற பாதை , செல்லப்போகின்ற பாதை.. எல்லாமே ஒன்றுதான் மாற்றமாட்டோம்.. நண்பனே….! நினைவுப்பகிர்வு:- பாசறை நண்பர்கள் உமை… ‘வேலன்’. https://thesakkatru.com/commander-lieutenant-colonel-eezhappiriyan/
-
கப்டன் லோலோ
கப்டன் லோலோ டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து கப்டன் லோலா ஈரநினைவாய்…..! நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளிகளுக்கு அம்மாவிடம் பாணும் சம்பலும் வாங்கிக் கொண்டு போவான். சிலசமயம் ஏதாவது கிறுக்கு வேலை செய்து அம்மாவிடம் பேச்சும் வாங்குவான். என்னுடன் ஏதாவது கொழுவுவான். வைரமுத்து வளவுப்பனங்கள்ளை அடித்தபடி இஞ்சை வாடாப்பா என்ன வந்தவுடனை ஓடுறாய் ! எனப்பிடிக்கும் அப்பாவுடன் வந்திருந்து அரசியல் பேசுவான். என்ன சடாண்ணை சனம் கதைக்குது…?சனத்தின் போராட்டம்பற்றிய அபிப்பிராயங்களைக் கேட்பான். குடியைக்கொஞ்சம் குறையுங்கோ சடாண்ணை பிள்ளையள் வளந்திட்டாளவை ஆலோசனை சொல்வான்.அதற்குப் பதிலாக அப்பா வசந்தமாளிகை வசனம் பேசிக்காட்டுவார். சேர்ந்து தானும் வசந்தமாளிகை வசனம் பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பான். இப்படித்தான் லோலோ எங்களிடையே உலவித்திரிந்தான். சிங்களப்படைகளை எங்கள் ஊர்களில் ஊழிக்கூத்தாடவிடாது காத்த பெருமை எங்கள் லோலோவுக்கும் உண்டு. 1987ஆடி 5 இன் எதிரொலி சிங்களத்துடான போர் ஓய வந்த ஒப்பந்தம் எங்களது வாழ்வில் ஒளிவருகிறது என்றுதான் எண்ணியிருந்தது எங்கள் தேசம். வாழைக்கன்று நட்டுத் தோரணம் கட்டிப் பன்னீர் தெளித்து இளநீர் கொடுத்து இந்தியப்படைகளை வரவேற்றது எங்கள் தேசம். ஓர்பெரும் அவலம் நிகழப்போகிறதென்பதனை யாருமே எண்ணியிருக்காத அந்த நாள் 1987 ஒக்டோபர் 10 அந்தப் பொழுது விடியாமலேயே இருந்திருக்கலாம். இந்திய வல்லாதிக்க அரசின் போர்டாங்கிகள் ஊர்களை உழுது கொண்டு போரில் குதித்தது. இருந்த நம்பிக்கை இளையறுந்து போக ஊர்களெங்கும் வல்லாதிக்கப் பேய்களின் ஊழித்தாண்டவம்….. யாரை…? எங்கே….? எப்போது….? சாவு காவுகொள்ளும் என்பதை ஆரூடம் சொல்ல முடியாது. அடுத்த நொடியே என்னுயிரும் இடுங்கப்பாடலாம் வீட்டில் அது நிகழலாம் இவீதியில் அது நிகழலாம்இ இரவில் அது நிகழலாம்இபகலில் அது நிகழலாம்இஎப்போ வேண்டுமானாலும் அது யாருக்கும் நிகழலாம். ஆம் சாவின் விழிம்பில்த்தான் எங்களது நாளிகள் ஓடிக்கொண்டிருந்தது. புன்னாலைக்கட்டுவன் பெற்றெடுத்த புதல்வன் கப்டன் லோலோ. இந்தியப் படைகளின் கனவையும் கலங்கடித்து அவர்களைச் சிதைத்துக் கொண்டிருந்தான். லோலோ….பெயர் கேட்டால் போதும் இந்தியப்படைகளின் துப்பாக்கிகள் அவனைத் தேடத்தொடங்கி விடும்.ஆனால் வல்லரசின் கண்ணில் மண்தூவி அவர்கள் முன்னாலேயே போய்நிற்பான். லோலோவைத் தெரியுமா….? அவனிடமே கேட்பார்கள்….கண்டாக்கட்டாயம் லோவைக் காட்டித்தாறன்….சொல்லிவிட்டுச் சாதாரணமாய் அவர்கள் கண்களுக்குள்ளேயே உலவித்திரிந்த தீ அவன். குப்பிளான் , ஏழாலை,மல்லாகம்,சுன்னாகம் என ஒவ்வொரு இந்தியப்படை முகாம் வாசலிலும் விசாரணைகள் நடக்கும்.இளையவர் முதியவர் பேதமின்றிப் பிடித்து அடிவிழும லோலோ எங்கே….? நாங்களும் இடம் பெயர்ந்து கேணியடியை விட்டு சமாதிகோவிலடியில் போயிருந்தோம். அப்போதும் லோலோ இடையிடை ஒளித்து ஒளித்து எங்கள் வீட்டுக்கு வருவான். அப்பாவுடன் ஏதோ தனியக்கதைப்பான். அம்மாவுடனும் கதைப்பான். அதிக நேரம் மினைக்கெடமாட்டான். போய் விடுவான். பின்னேரங்களில் அப்பா குப்பிளான் சந்திப்பக்கம் போய் கொஞ்சம் இருட்டத்தான் திரும்பி வருவார். மீண்டும் காலை 5-30 இற்கு விடிய சுன்னாகம் யூனியனுக்குப் போவார். பின் அப்படியே வேலைக்குப் பெரிய சங்கக்கடைக்குப் போய் வருவார். இப்படியிருக்க கேணியடிக்குடும்பங்கள் மீண்டும் தங்கள் வீடுகளில் குடியிருக்கப் போய்விட நாமும் எங்கள் கடைக்குப் போய்விட்டோம். எங்கள் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் வைரமுத்துவின் புளியங்கூடலுக்குள் கொங்கிறீட் கற்கள் அடுக்கி சென்றியமைத்திருந்தன பேய்கள். தினமும் காலை அல்லது விடியப்பறம் அல்லது இரவில் வந்து அந்தச் சென்றிக் கூட்டில் இருப்பார்கள். விடியவில் கடைக்குப் பாண் கொண்டு வரும் கொத்தலாவலையையும் விசாரணை நடக்கும். போகின்ற வருகின்றவர்களைப் பிடித்து விசாரணை நடக்கும் அடி நடக்கும். ஓசிச் சிகரெட்டுக்கு அம்மாவிடம் வருவார்கள். அம்மா குடுக்கமாட்டா…சுட்டுப்போடுவம் அம்மாவின் நெற்றியை துப்பாக்கி குறிவைக்கும்….சுடடா…அம்மா துணிவாய் நிற்பா….நானும் தங்கைமாரும் அழுவோம் அம்மாவைச் சுடாதையுங்கோ…. அம்மாவைக் கெஞ்சுவோம் குடுங்கோம்மா போகட்டும்… சின்னத்தம்பி எதுவும் புரியாது முளிப்பான். பேசாமலிருங்கோடி… இடம் விட்டா உவங்கள் மடங்கட்டிப்போடுவங்கள்… பயத்தில் எங்கள் விழிகள் மிரளும். வா தங்கைச்சி சிகரெட் எடுத்துத்தா வா….வா… எங்களைக் கூப்பிடுவான் இந்தியச் சிப்பாய். அம்மாவைப் பார்ப்பேன். என்னை நோக்கித்துப்பாக்கி நீளும். பேசாமல் நில். பாப்பம் அவன் சுடட்டும்… சொல்வா அம்மா…. எனக்குக் கைகால்கள் உதறல் எடுக்கும். அம்மாவிடம் ஓசிச்சிகரெட் கிடைக்காது தமது மொழியில் பேசிக்கொண்டு போவார்கள். இது தினமாகிவிட்டது எமக்கு.அமைதிகாக்க வந்த லட்சணம் இப்படித்தான் இருந்தது. அப்போது அவர்களால் லோலோ தேடப்படத் தொடங்குகிறான். லோலோவைத் தெரியுமா? தெரியாது என்பவர்களுக்கு அடியும் உதையும் நடக்கும். தெரியும் என்றால் ஏன் காட்டித் தரவில்லை என்று நடக்கும். லோலோ அவர்களின் கனவிலும் நினைவிலும் கலக்கிக் கொண்டிருந்தான். லோலோவைப் பிடித்தால் அப்படியே விழுங்கிவிடும் கொதியில் திரிந்தார்கள். ஒருநாள் மாலை கனநாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுப் பின் ஒழுங்கையால் வந்து அம்மாவைக் கூப்பிட்டான் லோலோ. முன்பக்கம் முழுவதும் இந்தியப்படைகள் காவல் நின்றன. ஏதோ விபரீதம் நிகழ்ந்து விட்டது என்பதை அவர்களின் ஓட்டமும் கொதிப்பும் விளக்கியது. அம்மா மெதுவாகப் பின்பக்கம் வந்தா….! என்னமாதிரியக்கா நிலைமையள்…விடியவிலையிருந்து மாறிமாறி ஓடித்திரியிறாங்கள் கெதியாப்போ…. அவசரப்படுத்தினா அம்மா.அப்போதை தயிலங்கடவைத் தோட்ட வெளியுக்கை அவங்களுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்தது. பிறகு போட்டாங்களோண்டு பாக்கப் போன வினோதனைச்சுட்டுப் போட்டாங்களக்கா…அப்போதுதான் புரிந்தது.அவர்கள் ஏன் திரிகிறார்கள் என்பது. திரும்பி வருவன் நிலைமையளைப் பாருங்கோ….சொல்லி விட்டுப் போனான் லோலோ. பின் கேள்விப்பட்டோம் வினோதனை அவர்கள் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் முகாமுக்கு எடுத்துப்போய் விட்டார்களாம். வினோதன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன்.வீட்டிற்கு ஒரே ஓரு ஆண் வாரிசு. அவன் அம்மா கனகமக்காவின் உயிரே அவன்தான். அக்காமாரின் செல்லப் பிள்ளையும் ஆசைத்தம்பியும் அவன்தான். மொத்தத்தில் அவன்தான் அவர்களுக்கு எல்லாமே. அந்தப் பிள்ளையின் உயிரைப் பிடுங்கிவிட்டது இந்தியப் பேய்கள். நாளை விடியவிருக்கும் பொழுது வினோதனின் இளவைக் கொண்டாடக் காத்திருந்தது. பொழுது விடிய ஊர் வினோதனின் சாவைப்பற்றித்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பகல் 10 மணிபோல் ராசரப்பு வந்து சொன்னார். வினோதனின் உடலை அவன் அம்மாவும் அக்காமாரும் இந்தியப் படைகளிடம் போய் வாங்கிவந்து வீட்டில் செத்தவீடு நடப்பதாக… மூன்று மணித்தியாலத்துள் எல்லாம் முடித்துவிட வேண்டுமாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். வினோதனின் வீட்டைச்சுற்றி ஒரே இந்தியப் பட்டாளங்கள்தான். லோலோ அங்கு வருவான் என்று காத்திருந்தனர். வடக்குப் புன்னாலைக் கட்டுவன் ராஜேஸ்வரியம்மன் கோவிலடியில்த்தான் வினோதனின் வீடு. அங்கிருந்து தினமும் எங்கள் கடைக்கு சீனி வாங்கஇஅரிசி வாங்கஇநெருப்புப் பெட்டி வாங்கவென வினோதன் வருவான். அமைதியே உருவான வினோதன்இஅதிகம் யாருடனும் அலட்டாத வினோதன்இகனகமக்காவின் செல்லப்பிள்ளை வினோதன்…இனி…வரமாட்டான்….வல்லரசத் துப்பாக்கி அவனை மௌனமாக்கிவிட்டது. பயந்து பயந்து சனங்கள் வினோதனின் சாவுக்குப் போய் வந்தனர். அம்மாவும் போய்வந்தா. வந்து சொன்னா பாவம் கனகமக்கா… மனிசியின்ரை சொத்தாயிருந்த பிள்ளையைச் சுட்டுப்போட்டாங்கள்….! வினோதனின் சாவு முடிந்து பலநாட்களின் பிறகு கனகமக்கா எங்கள் கடைக்கு வருவா தன்கடைக்குட்டிச் செல்ல மகன் வினோதனைச் சொல்லிச் சொல்லி அழுவா. பாக்கப்பாவமா இருக்கும். ஒவ்வொரு காலையும் ஏதோ ஒரு சோகம் தாங்கிய காலைகளே எங்கள் மண்ணின் பிரசவங்களாயிருந்தது. அடுத்து வந்தவொரு காலைப்பொழுது. அப்பா ஆறுப்பிள்ளை வளவுச் செவ்வரத்தையில் பிடுங்கி வந்த பூக்களை வைத்துச் சாமிகும்பிட்டுக் கொண்டு நின்றார். வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ராணுவ அதிகாரி சர்மா எங்கள் கடைக்கு வந்தான். அம்மா,அப்பா,எங்கள் எல்லோரையும் கூப்பிட்டான். தனக்கு அன்று பிறந்தநாள் என்றான். சற்று நேரத்தில் விடயத்துக்கு வந்தான். லோலோவைத் தெரியுமா…? இல்லை என்றார் அப்பா.அண்ண பொய் சொல்லாதிங்க எனக்குத் தெரியும் இஞ்சை லோNýலா வாறது…மீண்டும் அப்பா இல்லை என்றார்.எங்க நீங்க வணங்கற சாமிமேலை சத்தியம் பண்ணுங்க பாப்பம் லோலோ வாறதில்லையெண்டு. அப்பா ஒவ்வொரு சாமியாகத் தொட்டுத் தொட்டுச் சத்தியம் பண்ணினார். சர்மா அப்பாவுக்குச் சொல்லிவிட்டுப் போனான். ஒரு நாளைக்கு லோலோவை நாங்க சுட்டுப்போட்டு அப்ப வந்து சொல்லுவம். சர்மா போனபின் அப்பா சொன்னார் செய்துபோட்டு வந்து சொல்லடா வடக்கத்தையா…! தினமும் லோலோவைத்தேடும் இந்தியப்படைகள் ஒவ்வொரு ஊராகச் சுற்றிவளைப்பு,சோதனை,அடி,உதை,வதை அன்றாடம். அந்தக்காலை வளமைபோல் விடிந்தது.ஆனால் பெரும் சோகம் எங்களுக்காகக் காத்திருந்ததை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஊர் தன் அலுவலில் மூழ்கிக் கிடந்தது. இந்தியப்படைகள் திடும் திடுமென வந்தார்கள். சிரிப்பும் அட்டகாசமும் பெரிதாக இருந்தது. ஒரு தமிழ்ச்சிப்பாய் கடைக்கு வந்து சொன்னான். உங்கடை லோலோவைச் சுட்டிட்டம். 200ரூபாய் பணநோட்டை அம்மாவிடம் நீட்டிச் முழுவதற்கும் சிகரெட் கேட்டான். அனேகமாக ஓசிச்சிகரெட்டுக்கு அலையும் ஜென்மங்கள் எங்கள் லோவை நாங்கள் இழந்திருக்க அதைச் சந்தோசமாகக் கொண்டாட சிகரெட் வாங்கிக் கொண்டு வடக்குப்புன்னாலைக்கட்டுவன் முகாம் நோக்கிப் போனார்கள். அவர்கள் போனபின் அம்மா கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டா. யூனியனுக்குப் போய் வந்த அப்பா சொன்னார். நேற்றிரவு அவர்களுடன் நடந்த நேரடிமோதலில் லோலோ வீரச்சாவாம்… அரைக்காற்சட்டையும்இ காதில்பூவும்இநெற்றியில் விபூதியும் சந்தனமும்இ சேட்பொக்கற்றில் சிவப்பு நீலநிறப்பேனாவுடனும்இ சயிக்கிள்க் கரியலில் கொப்பியும் இ கொண்டு இடுப்பில் பிஸ்டலும் சேட் கொலருக்குள் சயனைட்டை மறைத்த அவர்கள் முன்திரிந்த நெருப்பு தன்னினிய இன்னுயிரை தாய் மண்ணுக்கு ஈந்து 31.12.1988 அணைந்து போனது. பேய்களுக்குப் பயந்து அந்தப் புனிதனின் புகழுடலைக்கூட நாம் காணவில்லை. காரணம் நாங்கள் அவர்களால் குதறப்படலாம் என்ற அச்சம்தான். அன்று இரவு அப்பா குப்பிளான் சந்திக்குப் போகவில்லை. வீட்டில் இருந்து அழுதார். என்ரை பிள்ளையைக் கொண்டு போட்டாங்கள். உன்னைத் தெரியாதெண்டு அவங்களுக்குச் சத்தியமும் பண்ணினனான். அவர்கள் மேலிருந்த கோபத்தை தூசணத்தால் அப்பா திட்டித்தீர்த்தார். அம்மா மௌனமாய் அழுதா. திரும்பி லோலோ வருவான் என்றிருந்தவர்கள் நம்பிக்கை வெறும் கனவாகவே போனது.அவன் வரவேயில்லை. கப்டன் லோலோவாய் எங்கள் மனங்களில் இன்றும் உலரா ஈரநினைவாய்…. நினைவுப்பகிர்வு: சாந்தி நேசக்கரம் (2003இல் எழுதப்பட்ட பதிவு) மின்னஞ்சல் முகவரி – (rameshsanthi@gmail.com) https://thesakkatru.com/captain-lolo/
-
கப்டன் றோய்
கப்டன் றோய் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து எங்களோடும் எங்கள் ஊரோடும் நினைவாகிப்போன கப்டன் றோயண்ணா…! “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே….இசைநெஞ்சே”…… இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- “வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது வல்லை வெளி தாண்டிப் போகுமா வயல் வெளிகள் மீது கேட்குமா” இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில் விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது. பனைமரக் கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது.ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே. அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள். ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதி கோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள். அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20 பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள். பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3 போராளிகள். 2 பேர் மலேரியாக் காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது. காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11 மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா. அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி. அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார். அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார். அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார். தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார். அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும். றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன். கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது. முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான். இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய. அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:- குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது. கோட்டார் மனைக்கால் சொக்கர்வளவுப் பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்திய கல்யாணி மரமொன்றே. கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6 மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப் பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும் கொடுத்து அனுப்பி வைத்தார். எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப் புலிகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை, மல்லாகம், சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே. அப்போது யாழ்நகர் பகுதி, கோண்டாவில், திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப் போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ‘அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.’ அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே. எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப் போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது. அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார். நான் சரியும் மண்ணில் நாளை பூ மலர்ந்து ஆடக் கூடும் தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம் தேடி வந்து பாடக் கூடும் எந்த நிலை வந்து சேருமோ-அதை இந்த விழி பார்க்க் கூடுமோ? நாளை தமிழ் ஈழ மண்ணில் நாங்கள் அரங்கேறக் கூடும் மாலை கொடியோடு எங்கள் மன்னன் சபை ஏறக் கூடும் இந்த நிலை வந்து சேருமோ-அதை எந்தன் விழி காணக் கூடுமோ….. எந்த நிலை வந்து சேருமோ-அதை இந்த விழி பார்க்க கூடுமோ? அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப் பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன். அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும் போதும் எப்போதும் பாடுகிற „’வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „’ பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு….! அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள். மீண்டும் றோயண்ணா வசாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும். இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக…. 1990 தீபாவளி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்கு குளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். றோய்க்கு காயமாம்…. செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது. நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது. அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார். வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது. அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது. பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா. 5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். 31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய் வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி….. இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்…. ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின் நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கெளரவப்படுத்தியிருக்கிறது. றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார். அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன். இன்று றோயண்ணா இல்லாது போய் 30 ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது. எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 30வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்…. வணங்குகிறேன்…. காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்… றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி… உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்…. உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்….. உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா. நினைவுப்பகிர்வு: சாந்தி நேசக்கரம் (31.12.2012). https://thesakkatru.com/commander-captain-roy/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 முத்துப்பேட்டை சேகு தாவூத் வலியுல்லாஹ் | பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அமிர்த நதியினிலே...மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள் மட்டக்களப்பு | திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய கும்மி பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உங்கள் மனம் அமைதி பெறும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தான் தோன்றியாய்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள் மாமாங்க ஈஸ்வரனின்... மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீங்காத உறவில் நிறைவான உணர்வில் நீங்காத உறவில் நிறைவான உணர்வில் இறையே உன் நிழல் நாடினேன் அடியேன் என் நிலை மாறினேன் உன்னோடு கை கோர்த்து நான் செல்லும் பாதை அழகானது தினம் அழகானது உன் கண்ணோடு கண்சேர்த்து நான் பார்க்கும் பாதை புதிதானது தினம் புதிதானது உனையேற்று கொண்டேன் உருமாற்றம் கண்டேன் உன்னில் உலகை புதிதாக கண்டேன் 1, நிதம் காணும் வானம் நிலையான போதும் அதில் தோன்றும் மேகம் இருள்கோலம் மாறும் மாற்றங்களை மனம் தேடுதே உந்தன் வார்த்தைகளே உரமானதே இறைவா இறைவா வாழ்வு உன்னில் வழமானதே 2, ஓய்வின்றி நடக்கும் காற்றாக உழைப்பேன் மாற உன் அன்பை பாரெல்லாம் சேர்ப்பேன் உலகமெல்லாம் உறவாகுமே மலரும் இதயமெல்லாம் அருள் சேருமே இறைவா இறைவா வாழ்வு உன்னில் வழமானதே அழகான உலகம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சந்நிதி முருகன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விண்ணக வேந்தன் உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
லெப். கேணல் அப்பையா அண்ணா
நினைவில் நீங்காத லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணர் 81 Views 24.12.2020 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான அப்பையா அண்ணரின் 23ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. மானிப்பாயைச் சேர்ந்த இராசதுரை அல்லது இராசையா என அழைக்கப்பட்ட அப்பையா அண்ணர் 1978 காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களோடு இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்க முன்வந்திருந்தார். ஆரம்பத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் மட்டக்களப்பு, வவுனியா என சில இடங்களில் பணியாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்பெடுப்பதற்கு முன்பே திருமணமாகி இருந்த போதிலும், இயக்கத்தில் இணைந்து கொண்டிருந்தார். விடுதலைப்புலிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு தங்கும் இடங்களை ஏற்படுத்திக் கொடுத்து, போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து, அவர்களது முக்கியமான பணிகளை நிறைவு செய்து வந்தார். அவர் அரச ஊழியராக இருந்த காரணத்தினால் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு போராளிகளைப் பாதுகாத்து வந்தார். 1981 ஜூன் மாதம் முதல் வாரம் தேசியத் தலைவரும் மற்றும் சில போராளிகளும் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்த பின், ஈழத்தில் தங்கி நின்று செயற்பட்ட போராளிகளோடு சேர்ந்திருந்து அவர்களது பாதுகாவல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அப்பையா அண்ணர். 1982 செப்டம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்முகமாக பொன்னாலை பாலத்தில் வைத்து அவ்வழியே வரும் கடற்படை வாகனங்களுக்கு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. புலிகள் கண்ணிவெடி களைப் புதைத்துவிட்டு காத்திருந்தனர். பார்சல் குண்டுத் தாக்குதல்கள், கண்ணி வெடிச் செயற்பாடுகள், வெடிமருந்துப் பாவனை என்பனவற்றில் ஆரம்ப காலப் பகுதியில் இருந்தே மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அப்பையா அண்ணரும், பொன்னாலைத் தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார். மின்பிறப்பாக்கி ஒன்றின் மூலம் மின்சார இணைப்புகள் பொருத்தப்பட்டு, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. அதிகாலை 6.30 மணியளவில் மிகப் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தன. ஆயினும் அதில் ஏற்பட்ட சிறு தவறு ஒன்றின் காரணமாக வாகனங்கள் சேதங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொண்டன. உடனடியாக வாகனங் களை விட்டிறங்கிய கடற்படையினர் போராளிகளைத் துரத்திச் சென்றனர். போராளிகள் தப்பிச் சென்றுவிட்ட போதிலும் அவர்கள் பாவித்த மின்பிறப்பாக்கி கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது. அந்த மின்பிறப்பாக்கி அப்பையா அண்ணரின் சொந்தப் பெயரில் வல்வெட்டித்துறையில் உள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பையா அண்ணனும் தலை மறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார். ஈழத்தில் இருந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பதனால், அப்பையா அண்ணரும் தமிழகம் வந்து சேர்ந்தார். அக்காலப் பகுதியில் தேசியத் தலைவர் அவர்களும் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து மதுரையில் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டிருந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பழைய சத்திரம் ஒன்றில் போராளிகள் சிலர் தங்கியிருந்தனர். அப்பையா அண்ணரும் அவர்களோடு இணைந்து கொண்டார். 82ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி லெப்டினன்ட் சங்கர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 25ஆம் திகதி அளவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றார். மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சைகள் பலன் அளிக்காது சங்கர் உயிர் துறக்க நேரிட்டது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் உயிர்நீத்த சங்கரின் உடல் மதுரையில் உள்ள மயானம் ஒன்றில் தீயோடு சங்கமித்தது. அப்பையா அண்ணரே சங்கரின் உடலுக்குக் கொள்ளி வைத்தார். 1983இன் முற்பகுதியில் தலைவர் அவர்கள் நாட்டுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அப்பையா அண்ணர் உட்பட்ட போராளிகளும் தமிழீழம் திரும்பினர். 1983ஆம் ஆண்டு இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீதான திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலில் தேசியத் தலைவர் உட்பட்ட மற்றைய போராளிகளோடு அப்பையா அண்ணரும் பங்கேற்றிருந்தார். ஐம்பது வயதான அப்பையா அண்ணர் இளைஞர்களோடு இணைந்து மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டார். கண்ணிவெடி புதைப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும். தார்ரோட்டில் கிடங்கு வெட்டி அதனுள்ளே வெடி மருந்தை அடைக்கும் பணியில் லெப்டினன்ட் செல்லக்கிளி, லெப்டினன்ட் கேணல் விக்டரோடு இணைந்து அப்பையா அண்ணரும் ஈடுபட்டார். 83 ஆடிக் கலவரத்தை தொடர்ந்து இந்திய அரசு ஈழப்போராளிகள் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்க முன்வந்தது. ஆயுதப் பயிற்சிக்கென ஈழத்தில் இருந்து தமிழகம் வந்திருந்த விடுதலைப்புலிப் போராளிகளோடு அப்பையா அண்ணரும் வந்திருந்தார்.அவரது வயது காரணமாக இந்தியப் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் அப்பையா அண்ணனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் பயிற்சி பெற்றிருக்காவிடினும் இயக்கத்தின் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் அப்பையா அண்ணர் பங்குபற்றியிருந்தார். 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படையினரோடு யுத்தம் ஆரம்பமாகி நடைபெற்ற காலப்பகுதியில் தேசியத் தலைவரும் இயக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனால் தேசியத் தலைவர் அவர்களும் குறிப்பிட்ட சில மூத்த போராளிகளும் மணலாற்றுக் காட்டுக்கு சென்றனர். தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில் புனித பூமியில் வாழ்ந்த காலப்பகுதியில் அப்பையா அண்ணரும் அங்கு வாழ்ந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். பிரேமதாசா அரசு இயக்கத்திற்கு ஆயுத உதவிகள் வழங்கிய காலப்பகுதியில் மணலாற்றுப் பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக ஆயுதங்களும் போர்த் தளபாடங்களும் புலிகளிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புனிதபூமி முகாமில் யாரெல்லாம் சென்று ஆயுதங்களைப் பெற்று வருவதென பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, அப்பையா அண்ணரும் தேவர் அண்ணாவும் தங்கள் பெயர்களை வழங்கியிருந்தார்கள். மறுநாள் காலையில் ‘கம்பால’ (முகாம் வாழ்வுக்கு தேவையான பொருட்களை தொங்கு பைகளில் மரத்தடி அல்லது கம்பு ஒன்றில் கட்டி காவும் நடைமுறை ) செல்வதற்காக பழசுகள் இரண்டும் கம்பு ஒன்றுடன் தயாராக நின்றிருந்தனர். அங்கு வந்த தலைவர் அவர்கள் “என்ன நீங்களும் போறீங்களோ?காட்டுக்குள்ளை கனதூரம் நடந்து போய் தூக்கிக் கொண்டு வரவேணும். உங்களுக்கு கஷ்டமாய் இருக்கும். போகவேண்டாம்” என்றார். “இல்லைத் தம்பி எங்களுக்கு கஷ்டம் இல்லை.நைன்ரியள் நாங்களும் எல்லா வேலையும் செய்வம் எண்டதை இங்கை சிலருக்கு காட்ட வேணும். எங்களை மறியாதையுங்கோ” என்று சொல்லி ‘கம்பால’ சென்று ஆயுதப் பெட்டி ஒன்றை சுமந்து கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். இப்படி அப்பையா அண்ணர் வயதில் மூத்தவராக இருந்தாலும் தன்னையும் ஈடுபடுத்தி உழைத்து வந்தார். இயக்கத்தின் கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் 90 களில் அப்பையா அண்ணர் தயாரித்த நெல்லி ரசம் யாழில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஒருபகுதியை இயக்கத்திற்கு வழங்கி வந்தார். தனது இறுதிக்காலம் வரை இயக்கத்தின் கொடுப்பனவைப் பெறாமல் தனது ஓய்வூதியப் பணத்தின் உதவியோடு வாழ்ந்து வந்தார். இறுதிக் காலப்பகுதியில் இயக்கப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது மனைவியோடு மல்லாவிப் பகுதியில் வாழ்ந்து வந்தார். 24.12.97 அன்று மல்லாவியில் இருந்து வவுனியாவில் தங்கியிருந்த வளர்ப்பு மகளை சந்திப்பதற்காக தனது சிறியரக மோட்டார் வண்டியில் காட்டுப் பாதையினூடாகச் சென்றபோது எதிரிகள் அவரது உயிரைப் பறித்தெடுத்திருந்தனர். விடுதலைப்புலிகள் இருக்கும்வரை என்றென்றும் போராளிகளின் மனங்களில் அப்பையா அண்ணரின் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. -தேவர் அண்ணா https://www.ilakku.org/?p=38003