Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  2. பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் குரல்வடிவம் -ஜெ.ஆர் சுகுமார் பாடல்வரிகள் -பொன் காந்தன் தயாரிப்பு -பசிவநேச கரன் (ஜெர்மனி ) ஒளிப்பதிவு -ஸ்டார் வீடியோ சாவகச்சேரி யாழ் வடமராட்ச்சி கிழக்கு போக்கறுப்பு முள்ளியான் "வேதகுள மைலியா வைரவர் "பாமாலை இசை ஆல்பத்தில் இருந்து பாடல் இவ்விசை தொகுப்பில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன அதிலிருந்து இப்பாடலை முதன் முறையாக வெளியிடுகின்றோம்
  3. மண்ணில் பிறந்த பாலனுக்கு காணிக்கை தருகின்றேன் தேவா என்னத் தருவேன் இறைவா
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
  6. ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
  7. நயினாதீவு நாகபூஷணி அம்மன் பாடல் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் பாடல் வரிகள் -MVK குமணா தயாரிப்பு -சிவநேசன் கரன் முறிகண்டிப் பிள்ளையார் பாடல். முடிசூடி நாடாளும் மன்னவனும் அங்கே திருவோடு ஏந்திவரும் ஆண்டியும் அங்கே
  8. கொஞ்சும் தமிழ் மொழியாலே ஆரிராரிரோ....... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ...... சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு கண்கவர் விண்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... ஆ ஆரோ ஆரோ ஆரோ ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் தாங்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மாகபூப் சுபகணி அருமையான பாடல்
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  11. இளைஞர்கள் அரசியல் பேச வைத்தவர் சீமான்/அப்துல் ரவூப் நினைவேந்தல் சீர்காழி செய்தித்தொடர்பாளர் -சுபாஷ்
  12. பண்பாட்டு எழுச்சி ஊடாக தமிழ்மக்களை உயிர்ப்பிக்க முடியும் இணக்க அரசியல். இணக்கம் என்றால் என்ன? தமிழினத்துக்கும் சிங்கள இனத்துக்கும் உடன்பாடு உள்ளது. இரு இனங்களும் தங்களின் விருப்பங்களை வைத்து அபிலாசைகளை வைத்து அதில் இணக்கம் ஏற்படுத்துவது தான் இணக்க அரசியலே தவிர இவ்வாறு முழந்தாளிடுவது இணக்க அரசியல் அல்ல. இன்று தமிழ் மக்கள் மத்தியில் என்ன உணர்வு தூண்டப்பட்டுள்ளது? இனி எங்களால ஏலாது. இவ்வாறு தெரிவித்த யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி. க.சிதம்பரநாதன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2009 க்குப் பின்னர் தமிழ்ச் சமூகம் கூட்டு மன வடுவுக்கு உட்பட்டிருந்தது. இந்த நிலையில் அம்மக்களை அணுகி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அரங்கினூடாக அம்மக்கள் தங்கள் கதைகளை கூற இடமளிக்க வேண்டும். அதனூடாக மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். அப்போது தான் தமிழ்ச்சமூகத்தின் வாழ்க்கையை கட்டியமைக்க முடியும் என்கிற நம்பிக்கை வரும்.
  13. நான் பிறந்த மண்ணடா ஈழ தேசம்
  14. நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள் நானிலமெங்கும் நான் பாட நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண்போல விண்ணில் முளைத்திடும் மின்மினியாய் நெஞ்சில் முளைத்திடும் நல்விதைகள் மின்னித் தெறித்திடும் மின்னல்களாய் கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள் நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன் நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன் 1. தோள் அழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க தோழமையில் பூமியிலே புது உலகம் படைக்க (2) நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனவை யார் விதைத்தது கண்ணுக்குள்ளே நெருப்புத் தணலை யார் வைத்தது (2) அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் எல்லாமே நீர் தந்தது - 2 2. எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர் தந்தாய் எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் (2) ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது இறையரசின் நினைவுகளும் யார் தந்தது (2) புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள் எல்லாமே நீர் தந்தது - 2 இறை ஆட்சியின் மனிதர்களே கண்ணான கண்ணின் மணி கண்ணுறங்கு செல்ல மணி -
  15. ஈழத் தமிழர்களுக்காக தன்னுயிர் ஈந்த அப்துல் ரவூப் 115 Views 1995ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடாநாடு மீதான பெரும் படையெடுப்பின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது. தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு நினைவு வணக்கம் செலுத்துகிறோம். 1995ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள், ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப்பின் ஈகம் பற்றிய சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை ‘முதல் நெருப்பு’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் சே.ஜெ. உமர் கயான் நூலாக்கித் தந்துள்ளார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரவூஃப் பிறந்து, வாழ்ந்து மறைந்த ஊரில் தரவுகளை திரட்டித் தொகுத்து பதிவு செய்வது கடினமானதுதான். அப்துல் ரவூப்பின் ஈகம் பற்றிய வரலாற்றை பதிவு செய்ய பலர் முன்வந்த போதும் உமர் கயான் மூலம் இது நிறைவேறியுள்ளது. அப்துல் ரவூப்பின் ஈகத்திற்கு பிறகு வழக்குரைஞர் தமிழகன் (தமிழ் காவிரி மாத இதழின் ஆசிரியர், தமிழக ஆறுகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர், திருச்சி) அவர்கள் ரவூப்பின் சுருக்கமான வரலாற்றுடன் நெருப்பின் வரிகள் என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அது ஒரு ஆவணமாக இன்றுள்ளது. அப்துல் ரவூப் நெருப்பானான் என்ற செய்தி கிடைத்து நான் ஓடிச்சென்று அவனைப் பாத்தபோது, அவனது உள்ளாடை கங்குகளில் கனன்ற நெருப்பினை என் கையாலேயே அணைத்தேன். என்ன ராஜா இவ்வாறு செய்துவிட்டாயே என்று கேட்டபோது, அவன் சொன்னான் “பாபு அழாதீர்கள், நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள், மாவீரனைப் பெற்ற தந்தையாக நில்லுங்கள், ஈழத் தமிழரை காப்பதற்காக உங்கள் மகன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான் என்று பெருமைப்படுங்கள்” என்று படபடத்தான். அதையும் மீறி நான் அழுதபோது அவன் சொன்னான், “என்ன பாபு உங்களையே நான் மாவீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களே அழலாமா?” “கண்ணா ஈழத்தமிழரை காப்பாற்ற எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது” என்று கூறியபோது, “இதனைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை பாபு” என்றான். மருத்துவமனையில் கணீர் குரலில் அவன் பேசிய பேச்சுக்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவிற்குப் பிறகு நடக்கக் கூடாத சம்பவம் தமிழகத்திலே நடந்துவிட்டதே என எண்ணி தமிழக மக்கள், விடுதலைப்புலிகள் பேரில் வெறுப்புடன் இருந்த நேரம், ஈழத்தில் சிங்களக் காடையர்களால் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பதை அறிந்தும், வாய்திறவாமல் மௌன சாட்சியாக இருந்த நேரம், யாழ். நகர மக்கள் லட்சம்பேர் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள புலம்பெயர்ந்து காடுகளில் தஞ்சம் புகுந்தும், வெளிநாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்த நேரம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், இனி ஈழம் என்பது கனவுதானோ என்று எண்ணிய நேரம், தாய் தமிழகத்தின் ஆதரவு எமக்கில்லையோ என விடுதலைப் புலிகள் சோர்ந்திருந்த நேரம், அப்துல் ரவூப் தன் உயிரை ஈகம் செய்தது தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்ற வரலாற்றுப் பதிவாக இந்நூல் இருக்கும். எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று ஓங்கிய குரலில் அவன் ஒலித்தபோதும், அவன் ஏற்றுக் கொண்ட தலைவர் வைகோ மட்டுமே என்பது எனக்கும் ரவூப்புக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. அவனது மறைவிற்குப் பிறகு, மகனே போன பிறகு அவன் நிழற்படங்கள் எதற்கு, அவன் போற்றிய காசி ஆனந்தனின் கவிதை நூல்கள், வைகோவின் பாராளுமன்ற பேச்சு தொகுப்பு நூல்கள், இன்ன பிற நூல்கள் அத்தனையையும் அவனது தாய் சாம்பலாக்கியபோது, மௌனமாக பார்த்ததைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரவூப்பின் மறைவைத் தொடர்ந்து, அணி அணியாக, தனித்தனியாக, கட்சி, சாதி மத வேறுபாடுகள் இன்றி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். ரவூப் மறைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈழத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ரகசியமாக இருவரை அனுப்பி ஆறுதல் கூறினார். அப்துல் ரவூப்பிற்காக மாவீரர் கல் நடப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கூறியதுடன், தைரியமுடன் இருங்கள் என்று கூறிய தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அத்துணை அரசியல் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பா.ம.க. கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் தன்னுடைய வாக்குறுதியின்படி எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இன்றளவும் காப்பாக இருந்து வருவதை நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூருகின்றேன். அப்துல் ரவூப்பின் அண்ணன் ஆசிக் அலி (பொறியாளர்)இற்கு தமிழக அரசில் வேலை வாங்கிக் கொடுக்க பெருமுயற்சி செய்து, இயலாமல் போனாலும் அவர் எங்கள் குடும்ப நல வாழ்விற்கு முயன்றதை வாழ்நாள் முழுமையும் நினைத்து ஆறுதல் பெறுகிறோம். அருமைத் தம்பி செந்தமிழன் சீமான், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈகி அப்துல் ரவூப்பை கண்டறிந்து வீரவணக்கம் செய்து தமிழகம் முழுமையும் அவன் புகழ் பரப்பி வருவதையும், அவன் பெயரில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் குறியீடாக ஆக்கியுள்ளதை நெஞ்சம் நெகிழ அவரை வாழ்த்துகிறோம். “உன் புதைகுழி உன் உடலத்திற்காக தயாரிக்கப்பட்ட சிறையல்ல ஒரு இனப்புரட்சிக்காய் நீ தொடங்கி வைத்த அலுவலக அறை” – வழக்குரைஞர் ஆ. இராசா (முன்னாள் மத்திய அமைச்சர்) உலகிலேயே, தம் இனத்திற்காக முதல்முதலாக தன்னுயிரை ஈகம் செய்தவரின் தந்தை என்ற பெருமிதத்தோடு நிறைவு செய்கிறேன். தமிழோடு தமிழராய் வாழ்வோம் வாழ்த்துக்களுடன் அ.அசன்முகமது, பெரம்பலூர். அ.அசன்முகமது. நன்றி:- ‘தமிழ் அருள்’ https://www.ilakku.org/?p=37410
  16. கடற்புலி லெப். கேணல் முகுந்தன் / டேவிட் டிசம்பர் 16, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து உருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன். இந்திய ராணுவம் எம் மண்ணை விட்டு போன போது, தேச விரோத சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை அள்ளி கொடுத்து விட்டு கப்பலேறியது; அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தங்கள் “வளப்புகள்” புலிகளை அழித்து விடுவார்கள் என்று? அதையும் இங்கே தங்கிய துரோகிகளும் நம்பினது தான் ஆச்சரியம்?? எதோ ஒரு குருட்டு தைரியத்திலும், வேறு வழியில்லாமலும் தமிழர் பிரதேசங்களில் முகாமிட்டிருந்தார்கள். அதில் PLOTE அமைப்பை சேர்ந்த துரோகிகள் மாணிக்கதாசன் (மாணிக்கதாசன் வவுனியாவில்,அவனது முகாமின் வீட்டு கூரையில் பொருத்தி வைத்திருந்த புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டான்) தலமையில் “முசல்குத்தி”என்னும் இடத்தில் முகாமிட்டிருந்தது. அதை தாக்கும் உத்தரவு கிடைக்கபெற்றதும் மன்னார் மாவட்ட தளபதி சுபனண்ணையால் அதற்கான வேவு பாக்கப்பட்டிருன்தது. இறுதி வேவுக்காக லெப். கேணல் நவநீதண்ணையின் தலமையில் ஆறு பேர் கொண்ட அணியில் நானும் மன்னார் சென்றேன். அங்கு சென்று எமது படையணிக்காக காத்திருக்கும் போது எனது காலின் பாதம் வீங்கி, நடக்க முடியாது போய்விட்டது. அப்போது தான் இரண்டு நாட்களுக்கு முன் குத்திய ஆணி நினைவுக்கு வந்தது. அதனால் வைத்தியத்தின் பின் ஓய்விற்காக பண்டிவிரிச்சான் என்னும் இடத்துக்கு சுபன் அண்ணை அனுப்பி வைத்தார். அங்கு தான் முதல் முதலில் டேவிட்டை சந்தித்தேன். ஒரு நாளிலேயே இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டிருந்தோம். டேவிட்டின் ஆர்ப்பாட்டம் இல்லாத பேச்சும், நட்பு பாராட்டும் தன்மையும் என்னையும் அவனோடு இணைத்து விட்டிருந்தது. மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. ஆனால் எனக்கும் டேவிட்டுக்குமான நட்பு வேர் விட்டு கிளைபரப்பி இருந்தது. இதனூடே எமது அணிகள் வந்த பின் துரோகிகள் மீதான தாக்குதல் தொடங்கியது. சண்டை தொடங்கியவுடனேயே மாணிக்கதாசன் பின் பக்கத்தால் ஓடவும் எம்மால் முகாம் அழிக்கப்பட்டு பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டது. அடுத்த நாள் டேவிட்டை விட்டு பிரிந்து சென்று விட்டேன். எமது கடமை எம்மை பிரித்து இருந்தாலும் அவனது நினைப்பு என்னுள் இருந்தது. அதன் பின் நானும் வேலையின் நிமித்தம் எதிரி பகுதிக்குள் சென்றதால் அவனை சந்திக்கும் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது. 1993இல் மீண்டும் நல்லூர் ரோட்டில் வைத்து கேணல் லக்ஸ்மன்ணை மற்றும் டேவிட்டையும் கண்டேன். என்னை கண்டதும் இருவரும் ரோட்டெண்டும் பாக்காமல் கட்டியணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். அப்படியே என்னோடு என் வீட்டுக்கு வந்து குடும்பத்தாரையும் கண்டு சென்றார்கள். அதன் பின் நான் எனது பணிக்கு செல்லும் வரை டேவிட்டின் CB125 எங்கள் வீட்டு வாசலிலேயே நிக்கும். நான் புறப்படும் நாளும் நெருங்கி கொண்டிருந்தது, அப்போது ஒருநாள் வந்த டேவிட் கூறினான், மச்சான் நான் கடல்புலிக்கு போக போறன் அண்ணை ஒமெண்டிட்டார் என்றான் சந்தோசத்துடன். அதன் படி அவனும் 1993ன் நடுப்பகுதியில் கடற்புலிக்கு சென்ற பின் இருவரும் சந்திப்பது அரிதாகி விட்டிருந்தது. நானும் எனது பணி நிமித்தம் தொலைவிடம் சென்றமையால் இருவரது சந்திப்பும் குறுகிவிட்டிருன்தது. யாழ் நகரை சூரியகதிர் நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது, நான் வெளி இடமொன்றில் பணியில் இருந்த போது, எனது இரு சகோதரனும், போராட்டத்தில் இணைந்திருந்த படியால் எந்தவித உதவியுமில்லாது, நோய்வாய் பட்டிருந்த என் தாயையும் எனது தங்கையையும் கடைசி நேரத்தில் டேவிட்டே பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு சென்றிருந்தான். நான் இல்லாத நேரத்தில் எனக்கு பதிலாக எனது கடமையை எனது போராளி நண்பர்கள் செய்திருந்தனர். அதில் முக்கியமாக கேணல் மிரோச் (சேரலாதன்) அவர்கள் தங்குவதற்கு வீடு ஒன்றை கட்டி கொடுத்து (தென்னோலை மற்றும் மண் கொண்டு கட்டபட்ட வீடு) தங்கைக்கு வேலையும் எடுத்து கொடுத்திருந்தான். இது தான் எங்கள் போராளிகள். கடமை தவிர்ந்த நேரங்களில் நட்பிற்கே முதலிடம் கொடுப்பார்கள். 1998 இன் இறுதியில் முக்கிய தேவையின் நிமித்தம் நான் வன்னிக்கு அழைக்க பட்டிருந்தேன். அந்த நேரத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கையால் வன்னிக்கான தரைவழிப் பாதைகள் அடை பட்டு போயிருந்தது. அதனால் கேணல் ரமணன்ணையின் வழி நடத்துதலில் லெப். கேணல் ஜஸ்டின் துணையுடன் மட்டக்களப்புக்கு வந்திருந்தேன். இனி அங்கிருந்து படகில் வன்னி செல்ல வேண்டும் அந்த நாளும் வந்தது எனக்கு அந்த இடம் புதிதென்ற படியால் ஜஸ்டின் எனக்கு உதவியாக படகு நிக்கும் வாகரை என்னும் இடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு சென்ற போது அவர்களும் ஆயத்தமாக, பயணப் படுவோரும் ஆயத்தமாக இருக்கும் போது ஒரு வலிய கையொன்று என்னை பின்னால் இருந்து கட்டியணைத்தது. நான் “திமுரிக்கொண்டு”திரும்பினால் என் நண்பன் டேவிட். இருவரது ஆனந்தத்துக்கும் அளவே இல்லை. வந்திருந்த படகு தொகுதிக்கு கட்டளை அதிகாரியாக டேவிட் வந்திருந்தான். பயணப் படுவோர் எல்லோரும் பயணிகள் படகில் ஏறிவிட்டார்கள் நான் தான் ஏறவேண்டும். அப்போது டேவிட் அதில போகாதை வா மச்சான் என்ரை படகில கதைச்சு கொண்டு போவம் என்றான். நானும் எப்படியோ என்னை கொல்லுரை முடிவோட இருக்குறாய் என்றபடி படகேறினேன். இரண்டு கரும்புலிகள் படகு பாதுக்காப்பு கொடுக்க ஐந்து தாக்குதல் படகுகளின் நடுவில் பயணிகள் படகுடன் எமது கடற்பயணம் ஆரம்பமானது. நிலவு இல்லாத கரும் இருட்டில் நட்சத்திரங்களின் ஒலியில் “கருவிகளின்” (radar) துணையுடன் படகுகள் வேகமெடுத்தது. அந்த ரம்மியமான பொழுது மனதுக்கு இதமாக இருந்தது. டேவிட் என்னுடன் கதைப்பதும் படகுத் தொகுதிக்கு கட்டளை இடுவதுமாக எமது பயணம் தொடங்கியது. இருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி சென்றோம். எத்தனையோ தடவை படகில் பயணப் பட்டாலும்,படகின் வேகம் காரணமாக நான் வாந்தி எடுப்பது வழமை. அன்று ஏனோ அதை எடுக்கவில்லை. நாம் திருமலையில் இருந்து 40 கடல் மைல்கல் தொலைவில் எதிரியின் கதுவியில் முட்டாமல் செல்வதற்காக டேவிட்டின் வழிகாட்டுதலில் கடலின் உயர சென்றோம். அப்போது கடல் புலிகளின் பிரதான கட்டு பாட்டு மையத்தில் இருந்து வந்த தகவல் காங்கேசன்துறையில் இருந்து எதிரியின் படகுகள் வருகின்றது, தங்கள் கட்டளை வரும் வரை வண்டிகளை நிறுத்தும் படி பணித்தார்கள். டேவிட்டும் படகை நிறுத்தி வைத்திருக்க கட்டளையிட்டு பின் குறிப்பிட்ட நேரத்தின் பின் “அனுமதி” கிடைத்ததும் பயணத்தை தொடங்கினோம். நாங்கள் திருகோணமலைக்கு நேரில் வரும் போது மீண்டும் தொலைதொடர்பு அலறியது. எம்மை இனம் கண்ட எதிரிகளின் சண்டை படகுகள் எம்மை நோக்கி வருவதாகவும் தாக்குதலுக்கு தயாரகும் படியும் கூறப்பட்டது. உடனே டேவிட்டிடம் இருந்து எல்லா படகுகளுக்கும் கட்டளை பிறப்பித்து உடனேயே ஒரு தாக்குதல் வியூகம் அவனால் வகுக்கப்பட்டது. அதன் படி பயணிகள் படகை ஒரு சண்டை படகு காவல் காக்க அனுப்பி அதை சற்று உயர்வாக அனுப்பி விட்டு அதை எதிரி அண்ட விடாமல் L வடிவில் பாதுகாப்பு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தோம். அப்போது டேவிட் புன்னகையுடன் சொன்னான் மச்சான் அவன்ற ஒன்பது டோராவை (சண்டை படகு) கதுவி (radar) காட்டுது, அனேகமா உனக்கு சங்கு தான் என்டான். ஏன் எனக்கு மட்டும், உனக்கும் தான் என்றேன். அவனும் புன்னகையுடன் எதிரியின் ஒன்பது சண்டை படகை எங்களின் நான்கு சண்டை படகும் இரண்டு கரும்புலிகள் படகும் தடுக்க ஆயத்தமாகின. இதில் டேவிட் சண்டை பிடிப்பதை விட பயணிகள் படகை பாதுகாக்கவே முயச்சித்து தப்பவே வியூகம் வகுத்தான் காரணம் அந்த பயணிகள் படகில் அந்த “நேரத்தில் முக்கியமான” ஒருவர் பயணித்தார். எனக்கு இது புது அனுபவம் அதனால் ஒரு வித உச்சாகத்தில் இருந்தேன். சண்டை படகுகள் எம்மை நெருங்கி விட்டன, இதோ எதிரியை கிட்ட வரும் வரை தாக்க வேண்டாம் என்று டேவிட் கட்டளை இட்டு தொடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது எதிரியே சண்டையை ஆரம்பித்தான். பதிலுக்கு எமது படகுகளும் தாக்குதலில் இறங்கின கடும் சண்டை மூண்டு விட்டது. கடும் சண்டையின் போது தான் டேவிட்டின் ஆளுமையை கண்ணூடே கண்டேன். அவனை நினைக்கும் போது பெருமையாக இருந்தது. எந்த சலனமும் இல்லாது உடனுக்குடன் கட்டளைகளை வழங்கினான். அவனது எண்ணமெல்லாம் பயணிகள் படகை சேதமில்லாது கரை சேர்ப்பதே. அப்போது எமக்கு உதவிக்கு செழியன் தலமையில் இன்னொரு படகு தொகுதி ஒன்று வந்து சண்டையில் இறங்கவும் டேவிட் அவனுக்கு கிடைத்த கட்டளைப்படி சண்டையில் இருந்து விலகி கரையை அடைந்தோம். இப்படியே கரை வந்து பணிக்கு சென்ற பின் ஒரு நாளில் செய்தியின் ஊடாக அறிந்தேன் மன்னாரில் நடந்த படகு வெடி விபத்தில் டேவிட் வீரச்சாவென்று. எங்களுக்கு மரணம் புதிதல்ல தான் எவ்வளவு உறுதியாக இருந்தாலும், எமை அறியாமலே சில நேரம் உடைந்து தான் போகிறோம். அந்த காலகட்டத்தில் டேவிட் வீரச்சாவடையும் வரை ஆழ்கடலின் பெரும்பாலான சண்டைகள் டேவிட்டாலேயே வழிநடத்தப் பட்டது. டேவிட்டின் வீரசாவின் பின் தளபது சூசை அண்ணை தனது ஆதங்கத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில், டேவிட்டின் ஆளுமை பற்றி சிலாகித்து கூறினார். எந்த இறுக்கமான சண்டை என்றாலும் எனது தெரிவு டேவிட் தான். லெப். கேணல் சாள்சின் வீரச்சாவின் பின் (கிளாலி கடல் நீரேரியில் 11.06.1993 இல் வீரச் சாவடைந்தார்) எனக்கு கிடைத்த சிறந்த கட்டளை அதிகாரி டேவிட். அவனது இழப்பு கடற்புலிகளுக்கே பெரிய இழப்பு. அவனது மரணம் தலைவரையும் ஆட்கொண்டதையும் கூறி நினைவு கூர்ந்தார். வீரர்கள் அழியலாம் அவர்களது வீரம் என்றும் அழிவதில்லை. நினைவுப்பகிர்வு: துரோணர். https://thesakkatru.com/commander-of-sea-tigers-lieutenant-colonel-devid/
  17. ஆளுமையின் வடிவம் லெப். கேணல் நிலவன் டிசம்பர் 15, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன். ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன்தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிவவனது கையில் இருந்தது சுஊடு ஆயுதம். இந்த ஆயுதத்துடன் தான் படகுகளில் ஏறிச் சண்டை செய்தான். படகில் ஆயத இயக்குனராகச் சண்டைகளுக்குச் சென்று வந்த நிலவன், பல்வகைப் படைப்பலங்களைக் கையாள்வதில் தேர்ச்சி மிக்கவனாகத் தன்னை வளர்த்தான். படைக்கருவிகளைக் கையாண்டு கடற் போர்களைச் செய்த நிலவன். மெல்ல மெல்லப் படகின் ஓட்டியாகப் பொறி சீர்செய்பவனாக, தொலைத் தொடர்பாளனாக எனப் படிப்படியாக வளர்ந்து, படகை வழிநடத்தும் கட்டளை அதிகாரியாக தன்னை வளர்த்திருந்தான். மிகக் குறுகிய காலத்துக்குள் இவனது வளர்ச்சியைப் பார்த்து நானே பல வேளைகளில் பெருமைப்பட்டிருக்கின்றேன். இவனது செயல்திறனைக் கருத்தில் கொண்டு கடற்புலிகளின் நடவடிக்கை அணிக்குள் உள்வாங்கி இருந்தேன். நேரம் காலமின்றி ஓய்வொழிச்சல் ஏதுமின்றி அயராது உழைக்கும் நடவடிக்கை அணியில் நிலவன் மிகத்திறமையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டான். இங்கு நீண்ட கடல் அனுபவத்தைப் பெற்றுச் சிறந்த கடலோடியாகத் தன்னை இனங்காட்டியிருந்தான். நல் ஆற்றலும், ஆளுமையும் கொண்;டு வளர்ந்துவரும் போராளிகளுக்குக் கண்டிப்பாக நிர்வாகத் திறனும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. இதனால் நிலவனுக்குச் சற்றுக்கூட பொருத்தம் இல்லாத கடற்புலிகளின் வழங்கல் பகுதிப் பொறுப்பைக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அந்தப் பணியையும் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வண்ணம் மிக நேர்த்தியாக நிலவன் செய்து காட்டினான். இந்த நேரத்தில்தான் மன்னாரில் சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்கள் ‘போதைப்பொருள்’ பாவனைக்கு அடிமையாகி வரும் மக்களைக் காப்பதோடு, அதன் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தி, மக்களை இந்தக் கேடான பழக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டிய பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். மன்னாருக்குச் சென்ற நிலவன் நான் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகப் பணியில் இறங்கி, மதகுருமார்கள், கல்விமான்கள், சமூகப்பெரியவர்கள் என எல்லோரையும் அணுகி சமூகத்தைக் காக்க வேண்டிய கடமையை எடுத்துச் சொன்னான். ஒவ்வொரு வீடுவீடாகப் போய் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டினான். இவனது பெரும் முயற்சி பேராபத்திலிருந்து மக்களைக் காத்துத என்றால் மிகையாகாது. இவ்வாறாக சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நிலவன் மன்னார் நடவடிக்கை அணியிலும் சில காலம் செயற்பட்டிருந்தான். இந்தச் சூழ்நிலையில்தான் ‘ஆழிப்பேரலை அனர்த்தம்;’ ஏற்பட்டது. இந்த இழப்புக்குள்ளும் அழிவுக்குள்ளும் இருந்து மக்களை நிமிர்த்தி, மீளக் குடியமர்த்த வேண்டிய தேவை இருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு அபிவிருத்திச் செயல் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்தது. இங்குதான் வடமராட்சி கிழக்கின் அபிவிருத்தி மீள் குடியேற்றப் பணிக்காய் நான் நிலவனை நியமித்திருந்தேன். ஆனால் அந்தப்பகுதி அவனது சொந்த இடமாக இருந்ததனால், அங்கு சென்று வேலை செய்வதற்கு அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. இதனால் சிறு தயக்கம் அவனுக்கிருந்தது. ஆனால் நிலவனைக் கூப்பிட்டு நிலமையை எடுத்துச் சொல்லி இது மக்களுக்குச் செய்யும் பெரும்பணி என்பதை உணர்த்திய போதுதான் அந்த வேலையைப் பொறுப்பெடுத்தான். மிக வேகமாக இரவு பகல் பாராது அந்தப் பணிக்குள் மூழ்கிய நிலவன் குறிப்பிட்ட சில காலத்துக்குள் மீண்டும் என்னிடம் வந்த நின்றான். ‘நான் அங்க வேலை செய்யேல்ல…’ என்ற எனக்குத் தெரியும். சில புரிந்துணர்வுச் சிக்கல்கள் அவன் மனதைப் பாதித்திருப்பதை நான் உணர்ந்தேன். அதனால் அவனது இடத்துக்கு வேறு ஒருவரை அனுப்பிவிட்டு நிலவனைத் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமித்தேன். அவனும் மிக விருப்புடன் அந்த பணியை ஏற்றுச் சென்றிருந்தான். அங்கு மிக இறுக்கமான காலகட்டத்தில் எல்லாம் உறுதியோடும் மன வைராக்கியத்தோடும் நின்று செயற்பட்டிருந்தான். பின்னர் திருகோணமலையிலிந்து திரும்பிய நிலவனுக்கு லெப். கேணல் பாக்கியன் படையணிப் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். அந்தப் படையணியை வளர்க்க அவன் உழைத்தான். அவனது உழைப்பு அந்தப் படையணியில் பாரிய மாற்றங்களைத் தந்தது. இந்தவேளையில் தான் 26.12.2007 அன்று மன்னார் நெடுந்தீவுச் சண்டை தொடங்கிய போது ஒரு படகின் கட்டளை அதிகாரிக்குச் சுகயீனம் காரணமாக மாறிச் சென்றவன் திரும்பி வரவில்லை. எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொடுத்தாலும் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளியை நான் இழந்துநிற்கும் அதேவேளை அவனது இழப்பால் துயருறும் குடும்பத்தின் துன்பச்சுமையிலும் பங்கெடுத்து நிற்கின்றேன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: கேணல் சங்கர் சூசை சிறப்புத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள். நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு. https://thesakkatru.com/form-of-personality-sea-tiger-lieutenant-colonel-nilavan/
  18. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.