Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 அஜ்மீரின் ராஜா நபிவழி நடந்தால் நரகமில்லை.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
- நியானி.jpg
- தமிழ்நிலா.jpg
- பசுவூர்க்கோபி.png
-
மாவீரர் புகழ் பாடுவோம்
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பூரணத்தை கையில் கற்பகமே உந்தன் பெற்பதங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மா பூ மகிழம் பூ
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 வெள்ளிக் கதவை கார் மேகம் குடை பிடிக்கும் - தப்ஸ்
- Eppothum Thamizhan.jpg
-
மாவீரர் புகழ் பாடுவோம்
சின்ன சின்ன வீடு கட்டி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் அற்புதப் பாலனாகப் பிறந்தார் ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2 ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து, மரியாம் கன்னியிடமுதித்து-2 மகிமையை மறந்து தமை வெறுத்து-2 மனுக்குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமைய அற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் சாதி ஏவினார் ஆபிரகாம் விசுவாசவித்து-2 யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2 ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம் 2.பூலோக பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர்-2 மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2 மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம் 3.அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே-2 அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2 அற்பரன் மெய்பரன் தற்பரனார் மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து, மரியாம் கன்னியிடமுதித்து-2 மகிமையை மறந்து தமை வெறுத்து-2 மனுக்குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னர தீம்; தீம், தீமைய அற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவே, இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன் என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 நாயகத்தை காணாத கண்ணும் பூந்தென்றல் காற்றாய்
-
லெப். கேணல் மனோஜ்
லெப். கேணல் மனோஜ் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து சொல்லு வான்நிலாவே! உனக்குத்தான் தெரியும் அவனது வீரநடை. திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் மனோஜ் தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே மண்ணாகி காப்பதற்கு மட்டுமல்லாமல் தமிழீழ மன்னைப் பாதுகாப்பதற்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் இனத்தையும் காக்கப் புறப்பட்டான். எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்சிகளை மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணவியல்வுகளும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும். குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப் பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற விதியை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர். எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்காகின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டுபிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார். எதிரியுடன் சண்டை அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது. அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர். ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிருதது. மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான படைகளின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை அசட்டை செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார். அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரிடமிருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் அவரிடம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது. இவர் 1989 ஆம் ஆண்டில் தன்னை தாயக மீட்ப்புப் போரில் இணைத்துக் கொண்டார்.அவ்வேளையில் இவர் பங்கு பற்றிய முக்கிய சமர்களான பன்குளத்தில் இராணுவ ராக் வண்டி மீதான தாக்குதல், கடவானைக் காட்டில் முகாமை முற்றுகையிட வந்த இராணுவத்தினர் மீது முறியடிப்புத் தாக்குதல், விளான் குளத்தில் வைத்து இராணுவத்தினர் மீது பதுங்கித்தாக்குதல், பாலம்போட்டாறு இராணுவத்தினர் மீது பதுங்கித் தாக்குதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். 1994ம் ஆண்டில் எமது இயக்கத்தால் நடாத்தப்பட்ட அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் மேஜர் படிப்புக்காகச் சென்று ஒரு வருடப்படிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் 1995ம் ஆண்டு திருமலைப் படையணியில் இணைந்து கொண்டு 2000ம் ஆண்டு வரை பொறுப்பாளராகக் கடமைபுரிந்தார். இவருடைய முக்கிய சமர்களங்களாக தவளைப் பாய்ச்சல். ஆனையிறவு – பரந்தன் சமர்கள், மன்னார் பொலீஸ் நிலையத் தாக்குதல், ஜெயசிக்குறு, வெல்வெரி வெற்றிச் சமர், பச்சனூர் பொலீஸ் நிலையாத் தாக்குதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். பின்பு 2001ம் ஆண்டு 150 பேருக்குரிய தாக்குதல் தளபதியாக கடமையாற்றிய காலக்கட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையில் யாழ் நகர் நோக்கி முன்னேறும் ஒரு பகுதி பொறுப்பு இவ்வரிடம் கொடுக்கப்பட்டது. தாக்குதல் நிறைவு பெற்றபின் திருகோணமலை மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். இதன் பின் மீண்டும் திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதியாகக் கடமையாற்றிய வேளையில் இவர் மேற்கொண்ட மூதூர், பாலத்தோப்பூர் இராணுவ புலனாய்வுப்பிரிவு முகாமே இறுதி முகாமாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. நள்ளிரவில் தொடங்கிய யுத்தத்தின் சத்தங்களே எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத் தாக்கத் தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று. ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சூரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்துவிட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை. துப்பாக்கி முனையில் தன் உயிரை நீத்து ஈழமண்ணை முத்தமிட்டு மூன்று போராளிகளுடன் ஓர் இமயமலை தரை சாய்ந்தது. அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள். உங்கள் நினைவாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் “லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை” தொடங்கப்பட்டுள்ளது. மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம். நினைவுப் பகிர்வு: பா.கமலநாதன் (சகோதரன் – பிரான்ஸ்). நன்றி – தமிழ்அலை இதழ் (02.11.2003). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-manoj/
-
லெப். கேணல் மறவன் மாஸ்ரர்
லெப். கேணல் மறவன் மாஸ்ரர் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள்/0 கருத்து காலத்தின் உயிர் மூச்சாக ஓயாத புயலாக என்றும் கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர். காலத்தின் உயிர் மூச்சாக ஓயாத புயலாக என்றும் கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர்.தமிழீழத் தேசத்தின் விடுதலை வேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத் தடங்களில் கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் கடற்புலிகள் படையணி எத்தகைய முக்கியத்துவம் வகித்ததோ அதே போல் கடற்புலிகளின் வளர்ச்சியிலும் கடற்புலிகளின் அரசியல்த்துறையின் விரிவாக்கத்திலும் லெப். கேணல் மறவன் மாஸ்ரர் முதன்மையான பாத்திரம் வகித்தவர். அத்துடன் கடற்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுப் பாலத்தைக் கட்டி வளர்ப்பதிலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மக்கள் மயப்படுவதிலும் தனது போராட்ட வாழ்நாளின் இறுதிக்கணம் வரையிலும் அயராது உழைத்தவர். யாழ் மாவட்டத்தில் நெய்தல் நிலமான வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் அழகிய கத்தோலிக்கக் கிராமமான தாளையடி மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட மறவன் மாஸ்ரர் என்ற ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் தனது இளமைக் காலக் கல்வியை யாழ் குடாநாட்டிலும் தென்னிலங்கையிலும் அமையப் பெற்றிருந்த முன்னிலையான கல்லூரிகளில் தொடர்ந்தார். இளமைக் காலத்திலேயே கலை ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். அத்துடன் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டம் துடுப்பாட்டம் முதலான விளையாட்டுக்களிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். தனது இளமைக் காலங்களில் பாடசாலைக் கல்வியில் சிறந்து விளங்கியதாலும் சாதுரியமான அறிவாற்றலாலும் பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்றார். கண்டிமாவட்டம் உள்ளிட்ட தென்னிலங்கையின் பல்வேறு பாடசாலைகளிலும் தனது ஆசிரியர் சேவையை முன்னெடுத்திருந்தவர். அதன் பின்னரான காலங்களில் தனது சொந்தப் பிரதேசமான வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் சேவையை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் பாடசாலையின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். தனது ஆசிரியக்காலங்களில் மாணவர்களின் கல்வி விளையாட்டு நன்நடத்தை ஆகிய அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி அவர்கள் சமுதாயத்தில் நற்பிரைஜைகளாக வளர்வதில் சிறந்ததொரு ஆசானாகத் திகழ்ந்தார். தமிழ் மொழியுடன் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். இல்லற வாழ்க்கையில் இவருக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தவரும் ஆசிரியையாக கடமையாற்றி பின்னய நாட்களில் தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். தற்போது கடமையிலிருந்து ஓயவுபெற்றுவிட்டார். மறவன் மாஸ்ரரும் அவரது துணைவியாரும் இருவருமே தாளையடிக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தமது இல்லற வாழ்க்கையின் பயனாக லங்கநாயகம் அமுதினி குமுதினி ஆகிய மூன்று பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராகவும் விளங்கினார்கள். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வழியில் வீச்சுப்பெற்ற 1980களில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த ஸ்ரனிஸ் மாஸ்ரரும் அதன்பால் ஈர்க்கப்பட்டார். அன்றைய நாட்களில் தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை பல இயக்கங்கள் முன்னெடுத்திருந்தன. ஆனாலும் அந்தக்காலச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொள்ளை வழுவாத இலட்சிய உறுதியுடனும் நேர்த்தியான பாதையிலும் முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்பதை அன்றைய நாட்களிலேயே ஐயமற நன்குணர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தனது முழுமையான ஆதரவை நல்கினார். 1984ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக திரு சூசை அவர்கள் (பின்னய நாட்களில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியாக பொறுப்பு வகித்தவர்) பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஆசிரியரான ஸ்ரனிஸ்மாஸ்ரருடன் சூசைஅவர்கள் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்தார். அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கமைவாக ஆயுதப் போராட்டத்தின் இன்றியமையாத தேவையையும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் எடுத்து விளக்கி கணிசமான இளைஞர்களையும் உயர்வகுப்பு மாணவர்களையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்து விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய செயலாற்றினார். அத்துடன் விடுதலைப் போராட்டம் தொடர்பான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் மக்கள் பலமும் ஒரே பாதையில் ஒன்றித்துப் பயணிக்கும் செயற்திட்டத்தை வடமராட்சிப் பொறுப்பாளர் சூசைஅவர்கள் ஸ்ரனிஸ் மாஸ்ரருக்கு ஊடாகவே நெறிப்படுத்தினார். அதாவது ஒருபுறம் பாடசாலை ஆசிரியராகவும் மறுபுறம் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த ஸ்ரனிஸ் மாஸ்ரர் தானும் இயக்கத்தில் ஒரு முழு நேர உறுப்பினராகவே செயற்பட விரும்பினார். ஆனாலும் சூசை அவர்கள் ‘நீங்கள் இப்போதைக்கு ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டு பாடசாலை உயர் வகுப்புக்களிலிருந்தும் இளைஞர்கள் மத்தியிலிருந்தும் எமது போராட்டத்திற்குத் தேவையான ஆட்பலத்தை திரட்டித்தாருங்கள்’ என்று ஸ்ரனிஸ் மாஸ்ரரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கமைவாக மாஸ்ரரும் குறிப்பாக 1984 – 1985ம் ஆண்டு காலப்பகுதிகளில் கணிசமான புதிய போராளிகளை இணைத்து தமிழ்நாட்டிற்கு இராணுவப் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கைக் காட்டுப் பகுதியில் தொடங்கப்பட்ட பயிற்சிப் பாசறைக்கும் தேவையான புதிய போராளிகளை இணைத்ததிலும் மாஸ்ரரின் பங்களிப்பு முக்கியமானது. இலங்கை – இந்திய உடன்படிக்கை 1987 யூலையில் கைச்சாத்தாகியதை அடுத்து அமைதி என்ற போர்வையில் இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்தார்கள். உடன்படிக்கை விதிகளுக்கு மாறாக இந்தியப் படையினரின் அராஜகச் செயல்களும் அட்டூளியங்களும் தாயகத்தில் தலைதூக்கியிருந்ததால் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியப் படையினருக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு தவிர்க்க முடியாததொன்றாகியிருந்தது. அதற்கமைவாக 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் நாளன்று தாயகத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் பெரும் யுத்தம் வெடித்தது. இதனையடுத்து விடுதலைப் புலிகளையும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களையும் தேடியழிக்கின்ற நடவடிக்கையில் இந்தியப்படையினர் தீவிரமாக இறங்கினர். ஆதலால் ஸ்ரனிஸ் மாஸ்ரரும் இந்தியப் படையினரின் தேடுதலுக்கு உள்ளாகியிருந்தார். இந்தச் சூழ்நிலையில் வடமராட்சி அணியில் அங்கம் வகித்த குறிப்பிட்ட போராளிகள் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் புறத்திலுள்ள போக்கறுப்பு வண்ணாங்குளம் சுண்டிக்குளம் ஆகிய இடங்களில் காட்டுப் பகுதிகளை அண்டியதாக மக்களின் மறைமுகமான ஆதரவுடன் தலைமறைவாக தங்கியிருந்து போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள். எனவே இந்தியப் படையினரால் தீவிரமாக தேடப்பட்டுவந்த ஸ்ரனிஸ் மாஸ்ரரும் குறித்த இந்த போராளிகள் அணியுடன் இணைந்து கொண்டார். அன்றிலிருந்து சயனைட் வில்லையை கழுத்தில் அணிந்துகொண்டு தன்னை ஒரு முழு நேரப் போராளியாக இணைத்துக் கொண்டார். அப்போது அந்த அணியில் மாஸ்ரரின் மகனான லங்கநாயகமும் எடிசன் என்ற பெயருடன் போராளியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். பின் நாளில் எடிசன் போராட்டத்திலிருந்து விலகிவிட்டார். இந்தியப் படையினரின் தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகள் பிரதான சந்திகளில் இந்தியப் படையினரின் காவல் நிலைகள் கட்டைக்காடு தாளையடி நாகர்கோவில் உள்ளிட்ட இன்னும்பல இடங்களில் இந்தியப் படையினரின் பிரதான படைத்தளங்கள் என இந்தியப் படையினரின் இறுக்கமான பிடிக்குள் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சமயத்திலும் ஸ்ரனிஸ் மாஸ்ரர் மக்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி போராளிகளுக்கு தேவையான உணவுப் பார்சல்களை மக்களிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளல் மற்றும் போராட்டத்திற்கான புதிய போராளிகளை இணைத்து மணலாற்றுக் காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தல் ஏனய போராளிகளை இராணுவச் சுற்றிவளைப்புக்களிலிருந்து பாதுகாத்தல் முதலான போராட்டத்திற்கு இன்றியமையாத பணிகளை தனது சாதுரியமான அறிவாற்றலால் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றியிருந்தார். மாஸ்ரரால் இணைக்கப்பட்ட போராளிகள் பின்நாட்களில் அமைப்பில் துறைசார்ந்த பொறுப்பாளர்களாகவும் அணித் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் பொறுப்புக்கள் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1990ம் ஆண்டு முற்பகுதியில் இந்தியப் படையினர் தமிழீழ மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறியதன் பிற்பாடு திரு சூசைஅவர்கள் மீண்டும் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பேற்றதையடுத்து ஸ்ரனிஸ் மாஸ்ரர் தனது உறுப்பினர் பெயராக மறவன் என்ற பெயரை தனதாக்கி மறவன் மாஸ்ரராக வடமராட்சி அணியில் வலம் வந்தார். சூசைஅவர்கள் வடமராட்சி அணியை விரிவாக்கம் செய்யும் செயற்திட்டத்தில் மறவன் மாஸ்ரர் அவருக்கு பக்கத் துணையாகச் செயற்பட்டவர். குறிப்பாக அரசியல்ச் செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கொள்கைப் பரப்புரைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்துடன் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் உருவாக்கத்தின் போது அதன் கட்டுமானப் பணிகளையும் நெறிப்படுத்தியதுடன் மாவீரர் துயிலும் இல்லம் திறந்து வைக்கப்பட்ட தொடக்கநாட்களில் அதாவது அன்றைய நாட்களில் மாவீரர்களின் வித்துடல்கள் தகனம் செய்வதுதான் நடைமுறையாக இருந்தது. அதற்கமைவாக மாவீரர்களின் வித்துடல்களை பொதுமக்களின் வணக்கத்திற்காக வைத்து பின்னர் துயிலும் இல்லத்திற்கு கொண்டுவந்து முழுப்படைய மதிப்புக்களுடன் தகனம் செய்கின்ற புனிதமான பணிகளையும் விசுவாசமாகவும் நிறைவாகவும் செய்திருந்தார். அதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்டளவில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புறா அணி 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியாக பரிணாமம் பெற்றபோது அதுவரை காலமும் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக பொறுப்புவகித்த திரு. சூசைஅவர்கள் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றார். இதனையடுத்து மறவன் மாஸ்ரரும் வடமராட்சி அணியிலிருந்து கடற்புலிகள் படையணியில் இணைந்து கொண்டார். 1992ம் ஆண்டு கடற்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக மறவன் மாஸ்ரர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது ஆளுமையுடன் கூடிய அரசியல்ப் பேச்சுக்கள் மக்களை பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக வடமராட்சி வடக்கு வடமராட்சிக் கிழக்கு மற்றும் பாசையூர், குருநகர், கொழும்புத்துறை, நாவாந்துறை, சின்னக்கடை, கொட்டடி பிரதேச வாழ் மக்களுடன் நெருக்கமான உறவு நிலையைப் பேணி சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் நீங்கா இடத்தைப் படித்துக்கொண்டவர். அந்த வகையில் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கள் சமாசங்கள் மற்றும் கடற்றொழிலாளர் ஒன்றியங்கள் ஆகிய சமூகக்கட்டமைப்புக்களுக்கு ஊடாக சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகளாலும் கடல்வலயத் தடைச் சட்டத்தாலும் மீனவர்கள் மீதான கடற்படையினரின் கொலைவெறித்தாக்குதல்களாலும் சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த நெய்தல் நில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் அந்த சமூகக் கட்டமைப்புக்களுக்கு ஊடாக விடுதலைப் போராட்டத்திற்கு இன்றியமையாததும் பக்க பலமானதுமான மக்கள் பலத்தை அணிதிரட்டி கடற்புலிகளின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் அயராது உழைத்தார். 1992ம் ஆண்டு நடுப்பகுதியில் மண்டைதீவுக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் நீரூந்து விசைப்படகை கடற்புலிகள் மிகவும் லாவகமாக கைப்பற்றிக் கொண்டுவந்து அதனை குருநகரில் கரையேற்றியபோது மறவன் மாஸ்ரர் நின்ற உற்சாகத்தில்தான் குருநகர் பாசையூர் மக்கள் அனைவரும் வந்து அந்த நீரூந்து விசைப்படகை கரையேற்றுவதற்கு தோள் கொடுத்தார்கள். முதன் முதலில் கைப்பற்றப்பட்ட அந்த நீரூந்து விசைப்படகுதான் கடற்புலிகள் பின் நாளில் தமிழீழ கடற்படையாக வளர்ச்சி காணுவதற்கு வித்திட்டது. தொடர்ந்தும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களுக்கு மறவன் மாஸ்ரர் பல வழிகளிலும் பக்கத் துணையாகச் செயற்பட்டார். 1995ம் ஆண்டு பிற்பகுதியில் அரச படையினர் யாழ் குடாநாட்டின் மீது முன்னெடுத்த சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது குடாநாட்டிலிருந்து இலட்சக் கணக்கான மக்களும் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு இடம் பெயர்ந்திருந்தனர். 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் நாளன்று யாழ் குடாநாடு முழுமையாக அரச படையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியதையடுத்து விடுதலைப் புலிகளின் அனைத்து கட்டமைப்புக்களும் படையணிகளும் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக் கொண்டு செயற்பட்டன. ஆனாலும் யாழ் குடாநாடு அரச படையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானமையானது மறவன் மாஸ்ரரின் மனதை ஆழமாகப்பாதித்தது. அன்றிலிருந்து அவர் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். அதாவது தான் மீண்டும் யாழ்ப்பாணத்தில் கால் பதிக்கும் வரையிலும் ரவுசர் அணிந்து கொள்ளமாட்டேன். இதுவே அந்தச் சபதமாகும். அன்றிலிருந்து சாதாரண வெள்ளைச் சாரமும் சேட்டும் அணிந்து கொள்வதையே வழக்கமாக்கிக் கொண்டார். வன்னியில் கடற்புலிகளின் ஆளுகைக் குட்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டம் மன்னார் மாவட்டம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் மேலாளராக மறவன் மாஸ்ரர் பொறுப்பேற்றுக் கொண்டு கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களையும் அவற்றை நிர்வகிக்கின்ற சமாசங்களையும் சீரமைத்து புதுப்பொலிவுடன் செயற்பட வழிவகுத்ததோடு மறவன் மாஸ்ரரின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவே கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் சமாசங்களும் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுத்தன. அப்போது வடமராட்சியிலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலான கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களிலேயே குடியிருந்தார்கள். எனவே இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மறவன் மாஸ்ரரின் ஆலோசனைக்கு அமைவாக வடமராட்சி கடற்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வடமராட்சி இடம்பெயர்ந்தோர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக இடம்பெயர்ந்த கடற்தொழிலாளர்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டியது. மேலும் மறவன் மாஸ்ரர் சிறந்த நாடக எழுத்தாளர். சிறந்த கலைஞர். அத்துடன் பாரம்பரிய கலைவடிவங்களில் ஒன்றான கரகாட்டம் ஆடுவதிலும் அதனை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவதிலும் அத்துடன் பாடல்களுக்கேற்ற அபிநயநடனத்தை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். ‘இன்னும் ஐந்து மணித்துளியில் எதிரியின் போர்க்கப்பல் வெடிக்கும் தமிழ் ஈழம் என் வெற்றிச்செய்தி படிக்கும்…..’ என்ற பாடலுக்கும் ‘அடடா பகையே வாடாவாடா புலியா நீயா பார்க்கலாம்…..’ என்றபாடலுக்கும் அவரால் நெறியாள்கை செய்து அரங்கேற்றப்பட்ட அபிநய நடனங்கள் தேசியத்தலைவரின் பாராட்டுதல்களை பெற்றிருந்தது. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் நாளன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் நான்காவது கட்டமாக வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்காக சிறப்புத்தளபதி சூசை அவர்களால் மறவன் மாஸ்ரரிடம் மிக முக்கியத்துவமானதும் சவால் நிறைந்ததுமான பாரியபணி ஒன்று ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதாவது வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் வெற்றி கொள்ளப்படும் வரையிலும் சுண்டிக்குளம் – சேற்றுத்தொடுவாய் உடைப்பெடுக்கவிடாமல் தடுக்கவேண்டும். குறித்த தாக்குதல் நடவடிக்கை நடந்த காலப்பகுதி மாரிகாலம் என்பதால் களமுனைக்கான விநியோகம் படகுகள்மூலமாக சுண்டிக்குள நீரேரி ஊடாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறு சேற்றுத்தொடுவாய் உடைப்பெடுக்கும்பட்சத்தில் சுண்டிக்குளம் நீரேரி தண்ணீர் கடலுக்குள் சென்றுவிடும். சதுப்புநிலத்தில் படகுகளை செலுத்தமுடியாது. இதனால் களத்தில் வீரச்சாவடைந்தவர்கள், விழுப்புண்ணடைந்தவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படைக்கலத் தளபாடங்கள் ஆகியவற்றை நகர்த்த முடியாது போய்விடும். ஏற்கனவே 1997ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆனையிறவு – பரந்தன் படைத்தளங்கள் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வலிந்ததாக்குதலில் பதினொரு ஆட்லறிப்பீரங்கிகள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டபோதிலும் அந்தச் சந்தர்ப்பத்தில் சுண்டிக்குளம் – நல்ல தண்ணீர்த் தொடுவாய் உடைப்பெடுத்ததால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல்ப்போனது என்றதற்கமைவாக கைப்பற்றப்பட்ட பதினொரு ஆட்லறிப் பீரங்கிகளையும் நகர்த்த முடியாமல் அங்கேயே தகர்த்தழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை யேற்பட்டது. இந்த படிப்பினையையும் அனுபவத்தையும்கொண்டுதான் சூசை அவர்கள் மறவன் மாஸ்ரரிடம் கண்டிப்பான உத்தரவுடன் கூடிய இந்தப்பணியை ஒப்படைத்திருந்தார். மாரி மழையும் கடுமையாகப் பொழிந்தது. எந்த நேரத்திலும் சேற்றுத்தொடுவாய் உடைப்பெடுக்கும் அபாயச் சூழ்நிலை நிலவியது. மறவன் மாஸ்ரர் நாட்டுப்பற்றாளர் ஜோண் பொஸ்கோவையும் கூட்டிச்சென்று அர்த்த சாமத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடுவாய் முகத்துவாரத்திற்கு மண்சாக்குகளை அடுக்கி தொடுவாய் உடைப்பை தடுத்து இயற்கையை வெற்றிகொண்டதோடு வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்களின் வெற்றிக்கும் வலுச்சேர்த்திருந்தார். 2000ம் ஆண்டு ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்நடவடிக்கையாக விடுதலைப்புலிகளால் தாளையடி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு செம்பியன்பற்று மாமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் தாளையடிக்குச் சென்ற சிறப்புத் தளபதி சூசைஅவர்களுடன் கூடச்சென்ற மறவன் மாஸ்ரர் தனது சொந்தவீடு அண்மித்ததும் “அண்ண ஒரு நிமிசம் அண்ண ஒருநிமிசம்” என்று கூறிவிட்டு ஓடிச்சென்று தனது வீட்டில் ஒருபிடி மண்ணை எடுத்து முத்தமிட்டு அதனை தனது சேட்பொக்கற்றினுள் போட்டுக்கொண்டு வந்திருந்தார். இது அவர் தான் பிறந்த மண்ணின் மீது கொண்ட ஆழமான காதலை வெளிக்காட்டி நிற்கின்றது. மேலும் கடலில் வீரச்சாவடைந்த கடற்புலி மாவீரர்களையும், கடற்கரும்புலி மாவீரர்களையும் நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாவீரர்நாளில் கடலில் நினைவுச்சுடர் ஏற்றப்பட வேண்டும் என்ற ஆலோசனையை மறவன் மாஸ்ரர் சிறப்புத் தளபதி சூசை அர்களுக்கு கூறியதற்கமைவாகவே 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரையிலும் மாவீரர் நாளில் கடலில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து முல்லைத்தீவுக் கடலில் பொதுச்சுடர் ஏற்றப்படுவது வழக்கமான நடைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக நடைமுறைக்குவந்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மறவன் மாஸ்ரர் யாழ் குடா நாட்டிற்குச் சென்று அதுவரை காலமும் மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த தீவகம் வலிகாமம் வடமராட்சி ஆகிய பிரதேசங்களின் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் சமாசங்கள் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றை மறுசீரமைத்து அந்த சமூகக்கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க அளப்பரிய சேவையாற்றியவர். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களின் புனர்நிர்மாணம் மீள்கட்டுமானம் போன்ற செயற்திட்டங்களில் அவ்வவ்போது வேண்டிய ஆலோசனைகளை வழங்கி அபிவிருத்திப்பணிகளை சீரியமுறையில் நெறிப்படுத்தினார். 2002ம் ஆண்டு வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் உருவாக்கப்பட்ட பொழுது அதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பெரிதும் பங்காற்றினார். தான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்றதையடுத்து 2002ம் ஆண்டு யூலை மாதம் நடபெற்ற கடற்புலிகளின் பத்தாவது ஆண்டு நிறைவு நாளுடன் தனது சபதத்தை முடித்துக்கொண்டார். அதாவது வெள்ளைச்சாரம் அணிவதை விடுத்து மீண்டும் ரவுசர் அணிவதை நடைமுறையாகக் கொண்டார். பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் போராளிக்கலைஞர்களை உள்ளடக்கி மாஸ்ரரால் நெறியாள்கை செய்து அரங்கேற்றப்பட்ட நாடகமும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த தேசியத்தலைவரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்தது. 2003ம் ஆண்டில் மாவீரர் எழுச்சி நாட்களை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் போராளிக் கலைஞர்களை உள்ளடக்கி கரகாட்டம் அரங்கேற்றப்பட வேண்டும் என்ற சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஐந்து மாவட்டங்களிலும் தனது நெறியாள்கையில் கரகாட்டத்தை அரங்கேற்றி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தார். அத்துடன் இயக்கத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அவரது நெறியாள்கையில் அரங்கேற்றப்பட்ட கரகாட்டம் போராளிகள் மத்தியிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டது. கரகாட்டம் என்றால் மறவன்மாஸ்ரர் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரது கரகாட்டம் பெயர்பெற்றிருந்தது. தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்றவகையிலும் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாகவும் தனது பணிகளை முன்னெடுத்தவர். தேசியத் தலைவரினதும் சிறப்புத் தளபதியினதும் மதிப்பிற்கும் விருப்பத்திற்கும் பாத்திரமானவர். சிறப்புத் தளபதி சூசை அவர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் தேவையான ஆலோசனைகளை வழங்கி சகலவழிகளிலும் பக்கத் துணையாகவிருந்து வழிகாட்டிய ஒரு சிறந்த ஆசான். ஆனாலும் தான் எடுத்த முடிவில் சிறிதும் வழுவாத ஒரு பிடிவாதக்காரன். மறவன் மாஸ்ரர் தொடர்பாக சிறப்புத்தளபதி சூசை அவர்கள் குறிப்பிடுகையில்….. ‘அவர் ஒரு பிடிவாதக்காரன் நான் பொறுப்பாளராக இருந்துகூட அவரது பிடிவாதத்தை என்னால் மாற்ற முடியாது போய்விட்டது’ என்றார். வயதால் முதுமை தட்டியபோதும் இயற்கையான நோய்கள் அவரை வாட்டியபோதும் அவற்றையெல்லாம் வெளிக்காட்டாது தமிழீழ விடுதலைக்காக ஓய்வின்றி உழைத்தவர். ஓரிரு சந்தர்ப்பங்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தின் வாசலுக்குச் சென்ற பொழுதும் கூட அவற்றையெல்லாம் துணிவுடன் வெற்றிகொண்ட மறவன்மாஸ்ரரால் இந்தத்தடைவ தனக்கு எதிராக வந்த காலனை வெற்றிகொள்ள முடியவில்லை. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் நாளன்று இரவு 7.30 மணியளவில் மறவன்மாஸ்ரர் மாரடைப்பு ஏற்பட்டு சாவைத் தழுவிக்கொண்டார். அவரது வித்துடல் யாழ் குடாநாடு மற்றும் மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் மக்களின் இறுதி வணக்கத்திற்காக கொண்டுசெல்லப்பட்டபோது அலை அலையாக திரண்டுவந்த மக்கள் அவரது வித்துடலுக்கு கண்ணீருடன் இறுதி வணக்கம் செலுத்தியதுவும் டிசம்பர் மாதம் 17ம் நாளன்று உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடல் விதைக்கப்பட்டபோதும் அலை கடலெனத் திரண்டுவந்த மக்கள் கண்ணீருடனும் கனத்த இதயங்களுடனும் அவரது வித்துடலுக்கு இறுதிவிடைகொடுத்ததுவும் மக்கள் அவர்மீது கொண்டிருந்த ஆழமான அன்பையும் மதிப்பையும் வெளிக்காட்டி நிற்கின்றது. லெப். கேணல் மறவன் மாஸ்ரர் எம்மை விட்டுப் பிரிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் காலத்தின் உயிர்மூச்சாக ஓயாத புயலாக அவர் என்றென்றும் எம்மவர் இதயக் கோவில்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். ‘கடலிலே காவியம் படைப்போம்’ நினைவுப்பகிர்வு:- செங்கோ. https://thesakkatru.com/sea-tigers-lieutenant-colonel-maravan-master/
-
மேஜர் வில்வம்
மேஜர் வில்வம் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து விடுதலையின் விழுதெறிந்தவன்: புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் / ஜோன். நேற்றுத்தான் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களில் இன்ப துன்பங்களை பௌர்ணமி முழுநிலப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம் கூட அவருக்கென கிடைத்த பாக்கியம் தான். “அப்பா” இனிமையான தாழ்வான என் அழைப்பு. என் முகத்துக்கருகாக ‘கரிக்கன்’ விளக்கினை நீட்டியவர் “ மங்கிய பொழுதுகளில் படலையைத் திறந்து ‘அப்பா’ என என் மகன் அழைப்பதாய் ஞாபகம்” என்றவாறே கதைக்கத் தொடங்கினார். “எப்பையாவது ஒரு பொழுதில் வருவான். ஈரம் பட்டிருக்கும் ‘ரவை’களைத் துடைத்துத் தருமாறு கூறுவான். ஊறைப்பாய் இறைச்சியைச் சமயணை என தாயாரிடம் கூறுவான் எங்கிருந்தோ அவனது தொலைத் தொடர்பு சாதனத்துக்கு தகவல் வரும். சமைத்ததைச் சாப்பிடாமலேயே ஓடி விடுவான்…” “உவர் அவனையே நினைச்சு நினைச்சு தேய்ந்து போறார்” தேய்ந்து போயிருந்த அம்மா அப்பாவை ஆறுதல் படுத்தினார். அவனுடைய தமையனின் மகளும் அங்கிருந்தாள். அவளது சித்தப்பா இயக்கத்தில் இணைந்ததன் பின் பிறந்த அவள் சித்தப்பாவின் கதைகளை ஏக்கத்துடன் கேட்க – அந்தப் பிஞ்சு விழிகளின் தேடலின் ஊடாக அவனது வாழ்க்கையைப் பார்க்கிறேன். ‘முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம்’ தன் மகனின் புகழுடலுக்கு இறுதியாய் வணக்கம் செலுத்திட, கண்ணீருடன் காத்திருக்கும் தந்தையிடம், “ஐயா அழாதிங்கோ உங்கள் மகன் பிறந்ததே போராடத்தான் அவன் இன்னுமொரு பிறவி எடுப்பான்; கலங்காதீங்கோ” கலங்கியபடியே கூறிய பாதிரியாரின் உணர்வுகளுக்கூடாகவும் அவன் வாழ்வைப் பார்க்கிறேன். அது 1988, இன்னுமொரு அன்னிய ஆக்கிரமிப்பை தமிழர் தேசம் எதிர்த்து நின்ற நேரம், இந்தியப் படையினரின் போர்க் குற்றங்கள், கொடூரங்கள் அவனது விடுதலை உணர்வுக்கு நீரை வார்த்தன. 1988.09 ‘நிலா’ அவனது இயக்கப்பெயர். மாம்பழம், அம்மா, ஜோன், வில்வம் எனக் காலம் இன்னுமதிக பெயரினை அவனுக்கு வழங்கியது. மன்னார் – 09 படைப்பயிற்சி முகாமில், அவனது தமிழீழ விடுதலைப்போரின் வாழ்வு தொடங்கியது. பால் போன்ற பௌர்ணமி நிலவே தான் அவன் வதனம் – பெரியோர் சிறியோர் என்றில்லாது எல்லோருடனும் சரிக்குச்சரி அளவளாவும் சுட்டிப்பாங்கு. “டேய் பூநகரி தெரியுது” என்றால் சட்டென சிரிப்பை அடக்கி காவிப் பற்களை மறைத்துக் கொள்ளும் நாணம். கற்பிக்கப்படும் விடயங்களைக் காதுகொடுத்து ஆழமாய்க் கிரகித்து எழுதப்படும் வினா. அந்த ‘நிலா’வைப் பயிற்சி முகாமில் வேறுபடுத்தியே காட்டியது. “சுரேஸ்! இருபது முத்துக்களை உன் கையில் ஒப்படைக்கின்றேன். அவர்களை வைரக்கல் ஆக்குவதும் உப்புக்கல் ஆக்குவதும் உன் பொறுப்பு” அப்பொழுது மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்த சுரேஸிடம் கேணல் பானு அப்படித்தான் கூறினார். அந்த இருபது முத்துக்களில் (நிலா) ஒருவன். முதற்பணி ‘அரசியல்’. மன்னார் மாவட்டத்தில் வட்டக்கண்டல், பாலப்பெருமாள்கட்டு, குருவில்வான் என பெரியதொரு பிரதேசத்தின் அரசியல் பணி. இந்த இளம் போராளியின் கைகளில். இந்தியப் படையினரின் தேடுதல்சுற்றிவளைப்புக்களில் அகப்படாது. போர் புரிந்து கொண்டே மக்கள் மனங்களில் விடுதலை நெருப்பைப் பற்றவைப்பதும், சமூகக் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும்இ தட்டிக்கேட்பதும் சவால்கள் நிறைந்த பணிகள் தான். சவால்களை எதிர்கொண்டான். பாடசாலை நிகழ்வுகளில் இறுதி நன்றி உரையில் அவனது பெயர் பல தடவைகள் உச்சரிக்கப்படும். ‘முஸ்லிம் பள்ளி’ நண்பனின் ஈருருளியில் ‘பார்’ இல் (டியச) இருந்தபடியே விடுதலைப் போராட்டம் பற்றி விரிவுரை நடாத்துவான். யேசுவின் சிலுவை நிழலில், பாதிரியாருடன் சமூக மேம்பாடு திட்டமிடப்படும். இந்துக்கோவில் திருவிழாக்களில் ஓதப்படும் மந்திரத்தில் அவனது பெயரும் ஒலிக்கப்படும். வறிய மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக அவனது பாதங்கள் கடைப்படிகளுக்கும், வீட்டு வாசலுக்கும் ஏறியிறங்கும். கட்டுக்கரைக் குளத்து வாய்க்கால்வழி நீர் பாய்ச்சுதலில் ஏற்படும் பிணக்குகளிலும் அவனது பிரசன்னம் இருக்கும். வில்வம் அந்த அழகிய கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் பிள்ளை – இந்தியப் படையினருக்கு மட்டும் தொல்லை. 1989, மன்னார் குமாணாயங்குள இந்தியப் படையினருக்கு எதிரான பதுங்கிக் தாக்குதலில் அவனது அசாத்திய துணிச்சல், வேகம், நிதானம், சுரேசினால் அவதானிக்கப்பட்டது. 1989.09 மன்னார் அடம்பன் முகாமிலிருந்து நெடுங்கண்டல் நோக்கி காவல் உலா வந்த இந்தியப் படையினருக்கும், கைக்கூலிக்குழுவுக்கும் எதிரான பதுங்கித் தாக்குதலில் கைக்குண்டை நிதானமாக எறிந்து களத்தைத் தமக்கு சார்பாய் மாற்றிய போது அவனது சாதுரியம் இனங்காணப்பட்டது. அவனது பணியில் உயிரைப் பணயம் வைத்து மிகுந்த ஈடுபாட்டுடன்இ பொறுப்புணர்வுடன் செயற்பட்டாலும் இளவயது குறும்புத்தனங்கள் அப்பப்ப எட்டிப் பார்க்கத்தான் செய்தன. ஆதரவாளர் ஒருவரின் சாளி (chaly) உந்துருளியை எடுத்து அடம்பனிலிருந்து மாந்தைக்குச் செல்ல – அந்த வேகம் உந்துருளியைச் சேற்றுக் குளத்துக்குள் இறக்க ‘வில்வம்’ விழுந்திட்டான், எனத் தெரிஞ்ச சனம் எல்லாம் ஓடிவர, விசயத்தை விளங்கியவன் உந்துருளியைக் கழுவுவது போல் பாசாங்க செய்ய “தம்பி காலில இருக்கிற சூவை (shoo) கழட்டிப் போட்டு கழுவலாமே” சனம் விழுந்து விழுந்து சிரிக்க அவனாலும் சிரிக்கத்தான் முடிந்தது. தன் பணிகளை அறிக்கைப் படுத்தலில் அவனது புலனாய்வுப் பார்வை, விடயத்தை அலசி ஆராயும் போது இனங்காணப்படும் புலனாய்வுக் கண்ணோட்டம் என்பன, இந்தியப்படை எமது மண்ணை விட்டு அகற்றப்பட்டிருந்த 1990 களில் புலனாய்வுத் துறைக்குள் அவனை உள்வாங்கக் காரணமாக அமைந்தன. புலனாய்வுத் துறை அவனுக்குப் புதிது. “எந்தத் துறைக்குள் சென்றாலும் அங்கு முத்திரை பதிக்க வேணும்” என்ற அவனது ஈடுபாட்டிற்கு “புலனாய்வுக் கல்லூரி ஆரம்பிக்குதாம்” என்ற செய்தி காதில் விழுந்ததும் விரைவாகக் கடிதம் எழுதி அனுப்பி, புலனாய்வுப் பொறுப்பாளரிடம் இருந்து அக்கல்லூரியில் இணைவதற்கான அனுமதியையும் பெற்றிருந்தான். படிப்புக்கள் முடிந்ததும் புலனாய்வுப் பணியில் நளனின் உதவிப் பொறுப்பாளராக மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழ்மக்கள் பெருவாரியாக தங்கியிருந்த மடுப் பிரதேசம் உள்ளிட்ட, மன்னார் பெருநிலப்பரப்பில் தேசத்துக்கெதிரான சவால்களை எதிர்கொள்வதும் காவல்துறையின் செயற்பாடுகள் விரிவாக்கப்படாத நிலையில் சமூகக் குற்றங்களை, சீரழிவுகளைத் தடுப்பதும் புலனாய்வுப் பணியில் முக்கியமான இலக்குகள். அவனது செயற்பாடுகளை நளன் அவர்கள் விபரிக்கையில் “நான் இல்லாத சமயங்களில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய எதிரியின் புலனாய்வுச் சவால்களையும், சமூகக் குற்றங்களையும் பகுப்பாய்ந்து அதன் ஆழங்கண்டு, அதன் சரியான இறுதி வடிவத்தை இனங்கண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடியவன் என்ற நம்பிக்கை எனக்கெப்போதும் அவன்மீது இருந்தது” என்றிருந்தார். 1994இ இப்படித்தான் ஒருநாள் வன்னி, யாழ் தொடர்புப் பாதையாகக் கிளாலி ஏரி இருந்த காலம். யாழ்ப்பாணத்தில் எமது கண்காணிப்பிலிருந்த படை உளவாளி ஒருவன் கண்காணிப்பிலிருந்து விடுபட்டு வன்னிக்குப் படகேறியிருந்த செய்தி தெரியவர, மன்னார் பெரியமடுவிலிருந்த வில்வத்திடம் அவசரமாய் இத் தகவலினைப் பரிமாற, சனத்திடம் இரவல் உந்துருளியைப் பெற்று சுமார் எழுபத்தைந்து கிலோமீற்றர் ஓடி கிளாலிக் கரையிலிருந்து படகு நல்லூர்க் கரையை வந்தடைய முன் நல்லூர்க் கரையில் நின்று உளவாளியை வரவேற்றான்…. புலனாய்வுப் பணியில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் பிணைத்துக் கொள்ளும் அவனது செயல் அலாதியானது. பாடசாலையை விட்டு வீடுகளுக்கு வரும் சிறுவர்கள் பலர் அவனது உந்துருளியிலேயே வீட்டு வாசலில் இறங்குவர். அவனிடம் கைவசம் இருக்கும் இனிப்பு வகைகளை சிறுவர்களை ஒன்றுகூட்டி வழங்கி மகிழ்விப்பான். முன்பின் அறிமுகமில்லா வீடுகளுக்குள் ஏற்கனவே நன்கு அறிமுகமாகிப் பரிச்சயமான உறவாய் உள்நுழைவான். சமையல் அறைக்குள் நின்று அடுப்படியில் உணவினைத் தானே போட்டுப் பரிமாறும் வரை உறவு நீளும். காலம் அவர்களின் உறவுகளில் ஒருவனாய் அவனை மாற்றிவிடும். அவனது இவ்வகையான அணுகுமுறை அரசியல் பணி ஆற்றிய தளத்திலிருந்து எழுந்தவை. இந்த உறவுகளை ஆதரவாளராக, முகவர்களாக, படகோட்டிகளாக இணைத்தமை அவனது வெற்றிக்கு அமைந்தது போல ஆதரவாளரின் வீட்டில் கோழிக்கறி உண்பதற்காய், தன் கைத்துப்பாக்கியால் கோழியைச் சுட்ட போது – அந்த ரவை இலக்குத்தவறி அயல்வீட்டுச் சிறுமியைக் காயப்படுத்தியமை. ஆதனால் கண்டிக்கப்பட்டமை, மற்றும், மக்களுடனான உறவில் அவனது அதீத ஈடுபாடு – பழக்கம், பண்பான அணுகுமுறை என்பன, விடுதலை உணர்வு சார்ந்தும், புலனாய்வு நோக்கம் கருதி இருந்தும்; அவை காதல் விடயமாக சமூகத்தில் சிலரால் பார்க்கப்பட்டமை, ‘உறவு நிலையில் அவதானம் கொண்டிருக்க வேண்டும்’ என்ற படிப்பினையை உணர்த்தி நின்ற இன்னுமொரு பக்கத்தினையும் தோற்றுவித்ததெனலாம். முக்கிய இலக்கொன்றை அழிப்பதன் தேவை கருதி, அவனது திறமையைக் கருத்திற் கொண்டு, அவனது புலனாய்வுப் பணி மன்னார் பகுதியை மையப்படுத்தியதாக மாறியது. ‘தீவு’ என்றாலே போக்குவரத்துக்கான வழி கடல்வழியாகத்தான் இருக்கும். மன்னார்த்தீவு என்பது சில கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட சிங்களப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவர்களின் படைத்தளமாகவே விளங்கும் தீவாகும். தீவினைச் சூழவுள்ள கடல் பிரதேசங்கள் எங்கும் படையினரின் பிரசன்னங்கள், பாதுகாப்பு வேலிகள், காவலரண்கள் தீவிற்குள் தரையிறங்குவதற்கான பயணமே உயிரைப் பணயம் வைத்ததுதான். 1996, அக்காலப் பகுதியில் தான் அவனது பயணமும், பணியும் தம்முடைய மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. அமாவாசை இரவில் கடல் கொந்தளிப்பின் நடுவே சிறுபடகுகளின் துணையுடன், படையினரின் இரு காவலரண்களுக்கிடையே அவனும் அவன் சக தோழன் கணேசும் இன்னும் பலரும் தரையிறங்குவார்கள். அன்றும் அப்படித்தான், தரையிறங்கிய சில மணிப் பொழுதில் படையினரின் துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்க, படகினை ஓட்டிய ஓட்டி சுந்தரமணி ரவை பட்டு துடிப்பை இழக்க, தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது, நாட்டுப் பற்றாளரான ஓட்டியின் உடலை நீருக்குள் இழுத்துச் சென்று ‘களங்கட்டியினுள்’ பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்து இரவு புலர்வதற்கு முன் படகேறிய இடத்திற்கே எடுத்து வந்தமை அவனது துணிச்சலுக்கப்பால், விடுதலையை நேசித்து, தாமும் களத்தில் நேரடியாய்ப் பங்கெடுக்க முன்வரும் ‘ஆதரவாளர்’ மீதான அவனது மதிப்பையே புலப்படுத்தியது. தன் தேசவிடுதலையை நேசிக்கும், இன்னுமொரு நாட்டுப்பற்றாளன்இ அந்த இளம் வீரர்களை இன்னுமொரு கடற்பகுதியில், மன்னார்த்தீவில் தரையிறக்கத் தொடங்கினார். மன்னார் பட்டணத்துள் மக்களுடன் மக்களாய் அவர்கள் உறுமாறியிருந்த புலனாய்வுச் செயற்பாட்டில் ஓர் நாள்…. தேநீர்க் கடையொன்றினுள் தன் பொறுப்பாளர் விநாயகத்துடன், தேநீர் அருந்திக் கொண்டிருக்க, தற்செயலாக படைப் புலனாய்வாளன் ஒருவன் திடீரென உள்நுழைந்து – அவர்களது இருக்கைக்கருகில் ‘சிகரெட்’டினை ஊதித் தள்ளிக்கொண்டிருக்க “எடுத்துக் குடுப்பமா?” (கைத்துப்பாக்கியால் சுடுதல்) எனத் தன் பொறுப்பாளரிடம் பம்பலாய் அவன் கேட்க, அவர்களை நன்கு அறிந்திருந்த, கடைக்கார அம்மாவுக்கு முழி வெளியே வராத குறை அம்மா இன்னும் அதனை மறக்க முடியாதவராய், அவனது துணிச்சல் ‘வெறும் துணிச்சல் அல்ல’ விவேகத்துடன் கூடியதாகவே வளர்ந்திருந்தது. அன்று மன்னார்ப் பட்டணத்தில் ‘நகர்’ சுறுசுறுப்படைந்திருந்த பட்டப்பகற் பொழுதில், சிங்களப்படை முகாம்களிற்கிடையே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ‘சாராயக்கடை’ ஒன்றிற்கு இரண்டு சிங்களக் காவல்துறையினர் (police) துப்பாக்கிகளுடன் ஜீப் (jeep) ஒன்றில் வந்திருந்தனர். அதில், ஒருவன் மது அருந்துவதற்காகக் கடைக்குள் செல்ல மற்றையவன், கடை முகப்பில் காவலுக்கு நின்றான். ஈருருளியில் வந்த அவன், அதனை நிதானமாக நிறுத்தி, இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பதற்றமின்றி வைத்த குறியில் காவலுக்கு நின்றவன் சரிந்து விழ, அவனது சாவினை உறுதிப்படுத்தி விட்டு, சாராயக்கடைக்குள் புகுந்து அங்கு மதுக்கோப்பையுடன் தள்ளாடிய மற்றவனையும் சுட்டுவிட்டு சிங்களப் படையினரின் பாதுகாப்பு வியூகத்துக்கு ‘தண்ணி’ காட்டி, அவன் வெளியேறியிருந்தமை, மக்கள் மத்தியில் அவனைக் கதாநாயகனாகவும், படைப் புலனாய்வாளர் மத்தியில் ‘எனது கடமை முடிய இன்னும் சில மாதங்கள் தான் இருக்கு – என்னை ஒன்றும் செய்ய வேண்டாம்’ என்று கூறிவிடப்பட்ட அளவுக்கு பயப்பீதியையும் ஏற்படுத்தியிருந்தன. மன்னார்த் தீவில், படையினரின் தொலைத்தொடர்புக் கோபுரம் தகர்ப்பு என அவனது தாக்குதல் நடவடிக்கைகள் நீழுகையில், அதிமுக்கிய புலனாய்வு இலக்கொன்றை வெற்றி பெறுவதற்காகவும் ‘அந்தச் செயற்பாட்டிற்காக அவனது பொறுப்பாளர் விநாயகமும் படையினரால் முழுமையான ஆக்கிரமிப்பினுள் உள்ளாகியிருந்த மன்னார்த் தீவினுள் சென்று செயற்பட வேண்டிய தேவையின்பால் செயற்பட்டுக் கொண்டிருந்தமையினாலும், தேவை கருதியும், பாதுகாப்புக் கருதியும் வலிந்த தாக்குதல்களை தவிர்க்கும்படி கட்டளைப் பீடம் கட்டளை வழங்கியிருந்தது. அந்தப் புலனாய்வு இலக்கினை எட்டுவதற்காக – அவனது பணியில் எல்லா மதத்தவர்இ சமூகத்தவர் மத்தியிலும் களம் அமைத்தான். ஆதரவாளன் ஒருவன் கூறியது போல “சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு உதவி புரியாது விட்டாலும் ‘காட்டிக் கொடுப்பாளர்’களாக மாறிவிடாதபடி பார்த்திருந்தான்” அந்த நிலைதான் அவனது நிறைந்த செயற்பாட்டுக்கான பலவழிகளைத் திறந்திருந்தன. அவனது புலனாய்வுக் கட்டமைப்பினுள், உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் நிறைவானவை, பெறுமதியானவை, மறைவானவை. எதிரியால் கைது செய்யப்பட்டும், தான் கொண்டிருந்த மறைப்பினை அதி இரகசியத்தை வெளிப்படுத்தாத ‘சிற்றிசன்’ எனப்படும் முகவர் ‘எந்தச் சூழ்நிவையிலும் பிறழாத’ அவனது முகவர் கட்டமைப்புக்கான சான்று. அந்தக் குடும்பம் படையினரின் முழுமையான ஆக்கிரமிப்புப் பிரதேசத்தினுள் வாழும் மிகவும் ‘வசதியான’ குடும்பம். ‘முகவர்’ கட்டமைப்பினுள் வராத அவனது ‘ஆதரவாளர்’ பட்டியலுள் அக்குடும்பமும் ஒன்று. அதிமுக்கிய புலனாய்வுப் பணிக்காக ‘குடும்பத்தையே பணயம் வைக்கும்’ உதவி ஒன்றிற்காக அவர்களை, அவன் நாடிச் செல்ல, “தம்பி விடுதலைக்காக உங்களைக் கூட இழக்கத் தயாராய் நீங்கள் பணி செய்யிறியள்… இதைக் கூட நாங்க செய்யாட்டி… உங்களுக்கு எப்போ தேவைப்படுகிறதோ அப்ப வந்து இதை எடுக்கலாம்” – அந்த ஆதரவாளரின் முடிவு; ‘முகவர்’ கட்டமைப்பினுள் வராத, விடுதலையை உளப்பூர்வமாக நேசிப்பவரை அவன் அடையாளம் கண்டிருந்தானா? உருவாக்கியிருந்தானா? என்ற கேள்விகளைத் தந்திருக்கின்றன. அவனது புலனாய்வுப் பணியில், மேல்மட்டம், கீழ்மட்டம், தொழில், மதம் என்பவற்றுக்கப்பால் விடுதலையின் தேடல் வீச்சைப் பெற்றிருந்தமைக்கு அவனால் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகள் சாட்சி. அவனது புலனாய்வுப் பணியில் போலி ஆவணங்களின் தேவை எத்துணை முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்திருந்தான் – அதனால் பாதுகாக்கப்பட்ட முகவர்கள் ஆதரவாளர்களை அறிந்திருந்தான். பல மட்டங்களில் இருந்தும், அவனால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களினால் எட்டப்பட்ட புலனாய்வு வெற்றிகள் அதிகம். அவனதும் அவன் தோழன் கணேஸ் உள்ளிட்ட பல போராளிகளின் பலவருட அர்ப்பணிப்புமிக்க உழைப்பினால்; அவர்களால் திட்டமிடப்பட்ட ‘புலனாய்வு இலக்கு’ வெற்றிகொள்வதற்கான தருணம் வந்த போது “பொதுமக்களின் இருப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன” என்ற கட்டளைப்பீடத்தின் மறுப்பின் காரணமாக திட்டம் கைவிடப்பட, தொடக்கப் புள்ளியிலிருந்தே மீண்டும் உழைக்க வேண்டிய தேவை. அதற்காக உழைத்த கைகளினுள் மீண்டும் அவனும் ஒருவனாய்… 11.12.1998 அன்றைய புலனாய்வுப் பணிகளை நிறைவு செய்து மன்னார் செபஸ்தியார் கோவிலுக்கருகில் ஒரு வீட்டில் தங்கியிருக்கையில் ‘சனி விலேஜ்’ (shanny village) சிங்களப் படைமுகாம் பொறுப்பதிகாரி அர்ஜுன் வீரசிங்க தலைமையில் வந்த படையணி ஒன்றினால் வீடு சுற்றிவளைக்கப்பட ‘எங்கோ தவறு நடந்திருந்தமை தெரியவர’ அவனும், அவன் தோழன் கப்டன் கணேசும் படுத்திருந்த அறையினுள் முதலில் உட்புகுந்த அர்ஜூன் ‘ரோச்’சை அடிக்க, வெளிச்சத்தை முந்திப் பாய்ந்த அவனது கைத்துப்பாக்கியின் ரவை அர்ஜூனவின் முழங்கால் சிரட்டையை உடைத்து அவன் கீழே சரிய, கைக்குண்டொன்று அந்த அறைக்குள் வெடிக்கின்றது. அவனது முதுகுக்கு பின்னால் படுத்திருந்த கணேஸ் மட்டும் எழும்பி வெளியே வரக்கூடிய நிலையில் காயப்பட்டிருந்தான். “மச்சான் நீ தப்பிப்போ என்னால் வர முடியவில்லை” என்ற அவனது இறுதி மூச்சின் முன் அவனது கைத்துப்பாக்கியின் வெடி அதிர்வொன்றும் கேட்டது. அவனது அசாத்திய துணிச்சல் படைப்பிரதேசத்தினுள் வாழ்ந்த பரிச்சயம், அசட்டை அவனை இழக்கக் காரணமாகியதா? காயங்களுடன் கணேசைக் கண்டதும் ‘வில்வம்’ தப்பிவரவில்லையா? என்ற ஆதரவாளரின் துடிப்பிலும், “தம்பி அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவனுக்கும் சேர்த்து புதுவருசத்துக்கு உடுப்பு எடுத்திற்றன்” அவன் இன்னும் வாழ்கிறான் என்ற முகவரின், மறக்க முடியாத நினைவிலும், “அன்று அவன் இல்லையெண்டதும் கோயிலில் தவற விட்ட பிள்ளை போல் ஆனேன்” என்ற அவனது பொறுப்பாளர் விநியாகம் அவர்களதுஇ அவன் மீதான நம்பிக்கையிலும், “கோபப்படாமல், அதிகாரம் செலுத்தாமல், அன்பாக மக்கள் மனதை வெல்லும் அவனது பண்பு ஒட்டுமொத்த புலனாய்வுச் செயற்பாட்டாளர்களுக்கான முன்னுதாரணம். இவ்வாறான பண்பாளரிடம் இயல்பாகவே அதிக துணிச்சல் இருப்பது அரிது – விதிவிலக்காக இவனிடம் அந்தத் துணிச்சலுமிருந்தது. மறுபக்கத்தில் எதிர்கால புலனாய்வுச் செயற்பாடு கருதி தன் செயற்பாட்டை அறிக்கைப்படுத்துவதிலும், ஆவணப்படுத்துவதிலும் – மற்றும் திட்டமிட்ட நிர்வாக ஒழுங்கமைப்பிற்குள் போராளிகளை வழிப்படுத்தலிலும் காணப்பட்ட முதிர்ச்சியின்மை, அவனது குறைகளெனலாம்” என்ற புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையிலும், “எமது தாய்நாடு விடுதலை பெற வேண்டும். எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின், நாம் போராடித்தான் ஆகவேண்டும். குருதி சிந்தித்தான் ஆகவேண்டும்” என்ற தலைவரின் சிந்தனையிலும், பின்னொரு நாளில் அவன் தேடிய இலக்கினை வெற்றிகொண்ட தியாகிகளின் அர்ப்பணிப்பிலும் அவனது வாழ்வு உன்னதமானது. நினைவுப்பகிர்வு: சி.மாதுளா. நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 2004). https://thesakkatru.com/mejor-vilvam-joan/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
- புலோலியூரான் ரவீ..ன்.jpg
- நீர்வேலியான்.jpg
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கல்லறை பாடிடும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
2015 மாசி மாதம் செல்லச்சந்நிதி கோவில் சென்று இவ்இறுவெட்டு வெளியிட்டதில் மிகுந்த சந்தோசம்! சதீசுக்கும்.பாடகர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினர்கும் நன்றி...!பாடல்...star சிறி..சதீஸ்..பற்றீசியா.. அட்சரா..ஆரபி.... ஆக்கம் இசை....star sri parisமுருகன் பாடல் ..குரல்...! starசிறி..சதீஸ்..பற்றீசியா அட்சரா..ஆரபி... ..இசை ஆக்கம்..star sri paris..2015
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் கல்லறை திருவிழா பல்லவி : கொட்டும் பனியில் குளிர்நிலா மண்ணில் வந்த பாலகனே உனை தொட்டு தழுவி அணைக்க எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2 அன்னை மடி மீது நீயும் தவழ கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர் மாட்டுத் தொழுவமாய் எந்தன் உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய் நீயும் மாறிட எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன் - 2 சரணம் : வானின் நீளம் ஓடும் நீரும் உம் அன்பை அறிந்ததே பாவியான எந்தன் உள்ளம் உம்மை மறந்ததே சாதி மதம் தேடல் இங்கே அன்பை அழித்ததே உண்மையான அன்பிற்காக எங்கியே நின்றதே ஒரு தாயை தேடும் பிள்ளை போல அன்பை தேடி நின்றேன் இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே உம்மை கண்டுக்கொண்டேன் இருள் யாவும் மறைந்திடும் ஒளி எங்கும் பரவிடும் இதை யாவரும் காணவே உம் வருகை உணர்த்திடும் என்னை வீழ்த்திட தாழ்த்திட யார் யார் நினைப்பினும் உந்தன் பார்வையில் பாதையில் என் தேடல் வேண்டுமே - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 வள்ளல் இமாம் பூஸ்ரி வாழ்ந்த கதை சொல்லவா ? வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவை இல்லை