Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. கீழடி அகழாய்வு பகுதியை மூடக்கூடாது: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: மதுரையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 5,300 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழாய்வு பணியை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் கீழடியில் அகழாய்வு பணியை மேற்கொண்ட தொல்லியல் அதிகாரி இடமாறுதல் செய்யப்பட்டதற்கு எதிராகவும் கனிமொழி மதி தனி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்க வேண்டும். அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை வைத்திருந்த தனியாருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், அகழாய்வு மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. உரிமக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசை கேட்டுள்ளோம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க பக்கத்திலுள்ள சமுதாயக் கூடத்தை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அகழாய்வு நடைபெற்ற இடத்துக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், பழங்காலப் பொருட்களை பாதுகாக்க சமுகநலக் கூட்டத்தை வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தை கூடுதல் அட்வகேட் ஜெனரல், மத்திய அரசு வழக்கறிஞர் பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். விசாரணையை செப். 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். http://tamil.thehindu.com/tamilnadu/article19642237.ece
  2. பேரீச்சம்பழ ரெசிப்பி `பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய ரிபோஃப்ளாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்துச் சத்துக்களும்கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான். சத்தான பேரீச்சம்பழத்தில் செய்யக்கூடிய சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். டேட்ஸ் க்ரன்சீஸ் தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப் கோதுமை மாவு – அரை கப் வெண்ணெய் – கால் கப் வறுத்த எள் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவுடன் உருக்கிய வெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பேரீச்சம்பழக் கொட்டைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் எள்ளைச் சேர்த்து தனியாக எடுத்து வைக்கவும். மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். ஒரு சப்பாத்தியின் மீது அரைத்த பேரீச்சம்பழ விழுதை தடவி, அதன்மீது இரண்டாவது சப்பாத்தியை வைத்து மூடி சுற்றிலும் ஓரங்களை ஒட்டவும். பிறகு குக்கீஸ் கட்டரால் நீளவாக்கில் ரிப்பன் போல நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு இந்த ரிப்பன்களைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுத்து சதுரத் துண்டுகளாக்கவும். சூடாக இருக்கும்போதே வெனிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும். டேட்ஸ் நட்ஸ் ரோல் தேவையானவை: பேரீச்சம்பழம் – 30 பொடியாக நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பிஸ்தா – ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வால்நட் – ஒரு டேபிள்ஸ்பூன் கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: வெறும் வாணலியில் கசகசாவைச் சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, இந்தக் கலவையை சிலிண்டர் வடிவில் ரோல்களாக உருட்டி, கசகசாவில் புரட்டி எடுக்கவும். ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்துத் துண்டுகளாக்கிப் பரிமாறவும். டேட்ஸ் அண்ட் வால்நட் லோஃப் தேவையானவை: பேரீச்சம்பழம் – முக்கால் கப் கோதுமை மாவு – ஒரு கப் வால்நட்ஸ் – முக்கால் கப் (பொடியாக நறுக்கவும்) உலர்திராட்சை – கால் கப் பால் – ஒன்றரை கப் (காய்ச்சி ஆறவைத்தது) எண்ணெய் – அரை கப் பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன் வெண்ணெய் - சிறிதளவு செய்முறை: அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிப் பொடியாக நறுக்கவும். சிறிதளவு பேரீச்சத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். சிறிதளவு வால்நட் துண்டுகளையும், உலர்திராட்சையையும் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பேரீச்சத் துண்டுகளை அரை கப் பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள பால், எண்ணெய், பேரீச்சம் விழுது சேர்த்துக் கலக்கவும். இதனுடன் கோதுமை மாவு கலவையைப் பொறுமையாகக் சேர்த்துக் கலந்து பேரீச்சம்பழத் துண்டுகள், நறுக்கிய வால்நட்ஸ், உலர்திராட்சையையும் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில், இந்தக் கலவையை ஊற்றி, தனியாக எடுத்துவைத்த பேரீச்சத் துண்டுகள், நறுக்கிய வால்நட்ஸ், உலர்திராட்சையை மேலே தூவவும். `அவனில்’ ட்ரேயை வைத்து, 40 – 45 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுத்துப் பரிமாறவும். டேட்ஸ் அல்வா தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்) சர்க்கரை – அரை கப் பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது) சர்க்கரை இல்லாத கோவா – அரை கப் பொடியாக நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: பாலுடன் பேரீச்சம்பழத் துண்டுகள் சேர்த்து குழைய வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வரும்போது கோவா, மீதமுள்ள நெய்விட்டு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். மேலே முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்துச் சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும். டேட்ஸ் எனர்ஜி பார் தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப் பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன் வால்நட் – ஒரு டேபிள்ஸ்பூன் முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் சாக்கோ சிப்ஸ் – கால் கப் ம்யூஸ்லி – முக்கால் கப் நெய், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன் தேன் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, வால்நட் சேர்த்து வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதே வாணலியில் நெய்விட்டு பேரீச்சத் துண்டுகள் சேர்த்து மூன்று நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பொடித்த நட்ஸ் சேர்த்துக் கலக்கவும். சாக்கோ சிப்ஸை பவுலில் போட்டு மைக்ரோவேவ் அவனில் சிறிது நேரம் வைத்து கரையவிட்டு எடுக்கவும். இதனுடன் பேரீச்சம் - நட்ஸ் கலவை, ம்யூஸ்லி, தேன் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் தடவிய ட்ரேயில் இந்தக் கலவையைப் பரவலாக ஊற்றிச் சமப்படுத்தி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்துத் துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது சுவைக்கவும்.
  3. தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய் இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெட்டுப்போகாது. தேவையான பொருட்கள் : தக்காளி - 1 கிலோ காய்ந்த மிளகாய் - 2 தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - அரை ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து. செய்முறை : வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள். தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும் தக்காளி நன்றாக சுருண்டு திக்காகி எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தூளை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள். சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி. இந்தக் தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  4. 30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி புரட்டாசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மற்றும் நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கும் பலர் தங்கள் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பதுண்டு. அப்படிப்பட்ட விசேஷ நாள்களுக்கான சத்தான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹேமா சதீஷ். வத்தக்குழம்பு தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள் - தலா 3 டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, மணத்தக்காளி வற்றல் சேர்த்துக் கிளறவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். குறிப்பு: நல்லெண்ணெய் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும். கருணைக்கிழங்கு வறுவல் தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடியவிடவும். கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் குழைக்கவும். இதில் கருணைக்கிழங்கை சேர்த்துப் பிசிறி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, கருணைக்கிழங்குச் துண்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வறுத்து எடுக்கவும். ஈஸி சாம்பார் தேவையானவை: துவரம்பருப்பு - கால் கிலோ, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். தேங்காய் இட்லிப் பொடி தேவையானவை: தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), கடலைப்பருப்பு, உளுந்து - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பொடி இது. நல்லெண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். பொரிச்ச கூட்டு தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், புடலங்காய் - கால் கிலோ (விதை, நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் புடலங்காய், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு, பருப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கவும். அரிசி இட்லிப் பொடி தேவையானவை: புழுங்கல் அரிசி, உளுந்து - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். வேப்பம்பூ ரசம் தேவையானவை: வேப்பம்பூ - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா), துவரம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், மல்லி (தனியா), துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய் ஒன்று, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். வேப்பம்பூ துவையல் தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடியளவு, கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை (புளி, கடுகு தவிர) வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஆறிய பின் புளி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும். முருங்கைக்கீரை சூப் தேவையானவை: முருங்கைக்கீரை - கைப்பிடியளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொள்ளு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், கொள்ளு, முருங்கைக்கீரை சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது, தேவையான தண்ணீர், சோள மாவுக் கரைசல், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி சூடாகப் பரிமாறவும். அவல் கொழுக்கட்டை தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2 (தட்டவும்), தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன். செய்முறை: அவலை மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதனுடன் அரைத்த அவல், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறிய பின் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும் (இட்லி பானையில் / இட்லி குக்கரில் வேகவைக்கலாம்) கேரட் கீர் தேவையானவை: கேரட் - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), காய்ச்சாத பால் - கால் லிட்டர், ஏலக்காய் - 3 (தட்டவும்), முந்திரி - 6, சர்க்கரை - அரை கப். செய்முறை: முந்திரியைச் சுடுநீரில் சிறிது நேரம் ஊறவிடவும். குக்கரில் கேரட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறியபின் கேரட்டுடன் முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும். அவல் சர்க்கரைப் பொங்கல் தேவையானவை: அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய் - 2 (தட்டவும்), முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் உடைத்த அவல், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும். கீரை தோசை தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தோசை மாவு - 2 கப், எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: பாலக்கீரையின் நரம்பு நீக்கி கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: தோசை மாவிலேயே உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப் படுபவர்கள், மிகவும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். கார்ன் சுண்டல் தேவையானவை: கார்ன் (முழு சோளம்) - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கார்னை உப்பு சேர்த்து வேகவைத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் உதிர்த்த கார்ன் முத்துகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கடலை மாவு - கீரை சப்பாத்தி தேவையானவை: கடலை மாவு - 300 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, கீரை, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லை க்காயவைத்து திரட்டிய சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். வேர்க்கடலைப் பால் பாயசம் தேவையானவை: பாசிப் பருப்பு, வெல்லம் - தலா 150 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம். செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்துக் குழைவாக வேகவிடவும். மிக்ஸியில் வேர்க்கடலையுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வெந்த பருப்புடன் சேர்த்துச் சூடாக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். கோதுமை ரவை - காய்கறி சாதம் தேவையானவை: கோதுமை ரவை – 500 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவை - 100 கிராம், கேரட், பீன்ஸ் - தலா 150 கிராம், கீரை - சிறிய கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), எலுமிச்சைப் பழம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளுடன் கேரட், பீன்ஸ், கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, கோதுமை ரவைச் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு - காய்கறி கலவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும். மாவிளக்கு தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 3, உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். கொத்தமல்லி சாதம் தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரி - 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து கலக்கவும். மேலே வறுத்த கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும். கீரை - கடலைப்பருப்பு கட்லெட் தேவையானவை: கடலைப்பருப்பு - 250 கிராம், ஏதாவது ஒருவகை கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), பிரெட் ஸ்லைஸ் - 5 ( மிக்ஸியில் பொடிக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்புடன் கீரை சேர்த்து வேகவைத்து மசிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, அரைத்த பிரெட் பொடி, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி கட்லெட் வடிவில் தட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, கட்லெட்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். புளியோதரை பொடி சாதம் தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எள் - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 2 டீஸ்பூன். செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பிறகு சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். எள்ளு சாதம் தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், எள் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: எள்ளை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து காயவைக்கவும். காய்ந்த எள்ளை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிட்டு எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு, எள்ளுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் அரைத்த பொடி சேர்த்துக் கிளறினால் எள்ளு சாதம் ரெடி. வெஜ் சப்ஜி தேவையானவை: கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: தனியா (மல்லி), கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன். செய்முறை: காய்கறிகளைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும். பிறகு அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் கிளறி இறக்கிப் பரிமாறவும். வாழைக்காய் - குடமிளகாய் பொரியல் தேவையானவை: வாழைக்காய், குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வேர்க்கடலை - 3 டீஸ்பூன். செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி, வாழைக்காய், குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த பொடி தூவிக் கிளறி இறக்கவும். மரவள்ளிக்கிழங்கு வடை தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, ஊறவைத்த கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அரைத்த கலவையைச் சிறிய வடைகளாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பச்சைப் பயறு குழம்பு தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். குக்கரில் பச்சைப் பயறைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு, தேவையான தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பச்சைப் பயறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக, அரைத்த விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். வெள்ளரிக்காய் ஸ்டூ தேவையானவை: வெள்ளரிக்காய் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். கோதுமை அப்பம் தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன். செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பச்சைப் பயறு - அரிசி தோசை தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பயறு, அரிசியை தனித் தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் களைந்து பச்சைப் பயறு, அரிசி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு மாவாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பிரெட் உப்புமா தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். கடைசியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
  5. அவள் விகடன் கிச்சன் டெலிசியஸ் வொர்க் ஷாப் ரெசிப்பிகள் கீழே... வட இந்திய ஸ்பெஷல் ஸ்டஃப்டு பனீர் குல்ச்சா தேவையானவை: நெய் – தேவையான அளவு மேல் மாவு செய்ய: மைதா மாவு - ஒரு கப் கோதுமை மாவு - 2 கப் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பூரணம் செய்ய: துருவிய பனீர் – கால் கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் கொரகொரப்பாகப் பொடித்த முந்திரி - கால் கப் பொடியாக நறுக்கிய உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: மைதா மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, மாவின் நடுவில் சிறிய குழி செய்து எண்ணெய்விட்டுப் பிசிறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைய வேண்டும் (தளர இருக்க வேண்டாம்). பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து சிறிய உருண்டைகளாக்கிக்கொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, கிண்ணம் போல செய்து நடுவே செய்துவைத்துள்ள பூரணத்தை வைத்து மூடவும். பிறகு, இந்த உருண்டைகளைப் பூரணம் வெளியே வராமல் சற்று கனமான சப்பாத்திகளாகத் திரட்டவும். (மெல்லியதாகத் திரட்டினால் மொறுமொறுவென்று ஆகிவிடும்). சப்பாத்திக்கல்லை காயவைத்து, திரட்டிய குல்ச்சாக்களைப் போட்டு, நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: குல்ச்சாக்களைச் சப்பாத்திக்கல்லில் போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து, தணலில் இருபுறமும் சுட்டு மேலே நெய் தடவியும் பரிமாறலாம். பனீர் குல்ச்சன் தேவையானவை: நீளமாக நறுக்கிய குடமிளகாய் - 2 கப் (அரை கிலோ) நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2 கப் (அரை கிலோ) நீளமாக நறுக்கிய தக்காளி - 2 கப் (அரை கிலோ) நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகள் - ஒரு கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப் இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன் கஸூரி மேத்தி (உலர் வெந்தயக் கீரை) - 2 டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் சன்னா மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் பிரியாணி இலை – ஒன்று வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - அரை கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்துக் காயவிட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், சன்னா மசாலாத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துச் சுருள வதக்கவும். பிறகு தக்காளி, வெங்காயம், குடமிளகாய் சேர்த்துக் கலந்து மூடி, அடுப்பை `சிம்’மில் வைத்து வேகவிடவும். இறுதியாக பனீர், கஸூரி மேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும். செட்டிநாடு ஸ்பெஷல் ரங்கூன் புட்டு தேவையானவை: பாம்பே ரவை - ஒரு கப் வெல்லம் (பொடித்தது) - ஒரு கப் பாசிப்பருப்பு (வேக வைத்தது) - கால் கப் நெய் - கால் கப் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் முந்திரி - 10 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப் செய்முறை: எண்ணெய் - நெய் கலவையைக் கடாயில் காயவைத்து, முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்து அதனுடன் ரவையைச் சேர்க்கவும். ரவை வறுபட்டவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இரண்டரை கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில், வறுத்த ரவை, தேங்காய்த் துருவல் கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் வடிகட்டிய வெல்லம், வேகவைத்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சேர்ந்து வரும்வரை கிளறி இறக்கவும். மசாலா பணியாரம் தேவையானவை: பச்சரிசி - அரை கப் உளுந்து - அரை கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - கால் கப் கடுகு - ஒரு டீஸ்பூன் உளுந்து (தாளிக்க) - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு இரண்டையும் கிரைண்டரில் நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும் (பருக்கைகள் இருக்கக் கூடாது). அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கடாயில் காயவைத்து கடுகு, உளுந்து சேர்த்து சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 30 விநாடிகள் வதக்கி அரைத்த மாவுடன் சேர்க்கவும். அதை நன்கு கலந்து காயவைத்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு சற்றுச் சிவக்க பொரிந்ததும் எடுத்துப் பரிமாறவும். சாட் ஸ்பெஷல் சன்னா சாட் தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப் பிரெட் ஸ்லைஸ் - 6 வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு அலங்கரிக்க: பேரீச்சம்-புளி சட்னி - அரை கப் (செய்முறை பக்கம் 16-ல் உள்ளது) க்ரீன் சட்னி - கால் கப் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடைந்த தயிர் - 3 டீஸ்பூன் சர்க்கரை - சிறிதளவு மிளகாய்த்தூள் - சிறிதளவு சாட் மசாலாத்தூள் - சிறிதளவு வறுத்த சீரகத்தூள் - சிறிதளவு சேவ் - தேவையான அளவு செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் கொண்டைக்கடலையுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக்கவும். இதன்மீது சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், வேகவைத்த கடலை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பரிமாறும் கிண்ணத்தில் முதலில் சிறிதளவு சன்னா மசாலாவை ஊற்றவும். இதன்மீது சில பிரெட் துண்டுகளை அடுக்கவும். இதன் மேலே தயிர், சர்க்கரை, பேரீச்சம் சட்னி, க்ரீன் சட்னி, தக்காளி, சேவ் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இறுதியாக சாட் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். க்ரீன் சட்னி தேவையானவை: பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கொத்தமல்லித்தழையை மண் போகக் கழுவவும். இதை மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து சட்னியாக அரைத்து எடுக்கவும். சாட் வகைகள், பக்கோடா, சமோசா, பர்கர், டிக்கி, டோக்ளாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். பேரீச்சம் - புளி சட்னி தேவையானவை: கொட்டை நீக்கிய புளி - கால் கப் கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - அரை கப் துருவிய வெல்லம் - அரை கப் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் சூடான தண்ணீர் - 3 கப் உப்பு - தேவையான அளவு தாளிக்க: பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - கால் டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் எள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன் செய்முறை: பேரீச்சம் பழத்தைச் சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனுடன் புளி சேர்த்து சிறு தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். இதனுடன் வெல்லம், உப்பு சேர்த்துக் கரைக்கவும். மீண்டும் இந்தக் கலவையை 5 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, எள் சேர்த்து தாளித்து சட்னியுடன் கலக்கவும். பேரீச்சம் சட்னி தயார். இந்தச் சட்னியை தாளிக்காமல் ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம். ஸ்பிரவுட் - ஃப்ரூட் சாட் தேவையானவை: விரும்பிய பழக்கலவை - ஒரு கப் (ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, வாழைப்பழம்) முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் சர்க்கரை - அரை டீஸ்பூன் (விரும்பினால்) கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப் செய்முறை: பச்சைப் பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் பழக்கலவை, வெள்ளரித் துண்டுகள், பச்சைப் பயறு, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள், சர்க்கரை, கறுப்பு உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றிப் பரிமாறவும். குறிப்பு: 1. பச்சைப் பயறை குக்கரில் வேகவைத்தும் பயன்படுத்தலாம். வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சமையலில் பயன்படுத்தவும். மொறுமொறுப்பாக வேண்டுமானால் அரை வேக்காட்டில் எடுக்கவும். 2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கலாம். 3. வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்க்கலாம். 4. நட்ஸ் வகைகள் சேர்க்கலாம். 5. க்ரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சேவ் சேர்க்கலாம். பாப்டி தேவையானவை: மைதா மாவு - அரை கப் கோதுமை மாவு - அரை கப் சீரகத்தூள், உப்பு - தலா அரை டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மைதா மாவுடன் கோதுமை மாவு, உப்பு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இந்த மாவை ஈரத்துணியால் மூடி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக்கி திரட்டி, சூடான எண்ணெயில், மிதமான தீயில், பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். புதினா கொத்தமல்லி சட்னி தேவையானவை: புதினா இலைகள் - ஒரு கப் கொத்தமல்லித்தழை - அரை கப் பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் கறுப்பு உப்பு - தேவையான அளவு செய்முறை: சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். பாப்டி சாட் தேவையானவை: பாப்டி - 24 கடைந்த தயிர் - 250 கிராம் உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து சிறிய துண்டுகளாக்கவும்) வேகவைத்த பட்டாணி - 2 கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப் பேரீச்சம் - புளி சட்னி - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் கறுப்பு உப்பு - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் சேவ் - கால் கப் (விரும்பினால்) செய்முறை: தட்டில் பாப்டிகளை உடைத்துப் போட்டுப் பரப்பவும். இதன் மீது உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, தயிர் சேர்க்கவும். இதன் மேலே புதினா - கொத்தமல்லி சட்னி, பேரீச்சம் சட்னி ஊற்றவும். பிறகு கறுப்பு உப்பு, சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, சாட் மசாலாத்தூள், சேவ் தூவி பரிமாறவும். மில்லெட் ஸ்பெஷல் வெஜ் சீஸ் பால்ஸ் தேவையானவை: சாமை அரிசி - ஒரு கப் கடலை மாவு - அரை கப் கேரட் துருவல் – அரை கப் பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப் பீன்ஸ் – 4 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீஸ் துருவல் - முக்கால் கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் சாமை அரிசியுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து, சாமை சாதத்தை நன்கு மசித்து அகலமான பாத்திரத்துக்கு மாற்றவும். இதனுடன் கேரட், பீன்ஸ், கோஸ், பச்சை மிளகாய், வெங்காயம், சீஸ் துருவல், கொத்தமல்லித்தழை, கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: பிசைந்த கலவை நீர்க்க இருந்தால் மேலும் சிறிதளவு கடலை மாவு சேர்க்கலாம். வரகு உக்காரை தேவையானவை: வரகு, பாசிப்பருப்பு - தலா 100 கிராம் வெல்லம் - 200 கிராம் நெய் - 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன் முந்திரி - 10 தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் செய்முறை: வெறும் வாணலியில் வரகையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த ரவையுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, வெந்த உக்காரையில் சேர்த்துக் கிளறவும். நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். உக்காரையுடன் வெல்லம் சேர்ந்து திரண்டு வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து, ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஈவ்னிங் ஸ்பெஷல் கவுனி அரிசி கீர் தேவையானவை: கவுனி அரிசி – கால் கப் காய்ச்சாத பால் – ஒரு லிட்டர் சர்க்கரை – முக்கால் கப் கண்டன்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: கவுனி அரிசியைக் கழுவி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் அரிசியுடன் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் வேகவைத்து இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி முக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த கவுனி சாதம், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக சர்க்கரை சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம். பீட்ரூட் வடை தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒன்றரை கப் கடலைப்பருப்பு - ஒரு கப் பொட்டுக்கடலை மாவு – கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப் காய்ந்த மிளகாய் – 8 சோம்பு - அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப் நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: பீட்ரூட் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு பீட்ரூட் சாறு ஆகியவற்றைச் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தயாரித்த உருண்டைகளை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஜில் ஜில் ஸ்பெஷல் கிரேப் ஸ்குவாஷ் தேவையானவை: கறுப்பு திராட்சை - அரை கிலோ (இதிலிருந்து வரும் ஜூஸை அளவு எடுக்க வேண்டும்) ஜூஸ் ஒரு கப் என்றால் சர்க்கரை 2 கப் தண்ணீர் - ஜூஸ் எந்த அளவோ அதே அளவு சிட்ரிக் ஆஸிட் - கால் டீஸ்பூன் கிரேப் அல்லது டோனோவின் எசன்ஸ் - அரை டீஸ்பூன் செய்முறை: திராட்சையைச் சுத்தம் செய்து லேசாக மசித்து (மத்தால்) அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு அதை ஜூஸரில் போட்டுச் சாறு எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் ஜூஸ் என்றால் 2 கப் சர்க்கரை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரையைக் கரைய விடவும். பின்பு அதனுடன் சிட்ரிக் ஆஸிட் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு கீழே இறக்கி ஒரு கப் ஜூஸை அதனுடன் சேர்க்கவும். ஆறியதும் எசன்ஸ் சேர்த்து கலந்து பாட்டில் வைக்கவும். தேவையானபோது கால் கப் சிரப்புடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்துப் பருகவும். எலுமிச்சை ஸ்குவாஷ் தேவையானவை: எலுமிச்சை ஜூஸ் - ஒரு கப் சர்க்கரை - 2 கப் தண்ணீர் - ஒரு கப் சிட்ரிக் ஆஸிட், லெமன் எசன்ஸ் - தலா கால் டீஸ்பூன் லெமன் யெல்லோ கலர் - சிறிது. செய்முறை: சர்க்கரையையும் தண்ணீரையும் ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். சர்க்கரை முழுவதுமாகக் கரைந்ததும் சிட்ரிக் ஆஸிட் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு இறக்கி ஆறவிட்டு கலர், எலுமிச்சை ஜூஸ், லெமன் எசன்ஸ் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும். தேவையான போது கால் கப் சிரப் முக்கால் கப் தண்ணீர் சேர்த்துப் பருகவும். இதை ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்தால் மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஸ்பெஷல் ரோஸ் மில்க் தேவையானவை: சர்க்கரை - ஒரு கப் தண்ணீர் - அரை கப் சிட்ரிக் ஆஸிட் - கால் டீஸ்பூன் ரோஸ்மில்க் எசன்ஸ் - அரை டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். சர்க்கரை கரைந்ததும் சிட்ரிக் ஆஸிட் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலந்து பாட்டிலில் நிரப்பி வைக்கவும். வேண்டும்போது பாலில் சேர்த்துக் கலந்து பருகவும். த்ரீ டேஸ்ட் ஸ்பெஷல் பீடா தோசை தேவையானவை: தோசை மாவு – தேவையான அளவு பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்) கேரட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்) தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்) மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன் லவங்கம் – 2 ஏலக்காய் - 2 நறுக்கிய கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: குக்கரில் கேரட்டுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, வேகவைத்த கேரட், பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும். தோசையின் நடுவே சிறிதளவு வதக்கிய மசாலா, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துப் பரப்பி, பாய் போல சுருட்டவும். பிறகு, ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும். வேப்பம்பூ சாதம் தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப் காய்ந்த வேப்பம்பூ – ஒரு டீஸ்பூன் மோர் மிளகாய் - 4 பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவு நெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி, மோர் மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து, பூண்டு, கறிவேப்பிலை, அரைத்த பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும். சைனீஸ் பேல் தேவையானவை: நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (வேகவைக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) கேரட் – ஒன்று (தோல் சீவி, துருவவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) மாங்காய் – ஒன்று (துருவவும்) குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய வெங்காயத்தாள் – கைப்பிடியளவு தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நூடுல்ஸை போட்டு மொறுமொறுவென பொரித்தெடுக்கவும். பெரிய பவுலில் கேரட் துருவல், மாங்காய், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பொரித்த நூடுல்ஸ் சேர்த்து சட்டென்று கலக்கி, மேலே வெங்காயத்தாள் தூவி உடனே பரிமாறவும். குறிப்பு: நூடுல்ஸை அதிகம் வேகவிட வேண்டாம்; தண்ணீரை வடியவிடவும். இல்லையென்றால், எண்ணெய் அதிகம் குடிக்கும். மொறுமொறுப்பாக அதிக நேரமாகும். டெசர்ட் ஸ்பெஷல் மாம்பழ பிர்னி தேவையானவை: காய்ச்சாத பால் - ஒரு லிட்டர் பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - அரை கப் கண்டன்ஸ்டு மில்க் - கால் கப் மாம்பழக் கூழ் - அரை கப் தோல் சீவி, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - அரை கப் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை ரோஸ் வாட்டர், சாரைப்பருப்பு, உடைத்த பிஸ்தா, முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நைஸாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி, பிஸ்தாவைத் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, நடு நடுவே கிளறிக் காய்ச்சவும். பால் பாதியாகச் சுண்டிய பிறகு அரைத்த அரிசி விழுதைப் போட்டு கைவிடாமல் கிளறவும் (சரியாகக் கிளறாவிட்டால் கட்டி கட்டியாக ஆகிவிடும்). அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன் ரோஸ் வாட்டர் விட்டு மூடிவைக்கவும். பால் ஆறியதும் மாம்பழக்கூழ், மாம்பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். மேலே முந்திரி, பிஸ்தா, சாரைப்பருப்பு, குங்குமப்பூ தூவி அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும். குறிப்பு: அரிசிக்குப் பதிலாக, ஒரு லிட்டர் பாலுக்கு 3 டேபிள்ஸ்பூன் அரிசி மாவைக் குளிர்ந்த பால் அல்லது தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி பிர்னி தேவையானவை: காய்ச்சாத பால் - ஒரு லிட்டர் வறுத்த ரவை - 4 டேபிள்ஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன் உலர் திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை வறுத்த சாரைப்பருப்பு, பிஸ்தா துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு கப் விரும்பிய பழக்கூழ் - அரை கப் பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி - அரை கப் நெய் – சிறிதளவு செய்முறை: முந்திரியைத் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு திராட்சை சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் பாலை ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, நடு நடுவே கிளறி சுண்டக் காய்ச்சவும். இதனுடன் ரவையைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். பிறகு சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு பழக்கூழ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கலக்கவும். மேலே திராட்சை, பிஸ்தா, சாரைப்பருப்பு, குங்குமப்பூ தூவி அலங்கரித்துப் பரிமாறவும். ஹெல்த் ஸ்பெஷல் ஹெல்த் மில்க் மிக்ஸ் தேவையானவை: பனங்கற்கண்டுத்தூள் - கால் கிலோ பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 50 கிராம் கறுப்பு உளுந்து - 50 கிராம் ஏலக்காய் - 5 மிளகு - 10 சுக்குத்தூள் - 2 டீஸ்பூன் செய்முறை: கறுப்பு உளுந்து, பாதாம், முந்திரி, பிஸ்தா, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் இதனுடன் பனங்கற்கண்டுத்தூள், சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். பயன்படுத்தும் முறை: ஒரு கப் காய்ச்சிய பாலுடன் தேவையான அளவு இந்த மிக்ஸைச் சேர்த்துக் கலந்து பருகலாம். இது, புரோட்டீன் சத்து நிறைந்தது. டேட்ஸ் சாக்லேட் தேவையானவை: பேரீச்சம் பழம் - ஒரு கப் சாக்கோ சிப்ஸ் - அரை கப் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) முந்திரி - கால் கப் பாதாம் - கால் கப் செய்முறை: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் முதலில் சாக்கோ சிப்ஸைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் பேரீச்சம் துண்டுகள் சேர்த்து அரைக்கவும். இறுதியாக முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்து எடுக்கவும். (பாதாம், முந்திரி சற்று துகள்களாக ஆங்காங்கே தெரிய வேண்டும்). அரைத்த கலவையை விரும்பிய மோல்டில் நிரப்பி எடுக்கவும். இந்த சாக்லேட்டுகளை அப்படியே பரிமாறலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம். ஸ்டார் ஹோட்டல் ஸ்பெஷல் தேங்காய்ப்பால் சாதம் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ முற்றிய தேங்காய் - அரை மூடி மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பட்டை - ஒரு துண்டு லவங்கம் - ஒன்று கிராம்பு - ஒன்று ஏலக்காய் - 4 எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - சிறிதளவு லெமன் கிராஸ் - 2 குச்சி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். முற்றிய தேங்காயைத் தண்ணீர்விட்டு அரைத்து 4 டம்ளர் பால் எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பால்விட்டு மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாகக் கொதி வந்த பிறகு பாஸ்மதி அரிசியைப் போட்டு அதனுடன் உப்பு, லெமன் கிராஸ் சேர்த்துக் கிளறிவிடவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல், மிதமான தீயில் 15 - 20 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து, நெய்யில் வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும். ஃபிரெஷ் ராஜ்மா குருமா தேவையானவை: ஃபிரெஷ் ராஜ்மா - கால் கிலோ (வேகவைக்கவும்) தேங்காய் - அரை மூடி வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) தக்காளி - ஒன்று (நறுக்கவும்) பச்சை மிளகாய் - 4 முந்திரி - தேவையான அளவு பெருஞ்சீரகம் - தேவையான அளவு பட்டை - ஒரு துண்டு லவங்கம் - ஒன்று ஏலக்காய் - 4 இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு லவங்கம், பட்டை, ஏலக்காய் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி... வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கவும். பிறகு அதில் ராஜ்மாவைப் போட்டுக் கிளறி இறக்கினால் சுவையான ஃபிரெஷ் ராஜ்மா குருமா தயார். மலாய் ஜிகர்தண்டா தேவையானவை: கெட்டியான பால் - அரை லிட்டர் பாதாம் பிசின் - 25 கிராம் பனங்கற்கண்டு - 50 கிராம் மில்க்மெய்டு - 4 டீஸ்பூன் பாதாம் பவுடர் - 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - சிறிதளவு செய்முறை: பாலை முதல் நாளே காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதேபோல, பாதாம் பிசினையும் முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கெட்டியான பாலில் பாதாம் பிசின் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். அதில் மில்க்மெய்டு, பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது இதை டம்ளரில் ஊற்றி, மேலே நறுக்கிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும். பிரெட் ஸ்பெஷல் பிரெட் அல்வா தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட் சர்க்கரை - 3 கப் முந்திரி, திராட்சை - ஒரு கப் நெய், எண்ணெய், பால், ஏலக்காய் - தேவையான அளவு செய்முறை: பிரெட்டை எண்ணெயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு, ஒரு கடாயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, அதில் வறுத்த பிரெட் சேர்க்கவும். அதில் பிரெட் நன்கு வெந்தவுடன், ஏலக்காய் மற்றும் நெய் சேர்க்கவும். அல்வா கடாயில் ஒட்டாத அளவுக்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இறுதியாக முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். வெஜிடெபிள் பிரெட் பஜ்ஜி தேவையானவை: பிரெட் - 5 துண்டுகள் காய்கறிகள் கலவை - ஒரு கப் கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - கால் கப் மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன் உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் எடுக்கவும். அதில் தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்குக் கலக்கவும். அதில் காய்கறிகள் கலவை சேர்த்து, பிரெட் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கர்நாடகா ஸ்பெஷல் மதுர் வடை தேவையானவை: ரவை, மைதா, அரிசி மாவு - தலா 100 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை சீரகம் - அரை டீஸ்பூன் வெள்ளை எள் (வறுக்காதது) - ஒரு டீஸ்பூன் துருவிய கொப்பரை - 2 டீஸ்பூன் ஒன்றிரண்டாக நசுக்கிய வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன் சோடா உப்பு - ஒரு சிட்டிகை வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) சூடாக்கிய எண்ணெய் - 2 டீஸ்பூன் எண்ணெய் (பொரிக்க) - அரை லிட்டர் உப்பு - ஒன்றரை டீஸ்பூன் செய்முறை: ரவை, மைதா, அரிசி மாவு ஆகியவற்றை தனித்தனியே சிவக்க வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் உப்பு, சோடா உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், எள், வேர்க்கடலை, வெங்காயம், துருவிய கொப்பரை, சூடான எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை பெரிய எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி அரை இன்ச் கனத்தில் தட்டி, சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும். குறிப்பு: உள்ளங்கையில் / பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி தட்டிப் போட்டால், சுலபமாக எடுத்து வடை செய்ய உதவியாக இருக்கும்.
  6. சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற அடிக்கடி உணவில் முடக்கதான் கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, முடக்கத்தான் வைத்து ரொட்டி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை - ஒரு கப், ராகி மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முடக்கத்தான் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முடக்கத்தான் கீரை, ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து பிசறவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறிய அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சத்தான கேழ்வரகு - முடக்கத்தான் ரொட்டி ரெடி.
  7. மூடு விழாவுக்குத் தயாராகும் கீழடி அகழாய்வு? கீழடி அகழாய்வு ஆராய்ச்சி, வரும் செப்டம்பர் மாதத்துடன் `மூடு விழா' காணப்படும் ஆபாய கட்டத்தில் இருப்பதாகவும், பா.ஜ.க அரசு திட்டமிட்டே தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை இருட்டடிப்புச் செய்வதாகவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், தொல்லியல் துறை கடந்த 2015-2016ம் ஆண்டு வரை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2,500 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் நாகரிகம் 5,000-த்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சி பணியை, கீழடி அகழாய்வுக் குழவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் நடத்திவந்தார். மூன்றாம்கட்ட ஆய்வுக்கான வரைவுத்திட்டத்தை, தொல்லியல் துறைக்கு அனுப்பிவைத்தார் அமர்நாத். இதுதான் இவர் இடம் மாறுதல் செய்வதற்கான பிள்ளையார்சுழியாக அமைந்தது. இருந்தபோதிலும், மத்திய அரசு கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் செய்துவந்தது. கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி அமர்நாத்தை, கவுகாத்தியில் உள்ள தொல்பொருள் பாதுகாப்பு மையத்துக்கு பணி இடமாற்றம் செய்தது மத்திய தொல்லியல் துறை. தமிழர்களின் நாகரிகத்தை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுசேர்த்தவர் அமர்நாத்ராமகிருஷ்ணன். `கீழடி அகழாய்வுப் பணியை முற்றிலுமாக முடக்க முயற்சிக்கிறது மத்திய அரசு' என்று தமிழ் ஆர்வலர்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். `கீழடி அகழாய்வுப் பணி முடியும் வரை அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்யக் கூடாது. அவர் மீண்டும் அதே பணியில் தொடர வேண்டும்' என, மூன்று முறை தொல்லியல் துறைக்குப் பரிந்துரை செய்தது மத்திய தீர்ப்பாயம். ஆனால் தொல்லியல் துறை, அசைந்துகொடுப்பதாக இல்லை. இதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்குரைஞர் தேன்மொழிமதி, `அமர்நாத், மீண்டும் இந்த அகழாய்வுப் பணியில் தொடர வேண்டும்' என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், `அமர்நாத் ராமகிருஷ்ணன் எதற்காக மாற்றப்பட்டார் என்பதற்கான காரணம் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டார்கள். நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர்கள் மழுப்பலாகவே பதில் மனு தாக்கல் செய்துவருகிறார்கள். மூன்றாம்கட்ட ஆய்வுப் பணி தொடக்கமும் முடக்கமும்: இந்தப் பணிக்கு, மத்திய அரசு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கியது. ஆனால் மார்ச் மாதம்தான் நிதி ஒதுக்கியது. இந்த ஆய்வுக்கான அதிகாரியாக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். இவரின் அணுகுமுறைகளைக் கண்ட கீழடி மக்கள், மூன்றாம்கட்ட ஆய்வுக்கு நிலம் தர மறுத்துவிட்டார்கள். ஒருவழியாக, கீழடி கிராமத் தலைவர்கள் ஜமாத் தலைவர்களிடம் பேசி, செப்டம்பர் 30-ம் தேதி வரை அனுமதி பெற்றிருக்கிறார் ஸ்ரீராம். மே மாதம் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது. ஆனால், இன்று வரை ஆறு குழிகள் மட்டுமே தோண்டப்பட்டு, அதில் உறை கிணறுகள் பிராமிய எழுத்துகள் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் தண்ணீர் நிரப்பும் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அமர்நாத் இருக்கும்போது அதிகமான தமிழர் நாகரிகம் தொன்மையான ஆதாரங்கள் அதற்கான பொருள்கள் தோண்டி எடுத்தபோது, பத்திரிகைகள் மூலம் வெளியிடப்பட்டன. ஆனால், ஸ்ரீராம் வந்த பிறகு இந்த ஆய்வு முகாம் ராணுவ முகாம்போல் ஆகிவிட்டது. முகாம் பகுதிக்குள் நுழைய அனுமதி என்பது கெடுபிடியாக உள்ளது. ஆய்வுப் பணி நடக்கும் இடத்தில் பத்திரிகையாளர்களுக்குத் தடை. இதுவரைக்கும் என்ன பொருள்கள் எடுக்கப்பட்டன என்கிற விவரம் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆக, மூன்றாம்கட்ட பணி மர்மமாகவே இருக்கிறது. மத்திய அரசு ஒதுக்கிய பணத்தைக் காலிசெய்துவிட்டு கிளம்பத் தயாராக இருக்கிறார் ஸ்ரீராம். `இந்த ஆய்வில் எந்தப் பொருள்களும் கிடைக்கவில்லை. இதற்குமேல் இங்கு ஒன்றும் இல்லை எனச் சொல்லி, ஊத்தி மூடுவதற்காக மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டவர்தான் இந்த ஸ்ரீராம்' என்கிற குற்றச்சாட்டு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தீக்கதிர் மதுரை பதிப்பகம் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசும்போது... ``தொல்லியல் துறை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில்தான் உயரிய மனித நாகரிகத்தோடு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான அடையாளம் ஆதாரமாகக் காணப்படுகிறது. அந்தக் காலத்திலேயே மனிதன் கழிவுகளை வெளியேற்ற மண்ணால் சுட்ட பைப்களைப் பயன்படுத்தியிருக்கிறான்; நெசவு தொழிற்சாலைகள் அமைத்திருக்கிறான். (இன்றைக்கு நாம் குடிக்கும் ஆர்ஓ வாட்டர்) இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்கூட்டியே கடைப்பிடித்திருக்கிறான். பட்டினபாலையில் சொல்வதுபோல `கீழடி' என்பது அழிந்துபோன ஆதி மதுரையாகக்கூட இருக்கலாம். காரணம், கடல் வணிகம் செய்வதற்கான முத்திரை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கீழடி காக்கப்பட்டதற்கு அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மற்ற பகுதிகள் எல்லாம் ரியல் எஸ்டேட்களாக மாறிவிட்டன. தென்னைமரங்கள் இருந்ததால் கீழடி காப்பாற்றப்பட்டிருக்கிறது. நூறு ஏக்கர் நிலப்பரப்பில் வெறும் 50 சென்டில் இவ்வளவு வரலாறுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே கிடைத்த பொருள்களில் இரண்டு பொருள்கள் மட்டும் கார்பன் ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பியதில் `2,400 ஆண்டுகள் பழைமையானது' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை வைத்து பார்க்கும்போது, மனிதன், சாதி மதம் கடவுள் என எதுவுமே இல்லாத இனமாக மனிதனாக வாழ்ந்திருக்கிறான் என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. தமிழகத்தில் மட்டும் 232 இடங்கள் தொன்மையான இடங்கள் என கண்டறியப்பட்டிருந்தாலும், கீழடி மட்டும்தான் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, எழுத்து, வீரம் போன்றவற்றை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறது. கீழடி, உலகத்துக்கே தமிழர்களின் நாகரிகத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது. மதம், கடவுள் போன்ற அடையாளங்கள் இல்லாததால்தான் பா.ஜ.க கீழடி அகழாய்வுப் பணிகளை இழுத்து மூட நினைக்கிறது. அதற்காகத்தான் தொல்லியல் துறை ஆய்வு அதிகாரியை நியமிக்காமல், கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரை நியமித்திருக்கிறது மத்திய அரசு'' என்கிறார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும்போது… ``கீழடி, தமிழர்களின் நாகரிகத்தை உலகத்துக்கே முதன்மையானது என எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்த அகழாய்வுப் பணிகளை முடக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவே அறிகிறேன். ஒவ்வொரு முறையும் போராடிய பிறகுதான் அனுமதி வழங்கியது மத்திய அரசு. கீழடி அகழாய்வு என்பது, 110 ஏக்கரில் தோண்டி பார்க்கவேண்டிய ஒன்று. இந்த ஆய்வானது சுமார் இருபது ஆண்டுகளாவது தொடரவேண்டும். இந்த ஆய்வில் உண்மையிலேயே ஆர்வமுள்ள அனுபவமுள்ள அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அமர்நாத் போன்ற அதிகாரிகள், மீண்டும் நியமிக்கப்பட வேண்டும். 5,000 பொருள்கள், இரண்டு கட்ட ஆய்வில் கிடைத்திருக்கின்றன. 2,200 வருடங்களுக்கு முந்தைய காலத்தையும் வாழ்க்கை வாணிப முறைகளைக் காட்டக்கூடியதாக அமைந்திருக்கிறது இந்த ஆய்வு. 1,000 ஆண்டுகள் உள்ள பெருமாள்-சிவன் கோயில்களின் கல்வெட்டுகளை இதோடு தொடர்புப்படுத்துகிறார். முதல் இரண்டாம்கட்ட ஆய்வில் தமிழர்கள் பயன்படுத்திய தொழிற்சாலை, தொழிற்கூடம், குடியிருப்புப் பகுதிகள் கிடைத்தன. முதல் ஆய்வில் 48 குழிகள் தோண்டப்பட்டன. இரண்டாம்கட்ட ஆய்வில் 53 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், மூன்றாம்கட்ட ஆய்வுப் பணிக்குத் தோண்டப்பட்ட குழிகளின் எண்ணிக்கை வெறும் ஆறு மட்டுமே. `மூத்தகுடி தமிழ்குடி!' என்பதை மறைப்பதற்காக, மத்திய அரசு செயல்திட்டம் இது. இதுவரை கிடைத்த பொருள்கள் பாதுகாக்கப்படாமல் வெளியில் கிடக்கின்றன. ஆனால், அதிகாரிகள் ஆடம்பரமான செட்டில் இருக்கிறார்கள்'' என்றார். தமிழ் ஆசிரியர் இளங்கோவிடம் பேசும்போது... ``கிமு 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10-ம் நூற்றாண்டு வரையிலான பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக இந்தக் களம் கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உறை கிணறுகள், செங்கல்சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள் மிளிர்கல், அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்புவேல் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டும் பாண்டியர்களின் தொல்நகரான பெருமணலூர் இதுவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக அமைந்துள்ளது. சங்ககாலத்தில் கட்டடங்களே இல்லை என்கிற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள மண்பாண்டம் ரோமப் பேரரசுடன்கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்பித்திருக்கிறது. வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் கலவை பூசப்பட்ட பாண்டங்கள், இதுவரை கொங்கு பகுதியிலேயே கிடைத்திருக்கின்றன. இது, கொங்கு பகுதியோடு வாணிபத் தொடர்பு வைத்திருந்ததைக்காட்டுகிறது. அதோடு தமிழி எழுத்துகள் ஆதன், உதிரன், திசன் போன்ற தனிநபர்களின் பெயரைக் குறிப்பிடும் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைத்திருக்கின்றன. இரும்பால் ஆன அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை, கட்டைகள் தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உள்பட பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைத்திருக்கின்றன. இப்படிபட்ட வரலாற்றை அழிக்க மறைக்கும் மத்திய அரசு, கீழடிக்கு அதிகபடியான நிதியை ஒதுக்க வேண்டும். பல ஆண்டுகள் இந்த ஆய்வுப் பணி தொடர வேண்டும். அதே நேரத்தில் ஆய்வுப் பணிக்கான அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் கீழடிக்கு மாற்றப்பட வேண்டும்'' என்கிறார். http://www.vikatan.com/news/tamilnadu/100908-keeladi-excavation-put-on-hold.html
  8. சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை சம்பார் சாதம், தயிர் சாதம், சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை. இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - அரை கிலோ, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், மிளகு தூள் - 1 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு, கடுகு - தாளிக்க. செய்முறை : கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கவும். கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.
  9. சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவு. இன்று இந்த சோயா ரைஸ் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உதிராக வடித்த சாதம் - 2 கப், மீல்மேக்கர் - 1/2 கப், காய்ந்தமிளகாய் - 3, கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன், வெங்காயம் - 1, தக்காளி - 1, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு. தாளிக்க... பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை : தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அனைத்து நன்றாக சேர்ந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
  10. தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி வேலைக்கு, பள்ளிக்கு செல்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி - அரை கப், பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம் - 2 தக்காளி - 6, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை : அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள். பட்டாணி நன்றாக வெந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கலக்குங்கள். புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம். சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
  11. மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு, புளி - நெல்லியளவு, உப்பு - தேவைக்கு பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள் தூள் - சிட்டிகை மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை : புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். பூண்டுடன் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். கீரையை கழுவி தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஆறிய பின் வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுக்கவும். முடக்கத்தான் வடிகட்டிய தண்ணீருடன் புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அரைத்த பூண்டு மிளகாய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். மற்றொரு வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்து சூடாக சாதத்துடன் பரிமாறலாம். சூப்பரான முடக்கத்தான் ரசம் ரெடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.