Everything posted by நவீனன்
-
கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
செட்டிநாடு ஸ்டைல் காளான் ரோஸ்ட் காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காளான் - 1 கப் சோம்பு - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெரிய வெங்காயம் - 1 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு ஊற வைப்பதற்கு... கெட்டியான தயிர் - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன் செய்முறை : * கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். * அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். * காளானில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி சுண்டி வரும் போது அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். * காளான் ரோஸ்ட் ரெடி!!! வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி பழனி பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6, பேரீச்சை - 20 காய்ந்த திராட்சை - கால் கப் தேன் - 1/2 கப், நெய் - 2 டீஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப் பனங்கற்கண்டு - கால் கப் ஏலக்காய் - 2 செய்முறை : * பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஏலக்காயை பொடித்து கொள்ளவும். * வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும். * வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும். * கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும். * சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி. * இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். குறிப்பு : * கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம். * வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி அசைவம் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு, பிரட் வைத்து இன்று சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபமானது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா - கைப்பிடியளவு, கிராம்பு - 2, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 4, உருளைக்கிழங்கு - 2 , கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - கால் கப், புதினா இலை - கைப்பிடியளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. அலங்கரிக்க : பொரித்த பிரட், பொரித்த வெங்காயம், புதினா இலை - தேவையான அளவு. செய்முறை : * உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். * பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். * உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். * குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். * இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். * பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும். * சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி ரெடி.- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான சைடிஷ் காலி பிளவர் - பட்டாணி புர்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள காலி பிளவர் - பட்டாணி புர்ஜி சூப்பரான சைடிஷ். இன்று இந்த புர்ஜியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காலி பிளவர் - 1, பச்சைப் பட்டாணி - கால் கப், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - 1 தக்காளி - 1 கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய் தூள் - 1 ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * காலி பிளவரை பொடியாக நறுக்கி உப்பு கலந்த சூடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். * பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். * தக்காளி நன்றாக வெந்ததும காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக விடவும். * அனைத்து நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். * காலி பிளவர் - பட்டாணி புர்ஜி ரெடி.- சமையல் செய்முறைகள் சில
ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி அனைவரும் புளியோதரை மிகவும் பிடிக்கும். அன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6, பச்சை மிளகாய் - 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை : * வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். * அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். * கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். * சூப்பரான ஆந்திரா புளியோதரை ரெடி. * இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - 500 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் - 50 கிராம், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு. தாளிக்க : வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை : * கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து கலக்கவும். * ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். * மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும். * பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும். * கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்… கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
காரசாரமான சைடிஷ் கருணைக்கிழங்கு லெமன் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு காரசாரமான கருணைக்கிழங்கு லெமன் வறுவல் சூப்பரான சைடிஷ். இன்று இந்த வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு - அரைக் கிலோ குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி சோம்பு தூள் - அரை தேக்கரண்டி பூண்டு நசுக்கியது - 1 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி லெமன் சாறு அல்லது புளிச்சாறு - 2 ஸ்பூன் எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை : * கருணைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது. * ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், பூண்டு, உப்பு, சிறிது, லெமன் அல்லது புளிச்சாறு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும். * பிரைந்த மசாலாவில் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும். * தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும். * ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும். * சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். உருளைக்கிழங்கைக் கொண்டு, பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 (பெரியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகு தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தனியாக ஒரு தட்டில் வைத்து, தோலுரித்துக் கொள்ளவும். பின் கையால் அதனை உதிர்த்து விடவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். * அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். * அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து 20 நிமிடம் பொன்னிறமாகும் வரை கிளறவும். * கடைசியாக மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கி பரிமாறவும். * சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!- சமையல் செய்முறைகள் சில
சத்தான காலை டிபன் தயிர் சாண்ட்விச் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சீக்கிரமாகவும், சுலபமாவும் சத்தானதாகவும் செய்ய இந்த தயிர் சாண்ட்விச் சிறந்தது. இந்த சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை பிரெட் - 6 துண்டுகள் புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப் பெரிய வெங்காயம் - 1 குடமிளகாய் - 1 சிறியது கேரட் - 1 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 1 உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : * தக்காளி, வெங்காயம், குடமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும். * ஒரு பாத்திரத்தில் ஒரு மெல்லிய துணியைக் கொண்டு தயிரை வடிகட்டவும். * வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். * இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும். * பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும். * சத்தான சூப்பர் டேஸ்ட் தயிர் சாண்ட்விச் ரெடி. குறிப்பு : * விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம். * தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.- சமையல் செய்முறைகள் சில
மாலை நேர ஸ்நாக்ஸ் இட்லி பக்கோடா இட்லி என்றாலே சலித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலை சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : இட்லி - 6 பெரிய வெங்காயம் - 100 கிராம் சோம்பு - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் பூண்டு விழுது - 50 கிராம் அரிசி மாவு - 100 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * சோம்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், பொடித்த சோம்பு, உப்பு, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் தயார் செய்துகொள்ளவும். * வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் சேர்க்கவும். * இட்லியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லித் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போடவும். பிறகு, மாவைக் கிள்ளியெடுத்து எண்ணெயில் போட்டு மொறுமொறுவென வந்ததும் எடுத்து பரிமாறவும். * சூப்பரான இட்லி பக்கோடா ரெடி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!- சமையல் செய்முறைகள் சில
காரசாரமான வரகரசி - மிளகு மினி இட்லி சிறுதானியங்களில் வரகரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த வரகரசியுடன் மிளகு சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வரகரிசி - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், முழு உளுந்து - 100 கிராம், அவல் - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை : * மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். * பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும். * வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 4 மணி நேரம் ஊற வைக்கவும். * நன்றாக ஊறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து(நைசாக) உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். * மாவு புளித்துப் பொங்கியவுடன் அதில் கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். * இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் மினி இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். * சூப்பரான வரகரசி - மிளகு மினி இட்லி ரெடி.- சமையல் செய்முறைகள் சில
30 வகை ஒன் பாட் குக்கிங் அதிக நேரம் செலவிடாமல், குறைந்த அளவு பொருட்களைக் கொண்டு எளிதாகச் சமைப்பதுதான் ‘ஒன் பாட் குக்கிங்’. புதிதாகச் சமையல் செய்வோரும், பணிக்குச் செல்வோரும் பக்குவமாகவும் ருசியாகவும் சமைக்கும் வகையில் பயனுள்ள ரெசிப்பிகளை படங்களுடன் வழங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அனிதா கிருபாகரன். திடீர் திரட்டுப்பால் தேவையானவை: பால் பவுடர் - 2 கப், சர்க்கரை - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் (அ) பால் - அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை. செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி 4 (அ) ஐந்து விசில் விட்டு இறக்கினால், திடீர் திரட்டுப்பால் ரெடி. ஆந்திரா புளியோதரை தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6, பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப், மஞ்சள்தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால்... ஆந்திரா புளியோதரை ரெடி. இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும். அவகாடோ டோஸ்ட் தேவையானவை: பழுத்த அவகாடோ ஒன்று, வெங்காயத்தாள் - ஒன்று (வெங்காயத்துடன் பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் – 2, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் அவகாடோ, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து மசிக்கவும். பிரெட்டின் மீது வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லை காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும். டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் தடவிப் பரிமாறவும். அவல் இனிப்பு பொங்கல் தேவையானவை: ஊறவைத்த அவல், வெல்லக் கரைசல் - தலா அரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி - 4, வறுத்த திராட்சை - 8, கிராம்பு - ஒன்று, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, நெய் - 4 டேபிள்ஸ்பூன் செய்முறை: வாணலியில் பாசிப்பருப்பு, ஊறவைத்த அவல், வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, கிராம்பு, பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, 5 அல்லது 6 நிமிடங்கள் கிளறி இறக்கவும். மைக்ரோவேவ் சாக்லேட் கேக் தேவையானவை: கோதுமை மாவு, கோகோ பவுடர் - தலா கால் கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபி பவுடர் - அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரைக்கால் டீஸ்பூன், பால், சாக்லேட் சிப்ஸ் - தலா அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை மைக்ரோவேவ் கப்பில் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இதை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் முதல் 2 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால், சாக்லேட் கேக் தயார். குறிப்பு: ஒரு டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும். குடமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் சீஸ் துருவல், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது சீஸ் கலவையைப் பரப்பவும். அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு, சீஸ் உருகிய உடன் இறக்கவும். சூடாகப் பரிமாறவும். காலிஃப்ளவர் - பட்டாணி புர்ஜி தேவையானவை: பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 2 கப், பச்சைப் பட்டாணி - கால் கப், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, வேகவைத்து இறக்கினால், காலிஃப்ளவர் - பட்டாணி புர்ஜி ரெடி. புரோக்கோலி ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப், புரோக்கோலி துண்டுகள் - கால் கப், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயத்தாள், முட்டைகோஸ் கலவை - அரை கப், எண்ணெய், சோயா சாஸ், மிளகுத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பாசுமதி அரிசி சாதம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மஞ்சூரியனுடன் பரிமாறவும் (எல்லாவிதமான மஞ்சூரியனுடனும் பரிமாறலாம்). பஜ்ஜி மிளகாய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், பஜ்ஜி மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கிராம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... பஜ்ஜி மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும் இத்துடன் சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கலந்து இறக்கினால், பஜ்ஜி மிளகாய் சாதம் ரெடி. பனீர் பாயசம் தேவையானவை: பால் - இரண்டரை கப், பனீர் - அரை கப், முந்திரிப்பருப்பு - 5, குங்குமப்பூ - சிறிதளவு, சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாதாம் – சிறிதளவு. செய்முறை: பனீர், முந்திரிப் பருப்பை அரை கப் பாலுடன் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு சூடான பாலில் பாதியளவு குங்குமப்பூவை சேர்த்துக் கரைக்கவும். மீதமுள்ள பாலை சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைத்த விழுது, குங்குமப்பூ கரைசல், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். நறுக்கிய பாதாமையும் மீதமுள்ள குங்குமப்பூவையும் தூவவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும். இன்ஸ்டன்ட் கேரட் அல்வா தேவையானவை: கேரட் துருவல் - 2 கப், கண்டன்ஸ்டு மில்க் - அரை கப், முந்திரி, பாதாம், திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: குக்கரில் கேரட் துருவல், கண்டன்ஸ்டு மில்க், முந்திரி, பாதாம், திராட்சை, நெய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 4 (அ) 5 விசில் விட்டு இறக்கவும். ஆவி அடங்கிய பின் மூடியைத் திறந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, அல்வா பதம் வரும் வரை கிளறி எடுக்கவும். வெனிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும். கடுகு சாதம் தேவையானவை: வேகவைத்த சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். பொடி செய்ய: தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பெருங்காயத்தூள், வெல்லம் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து (வறுக்க வேண்டாம்) கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... வேகவைத்த சாதம், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் கடுகு சாதம் ரெடி. இன்ஸ்டன்ட் பால் பாயசம் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 5 (அ) 6 டேபிள்ஸ்பூன், பால் – அரை லிட்டர். செய்முறை: குக்கரில் சற்று அதிகமாக தண்ணீர் ஊற்றவும். பாசுமதி அரிசியை எவர்சிவர் டப்பாவில் போட்டு பால் விட்டு மூடி குக்கரில் வைக்கவும். அடுப்பை `சிம்’மில் வைத்து 40 நிமிடம் வேகவிடவும். ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் பரிமாறவும். மசாலா பரோட்டா தேவையானவை: பரோட்டா - 2 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு - 3, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2. செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இறுதியாக பரோட்டா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும். முள்ளங்கி டோஸ்ட் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 5, சிவப்பு முள்ளங்கித் துருவல் - அரை கப், வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லைக் காயவைத்து மிதமான தீயில் டோஸ்ட் செய்து எடுக்கவும். பாத்திரத்தில் முள்ளங்கி, வெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது வைத்துப் பரிமாறவும். பட்டாணி பிலாஃப் (Pilaf) தேவையானவை:ஊறவைத்த பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி – அரை கப், முந்திரிப்பருப்பு - 5, திராட்சை - 10, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய புதினா - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - அரை டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 2, பட்டை - ஒரு துண்டு, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதக்கியவுடன் ஊறவைத்த பாசுமதி அரிசி, பச்சைப்பட்டாணி, உப்பு சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். பிறகு, மூடியைத் திறந்து புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும். சாக்லேட் புடிங் தேவையானவை: பால் - இரண்டரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - முக்கால் கப், கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - கால் கப், சர்க்கரை - 1/3 கப், கோகோ பவுடர் - கால் கப், சாக்லேட் சிப்ஸ் – 1/3 கப், வெனிலா எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், அலங்கரிக்க: புதினா இலை, செர்ரி பழம், கோகோ பவுடர் – சிறிதளவு. செய்முறை: வாணலியில் பால், க்ரீம், சோள மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், சாக்லேட் சிப்ஸ், எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இந்தக் கலவை இட்லி மாவு பதத்துக்கு வரும் வரை கைவிடாமல் நன்கு கிளறவும். பிறகு இதை ஆறவிட்டு, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். செட் ஆனவுடன் கோகோ பவுடர், புதினா இலை, செர்ரி பழம் கொண்டு அலங்கரிக்கவும்.. குறிப்பு: பெரிய கண்ணாடி பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, செட் ஆனவுடன் ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம். சில்லி பிரெட் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளிப்பழம் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்), தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தோசைக்கல்லை காயவைத்து நெய் விட்டு பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுத்து சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி... தக்காளிப்பழம், தக்காளி சாஸ், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தொக்கு பதத்துக்கு வரும் வரை வதக்கவும். இதனுடன் பிரெட் துண்டுகளைப் போட்டு நன்கு கலந்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். புதினா புலாவ் தேவையானவை: பாசுமதி அரிசி, விரும்பிய காய்கறி கலவை – தலா அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - அரை டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை – சிறு துண்டு, கிராம்பு - 3, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: புதினா – ஒரு கட்டு (ஆய்ந்து. தண்ணீரில் அலசவும்), இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, சோம்பு - அரை டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு. செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு... சோம்பு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்கவும். இதனுடன் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த விழுது, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி... அரிசி, தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால்... புதினா புலாவ் தயார். இதை வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும். ஓமவல்லி இலை மோர்க்குழம்பு தேவையானவை: கெட்டித் தயிர் - அரை கப், தண்ணீர் - கால் கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், ஓமவல்லி இலை - 5 - 6, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை பத்து நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, கெட்டித் தயிர் சேர்த்து உடனே இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்துப் பரிமாறவும். வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு தேவையானவை: நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப், சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியபின் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து 5-6 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால்... வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு தயார். முருங்கைக்கீரை புலாவ் தேவையானவை: பாசுமதி அரிசி, ஆய்ந்த முருங்கைக்கீரை - தலா ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பட்டை - ஒரு துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, கிராம்பு - 2, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - சிறிய துண்டு. செய்முறை: பாசுமதி அரிசியைத் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி... பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு கீரை, அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி... அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். பறங்கிக்காய் புலாவ் தேவையானவை: நறுக்கிய பறங்கிக்காய், பாசுமதி அரிசி - தலா அரை கப், பச்சை மிளகாய் – 3 (இரண்டாகக் கீறவும்), தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ - தலா ஒன்று, கிராம்பு - 2, பட்டை - சின்ன துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன். செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பறங்கிக்காய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி... அரிசி, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். உருளைக்கிழங்கு கறி தேவையானவை: தோலுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, தோல் உரித்து நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். பனீர் பட்டர் மசாலா தேவையானவை: பனீர் - 100 கிராம், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - தலா அரை டீஸ்பூன், பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, சர்க்கரை, உப்பு - தேவையான அளவு. அரைக்க: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பாதாம் - 8, கிராம்பு - 2, ஏலக்காய் - ஒன்று, பட்டை - சிறிய துண்டு. செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, கஸூரி மேத்தி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு பனீர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். இதனுடன் பால் சேர்த்துக் கலந்தால்... பனீர் பட்டர் மசாலா தயார். உருளைக்கிழங்கு - பிரெட் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா - கைப்பிடியளவு, கிராம்பு - 2, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 4, உருளைக்கிழங்கு - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - கால் கப், புதினா இலை - கைப்பிடியளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. அலங்கரிக்க: பொரித்த பிரட், பொரித்த வெங்காயம், புதினா இலை – தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி... கிராம்பு, பட்டை, ஏலக்காய் தாளித்து, ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரெட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும். சாகு தேவையானவை: வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி) - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு காய்கறிகள், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த உடன் அரைத்த விழுது சேர்த்து நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். கோவைக்காய் மசாலாபாத் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நீளமாக நறுக்கிய கோவைக்காய் - அரை கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த முந்திரி – சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி... கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். தேன் சில்லி கார்ன் தேவையானவை: சோளம் - 2, தேன், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை, வெண்ணெய் - தேவை யான அளவு. செய்முறை: தணலில் கார்னை ரோஸ்ட் செய்து எடுக்கவும். அதன் மேல் வெண்ணெய் தடவி, உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும். கரம் மசாலா ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன், விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்) - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மஞ்சள்தூள், அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். மூடியைத் திறந்தவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி மிஸ்ஸி ரொட்டி ராஜஸ்தானில் மிகவும் பிரபலம். இந்த ரொட்டியை செய்வது மிகவும் சுலபமானது. இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - ஒரு கப் பாசிப்பருப்பு - ஒரு கப் உலர்ந்த கஸ்தூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் நெய் - தேவையான அளவு பெரிய வெங்காயம் - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை : * பாசிப்பருப்பை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், உலர்ந்த கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசைந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும். * பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய ரொட்டிகளாக தேய்த்துக்கொள்ளவும். * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும், உருட்டிய ரொட்டிகளைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். * சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி ரெடி.- சமையல் செய்முறைகள் சில
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்வீட் கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ஸ்வீட் கார்னை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 100 கிராம் புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லை - அனைத்தும் சேர்ந்து ஒரு கப் (நறுக்கியது), எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை : * சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூழ்குமளவு நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். * ஊற வைத்த உளுந்து, பச்சரியுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும். * அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். * சூப்பரான ஸ்வீட் கார்ன் வடை ரெடி.- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
போராட்டக்களமான கீழடி - என்ன நடந்தது? நதிக்கரை நாகரிகம் பற்றி ஆய்வை நடத்துவதற்காக, மத்திய தொல்லியல் துறையினர் 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள தனியார் தென்னந்தோப்பைத் தேர்வுசெய்தனர். முதல் வருட ஆய்விலேயே இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான அரிய பொருள்களையும், அவர்கள் வாழ்ந்த வீடுகளையும் கண்டுபிடித்தனர். தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தத் தொல்லியல் ஆய்வால், தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த ஆண்டு ஆய்வுசெய்ய, மத்திய அரசு மிகவும் யோசித்தே அனுமதி வழங்கியது. இரண்டாவது வருடத்திலும் பல முக்கியமான பொருள்கள் கிடைத்தன. இந்தப் பொருள்களை பெங்களூருக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டது மத்திய தொல்லியல் துறை. `இதைத் தமிழகத்திலேயே வைக்க வேண்டும். ஆய்வுக்காக அதிக இடங்களை அரசு ஒதுக்க வேண்டும்’ என வழக்குரைஞர் கனிமொழி வழக்கு தாக்கல் செய்த பிறகு, கீழடி விவகாரத்தின் பின்னால் இருக்கும் அரசியலும் பண்பாட்டு மோதலும் வெளிவந்தன. அரசியல் தலைவர்கள் கனிமொழி, பழ.நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், சீமான், மாஃபா பாண்டியராஜன் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் கீழடிக்கு வரத் தொடங்கினர். கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பொருள்களில் ஒன்றுகூட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இல்லை. இதனால் பா.ஜ.க அரசுக்கு இந்த ஆய்வைத் தொடர்வதில் விருப்பமில்லை என்ற தகவல் பரவியது. இந்த நிலையில் மூன்றாம்கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கவும் மத்திய தொல்லியல் துறை தாமதப்படுத்தியது. பிறகு, அரசியல் கட்சியினர் பலரும் குரல் எழுப்பவே அனுமதியை வழங்கியது. அதேநேரம், இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்திவந்த மதுரையைப் பூர்விகமாகக்கொண்ட மூத்த தொல்லியல் அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை, அதிரடியாக அசாமுக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிட்டனர். இதனால் இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமானது. ஓர் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அது முழுமையாக முடியும் வரை அந்தக் குழுவை மாற்றக் கூடாது என்று விதி இருக்கும்போது, மிக ஆர்வமாக ஆய்வு செய்துவந்த அமர்நாத்தை இடமாறுதல் செய்ததைப் பல்வேறு அமைப்புகளும் கண்டித்தன. தன்னுடைய மாறுதலை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார் அமர்நாத் ராமகிருஷ்ணா. தீர்ப்பாயமும் இடமாறுதலை மறுபரிசீலனை செய்யச் சொன்னது. ஆனால், ஒரு வாரம் கழித்து அவருடைய இடமாறுதலை உறுதிசெய்து உத்தரவிட்டது. இது, தமிழர்களுக்கு எதிரான மறைமுகப் பண்பாட்டுப் போர் என்று தமிழர் அமைப்புகள் களத்தில் இறங்கின. இன்று காலை `மே 17’ இயக்கத்தினர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தி முடித்தனர். இந்த நிலையில் கீழடி ஆய்வைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், மகேஷ் சர்மா ஆகியோர் வருவதாகத் தகவல் வர, `அவர்களுக்கு எதிராக முற்றுகையிடப்போகிறோம்’ என்று மக்கள் விடுதலைக் கட்சியினர் அறிவித்திருந்தனர். நேற்று காலையிலிருந்து கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருந்த இந்தக் கட்சியினர், சரியாக 2 மணிக்கு அங்கு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பா.ஜ.க அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர். மோடி மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றம் செய்ததை எதிர்த்தும் கோஷமிட்டனர் மக்கள் விடுதலைக் கட்சியினர். பதிலுக்கு பா.ஜ.க-வினரும் கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் பா.ஜ.க-வினர் அங்கு கிடந்த கம்பு, கட்டைகளை எடுத்துக்கொண்டு, போராட்டம் செய்தவர்களையும் பத்திரிகையாளர்களையும் விரட்டத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியே கலவரமானது. சிறிது நேரத்தில் கூடுதல் போலீஸ் வந்து மக்கள் விடுதலைக் கட்சிப் போராட்டக்காரர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். “கீழடி ஆராய்ச்சி தொடர்ந்து நடத்திட, அதற்கான உதவிகளைச் செய்வதற்காகப் பார்வையிடத்தான் வந்தோம். ஆனால், இங்கு கலவரக்காரர்களை அனுமதித்த போலீஸ், மத்திய அமைச்சர்களைப் பாதுகாப்பதில் முறை தவறிவிட்டது” என்றார் தமிழிசை. சிறிது நேரம் பார்வையிட்டவர்கள், கீழடி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தைப் பார்த்ததால் மிகவும் அப்செட்டாகி, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். http://www.vikatan.com/news/politics/87924-protest-in-keezhadi-excavation-site.html- சமையல் செய்முறைகள் சில
குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65 குழந்தைகளுக்கு சிக்கன், மட்டனை ஃபிரை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மட்டனை வைத்து மட்டன் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் - 250 கிராம் கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை : * மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்). * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்). * ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். * மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும் வரை பொரித்தால் போதும். * சூப்பரான மட்டன் 65 ரெடி. குறிப்பு : நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும். அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
தர்பூசணி ரெசிப்பிகள் வாட்டர்மெலன் பீட்சா வாட்டர்மெலன் மூஸ் வாட்டர்மெலன் ஸ்டார்டர்ஸ் வாட்டர்மெலன் கீர் வாட்டர்மெலன் மொஜிடோ வாட்டர்மெலன் மொசரல்லா வாட்டர்மெலன் பாப்சிகல் வாட்டர்மெலன் சோர்பெட் வாட்டர்மெலன் சூஜி ஸ்லைஸ் வாட்டர்மெலன் க்ரீம் சீஸ் சாலட் கொளுத்தும் கோடை வெயிலிலும் குளிர்ச்சியான விஷயம் என்றால், அது தர்பூசணிதான். வைட்டமின்-சி சத்து நிறைந்து காணப்படும் அருமையான பழம் இது. ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், உலகின் பல பகுதிகளில் தர்பூசணி விளைகிறது. தர்பூசணியைப் பயன்படுத்தி செய்து ருசிக்க வித்தியாசமான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். வாட்டர்மெலன் பீட்சா தேவையானவை: தர்பூசணி – ஒன்று (வட்டமாக நறுக்கவும்) ஆரஞ்சு சுளைகள் – 10 (கொட்டைகளை நீக்கவும்) கிவிப் பழத்துண்டுகள் – கால் கப் அன்னாசிப் பழத்துண்டுகள் – ஒரு கப் கறுப்பு திராட்சை – கால் கப் பச்சை திராட்சை – கால் கப் ஸ்ட்ராபெர்ரி – 5 (பொடியாக நறுக்கவும்) தேன் – 2 டீஸ்பூன் சாக்லேட் சாஸ் – ஒரு டீஸ்பூன் வெள்ளை சாக்லேட் சாஸ் – ஒரு டீஸ்பூன் செய்முறை: அகலமான தட்டில் தர்பூசணி துண்டை பீட்சா பேஸ் ஆக கட் செய்து வைக்கவும். இதன் மீது தேனைப் பரவலாக ஊற்றி ஆரஞ்சு சுளைகள், கிவித் துண்டுகள், அன்னாசித் துண்டுகள், திராட்சை வகைகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள் சேர்க்கவும். பிறகு மேலே சாக்லேட் சாஸ் வகைகளை ஊற்றி குளிரவைத்துப் பரிமாறலாம். வாட்டர்மெலன் மூஸ் தேவையானவை: தர்பூசணி பழத்துண்டுகள் – ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் ஜெலட்டின் – 2 டீஸ்பூன் செய்முறை: தர்பூசணித் துண்டுகளுடன் பாதி அளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு எடுத்து ஒரு டீஸ்பூன் ஜெலட்டின் சேர்த்து நன்கு கரைக்கவும். பிறகு இதனுடன் தர்பூசணி அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். சிறிய கண்ணாடி டம்ளர்களில் பாதியளவு தர்பூசணி கலவையை ஊற்றி ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வரை வைத்து எடுக்கவும். ஃப்ரெஷ் க்ரீமுடன் மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து நன்கு அடிக்கவும். மீதமுள்ள ஜெலட்டினை வெந்நீரில் கலந்து க்ரீம் கலவையுடன் சேர்க்கவும். பிறகு கண்ணாடி டம்ளர்களை வெளியே எடுத்து, அவற்றில் ஃப்ரெஷ் க்ரீம் கலவையை ஊற்றி மீண்டும் ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும். வாட்டர்மெலன் ஸ்டார்டர்ஸ் தேவையானவை: தர்பூசணிப்பழ கியூப் துண்டுகள் – கால் கப் (விதைகளை எடுத்துவிடவும்) புராசஸ்டு சீஸ் கியூப்ஸ் – கால் கப் அன்னாசிப் பழ கியூப் துண்டுகள் – கால் கப் கிவிப் பழ கியூப் துண்டுகள் – கால் கப் சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன் டூத் பிக் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: டூத் பிக்கில் தர்பூசணித் துண்டு, கிவிப் பழத்துண்டு, புராசஸ்டு சீஸ் கியூப், அன்னாசிப் பழத்துண்டு என நறுக்கிய துண்டுகளை மாற்றி மாற்றி அடுக்கவும். இதன் மேலே உப்பு, சாட் மசாலாத்தூள் தூவி, குளிரவைத்துப் பரிமாறலாம். வாட்டர்மெலன் கீர் தேவையானவை: பொடியாக நறுக்கிய தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்) பால் – ஒரு லிட்டர் கண்டன்ஸ்டு மில்க் – 2 டீஸ்பூன் சர்க்கரை – கால் கப் முந்திரி – 5 (பொடியாக நறுக்கவும்) ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். ஆறிய பின் தர்பூசணித் துண்டுகள் சேர்த்துக் கலந்து, குளிரவைத்துப் பரிமாறலாம். வாட்டர்மெலன் மொஜிடோ தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்) சோடா – ஒரு கப் புதினா இலைகள் – கைப்பிடியளவு எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் சர்க்கரை – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு செய்முறை: சிறிதளவு தர்பூசணித் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள தர்பூசணித் துண்டுகளுடன் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். உயரமான கண்ணாடி கோப்பைகளின் ஓரங்களில் சிறிது எலுமிச்சைச் சாறு விட்டு, அதன் மேல் உப்பைத் தூவவும். கோப்பையின் உள்ளே தர்ப்பூசணித் துண்டுகளைப் போடவும். பிறகு அதன் மீது அரைத்த தர்பூசணி விழுது, சேர்த்து ஐஸ் கட்டிகளைப் போட்டு சோடா சேர்த்துப் பரிமாறவும். வாட்டர்மெலன் மொசரல்லா தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்) மொசரல்லா சீஸ் – 100 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்) புதினா இலைகள் – சிறிதளவு ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன் கறுப்பு ஆலீவ் - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: தர்பூசணித் துண்டுகளை விருப்பத்துக்கேற்ப `கட்’ செய்து தட்டில் அடுக்கவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். சீஸ் துண்டுகளைத் சூடான தண்ணீரில் முக்கி எடுத்து தர்பூசணித் துண்டுகள் மீது அடுக்கவும். இதன் மீது புதினா இலைகள், மிளகுத்தூள், உப்பு, வினிகர் அல்லது எலுமிச்சைச்சாறு, கறுப்பு ஆலீவ், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைப் பரவலாக சேர்த்து உடனே பரிமாறவும். வாட்டர்மெலன் பாப்சிகல் தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப் தேங்காய்ப்பால் - கால் கப் கிவிப் பழம் – ஒன்று சர்க்கரை – கால் கப் கறுப்பு உப்பு – அரை டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன் பாப்சிகல் மோல்டு – தேவையான அளவு செய்முறை: தர்பூசணியை விதைகள் நீக்கி கியூப்களாக துண்டுகள் போடவும். பிறகு, மிக்ஸி ஜாரில் சேர்த்து இத்துடன் சர்க்கரை, கறுப்பு உப்பு, சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து எடுக்கவும். பாப்சிகல் மோல்டுகளில் இந்தக் கலவையை முக்கால் பாகம் வரை ஊற்றி, ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வரை வைத்து எடுக்கவும். பிறகு, தேங்காய்ப்பாலில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கி, மோல்டுகளில் ஊற்றவும். கிவி ஜூஸ் ஊற்றுவதற்கு சற்று இடம் விடவும். மீண்டும் மோல்டுகளை ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். கிவிப் பழத்துண்டுகளை மிக்ஸியில் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். ஃப்ரீசரில் இருந்து மோல்டுகளை எடுத்து கிவிப்பழச் சாற்றை ஊற்றி மறுபடியும் ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைத்தெடுக்கவும். பிறகு, வெளியே எடுத்து குழாய் நீரில் காட்டினால், மோல்டில் இருந்து பாப்சிகலை எளிதாக வெளியே எடுக்க வரும். வாட்டர்மெலன் சோர்பெட் (sorbet) தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப் (விதைகளை எடுத்துவிடவும்) கண்டன்ஸ்டு மில்க் – அரை கப் செய்முறை: விதைகள் நீக்கிய தர்பூசணித் துண்டுகளுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸியில் நுரை வரும் வரை அடித்து எடுக்கவும். விரும்பிய மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு மோல்டில் இருந்து வெளியே எடுத்து பரிமாறலாம். வாட்டர்மெலன் சூஜி ஸ்லைஸ் தேவையானவை: தர்பூசணிச் சாறு – 2 கப் ரவை – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது) ஸ்ட்ராபெர்ரி ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை ஆப்பிள் பச்சை நிற ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை சாக்கோ சிப்ஸ் – ஒரு டீஸ்பூன் நெய் – 3 டீஸ்பூன் செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி உருக்கி, ரவையைச் சேர்த்து பச்சை வாசனை போக வறுத்தெடுத்து, சரிபாதியாக பிரித்து வைக்கவும். அதே பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கி தர்பூசணிச் சாறு, அரை கப் சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். இத்துடன் அரை கப் ரவை சேர்த்து வேகவிடவும். ஸ்ட்ராபெர்ரி ஃபுட் கலர் சேர்த்து பச்சை வாசனை போனதும் கிளறி இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பால், மீதமுள்ள சர்க்கரை, சேர்த்து நன்கு கரைய விடவும். இத்துடன் மீதம் இருக்கும் ரவையைச் சேர்த்து வேகவிடவும். இதில் ஒரு பகுதியைத் தனியாக பிரித்து வைக்கவும். பேனில் ஒரு சிட்டிகை ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலரைச் சேர்த்து ஒரு லேசாக கிளறி பாலில் வெந்த ரவையில் (தனியாக எடுத்து வைத்திருக்கும் ஒரு பாகத்தில்) சேர்த்துக் கிளறவும். குழிவான பாத்திரத்தில் நெய் தடவி, பச்சை நிற வெந்த ரவை கலவையைச் சேர்த்து கைகளால் நன்கு சமப்படுத்தவும். பிறகு, தனியாக எடுத்து வைத்திருக்கும் வெள்ளை ரவை கலவையை மெதுவாக சமப்படுத்தவும். பச்சை கலர் மற்றும் வெள்ளை கலர் இரண்டும் ஒன்றாகிவிடக் கூடாது. இறுதியாக ஸ்ட்ராபெர்ரி ஃபுட் கலர் கலவையை நடுவில் வைத்து கத்தியால் மெதுவாக மற்ற இடங்களுக்குப் பரப்பி விடவும். ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்தெடுத்து ஒரு தட்டில் கலவையை மெதுவாக கவிழ்க்கவும். பிறகு வட்ட ஸ்லைஸ்கள் போட்டு நடுவில் சாக்கோ சிப்ஸ் வைத்துப் பரிமாறவும். வாட்டர்மெலன் க்ரீம் சீஸ் சாலட் தேவையானவை: தர்பூசணி – அரை கிலோ க்ரீம் சீஸ் – 3 டேபிள்ஸ்பூன் ஐஸிங் சுகர் – 3 டேபிள்ஸ்பூன் வால் நட்ஸ் – கால் கப் செய்முறை: தர்பூசணியை முக்கோண வடிவ துண்டுகளாக கட் செய்து வைக்கவும். க்ரீம் சீஸுடன் ஐஸிங் சுகர் சேர்த்து அவை பொங்கிவரும் வரை நன்கு அடிக்கவும். பிறகு பைப்பிங் பேக்கில் க்ரீம் சீஸைச் சேர்த்து ரெடியாக வைக்கவும். இனி ஒரு முக்கோண வடிவ தர்பூசணி துண்டின் மேல் `பைப்பிங் பேக்’கில் உள்ள க்ரீம் சீஸைப் பிழிந்து, அதன் மேல் வால் நட்ஸால் அலங்கரிக்கவும். இதன் மேல் மற்றொரு தர்பூசணி முக்கோண வடிவ துண்டை வைத்து க்ரீம் சீஸ் பிழிந்து, வால் நட்ஸால் அலங்கரிக்கவும். இதேபோல மூன்றாவது துண்டையும் வைத்து அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி? காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். காய்கறிகளுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருள்கள் : அவரைக்காய் - 150 கிராம் முட்டை - 1 எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மிளகு தூள் - 1 ஸ்பூன் செய்முறை : * அவரைக்காய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும். * அவரைக்காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். * முட்டை வெந்து பூப்போல உதிரியாக வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். * சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி. - சமையல் செய்முறைகள் சில
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.