Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. அது மட்டும் இல்லை பதிவேட்டு புத்தகத்தை கொண்டுபோய் கொடுத்து போட்டும் போகவேணும்..
  2. பேபி பீட்ஸா தோசை தேவையானவை: தோசை மாவு- அரை கிலோ பேபி கார்ன் - அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கிய மூன்று கலர் குடமிளகாய்- தலா ஒன்று துருவிய மொசரல்லா சீஸ்- சிறிதளவு சில்லி ஃபிளேக்ஸ்- ஒரு டீஸ்பூன் ஓரிகானோ- ஒரு டீஸ்பூன் செய்முறை: பேபி கார்னை வேக வைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாக தோசைக்கல்லில் ஊற்றவும். மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன், குடமிளகாயை வைக்கவும். தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும். இதை அப்படியே பிளேட்டுக்கு மாற்றவும். இனி தோசையின் மேல் சீஸ் தூவி அது உருகும் நேரத்தில், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோவைச் சேர்க்கவு. இதை 2 நிமிடம் கழித்து கஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடவும்.
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி & காவாலி...
  4. தேங்காய்ப்பால் சொதி.. செய்வது எப்படி?? தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 100 மில்லி, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு செய்முறை: பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும். குறிப்பு: தேங்காய்ப்பால் சொதி, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.
  5. மிளகு மாதுளை தேவையானவை: மாதுளை முத்துக்கள்- 100 கிராம் வெண்ணெய்- ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு உப்பு- ஒரு சிட்டிகை செய்முறை: வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மிளகுத்தூள், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மாதுளை முத்துகளைச் சேர்த்து லேசாகப் புரட்டி எடுத்து, பரிமாறவும்.
  6. வெந்தயக்கீரை சாம்பார்.. செய்வது எப்படி?? தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு, துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும். குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.
  7. இன்ஸ்டன்ட் போண்டா தேவையானவை: இட்லி மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தே.அளவு எண்ணெய் - பொரிக்க‌ செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.
  8. வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி.. செய்வது எப்படி?? தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம். குறிப்பு: வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.
  9. செட்டிநாட்டுத் தைப்பொங்கல் ரெசிப்பிக்கள் பொங்கல் சாதம் சர்க்கரைப் பொங்கல் பருப்பு மசியல் வாழைக்காய்ப் பொரியல் அவரைக்காய்ப் பொரியல் சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல் மொச்சைக் கூட்டு பறங்கிக்காய்க் குழம்பு பல காய்க் குழம்பு தைப்பொங்கல் அன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கும் சம்பிரதாய உணவு வகைகளைச் செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். பொங்கல் சாதம் தேவையானவை: பச்சரிசி - 200 கிராம் தண்ணீர் - 4 டம்ளர் செய்முறை: பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். குறிப்பு: தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரைப் பொங்கல் தேவையானவை: பச்சரிசி - 200 கிராம் (புதியது) தண்ணீர் - 3 டம்ளர் வெல்லம் - 200 கிராம் தேங்காய்த்துருவல் - கால் கப் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா 10 நெய் - 4 டீஸ்பூன் ஏலக்காய் - 1 செய்முறை: பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேகவைக்கத் தேவைப்படும் 3 டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும். குறிப்பு: வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம். பருப்பு மசியல் தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 3 பூண்டு - 4 பல் கறிவேப்பிலை - 10 இலைகள் சீரகம் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பாசிப்பருப்பு, இடித்த பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும் (உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது). இதை சாதத்தோடு பரிமாறவும். வாழைக்காய்ப் பொரியல் தேவையானவை: வாழைக்காய் - 1 தண்ணீர் - 3 கப் சின்ன வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - 10 இலைகள் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். இதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்கவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த வாழைக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். அவரைக்காய்ப் பொரியல் தேவையானவை: அவரைக்காய் - 200 கிராம் தண்ணீர் - 2 கப் சின்ன வெங்காயம் - 6 காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - 10 இலைகள் தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் செய்முறை: அவரைக்காயைக் கழுவி நீளமாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காயுடன், 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அவரைக்காய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல் தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - 10 இலைகள் செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவிதோலுடன் வட்டமாக நறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து வேகவிடவும். பிறகு, தண்ணீரை வடிக்கவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்னர் வேகவைத்த கிழங்கைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். மொச்சைக் கூட்டு தேவையானவை: ஃப்ரெஷ் மொச்சை - கால் கிலோ துவரம்பருப்பு - 100 கிராம் தண்ணீர் - ஒன்றரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்னவெங்காயம் - 6 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்) சாம்பார் பொடி - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - 10 இலைகள் தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சீரகம் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் செய்முறை: துவரம்பருப்பை ஒன்றரை கப் தண்ணீர், மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக குக்கரில் வேக விடவும். இதனுடன் ஃப்ரெஷ் மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். பறங்கிக்காய்க் குழம்பு தேவையானவை: பறங்கிக்காய் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.) தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 4 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்) கறிவேப்பிலை - 10 இலைகள் புளி - சின்ன எலுமிச்சை அளவு தன்ணீர் - 2 கப் உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் வெந்தயம் - 10 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை: புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். பறங்கி விதைகள் மற்றும் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பறங்கிக்காய் சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பிறகு புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறவும். பல காய்க் குழம்பு தேவையானவை: முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா 1 கத்திரிக்காய் - 3 சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் - சிறிதளவு அவரைக்காய் - 10 ஃப்ரெஷ் மொச்சை - அரை கப் காராமணி - 10 தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்) கறிவேப்பிலை - 20 இலைகள் புளி - எலுமிச்சை அளவு தண்ணீர் - 2 கப் சாம்பார் பொடி - 5 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் செய்முறை: புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் நறுக்கிய காய்கறிகள், ஃப்ரெஷ் மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும், பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தாளித்ததைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும். குறிப்பு: இதற்கு இங்கு சொன்ன காய்களைத் தவிர்த்து நீங்கள் விரும்பும் காய்கறிகளையும் பயன்படுத்தலாம் vikatan.com
  10. கீரை மிளகூட்டல்.. செய்வது எப்படி?? தேவையானவை: முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து, வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும். குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம். ‪
  11. மொச்சை சாம்பார்.. செய்வது எப்படி?? தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக் கவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
  12. வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா? அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் குழையுங்கள். இதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லிலோ அல்லது டோஸ்ட்டரிலோ டோஸ்ட் செய்தால்.. கார்லிக் பிரெட் தயார். இதைவிட எளிமையாக தயாரிக்க...முதலில் வெண்ணெய் தடவிய பிரெட்டை டோஸ்ட் செய்யுங்கள். பிறகு, இரண்டாக வெட்டிய ஒரு பல் பூண்டை அதன் மேல் தேய்த்துவிட்டால்..கார்லிக் வாசனையுடன் பிரெட் கமகமவென்று இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.