Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்அன்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்அன்பு

  1. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  4. தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்துஎட்டு ஆண்டுகள் ஆகிறது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான். மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது. காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர்இ பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவைஇ இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார். காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை. ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர். தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார். கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார். திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது. மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர். போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது. ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார். இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார். இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார். எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார். சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார். இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும். ஆண்டு ஒன்றாகிறது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம். எஸ்.கே
  5. “ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன” “அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான். போராடினான்” “போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது” “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.” “நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்” “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக நான் அவனை நேசித்தேன்.” “எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது” “அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப்பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது” “அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு சோகநிகழ்வு. அதனை சொற்களால் வார்த்துவிட முடியாது” 1993ம் ஆண்டு ஜனவரி 16ம்நாள் வங்கக்கடலில் கிட்டு வீரகாவியமானபோது தேசியதலைவரால் விடுக்கப்பட்ட செய்தியில் இருந்த மிகமுக்கியமான வாக்கியங்கள்தான் மேலே உள்ளவை. தேசியதலைவர் சொல்லி இருப்பதுபோல கிட்டுவின் வரலாறு என்பது சொற்களால் வார்த்து முழுமையாக வெளிக்காட்டிவிட கூடியது அல்ல. தமிழீழத்தினது மட்டும் அல்லாமல் முழு உலக தமிழினத்தின் ஆன்மாவாக தேசியதலைவரே விளங்குகிறார். அவரது ஆன்மாவையே பிழிந்ததாக கிட்டுவின் இழப்பு இருந்திருக்கிறது என்றால் அவருக்குள் எவ்வளவு தூரம் ஆழமாக அவன் பதியம் போட்டு இருந்திருக்கிறான். மனிதமொழியில் கூறப்பட்டிருந்த உறவுமுறைக்கெல்லாம் அப்பாற்பட்டதான அந்த உறவு எப்படி பிணைந்தது…? இன்றும்கூட தாண்டிசெல்லவும், இட்டு நிரப்பவும் முடியாத பெரும் இடைவெளியாகவே அவனின் இடம் இருக்கின்றது. ஒரு இனத்தின் விடுதலைக்கான களப்பயணத்தில் அவன் வகித்த காலத்தின் பதிவு பாத்திரம் எத்தகையது என்று பார்க்கும்போதுதான் கிட்டுவின் வரலாறு வியப்புடன் விரிகிறது.அவனது வரலாறுமுழுதும் ஆளுமையின்வீச்சும்,அற்புதமான அறிவுத்தேடலும்,மண்டியிடாத வீரமும்,கட்டுக்குலையாத உறுதியும் நிறைந்தே இருக்கின்றது. போராட்டத்துக்காக அவன் வந்தபோது இத்தனை ஆளுமை நிறைந்தவனாகவோ இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவனாக இருந்தான் என்று எந்த தேவதையும் அசரீரி ஒலிக்கவில்லை அவன் போராட்டத்தின் ஊடாகவே கற்றான். போராட்டத்தை அவன் செதுக்கிபோது தானும் சேர்ந்தே சுயமாக செதுக்கப்பட்டான். அதுவே அவனை வரலாற்றின் உச்சமாக கொண்டும் சென்றது. அவன் அதுவரை வாழ்ந்திருந்த வாழ்வுக்கும் அவன் விடுதலைப்போராட்டத்துக்கு என்று புறப்பட்டு அண்ணையிடம் வந்த பின்னர் வாழ்ந்த வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் மிகமிக பெரியது. நடுத்தர குடும்பங்களைவிட வசதியான வாழ்வு, எந்நேரமும் இவனில் செல்லம்கொஞ்சும் பாசமுள்ள அம்மா, அன்பான மூத்த சகோதரன் என்றிருந்த குடும்பம் அவனது. சாப்பாடு கொஞ்சம் நேரம் பிந்தியதற்கே தாயுடன் கோபித்து கொள்ளும் இவனே பயிற்சிகளத்தில் 10,20 பேருக்கு சமைத்து உணவு பரிமாறுபவனாக தானாக ஏற்று வேலை செய்யும்போதுதான் இவனின் விடுதலைக்காக எதையும் எந்த வேலையையும் செய்ய தயங்காத குணம் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிமுகாம் 1979ல் மாங்குளம் பண்ணையில் தலைவரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பமானபோது யார் சமையல் என்ற தலைவரின் கேள்விக்கு பதிலாக தானே முன்வந்து அந்த வேலையை செய்ய ஆரம்பித்தில் இருந்து இறுதி நேரத்தில் வங்ககடலில் நின்றதுவரை அவன் எந்த வேலையையும் விடுதலைக்காக செய்வதில் பின்னின்றது இல்லை. 79ல் மட்டும் அல்லாமல் 1983லும் இவனே பயிற்சிமுகாம் சமையல். 83ல் கிட்டு அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினன். தலைவருக்கு அடுத்த வரிசையில் ஐந்து பேரில் ஒருவனாக இருந்தவன். அப்படி இருந்தும் 1983ல் புதியவர்களான பொட்டு, விக்ரர், லிங்கம் போன்றவர்களுக்கான பயிற்சி முகாமில் யார் சமைப்பது என்ற கேள்விக்கும் தானே முன்வந்து சமையல்பகுதியின் பொறுப்பை ஏற்கிறான். பயிற்சிக்கு வந்த புதிய உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அங்கு கிட்டு சமையல் வேலையில் நின்றதை பார்க்க. அவர்கள் அந்த பயிற்சியில் கற்ற எல்லாவற்றையும்விட கிட்டுவை பார்த்து கற்றுக்கொண்டது ‘விடுதலைக்காக என்ன வேலை என்றாலும் அதை முழுமனதுடன் செய்யவேண்டும்’ என்பதாகும். விடுதலைக்கான களத்தில், சுதந்திரபோராட்ட அமைப்பில் என்ன வேலை என்றாலும் அது விடுதலைக்கானதுதான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். விடுதலைக்கான களவேலையில் இன்ன வேலைதான் செய்வேன் என்று முடிவெடுத்து வருபவன் போராளி அல்ல என்பது இவனின் கருத்தாக இருந்தது. அதற்காக எல்லா வேலைகளையும் செய்தான் முழுமனதுடன். விடுதலைக்காக என்னவெல்லாம் செய்யமுடிமோ அவ்வளவற்றையும் தனது வாழ்நாள் முழுதும் தேடிதேடி கொண்டே இருந்தவன் கிட்டு. 81, 82களில் தலைவருடன்போய் தமிழகத்தில் நிற்கவேண்டிய ஒரு தேவை ஒன்று ஏற்பட்டபோது அதற்கும் போனான். அங்கும்போய் சும்மா நிற்காமல் அந்த நாட்களையும் விடுதலைக்கான ஏதாவது ஒன்றுக்கு பயன்செய்ய விரும்பினான். என்றாவது ஒருநாள் விடுதலைப் போராட்டம் வளர்ச்சி அடையும்போது அதற்கு தேவையான புகைப்பட நுணுக்கங்களையும், புதிய வர்ண அச்சு முறையாக அப்போது இருந்த லித்தோ அச்சுமுறையையும் தலைவரின் அனுமதியுடன் மதுரையில் படித்தான். அடுத்தவேளை சாப்பாட்டிற்கே சிரமமான அந்த மதுரை நாட்களில் இதனை படிக்கவேண்டும் என்றும் அதனை விடுதலைப்போராட்டத்துக்கு என்றாவது ஒருநாள் பாவிக்க முடியும் என்றும் இவன் சிந்தித்தது இன்றும் அதிசமாகவே இருக்கிறது. இந்த தேடலும், தமிழீழ விடுதலையை பெற்றுவிடுவதற்கு தேவையான அனைத்தையும் தேடி தேடி எமது இனத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற துடிப்பும்தான் கிட்டுவின் மிகப்பெரிய வேலையாக காலகாலமாக இருந்திருக்கிறது. இந்த தேடலானது அவன் அமைப்பில் இணைந்த 1979ல் மாங்குளம் பண்ணையில் பழைய .38 ரவைகளுக்கு மீள்பாவிப்புக்கு மருந்திடும் நுணுக்கம் கற்றுக்கொண்டது முதல் அவனின் இறுதி நாட்களில் 90களின் ஆரம்பத்தில் விடுதலைக்கான அங்கீகாரத்துக்கான ஒரு பெரிய முயற்சியில் தென்அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நாட்டில் நின்றபோது அந்த ஊன்று கோலுடன் அலைந்து அந்த மக்களின் இசை நுணுக்கமும் சித்திரங்களும் பற்றியும் தேடவைத்தது. இந்த உணர்வுதான் அவனை எப்போதும் முன்னோக்கி சிந்திக்கவைத்தது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் மிகமுக்கியமான கட்டமாக நிலமீட்பு அமைகிறது. அந்த வகையில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின்னர் தமிழர்களின் நிலப்பகுதி ஒன்று எந்தவித இடையீடம் இன்றி தமிழர்களால் ஆளுப்படும் நிலையை ஏற்படுத்தியவன் அவன். 1985 ஏப்ரல்மாதம் யாழ் காவல்நிலையம் மீதான தாக்குதலை கிட்டு தலையேற்று நடாத்தி முடித்த கையோடு அதன்பின் வந்த நாட்களில் யாழ் மண்ணில் சிங்களபடைகளின் குறுக்கும் நெடுக்குமான ரோந்துகள் இல்லாமல் போகிறது. ராணுவம் முகாம்களுக்குள் முடங்கிபோனது. மீட்கப்பட்ட முதல் தமிழ் மண்ணை கிட்டு தமிழர் வரலாற்றில் காட்டுகிறான். இந்த நிகழ்வானது மிகவும் பாரிய அளவில் விடுதலைப்போராளிகளுக்கு மன உறுதியையும் தமிழ் மக்களுக்கு விடுதலைப்போராட்டத்தின்மீது உரம்மிக்க நம்பிக்கையையும் கொடுக்கிறது. மிகமிக குறைந்த அளவிலான போராளிகளையும் குறைந்த சூட்டுதிறன்கொண்ட ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு இதனை சாதித்ததில் கிட்டு என்ற தளபதியின் பங்கு பாரியது. யாழ்மாவட்டத்தில் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்து தினமும் வெளியேற முயற்சித்த படையினரை மறித்து திரும்ப அனுப்பும் களத்தில் எங்கெங்கும் கிட்டு நின்றதானது போராளிகளுக்கு பலமடங்கு வீரியத்தை தந்தது. யாழ்மண் விடுதலைப்போராளிகள் வசம் வந்துவிட்டதுடன் கிட்டு திருப்தி கொள்ளவில்லை. எந்த ராணு வெற்றியையும் அரசியல்ஆக்குவதன் முலமே எமது மக்களுக்கான விழிப்புணர்வை கொண்டுவரலாம் என்பதால் ராணுவ ரோந்துகள் இல்லாத யாழ்மண்ணில் மக்கள் நீதி மன்றங்களையும், இணக்கசபைகளையும், சுயதொழில் ஊக்குவிப்புகளையும் இன்னும் பல கட்டமைப்புகளை நிறுவினான். அரசியல் வகுப்புகளையும், தெருநாடகங்களையும் நடாத்தி எமது மக்களுக்குள் விடுதலை கனலை ஏற்றுவதில் உழைத்தவன் அவன். யாழ் மாவட்டத்தில் முகாம்களுக்குள் ராணுவம் அடைபட்டதை வைத்தே ஒரு பெரிய ராசதந்திர நகர்வையும் விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு பெருமிதமான பார்வையையும் கொடுப்பதற்காக அருணாவையும் காமினியையும் மீட்டு சிங்களதேசத்துடன் ஒரு கைதிகள் பரிமாற்றத்தை அழகாக செய்துகாட்டிய ராசதந்திரமேதை அவன். எல்லா ஆளுமைகளும் அவனுக்குள் ஒரு இரவில் வந்து குடியேறியவை அல்ல. அவன் அதற்காக நடாத்திய தேடல்கள் மிக அதிகம். அதனால்தான் ஒரு ஆற்றல்மிக்க போர்வீரனாக இருந்த அவனால் ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய தளபதியாகவும் மாற முடிந்தது.அதனால்தான் அவனால் ஒரு சிறந்த ஓவியனாகவும்,மிகச்சிறந்த புகைப்படம் பிடிப்பவனாகவும், ஊடகங்களை நடாத்தும் தனித்திறமை மிக்கவனாகவும், மிகமிக இலகுவாக பயிற்சிகளில் விளக்கம் தரக்கூடிய பயிற்சியாளனாக என்று அத்தனை ஆளுமைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவன் விடுதலைக்காகவே இவை அனைத்தையும் செய்தான். ஒரு இரவில் அவன் வீட்டை விட்டு வெளியேறிய 1978ல் இருந்து அவன் வீரச்சாவடைந்த 1993வரை தாயகத்தின்பரப்பு எங்கும், அதன் பின்னர் தமிழகத்திலும், இந்தியாவிலும், அதற்கு பின்னர் இங்கிலாந்திலும் அங்கிருந்து புறப்பட்டு ஐரோப்பிய நாடெங்கும் திரிந்த போதிலும் ஒரு பொழுதில் விடுதலைக்காக உலகின் இன்னொரு முனையில் மெக்சிகோவில் போய்நின்றபோதிலும் அவன் விடுதலைக்காகவே வாழ்ந்தான் – போரிட்டான் – அலைந்தான் – கற்றான் – பயிற்றுவித்தான் எல்லாமே. இறுதியில் விடுதலையின்மீது கொண்ட அதி உச்சமான விருப்பை வெளிக்காட்டவும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் விடுதலைமீதான இலட்சிய உறுதியை சொல்லவும் தன்னை தீக்குள் ஜோதி ஆக்கினான். அவனதும் அவனுடன் வங்ககடலில் ஆகுதி ஆகிய ஒன்பது மாவீரர்களின் நினைவு என்றென்றும் அந்த அலையின் மீது மிதந்தபடியே இருக்கும். எங்கள் கரையையும் அவை வந்துவந்து தொட்டுபோகும் எங்கள் நினைவுகளை போலவே…
  6. நன்றி நந்தன் அண்ணா ஆண்டுகள் ஆறு கடந்தும் தேசத்தின் குரலின் நினைவுடன்! தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று. தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்கள் இளவயதில் தமிழ் – ஆங்கில எழுத்தாளராகவும் உயர்மட்ட மொழி பெயர்ப்பாளராகவும் தனது பொது வாழ்வைத் தொடங்கிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாவிற்கு முந்திய முப்பது வருட காலம் தமிழீழ விடுதலைப் போரின் மூத்த அரசியல் போராளியாக விளங்கினார். ஆர்வம் அனுபவம் அங்கீகாரம் என்பன அவரை முன்நிலைக்கு இட்டுச் சென்றன. தமிழீழ விடுதலைக்காக அவர் அனைத்து நாடுகளுக்கும் சென்று அரசியற்பயணங்களை மேற்கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரட்டத்தின் உண்மைநிலையினை உலகறிய செய்தார் இன்றும் இவரது பாதையில் புலம் பெயர் தமிழ் உறவுளாகிய நாங்கள் ஈழவிடுதலையினை இலக்காக கொண்டு எமது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்வோம்
  7. ஆண்டுகள் ஆறு கடந்தும் தேசத்தின் குரலின் நினைவுடன்! தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று. தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்கள் இளவயதில் தமிழ் – ஆங்கில எழுத்தாளராகவும் உயர்மட்ட மொழி பெயர்ப்பாளராகவும் தனது பொது வாழ்வைத் தொடங்கிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாவிற்கு முந்திய முப்பது வருட காலம் தமிழீழ விடுதலைப் போரின் மூத்த அரசியல் போராளியாக விளங்கினார். ஆர்வம் அனுபவம் அங்கீகாரம் என்பன அவரை முன்நிலைக்கு இட்டுச் சென்றன. தமிழீழ விடுதலைக்காக அவர் அனைத்து நாடுகளுக்கும் சென்று அரசியற்பயணங்களை மேற்கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரட்டத்தின் உண்மைநிலையினை உலகறிய செய்தார் இன்றும் இவரது பாதையில் புலம் பெயர் தமிழ் உறவுளாகிய நாங்கள் ஈழவிடுதலையினை இலக்காக கொண்டு எமது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்வோம்
  8. தாயக விடுதலைக்காய் தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  9. வடிவேலு சொன்ன மாதிரி பாவம் அவரே கன்பியுஸ் ஆயிட்டார் போல இல்லை பாஸ்??? (அது தெரிந்தா ஏன் அவர் இப்பிடி குப்பை கொட்டுகிறார்) மாபெரும் வெற்றி புலிகளை புலம் பெயர் தமிழர் மறக்க வைத்த பொன்னாள் இது
  10. தமிழர் நினைவேந்தல் அகவம்; சுவிசினால் 27.11.2012 காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கலில் 2012 இன் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நினைவுக்கல்லிற்கான ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல் உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன் நிறைவுபெற்றது. தாயக விடுதலை வேள்வியிலே தம் இன்னுயிர்களை ஈகஞ்செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளை தமிழர் நினைவேந்தல் அகவமும்;, சைவத் தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து மதிப்பளித்தனர். அந்நிகழ்விற்குரிய மகத்துவத்துடன் 27.11.2012 மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இம் மதிப்பளிப்பு நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த இருநூறிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தனர். தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பிறைபேர்க் மாநில குழசரஅ மண்டபத்தில் 27.11.2012 பிற்பகல் 12.45 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் மகளிர் அணியின் பொறுப்பாளர் திருமதி ப.நிர்மலா அவர்கள் ஏற்றி வைத்ததினைத் தொடர்ந்து நிகழ்வு வழமையான அனைத்து அம்சங்களுடனும் உணர்வும் எழுச்சியும் ஒருங்குசேர அனுட்டிக்கப்பட்டது. இத்தேசிய மாவீரர் நாள் நிகழ்விற்கு சுவிசின் அனைத்து மாநிலங்களிலுமிருந்தும் திரண்டு வந்த எம்மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை எம் காவற்றெய்வங்களின் திருவுருவப் படத்துக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளின் தேசியப்பற்றை எடுத்துக்காட்டி நிற்கிறது. இந்நிகழ்வில் தாயகம் சார்ந்த வெளியீடுகள் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்தோடு தமிழர் நினைவேந்தல் அகவம்; சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர் ஞாபகார்த்தப்பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான சிறப்புரையை தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இன உணர்வாளரும் பேராசிரியருமான தாயப்பன் அவர்கள் நிகழ்த்தினார். சுவிஸ் வாழ் கலைஞர்களின் கலைநிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்று தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வானது இனிதே நிகழ்ந்து 18.30 மணிக்கு நிறைவெய்தியது. [size=3] [/size] [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] [/size] WWW.irruppu.com
  11. நாவலருடைய குறும்கதை ஒன்றை பாருங்கள். Politically incorrect என்பதற்கு ஒரு உதாரணம். சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள். இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெருஞ்சிமுள் இருக்கிற காட்டு பார்க்கமாய்ப் போகச் சொன்னான். அப்படியே போய்த் திரிந்து வருந்துகையில், வர்த்தகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என் கடமை" என்று சொல்லி, அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும் படி செய்தான். அன்று முதல் அவர்கள் நல்ல புத்தி அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும் செய்வது கடமை என்று ஒப்புக் கொண்டார்கள்.
  12. தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.” -தேசியத் தலைவர்
  13. [size=2] [/size][size=2] [size=3]மண்ணுக்குள் புதையுண்டிருக்கும் புண்ணிய ஆன்மாக்களே....! நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.....! உங்கள் ஒவ்வொரு உயிர்ப்பிலும்[/size] [size=3]நம்தேசம் விடுதலைபெறும் என்று நாளைய பொழுதுகளின்மேல் நம்பிக்கைவைத்துக் காத்திருக்கின்றோம்......!!![/size][/size]
  14. வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்
  15. வர வர சகாரா அக்கா இந்திய அரசியல் வாதியல் மாதிரி வந்திட்டீங்க பதவி விலகுவேன் எண்டு அவங்க வெருட்டுவாங்க நீங்க பெயர் மாத்துவேன் எண்டு வெருட்ட்டுங்கோ
  16. பிரிகேடியர் தீபன் வேலாயுதபிள்ளை பகீரதகுமார் தமிழீழம் (யாழ் மாவட்டம்) வீரப்பிறப்பு:08.01.1966 வீரச்சாவு :04.04.2009 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின் (வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். http://www.tamilwin.com/photos/full/2009/06/theepan1.jpg" style="margin-left: 1em; color: #000000; margin-right: 1em; text-decoration: none"> <a href=" தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார். 1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும். பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது. தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார். தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர். 1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா. 1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது. 1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார். தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின. ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது. இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார். 1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும். 1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர். ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ். குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன். அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார். 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும். எங்கள் வீரத்தலைவனுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் ஆனந்தபுரத்தில் எதிரியுடன் களமாடி வீழ்ந்த தளபதிகள் மற்றும் போராளிகளுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். [size=1]சாணக்கியன் [/size] பிரிவு தாயகம் www.irruppu.om
  17. சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டு விடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். மூத்த தளபதி கேணல் பால்ராஜ் சொல்கிறார், “புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்” என்று. அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது. இராணுவ அவதானிப்பு நிலையங்கள், தொடர் ரோந்துகள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக் கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் இராணுவச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டு பிடிப்பதே சிரமமான பணியாயிருந்தது. நெருங்க விடாது வெளியே செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவம் தாக்கிக் கொண்டிருந்தான். இந்த நிலமையில் இராணுவத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள் நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப் பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி (அதை இங்கே குறிப்பிடுவது வேவு இரகசியத்தை அம்பலமாக்கிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது) உள்ளே அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளே போக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்று விட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றி வளைக்கப் பட்டு அடி வாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை.செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவு வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் அடி வாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள்.வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டு சென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு இராணுவத்தைப் பிடித்து விட்டதாகவும் அவர்கள் மயங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்த போது அந்த இராணுவத்தினர் என்பது எங்கள் வீரமணியும் சகவேவுவீரனும் என்பது தெரியவந்தது. வெளியே வேவுக்கு அனுப்பிய வீரமணி கிளிநொச்சியில் உள் நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் பெறுமதி வாய்ந்த தகவல்களோடும் சகிக்க முடியாத வாழ்வு அனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வெளி வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக் கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று. செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான். அவனைப் பெற்றவள் அறியக் கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இரு நாளும் தளத்தைச் சுற்றிப் பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்ற போது முடியாமல் போனதாம். ஒவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித் துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும், தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டு வந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான். ஐம்பதாவது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பஸ் விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02 இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத யுத்தகளமும் இல்லை, இவன் வேவுபார்க்காத இராணுவத் தளமும் இல்லை. ஒரு போராளி சொன்னான். “என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லி விட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப் போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு “அத்தஉசப்பாங்” என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்க வைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கு இடையில என்னையும் இழுத்துக் கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான். இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்த போது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் இராணுவம் அவனைச் சல்லடை போட்டுத் தேடியது. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒருபற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்க மாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடை போட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான். ” மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சு போய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்து கொண்டிருந்தம். ஆமி றோட்டால ஷரக்ரரில போனவங்கள், நிப்பாட்டிப் போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சு கொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப் பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் “அறுவார் நித்திரை கொள்ளவும் விடாங்கள் போல கிடக்கு.” எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந்தடியள இழுத்துக் கொண்டு போய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான். “வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப் போட்டுத்தான் சாவான். சொல்லிப் போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் “ச்சா வீணா இழந்திட்டம். வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக் கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் யுத்தகளத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும். வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்று விட்டோம். இராணுவத்தின் தடைக்குள் போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போக வேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டு விட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டு விட்டு சுற்றி வளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டு விட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணிசுற்றி வளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒருமார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண ஓடுங்கடா தடைக்குள்ள” என்று விட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம் போய் புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்ல வேண்டியதாய் காலம் சபித்து விட்டது. “கேடு கெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் பலி கொள்ள முடியாமல் வெட்கம் கெட்ட தனமாய் கடற்கரையில் பலி கொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவு வரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடு போடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்து நிற்க. பிள்ளையார் தன்கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியது போன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன்குறிப்புப் புத்தகத்தில் வேவுத் தகவல் வரைந்து கொண்டு வருவான். எதையென்று. நன்றி: முகப்புத்தக நண்பர்கள் படியுங்கள பரப்புங்கள
  18. பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டான். அந்த நெருக்குவாரங்களைத் தகர்த்து, அடுத்த கட்டத்திற்கு விடுதலைப்போரை முன்நகர்வதற்காகத் தமது உயிரைத் தற்கொடையாக்கி, வெற்றிக்கான பாதையைத் திறந்து விட்டதன் கதாநாயகர்கள் இந்தக் கரும்புலிகள். எனவேதான் கரும்புலிகள் 'எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்' என தலைவர் அவர்கள் கரும்புலிகளைப் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார். உலக விடுதலைப் போராட்டங்களில், தற்கொடையாளர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள், கரும்புலிகளைத் தாக்குதலிற்குப் பயன்படுத்திய முறை தனித்துவமானதாகவே இருக்கின்றது. தாக்குதல் நடைபெறும் சமயங்களில் எதிரியின் மனோபலத்தை உடைக்க, எதிரியின் உதவிகள், விநியோகங்களைத் தடுக்க, தற்பாதுகாப்பை வழங்க, பாரிய கடல்வழி நகர்வுகளைச் செய்ய, தாக்குதல் அணிகளுக்கான தடைகளை உடைத்து முன்நகர்த்த என பலவழிமுறைகளில் கரும்புலிகள் தமது காத்திரமான பங்கினை வழங்கினர். ஒரு தனிப் படையணியாக அவர்களின் எழுச்சியும் வியாபகமும் எப்போதும் வியப்புக்குரியவை. 1987ம் ஆண்டு, யாழ் மாவட்டத்தின் பிரதேசசெயலர் பிரிவுகளில் ஒன்றான வடமராட்சி வடக்கை கைப்பற்றும் நோக்குடன் சிங்களப் படைத்தளபதி கொப்பேக்கடுவ தலைமையில் கடல்வழியாகத் தரையிறங்கிய சிறிலங்கா இராணுவம் "ஒப்பிறேசன் லிபரேசன்" என்ற பெயரில் வடமராட்சியின் பலபகுதிகளைக் கைப்பற்றி நிலைகொண்டது. இதில் ஒரு தொகுதி இராணுவம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் தரிந்திருந்தது. பாடசாலையில் அமைக்கப்பட்ட இராணுவமுகாமைத் தகர்ப்பதற்காகத் தயார்செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தில், கப்டன் மில்லர் தன்னையே கொடையாக்கி தாக்குதலை நடாத்தத் தயாரானார். யூலை மாதம் 5ம் திகதி வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் பாடசாலை வளாகத்தினுள் புகுந்கு கப்டன் மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நாற்பதிற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், எதிர்பாராத இத்தாக்குதலால் இராணுவத்தினரின் உளவுரண் கடுமையாகச் சிதைந்துபோனது. இத்தாக்குதலின் பின் வடமராட்சி படை நடவடிக்கையை சிங்கள இராணுவம் இடைநிறுத்தி வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக அதிகமான இராணுவத்தினரைப் பலியெடுத்த தாக்குதல் இது. இதுவே விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலாகப் பதிவுசெய்யப்பட்டது. இத்தாக்குதலின் பெறுபேறு ஈழவிடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் கனதியான வகிபாகத் தன்மையை வெளிப்படுத்தியது. ஏனெனில் "அதிகபலத்துடன் வந்து மோதும் ஒடுக்குமுறையாளனின் நாடிகளை ஒடுங்கச்செய்யும் அளவிற்கு எதிர்ப்பலப்பிரயோகம் செய்யவேண்டிய கட்டத்தில் அதி உயர் போர்வடிவமாக தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டது" இந்த கரும்புலித்தாக்குதல் உத்தியாகும். ஒரு தாக்குதலில் கடுமையாகப் போரிட்டு, பலபோராளிகளை இழந்து பெறவேண்டிய வெற்றியை, கரும்புலிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தி, குறுகிய இழப்புடன் பாரிய வெற்றியைப் பெறும் அதேவேளை, சிங்களப்படையின் மனோபலத்தைப் பலவீனப்படுத்தும் தன்மைகொண்டதாகக் காணப்பட்டது. மேலும் சிங்களத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைந்த இனம் தனது படையின் இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது ஈழக் களமுனையில் மிகவும் முக்கியமானதாகவிருந்தது. அத்தகைய உயரிய இலக்கினைக் கொண்ட கரும்புலிகள் போரியல், அரசியல் வெற்றிகள் மற்றும் மாற்றங்களுக்கான முதுகெலும்பாக விளங்கினார்கள். விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் கரும்புலிகளாக உருவாகுவது என்பது மிகவும் கடினமானது. கடுமையான பயிற்சிகள், பரீட்சைகள், உளவியல் பரிசோதனைகள், நீண்டகாலக் காத்திருப்புக்கள் என பல கடினங்களைக் கடந்தே கரும்புலிகளாக உள்வாங்கப்பட்டனர். ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் இனவழிப்பும் இளைஞர்களை விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்கச் செய்தது. தியாக உணர்வுடன் இணைந்த இளைஞர்களின் அப்பழுக்கற்ற, தூய்மையான விடுதலையுணர்வு எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கான திடத்தைக் கொடுத்தது. விடுதலைக்காக எத்தகைய கடுமைகளைச் சந்தித்தாலும் 'எனது எதிர்காலச் சந்ததி சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழும்' என்பதே அவர்களின் சுவாசமானது. அதுவே அவர்களை தற்கொடையாளர்களாகவும் உருவாக்கியது. கரும்புலியாக வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளியினதும் உணர்வுகள் தியாகங்களை சில பக்கங்களில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நீண்ட சரிதம் இருக்கும். அதன் ஒவ்வொரு பக்கமும் அவர்களின் தியாகத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழம் என்ற இலட்சியம் மட்டுமே அவர்களின் சுவாசமாக இருக்கின்றது. குறிப்பாக கடற்கரும்புலிகளின் செயற்பாடுகளில் நிறைந்திருக்கும் அர்ப்பணிப்புணர்வும் மன உறுதியும் பெரும் வியப்பிற்குரியவை. மிகமுக்கியமாக பெண் கரும்புலிகளின் பங்களிப்பு என்பது வியப்பானதாகவும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும். முதலாவது பெண்கரும்புலியான அங்கையற்கண்ணி, தாயின் துணையில்லாமல் இரவில் வெளியில் செல்லப் பயப்படும் மனநிலை கொண்டவாராக வாழ்ந்தவர். சிறிலங்காப் படையால் அவரது வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட சம்பவங்கள் அவரைப் போராளியாக்கியது. சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத்தால் நாளுக்கு நாள் துன்பங்களைச் சந்தித்து, கடலுக்குப் போனவர்கள் திரும்பி வருவார்களா? என ஏங்கியபடி வாழ்ந்த குடும்பங்களின் அழுகையையும், கண்ணீரையும் பார்த்த அங்கையற்கண்ணி சிங்களக் கடற்படையின் ஒரு கப்பலை தான் அழிக்கவேண்டும் என்று முடிவிற்கு வந்து அதற்காகத் தயாரானாள். கடுமையான நீரடி நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டு கரும்புலியாக உருவெடுத்து நின்ற அவளுக்கு காங்கேசன்துறையில் தரித்திருந்த இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்கான இலக்கு வழங்கப்படுகின்றது. தாக்குதலுக்குத் தயாரான பின் வீட்டுக்குச் சென்று தாய், தந்தை சகோதரர்களுடன் பிரியப்போகும் தனது இறுதி மணித்துளிகளைச் கழித்தாள். சகோதரிகளிடம் நீங்கள் 'நல்லாப் படிக்க வேணும்' எனக்கூறி விடைபெற்று வந்தாள். இறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனது தோழிகளிடம் 'நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போறவைக்கு அம்மாவால சாப்பாடு குடுக்க ஏலும்' என்று கூறினாள். தனது குடும்பத்தையும் அதற்கு மேலாக தாய்நாட்டையும் நேசித்த அவளின் சில எடுத்துக்காட்டுக்கள் இவை. தாக்குதல் தினத்தன்று கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை போராளிகள் உடன்சென்று வழியனுப்ப, அவர்களிடம் "இலக்கை அழிக்காமல் திரும்பமாட்டன்" எனக்கூறி பொருத்தியழிக்க வேண்டிய வெடிமருந்துடன் தனியே நீந்திச் சென்று, தனது இலக்கை அழித்து வீரச்சாவெய்தினாள் அந்தப் பெண்கரும்புலி. ஈழத்தின் முதலாவது பெண்கரும்புலி. இதுபோல எத்தனையோ கரும்புலிகள், எத்தனையோ தியாகங்கள். தங்களது குடும்பத்துடன் கழிக்கும் இறுதி நிமிடங்களில்கூட அவர்களிடம் இருக்கும் தெளிவும் உறுதியும் சாமானிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. வெற்றிக்காக அவர்கள் பட்ட கடினங்கள் வார்த்தைகளால் உணர்த்த முடியாதவை. தனக்கான இலக்குக் கிடைக்கும் வரை மாதக்கணக்கில் கடற்பரப்பில் காத்திருந்த கரும்புலிகள் எத்தனை பேர். தங்களது இலக்கிற்காக அலைந்து திரிந்து திரும்பிவந்து, மீண்டும் மீண்டும் சென்று தமது இலக்கை அழிக்க உறுதியாகவும் தற்துணிவாகவும் செயற்பட்ட எத்தனையோ கரும்புலிகளின் ஈகங்களை இந்த விடுதலைப் போராட்டம் கொண்டிருக்கின்றது. ரு சமயம், மிக முக்கியமான இலக்கு ஒன்றை அழிக்கும் பணியில் கரும்புலிப் போராளியொருவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, சிங்களப் புலனாய்வுப்படையால் சுற்றிவளைக்கப்படுகின்றான். புலனாய்வுப் படையின் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தப்பித்து ஓடத்தொடங்கினான். என்றாலும் அது கடினமானதாகவிருந்தது. ஒரு கட்டத்தில் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அக்கரும்புலி, அருகிலிருந்த ஒரு பேக்கரியின் பாண் போரணைக்குள் புகுந்து தன்னைக் கருக்கி அழித்துக் கொண்டான். பிறிதொரு சம்பவத்தில் திருகோணமலைக் கடற்பரப்பில் நடந்த மோதலில் காயத்துடன் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம், தன்னிடமிருந்து எதிரி தகவல்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகக் கட்டிலின் சட்டத்தில் தனது தலையை அடித்து வீரச்சாவடைந்தான் ஒரு கரும்புலிப் போராளி. இப்படியெல்லாம் தியாகத்தின் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய நாயகர்கள் இவர்கள். முதலாவது கரும்புலித் தாக்குதலை நடாத்தி விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிணாமத்திற்கு வித்திட்ட கப்டன் மில்லர் முதல் முள்ளிவாய்க்காலின் ஆரம்பம் வரை முன்னூற்றி இருபத்து இரண்டு கரும்புலிகள் வீரகாவியம் படைத்துள்ளனர். 1990ம் ஆண்டு அபித்தா, எடித்தாரா என்ற கட்டளைக் கப்பல்களைத் தகர்த்து முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடாத்திய மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் கரும்புலிகள் அணியின் ஆளுகை கடற்பரப்பிலும் ஆரம்பித்தது. பரந்த கடல்வெளியில் நவீன கட்டளைக் கப்பல்களுடன் தனது ஆக்கிரமிப்பை விரித்திருந்த சிறிலங்கா கடற்படையை துரத்தி அடித்தவர்கள் கடற்கரும்புலிகள். விடுதலைப்புலிகளுக்கான விநியோகங்களுக்கும், தமிழ் மீனவர்களின் சுதந்திரமான மீன்பிடிக்கும் காப்பரணாக விளங்கியது கடற்புலி. அந்தக் கடற்புலியின் வளர்ச்சிப் படிக்கட்டாக விளங்கியவர்கள் கடற்கரும்புலிகள். எத்தனையோ கட்டளைக் கப்பல்கள், நீருந்து விசைப்படகுகள், பீரங்கிக் கப்பல்களைத் தகர்த்து, சிறிலங்கா கடற்படையை ஈழக்கடல் எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்தார்கள். வித்தாகிப்போன கரும்புலிகளில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கடற்கரும்புலிகள். படிப்படியாகப் பரிணாமம் அடைந்த கரும்புலிகளின் அணி, விமானப்படைத் தளங்களை இலக்கு வைத்தது. கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசி, கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவித்த விமானங்களை அதன் இருப்பிடத்திலேயே அழிக்கத் தீர்மானித்து 1994ம் ஆண்டு பலாலி விமானத்தளத்திற்குள் நுழைந்த ஐந்து கரும்புலிகள் பெல்-212 உலங்கு வானூர்தியையும் பவள் கவச வாகனத்தையும் அழித்து புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தனர். இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டன. கரும்புலிகளின் உச்சகட்டச் சாதனையாக நடைபெற்ற இத்தாக்குதலில் சிறிலங்காவின் பொருண்மியவளம் ஏறத்தாழ முழுமையாகச் சிதைக்கப்பட்டது. வெடிமருந்து நிரப்பிய வாகனத்துடன் இலக்கை அழிக்கப் புறப்பட கரும்புலிகளின் பயணம், படிப்படியாக கடலிலும், விமானப்படைத் தளங்களிலும் வியாபித்து, தாக்குதல் அணிகளாக உருவாக்கம் பெறுமளவிற்கு அவர்களின் பங்களிப்பு வளர்ந்து கொண்டே சென்றது. ஆட்லறிகள், ஆயுதக்களஞ்சியம், கட்டளைப்பீடம் என எல்லா இலக்கிலும் தமது உயிரை ஆயுதமாக்கினார்கள். ஒவ்வொரு தாக்குதலும் கரும்புலிகளின் அர்ப்பணிப்பில்தான் ஆரம்பிக்கும். தனித்தனியாகவும் குழுக்களாகவும் தமது இலக்கைத் தேடிச் சென்றார்கள். உலகில் எந்த ஆயுதத்தாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததும் எத்தகைய தொழில்நுட்பத்தாலும் தடுக்கப்பட முடியாததுமான கரும்புலிகளின் மனோதிடம்தான் எமது மக்களின் வலிமையான ஆயுதபலமாக இருந்து போராட்டத்தினை திடமாக முன்நகர்த்திச் செல்ல வழிவகுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தங்களது ஒவ்வொரு வெடிப்பினூடும் முன்நகர்த்திச் சென்ற கரும்புலிகளின் ஆன்மபலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத பலமாகத் திகழ்ந்தது. போராளிகள்கூட பல தருணங்களில், தமது தியாகம் கள முனையில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எண்ணிய சந்தர்ப்பங்களில், தற்கொடையாளர்களாகச் செயற்படத் தவறுவதில்லை. உதாரணமாக ஓயாத அலைகள்-02 தாக்குதல் நடவடிக்கையின்போது பரந்தனில் இருந்து கிடைக்கும் உதவியைத் தடுக்கும் நோக்குடன், தளபதி பால்ராஜ் தலைமையில் உருவாக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியைத் தலைமைதாங்கிய லெப்.கேணல் செல்வி மற்றும் லெப்.கேணல் ஞானி ஆகியோரின் இடங்களில் தீவிர சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. முன்னேறிய இராணுவம் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த நிலைகளைச் சுற்றி வளைத்துவிட்டது. எதிரிக்குள் இருந்த அவர்கள் நிலைமையை உணர்ந்து 'நாங்கள் நிற்கும் அப்பகுதிக்கு ஷெல்லை அடியுங்கோ எங்களைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்தான் எதிரியை அழிக்கமுடியும்' எனக் கூறினர். அவர்கள் எதிரிக்குள் நின்று தமது தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்க அப்பகுதிக்குள் செறிவாக மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் எதிரி அழிக்கப்பட்டான். அதேவேளை அவர்களும் வீரச்சவைத் தழுவிக்கொண்டனர். பிறிதொரு சம்பவத்தில் மாங்குளம் ஒலுமடுவில் எமது நிலைகளை அழிக்க ராங்கிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. அதில் ஒரு ராங்கி எமது நிலைக்கருகில் வந்துவிட அந்த நிலையில் இருந்த கப்டன் அன்பழகன் தன்னுடன் நின்ற சகபோராளிகளை காப்புச்சூடு வழங்குமாறு கூறிவிட்டு, கைக்குண்டுடன் பாய்ந்து சென்று ராங்கியில் ஏறி குண்டைப்போட்டு ராங்கியை அழித்து தானும் வீரச்சாவடைந்தான். இப்படி பல சண்டைகளில் படையணிப் போராளிகள் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கரும்புலிகளைப் போன்று செயற்பட்டு தாக்குதலின் பிரதான வெற்றிக்காகத் தங்களை ஆகுதியாக்கினார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் இவ்வாறு பல தியாகங்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர்கள் தமது சுகங்களை துறந்து புனித இலட்சியப் பிரவாகத்திற்கு வித்திட்டார்கள். கரும்புலிப் போராளிகள்தான் இந்த இலக்கை அழிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அதைச் செய்து வீரச்சாவடைந்த சந்தர்ப்பங்கள் பல. அவர்கள் தங்களது சந்தோசமான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை. இன விடுதலைக்கு என்ன தேவையோ அதற்காக எந்த ஈகத்தைச் செய்யவேண்டுமோ அதை எந்த வடிவில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ததன் வெளிப்பாடாக இந்தப் போராட்டம் உயர்ந்து நின்றது. இன்றுவரை முகம் தெரியாமல் தம்மை தற்கொடையாக்கிய எத்தனை கரும்புலிகளின் தியாகம் பேசப்படாமல் இருக்கின்றது. போராளி என்பதற்கான எந்தவித பதிவும் இன்றி, கல்லறையோ, நினைவிடமோ இல்லாமல், இறந்துபோன செய்திகூட தெரிவிக்கப்படாத மறைமுகக் கரும்புலிகளின் அர்ப்பணிப்பு மானிட நியதிகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் விளம்பரத்திற்காக ஈகம் புரியவில்லை. விடுதலைக்காக தமது அடையாளங்களைக்கூட மறைத்த உன்னத சீலர்கள்.இலக்குடன் சேர்ந்து தம்மையும் சிதறவைத்து ஆகுதியான அந்த ஆத்மாக்களின் வித்துடல்கள் எமக்கு வருவதில்லை. ஆனால் அவர்களின் குருதி ஈழமண்ணோடு கலந்திருக்கின்றது. ஈழக்காற்றில் அவர்களின் சுவாசம் நிறைந்திருக்கின்றது. அவை எப்போதும் பிரித்தெடுக்க முடியாதவை. வணக்கத்துக்குரிய அவர்களின் தியாகம் இன்றைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைவுகூரப்பட வேண்டியது. www.Tamilkathir.com
  19. [size=4]பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலிகள். 'பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்." தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே.பிரபாகரன். எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலு...ம் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது தமதுடலோடு, தமதுயிரோடு 'தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக் கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையைத் தணிக்க, எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையை தணிக்க, எதுவும் செய்யவும் எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றை சாதித்துஇருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள். நெஞ்சு புல்லரிக்;கும், உயிர் வேர்க்கும். அவர்கள் கண்களுக்கு முன்னால் விரி;ந்து கிடந்த இன்றைய ஷநவீன நாகரீகத்தின் தாலாட்டில்தான் உறங்கினார்கள். புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் உலாவந்தார்கள்.இவற்றுக்குள் வாழ்ந்தும் எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது. வெளிப்படையாக அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்தபோதும், உள்ளுக்குள் இதய அறைகளின் சுவர்களுக்குள் தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அப+வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்;குள் புகுந்தது. பகைவனை அழிக்கும் தனது நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்ந இந்த அதிசய மனவுணர்வுவை எப்படிஅவர்கள் பெற்றார்கள். தாயகத்திற்காக செய்யப்படும் உயிர் அர்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் உண்மை.ஆனாலும் இங்கென்றால் வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை பரிப+ரணமான ஒரு போர்ச் சூழ்நிலை. அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு............ அது முற்றிலுமே ஒரு தலைகீழான நிலமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி அவற்றுக்குத் தீனி போட்டு சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது. அதில் படுத்துறங்கி பகை தேடி வேவு பார்த்;து ஓழுங்கமைத்து குறி வைத்து, வெடி பொருத்தி புறப்பட்டு, மனிதக்குண்டாகி............ எல்லாவற்றையும் தானே செய்வதோடு பகையழிக்கும் போது தன்னையழிக்கும் போதும் கூட தன்பெயர் மறுத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்பணத்தில் அது உன்னதமானது. அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது.? உண்மையில் இவையேல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளேதான். நம்புதற்கரிய அற்புதங்கள்தான்... மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்த புனிதர்கள், தான் அழியப்போகும் கடைசிப் பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள், 'முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட 'பிரபாகரனின் குழந்தைகள். தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்..... 'நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்" கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார் இது வெறுமனே அவரது வாயில் இருந்;து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது. உண்மையிலே என்றோ ஒருநாள் இதுதான் நடக்கும்" என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்;தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழி;ப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு. கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம்- உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள். கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்;;த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும். ' நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன் " ===================================================== மறைமுகக் கரும்புலிகள் பற்றிய ஒரு பாடல் வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும் புலிகளின் கல்லறை வெளியில் இல்லை காலப் பெருவெளி நீளும் பொழுதிலும் கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு வாழும் தலைமுறை சாகும் கரும்புலி வாழ்வை அறிவதுமில்லை -இவர் வாசம் புரிவதுமில்லை கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர் சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள் தோழர் நெருப்பென ஆவார் நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள் விடிவினுக்காகவே இடியென எதிரியின் முடிவுடன் அவருடல் சாயும் -அவர் மூச்சும் பெரும் புயலாகும். எழுதியது. -:புதுவை இரத்தினதுரை முகம் காட்ட மறுத்து முகவரி மறைத்து சென்ற கரும்புலி வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்[/size]
  20. வீரவேங்கைகளுக்கு வணக்கங்கள். இப்பிடி பிரமிக்க தக்க பல வெற்றிகளை பெற்றவர்கள் நாம். மீண்டும் வெல்வோம் என நம்பிக்கை கொள்வோம்.
  21. $ ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்ப்பது தற்கொலைக்கு ஒப்பானது! -இரா.துரைரத்தினம்.
  22. (மூன்று நாட்கள் தொடர்ந்த பெரும் சமரில் விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதிகள், கட்டளைதளபதிகள், தாக்குதல் தளபதிகள், மகளிர் படையணி தளபதிகள் என 700 இற்கும் மேற்பட்ட போராளிகளின் இரத்தத்தில் தமிழர் தேசம் சிவந்த நாட்கள் அவை.. ) வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.