Everything posted by துளசி
-
ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான 69 மாவீரர்களின் நினைவு நாள்
அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.
-
மட்டக்களப்பில் வீரகாவியமான 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்
- பெயர் மாற்றங்கள்.
- கருத்து படங்கள்
-
கட்டுநாயக்கவில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
அனைத்து கரும்புலிகளுக்கும் வீர வணக்கங்கள்.
-
கருத்து படங்கள்
இதே மனைவி தாயாகும் போது தன் பிள்ளைகளுடன் கோவித்து கொண்டால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பாள். எனவே தாய் பிள்ளை உறவை கணவன் மனைவி உறவுடன் ஒப்பிட முடியாது. எனவே மனைவியையும் நேசிக்க வேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போக்குவரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
-
பெயர் மாற்றங்கள்.
என்னை "காதல்" என்று கூப்பிட தயங்குவோருக்காக "துளசி" என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் ஏனையோர் என்னை "காதல்" என்றே அழைக்கிறார்கள். எனவே "காதல்" என்ற பெயரை வேறு எவருக்கும் இனியும் வழங்க வேண்டாம் என்று நிர்வாகத்தினரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கறுப்பி அண்ணாவுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நன்றி நாரதர் அண்ணா, தேவையில்லாமல் எவர் கவிதைகளும் வாசிக்க போக மட்டன். மற்றவர்களின் கருத்து கேட்ட பின்னர் தான் நான் வாசிப்பேன். ஆனால் யாழ் இணையத்தில் நல்ல கவிதைகள் மட்டும் தான் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையில் நான் வாசிப்பேன். வாசித்து விட்டு கருத்து எழுதாமல் இருந்தாலும் வாசித்தது வாசித்தது தான். நன்றி புங்கையூரன் அண்ணா, கிருபன் அண்ணாவையும் யாழ் இணையத்தையும் பற்றி யோசிக்கும் நீங்கள் அவரது கருத்து சுதந்திரம் எம்மை பாதிக்கிறது என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இதே கருத்து சுதந்திரத்தை வைத்து பலரும் பல திரியிலும் கருத்து எழுதுவார்கள். அப்பொழுது நிர்வாகத்தினருக்கு புரியும். யாழ் ஒருபக்கம் விடுதலையை நோக்கி பயணிக்கிறது என்று சொன்னேனே தவிர யாழ் விடுதலைக்கானது மட்டும் என்று நான் சொல்லவில்லை. நன்றி விசுகு அண்ணா, உங்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு. உங்களினதும் யாயினி அக்காவினதும் கோரிக்கையை ஏற்று இத்திரியிலிருந்து விலகி இருக்கிறேன்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நன்றி உங்கள் பதிலுக்கு. வெளிவேசதாரிகளை விட வெளிப்படையானவர்கள் பரவாயில்லை தான். அதற்காக இணையதளத்திலும் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றால் ஆபாசத்தை தூண்டும் படங்களை இணைக்க வேண்டாமென்று ஒரு கள விதியை ஏன் கொண்டு வந்தார்கள் என்று தான் தெரியவில்லை. அதையும் வெளிப்படையாக இணைக்க விட்டிருக்கலாமே? அப்படி விடாதது ஏன் என்று உங்களாலும் ஊகிக்க முடியவில்லை. சபை நாகரீகம் கருதி ஒருவருடன் வாடா போடா என்று கதைக்காமல் விடுவது போல் இணைய தள நாகரீகம் கருதி சில விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து.... நிர்வாகத்திடம் ஒரு திரியில் கூறியிருக்கிறேன். நிர்வாகத்தின் பதில் வந்த பின் அவர்களுக்கு பதிலளிக்கிறேன். நீங்களே மறைமுகமாக சொல்கிறீர்கள் இது ஆண்களுக்கான இணையதளம் என்று. ஆண்கள் உங்கள் கவிதையை ரசிப்பார்கள் தானே? ரதி அக்கா பெண் தானே என்று என்னை கேட்க வேண்டாம். அவர் ஆணா பெண்ணா என்று எனக்கு தெரியாது. ஆனால் யாழுக்கு பல பெண் வாசகர்கள் உள்ளனர். நன்றி உங்கள் கருத்துக்கு.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இது உங்களுக்கு ஆபாசமாக தெரியவில்லையா? இங்கு நல்ல மாதிரி எழுதும் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் ஒரு இணைய தளத்தில் எழுதும் போது கொஞ்சம் அடக்கி எழுத வேண்டும். இல்லை அனைத்தையும் எழுத முடியும் என்றால் ஒரு பெண்ணை முழுக்க முழுக்க விபரிச்சு எழுதுவினம். அந்த அளவுக்கு அவர்களின் மன ஓட்டம் இருக்கும். இன்று யாழ்களத்தில் பல திரிகளில் பலர் படு கேவலமாக கருத்து எழுதுகிறார்கள். இதையெல்லாம் இன்று அனுமதித்தால் நாளைக்கு இவற்றை வாசிப்பதற்கே இளைஞர் கூட்டம் யாழுக்கு படையெடுக்கும். அந்த பெயர் யாழுக்கு தேவையா?
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கிருபன் அண்ணா பல நல்ல கவிதைகள் உள்ளபோது நீங்கள் ஏன் இப்படியான கவிதைகளையும் தெரிவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்படியான கவிதைகள் பிடித்திருந்தால் நீங்கள் மட்டும் ரசித்து விட்டு போங்கள். எதற்கு மற்றவர்களும் பார்க்க வேண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இல்லை போட்டே தீருவேன் என்றால் நீங்கள் தனியாக ஒரு இணையதளம்/blog ஆரம்பித்து இப்படி கவிதைகளை அங்கு போடலாமே... எதற்காக இவற்றை போட யாழ்களத்தை பயன்படுத்துகிறீர்கள்? இது என்ன ஆண்களுக்கான இணைய தளமா அல்லது ஆபாச கதைகள் கூறும் இணைய தளமா? பெண்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு கண்ணைமூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? எல்லா திரியிலும் குறை கண்டுபிடிக்காமல் பாராட்டி விட்டு போவோம் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குறை கண்டுபிடிக்க தூண்டுகிறீர்கள். என் மேல் மற்றவர்கள் மதிப்பு குறைந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் பதில் வேண்டும்.
-
கருத்து படங்கள்
- நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம்.- கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
கரும்புலி கப்டன் மில்லருக்கு வீர வணக்கங்கள்.- மனதைக் கவர்ந்த கவிதைகள்
நல்ல கவிதைகள். நானும் இத்திரியுடன் இணைந்திருக்கிறேன்.- பெயர் மாற்றங்கள்.
தனிநபர் ஒருவருக்கு அந்த பெயரை சூட்ட தான் "பெயர்மாற்றங்கள்" திரியில் எம்மால் வேண்டுகோள் விடுக்க முடியும். அந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த தான் நிர்வாகத்தினருக்கும் அனுமதி உண்டு. ஒரு இணையத்திற்கே அந்த பெயரை சூட்ட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு இணையம் ஆரம்பித்து அதற்கு இத்தலைப்பை சூடுங்கள். நாங்களும் மகிழ்வோம். இதோட இந்த திரியிலிருந்து நான் விலகிறன். சேர்க்கப்பட்டுள்ளது. பி.கு:- அர்ஜுன் அண்ணா இந்த திரிக்கு வருவார் என்று தெரிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டன்.- பெயர் மாற்றங்கள்.
அர்ஜுன் அண்ணாவின் கருத்திலிருந்து பெற்றுக்கொண்ட சொல் என்பதால் இக்கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் தான் விரும்பும் ஒருவருக்கு இப்பெயரை சூட்டட்டும். சேர்க்கப்பட்டுள்ளது. வேறொரு திரியில் அர்ஜுன் அண்ணா "மொக்கை" என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். அதை தான் இசை அண்ணா தூக்கி வந்து விட்டார் என்று நினைத்து சொன்னனான்.- பெயர் மாற்றங்கள்.
பெயரை மாற்றியிருந்தமைக்கு நன்றி.- பெயர் மாற்றங்கள்.
"துளசி" என்ற பெயருக்கு ஆதரவளித்த தமிழரசு அண்ணா, பகலவன் அண்ணாவுக்கு நன்றி. என்னை எதுவும் சங்கடப்படுத்தவில்லை. கவலை வேண்டாம். (ஆனால் துளசி செடியின் குணத்தையும் என் குணத்தையும் ஒப்பிட முடியாது. அது பிறகு துளசி செடியை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து விடும். துளசி செடி தான் எப்பொழுதும் தூய்மையானது, புனிதமானது) என் பெயரை "துளசி" என்று மாற்றும்படி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.- பெயர் மாற்றங்கள்.
எதை வைத்து இப்படி சொன்னீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு விளக்கம் தர வேண்டியது என் கடமை. சில விவாதங்களை தொடர்ந்து சென்று அவர்களுக்கு உதாரணமாக என் சொந்த பிரச்சினையை ஒரு திரியில் கூறினேன். அது அவர்களை மன சங்கடப்படுத்தியிருக்கும். பின்னர் தான் ஏன் கூறினேன் என்று யோசித்தேன். எனவே வேறோரிடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கு நான் யாழில் இருப்பது தெரியாது என்று உண்மை சொல்லி விட்டு இங்கு male ஆக எனது அண்ணா open பண்ணி என்னிடம் கையளித்தார் என்று பொய் சொன்னதை தொடர்வது சரியா என்று நினைத்து அதற்கு மன்னிப்பு கேட்டேன். காதல் என்பது ஓர் உணர்வு எனவும் அதனை பெயராக வைத்தது காதலை கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறதென்று நினைத்து சிலர் என் பெயரை சொல்லி எழுதுவதில்லை. அதற்கு பதிலாக "கா..." என்று அழைக்கிறார்கள். அது தான் பெயரை மாற்ற யோசித்தேன். பி.கு:- நீங்கள் அறிவாளி, சிந்தனை திறனுள்ளவர், பல ஆற்றல்கள் கொண்டவர். பலருக்கு உதவி செய்திருக்கிறீர்கள். உங்கள் மூலம் பலர் பயன் பெற்றிருக்கிறார்கள் (நான் உட்பட). ஆனால் இந்த விடயத்தில் தெரியா தனமாக இப்படி கருத்து எழுதி விட்டீர்கள் என்பது என் கருத்து. நன்றி.- பெயர் மாற்றங்கள்.
இந்த ஆலோசனை எதற்கு என்று கூறுவீர்களா?- பெயர் மாற்றங்கள்.
எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள். நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒருவரும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லேல்லை என்று ரொம்ப தான் கவலைப்பட்டு போனியளோ? 24 ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடிய உங்களுக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள். (அதுக்கு முந்தியே நன்றி சொன்னதற்கு நன்றி ) - நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.