தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு சார்பாக ஆர்பாட்டம்
210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூர், கோல்மாநகர், நான்கு முனை சாலையில் 05.01.2014 அன்று காலை 9 மணி தொடங்கி மாபெரும் தொடர்முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.
(facebook)
மூணாறில் தமிழர்களை தீவிரவாதிகளை போன்று சித்தரித்து அடக்குமுறைகளை ஏவிவிடும் கேரளா காங்கிரசு அரசை கண்டித்தும் தற்போது சிறையில் இருக்கும் 9 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்ட களப்புலி லெ.மாறன் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் முருகானந்தம், சிவகங்கை நகர ஒருங்கிணைப்பாளர் வேங்கை, மாவட்ட பொருளாளர் லெனின், காரைக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம்,
கண்டன உரை: எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்
(facebook)