Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. இன்று காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக நடந்த தமிழகம், புதுவை தழுவிய பொது வேலை நிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழர் வரலாற்றில் பொறிக்கப் படவேண்டிய தமிழின எழுச்சி நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளில் தமிழர் போராட்டம் குறித்து செய்தி அறிந்த வணிகர்கள் தங்கள் கடைகளை தாங்களாகவே அடைத்தனர். கடை அடைக்காத மற்றவர்களுக்கு ஊடங்கங்கள் சரிவர செய்தி கொண்டுபோய் சேர்க்கவில்லை என்பது தெரிகிறது. மதவாத பாஜக கடைஅடைப்பு போராட்டம் அறிவித்தால் அது தினத்தந்தியில் முதல்பக்க செய்தி . ஆனால் இன நலத்திற்கு தமிழர்கள் போராட்டம் அறிவித்தால் அதை உள்ளே சிறிய செய்தியாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி நாளிதழ். தமிழர்கள் போராட்டம் என்றால் மட்டும் இந்த ஊடகங்களுக்கு கசக்கிறது போலும். எனினும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் , இயக்கங்கள், அமைப்புகள் நடத்திய தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழகத்தையே முடக்கியது என்றால் அது மிகையல்ல. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்வண்டி மறியல் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை யாரை கைது செய்வது யாரை விடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர். தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இப்படியான மிகப்பெரிய, ஒரே நாளில் நடத்தப்பட்ட தொடர்வண்டி மறியல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சட்ட மன்ற தீர்மானம் தமிழர்களின் கூட்டு உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது (தீர்மானத்தால் பயனில்லை என்றாலும்). தமிழர்கள் இப்போது அனைத்தும் செய்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது , இதே உணர்வை தக்க வைத்துக் கொண்டு துரோகிகள் , எதிரிகளை இனம் கண்டு அவர்களை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துதல். அத்தோடு நில்லாமல் இன்று களமாடியது போல் ஒற்றுமையுடன் தமிழர்கள் ஓரணியில் தேர்தலில் களமாடி தமிழர் அரசை உருவாக்க வேண்டும். தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடித்தல், பின்பு இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கைக்கு முடிவு கட்டுதல் இவை இரண்டும் தான் தமிழர்களின் அடுத்த கட்ட இலக்காக இருத்தல் வேண்டும். இன்று போராட்ட களம் கண்ட அத்துணை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துகள் ! Rajkumar Palaniswamy (facebook)
  2. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12th November 2013 ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, இன்னும் மிஞ்சி இருக்கிற ஈழத் தமிழர்களுக்கு கொடுமைகள் பல இழைத்து வரும் இலங்கை அதிபர் இராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, வணிகர் சங்கங்கள்,ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகள், கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெறுவதற்கு ஆதரவாக இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இடிந்தகரையில் முன்னூறு பேர் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன. . லட்சக்கணக்கான தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். போர்க்குற்றக்கரைபடிந்த இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்த அறுகதை அற்றது. காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் இந்தியா இழந்த மரியாதையை மீட்டெடுக்க முடியும் . இனப்படுகொலை செய்த இராஜபக்சேவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியும். 600க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கொன்ற, மீனவர்களை இன்றும் அடித்து விரட்டுகிற இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. http://newsalai.com/details/tamil-nadu-news-11-12-2013-idinthakarai-perotest-for-commonwealth.html#sthash.vcsRmWBR.dpbs
  3. நாம் தமிழர் கோவை மாவட்டம் 12/11/2013 தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே, மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவும், காமன்வெல்த் நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க இந்திய அரசு வலியுறுத்த கோரி தொடர்வண்டி மறியல் போராட்டம்,,, (facebook)
  4. ஈரோட்டில் மாணவர் சிலம்பரசன் தலைமையில் 50 மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ! கன்யாகுமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர் . (facebook)
  5. தாம்பரத்தில் இரயில் மறியல் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும் (facebook)
  6. நாகை மாவட்டம் இரயில் மறியல் அறப்போர் ... சங்கரன்கோவிலில் நடந்த இரயில் மறியல் .. (facebook) தூத்துக்குடியில் இரயில் மறியல் தூத்துக்குடி மாவட்டம்-தூத்துக்குடியில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எÞ.ஜோயல் மறறும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், கழகத்தினரும் பெருமளவில் கலந்துகொண்டனர். (facebook)
  7. இராமநாதபுரத்தில் நடந்த அறப்போரில் ம.தி.மு.க தோழர்கள் ... (facebook) காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கட்சி சார்பில் இரயில் மறியல் அறப்போரட்டம் . தஞ்சையில் மறுமலர்ச்சி.தி.மு.கழக மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர்.க . நல்லியகோடன் தலைமையில் இரயில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் கி .கார்த்திகேயன் உட்பட ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது . Sheik Basheer AhmedTamil (facebook) திருப்பூரில் நடந்த இரயில் மறியலில். திருப்பூரில் நடந்த இரயில் மறியலில் ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் அண்ணன் ஆர்.டி.எம். தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு கட்சிகள் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு அனைவரும் கைதாகினர். கைதான அனைவரும் பல்லடம் ரோடு, காதர் சலீம் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர் . Gowri Shankar (facebook) இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் அரியலூரில் வைகை விரைவு ரயிலை மாவட்ட கழக தோழர்கள் மறித்த பொழுது... (facebook)
  8. மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர். மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாÞகரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மகபூப்ஜான்மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர். சென்னை சென்ட்ரல் இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர். அதேபோன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மறுச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார், மாவட்டச் செயலாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாÞ, டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாÞகர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எÞ.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோகரன, வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாÞ, வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். (facebook)
  9. கன்யா குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக திருச்சங்கோடு மற்றும் ராசிபுரதில் 50 மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் (facebook)
  10. தற்போது எழும்புர் ரயில் நிலையம் மறியல் (facebook) தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஒப்பாரி போராட்டம். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று 12/11/2013 காலை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார். தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால் உள்ளிட்டோர் உரை ஆற்றினர் . இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். (facebook) கோவை நாம் தமிழர் கட்சியினர் தொடர்வண்டி மறியல். (facebook) நாமக்கலில் 60 மாணவர்கள் சாலை மறியல் ! கன்யா குமரியில் மாணவரகள் தாக்கப்பட்டதால் நாமக்கலில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். (facebook)
  11. தொடர்வண்டி மறியல் மற்றும் சாலை மறியல் கைது நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக களப்புலி லெ.மாறன் தலைமையில் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் 60 பேர் கைது ......... சிவகங்கை மாவட்டம் சார்பாக தேவகோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.... தொடர்புக்கு:9943412507 (facebook)
  12. கன்னியாக்குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதும், அவர்களிடத்தில் காவல்துறை நடந்து கொண்ட விதமும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. (இரு நாட்களாக இணையத்தில் எழுத இயலாது போயிற்று.) Prabhakaran V Prabha PK, மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன், விருதை பிரவின், நெய்வேலி காசி , விருதை தினேஷ், நெல்லை முகம்மதுகான் ஆகியத் தோழர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு இன்று தோழர்களுடன் பிற இடங்களில் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். தோழர்களுக்கு வாழ்த்துக்கள். தோழர்கள் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு சென்று வழக்குகளை கையாண்டார்கள். கடுமையாக தாக்கிய அரசிற்கு பதில் சொல்லும் விதமாகவே இன்று நடக்கும் முழு அடைப்பு சிறந்த பதிலாக இருக்கிறது. கட்சிகள் எல்லை கடந்து அனைவரும் ஒன்றாக களம் இறங்கி இருப்பது தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கும், இந்திய தேசிய கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது.. தொழிற்சங்கத்தினை கையில் வைத்துக்கொண்டு பஜனை மடத்தினைப் போல நடத்திகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பிழைப்புவாதத்தினையும் தமிழ்ச் சமூகம் வரும்காலத்தில் வெற்றிகொள்ளும். தமிழ்நாடு வணிகர் சங்கம், மதிமுக, தமுமுக, த.வா.க, நாம் தமிழர், எஸ்டிபிஐ, த.பெ.தி.க, ததேபொக, திவிக, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கைகோர்த்து கண்ட போராட்டம் பெரிய கட்சிகள் மட்டுமே நிகழ்த்திய கடையடைப்பு போராட்டத்தினை மக்கள் கோரிக்கைக்காக வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறது. இந்திய தேசியப் பற்று மயிறுக்குச் சமம் என்று களம் காண்போம். இந்திய தேசியவாதிகள் முகத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயகப் போராட்டங்கள் எட்டி உதைக்கட்டும். இந்தப் போராட்டங்களை வலிமையானதாக மாற்றிய அய்யா.வெள்ளையன் அவர்களுக்கு எமது வணக்கங்களும், நன்றிகளும். தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக்த்தின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்போம். கைகோர்ப்போம். தமிழக-இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு ஒடுக்குமுறைகள் உடைக்கப்படட்டும். Thirumurugan Gandhi (facebook)
  13. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்பதை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி தோழர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் பரபரப்பு தோழர்கள் கைது.... (facebook)
  14. இலங்கையில் நடைபெற இருக்கும் பொது நல (காமன்வெல்த்) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நாம் தமிழர் கட்சி சாக்கோட்டை ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... மாவட்ட களப்போராளி லெ.மாறன் தலைமையில் நடைபெற்றது பொறுப்பு:தமிழ் திரு.அண்ணாதுரை,ஒருங்கிணைப்பாளர்,சாக்கோட்டை ஒன்றியம் கண்டன உரை : தமிழ் திரு. திலீபன் அவர்கள் கண்டன உரையாற்றினர் (facebook) காமன்வெல்த் இலங்கையில் நடப்பதை கண்டித்தும், அதில் இந்தியா பங்கேற்ப்பதை கண்டித்தும்.. கோவையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த உண்ணாவிரதம்.. - (facebook)
  15. நெய்வேலி அம்பேத்கர் சதுகத்தில் நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது உணர்வாளர்கள் பெரும் அளவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் (facebook)
  16. 11/11/2013 காமன் வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாதென வலியுறுத்தி திருச்சி,கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் 50பேர் கைது..... (facebook)
  17. காமன்வெல்த் மாநாட்டுக்கு சல்மான் குர்ஷித் செல்ல வேண்டும் Vs இந்தியா தரப்பில் யாருமே செல்லக் கூடாது - காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணியுடன் மக்கள் விடுதலை தோழர் சதீஸ் அனல் பறக்கும் விவாதம்... சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு... கண்டிப்பாக பாருங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்... (facebook)
  18. இனக்கொலை இலங்கையில் நடங்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு முழுவதுமாக புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை டி.எல்.எப்ஃ கட்டிடம் முன்பு ஐ.டி. துறையினர் 100 பேர் பங்கெடுத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. (facebook)
  19. எம் இரத்ததை குடித்த நாட்டில் காமென்வெல்த் மாநாடா... இலங்கையில் நடைபெறும் காமென்வெல்த் மாநாட்டை எதிர்த்து நாளை நடைபெறும் 12/11/13 கடையடைப்பு மற்றும் பொதுவேலை நிறுத்தம் நிகழ்வுக்கு மக்களிடமும்,வியாபார நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க துண்டுப்பிரசுரம் நாம் தமிழர் கட்சியின் திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக விநியோகம் செய்யப்படுகிறது..... எம் அன்பு உறவுகளே தயவுசெய்து நாளை நடைபெறும் போராட்ட களத்தில் அனைவரும் களமாடுங்கள் ..... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.... (facebook)
  20. 09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு.. நாம் தமிழர் தம்பிகள் கைது.. 10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த கூடாது இந்தியா கலந்துகொள்ள கூடாது என்று வலியுறுத்தி ரயில் மறியல்.. கைது செய்யப்பட்ட நாம் தமிழர் உறவுகள் மண்டபத்தில் அடைக்கப்ட்டிருக்கிரார்கள் இலங்கை யை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி ...நீலமலை நாம்தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகைப்போர் ...கைது (facebook) மதுரை வழக்கறிஞர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்ற செந்தமிழன் சீமான்.. http://www.youtube.com/watch?v=2ej02Kd5HJs&feature=youtu.be (facebook)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.