Everything posted by அக்னியஷ்த்ரா
-
பாவத்தின் சம்பளம்
1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)
-
பாவத்தின் சம்பளம்
மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
வேற லெவல் சிங்கம் .....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலி அண்ணை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்களை அள்ளிவழங்கிய அனைத்து யாழ் அன்புள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஆக இழப்பை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய இழப்பா சிறிய இழப்பா என்று முடிவு செய்யச் சொல்கிறீர்கள்,உரிமை அரசியல் போய் இனி இழப்பரசியல் போல ...😂 எதையாவது பெற்று நமது இருப்பையாவது தக்க வைப்போம் என்பதற்கு தயாரில்லை, மக்களில் புரட்சி,போராட்டம் வெடிக்கும் ,எமக்காதரவான ஜட்டிகள், இரத்தத்திலக உசுப்பேத்தல்களுக்கு விலை போகும் தேசிக்காய்களும் இருப்பார்கள் தானே இம்முறை மஹிந்த மாபியா கொடுக்கும் டிரீட்மென்டில் கொழுப்பு கரைந்து சோறு முக்கியம் அமைச்சரே என்ற நிலைக்கு அவர்களாவே வருவினம் புதுக்குதிரைகளாவது பரவாயில்லை எஜமானரின் காலடிதான் எங்களிடம் பெரிசாக உரிமை அது இது என்று எதிர்பார்க்கபடாது என்று முன்னாடியே சொல்லிவிட்டு ஓடுகிறார்கள், ஆனால் இந்த பழுத்து போன திருட்டு குதிரைகள் இருக்கு பாருங்கோ எதை நோக்கி ஓடுகிறோம் என்றும் தெரியாது எது பாதை என்றும் தெரியாது ,ஏறுபவர்களை முகங்குப்புற கவுத்துக்கொண்டே கிடக்குதுகள், நன்றாக விழுந்து நங் என்று அடிவாங்கியவைகளும் இவை குருட்டு,திருட்டு குதிரைகள் ஒரு பைசாவுக்கு பிரயோசமற்றவை என்பதை கண்டுபிடித்தவர்களும் திருந்திவிட்டார்கள்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
அதற்காக நாளைக்கு செத்து விழுந்துவிடும் நிலையிலுள்ள குதிரையில் அடுத்த தீபாவளியையும் பொங்கலையும் நம்பி பயணிக்க முடியாது கண்டீங்களே
-
உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா? புலிகளின் தலைவருடன்
தன்னிகரில்லா தலைவன் ......தரணிக்கே தலைவனுக்கு வரைவிலக்கணம் ......கொண்ட பற்றுறுதி மாறா தன்னிகரில்லா தலைவன்
-
பெயர் மாற்றங்கள்.
என்ன செய்வது சிறி அண்ணை யாழில் சேர்ந்த காலத்தில் வைத்துக்கொண்ட பெயர் அதுதான் கொஞ்சம் மாத்திப்பார்ப்போமே என்று மாத்திப்போட்டன் வாயில் நுழையாத பெயர் வைத்தால் தான் முதலில நம்மளை சாத்தமாட்டார்கள் .....இல்லை துலஞ்சுது ...அதுவும் யாழில வேண்டாம் விட்டுடுங்கோ வலிக்குது என்று கத்தினாலும் விடமாட்டினம் சகோதரி துளசி நீங்கள் அப்படியே அழையுங்கள் Atonk உம் நானே அக்னியஷ்த்ராவும் நானே ... நிழலி அண்ணை பெயரை மாற்றித்தந்ததற்க்கு நன்றிகள் பல நன்றி கறுப்பி அக்கா /அண்ணை அதுசரி நீங்க அக்காவா அண்ணாவா நாயகன் கமல் போல தெரியலயே....மா என்று மட்டும் சொல்லிப்போடாதேயுங்கோ
-
பெயர் மாற்றங்கள்.
atonk என்ற பெயரை அக்னியஷ்த்ரா என்று மாற்றித்தர முடியுமா அண்ணை ....?
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தலை வணங்குகிறேன் உங்களை பார்த்து....சகோதரர்களே இன்னும் தொலைவில் இல்லை எனது தமிழீழம்