Everything posted by அக்னியஷ்த்ரா
-
சம்பந்தர் காலமானார்
அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று தானாக தேடி வந்தது அழிவு....?
-
சம்பந்தர் காலமானார்
சமீபத்தில் நாட்டிற்க்கு போயிருந்தபோது என்னோடு படித்த ஒரு முஸ்லீம் நண்பன் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் பிரச்சார பீரங்கி. படிக்கும் காலத்தில் படு மொக்கு, சாதாரண தரம் கூட குதிரையோடி சித்தியடைந்து முஸ்லீம் மந்திரிகளின் கைகளில் கால்களில் விழுந்து நீதிமன்று இலிகிதராக உள்ளான். எதோ ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறதே என்று சும்மா வாகனத்தை ஒடித்து எதேச்சையாக நோட்டம் விட்டேன் பேச்சைக்கேட்டு ஒரு நிமிடம் விதிவிதிர்த்து போய்விட்டேன். தமிழே எழுதவராத பேசவராத ஒருவனிடம் எப்படி இந்த மொழி ஆளுமை என்று. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது எங்கே, எப்படி எப்போதெல்லாம் கோட்டைவிட்டோம் என்று. அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச சபை முன் வழமை போல தலையில் பட்டியை கட்டிக்கொண்டு "மாரித்தவக்கை" சான்ஸ், கூத்தமைப்பு உபயத்தில் கூட்டமாய் உட்கார்ந்துகொண்டு பதாகை பிடித்துக்கொண்டு இருக்கினம். பிரதேசபை தரமுயர்த்தபடுகுதோ இல்லையோ கனடாவில் அசைலம் அடிக்க எடுக்கும் படங்கள் உதவும் போல. அப்புறம் ஓட்டை விழுந்த கப்பலின் கேப்டன் தத்தா நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறார். அவரால் ஒன்றும் கிழித்திருக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க கடலில் இறங்கி தள்ளுங்கள் அடுத்த பொங்கலுக்கு தீபாவளிக்கு கரைசேர்ப்பேன் என்று வாயால் வடை சுடாமலாவது இருந்திருக்கலாம். தாத்தாவின் இழப்பு ஒருவகையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும், தாத்தா குத்தி குத்தி உடைத்த மேசைகளை இழப்பீடு செய்யப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டி வந்தது. இனி வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பயமில்லாமல் இலங்கை வந்து கூத்தமைப்பானுகளோடு கூத்தடிக்கலாம் மேசையில் குத்தி பயம் காட்ட தாத்தா இல்லை. போய் வாருங்கள் தாத்தா உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமளவுக்கு அப்பாடக்கர் இல்லை நீங்கள்
-
கிழக்குபல்கலைகழக மாணவர்களின் தற்காலிக நினைவகத்தை அழித்த பொலிஸார் – அம்பிகா சற்குணநாதன் கடும்; கண்டனம்
அம்பிகா அன்ரி இலங்கை மனித உரிமை சபை ஆணையராக இருந்த போது என்ன பதிலை சொல்லியிருப்பாரோ அதுவே பதில். ரிட்டயர்மென்ட் கேசெல்லாம் கூத்தமைப்பு சீட்டுக்காக ஒரளவுக்கு மேல் துள்ளக்கூடாது
-
சிங்கப்பூரில் 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது - புதிய பிரதமர் யார்?
உங்களது கனவுக்கு வாழ்த்துக்கள் வெளிநாட்டவர்கள் இல்லாமல் சிங்கப்பூரார்களுக்கு உச்சா கூட போகத்தெரியாது. வெளிநாட்டவர்கள் எல்லாருமே வெளியேறினால் ஒரு 5 வருடங்களில் இலங்கையை போல் தவிலடிப்பார்கள் அல்லது மலேசியாவின் காலில் விழுவார்கள். சிங்கப்பூரார்கள் கடின உழைப்பு என்றால் என்ன வென்றே அறியாதவர்கள். அத்துடன் Blue Collar வேலைகளை செய்து பழக்கமே இல்லாதவர்கள். ஆனால் வாயால் நன்னா வடை சுடுவார்கள்
-
ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
எமக்கு இந்திய சீன முறுகலையே பாவிக்கத்தெரியாமல் *** திரிகிறோம் இந்த லெவலில் அமெரிக்காவின் முறுகலை வேற பாவிக்கப்போறமோ ...?
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
தமிழ் நாட்டு பூர்விகம் தானே ..அதுதான் பப்ளிக் ஸ்டண்ட் நேரடியாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பி அங்கே போய் போராடு என்று அனுப்பிவைத்தால் தெரியும் அம்மணியின் போராட்ட குணம் எப்படி காற்றில் பறக்கிறது என்று
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான். நமது favourites 1. Bleu de chanel 2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue. Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நன்றிகள் அண்ணை நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அப்போ நான் எப்படியும் தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை (Chanel, Dior) சரக்கு இல்லை வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம்
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால் சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த திருட்டுக்கூட்டம் இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும் இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை ஈழத்தில் தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது. தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நாமளும் யாழ்களத்தில் ஒரு எச்சரிக்கையை விடுவோம் ...தலைவராகிடலாமில்ல
- மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
-
ஸ்பெயின் பெண் இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை
இதற்குத்தான் ஹிந்தி படியுங்கோ ஹிந்தி படியுங்கோ என்று சொன்னால் கேட்டால்தான்
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
நல்வரவு மிஸ்டர் துரோகி அவர்களே Welcome to the club
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
டெஸ்ட்ராயர், எப் 18 சூப்பர் ஹார்னெட் என்று கலக்கும் அமெரிக்கனுடன் , 5 இத்துப்போன சீனத்து மிக் சங்டுக்களை அதுவும் கப்பலில் ஏற்றி இறக்க முடியாத இறதல், மற்றும் இந்தியனின் பிச்சை கப்பலையும் வைத்துக்கொண்டு ஆசியாவின் பிச்சைக்காரன் போடும் போட்டி இருக்கே வேற லெவல்
-
துவாரகா உரையாற்றியதாக...
சார்வாள்...ஒருசிலர் உயிரை காப்பாற்ற, ஒரு சிலர் குடும்பங்களிற்காக, இன்னும் சிலர் தொழிற்தகுதி கல்வித்தகுதியுடன் நல்ல வாழ்க்கைத்தரத்தை நாடி இப்படி பல விடயங்கள் உண்டு. நானும் ஒருகாலத்தில் யுகே ,கனடா என்று எப்பவோ செட்டிலாக கிடைத்த வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளி விட்டு நாட்டை விட்டு ஒரு இன்ச் அரக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் நின்றவன் தான். பிறகு தான் தெரிந்தது இந்த எண்ணம் தலைவருடன் நின்று தமிழீழம் பிடிக்க சண்டை போடுவது போல... உன்னதமான நோக்கம் ,இறுதியில் ஒத்தைப்பைசாக்கு பிரயோசனப்படாது என்று. வெளிநாடு வந்து இந்தவருடத்துடன் 5 வருடங்கள் முடிகின்றது. உழைத்து விட்டு திரும்ப நாட்டிற்கு வந்துவிடுவோம் எனும் எண்ணத்துடன் தான் வந்தேன். நாளைக்கு எனது பிள்ளைகள் என் சவக்குழியை தோண்டி எடுத்து கரிச்சு கொட்டக்கூடாது என்பதால் இப்போது நிரந்தரவதிவுரிமைக்கு முயற்சிக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமே
-
துவாரகா உரையாற்றியதாக...
தமிழ்ச்சாதி நஹி ஹே ஹிந்துஸ்தான் கீ ராவ் மே ஹிந்தி மே போல்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கிருபண்ணை பகிடிக்கு சொல்லவில்லை நீங்கள் இறங்குவதென்றால் நானும் இறங்கத் தயார். சிங்கை டாலர்களில் தட்டிவிடலாம்
-
இரத்த சரித்திரம்
வாசக உள்ளங்களிடம் மன்னிப்பு கெரோனாவால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை மிக விரைவில் எழுத முயற்சிக்கிறேன்
-
இரத்த சரித்திரம்
சரித்திரம் - 2 சிறுவயதினில் இவனது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவனை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி பாசத்தை பொழிந்த இவனது மாமியே இன்று இவனை நடத்தும் முறை அவனது மனதை பிழிந்தது. குளித்து முடிக்கமுன் பிரதான நீர்க்குழாயை மூடுவதும், இரவு 10 மணிக்குப்பின் இவனது அறைக்குரிய சுற்றுடைப்பானை அணைத்துவிடுவதும் இப்படி இவன் அனுபவிக்கும் கொடுமைகளை மனது அசைபோட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக "இந்த சனியன் எப்போது இங்கேயிருந்து வெளியேறுமோ" என்று இவன் காது படவே பேசிக்கொண்டது இவனால் தாங்கமுடியாத சம்பவமாகி அது ஒரு வடுவாகவே பதிந்தும் விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இனி இந்த இடத்திலிருந்து வெளியேறுவதே நல்லது நமது குறைந்த பட்ச மரியாதையையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்று முடிவெடுத்ததன் வெளிப்பாடே இந்த தேடல். ஒருவாரியாக இன்றைய இலத்திரனியல் நேரத்தாளினை பூர்த்திசெய்தாகிவிட்டது, இனி மென்பொருள் ஒருங்கிணைப்பு சோதனையாளர் அவரது வழு கண்டுப்பிடிப்புகளை பதிவேற்றும் வரை அவனுக்கு சிறு நிம்மதி வேலையில் மூழ்கியிருந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான் கடிகார முள் மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. தனது கணனி மேசையிருந்து விடுபட்டு அவனது மேலாளரின் அறையின் கதவினை தட்டினான். வரலாம் என்ற ஆங்கில உச்சரிப்பு கதவின் சாரளம் ஊடே வரவும் திறந்து கொண்டு உள்ளே சென்றான். "எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்ற மெதுவான வார்த்தையை கேட்ட அவனது மேலாளர் கணணிக்குள் புதைத்திருந்த தலையை விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து பார்வையினாலேயே அவனை அளந்தார். சேர் ஒரு வன் அவர் பெர்மிசன் வேணும், புது ரூம் ரெண்டுக்கு பார்க்கிறேன் 5 மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்த மேலாளர் "ஹவ் அபௌட் தி டாஸ்க் லிஸ்ட்" என்று வரவேண்டிய இடத்திற்கு தயக்கமே இல்லாமல் பாய்ந்தார். அவனும் அதுதானே பயலாவது கேட்டவுடன் தூக்கி கொடுப்பதாவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே "ஐ ஹாவ் கொம்பிலீட்டட் இட் அண்ட் ரிலீஸ்ட் போர் கியூ ஏ டெஸ்டிங்: என்று முடித்தான். திருப்தியுடன் தலையை ஆட்டிய மேலாளர் "ஓகே யு கேன் டேக் தி பிரேக்" என்று முடித்துவிட்டு இவனது பதிலுக்கு காத்திராமல் கணனியினுள் மீண்டும் தலையை புதைத்தார். "தங் யூ சேர்" என்று விட்டு அறையை விட்டு வெளியே வந்த அவன் ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கி கையை நீட்டினான் தலையை வெளியே நீட்டிய சாரதி சேர் எங்க போகவேணும் என்று சிங்களத்தில் கேட்கவும். தெஹிவளை மேம்பாலம் அருகில் என்று முடித்தான் . சாரதி "சேர் மீட்டர் போடல ஒரு 300 ரூபாய் கொடுங்க" என்று அவன் தலையை சொறியவும், 300 அதிகம் 250 தாறன் ஆனால் இவ்வளவு விரைவாக கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக போகவேண்டும் என்று இவன் சொல்லவும். ஏறுங்கோ சேர் என்று சிரித்துக்கொண்டே முச்சக்கரவண்டியின் இக்னிஷியனை உசுப்பினான், சற்றைக்கெல்லாம் டுப்ளிகேஷன் தெருவில் முச்சக்கரவண்டி சீறத்தொடங்கியது. பாம்பு போவதுபோல வளைந்து நெளிந்து முச்சக்கரவண்டி எடுத்த வேகத்தில் எதற்க்காக இவனிடம் வேகமாக செல்லச் சொன்னோமோ ..? பாவி நமக்கே பால் ஊத்திவிடுவான் போல என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் அவன். நேரம் 4:50 காலிவீதி போக்குவரத்து நெரிசலை முச்சக்கரவண்டியின் வேகத்தில் லாவகமாக கடந்து நெருங்கியிருந்தான் அவன். இன்னும் மார்க்கஸை காணோம் சரி கொஞ்சம் பொறுக்கலாம் என்று நினைத்த மாத்திரத்தில் கைபேசி கிறுகிறுத்தது மார்க்கஸிடமிருந்து ஒரு குறுந்தகவல், வந்துகொண்டேயிருக்கிறேன் இன்னும் 5 நிமிடத்தில் நெருங்கிவிடுவேன் என்று இருந்தது. சரியாக சொன்ன நேரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளிப்பட்டான் மார்க்கஸ், கையை அசைத்தவாறே நெருங்கியவன் "என்ன மச்சி ரெடியா வா போகலாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இரண்டு அறைகளில் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறதாம், ஒன்று முதலாம் மாடியிலும் மற்றயது அதே தளத்திலும் தான் இருக்கிறதாம். இரண்டிலும் ஒவ்வொரொருவர் வீதம் இருப்பதால் நீ சேர்ந்துதான் தங்கவேண்டும் உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான். இவனோ தனது நிலையை முழுவதுமாக மார்க்கசிடம் சொல்லவில்லையென்பதால் மார்க்கசும் பயல் எதற்கும் தயார் என்பதை அறியவில்லை. சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை மச்சி என்று சொல்லிவிட்டு இன்னுமோர் முச்சக்கரவண்டியை இடை மறித்து மார்க்கசுடன் அதில் ஏறிக்கொண்டான் முகவரியை முச்சக்கரவண்டி சாரதியிடம் சொல்லவும் அவனும் கல்கிஸ்ஸை பக்கம் முச்சக்கரவண்டியை விரட்டத்தொடங்கினான், சரியாக ஒரு 15 நிமிட பயணத்தில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக கடற்கரையை அண்டியாதாக ஒரு பெரிய கட்டிடம் தெரியத்தொடங்கியது, மார்க்கஸ் இவனை உசுப்பி அந்த கட்டிடத்தை காட்டினான். கொஞ்சம் வெளிறிப்போய் அழுக்குப்படிந்திருந்த அந்த கட்டிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பழைய கட்டிடம் என்று மிக இலகுவாக வெளிக்காட்டிக்கொண்டது. கட்டிடத்தின் முன்னே இறங்கிய இருவரும் இறங்கவும் காவலாளி வெளிப்படவும் சரியாக இருந்தது, நாணயத்தாள்களை எண்ணி இவன் முச்சக்கரவண்டி சாரதியிடம் கொடுத்துக்கொண்டிருக்க மார்க்ஸோ காவலாளியுடன் எதுவோ பேசிக்கொண்டிருந்தான். சரியாக இவன் திரும்ப மார்கசோ உரிமையாளர் உள்ளே தான் இருக்கிறாராம் முதலாம் மாடியில் ஏறி போகட்டுமாம் என்று கையை வாயிலை நோக்கிகாட்டினான். காவலாளியும் ஒரு முறைப்புடன் இருவரையும் ஏறியிறங்க பார்த்துக்கொண்டே கதவை திறந்து விட இருவரும் உள்நுழைந்தனர் ....(தொடரும்)
-
இரத்த சரித்திரம்
கவனிக்கவில்லை....அண்ணை நிர்வாகத்தின் கவனத்திற்கு...தயை கூர்ந்து இந்த திரியை 24 ம் அகவை சுய ஆக்கங்களிற்குள் செருகி விடவும்
-
இரத்த சரித்திரம்
தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான். மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான். இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்". மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான் படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு. "சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான். மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)
-
இரத்த சரித்திரம்
"கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம் பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன். மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும் யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்