Jump to content

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  4150
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by tulpen

 1. இதற்கு முன்பு இப்படி நடந்து கொள்ளவில்லையா? ஐரோப்பா முழுவதும் இவ்வாறான சம்பவங்கள் 85 ம் ஆண்டின் பின் நடந்தது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் வசிக்கும் ஜேர்மனியில் புலிகளின் அன்றய பொறுப்பாளர் சுதா தலைமையில் அன்றய ஈரோஸ் பிரதிநிதியாக இருந்த குமரன் மாஸ்ரர் வீடு புகுந்து அவரின் காலை முறித்தது தெரியாதா?
 2. மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா?
 3. உங்களுக்ககு ஒன்றும் தெரியாவிட்டால் அதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் நாம் மட்டும் தான் போராடுவோம் என்று மற்றைய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் போன்றவற்றை வன்முறை மூலம் தடை செய்து போராட்டத்தை தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஏகபோகமாக தமதாக்ககி கொண்டவர்களுக்கு மக்கள் உயிர்கள் மீது பொறுப்பு உண்டல்லவா. அந்த பொறுப்பு இருந்திருந்தால் தாமே நியமித்த மதியுரைஞரின் பட்டறிவில் அவர் எடுத்த முடிவில் உள்ள நியாயமதை புரிந்திருக்க வேண்டும் அல்லவா?
 4. பால சிங்கத்தாருக்கு என்ன நடந்தது என்பதை தமிழீழவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்ததமிழினி இவ்வாறு கூறுகிறார் இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத் துடன் அன்ரன் பாலசிங்கம் 'உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி' என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்குச் சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார். அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கமும் சிக்கி விட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை. அதனால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, ஒருவரோடொருவர் முகம்கொடுத்துப் பேசிக்கொள்ளவும் விரும்பாத ஒரு நிலையில், மிகவும் மனமுடைந்தவராகவே அன்ரன் பாலசிங்கம் இறுதியாகக் கிளிநொச்சியை விட்டு வெளியேறியிருந்தார். வழமையாக அவர் உலங்கு வானூர்தியில் ஏறிச் செல்லும்போது இருக்கக்கூடிய சிரிப்பும் மகிழ்ச்சியும் மறைந்துபோய் அவரதும் அவருடைய துணைவியாரின் கண்களிலும் கண்ணீர்க் கசிவுகள் தென்பட்டதைப் பலரும் அவதானித்தோம்.
 5. இரு வேறு காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமற்ற இருவர் கூறிய கூற்றுகள் இவை. இவை இரண்டும் எவ்வாறு பொருந்தி போனது என்பதை தமிழர் அரசியலை முன்னெடுப்போர் அறிந்து வைத்திருக்க வேண்டும் 1988 ல் ராஜனி கூறியது. புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரிசியற் பார்வை இன்மை, சகிப்பு தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே அவர்களின் இறுதி சீரழிவுக்கும் இறுதிக் காரணமாக அமையப்போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப்போனவர்களின் கண்ணீரோடும் அவர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட இதிகாசங்களுடன் அழிவையே நோக்கிச் செல்வர். இந்த சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப்போவதில்லை. இந்த முழுச்சரித்திரத்திலிருந்தும் அதன் மேலாதிக்க கருத்தியலிருந்தும் பூரணமாக தங்களை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான புதிய பார்வை பிறக்கும். இந்த தீர்கக தரிசனத்தமை போராட்டதின் பேரழிவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கூறியவருக்கு இயக்கம் கொடுத்த பரிசு துப்பாக்கி குண்டு. மனிதாபிமானமற்ற படு கொலை. 2013 ல் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி கூறிய கூற்று. சில சந்தர்ப்பங்களில் மனதிற்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தபோதிலும்கூட, பல பொறுப்பாளர்கள், போராளிகள் சொல்லும் வசனம், "அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்", "எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்" என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான். இது எமது பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் கூடி வந்த விஷயமாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாகப் பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்குள்ளாகும்போதும் அவர் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப் போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது. இரண்டு பேரும் ஒரு காலத்தில் புலிகளுகள் இயக்கத்தின் உறுப்பினர்கள். உயிரை காக்க ஐரோப்பா வந்து வெற்று வேட்டு அரசியல் செய்த பித்தர்கள் அல்ல. இணைய வாசகர்கள் உண்மையை சீர்தூக்கி பார்ககவேண்டும் என்பதற்காகவே இரண்டையும் இணைத்தேன். உங்களுக்காக அல்ல.
 6. எனக்கு மட்டுமே பொறுப்பு இருப்பது போல் அவர் எனக்கு சொன்னதை முதல் வாசித்த நீங்கள், அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டுவிட்டு வாருங்கள். நான் பதில் சொல்லுகிறேன்.
 7. தமிழீழம் காண புறப்பட்ட புரட்சி போராட்டத்தை படிப்படியாக சிதைத்து இன்று, லண்டனுக்கு வா பாப்பம், எங்க வீட்டுப்பக்கம் வா. பாப்பம் என்று வடிவேலு ரேஞ்சுக்கு தெரு ரவுடித்தனமாக கொண்டுவந்து கேலிக்கிடமாக்கிவிட்டு அதைக்கூட கூட எவ்வளவு பெருமையா சொல்லுறீங்க.
 8. இதை தான் நான் கூற நினைத்தேன். நீங்கள் கூறிவிட்டீர்கள். இலங்கையில் தமிழராக பிறந்த அனைவருக்குமே இந்த விடயம் தெரியும். எப்போதும் தமிழனாக இருக்கும் இவருக்கு இது தெரியாமல் போனதே!
 9. அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட. அதை செய்ய துணிவு இல்லை சும்மா உசுப்பேற்றலுக்கு குறைவில்லை.
 10. போராட்டம் 200 வருடம் பின்னுக்கு போய்விட்டது என்று கூறியது நானல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தான் அவ்வாறு கூறினார். போராட்டதை உண்மையாக நேசித்ததால் தான் அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய அவரால் முடிந்தது. போராட்டத்தையும் அதனால் இறந்த தமிழ்மக்களின் பிள்ளைகளான மாவீரர்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் புலம்பெயர் சுயநல புலிவால்களுக்கு அந்த பொறுப்புணர்வு இர்ருக்காது என்பதை புரிந்து கொள்ளுகிறேன். அந்த 60 வருடத்தில் முதல் முப்பது வருட உசுப்பேத்தல் உணர்சசி பேச்சுக்களையும், அந்த உணர்ச்சி பேச்சுக்களை உள்வாங்கி பேயாட்டம் ஆடி, மக்களை அழித்த அடுத்த முப்பது வருட அரசியலையும் புறக்கணிக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். என்னை பொறுத்தவரை நான் எவருக்கும் விசுவாசி அல்ல.
 11. அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து, நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும்.
 12. எல்லாத்தையும் கவுட்டு கொட்டி சீரழிச்சுப் போட்டு தனிமனிதன் என்னட்ட வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஏற்கனவே ஒரு தனி மனிதனிடம் எல்லாம் இருக்கிறது என்று மனக்கோட்டை கட்டி ஏமாந்தது சீரழிந்தது போதாதா? மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும் சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்.
 13. அப்படி துவக்கு தேக்கி மாவிலாற்றில் சிங்களவனுக்கு தண்ணி காட்ட போய் தமிழ் மக்களை சொல்லைணா துன்பத்துக்கு உள்ளாக்கியவர்களின் அரசியலின் தொடர் ஆதரவாளரான நீங்கள் உங்கள் பட்டறிவை வைத்து ஏன் அப்படி ஆரம்பிக்க கூடாது. உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா?
 14. பிடித்த என்றால் இல்லை. இப்போது கொடி பிடிக்கும் என்று நிகழ்காலத்தில் கூறினால் ஆம். ஏனென்றால் தமிழ்மக்கள் இன்றிருக்கும் மோசமான நிலையில் சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த கொடியை பிடித்து கொண்டு அலையவேண்டிய அவசியம் இல்லை. ரவுடிகளுக்கும் தீவிர தமிழ் தேசியம் பேசும் சுயநல சமூக விரோதிகளுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட கலவியறிவு அற்ற காடையர்களுக்கும் அந்த தேவை உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழ் மக்களுக்கது இதுவரை செய்த அக்கிரமம் போதாது என்று இன்றைய நிலையை இன்னும் மோசமாக்கி எல்லாத்தையும் கெடுத்துவிட்டு போய்சேருவது தான் புலம் பெயர் புலி வால்களின் நோக்கம். சுமந்திரன் வெறும் சுயநல அரசியல்வாதிதான். ஆனால் இலங்கையில் உள்ள மோசமான அரசியல்வாதிகளை விட மோசமானவர்களே இந்த புலம் பெயர்ஸ் அமைப்புக்கள்.
 15. எனக்கு உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம் ஆனால் கொடியோடு அலையும் ரவுடிகள் அப்படியாவர்கள் அல்ல. இவர்கள் பாதையில் போனால் நாசம் தான்.
 16. தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது. தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம். ஆனால் நான் கூறியது, 2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும். இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது.
 17. முன்னாள் அந்திம கால என்றால், தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும் காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற முன்னாள்களைப் பற்றி பற்றி கூறுகின்றீர்களா? ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள்.
 18. 2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
 19. சுவைப்பிரியன் நீங்கள் கூறிய அந்த ரவிராஜ் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவரும் ஒரு துரோகியாக தான் இன்று புலம்பெயர்ஸ் கும்பலால் கருதப்பட்டிருப்பார். இற்ந்ததால் அவர் மாமனிதர். யாழ் நகரின் மேயர்களாக இருந்த இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதின் பின்னர் சிறிது காலம் யாழ் மேயராக இருந்த ரவிராஜ் மூன்றாவதாக கொலை செய்யப்பட்டிருந்தாலும் அவர் துரோகிதான். ஆகவே தமிழ் சூழலில் துரோகிக்கும் தியாகிக்கும் இடையான வித்தியாசம் மிக சிறியது.
 20. 35 வருடமா இப்படி அகற்று அகற்றி என்னத்தை கண்டோம். எத்தனை பேர் துப்பாகிகளால் அகற்றப்பட்டார்கள். முடிவு பூச்சியம் தான்.
 21. உங்கு லண்டனில் அப்படியான வீரக்குட்டிகள் இருக்கலாம். ஆனால் இங்கு அவர்களை நான் நன்கறிவேன். தமது குடும்பம் என்று வந்தால், யதார்ததமாக சிந்தித்து நிதானமான முடிவுகள். இயக்கம், தேசியம் என்று வந்தால் வெட்டி விழுத்துவோம் என்று, கற்பனையில் வெடி விடும் வாய்ச்சவடால். இதுவே இங்கு புலம் பெயர்ஸ் புலிவால்களின் நிலை. இன்று மட்டுமல்ல என்றும் அப்படி தான்.
 22. சரியாக சொன்னீர்கள். தமிழ் தேசியம் என்ற உயர் லட்சியம் புலம் பெயர் நாடுகளில் அடாவடி புரியும் தீவிர தமிழ் தேசியர்கள் என்ற ரௌடி கும்பலின் வெற்றுக் கோசமாக மாறியது தமிழ் மக்களின் துரதிஷ்ரம். தேசியக்கொடி என்று எல்லோராலும் ஒரு காலத்தில் மரியாதை செய்யப்பட்ட கொடியும் இப்போது இந்த தெருச்சண்டிர்களின் கொடியாக சுருங்கியதும் வேதனை தான்.
 23. இதுவே 2009 ம் ஆண்டுக்கு முன்பு என்றால் சுவிஸ், ஜேர்மனியில் செய்தது போல தமக்கு பிடிக்காதவர்களை அழைத்து கூட்டம் ஒழுங்கமைத்தவர்களின் வீடு புகுந்து அவர்ரகளின் கை, கால்களை உடைத்து நொருக்கி இருக்கலாம். என றாலும் இப்போது சுமந்திரனின் கூட்டதிற்கெதிராக நடத்திய பாரிய ஆர்பாட்டத்தை பார்தது பயந்து போன அமெரிக்கா தமிழ் ஈழம் பெற உதவக்கூடும்.
 24. உங்களுக்கான பதிலை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவு பொறுப்பாளரின் தனது சுயவிமர்சனத்தில் கூறியுள்ளார. அதனை அப்படியே தருகிறேன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தபோது, அந்த விடயத்தைப் புலிகளின் தலைமை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இயக்கம் தடைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டபோது என்னைப் போலப் பல போராளிகளுக்கும் கவலையும் குழப்பமும் ஏற்பட்டது. அரசியல்துறைப் பொறுப்பாளரால் எமக்கு நடத்தப் பட்ட கூட்டத்தில் அவர் சிரித்தபடி கூறிய விடயம் எமக்கு மலைப்பை ஏற்படுத்தியது. "உங்களைப் போலத்தான் நாங்களும் கொஞ்சப் பேர் சரியான மனக் குழப்பத்தோட அண்ணையைச் சந்திக்கப் போனனாங்கள், அண்ணை சிம்பிளா சிரிச்சுக்கொண்டு சொன்னார் 'இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாங்கள் வளந்திருக்கிறம் எண்டு நினைச்சு சந்தோசப் படுங்கோ' எண்டு, அப்பிடிப்பட்ட தலைவர் எங்களுக்கு இருக்கேக்க நாங்கள் ஏன் குழம்ப வேணும்" எனக் கூறினார் தமிழ்ச்செல்வன். கதிர்காமர் மீதான பழிதீர்ப்புத் தாக்குதல் எமது போராட்டத்தில் ஏற்படுத்தியிருந்த அரசியல் பின்னடைவை அலட்சியமாகக் கடந்துபோய்விடலாம் என விடுதலைப் புலிகளின் தலைமை கருதியது. உலகத்தையே பகைத்துக்கொண்டு ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றியடைதல் என்பது எப்படிச் சாத்தியமாகும் என்ற அளவிற்கேனும் சிந்திக்கத் தோன்றாதவாறு புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீதான நம்பிக்கை அனைவரது கண்களையும் கட்டிப்போட்டிருந்தது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.