-
Posts
4150 -
Joined
-
Last visited
-
Days Won
9
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by tulpen
-
இல்லை . 16 தான்.
-
மனம் இருந்தாலும் முடியாது. இல்லாவிட்டாலும் முடியாது என்பது அரசியலை புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும். திமுகவின் 16 எம்பிக்களின் ஆதரவு இல்லை என்றாலும் வேறு கட்சிகளின் தயவில் காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்திருக்கும். புலம் பெயர் நாடுகளில் இருந்த புலிகளுக்கு இது தெளிவாக தெரியும். இருப்பினும் இவ்வாறு தமது தவறுகளை ஏற்றுகொள்ள விரும்பாமல் நோர்வே, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா என்று தோல்விக்கு பழி போட்டு தப்பிக்க நினைக்கும் நப்பாசை தான். தமது திருட்டையும் மறைக்க இது சிறந்த வழியல்லவா.
-
இல்லை நாதமுனி. கருணாநிதியில் உண்ணாவிரதத்தை மட்டுமல்ல தமிழக அரசியல் வாதிகளால் எதுவும் செய்ய முடியாது என்ற தெளிவு மக்களுக்கு இருந்தது. இலங்கை யுத்தத்தில் ஒரு சிறு துரும்பை கூட அசைக்கும் சக்தி கருணாநிதிக்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை என்பதே உண்மை. பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது புலிகளின் இராணுவ பலத்தை வைத்து பேரம் பேசி ஒரு சிறந்த அரசியல் தீர்வு வரும் என்று நம்பிய மக்கள் அந்த நம்பிக்கை புலிகளால் பாழடிக்கப்பட்ட பின்னர் ஐநா மற்றும் மேற்கு நாடுகள் தலையிட்டு யுத்தத்தை நிறுத்தலாம் என்றே நம்பினார்கள். இனி போராட முடியாது தோல்விதான் என்பதை 2008 ல் உணர்ந்து கொண்ட புலிகளும் மக்களை தம்முடன் அழைத்து சென்றதும் மக்களை அழிவை வைத்து மேற்கு நாடுகளின் தலையிடலாம் என்ற எண்ணத்தில் தான். அது பொய்த்துப் போகவே பேரழிவு ஏற்பட்டது.
-
இது எனது கருத்துக்கான பதில் அல்ல மேலும் அரசியல் தொடர்பான அறிவை மீம்ஸ், துணுக்குகள் மூலம் மட்டும் படித்து அறியவேண்டிய அளவுக்கு மோசமான அளவில் நான் இல்லை. அப்படி அந்த நிலையில் இருப்பவர்கள் குறித்து எனக்கு ஆட்சேபனையும் இல்லை.
-
ஆழ்ந்த இரங்கல்கள் @விசுகு
-
தமிழீழ போராட்டம் எந்த காலத்திலும் திராவிடத்தோ வேறு எந்த எந்த நாடுகளையோ நம்பி நடத்தப்படவில்லை. தனியே ஆயுதத்தை நம்பி மட்டுமே புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே, உங்கள் கூற்றை “ஆயுதத்தை நம்பியதை விட சண்டைக்காரனுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம்”, எனத் திருத்திக் கொள்ளுங்கள்.
-
அப்படி இல்லை நாதமுனி. முன்பெல்லாம் தமிழ் தேசியம் என்ற சொல் மிகுந்த மதிப்புடன் பார்க்கப்பட்டது. மிகவும் பொறுப்புணர்வுடன் வளர்த் தெடுக்கப்பட வேண்டிய ஒரு சித்தாந்தமாக உருவாகியது. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் வியந்து பாராட்டப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் தமிழ் அகராதியில் தமிழ்த் தேசியம் = காடையர்கள், ரௌடிகள், என்று எழுதும் நிலையை தமிழ் தேசியம் பேசும் ரவுடிகளின் சமூக வலைத்தள பதிவுகள் காட்டி நிற்கின்றன. தற்போதைய நிலையில் தமிழர தேசியம் எற்ற கருத்தியலை சமூக வலைத்தளங்களில் காவுபவர்களில் மிக பெரும்பான்மையானோர் காடையர்களே. அந்த காடையர்களில் ஒரு சிறிய பிரிவினரே இந்த காணொலியில் வருபவர்கள்.
-
இந்த வீடியோ பழையது என்றாலும் இப்போது தான் பார்ததேன். சிங்கள காடையர்களை விட தமிழ் காடையர்கள் மிகவும் மோசமானவர்கள் போலிருக்கிறது. நல்ல காலம் தமிழீழம் கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதி. போராளிகளின் அரபணிப்பில் மடிந்து போக, இப்படியான காடையர்களிடம் அதிகாரம் போய் தமிழீழம் சிக்கி சீரழிந்திருக்கும். இப்படியே லண்டனில், கனடாவில் we want tamil eelam என்று காட்டு கத்து கத்திக்கொண்டே இந்த காடையர்கள் தமது வாழ்நாளைக் கழிக்கட்டும். இணைப்புக்கு நன்றி நுணா.
-
கோஷான், நீங்கள் சர்வதேச அரசியல் மாற்றங்கள், எங்களுக்கான அதன் சாதக பாதகங்களை பற்றியெல்லாம் பேசுகின்றீர்கள். நீங்கள் சிந்திக்கும் அளவுக்கு கூட எம்மில் போராடிய தரப்பு இதுபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பது எனது கருத்து. அவர்களே கவலைப்படாத போது வரும் விளைவுகளை ஏற்று எமது மக்களை பலப்படுத்தி சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதே இனி வழி. வேறு வழி இல்லை. அரசியல் வாதிகள் இங்கு திட்டப்படுவது வெறும் தனிப்பட்ட காழ்புணர்விலேயே. அதற்கும் தமிழர் தீர்வு போராட்டத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
-
மாரிதாஸ் கைது: சீமான் எதிர்ப்பு ஏன்?- சுபவீ விளக்கம்!
tulpen replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நெடுக்கர் உங்கள் அண்ணன் சீமான் இப்போது முதலமைச்சாராக இருந்திருந்தால் இறந்த ராணுவதளபதிக்கு வீர வணக்கம் செலுத்தி பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுத்திருப்பார். -
இல்லை நாதமுனி லூர்ட்ஸ், வத்திக்கான் ஒரு சுற்றுலா மையம். அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் சுற்றுலாவுக்கே வருகின்றனர். பக்திமயமாக வழிபடவும் ஒரு கும்பல் வரும் அதை நான் மறுக்கவல்லை. மூடத்தனங்களை முழுமையாக நம்பும் கும்பலகள் ஐரோப்பாவில் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள் இவற்றை பற்றி அக்கறைப்படாத அறிவு பூர்வமானவர்களே. விதி விலக்குகளை முன்மாதிரியாக கொள்ளவேண்டுய தேவை இல்லை. உங்கள் கருத்தின் இரண்டாம் பகுதி சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு தயார் செய்து தவறுதலாக இங்கு பதிந்து விட்டீர்கள் போல் இருந்ததால் அதற்கு பதில் கூற முனையவில்லை.
-
மதங்கள் என்ன சொன்னாலும் வளர்சசியடைந்த மேற்கத்தய நாடுகளில் மிகப் பெரும்பாலான மக்கள் ஒரு சம்பிரதாயம் என்ற அளவில் மட்டுமே மத்ததை பார்க்கிறார்களேயொழிய அதற்கு மேல் எவரும் அதை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதனால் தான் அவர்களது நாடுகள் முன்னேறி உள்ளன. மதங்கள் கூறுபவற்றை பெருமளவுக்கு கேள்வி கேடகாமல் நம்பும் ஆசிய ஆபிரிக்க நாடுகள் இன்றும் வறுமையில் உழல்கின்றன. மதம் மாற்றிகளும் சைவ இந்து கோவில்களுமே இந்த மூடப்பழக்கங்களல் பயன் பெறுகின்றனவேயொழ மக்கள் சமுதாயமோ அவர்கள் வாழும் நாடோ பயன்பெறாதது மட்டுமல்ல இன்னும் பின்னோக்கி செல்கின்றன.
-
பெருமாள் நானும் நீங்களும் அதை தான் கூறுகிறோம். எல்லோருமே சவுண்டு பேர்வழிகள் தான். உந்த தீர்வு மண்ணாங்கட்டிகளை விட்டுவிட்டு முடியுமான வரை ஏராளனின் “புலர்” போன்ற அமைப்புகளுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்து மக்களின் வாழ்க்கை தரத்தையும் கலவியையும் உயர்ததுவதே எம்மால் செய்யக் கூடிய ஆகக் கூடிய வினைதிறனான செயல். அதற்கு மேல் செய்யக்கூடிய வலு நமது தலைமுறைக்கு இல்லை. எதிர்கால சந்ததி அவர்களின் அறிவை உபயோகித்து அவர்களின் சொந்த ஐடியாவில் சிங்கவருடன் சமரசம் பேணி தீர்வை பெறட்டும். இந்த சந்ததியால் அது முடியாது என்பது உறுதி.
-
பெருமாள் சம்பந்தன் சுமந்திரன் மட்டுமல்ல, மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கைகளை கடந்த 70 வருடங்களாக இருந்த எல்லா அத்தனை அரசியல் ஆயுத தலைமைகளுமே செய்தன. சம்பந்தர், சுமந்திரன் அதை தொடர்கின்றனர் என்று கூறலாம். அது சரி பெருமாள் உங்களுக்கு தானே உங்கள் அரசியல் கொள்கையோடு ஒத்துப்போகும் பாரளுமன்றுக்கு பின்கதவால் வந்த, சவப்பெட்டி புகழ் கஜேந்திரன் என்ற அரசியல்வாதி இருக்கிறாரே. அவரோடு சேர்ந்து தீர்வுக்கு முயற்சிக்கலாமே!
-
உரிமையா, அபிவிருத்தியா என்று உசுப்பேற்றி கடைசியில் இரண்டுமே இல்லாமல் ஆக்கிய மோட்டு அரசியலை தாண்டி, இருப்பதை வைத்து சிறிய சிறிய அபிவிருத்திகளையவது செய்து வரும் யாழ் ந்தரின் இரண்டாவது சிறந்த மேயர் மணிவண்ணனுக்கு பாராட்டுக்கள்.
-
கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை. ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர். ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. இப்படி நிலைமை இருக்க அதே தமிழர் அரசியல் ஜீனில் இருந்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் பழைய தமிழர் அரசியல் தலைமைகளின் முன்மாதிரியையே பின்பற்றுவர் என்பது கூட தெரியாத அரசியல் கற்று குட்டியா இந்த கட்டுரையாளர்.
-
புலிகள் இப்போதும் பலத்துடன் இருந்து தமது கடந்த கால தவறுகளை திருத்தி, அந்த பலத்தை வைத்து பேரம் பேசி தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை (அது தமிழீழமாய் இருக்கவேண்டும் என்றில்லை) பெற்று கொடுப்பார்கள் என்றால் தடையை நீக்குவதில் அரசியல் பலன் தமிழ் மக்களுக்கு உண்டு. இப்போது தடையை நீக்கினால் புலம்பெயர் சுயநல புலிவால்கள் தமது திருட்டை தொடர மட்டுமே இந்த title ஐ பயன்படுத்துவார்கள். உருப்படியாக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகள் பட்டறிவு உணர்ததி நிற்கிறது. ஆகவே இனி தடை நீக்கி எந்த பலனும் இல்லை.
-
புலம்பெயர் தேசத்தில் சுமந்திரனை எதிர்ப்பவர்கள் யார்?
tulpen replied to MullaiNilavan's topic in அரசியல் அலசல்
சுமந்திரனோ இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளோ முழுமையான ஜனநாயவாதிகள் அல்லர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனல் நீங்கள் வாழும் ஜேர்மனியில் ஒரு ஒரு அரசியல் கூட்டத்தில் அவர்களது விதி முறைகளை அனுசரித்து தான் கேள்விகள் கேட்க முடியும். கேள்விகளை எழுதி கொடுப்பது தான் அவர்களது விதி முறை என றால் அதை அனுசரிமத்து கேள்விகள் கேட்பது தான் civilization ஆகிய மக்கள் கூட்டதின் நடைமுறை. இங்கு சுவிற்சர்லாந்தில் எந்த அரசியல் கூட்டதிலும் முன்னறிவித்தல் இன்றி நுளைந்து கும்பலாக கேள்வி கேட்க முடியாது. நாகரீகமற்ற வார்ததை பிரயோகங்களை உபயோகிக்க முடியாது. *** மேலும் இந்த உரையாடலில் கலந்து கொண்ட ஜெயதேவன் என்பவரை சமாதான காலத்தில் பிடித்து வைத்து மண்டையில் போட முயற்சித்து பிரித்தானிய அரசிடம் புலிகள் மூக்குடைபட்ட சம்பவம் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. -
இந்த தலையெழுத்து, ஊழவினை, கர்மா எல்லாமே அறிவு வளர முதல் மனதன் நம்பியவை. மதங்கள் அதை கெட்டியாக பிடித்து கொண்டன. அதற்கு பரிகார பூசை அது இது என்று தமது வருமானத்தை பேணுகின்றன. இன்றைய உலகில் பெரும்பான்மை மக்கள் இவற்றை நம்புவதில்லை. நீங்கள் கூறியது போல் இயல்பாக நடக்கும் சம்பவங்கள் என்பது அறிவை சற்று உபயோகித்து சிந்திக்கும் மக்களுக்கு இவை எல்லாம் சுத்த மூடத்தனம் என்று புரிந்து கொண்டுள்ளார்கள். ஒரு சில மூட நம்பிக்கைகளை வளர்க்க விரும்பும் ஆசாமிகள் மட்டும் இவை எல்லாம் உண்மை என்பது போல் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்ற முனைவர். மற்றவர்கள் இவை பற்றிய தெளிவுடன் கடந்து செல்வர்.
-
ஏப்ரலில் மக்கள் உண்பதற்கு உணவு இருக்காது:பேராசிரியர் மெத்திகா வித்தானகே
tulpen replied to nochchi's topic in ஊர்ப் புதினம்
அப்ப மே மாதம் உண்பதற்கு மக்கள் இருக்க மாட்டார்களா! -
தமிழ் ஈழம் ஏன் கிடைக்காமல் போனது? ஜெகத் கஸ்பர் அருமையான பேச்சு
tulpen replied to nochchi's topic in அரசியல் அலசல்
தமிழ் ஈழம் என்ற மாயமானை துரத்துவதை ஈழத்தமிழ்மக்கள் கைவிட்டு நாளாச்சு. இப்போது தமிழரின் இருப்பை தக்கவைப்பதே பெரும்பாடு என்றாகிவிட்டது தீர்வு வரும் என்று காத்திருக்காமல் தாயகத்தில் வாழும் மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் அவர்களது வாழ்ககை தரத்தை மேம்படுத்தும் செயல்களே தமிழரின் இருப்பை தக்கவைக்கும். கட்சி வேறுபாடு கடந்து தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம். இன்னும் தனியே பழம் வெட்டி வீரம் பேசும் வீணர்கள் புலம் பெயர் இணையங்களில் உசுப்பேற்றி விட்டு தமது குடும்பங்களை கவனிக்க சென்று விடுவார்கள். அவர்களை புறம் தள்ளி விட்டு தமிழ் கட்சிகள் ஜதார்தத வாழ்ககையை கருத்தில் கொண்டு செயற்படல் வேண்டும்.