Everything posted by tulpen
- F4F0F3D9-802F-4EA4-959C-62FB71467798.jpeg
- 07044075-A18A-44A5-8CCA-FE3BCD0F93D4.jpeg
- 90A0EB17-B26E-410F-9B9F-33605C0AD58D.jpeg
- F2DE892D-CB4E-445C-8143-B6509D749173.jpeg
- D25452D0-5D4D-4AC2-A1C1-4C468F8594BD.jpeg
- 49AC5612-1944-4A1B-B9F6-ACB0640AEF16.jpeg
- 091DCEFC-2719-451A-8375-D64E529EC7C3.jpeg
- 0EF6EC94-8F8A-4856-8EF2-C49945BF2D8E.jpeg
- 2825F971-5DF7-48B0-A341-12F7DAC70480.jpeg
- 1F1A25EB-B51E-4138-8342-2D511E42D95A.jpeg
- 21A5C076-EA74-470B-8FC0-433EB9CB7AAE.jpeg
- AB8AB868-60C6-482D-885B-638C76D0879E.jpeg
- 78C7736C-E3FA-4A1A-B4DF-14B9AEAAA7F1.jpeg
-
பால்ராஜ் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள். பால்ராஜ் தமிழீழத்தின் மிகச் சிறந்த தளபதி. ஶ்ரீலங்அக இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவரின் இழப்பு தமிழருக்கு பேரிழப்பு. ஆனால் மேலே பிரசுரிக்கப்பட்ட படத்தில் உள்ள வசனங்கள் அந்த மாபெரும் தளபதியை வீரனை அவமதிப்பது போல் உள்ளது. ஶ்ரீலங்காவின் பாரிய இராணுவ தளத்தை வெற்றி கொண்டான் என்று சொல்வது தான் பால்ராஜ்ககு பெருமையே தவிர 40000 பேரை நாக்கு தள்ள வைத்தான் என்று கூறுவது கீழ்தரமான வசனம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
படத்தில் பைலோடு வருபவர் எம்மை ஏமாற்றுவதற்கு அடிதளம் இட்டவரே முன்னே தடியோடு நிற்பவர் செய்த அரசியல் தான். மொத்தத்தில் இருவருமே எம்மை ஏமாற்றியவர்கள் தான்.
-
அனைவருக்கும் வணக்கம்
மிக அழகான கவிதை வாலி. இதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
-
அனைவருக்கும் வணக்கம்
சிறந்த விடுதலைப்போராளிக்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்த தலைவர் பிரபாகரனுக்கும் அவருடன் சேர்ந்து தமது உயிரைத் தியாகம் செய்த தளபதிகள் போராளிகளுக்கும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கும் வீர வணக்கங்கள்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
அப்படியானால் 1800 காலப்பகுதியில் கொலரா போன்ற கொள்ளை நோய்கள் வந்து எமது தாயகத்தில் பெருமளவு மக்கள் இறக்க என்ன காரணம்? போலியோவால் பெருமளவு சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்போது எமது தாயகத்தில் இயற்கைக்கு விரோதமாக மக்கள் வாழ்ந்தார்களா? இரண்டாவது பகுதி உங்களது பதிலில் பூமி தாய், சக்தி என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பெருமைகள் மட்டுமே. இங்கு எனது பெண்பிள்ளை தனியே இரவு கடைசித் தொடரூந்தில் பல முறை பாதுகாப்பாக வீடு திரும்பி உள்ளார். நீங்கள் கூறும் தாயாக சக்தியாக பெண்களை வழிபடும் நாடுகளில் எனது பெண் பிள்ளையை தனியே செல்ல ஒரு நாள் கூட விட முடியாத நிலை தான் அங்கு நிலவுகிறது. ஆகவே தாயாக மதிக்கிறோம் சக்தியாக மதிக்கிறோம் என்று வெறுமனே புலுடா விடுவதை நிறுத்தி சக மனிதராக நண்பியாக நினைத்தாலே போதும்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
மானுட சமுதாயத்தின் வளர்சசியில் பெண்களும் ஆண்களும் சம பங்கு வகித்தனர் என்றே வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலளவில் சற்று வலிமை கொண்டவரகள் என்பதை தவிர மற்றய விடயங்களில் வேறுபாடு இல்லை என்பதே ஜதார்த்தம். ஈழவிடுதலைப் போரிலும் அதனை துல்லியமாக அவதானிக்க முடிந்தது.விடுதலைப்புலிகளின் பல வெளியீடுகளில் மனித வாழ்வியலில் பெண்களின் சமத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டதை வாசித்துள்ளேன். அப்படி இருக்க இப்போதும் சிலர் சமூகத்தில் சம பங்கானவர்களை பலவீனமானவர்களாக கருதுவது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு. பால்ய விவாகங்களை கடைப்பிடித்து கணவன் இறந்தவுடன் பெண்பிள்ளைகளை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் நெருப்பில் தூக்கி போட்ட கேடுகெட்ட கலாச்சாரத்தை புனித இந்து கலாச்சாரம் என்று ஆங்கிலேயரிடம் வாதிட்ட அறிவிலிக் கூட்டமும் ஒருகாலத்தில் இருந்தது. அது முடியாமல் போன போது அவர்களை வெள்ளைப் புடவை கட்ட வைத்து சமூகத்தில் இருந்து குடும்்ப கொண்டாட்டங்களில் இருந்து ஒதுக்கி வைத்து மனரீதியில் துன்புறுத்தும் அறிவிலிக் கலாச்சாரத்தை புனிதம் என்று கூறும் அறியாமை இன்றும் உள்ளது. தாம் வகுத்த கேடு கெட்ட கலாச்சார கோட்பாடுகளை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களுடம் மட்டும் ஒப்படைப்பது பண்பாடற்ற செயல். ஒரு விடயம் தவறு என்றால் யார் செய்தாலும் தவறு. சரி என்றால் யார் செய்தாலும் சரி. விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்து எழுதி சம்பந்தனை எப்போதும் திட்டும் சிலர் இந்த விடயத்தில் புலிகளின் கோட்பாடுகளை மறந்து சம்பந்தன் கால கோட்பாடுகளை ஆதரிப்பது அவர்களின் புலிகளை ஆதரிப்பதாக கூறுவது வெறும் போலி என்பதை புலப்படுத்துகின்றது.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
ஆண்களுக் பெண்களும் இயற்கையிலே வேறுபட்டவர்களாம். அதனால் சம உரிமை இல்லையாம். ஒரு சில பித்தர்களின் வாதம் இது. ஆண்களின் அணிந்த அதே சீருடைகளுடன் அதே ஆயுதங்களுடன் ஆணுக்கு நிகராக சில சமயங்களில் ஆண்களை விட திறமையாக மாதக்கணக்காக வருடக்கணக்காக காட்டிலுலும் கடலிலும் இராபகலாக கண்விழித்து போரிடும் போது பெண்கள் சமமானவரார்களாக தெரிந்தார்கள். ஆண்களை விட ஆக்ரோசமாக போரிட்டு வெற்றிகளை குவித்த போது அவர்கள் வேறுபாடு தெரியவில்லை. கடலுக்கு அடியில் வெடிகுண்டான வெடித்த போது சமமாக தெரிந்தார்கள். இலக்குகளை தேடி கரும்புலிகளாக சென்ற போது அவர்கள் பலவீனமானவர்களாக தெரியவில்லை. ஏனென்றால் சுயநலம். அவர்களின் உழைப்பில் நாம் வாழலாம் என்ற சுலநலம். அவர்கள் உயிரைக்கொடுத்து போராடிய போது, தமது அவயங்களை இழந்து போராடியதால் கிடைத்த வெற்றியை தாம் தண்ணியடித்து கொண்டாடாலாம். ஆனால் பெண்கள் மதுபானம் வாங்கினால் மட்டும் ஐயோ கலாச்சாரம் போய்விட்டது அவர்கள் இயற்கையில் பலவீனமானவர்கள் என்று புலம்பல். மதுவுக்கு அடிமையானால் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது பாதிப்பு தான். அடிமையாகமல் சந்தோசத்திற்காக அளவுடன் பாவித்தால் ஆணுக்கோ பெண்ணுக்கோ அது சந்தோசம் தான் . இதுவே இயற்கை. அது அவரவர் விருப்பம்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
ராசவன்னியன் நான் அவ்வாறு கூறவில்லையே. அது அவரவர் விருப்பம். குடிப்பது தவறு என்று வரையறுப்பீர்கள் என்றால் அதை ஆண்கள் செய்தாலும் தவறு, பெண்கள் செய்தாலும் தவறு. அதைத்தான் குறிப்பிட்டேன்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
ராச வன்னியன் நான் அவதானித்த அளவில் இங்கு வாழும் இரண்டாம் தலைமுறை பிள்ளைகளில் கணிசமாக அவ்வாறு நடைபெறுகிறது. அவர்களின் கணவன்மார் அதை சகித்து கொள்ளுகின்றனர் என்பதை விட அதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தான் நிஜம்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
பாஞ்ச் உங்களால் அது முடிந்தால் நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம். யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
தமிழ் சிறி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் தனி உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் கற்பனையில் மிதக்க எத்தனை கிளாஸ் பியர் அல்லது விஸ்கி 🍻 உங்களுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் நானும் அப்படி கற்பனையில் மிதக்க ஆசையாக உள்ளது. எத்தனை கிளாஸ் அடிக்க வேண்டும் என்று உங்கள் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாமா?
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
மது பானம் வாங்குவது தப்பா? அல்லது பெண்கள்்வாங்குவது தப்பா? யார் யாரெல்லாம் மதுபானம் வாங்கலாம் என்று வரையறுப்பதுக்கும் தீர்மானிப்பது யார்? குடிப்பவர்கள் எல்லோரும் குடிகாரரா?