Jump to content

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4150
  • Joined

  • Last visited

  • Days Won

    9

Everything posted by tulpen

  1. ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை. சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன். 🎉🎂🎂🎂🎂🎂
  3. நோய் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி நெடுக்கஸ். உங்கள் அம்மாவின் இழப்பின் துயரம் மிக வலி மிகுந்தது. உங்களின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.
  4. பிரபா, Think Tank என்பது, அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டியதில்லை. அப்படி இருந்தாலும், அது தமது அரசியல் நன்மைகளை நோக்கியதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பலவேறு தரப்பிரைக் கொண்டதாக, அல்லது பலவேறு தரப்புக்களின் கருத்துக்களை விமர்சனங்களை காது கொடுத்து கேட்டு உள்வாங்கி ஒரு கருத்துருவாக்கத்தை அமைக்கும் குழுவாக, இருக்கலாம் என்பதுடன் உத்தியோகபூர்வ அமைப்பாக தம்மை வெளிப்படுத்துபவர்களாக இருக்கவேண்டிதில்லை என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரில் இவ்வாறான அமைப்பு இல்லை என்றாலும் எமது போராட்டம் திசை மாறிப் போக தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதன் போக்கு குறித்து காத்திரமான எச்சரிக்கை செய்த சிறிய அளவிலான கலவியாளர்களும் தவறான கண்ணோட்டத்தில், அவர கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டதும் எமது போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  5. முதலில் இவ்வாறான காணொளியை இணைத்தற்கு மிக்க நன்றி உடையார். நிலாந்தனின் இவ்வாறான அரசியல் தெளிவை நோக்கிய சிந்தனை வரவேற்கப்படவேண்டியது. சகிப்பு தன்மை அற்ற ஒற்றை கருத்துக்களை திணிக்கும் நடைமுறை தோல்வியையே தரும் என்றும், பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார். எமது மிதவாத தலைமைகளின் மட்டுமல்ல ஆயுத போராட்ட தலைமைகளிலும் அதே தவறுகள் இருந்த‍ததை சுட்டிக்காட்டுகிறார். எமது போராட்டத்தில், துரோகிக்கும் தியாகிக்கும் இடையே நூலிழை வித்தியாசமே இருந்த வரலாற்றை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். தமிழீழத்தின் எல்லைகள் என்று நாம் கூறும் இடங்களுகு அப்பால் நடத்தப்பட ஆயுத நடவடிக்கைகள் எமக்கு பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உண்மையை ஏற்றுக்கொள்கிறார். போராடும் சிறிய இனமான நாம் உலகில் நண்பர்களை உருவாக்காமல் எதிரிகளை உருவாக்கிய தவறான வெளியுறவு பார்வையை எமது தரப்பு கொண்டிருக்காமல் விட்டிருந்தால் தனிமை படுத்தபட்டு தோற்கடிக்கபட்டிருக்க மாட்டாது என்பதை தர்க்க ரீதியாக அலசுகிறார். அறிவுபூர்வமாக முடிவுகளை உள்நாட்டு ஜதார்த்தம், சர்வதேச ஜதாரத்தம் ஆகவற்றை கணக்கெடுக்மாமல் உணர்ச்சி வசப்பட்டு பாதிப்பகளின் அடிப்படை முடிவுகளை எடுத்தன் விளைவுகள் கசப்பானதாக எமக்கு இருந்த பட்டறிவை சீர்தூக்கி பார்க்க வலியுறுத்துகிறார். கருத்து சொல்பவர்களை பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் பாமரத்த‍னத்துக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் நிறுவனமயப்பட்டு இருப்பவர்களும் தான் ஒன்றை நடைமுறைப்படுத்தலாமே தவிர கருத்துக்கூறும் தனி நபர்களை இப்படி கேட்பது அறிவீனம். தாயகத்தில் விடுதலை போராட்ட காலங்களில் போராட்டத்தோடு பயணித்தால் உண்மைக்கும், மாயைக்கும் இடையிலான வித்தியாசத்தை இவரால் இன்று தெளிவாக புரிய முடிந்திருக்கிறது. இவரது இந்த அனுபவ பகிர்வு நிச்சயம் எமது போராட்டத்தை தலைமேற்று கொண்டிருக்கிற தலையேற்க போகின்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். இந்த காணொளியை இணைத்த உடையாருக்கு மீண்டும் எனது நன்றிகள்.
  6. நிழலி. உங்களது விசேட நாளாகிய உங்கள் பிறந்த தினம் உங்களுக்கு ம‍கிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்க வாழ்த்துகிறேன். Hava a Wonderful Birthday
  7. தமிழரின் உரிமைப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருப்பெற்ற காலத்தில் இருந்து தமது இளமைக்கால இன்பங்களைத் துறந்து, மக்களின் விடுதலைக்காகவே விடுதலைப் போரில் இணைந்து வீழ்ந்த அனைத்து வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் எமது கெளரவ வணக்கங்கள்.
  8. இனிமேல் இந்த பிரச்சனை குறைய வாய்ப்புள்ளது. எல்லாம் டிகிட்டல் மயம். 😀
  9. Auschwitz concentration camp
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.