வேறொன்றும் ஞாபகம் வருகிறது.
திருகோணமலையில் பேச்சுவார்த்தை நடந்தகாலகட்டம் .
அவர்கள் நிதி சேகரிப்பிற்காக டிக்கெட் அடித்து , அலுவலகங்களில் கொடுத்திருந்தார்கள் .
அலுவலக சிற் ஊழியரிடம் கொடுத்து விருப்பமானவர்களிடம் கொடுத்து பணத்தை சேர்த்து வைக்கச் சொல்லியிருந்தேன் ( பொடியங்கள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்கும்படி அரச மேலிடத்து உத்தரவு அமுலில் இருந்த நேரம் அது ) .
அடுத்த கிழமை பேச்சுவார்த்தை முறிந்து , பொடியங்களும் பெருவாரியான தமிழ் மக்களும் ஊரை காலி செய்து வடக்கு நோக்கி நகர , நம்மை போல போக இயலாத எஞ்சிய சிலர் தங்கியிருந்து , அரச படையின் அடடூழியத்திற்கு ஆளாகி பலர் அழிந்து சிதைந்து போக எஞ்சியோர் பல மாதங்களின் பின்னர் அலுவலக வேலைகளை ஆரம்பித்தனர் .
ஊரைக் காலி செய்து போன அந்த சிற்றூழியர் சிலகாலம் கழித்து திரும்பி வந்து, என்னிடம் தயங்கி தயங்கி வந்து , " ஐயா , அந்த டிக்கெட் அடிக்கட்டைகளும் சேர்த்த பணமும் பத்திரமாக , வீட்டு கூரையில் செருகி வைத்தபடியே இருக்கு , என்ன செய்ய " என்று கேட்டார் .
பணம் கொடுத்திருந்த ஆகக்குறைந்தது ஒரு சக ஊழியரை மிக்க கொடுமையான முறையில் ஆமிக்காரர் கொன்று போட்டதை நானறிவேன்.
நான் சொன்னேன் , கொடுத்தவர்களிடம் தேடி திரும்பக் கொடுப்பது பிரச்சினையான விடயம் , யார் யார் என்ன மனநிலையில் இருக்கினம் என்று தெரியாது , தொகைகளும் பெரிதில்லை . அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விடுங்கள் என்று ,,,