-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ நாவலில் மிகவும் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். அவர் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1970களில் இவர் கிழக்கு இலங்கை சம்மாந்துறையில் 4 ஆம் - 5ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் காலத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக "தூய இஸ்லாமிய" (அரேபிய) நடைமுறைகள் பள்ளிக்கூடங்களில், வீடுகளில் புகுத்தப்பட்டது, அதை ஊரில் யார் முன்னின்று செய்தார்கள், அவர்களுக்கான நிதி முதலில் ஈரானில் இருந்து தொடங்கி பின்னைய காலங்களில் சவுதியின் பங்கு எப்படி இருந்தது என்று விரிவாக எழுதியுள்ளார். அருமையான புத்தகம், கிடைத்தால் எடுத்து வாசியுங்கள். கிழக்கு இலங்கை முஸ்லீம் மக்களின் வட்டார மொழியோடு வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். Ethir Veliyeeduபர்தாAuthor: மாஜிதா Genre: நாவல் Language: தமிழ் Type: Paperback பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாம
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
1970, 1980 களில் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை விதைத்ததே ஈரான் தான். முஸ்லீம் அரசியல்வாதிகளினூடாக பள்ளிவாசல் முதல் பள்ளியறை வரை அபாய முதல் ஹலால் வரை மத அடிப்படை சிந்தனையை வளர்த்துவிட்டவர்கள் அவர்கள் தான்.
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
நம்ம குருநகர் மண்ணின் கதை ... இசைஞானி இளையராஜாவின் இசை.. ❤️
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
எனக்கு பிடிக்காத அரசியல் கட்சியோடு சேர்ந்து பயணிக்கும் ஒருவரை கைக்கூலி என்று நான் எடை போட்டால் உலகத்தில் என்னை தவிர மிகுதி அனைவரும் கைக்கூலிகள்!!!
-
இன்று உலக தாய்மொழி தினம்
உன் மொழிக்கருவுக்குள் இடம் தந்து, உயிர் தந்த தாயே... தமிழே... சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். 🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😁🫢🤣
-
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
இந்த பரதேசிக்கு வாக்களிக்க சொல்லி மக்களுக்கு வழிகாட்டிய "அவியல் அரசியல் வியாதிகளை" என்ன சொல்லலாம்.
-
Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
வணக்கம் கறுப்பி... மிக நீண்ட காலங்களுக்கு பிறகு உங்கள் பதிவை வாசிக்கிறேன். நலமாக இருக்குறீர்களா? 🙏
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இதில் குறிப்பிட்டுள்ள விடயம், உங்களூர் சமாச்சாரம்.. அப்படி போட்டி போட்டு கொன்றவர்கள் என்பது மாற்று இயக்க போராளிகளுடன் நடந்த சம்பவங்களா ? இல்லை பொதுமக்கள் சார்ந்த சம்பவங்களா? எங்கள் ஊரில் (நாவற்குழி) + கைதடி + தச்சன்தோப்பு + பகுதியில் புலிகளால் நடந்தது ஒரே ஒரு சம்பவம் அதுவே நான் சொன்ன என்னுடைய தோழி குறித்தது. நாவற்குழியில் மட்டும் 9 + கொலைகள் நான் இருந்த காலத்தில் (1984 - 1990) ஒரே வீட்டில் வசித்த மருத்துவர் குடும்பம் கணவன் மனைவி இன்னும் இருவர் என பேர் கொல்லப்பட்டார்கள் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தார்கள் (அவர்களை பற்றி இன்றுவரையும் எதையும் அறிய முடியவில்லை - இதை செய்தது தனியே இந்திய ராணுவமா இல்லை அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஒட்டுண்ணிகளா தெரியவில்லை)
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
1984 - 1987 காலப்பகுதியில் இயக்கங்களால் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக இராணுவத்ததோடு தொடர்புவைத்துக்கொண்டு இயக்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்தல் (ஒத்தோடிகள்) தொடர் கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இப்படியானவர்கள் மீது உடனடியாக இருந்தது. அதிலும் பல, தடவைகள் எச்சரிக்கை விடப்பட்டு, தொடர்ச்சியின் காரணமாக மரண தண்டனை வழங்கப்பட்டது. மரணதண்டனை கொடுத்ததை இன்று நான் ஆதரிக்கவில்லை. அன்று 16,17 வயதில் ஆழமாக சீர்தூக்கி பார்க்கும் பக்குவமும் இருக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில் கெரில்லா போராட்ட முறைகள் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தன என்று நினைக்கிறன். வெறும் கோழி திருடியவன், ஆடு திருடியவன் எல்லாம் மின்கம்பத்தில் கட்டப்படவில்லை. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பச்சைமட்டை பிரயோகப் படுத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டது. எங்கள் ஊரில் ஒரு இளம்பெண் (எனது வகுப்பு தோழி, பெயர் சொல்வதை தவிர்க்கிறேன்) இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரோடு காதல் போன்ற ஒரு உறவில் இருந்தார். இந்திய ராணுவம் தோழியின் வீட்டு வாசலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, களைப்பாறி, இளைப்பாறி போவார்கள். ஊர் மக்களுக்கும் கூட இதில் அதிருப்தி இருந்தது. அன்றைய நாவற்குழி இயக்க பொறுப்பாளர் அருள் ஓரிரு தடவைகள் தோழியின் வீட்டுக்கு சென்று தாய் தகப்பன் சகோதரர்களோடு உறவாடி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தும் இந்திய ராணுவம் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. தோழியும் இதை சீரியஸாக எடுக்கவில்லை. கடைசியில் பொறுப்பாளர் தோழியின் வீட்டு வாசலில் வைத்தே அவருக்கு தண்டனை வழங்கினார். அதிசயமாக அந்த பிள்ளையும் முகத்தில் பாரிய முகம் சிதைந்த காயத்துடன் உயிர் தப்பியது. இதேபோல வெள்ளையன் என்று அழைக்கப்பட்ட (பின்னாளில் EPRLF / EPDP அட்டகாச குழு உறுப்பினர் ) பல சிறிய திருட்டு செயல்களுக்காக, பெண்கள் சேஷ்ட்டை காரணங்களுக்காக இயக்க முகாமுக்கு அழைக்கப்பட்டு பச்சை மட்டை தண்டனை வழங்கப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார். இந்திய ராணுவம் வந்தவுடன் EPDP, EPRLF குழுக்களோடு சேர்ந்தது ஊரில் பெரும் அட்டகாசங்கள் செய்தார். இரண்டு, மூன்று அப்பாவி இயக்க ஆதரவாளர்கள் கொலைகளோடு கூட அவனின் பெயர் பேசப்பட்டது.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பெயர் தெரியாத முகநூல் தளத்தில், யாரோ நா... தாரி (மொக்கை) கருத்தை இப்படி ஒரு சமூகத்தின் கொள்கை தீர்மானமாக நீங்கள் எடுத்து காவித்திரிவது சிரிப்பை உண்டாகிறது சகோ. இதை எழுதியவன் நோக்கம் கூட இந்த சமூகத்தை அசிங்கப்படுத்திடுவதாகவும் இருக்கலாம்.
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
சிங்கம் அங்க போயும் Take 1... Scene 1... Camera ... Action பாணியில் நடிச்சு கதை வசனம் பேசி இருக்கு போல.
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
தம்பர்... வழமையான வழ வழ ... கொழ கொழ
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
படிக்க ஆர்வம் உள்ள பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் ... ஏகலைவன் தூர நின்று துரோணரின் கலையை பயின்றதும், ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்ததும் போல இந்த பிள்ளை எதோ செய்ய ட்ரை பண்ணி இருக்கு போல. இங்கு எந்த ஒரு பல்கலை கழக விரிவுரையிலும் யாரும் போய் உட்கார்ந்து இருந்து படிப்பிப்பதை கேட்டுக் கொண்டு இருக்கலாம். ID கார்டு பார்த்து உள்ளே அனுப்புவதில்லை. மாணவ விடுதிக்கு எப்படி போனார் என்பது தான் பெரிய கேள்வி?
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
இன்றைய திகதிக்கு உலக அரங்கின் நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியான உரையை நான் வாக்களித்த கட்சியின் பிரதமர் ஒருவர் உரையாற்றினார் என்ற பெருமையோடு...