Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

22 மார்ச் 2012 ஐநா மனித உரிமைச் சபைத் தீர்மானம் - இதனை எவ்வாறு புரிந்துகொள்வது?

Featured Replies

22 மார்ச் 2012 ஐநா மனித உரிமைச் சபைத் தீர்மானம் - இதனை எவ்வாறு புரிந்துகொள்வது?

31 மார்ச் 2012

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

Question%20New_CI.jpg

ஐநா தீர்மானம் பேசும் கருப்பொருளை வைத்து இப்பிரச்சினையைப் புரிந்து கொள்வது ஒரு முறை. இத்தீர்மானத்தை ஆதரித்த-எதிர்த்த நாடுகளுக்கிடையிலான அதிகார உறவுகளை வைத்து இப்பிரச்சினையைப் புரிந்து கொள்வது ஒரு முறை.

நாடுகளுக்கிடையிலான அதிகார உறவுகளில் காலத்தையும் இடத்தையும் கடந்த நிரந்தரத்தன்மை என எதுவும் கிடையாது.

இந்தத் தீர்மானம் அமெரிக்கத் தீர்மானம் எனத் திரும்பத் திரும்ப இலங்கை அரசினாலும், இலங்கை அரசைத் தாங்கிப் பிடிக்கும் நவ சமாஜக் கட்சியினராலும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியினராலும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீர்மானம் என்பது அவர்களது கிளிப் பிள்ளை வாதம். என்றால், 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளான உருகுவேயும், பெருவும் எவ்வாறு இப்போது இந்தத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பகுதியாக, அமெரிக்காவின் தென் ஆசிய நிலைகொள்ளலுக்கு எதிரான ஷரத்துக்களை தனது ஒப்பந்தத்தில் வலியுறுத்திய இந்தியா, ஏன் இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தது?

நைஜீரியா, கமரூன் போன்ற ஆப்ரிக்க நாடுகள் ஏன் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன? இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பெரும்பாலுமான இஸ்லாமிய நாடுகளுக்கும், குறிப்பாக சவுதி அரேபியாவுக்கும் கியூபாவுக்கும் என்ன பொதுத்தன்மைகள் இருக்கிறது? இலத்தீனமெரிக்க நாடான சிலி இரண்டுமுறையும் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததற்கு என்ன காரணம்?

நாடுகளுக்கு இடையிலான அதிகார உறவுகள் செயல்படும் அதேபொழுதில், அரசியல் தார்மீகப் பண்புகளும், அந்தந்த நாடுகளின் அனுபவம் சார்ந்து இந்த வாக்களிப்புகளில் பாத்திரம் வகிக்கவே செய்கிறது. சிலி நாட்டுக்கு ராணுவக் கொடுங்கோன்மை புரியும். மனித உரிமை மீறல் என்றால் அவர்களுக்குப் புரியும். உருகுவேயின் நிலையும் இதுதான். இந்தியாவின் மீது தமிழகத் தமிழர்களதும், அரசியல் கட்சிகளதும் பாதிப்பு இருக்கிறது. அது தன்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். புகலிடத் தமிழ் மக்களது எழுச்சிகளும், சேனல் நான்கின் ஆவணங்களும், மேற்கத்திய, அமெரிக்க மனித உரிமை அமைப்புக்களும் மேற்கு நாடுகளின் மீதும், அதனைக் கண்ணுறும் நாடுகள் மீதும் பாதிப்புச் செலுத்தின என்கிறார் இலத்தீனமெரிக்க நாடுகளின் நண்பரும் அரசியல் விமர்சகருமான ரான் ரைட்னவர்(1).

அமெரிக்காவும் இந்தியாவும் இத்தகைய தீர்மானத்தின் பங்காளிகளாக மாறியதன் பின்னணியில், புகலிட-தமிழக-ஈழத் தமிழ் மக்களின் கருத்தொருமிப்பு என்பது பாத்திரம் வகிக்கவில்லையா? இவர்களது ஆவேசத்தின் பின் தமிழ் மக்களின் வலிகளும் பாடுகளும் படுகொலைகளும் இல்லையா? இந்தத் தீர்மானத்தின் ஆதாரசுருதியாக அமைந்திருந்தது ஈழத் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களா அல்லது அமெரிக்காவின் அரசியல் பொருளாதார நலன்களா? இதற்காகவா உருகுவேவும், சிலியும், பெருவும், நைஜீரியாவும், இந்தியாவும் வாக்களித்தன? இந்தத் தீர்மானத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பாவி மூன்றாம் உலக நாடான இலங்கையின் மீதான தலையீடாகக் காண்பதும், அவ்வாறான பிரச்சாரத்தினை மகிந்தவும், வாசுதேவ நாணயக்கராவும் முன்னெடுப்பது என்பதும் சிங்கள இனவெறிக்குச் புரட்சிகர சிவப்புச் சாயம் பூசுவது போன்றது.

முதலில் பிரச்சினை இருக்கிறது என்பதனை இலங்கை அரசு ஒப்பக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் பிரெஞ்சுத் தூதரான தாயன் ஜயதிலகாவுக்கு இந்தத் தீர்மானத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது. பிடல் காஸ்ட்ரோவையம் லெனினையும் மேற்கோள் காட்டும் அவர், ராணுவம் ஆட்சியில் இருக்கும் மியான்மார் நிலைமையையும் இலங்கை நிலைமையையும் தவிர்க்கவியலாமல் ஒப்பிட வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறார். பூனைக்குட்டி தானாகவே கோணியிலிருந்து வெளியேறிய தருணம் இது.

மியான்மாரில் ராணுவம் ஆட்சியில் இருக்கிறது. அது மனித உரிமை மீறல் புரிந்தது. இலங்கை ராணுமயமாகி இருக்கிறது. இது மனித உரிமை மீறல் புரிந்தது. மியான்மார் ராணுவ ஆட்சி சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. இலங்கை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானம் ஒரு வேட்டைப்பொறி - டிராப் - என்பது தாயன் ஜயதிலகாவுக்குத் தெரிகிறது(2). பெருவெடிப்பை எதிர்பார்த்திருக்கும் பற்றவைக்கப்பட்ட ஒரு திரி - டிரிக்கர் - இத்தீர்மானம் என்பதுவும் அவருக்குத் தெரியும். இந்த வேட்டைப் பொறிமுறை என்பது, லிபியா, சிரியா போன்று ஒரு தொடர்ந்த செயல்போக்கு என்பதும், இலங்கை அரசு தன் மீதான பொறுப்புக் கூறலை நிராகரிக்குமானால், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் நடந்தேறும் என்பதும் அவருக்குத் தெரியும்.

இந்த வேட்டைப் பொறிமுறையிலிருந்து மீள வேண்டுமானால் நாடு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

ஐநா தீர்மானத்தின் வெற்றி அமெரிக்காவின் வெற்றி அல்ல என்கிறார் ஜயதிலக. இஸ்ரேலைக் கண்டித்து கியூபா கொணர்ந்து வென்ற ஐநா தீர்மானம், இலங்கைத் தீர்மானத்தை அடுத்தே நிறைவேறியது என்பதனைக் குறிப்பிடும் அவர், இந்தத்தீர்மானம் வென்றதில் இந்தியாவின் பாத்திரமே அதிகம் எனவும் சொல்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் போல இந்திய ஆதிபத்தியம் என இதனை மகிந்த அரசு திசைதிருப்பலாம். இந்திய- சீன முரணை அவர் அதிகரிக்க செய்யலாம். அவரது தந்திரோபாயம் அப்படித்தான் இருக்கப்போகிறது என்பது இலங்கையின் நகர்வுகளை அவதானிக்கிற எவரும் புரிந்து கொள்ள முடியும்.

மகிந்த இன்னும் பல்லாண்டுகள் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க, இதனை இலங்கை இறையாண்மையின் மீதான அச்சுறுத்தலாக, சிங்கள பௌத்த மேலாண்மையின் மீதான அசுசுறுத்தலாகக் கட்டமைப்பார். இது தென் இலங்கை அரசியலின் மீளமுடியாத பொறிமுறை. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு எது குறித்தும் அவர்கள் அக்கறைப்படப் போவது இல்லை.

ஈழத் தமிழர்களின் அணுகுமுறை இச்சூழலில் எத்தகையதாக இருக்க முடியும்? அமெரிக்காவுடனும், மேற்கத்திய நாடுகளுடனும், இந்தியாவுடனும் ராஜீய உறவுகள் கொண்டிருத்தல் மட்டும் போதுமா? கூர்மையாகக் கேட்பதனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையான மேலிருந்து கட்டப்பட்ட, அதிகாரமட்ட உறவுகளிலேயே அரசியலை நகர்த்துவது என்பது மட்டும் போதுமா? புகலிட- தமிழகத் தமிழர்கள் போல, அதினிலும் மேலான சக்தி கொண்ட ஈழ நிலப்பரப்பிலுள்ள தமிழர்கள் வெறும் அரசியல் பார்வையாளர்களாகவே வைத்திருக்கப்படப் போகிறார்களா அல்லது பங்காளர்களாக ஆகப்போகிறார்களா?

இலங்கை அரசியல் ஒரு நொடி உறைந்து போயிருப்பது போலத் தோன்றுகிறது. அவரவர்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அவதானித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

இலங்கையின் ஐம்பதாண்டு கால வரலாறு என்பதற்கு ஒரு இயங்கியல் பண்பு இருக்கிறது. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இல்லை என்பதில் தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கிடையில் இடது-வலது வித்தியாசம் என்பது இல்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அவர்களைப் பொறுத்து சிங்கள-பௌத்த பெருந்தேசியத்தைக் காப்பதுதான். இதைத்தான் அவர்கள் இலங்கை இறையாண்மை எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது இந்த மனோநிலை, ஐநா தீர்மானத்தினால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை இலங்கை அரசோ, தென்னிலங்கை அரசியல்வாதிகளோ முழுமையாகப் புறக்கணித்துவிட்டுச் செல்ல முடியாது. இந்த நெருக்கடியை ஈழத்தமிழர்க்குத் தலைமையேற்கும் கட்சி எவ்வாறு ஈழ மக்கள்திரள் அரசியலாக மாற்றுகிறது என்பதிலிருந்தே ஈழத்தின் அடுத்த அரசியல் நகர்வு என்பது தீர்மானிக்கப்படுவதாக இருக்கும்.

வடகிழக்கு இணைப்பும், காணி-போலீஸ் அதிகாரமும் கொண்ட அலகும், தமிழீழமும் இரு வேறு அரசியல் தேர்வுகள்தான். ஓன்று சாத்தியமில்லாத போது பிறிதொன்றை வலியுறுத்துவதற்கான தேவை எழுகிறது. நாடு கடந்த அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செயல்படுவதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடு கடந்த அரசுக்கு எதிராகப் பேசுவதும் தான் தவறானது. அவரவரது இடத்தில் அவரவரது அரசியலை முன்வைத்துச் செயல்படுவதே சரியான தேர்வாக இருக்க முடியும். சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக் கோருகிறோம். ஐநா தீர்மானம், ஐநா வழிகாட்டுதலுடன் இலங்கை அரசின் பொறிமுறையை செயல்படுத்தக் கோருகிறது. அதற்காக இப்போது பேசுவதுதான் சரியான அரசியலாக இருக்க முடியும்.

தனிஈழம் தொடர்பாகக் கலைஞர் பேசுவதில் ஏதும் தவறில்லை. புகலிடத்தில் நாடுகடந்த அரசு தமிழீழம் பேசுவதிலும் தவறில்லை. ஜனநாயக நிறுவன நடைமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தமிழீழத்தை முன்வைக்கிறார்கள். அவர்கள் வன்முறை அரசியல் பேசவில்லை. ஈழத்தினுள் ஒருவர் வெகுஜன வாக்கெடுப்பு தொடர்பாகவே ஒரு அரசியல் கட்சியை நடத்துவார் எனில் அதிலும் தவறில்லை. பன்முக அரசியலின், ஜனநாயக அரசியலின் மரபே இதுதான்.

ஓன்றின் அடுத்த கட்டமாகவே பிறிதொன்று இருக்கிறது எனப் புரிந்து கொண்டால் எதிர்மறையிலான விரோதங்களுக்கு வாய்ப்பு இல்லை.

ஆதாரங்கள் :

(1). Surprise Yet Uneven Human Rights Council Conclusion :

Ron Ridenour : Colombo Telegraph : 23 March 2012.

(2). After Geneva: Avoiding The Trap :

Dayan Jayatilleka : Colombo Telegraph : 27 March 2012

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.