Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முழு நிர்வாண கோலத்திலேயே உள்ளது

Featured Replies

இயலாமையினால் அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முழு நிர்வாண கோலத்திலேயே உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கும் ஆப்புவைத்துள்ள அரசு, நிவாரணங்களை நம்பியிருந்த மக்களை கஞ்சிக்கும் வழியில்லாமல் ஆக்கிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

சாதாரண மக்கள் பாவிக்கும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கூட அரசாங்கம் மோசமான முறையில் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது. உண்மையான மக்கள் பிரச்சினைகளை மடி மறைத்து அரசு புதிய வகையான மாயா ஜாலங்களை காலத்துக்கு காலம் நடத்தி வருகின்றது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க. வின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணா திலக கூறுகையில், யுத்தம் முடிவடைந்தும் நாட்டில் விலைவாசி குறைவடையவில்லை. மக்கள் பாவிக்கும் அனைத்து பொருட்களுக்கும் மிகவும் மோசமான முறையில் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது. நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு கூடுதலான வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ள அரசு சாதாரண மக்களை மிகவும் அநாகரிகமாக சுரண்டி வாழ்கின்றது.

மோட்டார் சைக்கிள் ஒரு இலட்சம் ரூபாவாலும் முச்சக்கர வண்டி ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கும் போது சாதாரண மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். புத்தாண்டில் பொதுமக்களால் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல் காணப்படவில்லை. அனைத்து பொருட்களும் விலையுயர்ந்து விட்டது. எரி வாயு மற்றும் பால்மா போன்றவற்றின் விலைகளும் உயர உள்ளன. தற்போதைய அரசாங்கத்தினால் வெற்றி இலக்குகளை அடைய முடியாது.

நாட்டின் கடன் தொகை மிகவும் அதிகமாக உள்ளதுடன் ரூபாவின் பெறுமதியும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஜெனீவாவை காட்டி உள்நாட்டுப் பிரச்சினைகளை மூடி மறைக்கப் போய் அரசு அவமானப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டில் ஐ.தே.க. வின் ஆட்சியில் சாதாரண மக்கள் மோட்டார் வாகனங்களை பாவிக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.

அதற்கு முன்னர் தனவந்தர்கள் மாத்திரமே வாகனங்களை பாவித்தனர். தற்போது அக் காலப் பகுதிக்கு நாடு நகர்கின்றதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது.

அமைச்சர்களான பந்துல குணவர்தனவும் சம்பிக்க ரணவாகவும் அரசின் கோமாளிகளாகவே உள்ளனர். ஒருவர் 2500 ரூபாவால் வாழ முடியும் என்கிறார் மற்றவர் மின் கட்டணத்தை குறைக்க மக்களை இருளில் இருக்கும்படி கூறுகின்றார். எனவே அரசின் வீண் விரயம், மோசடிகள் என்ப வற்றால் நாடு பெரும் ஆபத்துக்களை சந்தித்து வருகின்றது. பொருளாதார நிர்வாகம் பூச்சியமாகவே உள்ளது என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவெந்திர டி சில்வாவுக்கு மாத கார் செலவே பத்து இலட்ச்ச ரூபா எண்டால் நாடு மாசி கருவாடாகாமல்? 

இராணுவத்தில் மூன்று இலட்சம் பேரை குறைத்தால் தான் தப்பலாம்  ஆனால் செய்த கருமத்திற்கு கொஞ்சம் அனுபவியுங்கோ.

நாடு பெரும் ஆபத்துக்களை சந்தித்து வருகின்றது. பொருளாதார நிர்வாகம் பூச்சியமாகவே உள்ளது என்றார்.

0 இத்திலிருந்து -1,-2 என்று உருசியாவின் குளிர்கால றேஞ்சுக்கு அளவில் போகும்போல்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு பெரும் ஆபத்துக்களை சந்தித்து வருகின்றது. பொருளாதார நிர்வாகம் பூச்சியமாகவே உள்ளது என்றார்.

0 இத்திலிருந்து -1,-2 என்று உருசியாவின் குளிர்கால றேஞ்சுக்கு அளவில் போகும்போல்.........

அதெல்லாம் சின்ன குளிர் அதையும் தாண்டி அண்டார்டிக்கா லெவலில் -67 ⛄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன கிழமைதான் ஐரோப்பாவுக்கு கடன் கொடுக்க தாம் தயார் என பசில் கொக்கரித்தார் சிலவேளை அவருடைய சொந்தப் பணத்தை அல்லது சகோதரர்களின் இருப்பிலிருந்து கொடுப்பது பற்றியோ தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.