Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைவெறி சோனியாவைத் தேவதையாக்கும் சதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவெறி சோனியாவைத் தேவதையாக்கும் சதி.

Sonia.jpg

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படைகளுக்கு மிடையில் போர் நடக்கும் போது சில சமயங்களில் சிங்களப்படையினரின் கை ஓங்கும். அத் தருணத்தில் விடுதலைப் புலிகள் பின் வாங்கிக் கொண்டே சிங்களப் படையினர் மீது தாக்குதல்கள் நடாத்துவர். அத்தாக்குதல்கள் சிங்களப் படையினருக்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் கொண்டதாக இருக்கும். அந்த ஆளணி இழப்புக்கள் ஒரு கட்டத்தில் படைச் சம நிலையை புலிகளுக்குச் சாதக மாக்கும். பின்னர் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்கள், பக்காவாட்டுத்தாக்குதல்கள் பின்னால் இருந்து தாக்குதல்கள் போன்ற பல உத்திகளை கையாண்டு ஏற்கனவே இழந்த நிலப்பரப்பிலும் அதிக நிலப்பரப்பையும் சிங்களப் படைகளின் படைக் கலன்களையும் கைப்பற்றுவர் ஆனால் 2008இல் இருந்து அந்த நிலை இருந்தது. விடுதலைப் புலிகள் சிங்களப்படையினருக்கு ஏற்படுத்தும் ஆளணி இழப்புக்களை அயல்நாட்டில் இருந்து வந்த படையினர் ஈடு செய்தனர். அது எந்த நாடு என்று எமக்குத் தெரியும்.

எந்த நாட்டில் இருந்து இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் வந்து தமிழின அழிப்புப் போரில் சிங்களப் படையினருக்கு உதவினர் என்று எமக்குத் தெரியும்.

எந்த நட்டில் இருந்து வந்த படையினரில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று எமக்குத் தெரியும். அண்மைக்க்கால போர் வரலாற்றில் இது மிகப் பெரும் படைத்துறை ஆளணி இழப்பு என்பதும் எமக்குத் தெரியும்.

இலங்கையின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்கா 2009 ஆகஸ்ட் மாதம் முடிக்கத் திட்டமிட்டிருந்த போரை இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது யார் என்பது எமக்குத் தெரியும். அப்படி முடிப்பதாயின் அதிக அப்பாவிகள் கொல்லப்படலாம் என்று தெரிவித்த போது அப்பாவிகள் இழப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் போரை நடத்தவும் என்று சிங்களவர்களுக்கு யார் உத்தரவிட்டனர் என்று எமக்குத் தெரியும்.

சிங்களப் படையினர் மன்னாரில் இருந்து மேற் கொண்டு முன்னேற முடியாமல் தவித்த போது அங்கு என்ன தடைசெய்யப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன என்று எமக்குத் தெரியும். அந்தக் குண்டுகளை சிங்களவர்களுக்கு யார் வழங்கினர் என்று எமக்குத் தெரியும்.

ஈழக் கடலை எந்த நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் சூழ்ந்து நின்று தமிழர்களுக்கு உணவு ஆயுதம் போகாமலும் தமிழ்ரகள் தப்பி ஓடாமலும் காவல் நாய்கள் போல் காத்திருந்தனர் என்றும் எமக்குத் தெரியும்.

2009இன் ஆரம்பத்தில் இருந்து பிரபாகரன் தலை வேண்டும் என்று புலம்பிக்க் கொண்டிருந்தது யார் என்றும் எமக்குத் தெரியும்.

2009மே மாதம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி இலங்கையில் தமிழர்களைக் கௌரவமாக வாழவைப்போம் என்று கூறியதும் எமக்குத் தெரியும். பின்னர் தமிழர்களின் வீட்டில் சிங்களப் படையினர் இரவென்றில்லைப் பகலென்றில்லை எந்த நேரமும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று எதுவும் செய்யலாம என்ற நிலையை ஏற்படுத்த சிங்களவர்களுக்கு உதவியவர்கள் யார் என்று எமக்குத் தெரியும்.

2009 செப்டம்பர் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது சிங்களப் படையினர் செய்த மனித உரிமை மீறல்களுக்காக கண்டனம் தெரிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அதை கடும் பிரயத்தனம் செய்து இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது மானங்கெட்ட இந்தியா என்பதும் எமக்குத் தெரியும்.

போருக்குப் பின்னர் இலங்கை அகதி முகாம்களைப் பார்க்க வந்து தமிழ்ர்கள் போர்க்குற்றவாளி எனக் கருதும் மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திய பன்னாடைப் பன்றிக் கூட்டம் எது என்றும் எமக்குத் தெரியும். அது மட்டுமா டில்லியில் நடந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு வந்த போர்க்குற்றவாளிக்கு எந்த சொறி நாய்க்கூட்டம் செங்கம்பளம் விரித்து வரவேற்றது என்றும் எமக்குத் தெரியும்.

இவையெல்லாம் நாம் அறிந்திருக்க இப்போது புதிதாக ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அந்தப் பொய்:

  • அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்திருந்தது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியே பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் சொன்னாராம். சோனியா காந்தியின் இந்த முடிவுக்குக் காரணம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே எனப் பொய் கூறுகிறார்கள்.

இந்தியாவிற்காக இந்தியாவின் உதவியுடன் நடாத்தப்பட்ட இலங்கைப் போரில் 13வயதுச் சிறுவன் மட்டுமா கொல்லப்பட்டான். பிறந்த 13 நாளான குழந்தைகளும் கொல்லப்பட்டனர். உணவில்லாமல் பசியால் குழந்தைகள் இறந்தன. அவறை எல்லாம் பார்து பரவசம் அடைந்து கொண்டிருந்தவர் யார்?

வட இந்தியாவில் நடந்த சட்டசபைகளுக்கான தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியடைந்தது. ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் இனி காங்கிரசுக் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்பதை தமிழ்நாட்டுக் கதர் வேட்டிகள் நன்கு உணர்ந்து கொண்டன. காங்கிரசுக் கட்சி 2014 நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டுமாயின் தமிழர்களுக்கு உதவி செய்வது போல் நாடகமாட வேண்டும் அதற்காக ஜெனீவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால் திரை மறைவில் பல சதிகள் செய்து தீர்மானம் கொண்டுவரமுன்னர் தீர்மானத்து வாசகங்களை மாற்றியது. இந்தியச் சதிகளைப்பற்றி அறிய கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்:

அடுத்துக் கெடுத்த இந்தியா

தமிழர்களைப் பொறுத்தவரை சோனியா காந்தியும் அவரது காங்கிரசுக் கட்சியும் என்றும் மன்னிக்க முடியாத குற்றத்தை தமிழர்களுக்கு இழைத்து விட்டது. சோனியாவிற்காக வக்காலத்து வாங்குபவனோ அல்லது அவரது கட்சிக்கு வாக்களிப்பவனோ தமிழன் அல்லன்.

எச்சரிக்கை: கீழுள்ள படங்கள் கொடூரமானவை. இளகிய மனமுள்ளோர் பார்க்க வேண்டாம்:

>

>

>

1.bp.blogspot.com/-hf0_K5ldoUM/T3biyq5V81I/AAAAAAAAGlQ/0fE4bkdyO6k/s1600/war_crime-3.jpg

4.bp.blogspot.com/-M73uXvPkfyI/T3bizc_Y1ZI/AAAAAAAAGlY/LxV6B2c8Ou0/s1600/war_crime.jpg

1.bp.blogspot.com/-fssb4ZE8Trs/T3bi0CnmwBI/AAAAAAAAGlg/S04bvTwopMs/s1600/war_crime_1.jpg

4.bp.blogspot.com/-6C4FQK_PTio/T3bi1CxeqBI/AAAAAAAAGlo/fMu8DfLXt3M/s1600/war_crime_2.jpg

4.bp.blogspot.com/-Cel7CR9uqZk/T3bi150gWaI/AAAAAAAAGlw/FinppIBXcec/s1600/war_crime_3.jpg

4.bp.blogspot.com/-BadHtNy7TSM/T3bi21I_PQI/AAAAAAAAGl4/Xo03VKpYcGI/s1600/war_crime_5.jpg

இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான படங்கள் இதிலும் மோசமான படங்கள் உண்டு. இந்த இனக்கொலையின் பங்காளி யார்?

வேல் தர்மாவின் வலைப் பக்கத்திலிருந்து சுட்டது..........

Edited by இணையவன்
படங்களின் இணைப்பு மட்டும் தரப்பட்டுள்ளது.

ரகுநாதன் இதை தமிழக தமிழர்களும் அறிவார்கள்

காங்கிரஸ் கண்டிப்பாக தமிழ்நாட்டில் துடைத்து அழிக்கப்படும்

பல இடைஞ்சல்களை மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு தந்து வருகிறது

அதற்குண்டான பலாபலன் அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்

( இப்பவே மக்களிடயே காங்கிரஸ்காரன்னு சொன்ன மேலிருந்து கீழ வரைக்கும் ஒரு கேவலமான பார்வைதான் )

all%2Bindia%2Bcongress%2B1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகிறீங்க?

இந்தியாவின் காங்கிரஸ் அரசு ஆட்ச்சி ஜெனீவாவில் தமிழருக்கு ஆதரவாக வாக்களித்தது தப்பு என்கிறீர்களா? அல்லது இந்தியா எதிர்த்து வாக்களிதிருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீங்களா? ஐபிகேஎப் கால பகை பழி நிலையில் ஈழத் தமிழர்களும் அமரர் ராஜிவ்காந்தி assassination பகை பழி நிலையில் இந்திய மத்திய அரசும் தொடர்ந்தும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்க்க வேணும் என்கிறீங்களா?

முதலில் சோவியத் யூனியன் எரித்திரிய விடுதலையை ஆதரித்தது. பின்னர் சோவியத் எரித்திரியாவின் எதிரியான எதியோப்பியாவின் ஆதரவாளனாகியது.

அதனால் பின்னர் எரிதிரியா அமரிக்க ஆதரவைப் பெறும் வாய்ப்பு உருவானது. நல்லகாலமாக அப்போது உங்களைப்போன்று எரிதிரியா சிந்திக்கவில்லை. எதியோப்பியாவை ஆதரித்த அமரிக்கா நமக்கு வேண்டாம். அக்காலத்தய அமரிக்க விரோதப் பகை பழி நிலையில் இருந்து நாம் மாறக்கூடாது, அமரிக்கா நமக்கு சார்பாக மாறினாலும் அமரிக்காவை நாம் ஏற்க்கக்கூடாது என்று நினைதிருந்தால் இன்று எரிதிரியா என்று ஒரு நாடு இல்லை. முதல் எதிர்யை விட யாரும் நமக்கு நிரந்தர எதிரியில்லை. வெற்றி பெறுவது மட்டுமே ஈழ மக்களுக்குள்ள ஒரே தெரிவு.

எமக்கு அரபு நாடுகளின் ஆதரவுதேவை ஆனாப் அவர்களது மோதல் அரசியல் தேவையில்லை என்று அரபாத் இயங்கினார். அவர் இருக்கும்வரை பலஸ்தீனிய விடுதலை இயக்கம் பெரும் சக்தியாக இருந்தது.

ஈழத் தமிழருக்கு உகந்த நிலைபாடும் அதுதான். நமக்கு உலகத் தமிழரது தமிழக தமிழரது ஆதரவு மட்டும்தான் வேண்டும். அவர்களது பிழவுபட்ட மோதல் அரசியல் எங்களுக்கு வேண்டியதில்லை.இந்தவிடயத்தை உலக தமிழக தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழருக்கு விடுதலை பெறுவது மட்டும்தான் முக்கியம் முதல் எதிரியான சிங்கள ஆழும் வர்கத்துடன் மட்டும்தான் நமது மோதல். வேறு யாருடனும் நமக்கு மோதல் இல்லை. வேறு யாரும் நமக்கு நிரந்தரமான பகைவர்களுமில்லை. இலங்கை அரசைத் தவிர வேறு யாருடனும் பழி பகை முடிக்கிறது ஈழ விடுதலைக்கு எந்த விதத்திலும் முக்கியமில்லை.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகபதிவர்களின் பதிவுகளின் சாரம் என்னவென்றால், இந்தியாவின் உதவி எம்மை காப்பாற்ற வந்தால் அதை வேண்டாம் ஏன்று சொல்ல மாட்டோம். ஆனால் அது உண்மையில் சிங்கள உதவியாய் இருந்து எமது உதவியாக வேசம் மட்டும் போடுவதைதே இந்தக் கணங்கள் கூட நிரூபித்துக் கொண்டிருக்கின்றன! எனவே அந்த நியாயமான பயத்திற்கு நாமா? இல்லை இந்தியாவா காரணம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.