Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானத்தால் சிறிலங்காவுக்கு பாதிப்பு – முதல்முறையாக ஒப்புக்கொண்டார் பீரிஸ்

Featured Replies

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மூலம் சிறிலங்காவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற- ஜெனிவா தீர்மானம் குறித்த இரண்டு நாள் விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா அதற்கு ஆதரவு வழங்கியதாலும், பாதிப்புக்கள் ஏற்பட்டன. அதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

எமக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பதற்காகவும், எமக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காகவும் இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் நாம் பகைமை பாராட்டவில்லை. அவர்களும் எம்மோடு பகைமை பாராட்டவில்லை.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நாம் தூதரகங்களை மூடிவிடப் போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை. அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானது அல்ல.

எமது இராஜதந்திர உறவுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஆனால், எமது வளங்களுக்கு ஏற்றவகையில் சில இடங்களில் தூதரகங்களை மூடி சில இடங்களில் புதியவற்றைத் திறக்கவுள்ளோம்.

துருக்கியில் உள்ள தூதரக பணியகத்தை முழுமையான தூதரகமாக தரமுயர்த்தவுள்ளோம். நைஜீரியா, அசர்பைஜான், சீசெல்ஸ், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் புதிய தூதரகங்களை அமைப்பதற்கு சிறிலங்கா முடிவு செய்துள்ளது.

புதிய உலக ஒழுங்கிற்கமைய தூதரகங்களை மீளமைக்க வேண்டியுள்ளது.

எமக்கு நிதி கட்டுப்பாடுகள் உள்ளன. உலகில் 193 நாடுகள் உள்ளன. இவற்றில் 46 நாடுகளில் மாத்திரமே எமக்கு தூதரகங்கள் உள்ளன. எமது தேவைக்கிணங்க நாம் இவற்றை மீளமைக்க வேண்டும்.

அசர்பைஜானில் சிறிலங்காவின் நீலக்கற்களுக்கு நல்ல கேள்வி இருப்பதை அங்கு சென்ற போது உணர்ந்து கொண்டேன்.

இந்து சமுத்திரத்தின் தெற்கிலுள்ள மொரிசியஸ், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுடன் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக தொடர்புகளை விருத்தி செய்வது அவசியம்.

சில நாடுகளில் பல தசாப்தங்களுக்கு முன்னர் தூதரகங்களைத் திறந்தோம். தற்போது அவற்றின் அரசியல், பூகோள முக்கியத்தும் குறைந்து விட்டது.

சில நாடுகளில் எமது தேயிலைத் துறைக்காக தூதரகங்களை திறந்தோம். இன்று வரி கொள்கை காரணமாக அந்த நாடுகளில் எமது தேயிலை வர்த்தகம் வீழ்ச்சியடைந்து விட்டது.

அத்துடன் சில நாடுகள் அரசியல் ரீதியில் முக்கியமானவையல்ல. அல்லது முன்பிருந்த அரசியல் முக்கியத்துவம் குறைந்து விட்டது.

அனைத்துலக சமூகம் சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொண்டு வருவதற்கு முன்னர் அந்த நாட்டுக்கே உரிய தீர்வுகளை, முன்னெடுப்புக்களை செய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.

ஜெனிவாவுக்குச் சென்ற எமது குழுவினர் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டதாகவும், ஒற்றுமையின்றிச் செயற்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

ஆனால் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் தனித்தனியே நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து அதற்கேற்ற விதத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவு திரட்ட முற்பட்டனர்.

ஜெனிவா சென்ற அரசகுழுவுக்குத் தலைமையேற்றிருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க விவாதத்தில் பங்கேற்க ஏன் வரவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவர் அதிகாரபூர்வ பயணமாக உகண்டா சென்றுள்ளார். அதனால் தான் அவர் வரவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள 169 பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தக் கூடாதவையும் உள்ளன.

எவற்றை நடைமுறைப்படுத்துவதென்று சிறிலங்கா அரசே தீர்மானிக்கும்.

உலகில் எந்த நாட்டிலுமே ஆணைக்குழுக்களின் எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்திய வரலாறு இல்லை.“

என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.com/view.php?20120405105932

படிக்காத எங்களுக்கே அது விளங்கிவிட்டது. பட்டம் பெற்ற நீங்கள் எப்படி இவ்வளவு லேற்றா விளங்கிக் கொள்கிறீர்கள்?

இந்தச் செய்தியில் பாதிப்பு என்று சொன்னதை விட ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல் படுத்த முடியாதென்பதே அழுத்தமாக காணப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்கிறது சிங்கள அரசு, ஆனால் அது முழுமையாக அமுல்படுத்தப் படுவதோடு பொறுப்புக் கூறுவதில் இருந்தும் விலக முடியாதென்பதுதான் மேற்கின் நிலை.

எங்கே இருந்து தொடங்கி எங்கே போய் முடிக்கப் போராஞ்களோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.