Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், புத்தமதமாக்கல் என்பன இன நல்லிணக்கத்தை தடுக்கின்றன! – செண்பகத்தார்

Featured Replies

இலங்கை அரசு தயாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தமிழ் -சிங்கள நல்லுறவுக்கு முதலிடம் அளிக்கிறது. எனினும் இதற்கு முரணான நிகழ்ச்சி நிரலை அரசு தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது. ஈழத் தமிழர்களுடைய தாய் மண் தொடர்ச்சியாக அபகரிக்கப் படுகிறது.

தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வல்வெட்டித்துறைச் சந்தி விகாரை வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடியேற்றமும் புத்த மதக் கோவில்களும் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த மாதம் ஏப்றல் 2ம் நாள் கிளிநொச்சி மாவட்டம், உருத்திரபுரம், சிவநகர் கிராமச் சிவன் கோவில் இராணுவத்தால் அசுத்தமாக்கப் பட்டுள்ளது. ஆதிமூலம் வரை தலையில் சீருடைத் தொப்பி காலில் இராணுவக் காலணியுடன் சென்றவர்கள் தெய்வ நிந்தனை செய்துள்ளனர்.

புத்தர் சிலைகளும் புத்த மத நூல்களும் இந்தக் கோவிலின் உட்புறத்தில் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக இராணுவத்தினர் குற்றஞ் சுமத்துகின்றனர். அங்கு குழுமிய மக்களுக்கு, இந்தக் கோவிலை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு அந்த இடத்தில் மிக விரைவில் புத்த விகாரையைக் கட்டுவோம் என்று இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதே உத்தியைப் பின்பற்றிய இராணுவத்தினர் வவுனியா மாவட்டம் கனகராயன் குளத்தில் யாழ், கொழும்பு தேசிய நெடுஞ்சாலை ஓரமாகப் பாரிய புத்த மதக் கோவில் தொகுதியை அமைத்துள்ளனர். பிரதான விகாரையின் தூபியின் உயரம் 500 அடி. பொது மக்களுடைய காணி நிலங்கள் இவற்றிற்காக அடாத்தாகப் பறிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய் நிர்வாகப் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தி விநாயகர் ஆலயம் இராணுவத்தால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. அதே இடத்தில் இப்போது புத்த பிக்குகள் தலைமையில் ஒரு புத்த விகாரை கட்டப்படுகிறது.

அனைத்து இலங்கை இந்து மன்றம் புத்த சாசன அமைச்சரும் பிரதமருமான டி.எம் ஜெயரத்தினவுக்கு விகாரைக் கட்டுமானத்தை நிறுத்த உதவும் படி கேட்டுள்ளது. விநாயகர் கோவில் இடிப்பிற்கு உத்தரவிட்ட அவரால் எப்படி விகாரைக் கட்டுமானத்தை நிறுத்த உதவ முடியும்.

மார்ச் 16 2012ல் வெளிவந்த அனைத்துலக நெருக்கடி குழு (The International Crisis Group. Sri lanka”s North 1.The Denial of Minority Rights) “இராணுவமயமாக்கலும் தமிழர் நிலத்தைச் சிங்கள மயமாக்கலும் இலங்கைத் தீவில் இன்று இன நெருக்கடியை உருவாக்குகின்றன” என்று எழுதப்பட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் 2004-08 காலத்தில் செய்தி சேகரிப்புச் செய்த கல்வியாளரும் பத்திரிகையாளருமான பென்ஜமின் டிக்ஸ்(Benjamin Dix) மிக அண்மையில் ஜக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் இருந்து இது தொடர்பாக ஒரு விரிவான ஆய்வறிக்கையை எழுதியுள்ளார்.

ஆய்வறிக்கையின் தலைப்பு “அடிபட்ட புலிகள் பற்றி அவதானம்” (Beware the wounded Tigers}. அதிபர் மகிந்த இராஜபக்ச சிறிலங்கா தமிழர்களின் காயங்களை மாற்றத் தவறினால் இன்னொரு பிரபாகரன் எழுவதைத் தவிர்க்க முடியாது என்பது அதே ஆய்வுரையின் உப தலைப்பு.

தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள், நம்பிக்கை உட்பட. அதனால் இன்னொரு இளம் பிரபாகரன் தோன்றி மீண்டும் போரைத் தொடங்குவதற்கு நெடு காலம் எடுக்கப் போவதில்லை என்ற எச்சரிக்கையை அவர் தனது ஆய்வுரை மூலம் விடுக்கிறார்.

இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்குத் துணை போகும் நாடுகளுக்கும் படுகின்றன. அரசும் இராணுவமும் தமிழர்களைச் சீண்டிப் புண்படுத்துவதில் குறியாக இருக்கின்றன. பழம் பெரும் கோவில்கள் அழிக்கப்படுகின்றன. கிராமம் கிராமமாக நில அபகரிப்பு தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.

மட்டகளப்பு மாவட்ட குன்றுதோறாடும் முருகனுக்கு முக்கியமான குடும்பிமலை முருகன் கோவில் இப்போது புத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. புத்த பிக்குகளுக்கு வாழ்விடமாக இந்த கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு அரச செலவில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

குடும்பிமலைக்கு தொப்பிகல என்ற சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழர்கள் இந்தப் பகுதியைக் கடந்து செல்வதற்கு அனுமதி இல்லை. அவர்களுடைய தரவை என்ற கால்நடை மேய்ச்சல் நிலம் அங்கு தான் இருக்கிறது. சிலப்பதிகார காலந் தொட்டு கண்ணகி அம்மன் வழிபாடு இங்கு நடத்தப்படுகிறது.

அம்மனுக்குப் புனிதமான கோவிலுக்குச் செல்லும் பாதைகளும் அடைக்கப் பட்டுள்ளன. வருடா வருடம் நடக்கும் மடையும் குளிர்த்தியும் கேள்விக் குறியாகியுள்ளன. வடமுனை கிரான் றோட்டுச் சந்தியிலுள்ள அல்லி ஒடை என்ற தமிழ் கிராமம் அலிய ஒலுவா என்று சிங்களமாக்கப் பட்டுள்ளது.

தமிழ்க் கிராமங்கள் பெயர் மாற்றஞ் செய்யப்பட்டு பொல்லநறுவா மாவட்டத்துடன் இணைக்கப்படுகின்றன. மட்டக்களப்பு – பொல்லநறுவைத் தொடர்ச்சியைப் பிரித்து வௌ;வேறாக்குவது தான் அரசின் திட்டம். மேலும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பொருளியல் ஆதாரங்களை அழிப்பதற்கும் அரசு முனைப்புக் காட்டுகிறது.

நான்கு ஆதாரங்களான நெற் செய்கை, உப உணவுச் செய்கை. கால் நடை வளர்ப்பு, மீன்படி ஆகியவற்றை படிப்படியாகச் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நீள்காலத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழர்களுக்குச் சொந்தமான மட்டக்களப்பு கோராளைப்பற்றுத் தெற்கில் தமிழர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டக் கரையோரங்களில் கடற்படைத் தளங்களும் மீன்பிடித் துறை முகங்களும் நிறுவப்பட்டுள்ளன. இவை சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னோடி நடவடிக்கைகளாகும். வாகரையில் தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப் படுகிறார்கள்.

ஒரு பக்கத்தில் கடலும் உட்புறத்தில் நெற்செய்கைக்கு உகந்த நிலமும் பசுமையான காடும் புல் வெளியும் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கில் இருக்கும் வாகரை பறிபோகும் தறுவாயில் இருக்கிறது. கதிரவெளி பாளைச்சேனைத் தமிழர்களுக்கு வெளியேறும்படி இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 19.2012ம் நாள் கொழும்பில் இருந்து வாகரை வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆனந்த கிஷோர் தணிகாசலத்தின் குடும்பத்திற்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தின் உறுதி ஆவணங்களைக் கைப் பற்றிச் சென்றுள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை ஆணையத்திடம் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதிலும் மோசமான நடவடிக்கைகள் நடக்கின்றன. சுண்டிக்குளத்தில் இருந்து கொக்குளாய் வரை கிழக்காத்தை, மாதிரிக்கிராமம், உப்புமாவெளி, துண்டி, அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகியவை உட்பட்ட கடற் கரையில் பாதுகாப்பு அமைச்சு சிங்கள மீனவர்களைக் குடியேற்றியுள்ளது.

முல்லைத்தீவு நந்திக் கடலில் இறால் பிடிப்பதற்கு சிங்கள மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுத் தமிழ் மீனவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வடமராச்சி கிழக்கிலுள்ள மருதன்கேணி, உடுத்துறை மீனவர்களின் வீடுகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி திரியாயில் புத்த பிக்குகளும் சிங்களக் குடியேறிகளும் 3000 ஏக்கர் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். திரியாய் என்ற தமிழப் பெயர் கிரிகந்த என்று சிங்களமாக்கப் பட்டுள்ளது. அதே பகுதி இலந்தைக் குளத்தில் 320 ஏக்கர் தமிழர் நிலம் பறிபோயுள்ளது. மகாகங்க வேவா என்ற புதிய பெயர் அதற்குச் சூட்டப்பட்டுள்ளது.

மே 2009க்குப் பிறகு வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தொடுக்கும் பகுதியிலுள்ள கொக்குளாய் பகுதியை சிங்களமயமாக்கும் திட்டத்தை அரசு தீவிரமாக்கியுள்ளது. இந்தப் பகுதி மண்ணில் இல்மனைற், றுட்டைல் கனிமங்கள் செறிவாகக் காணப்படுகின்றன.

வெலி ஓயா எனப்படும் புதிய மாவட்டம் ஓக்ரோபர் 2011ல் திறக்கப்பட்டு அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரிக்கும் ஆப்பாக முன்பு தமிழர்களின் மணல் ஆறாக இருந்து இப்போது சிங்கள வெலி ஓயாவாக மாற்றப்பட்ட நிர்வாக அலகு அமைகிறது.

தமிழர்களுக்குச் சொந்தமான 3500 ஏக்கர் நிலம் இந்த வகையில் பறிபோய் விட்டது. பழம்பெரும் தமிழ்க் கிராமங்களான குமிழமுனை, பழம்முறிப்பு, தென்னமரவாடி, கரைநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய், கரைதுரைப் பற்றைச் சேர்ந்த கொக்குளாய் என்பனவும் பறிபோகும் தறுவாயில் இருக்கின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமமான தென்னைமரவாடி தமிழ் விவசாயிகள் தமது நிலங்களை அண்மையில் விதைப்பதற்குத் தயார் படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இராணுவ ஆதரவுடன் அயல் கிராம சிங்களவர்கள் விதைப்பை நடத்தி முடித்து விட்டார்கள்.

தென்னைமரவாடிக்கு அருகாமையில் முன்பு இருந்த தமிழ்க் கிராமங்கள் இப்போது பதவியா சிறிபுர, சிறி திஸ்சபுர, சமன்புர, கெமுனுபுர, சிங்கபுர என்ற சிங்களக் கிராமங்களாக மாறிவிட்டன. 1984 டிசம்பரில் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் இங்கு வாழ்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

அவ்வாறு விரட்டப்பட்டவர்கள் கால்நடையாக அக்கரைவெளி, கோட்டைக்கேணி, பிள்ளையார் கோவில், கொக்குத்தொடுவாய் ஊடாக முள்ளியவளைக்கு வந்து பொன்னகர் என்ற குடியிருப்பை உருவாக்கி வாழ்கின்றனர். இவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்களா என்று கேட்கிறோம்.

ஒருவிதமாக கொக்குளாய், கரைநாட்டுக்கேணி, புளியமுனைக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்த துணிச்சல் மிகுந்த தமிழர்களுக்கு மீன்பிடி உரிமையை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. சிங்கள மீனவர்களுக்கு மருத்துவ உதவி, நிரந்தர குடியிருப்பு, மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொக்குளாய் கடலேரியின் முகத்துவாரத்தில் சிங்களவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் மர நிழலிலும் கூடாரங்களிலும் வாழ்கின்றனர். இன்னும் 1500 ஏக்கர் நிலத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

அந்த நிலத்திற்குரிய தமிழர்கள் செட்டிக்குளம் மெனிக் பாம் தடுப்பு முகாமிலும் பிற இடங்களிலும் முடங்கிக் கிடக்கிறார்கள். அரசு கசியவிட்டுள்ள தகவலின் படி மீள்குடியேற்றம் எட்டாக் கனியாகத் தான் இருக்கிறது. சிங்களக் குடியேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.