Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூம்புகார் - தாகம் தனியா அலைகளும்...கடல் திண்ணும் கரைகளும் - இரா.கோமகன்

Featured Replies

பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:-

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.

IMG_0032-1.jpg

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?

phompuhar%201.jpg

உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

poomphuar%202.jpgஅறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தமிழ்க கடற்கரை 906 கீ.மீ நீளம் கொண்டது. இந்திய கடற்கரை நீளத்தில் 13 சதவிகிதம். கடற்கரையில் நாட்டின் 25 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். தமிழக மக்களில் 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் மீன்பிடித்தலில் நேரடியக ஈடுபட்டுள்ளனர். தமிழக மக்கள் சிறந்த கடலொடிகள் மட்டுமல்ல கடலின் தன்மையை முழுமையாக அறிந்திருந்தனர். கடல் விஞ்ஞானம் பிடிபட்டிருந்தது. கடல் நீரோட்டம், அலைகள், காற்று, வளி மண்டல மாற்றங்கள், கடற்கரை மண் தன்மை, கலங்கள், கடல்வாழ் உயிரிகள் பற்றிய அறிவு வாய்க்கப்பெற்றவர்களாக வாழ்ந்தனர். இவை நாகை மாவட்ட நெய்தல் மக்களுக்கும் வாய்திருந்தது.

ஒரு செம்படவப்பெண் தன் துணைவன் எப்பொழுது கரைவருவான் கடல் தொழிர்முடித்து என்பதை கடற்கரை மணலில் ஒரு குச்சியை சொருகி அதன் இருகு, இளகு தன்மையை வைத்தே ( due to high tidies, low tides and ocean currents makes the shore sand texture) சொல்லிவிடுவாள். கடல் நீரோட்டதில் அலை ஏற்றதில் கரை அடையும் படி கலம் செலுத்தும் நுட்பம் இருந்தது. மீனவ பெண்களின் கடல் அறிவு அபரமானது.

கடல் ஆமைக்கூட்டம் பல ஆயிரம் கீ.மீ தூரம் வந்து இனப்பெருக்கம் செய்து திரும்பும் அழகான கரைகொண்ட பகுதி தமிழ் நெய்தல் நிலம் குறிப்பாக நாகைமாவட்ட கடற்கரை. கடல் ஆமைகள் கடலின் நீரோட்டத்திற்கு எற்ப நீந்துபவை. நாற்பது நிமிடத்திற்கு ஒரு முறை கடல் மேல் மாட்டம் வந்து நீருள் நீந்தும். ஆமைகளை தொடர்ந்து கலம் செலுத்தி புதிய கடற்கரைகளை கண்டுள்ளனர். அவர்கள் கண்டடைந்த கரைகளில் தமிழ் பெயர்கள் விளங்குவது பற்றிய ஆய்வுகள் தொடருகின்றன.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை நல்ல களங்கரை கூட, ஆனால் இந்த கடற்கரை தொடர்ந்து அரிப்புக்குள்ளாகிவருகிற்து. முனநீர் பரப்பின்( FORE SHORE) கடல் கிடைமட்டதில் இருக்கும் பள்ளதாக்கில் ( submarine cannyon ) ஆழி நீரோட்டம் நிகழ்துத்தும் பௌதிக வினைகள் இந்த அரிப்புக்கு கரணமாக இருக்ககூடும். இது பற்றிய ஆய்வை அரசு துறைகள் மேற்கொள்ளவேண்டும். புகார் நகரம் அழிந்தது இதனால் தான். தற்பொழுது கூட பூம்புகரின் ஒரு பகுதியான வானகிரியில் ஐந்து ஆண்டுகளில் 70 மீட்டர் அளவிற்கு நிலத்தை கடல் கொண்டு விட்டது.

கரையில் இருந்த மாரியம்மன் ஆலயம் கடலால் விழுங்கப்பட்டுவிட்டது. இந்த புகைபடங்கள் சாட்சி. இந்த மாரியம்மன் கோவில் மகாமண்டபம் அதன் பின் மூன்று தனித்தனி விமானங்கள் கொண்ட மூன்று பெண் தெய்வங்களுக்கான கருவரைகள் கொண்ட கோவிலாக இருந்தது. 2004-ம் ஆண்டு சுனாமிக்கே தப்பிய கோவில் சுற்றுமதில்களை பெற்றிருந்தது.

001.jpg

இப்படம் 1994-ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்டது.

இக்கோவிலுக்கு வடபுரத்தில் 700 மீட்டர் தொலைவில் காவேரியாற்றின் கழிமுகத்துவாரம் உள்ளது, இக் கடற்கரையில் கடல் நீரோட்டம் ( ocean current ) பெரும்பாலும் வடக்கு நோக்கியே இருக்கிறது, இதனால் மணல் ஓட்டமும் (littoral drift ) வடக்கு நோக்கி நகர்கிறது.

கடற்கிடைமட்ட பள்ளதக்கால் இவை இங்கு அதிகமாக உள்ளது. இதனால் காவேரியாற்றின் கழிமுகம் முடப்பட்டே இருக்கிறது. வாடைகாலத்தில் தெற்கு நோக்கி கடல் ஓட்டம் இருப்பதால் மணல் சேருவது குறைவதால் முகத்துவாரம் திறந்திருக்கும்.

vanagiri%20poombuhar.jpg

இப்படம் 1995-ம் ஆண்டு இறுதியில்

ஆனால் தற்பொழுது நிழந்திருப்பது இந்த கோவில் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. கோவில் இருந்த இடத்தில் அதன் விமானத்தின் கூடு மட்டும் இடிந்த நிலையில் கடலால் இழுத்து செல்லப்படவில்லை கட்டுமானதின் தொழினுட்பதிரணை நாம் வியக்ககூடும் எதிர்வரும் பேராபத்தை உணரானமல், கூடவே அனல் மின்நிலையங்கள் அமையபோவதாக தகவல் உண்டு. கடற்கரை அருகில் கப்பலை நிறுத்தி அங்கிருந்து குழாய் முலம் நிலக்கரியை இறக்குமதி செய்யும் இயற்கையான வனப்பை இக்கடற்கரை பெற்றிருப்பதே அனல் மின் நிலையநிறுவனக் கவர்ச்சிக்கு காரணம்.

IMG_0032-1.jpg

இப்படம்2009-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

IMG_1267.jpg

இப்படம்2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

IMG_1265.jpg

கோவில் இருந்த இடம் தாண்டி கடல் எல்லை 15 மீட்டருக்கு வந்துவிட்டது. அனல் மின்நிலையம் வரக்கூடாது என்ற மக்கள் போராட்டத்தில் பிளவுண்ட குழுக்கிடையான மோதல் துப்பாக்கி சூடு வரை சென்றது அதிகார சதுராட்டத்தின் கதை. இழக்கப்போவது நெய்தல் நிலம் மட்டுமல்ல வாழ்வும் தான்.

நகராத்தார்கள் ( செட்டிமார்) எல்லா சூழல்கள் பாற்றி நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களவே இருக்கின்றனர்.புறதின் அனுபவதொகுப்பாக இருந்ததினால் ஆழிநிர் கொள்ளா இடம் தேடி புலம் பெயர்ந்துள்ளனர். இங்கு வாழும் மீனவர் தங்களை மீன்செட்டி என்று அழைத்துகொள்கின்றனர். இந்த சமூகத்துக்குள்ளே தான் இவர்களின் கொள்வினை கொடுப்பினை நிகழ்கிற்து. இவர்கள் புலம் பெயராமல் இருந்தவர்களும் தன் குழுவுடன் இணையமுடியாத மலெஷிய செட்டிமார் வகையறவும் என கவிஞ்ர் அறிவுமதி கூறுவார். நெய்தல் சுழலால் மீன் பிடிக்க தள்ளப்பட்டிருக்கலாம்.

IMG_1260.jpg

wwww.Tamilkathir.com

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.