Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு - தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் நிலை! இதனைத் தடுத்து நிறுத்தப்போவது யார்? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

‘பாதைகள் எல்லாமே முடிந்து போய்விட்டன, ஆனாலும் பயணத்தைத் தொடரவேண்டிய நிலையில் இன்று தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்’ என்றொரு கவிஞன் சொன்னான். நிச்சயமாக அதுவே உண்மையாக இருப்பதுபோலத் தோன்றுகின்றது. மிக நீண்டகாலம் நாம் தமிழர்கள் தங்கள் சுயத்திற்காகவும் தங்கள் வாழ்நிலத்திற்காகவும் போராடியிருக்கின்றார்கள்.

அந்தப் போராட்டங்களுக்கு பயங்கரவாதச் சாயம் பூசி முடக்கிய சர்வதேசம் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கூறியிருந்தது. நிச்சயமாக அதற்கான முஸ்தீபுகளையும் மேற்கொண்டிருந்தது. ஆனால் அவை எதுவுமே இன்றுவரைக்கும் எமக்கொரு நிம்மதியான வாழ்வை பெற்றுத் தரவில்லை என்பது மட்டும் மறுக்கப்படாத உண்மையாக இருக்கின்றது.

யுத்தம் முடிந்துவிட்டது, இந்த நாட்டில் ஜனநாயக சூழல் மலர்ந்திருக்கின்றது என்று மற்றொரு பக்கம் சிறீலங்கா அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த ஜனநாயக சூழல் என்னவோ நிச்சயமாகவே எமக்குக் கிடையாது. தமிழர்கள் நாங்கள் மண்ணுக்காகவும், எமது சுயத்திற்காகவும் இன்றுவரையில் போராடிக்கொண்டே தானிருக்கின்றோம்.

நாளையும் போராடப்போகின்றோம் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. இது சர்வதேசத்திற்கும் புரியவில்லை, எங்கள் தலைவர்களுக்கும் புரியவில்லை என்பது வேதனை மிகுந்த மற்றொரு பக்கமாகும். அதாவது யுத்தமே இந்த நாட்டில் இனப்பிரச்சினை எனச் சில சிங்களத் தலைமைகள் இன்று கூறத்தலைப்பட்டிருக்கின்றார்கள். அந்தக் கருத்தையொட்டி யுத்தத்தை முடித்துவிட்டால் இந்த நாட்டில் ஒற்றுமை தானாக உருவாகிவிடும்.

யுத்தத்தை முடித்துவிட்டால் யாருக்கும் எதனையும் வழங்கத் தேவையில்லை என்ற அதிமேதாவித்தனமான கருத்துக்களையும் அதே சிங்களத் தலைமை புகுத்தியே நிற்கின்றது. ஆனால் அவ்வாறில்லை. இனப்பிரச்சினையால் இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றது என்பதே உண்மை.

எனவே இனப்பிரச்சினைக்கான தோற்றுவாய்கள் வேறு எங்கோ இருக்கின்றது. அது யுத்தம் நடைபெற்றால் உறங்கு நிலையிலும், யுத்தம் தீர்ந்துபோனால் வளர்நிலையிலும் தன்னை இருத்திக்கொள்ளும். இந்த யதார்த்தத்தையே இன்று தமிழர்கள் நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் முடிந்த பின்னரும் இனப்பிரச்சினைக்கு எவையெல்லாம் தோற்றுவாய்களாக இருந்தனவோ அவையெல்லாம் இன்று வளர்நிலையில் தம்மை இருத்திக் கொண்டிருக்கின்றன.

378109school.jpg

அதாவது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பேரினவாத பௌத்தத்தை எமது சமய விழுமியங்களுக்குள் இடைச்செருகல் செய்தல், எமது மொழிச்சிதைப்பு, கலாச்சார, பண்பாட்டுச் சிதைப்பு போன்ற ஆக்கிரமிப்பு வடிவங்கள் இன்று வளர்நிலையில் தம்மை இருத்திக்கொண்டு வளர்ந்து வருகின்றதை நாங்கள் கண்டு கொண்டிருக்கின்றோம். அனுபவத்தின் ஊடாக உணர்ந்து கொள்கின்றோம்.

இதனை உணர்த்தும் வகையில் அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிக்கொண்டார். ‘நாங்கள் எங்கள் மண்ணுக்காகவும், எங்கள் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, எமக்கே உரித்தான வளங்கள் அனைத்திற்காகவும் போராடினோம், போராடிக் கொண்டிருக்கின்றோம், போராடவேண்டும். எனவே அடுத்த தலைமுறையிடம் இந்த கருத்துக்களைப் புகுத்துங்கள், இந்த சிந்தனை வாதத்தில் எமது அடுத்த தலைமுறையினரை வளர்த்தெடுங்கள்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் என்ன மனோநிலையில் அதனைக் குறிப்பிட்டார் என்பது பற்றி எமக்குத் தெரியாது. ஆனால் அவர் குறிப்பிட்ட அந்தக்கருத்துக்களில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஒரு யதார்த்த ஓட்டம் தெரியவே செய்கின்றது. நிச்சயமாக எமது அடுத்த சந்ததிக்கு எங்களின் கடந்தகாலம், எமது போராட்ட வரலாற்றுப் பாகங்கள் நிச்சயமாகவே தெரிந்திருக்கவேண்டும். அதை நாம் அனைவருமே ஏற்றுக் கொண்டாகவேண்டும். யுத்தத்தின் பின்னர் தற்போது நடந்து கொண்டிருக்கும் பல விடயங்கள் பலருக்குத் தெரியாதவொன்றாகவே இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும், இன்று புத்தர் சிலைகள் இல்லாத பகுதியே கிடையாது என்று சொல்லுமளவிற்கு புத்தர் சிலைகள் விகாரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில், யாழ்ப்பாணத்தில், என சிங்களக் குடியேற்றங்கள் நன்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

திடீரென்று வந்திறங்கிய சிங்கள மக்கள் எமக்கு இங்கே நிலங்கள் இருந்தன. நாங்கள் இங்கேயிருந்தோம் எங்களை இங்கேயே வாழவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனடியாகவே அவர்களுக்கு அரச காணிகளைத் தாரை வார்த்துக் கொடுத்த கருணையுள்ள இந்த அரசாங்கம், அந்த இடங்களில் நிரந்தரமாகவே சிங்கள மக்களைக் குடியேற்றியிருக்கின்றது.

இதைவிடவும் ஒருபடி மேலேபோய் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை ஒன்றிணைத்து அந்த பிரதேசங்களுக்கென தனியானதொரு பிரதேச செயலகமே அமைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இங்கு நடப்பதென்ன? முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு கரையோரப் பகுதியையேனும் தமிழர்களுக்கென்று யாரும் காட்டமுடியாத நிலையில் அத்தனை பகுதிகளும் சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.

army%2001a.jpg

இந்த நிலை விரைவில் ஏனைய மாவட்டங்களுக்கும் வரலாம், ஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி சிங்களத்தினால் விழுங்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று வடக்கில் அத்தனை பகுதிகளிலும் எந்தவிதமான அனுமதியுமின்றி புத்த விகாரைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சிச் சட்டங்களின் கீழ் புதிதாக ஆலயங்களை அமைப்பதற்கு முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் அவை பின்பற்றப்படுவதே கிடையாது. இதற்கிடையில் இவ்வாறு அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரைகளை இராணுவத்தினரே நேரடியாக நின்று அமைக்கின்றனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதைப்போன்று இந்துக்கள் உள்ள இடத்தில் இந்துக் கோவில்களையும், கிறிஸ்தவர்கள் உள்ள இடத்தில் தேவாலயத்தையும் அமைக்கலாம். சிங்களவர்களே இல்லாத இடங்களில் எல்லாம் எதற்காக விகாரைகள் கட்டப்படுகின்றன?

இதைப் பௌத்த பேரினவாத பரப்பல் எனவும், எங்கள் அடையாளங்களைச் சிதைக்கும் எமது தனித்துவங்களை சாகடிக்கும் ஒரு திட்டமிட்ட செயல் என்று கூறுவதைத்தவிர வேறு எப்படிக் கூறமுடியும்? இன்றைக்கு 60 வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சி - உருத்திரபும் பகுதியிலுள்ள சிவனாலய வளாகத்தில் விகாரை இருந்ததாக கூறிக் கொண்டு இராணுவம் வந்திருக்கின்றது.

எங்கள் ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் வரைக்கும் சப்பாத்துக் கால்களுடன் அது செல்கின்றது என்றால், தன்னுடைய மதத்தில் மதம் கொண்டு ஏனைய மதங்களை எள்ளி நகையாடும் தன்மையினை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடிகின்றது. குறித்த ஆலயத்தின் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட நீண்ட வரலாற்றைச் சொல்லி நிற்க வல்ல தொல்பொருட் சான்றுகள் இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டன.

அவை கொழும்பு நூலகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக கூறி எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் இன்று அந்த தொல்பொருட்சான்றுகள் எங்கிருக்கின்றன என்றே தெரியாது. இதேபோன்ற வரலாற்றுச் சிதைப்புத்தான் எதிர்காலத்திலும் நடக்கப்போகின்றன. எனவே தேசிய அரசியலில் இராஜதந்திரம் பேசும் எங்கள் அதிமேதாவிகள் இந்த விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும்.

எல்லாமே தீர்ந்துபோன பின்னர், எல்லாமே எரிந்து நாசமான பின்னர் தமிழீழம் கிடைத்தாலும் தமிழர்கள் தமிழர்களாக வாழமுடியாது என்பது மட்டும் உண்மை. இதை அனைவருமே புரிந்து கொண்டாகவேண்டும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.