Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியக்குழுவினருடனான சந்திப்புக்கள் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களது கருத்துக்கள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA-MPs-150seithykal.jpg

அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் வடக்கின் உண்மை நிலைவரம் போன்ற விடயங்களை மிகவும் ஆழமாக இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுடன் இருதரப்பும் மனம்விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பரந்தளவில் பேசியுள்ளோம்.

இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்புகளையும் தேவையான உதவிகளையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விஜயமானது அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக்கும் தீர்வுத் திட்டத்துக்கும் ஓர் அழுத்தமாக அமையும். மூன்றாம் தரப்பின் தேவை பேச்சுவார்த்தைகளின் முன்னெடுப்பிலேயே தீர்மானிக்கப்படும். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படா விட்டால் மூன்றாம் தரப்பு அவசியமானதாகும்.

சிறிலங்கா அரசுடனான பேச்சுகள் குறித்து நாம் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு தெளிவுப்படுத்தினோம். அத்துடன், இதுவரையில் நடைபெற்று வந்த பேச்சுகள் குறித்தும் விளக்கமளித்தோம்.

சிறிலங்கா அரசு நேர்மையாகனநீதியான முறையிலும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை என்ற விடயத்தையும் இந்தியக் குழுவினரிடம் சுட்டிக்காட்டினோம்.

சிறிலங்கா அரசு சரியான முறையானதொரு பேச்சுக்கு வரவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. அவ்வாறு பேச்சுக்கு வந்து அதில் இணக்கம் ஏற்பட்டால் தெரிவுக்குழு குறித்து பரீசிலிக்கலாம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் தெரிவித்தோம்.

வடக்கு,கிழக்கு பிரச்சினைகளையும் இந்தியக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். குறிப்பாக, சம்பூர் பிரச்சினை, முல்லைத்தீவில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றம் ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

அதுமாத்திரமின்றி, நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் இந்தியக் குழுவிற்கு நாம் விளக்கமளித்தோம்.

வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் இந்தியா அக்கறை காட்ட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. மலையக மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அதிகாரப் பகிர்வு வட, கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படாமல் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மலையக சமூகத்தினரின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது வறுமையிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சிறுபான்மை இன மக்கள் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு

இரா.சம்பந்தன் ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு )

http://youtu.be/di4maYyKVTg

சுரேஸ் பிறேமச்சந்திரன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

http://youtu.be/J_3wcWb-yXs

மனோ கணேசன் (மலையக மக்கள் முன்னணி )

http://youtu.be/AOEaPB9N714

http://www.seithy.co...&language=tamil

இந்த தலைவர்கள் இந்திய பிரதிநிதிகள் எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்தமுறை தலதா மாளிகை பயணங்கள் இரத்தாகிவிட்டதால் சுதர்சன் நாச்சியப்பன் ஈழத்து எம்,ஜி.ஆர்ன் ஊர்காவற்துறையில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

நாச்சியப்பனின் அந்த பேச்சுக்கு பிறகு, இந்த தலைவர்கள், இந்திய பிரதிநிதிகளை கணக்கில் எடுத்து கருத்து கூறினால் இந்த தலைவர்ளின் கருத்துகளுக்குத்தான் பொருள் இல்லை என்பதாகும்.

காங்கிரஸ், தி,மு,காவும், அ.தி.மு.காவும் விளைவித்த குளப்பங்களை, ராசபக்சாவுடனான விருந்தை இரத்தாக்கி சமாளித்துவிட்டது. ஆனால் தமிழரின் எதிரிகளுடன் சேர்ந்து தமிழரை அழிக்கும் திட்டத்தில் எள்ளவும் இளகி கொடுக்கவில்லை என்பதை நாச்சியப்பனின் தான் தோன்றித் தனமான கதைகள் தெளிவாக காட்டுகிறது. இவர் வந்தது தெளிவாக இலங்கை அரசின் பிரதிநிதிகளுக்கு புகழாரம் சூட்டவேயல்லாமல், கஸ்ட்டப்பட்டுபோவிட்ட போரினால் பாதிக்க பட்ட தமிழ் மக்களின் நிலைமைகளை கண்டறிய அறிய அல்ல என்பது இபோது நிரூபணம். பாம்பின் காலை பாம்பறியும் என்பார்கள். கஸ்டப்பட்டுப்போய்விட்ட மக்களை அல்ல, ராசபக்சாக்களையும், ஒட்டுக்குளுத்தலைவர்களையும் தான் காங்கிரசார் சந்திக்க வருகிறார்கள் என்ற உள்கிடக்கையை ஏற்கனவே அறிந்ததால்த்தான் அ,தி.மு.கா தனது பிரதிநிதிகளை மீளப்பெற்றது என்பது இபோது மிகத்தெளிவு. இந்த நாச்சியப்பன் அடுத்த முறை கட்டுக்காசு இல்லாமல் போகவேண்டும்.

மனோகனேசனின் கவலை சரியானது. இந்திய பிரதிநிதிகள் கேட்பது போன்று 13ம் திருத்தம் போன்ற தீர்வு வந்தால் மலையகத் தமிழரின் தீர்வு என்ன என்பதையும் விவாதிக்க வேண்டும். இந்திய அரசு அவர்களுக்கான தொழில் வலயங்களை வடக்கு கிழக்கில் அமைத்து தொழில் தேவையானவர்களை அங்கே செய்யப்படும் வசதிகளில் வாழ வைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.