Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரியதரிசி கிளின்ரனுக்கான முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஞாபகார்த்த நினைவுதின முறையீட்டு மனு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளே, புலம் பெயர் உறவுகளே, தமிழகத்து சகோதரங்களே, மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களே!

ஈழத்தமிழரின் துயர்மிகு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ம் திகதியை நினவு கூருவதற்கான காலநேரம் அண்மித்துக்கொண்டு வருகிறது. நாம் எமக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் கூடி வணக்கம் செலுத்த இருக்கிறோம். இனவேறி பிடித்த சிங்கள இராணுவம், அநாதரவாக நின்ற 146,000 மேலான அப்பாவித்தமிழ் மக்களை கொடூரமான முறையில், பல அக்கிரம செயல்களை நடாத்தி, ஈவிரக்கம் காட்டாமல் கொலைசெய்து மூன்றாண்டுகாலம் உருண்டோடிவிட்டது. இருந்தும் இந்த காதகர்களை பொறுப்பு கூறவைக்க நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க இருக்கிறது. உண்மையில், பலநாட்களாக, பல புலம் பெயர் உறவுகளின் உறங்காத உழைப்புக்களின் பின்னும், தமிழீழத்தில் நடந்தது ஒரு இனவழிப்பே என்று சர்வதேச சமுகத்தை பரந்த அளவில் ஒத்துக்கொள்ள வைக்கவேண்டிய வேலையை நாம் இன்னமும் செய்து முடிக்கவில்லை. இந்தமாதிரியான வெறுமைக்கும், இருளுக்குள்ளும்தான் முள்ளிவாய்க்கால் துன்பியல் சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு ஞாபகார்தநாளின் வணக்க நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

ஆதலினால்த்தான், இப்போது நாம், எமது இன ஐக்கியத்தையும், ஒற்றுமையான நோக்கத்தையும், தீர்க்கமான மனத்தையும், காட்டி ஒன்றாக உழைக்க வேண்டிய கால நேரம் வந்திருக்கிறது என்பது உணரப்படவேண்டியதாகும். அதாவது, 2009 ஆணடு ஏப்பிரல், மே மாதங்களில், வன்னி நிலப்பரப்பையும், மக்களையும் அழித்தொழித்து, அங்கிருந்த புல் பூண்டுகளைக்கூட விட்டுவைக்காமல் சுட்டுப்பொசுக்கிய இலங்கை இராணுவத்தின் செயல்ப்பாடுகள் உண்மையில் ஒரு இனவழிப்பே என்பதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். நான் இந்த வருடம் அமெரிக்காவினது ஞாபகார்த்தநாள் கொண்டாட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். எனது வேண்டுகோளாவது, நாம் எல்லோரும் இணைந்து, காரியதரிசி கிளின்ரன் அம்மையாரிடம், மே 18 திகதியை அண்டிய நாட்களில் ஈழத்தில் நடந்தது ஒரு இன அழிப்பேயென்று, தமிழருக்கு அனுதாபம் காட்டி, முள்ளிவாய்க்கால் நினைவுதினமன்று ஒரு இரங்கல் செய்தியை வெளிவிடுமாறு மனு செய்ய வேண்டும். கீழே காணப்படும் இந்த வரைவுக்குறிப்பை அல்லது அது போன்றதொன்றை நீங்கள் கையொப்பமிட்டு உங்கள் பெயரில் காரியதரிசி கிளின்ரன் அம்மையாருக்கு “ஃபக்ஸ்” மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

கிளின்ரன் அம்மையார் தீவிரமான மனித உரிமைகள் செயல்ப்பாட்டாளர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததொன்று. அவரின் சேவைகளை நமது நாடு முழுமையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாகையினால் உங்களையும், உங்கள் நண்பர்கள், உறவுகளையும் சேர்த்து இந்த விடையத்தில் தவறாது பங்கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஃப்க்ஸ் செய்திகள் மின்னல் அஞ்சல்களை விட கவனத்தில் தெரியக்கூடியவை. அதனால்த்தான் நாம் இந்த வழியை பின்பற்றுகிறோம். ஆனல் அது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால் நீங்கள் மின்னல் அஞ்சலாகவாவது அனுப்பி வைக்கலாம். (பிரதானம்:தயவு செய்து ஒருவர் ஒரு ஃபக்ஸை மட்டும் காரியதரிசிக்கு அனுப்பவும். உங்கள் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியின் விபரங்கள் தெரியுமாயின் அவருக்கும் இதை அனுப்பிவிடலாம் )

By Fax No:1-202-647-1579 or 1-202-647-2283 with copy to 1-202-456-2461

Suba Suntharalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் fax செய்ய வேண்டிய ஆவணம் attach பண்ண முடியவில்லை. நான் புதிய உறுப்பினர் என்பதனாலோ தெரியவில்லை. பின்வரும் error message வருகின்றது.

You aren't permitted to upload this kind of file

வேறு யாருக்கும் access இருக்குமானால் தயவு செய்து என்னைப் பின்வரும் email address க்குத் தொடர்பு கொள்ளவும்.

s.suba@tgte.org.

நன்றி

தொலை நகல் வரைவுக்குறிப்பு கோப்பு இணைக்கப் பட்டிருக்கிறது. இது பழைய "வேட்" தொகுப்பில் இருப்பதால் மாற்றங்கள் செய்ய விரும்புவோர் இலகுவில் மாற்ற முடியும்.

Word 97- 2003 Format

மீள இணைக்கப் பட்டிருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மல்லையூரான்.

fax அனுப்புவதில் ஏதேனும் பிரச்சனையிருப்பின் தயவு செய்து அறியத்தரவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fax number 1-202-647-2283 எனக்கும் வேலை செய்யவில்லை. ஆனால் மற்றைய இரண்டும் உபயோகிக்கலாம். நான் கிலாரிஅம்மையாருக்கு

1-202-647-1579 ஐயும், வெள்ளை மாளிகைக்கு 1-202-456-2461 ஐயும் உபயோகித்தேன். பிரச்சனை இருக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், ஒரு தாழ்மையான வேண்டுகோள்:

Fax அனுப்பியவர்களுக்கு எமது நன்றிகள். இன்னும் fax அனுப்பவில்லையானால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.

-சுபா சுந்தரலிங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Please see the following blog for use in tweets and facebook pages:

http://may2009nycampaign.blogspot.com/

By clicking the tweet button "Twitter May2009MassMurders" in the blog http://may2009nycampaign.blogspot.com/, the message as follows will appear on the user's twitter account, and it directly send the maessage to State Dept Twitter account (https://twitter.com/#!/statedept) :

@Statedept #SecClinton ~ Sacrifices of the #Tamils in #SriLanka on May 18, 2009: #Genocide http://may2009nycampaign.blogspot.com/ #May2009MassMurders

Brookings Institution recently commented that US State Dept ranks top in the world in embracing social media. It will be a worthwhile effort to campaign on the 3rd anniversary of May 2009 with social media:

"The most high profile use of ediplomacy is public diplomacy with State’s embrace of social media. It is striking, especially when compared with other foreign ministries. The department now operates over 600 Facebook, Twitter, and YouTube channels that collectively reach over 8 million people directly. By comparison, a foreign ministry like Australia’s has only a single Twitter feed that reaches fewer than 7,000 people. "

http://www.globalpost.com/dispatches/globalpost-blogs/commentary/revolution-at-state

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நாள் நெருங்கும் நேரத்தில்,எதிர்வரும் நாட்களில் (குறிப்பாக அடுத்த கிழமை) பல நூறோ அல்லது ஆயிரக்கணக்கில் தொலைநகல்களை, பல நாடுகளிலிருந்தும் அனுப்பி வைக்குமாறு உங்கள் யாவரையும் கேட்டுக்கொள்ளுகிறேன். தொலைநகல் அனுப்புவதில் ஏதேனும் பிரச்சனையிருப்பின் தயவு செய்து அறியத்தரவும்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.