Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தரைக் காட்டிக் கொடுத்தாரா இராணுவத்தளபதி ஜகத் ஜயசூர்யா ?

Featured Replies

President said, ‘go ahead’- Army Chief

Despite international pressures to sudden stop the military operations when the Wanni humanitarian operations were entering a decisive phases, President Mahinda Rajapaksa ‘personally’ instructed the military to pursue the operations as planned, the Army Commander revealed.

“President Mahinda Rajapaksa was determined and did not give in to pressures of the international community to suddenly stop the military operations when the Wanni humanitarian operations were entering a decisive phases around April 2009,” Army Chief Jagath Jayasuriya told troops today addressing an event in Kurunegala.

The Army Headquarters in a statement quoting the Army Cheif also said, “I still remember, the President, personally giving me a call instructing me to pursue the operations as planned, though he remained under enormous pressure to stop it. It was the country’s political leadership that gave strength to us to be successful,’ recalled the Army Commander.

http://www.dailymirror.lk/news/18180-president-said-go-ahead-army-chief.html

  • தொடங்கியவர்

இராணுவம் காட்டிக்கொடுப்பு விடயத்தில் முந்திவிட்டதா? என எண்ணத்தோன்றுகின்றது. இருந்தாலும் மகிந்தா இந்த கூற்றை மறுப்பாரா இல்லை கோத்தாவை வைத்து ஆட்களை மாற்றுவாரா? தெரியவில்லை. 'அது நானில்லை அவர் தான்' என ஆளையாளை குத்தக்கூடும்.

எதுவாக இருந்தாலும் ஜெனீவா அழுத்தங்கள் மெல்ல மெல்ல வெளியே பகிரங்கமாக வெடிக்கத்தொடங்கியுள்ளன போன்று உள்ளது.

மிக வலுவான ஆதராம் ஒன்றை ஜகத் ஜயாசூரிய வெளியிட்டுள்ளார்!

ராஜபக்ச பயங்கரவாதிகளுக்கு ஆப்பு இறுகுகிறது.

வன்னியில் நடந்த போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்துமாறு சர்வதேசம் கடும் அழுத்தங்களை வழங்கி வந்தபோதும் போரைத் தொடர்ந்து நடத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே நேரடியாக உத்தரவிட்டார் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக உறுதியாக இருந்தார்.

2009 ஏப்ரலில் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கையில் மனிதாபிமானப் போரை நிறுத்துமாறு சர்வதேசத்தின் கடும் அழுத்தங்கள் இருந்தபோதும் அதற்கு அடிபணியவில்லை. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

போரை நிறுத்தக் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதும் தனிப்பட என்னைத் தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி, திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கையைத் தொடருங்கள் என்று எனக்கு நேரில் உத்தரவிட்டார்.

அவ்வளவு உறுதியானது எங்கள் நாட்டின் அரசியல் தலைமை. நாங்கள் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பலத்தை அதுவே வழங்கியது'' என்று ஜகத் ஜயசூரிய கூறினார் என்று இராணுவத் தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவித்தது.

இராணுவத் தளபதி குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே வன்னியில் மிகப் பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன என்று ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையிட்டுள்ளது.

இறுதிப் போரில் 40,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்தவர்கள் நீதி விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும் பெண்கள் வன்புணரப்பட்டார்கள் என்றும் "சனல்4' தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களங்கள்' மற்றும் "தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற இரு ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தது.

நடந்த மனித உரிமை மீறல்கள் அனைத்துக்கும் அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்களே நேரடியான பொறுப்பு என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் அரசு அதனைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

http://thaaitamil.com/?p=17033

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.